விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், குரு - சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும் கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதையும் ஊக்கப்படுத்து மட்டும் நோக்கமல்ல, பார்பன்னரல்லாத பிற ஜாதி இந்துக்கள் கல்லூரி படிப்பை கற்க கூடாது என்பதே!!
18 வயதானவர்கள் மேற்கல்வி கற்க்காமல் தந்தை செய்யும் தொழிலை செய்தால் அவர்களுக்கு வங்கி கடனும் மானியம் கிடைக்கும் என்று ஆசை வார்த்த கூறி மக்களை மேற்கல்வி கற்க விடாமல் ஏமாற்றப் பார்க்கிறது பார்ப்பனியம்....
ஆனால் பார்பன்ன ஆண்களும் பெண்களும் தடையில்லாமல் எளிதாக உயர் கல்வி கற்க்கிறார்கள் .. அரசு வேலைகளை எளிதாக பெறுகிறார்கள்...
கல்வியின் அவசியம் அதன் பலன் பற்றி பல நூற்றாண்டுகளாக தெரிந்து கொண்டு செல்வ வளத்தை அனுபவித்து வரும் அவர்கள் இந்த முறையில் குலத் தொழிலான கோயிலில் மணியடிப்பதை மட்டும் செய்வார்களா ???
எல்லா உயர் பதவிகளை எளிதாக பெற்று ஆட்சியாளர்களாய் அரசு அலுவலர்களாய் ராணுவ உயர் அதிகாரிகளாய் நீதிபதிகளாய், மருத்துவர்களாய், தொழிலதிபர்களாய், கிரிகெட் உட்பட சகல துறைகளிலும் உயர் பதவியில் அமர்ந்துக் கொண்டு மற்றவர்களை குலத் தொழில் செய்ய வேண்டும் என பணிப்பது எந்த மாதிரியான அயோக்கியத் தனம் தெரியுமா..???
பரம்பரையாக ஒரு தொழிலை ஒரு வணிகத்தை செய்பவர்களின் வாரிசுகள் அதே தொழிலைத் தொடர வங்கிகள் மூலமாக கடன் உதவி,மானியம் என பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்யும்.
மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பான MSME மூலமாக இதைச் செயல்படுத்தப்படும் இந்த விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
மத்திய அரசின் வேண்டுகோளை பல மாநில அரசுகள் அப்படியே ஏற்றுக் கொள்ள, தமிழ்நாடு அரசு மட்டும் அறிமுக நிலையிலேயே இந்த திட்டத்தில் மூன்று மாறுதல்களை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டது.அதுவும் இந்த வருடத்தின் துவக்கமான ஜனவரி மாதத்திலேயே கேட்டுக் கொண்டது.
ஆனால் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்ட அந்த மூன்று மாறுதல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
எனவே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயலாபடுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.
அப்படி என்ன அந்த மூன்று மாறுதல்கள்?
1.மத்திய அரசின் அந்த விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகையான தொழில்கள் குடும்ப தொழில்கள் என கண்டறியப்பட்டு அதை பாரம்பரியமாக செய்து வர வேண்டும் என்ற விதி இருந்தது.அதாவது குலத்தொழில் என்றது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு அதைத் திருத்தி பட்டியல் இடப்பட்ட அந்த 18 வகை தொழில்களை யார் வேண்டுமானாலும்,எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் செய்யலாம்.அதற்கு சாதி,மதம் என எதுவும் தகுதியாக இருக்கக் கூடாது.ஆர்வமும், திறமையும் தான் தகுதிகளாக இருக்க வேண்டும் என்றது.
2. மத்திய அரசு வயது வரம்பு 30 க்குள் என்றது.
தமிழ்நாடு அரசு வயது வரம்பை 35 வரைக்கும் நீடித்துக் கேட்டது.அப்போது தான் அனுபவம் இருக்கும் என்றது.
3. பயனாளர்களை கண்டறியும் அதிகாரத்தைப் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மத்திய அரசு தந்தது.
அப்படி செய்தால் அதில் சாதி குறுக்கீடு இருக்க வாய்ப்புகள் வந்தாலும் வரும்.எனவே பயனாளர்களை கண்டறியும் அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு சொன்னது.
அரசர்கள் ஆண்ட காலம் முதல் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்த கலைஞர் காலம் வரை ஒரு கம்மாளர் இன மக்கள் தேவைப்பட்டார்கள். புரியும் படி சொன்னால் ஐந்தொழில் செய்வோர் விஸ்வகர்மா என்கிற skilled தேவை பட்டார்கள்..
நாளடைவில் உலகமயமாக்கல்.. அறிவியல் அதீத வளர்ச்சி.. போன்ற காரணிகளால் இன்று குறிப்பிட்ட அவர்கள் தேவை படுவதில்லை...
அதை உணர்ந்து அவர்களும் கல்வி ஒன்றே கரை சேர்க்கும் மா மருந்தென்று பயணிக்க தொடங்கி விட்டனர்..
தமிழக அரசு மத்திய government's 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்தாமல், அதில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. இவற்றில், குடும்ப அடிப்படையிலான தொழிலாளர்களைத் தேவையின்றி நீக்குவது மற்றும் பயனாளிகளின் குறைந்தபட்ச வயதினை 35 ஆக உயர்த்துவது அடங்கும். தற்போது, தமிழகம் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, ஜாதி மற்றும் குடும்ப அடிப்படையிலான வேறுபாடுகளை இல்லாமல், நிதி உதவி, பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஆதரவு அளிக்கும் ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்துள்ளது.
விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் ஓட்டுக்காக காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதை உணர்வது நல்லது!
மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கேட்ட சமூகநீதி புரியவில்லை....சரி....அது புரியும் வரையில் விஸ்வகர்மா திட்டத்தை தந்தைப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment