Friday, 21 December 2007

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை..

வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள்பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதாசெல்லமே! 
அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன்உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..

1.
என் அப்பாவின் நேர்மைஎன் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன்,என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் க்ரீடமும் ,என் அப்பாதான் 'பெஸ்ட்என்ற எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்'மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா. உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.

2. 
உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல்உன் கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்திஅப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.

3.
சிறு சிறு வாக்குவாதங்கள்,கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் "," எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை.நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்,மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கும்.

சுருக்கமாக கூற வேண்டுமானால்.... 

*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே . 
*'அப்பா செல்லம் என்ற பட்டம் பயன் தராது . 
*அப்பாக்கு கொடுத்த க்ரீடத்தை அவருக்கும் கொடு.
கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம்,22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனிமேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.

நீடுடி வாழ வாழ்த்துகள்....! 

-
அன்புடன் அப்பா.

Thursday, 13 December 2007

ஈராக் போரின் பின்னணி எண்ணெயா? சியோனிசமா ?

அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்து பல வருடங்கள் ஒடிவிட்டது. ஈராக்கைத் தன் கையில் கொண்டு வர அமெரிக்கா பல வகைகளில் முயற்சி செய்தும் அவைகள் ஈடேறாவண்ணம் நாட்கள் கழிந்து வருகின்றன. அமெரிக்கா அனுப்பிய 133000 படைகள் போதாமல் பல சமயங்களில் அவைகள் அதிகரிக்கப் பட்டு தற்போது 165000 என உள்ளது. இவ்வாறு இருப்பினும், ஈராக், அமெரிக்கப் படைகளை சவப்பெட்டியில் வைத்து அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்துவரும் ஒரு தொழிற்சாலையாக செயல் பட்டுவருகிறது.

ஈராக் போர் ஒரு பொய்யினை மூலதனமாகக் கொண்டு தொடங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, "சதாம் உசேன் ஆட்சி அணுஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களைக் (WMDs) கொண்டுள்ளது" என கூறி இந்தப் போர் தொடங்கப்பட்டது. போர் தொடங்குவதற்கு முன், ஐக்கிய-நாட்டுசபையின் ஆய்வாளர் குழு ஈராக் சென்று, ஆய்ந்து, "அங்கு பேரழிவு ஆயுதங்கள் இல்லை" என ரிப்போர்ட் வெளியிட்டும் மேற் சொன்ன பொய்-காரணத்தை மேற்கோள் காட்டி அமெரிக்கா தலைமையில் சில நாடுகள் அணிவகுத்தன. ஆனால் உண்மையில் அதில் அமெரிக்கா மட்டுமே சிங்கத்தின் பங்கினைக் கொண்டதாகும். மற்ற பங்கெடுத்த நாடுகள் அமெரிக்காவின் தயவில் உள்ளவைகளாகும். அல்லது அவைகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தனிப்பட்ட நட்பிற்கு கட்டுண்டவர்களாவர் (உதாரணம்: பிரிட்டனின் டோனி பிளேர் (Tony Blair)). இதனால் அந்தந்த நாடுகள் ஏதோ இறையாண்மையற்ற நாடுகளைப் போல தனக்கென்று எந்த வெளியுறவுக் கொள்கையுமின்றி அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை ஏற்று போருக்காக அணிவகுத்தன.

போர் தொடங்கியது. சதாமிற்காக அவரது படைகள் போரிடாமல் அவரைக் கைவிட்டது. (அதற்கான காரணங்களை நான் ஆராய வில்லை). ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிபட்ட சதாம் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக கொல்லப்பட்டார். அவர் மீது வீசப்பட்ட உண்மையான குற்றச்சாட்டு, "பேரழிவு ஆயுதங்களை வைத்திருத்தல்". இது பொய்யென ஆனதும், அவர் மீது, "மனித உரிமை மீறல், இனப் படுகொலை" குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன. இதற்காக ஒரு கட்டை பஞ்சாயத்து போன்ற ஒரு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு, வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே சதாமின் இரு வழக்குரைஞர்கள் கொல்லப்பட்டிருக்க , கடைசி நேரத்தில் நீதிபதியையும் மாற்றி வேறொருவரை நீதிபதியாக நியமித்து அவருக்கு மரண தண்டனையை விதித்து, மரண தண்டனையின் போது கூட சதாமைக் கீழ் தரமாக ஏசி அவரை ஒரு வழியாக தூக்கிலிட்டுக் கொன்றனர்.

"ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள்" என்பது பொய்; சரி, ஆனால் ஏன் இந்த பொய் கூறப்பட்டது ? விடை மிக எளிமையானது: போர் புரிய ஒரு காரணம். அவ்வளவே. சரி, ஏன் போர் புரிய வேண்டும் ?! இதற்கு விடை அவ்வளவு எளிமையானதல்ல, ஒரு மேலோட்டமான பார்வையில்.

1. "ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள்" என்பது பொய்யென ஆகிவிட்டது. இந்த காரனத்தை தூக்கி வீசுங்கள்.

2. எண்ணெய். இது, போரிற்குப் பிறகு நிகழும் சில காரியங்களுக்கு காரணமாக வேண்டுமானால் இருக்கலாம். போரிற்குப் பிறகு எண்ணெயை எப்படி கையாளுவது என்பதை முனமையான காரணமாகக் கொண்டு, "ஈராக் ஆய்வு குழு" அல்லது "ஹாமில்டன் -பேக்கர் குழு" என்று ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா ? அவர்கள் ஒன்றும் மனித-உரிமைக்காக குரல் கொடுப்பவர்களோ அல்லது அமைதிக்காக பாடுபடுபவர்களோ இல்லை. மேலும் இவர்கள் பொருளாதார வல்லுனர்களோ அல்லது அரசு மேலாண்மை வல்லுனர்களோ இல்லை. மாறாக, இவர்கள் ஒவ்வொருவரும் எண்ணெய் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் தங்களைச் சம்மந்தப் படுத்தியிருப்பவர்கள். இந்த குழுவின் முக்கிய பரிந்துரை, ஈராக் எண்ணெய் உற்பத்தியை தனியார் மயமாக்க வேண்டும் என்றும் அதன் தனியார் மயமாக்கத்தில் அமெரிக்கா தலையிட்டு "உதவி" செய்ய வேண்டும் என்றும் கூறியதாகும். இப்பரிந்துரை அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் மற்ற தொழில் நிறுவனக்களுக்கு ஒத்து ஊதுவதற்காக ஏற்படுத்தப் பட்டது [1]. மேலும் அமெரிக்க துணை அதிபர் டிக்-செனய் (Dick Cheney)-க்கு எண்ணெய் கம்பெனிகளுடன் தொடர்பு உண்டு. ஆனால் இதுதான் இராக் போருக்கு காரணம். என்று கூறுவதைவிட, இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றே எண்ணலாம். இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இக்கட்டுரையின் போக்கில் விளங்கும்.

3. புஷ்ஷின் தந்தைக்கும் சதாமுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிணக்கு. இது பற்றி நாம் உறுதியாக கூறுவதற்கில்லை. ஏனெனில் தேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கோணத்தில் ஆய்ந்து அளித்த அறிக்கைகள் எதையும் நாம் கண்டதில்லை. இந்த கோணத்தில் கிசுகிசுக்கப் படுகிறதே தவிர நம்மிடம் வேறொன்றும் இல்லை.

4. வேறொரு நாட்டின் நலனுக்காக அமெரிக்காவில் இயங்கிவரும், மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கும் அளவிற்கு திறன் படைத்த கள்ளப் பரிந்துரைக் குழுக்கள். அந்த அளவிற்கு சக்திவாய்ந்த குழு ஒன்று அமெரிக்காவில் இருக்கிறதென்றால் அது இஸ்ரேலின் குழுக்கள் தான். இத்தகைய லாபி காரணமாக இருக்கக் கூடுமா என்று சற்று விரிவாக காண்போம்.

மத்திய-கிழக்கு நாடுகளில் புது வகையான ஒரு ஒருங்கு-முறை (order) ஏற்பட அமெரிக்காவின் தற்கால-பழமைவாதிகள் (neoconservatives) வகுத்த திட்டத்தின் ஒரு கட்ட செயலேற்றமே இந்த ஈராக் போர். இது அமெரிக்காவின் நலனைக் கருத்தில் கொண்டு தொடுக்கப்பட்டதொன்றல்ல. அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஏவப்பட்டதல்ல இப்போர். மாறாக அத்தற்கால-பழமைவாதிகள் நாடிய, அப் புதுவகையில் ஒருங்கமைக்கப்பட வேண்டிய மத்திய கிழக்கு நாடுகளானது (new mid-east), அனைத்து வழிகளிலும் இஸ்ரேலின் நலனுக்காக உள்ளதாக அமைய வேண்டும்[2]. இஸ்ரேலிய லாபியால் நியமிக்கப்பட்ட - அமெரிக்க வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் - இந்த தற்கால-பழமைவாதிகள் திட்டமிட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளானது பின்வரும் முறைகளின் மூலம் சியோனிச-இஸ்ரேலுக்கு ஏதுவானதாக அமைக்கலாம்.

(அ) சியோனிச கொள்கையில் அமைந்த இஸ்ரேலுக்கு எதிரான ஆட்சிகளை அகற்றுதல்.

(ஆ) ஈராக்கில் (அ)-வினை அமல் படுத்துவதோடல்லாமல், அந்த நாட்டினை அங்கு இருக்கும் பல்வேறு பிரிவு மக்களினிடையே காணப்படும் ஒற்றுமையின்மையைக் காரணம் காட்டி, அதனை உடைத்து பல நாடுகளை உருவாக்குதல். இதன் தேவையாகிறது எவ்வாறு ஏற்படுகிறது எனில் "சியோனிச தேசமானது நைல் நதியிலிருந்து தொடங்கி யூஃப்ரடீஸ் நதி வரை பரந்து விரிந்து இருக்கவேண்டும் [3]" எனும் அவாவினாலேயே. தற்போதுள்ள சியோனிச தேசத்தின் எதிரி நாடுகள் சிறு துண்டுகளாக உடைந்துவிட்டால், சியோனிச தேசத்தின் போரினைத்-துவக்கி-நாடுகளைக்-கைப்பற்றும் வரலாற்றினை எளிதில் தொடர்ந்து விடலாம்.

(இ) ஈராக்கைக் கைப்பற்றி அங்கு உள்ள ஷியா- பிரிவு மக்களை ஆட்சியில் அமர்த்தினால் அந்த ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். இதனால் அமெரிக்காவிற்கு எதிரான ஈரானிய ஷியா மக்களுக்கும், அமெரிக்க ஆதரவு - ஈராக்கிய ஷியா மக்களுக்கும் இடையே கருத்து வேற்றுமையினை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி, ஒரு தலைமைக்குக்-கீழ்-கட்டுப்படும் அவர்களது தன்மையினை செயலிழக்கச் செய்யலாம். அதாவது மக்களிடம் ஏற்படும் குழப்பமானது, அவர்களை அமெரிக்க-எதிர்-இமாம்களுக்கு கட்டுறாமல் செய்ய ஏதுவாகும். (ஆனால் போரின் போக்கில், அமெரிக்க-பழமைவாதிகளின் இந்த எண்ணம் ஈடேற வில்லை. சதாம் ஆட்சியில் பட்ட இன்னலிலிருந்து விடுபட ஷியா பிரிவினரின் ஆட்சியை ஷியா மக்கள் விரும்பினாலும், அவர்கள் நிச்சயமாக அமெரிக்காவினால் நிறுவபட்ட ஷியா பிரிவினரின் ஆட்சியை ஏற்பவர்களாக இல்லை. [4] )

(ஈ) ஈராக்கில் (இ) செயலேற்றம் பெற்று அதனால் ஈரானில் மக்கள் தங்கள் தலைமைக்கு அடங்காமல் குழப்பமான நிலையை அடைந்தவுடன், அங்கு "வெல்வெட்-புரட்சி"யினை செய்து ஆட்சிமாற்றத்தினைக் கொண்டுவரலாம். "வெல்வெட் புரட்சி" (velvet revolution) என்பது யாதெனில் அங்கு மக்களுக்கு அல்லது மாணவர்களுக்கு மேற்கத்திய சித்தாந்தங்களைப் புகுத்தி அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்து, அதன் மூலம் அரசினை செயலிழக்கச் செய்தல். அல்லது அந்தப் போராட்டத்தினை அடக்க ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்கு முறைகளினால், மக்களிடம் ஏற்படும் நம்பகமின்மையினை சாதகமாகப் பயன்படுத்தி மாபெரும் புரட்சியினை வெடிக்கச் செய்தல். இது போன்ற புரட்சியினைக் கொண்டு செக்கோஸ்லோவாக்கியா-வில் சோஷலிசம் (socialism) தோற்கடிக்கப் பட்டது கருத்தில் கொள்ளப் படவேண்டியது. இதற்காக, ஈரானின் அதிகாரமையங்களைப் பற்றி நன்கு அறிந்த, சமூக-அறிவியலில் சிறந்தோங்கும் கலைஞர்களை அமெரிக்கா தன் திட்டக்-கழகங்களில் (think tanks) வேலைக்கு அமர்த்தி இருப்பது சமீப காலங்களில் வெளிவந்தச் செய்தியாக உள்ளது. வுட்ரோ-வில்சன் மையம் (Woodrow Wilson Centre), அமெரிக்கன் எண்டெர்ப்ரைஸ் கழகம் (American Enterprise Institute) ஆகியவை இது போன்ற திட்டக் கழகங்களுக்கு உதாரணங்கள்.

(உ) லெபனானில் வாழ்ந்து வரும் பல்வேறு மக்கட் பிரிவுகளிக்கிடையே கலகத்தினை மூட்டி மீண்டும் உள்நாட்டுப் போரினை ஏற்படுத்தல். அதனால், சியோனிஸத்தை-ஏற்காமல்-இருக்கும் சிரியாவின் மீது உலக நாடுகளின் சினத்தினைத் திருப்புதல். [5]

(ஊ) ஈரான் மற்றும் சிரியாவின் உதவியுடன் இயங்கும் ஹெஸ்பொல்லா குழுவினரை லெபனானின் இறையாண்மையை மிதித்து அந்த நாட்டின் மீது படையெடுத்து அவர்களை அழித்தல். இது சிரியா மற்றும் ஈரான் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மனோவியல்-போர் முறையில் ஈடுபட ஏதுவாகும். அத்தோடு சியோனிசத்தின் எதிரி ஒன்றும் அழிந்ததும் ஆகும். (இங்கு தான் ஒரு புதிய வரலாறு நிகழ்ந்து உள்ளது. "உலகிலேயே மிகத் திறமையான இராணுவம்" என்றும் "தோல்வியே காணாத போர் இயந்திரம்" என்றும் பெயர் பெற்ற இஸ்ரேலிய இராணுவம் 1000 லெபானினிய சதாரண குடிமக்களைக் கொன்று தோல்வியைத் தழுவினர். இதில் 'கானா' எனும் இடத்தில் ஒரே குண்டில் கொள்ளப்பட்ட 60 சிறுவர்களும் அடங்குவர். ஹெஸ்பொல்லாவினரோ 150 இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கொன்று வெற்றி பெற்றனர். இஸ்ரேல் பின்வாங்கியது. 150 என்று இஸ்ரேல் கூறிகொள்கிறது. உண்மை எண்ணை அவர்களே அறிவர்.)

(எ) ஈராக்கைக் கைப்பற்றி அதன் எண்ணெயை அபரிமிதமாகச் சந்தையில் விற்று, அதன் விளைவாக எண்ணெய் விலையினைக் குறைத்து ஏனைய அரபு நாடுகளின் பொருளாதாரத்தினை நிலைகுலையச் செய்தல். அரபு நாடுகளின் மன்னர்கள் மற்றும் (தேர்தலில் சதிச் செய்து ஆட்சிக்கு வந்த) அதிபர்கள், தங்கள் நலன் கருதி, தங்கள் ஆட்சியின் இறையாண்மைக்கான அங்கீகாரத்தினை வேண்டி அவர்கள் அமெரிக்காவின் சொல் கேட்பவர்களாக உள்ளனர். இவ்வாறு இருக்க அவர்களின் பொருளாதாரத்தினை சீர்குலைத்து அதனால் அவர்களின் ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை அவர்கள் நாட்டு மக்களிடம் தூண்டினால் அவர்களின் அமெரிக்க ஆதரவு அற்றுப் போக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இஸ்ரேலிய-லாபியின் செல்வாக்கு நிறைந்த அமெரிக்க-பழமைவாதிகளுக்கு அது பற்றி கவலை கிடையாது. அவர்கள் அமெரிக்காவின் நலனுக்காக இல்லை. இவ்வாறு அவர்கள் அமெரிக்க-அரபு உறவில் ஆப்படித்து விட்டால், சியோனிச தேசத்தைப் பற்றி அமெரிக்கா காட்டிக் கொள்ளும் நிலைப்பாடான "இஸ்ரேல் அமெரிக்காவின் பாதுகாப்புக்கான ஒரு சொத்து" என்பதினை அதிக அழுத்தத்துடன் அமெரிக்க மக்களிடம் கூற இயலும். [6]

இவ்வாறு அமெரிக்க சியோனிச பழமைவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் அமைய வேண்டுமென விரும்பும் "புதிய ஒருங்கமைவு"(New middle east)-க்கு பல கோணங்களில் ஈராக்கினைக்-கைப்பற்றல் சாதகமான காரணியாக திகழ்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி பற்-பத்தாண்டுகளாக எழுதும் ராபர்ட்-ஃபிஸ்க் அவர்கள் கீழ்கண்டவாறு இப்போரின் நோக்கத்தினைப் பற்றிக் கூறுகிறார்: அமெரிக்க அதிபருக்கு உதவியாக ஈராக் போருக்கான திட்டங்களை வகுத்து செயலாற்றி வருபவர்களில் பெரும்பாலோர், இஸ்ரேலுக்காக பணியாற்றிய அல்லது இன்னும் பணியாற்றிவரும் லாபியாளர்கள். அரபு நாடுகளிலேயே மிகச் சக்திவாய்ந்ததாக திகழ்ந்து வந்த ஈராக்கினை அழிப்பதில் பல வருடங்களாக அவர்கள் முன்முனைப்புடன் இருந்தனர். அமெரிக்க அதிபர் புஷ்- ன் செல்வாக்கு மிகுந்த அறிவுரையாளர் ரிச்சர்ட்-பெர்லே உட்பட, டக்ளஸ்-ஃபெய்த், பால்-வொல்ஃபோவிட்ஸ், ஜான் - பால்டன், டொனால்ட்-ரம்ஸ்ஃபீல்ட் போன்றோர் பல வருடங்களாக ஜார்ஜ்-புஷ் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே ஈராக்கினை அழிக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இதனை அமெரிக்க நலனுக்காகச் செய்யவில்லை. 1996-ம் ஆண்டு இஸ்ரேலைப் பற்றி வெளியான "A Clean Break: A New Strategy for Securing the Realm" ( மேலோங்கலை அடைய புதிய யுத்தி) எனும் அறிக்கை ஈராக் போரினை வலியுறுத்துகிறது. இந்த அறிக்கை அமெரிக்காவுக்காக எழுதப்பட்டதல்ல. மாறாக, இஸ்ரேலின் லிக்குட் (எனும் பழமைவாத) கட்சியிலிருந்து இஸ்ரேலிய பிரதம-மந்திரியாக தேர்ந்தெடுக்கப் படவிருக்கும் பின்யாமின் -நேதன்யாகுவின் நலனுக்காக எழுதப்பட்டது. அந்த அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர் யார் தெரியுமா ? அவர் தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் தேந்தெடுக்கப் பட்டவுடன் அவருடைய செல்வாக்கு மிகுந்த ஆலோசகராக இருக்கும் ரிச்சர்ட்-பெர்லே. நிச்சயமாக ஈராக்கினை அழிப்பது, மத்திய-கிழக்கில் அணு-ஆயுதங்களின் மீது இஸ்ரேல் கொண்டுள்ள மேலாதிக்கத்தினையும், பாலஸ்தீனர்களை ஒழித்து அங்கு யூத குடியிருப்புகளை ஏற்படுத்திவரும் இஸ்ரேலின் செயல்களுக்கும் பாதுகாப்பினை அளிக்கும். அமெரிக்க அதிபர் புஷ்-ம் பிரிட்டனின் அப்போதைய பிரதமர் பிளேரும் இதைப் பற்றி விவாதிக்க தயாராகாத நிலையில் அமெரிக்க-யூத தலைவர்கள் போரின் 'பயன்'களைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் அமெரிக்க யூதர்களில் சிலர் முதன் முதலில் இஸ்ரேலிய தொடர்பினை அம்பலப்படுத்தினர். அவர்கள் "ஈராக்கின் போருக்கு காரணம் எண்ணெயல்ல; மாறாக டைக்ரிஸ் ஆற்றின் நீர். அது இஸ்ரேலின் வறண்ட பகுதிகளுக்கு நீர் பாய்ச்ச உதவும்" என்று போட்டு உடைத்தனர். உடனே ஜான் -ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக (John Hopkins) பேராசிரியர் இலியட்-கோஹன் (Eliot Cohen) போன்றோர் இது பற்றிய விவாதத்தினை தடைசெய்ய வேண்டும் என்று இஸ்ரேலின் ஆதரவில் எழுதுகின்றனர். இஸ்ரேலையும் இராக் போரினையும் இணைப்பது கோஹன்-ன் பார்வையில் அது ஒரு "யூத-வெறுப்பு" (Anti-semitism) ஆகுமாம் !!!. [7]

ஜேம்ஸ்-பெட்ராஸ் (James Petras)-ன் "The Power of Israel in the United States" (அமெரிக்காவில் இஸ்ரேலின் செல்வாக்கு) எனும் புத்தகம், ஈராக் போருக்கு இஸ்ரேலிய லாபிதான் காரணம் என்றும், எண்ணெய் காரணமாக இருக்க ஒரு ஆதாரமும் இல்லை என்றும் கூறுகிறது [8]. போருக்கு முந்தைய காலங்களில் எண்ணெய் கம்பெனிகளின் செய்தி-வெளியீடுகளும் ஆவணங்களில் வெளியான கட்டுரைகளிலும் (journal articles) இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் இப் புத்தகத்தின் ஆசிரியரால் காண இயலவில்லை. மாறாக அப்போது சதாம்-உசேனின் ஈராக்கிற்கு விதிக்கப் பட்டிருந்த பொருளாதார தடையை நீக்க தான் கோரி வந்துள்ளனவாம். மேலும் அவர் கூறுவது போல் இஸ்ரேலுக்காக தன்னை அர்ப்பனித்தவர்களான பால்-வொல்ஃபோவிட்ஸும் சரி, ரிச்சர்ட்-பெர்லேயும் சரி, இவர்களுக்கும் எண்ணெய்-கம்பெனிகளுக்கும் தொடர்பில்லை. இவர்கள் ஈராக் போருக்கு முக்கிய காரண-கர்த்தாக்கள். மேலும் "யூத-சுத்திகரிப்பு"(Jewish Purity), "இஸ்ரேலிய-விரிவாக்கம்"(Jewish Expansion) மற்றும் "யூத-குடியிருப்புகள்" (jewish settlements) முதலிய இனவெறி கொள்கைகளின் ஆதரவாளர்களாகிய, ஈராக் போரில் பங்கு எடுத்துக் கொண்ட, இலியட்-ஆப்ராம் (Eliot abram), டக்ளஸ்-ஃபெய்த் போன்றோரும் எண்ணெய் கம்பெனிகளுடன் தொடர்பு உடையவர்கள் அல்லர்.

இராக்கில் "மனித குலத்தின் பேரழிவுக்கான ஆயுதங்கள் (WMDs) உள்ளன !!" என அமெரிக்க உளவு துறை அளித்த தகவலை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போர் துவக்கப் பட்டதென்பது அனைவரும் அறிந்ததே. அது ஒரு பொய்யென்பதும் அனைவரும் அறிந்ததே. பெட்ராஸ் தன் புத்தகத்தில், அமெரிக்க-யூதர்களால் நிரம்பிய இஸ்ரேலிய-லாபியாளர்கள் எவ்வாறு இத்தகைய பொய்யை "உளவு" எனும் பேரில் நுழைத்தனர் என்பதை விளக்குகிறார். லாபியாளர்கள் தங்கள் ஆட்களை உளவுத்துறை, துணை-அதிபர் அலுவலகம் போன்றவைகளில் நிறுத்தி தங்களுக்கு சாதகமானமுறையில் ஆவணங்களைத் தயாரித்து அவைகளை செயலேற்றம் செய்தனர்களாம். பால்-வொல்ஃபோவிட்ஸும் டக்ளஸ்-ஃபெய்த்தும் சேர்ந்து உருவாக்கிய "Office of Special Plans" (தனித் திட்ட அலுவலகம்) எனும் அமைப்புதான் ஈராக் போருக்குக் காரணமான 'உளவு" செய்தியினைத் தயாரித்ததாம். அந்த அலுவலகத்தின் தலைவர்கள் அமெரிக்க யூதரான ஆப்ராம்-ஷுல்ஸ்கி மற்றும் பழமைவாதி வில்லியம்-லுட்டி. இவர்களது பொய்-உளவுகள் அமெரிக்க-துணை-அதிபரின் அலுவலகத்திற்கு அவரது செயலாளரும் சியோனிச சிந்தனையாளருமான இர்விங்-லிப்பி (Irving "Scooter" Libby) என்பவரால் வழங்கப்பட்டதாம். பழமைவாதி ஜான் பால்டன் துணை-அதிபர் அலுவலகத்திற்கும் பென்டகனுக்கும் (pentagon) இடையே நடைபெறவேண்டியவைகளைப் பார்த்துக் கொண்டார். பாதுகாப்புக் கொள்கைக் குழு (Defense Policy Board)-ன் தலைவர் ரிச்சர்ட்-பெர்லே மற்றும் அதில் உறுப்பினர்களாக இருந்த சியோனிசர்களும் பழமைவாதிகளுமான கெனெத்-அடல்மன் (Kenneth Adelman), இலியட்-கோஹன்,ஜேம்ஸ்-வுல்சீ (James Woolsey) போன்றோர் அவைகளுக்கு வலுச்சேர்த்தனர்.

எனவே சியோனிசத்தின் வெளிப்பாடுதான் இந்த ஈராக் போர். ஈராக் போரினையும் இஸ்ரேலினையும் இணைப்பது யூத-வெறுப்பு என்போருக்கு: இஸ்ரேலுக்கு இராக் போரில் விருப்புகள் உண்டு என்பது இஸ்ரேலின் பிரதமர் எஹூத்-ஒல்மர்ட்-ன் பேச்சு வெளிப்படுத்துகிறது [9]. எண்ணெயைக் காரணமாகக் கொண்டு வேண்டுமானால் டிக்-செனய் சியோனிச சிந்தனையாளர்களின் டிசைனை அதிகம் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த போர் 655000 க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களைக் காவு வாங்கியுள்ளது என்பது ஜான் ஹாப்கின்ஸ பல்கலைகழகத்தின் ஒரு சர்வே அறிக்கை [10].

சுட்டிகளும் அடிக்குறிப்புகளும்:

[1] Troops Out, Oil Companies In: The Baker Agenda ? By Tom Hayden
http://www.huffingtonpost.com/tom-hayden/troops-out-oil-companies_b_35816.html

[2] http://www.zmag.org/content/showarticle.cfm?ItemID=10605

[3] http://en.wikipedia.org/wiki/Greater_Israel

[4] ஆனால் இந்த சதித்திட்டம் ஈடேறவில்லை. ஈராக்கின் ஷியா மக்கள், ஷியா-அரசாங்கத்தை விட ஷியா-இமாம்களையே அதிகம் விசுவாசிப்பவர்கள். மேலும் ஈரானின் ஷியா இமாம்களைப் போலில்லாமல் ஈராக்கின் ஷியா இமாம் அல்-ஸிஸ்தானி அவர்கள் அரசாங்கமும் மதமும் தனித்தனியே இருக்கவேண்டும் என நம்பிக்கையுடையவர் ஆவார் [11]. எனவே அவர் அமெரிக்கா நிறுவிய ஷியா-அரசாங்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள மறுத்துவிட்டார். மற்றொரு ஷியா இமாமான அல்-ஸதிர் அமெரிக்காவின் விரோதியாவார். இவர் சிஸ்தானியைப் போல பாரசீகர் இல்லை. இவர் ஒரு அராபியர் ஆவார். இதனால் இவருக்கும் ஈரானுக்கும் அவ்வளவு நெருக்கமான தொடர்பு இல்லையெனினும், இவர் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவிற்கு எதிராக இயங்குபவர். ஆரம்ப காலத்தில் ஷியா ஆட்சிக்கு இவர் ஷியா-மேலாண்மையைக் கருத்தில் கொண்டு ஆதரவு அளித்தாலும் பின்பு அதனை அவர் விலக்கிக் கொண்டார். தற்போதைய ஷியா-ஆட்சியாளர்கள் எந்த பிரிவு மக்களின் ஆதரவும் இன்றி இருக்கின்றனர்.

[5] சமீப காலங்களில் சிரியாவிற்கு எதிரான வைதீக-பிரிவு (sunni) மற்றும் மரோனைட்-கிறிஸ்தவப் பிரிவின் (maronites) தலைவர்கள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூறலாம். இந்த கொலைகளில் சிரியாவின் பங்கு கூட இருக்கக் கூடும் எனினும் 'இஸ்ரேலின் பங்கு இருக்காது' என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. பொதுவாக இஸ்ரேல் லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் ஈடுபடுவது தெளிவு. 1989-ல் நிகழ்ந்த சப்ரா-ஷட்டிலா படுகொலையை நினைவு கூறலாம் [12].

[6] http://www.zmag.org/content/print_article.cfm?itemID=10185&sectionID=1

[7] http://www.counterpunch.org/fisk02152003.html

[8] http://fanonite.org/2007/01/15/the-power-of-israel-in-the-united-states/

[9] http://www.haaretz.com/hasen/spages/836374.html

[10] http://web.mit.edu/cis/human-cost-war-101106.pdf

[11] http://www.csmonitor.com/2004/0220/p01s02-woiq.html

[12] http://english.aljazeera.net/NR/exeres/708DECA5-113B-4546-829D-500DA986DEA3.htm

Wednesday, 12 December 2007

பழனி பாபாவும் விமான பனிப் பெண்ணும்..

சஹித் பழனி பாபா அவர்கள் Gulf Air மூலமாக இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு பயணம் செய்யும் போது முதல் வகுப்பு இருக்கையில் நடந்த உரையாடல்கள் விமானப் பனி பொன்னுவுடன்.

பைபிளை எடுத்து வைத்துப் படிக்கிறேன்.நான் பெரும்பாலும் அரபி உடைகளையே விரும்பி அணிவேன்.மேலொட்டமாய்ப் பார்த்தாலும் கிறிஸ்துவ தோற்றம்.தலையை மூடியிருப்பதைக் கண்டால் முஸ்லிமின் வடிவம்.20 நிமிடம் கழித்து பயணிகள் அதிகமில்லாததால் பணிப்பெண் வந்து பணிவிடைகளை முடித்து விட்டு என் தேவைகளுக்காக நின்றவர் நீண்ட நேரம் குழம்புகிறார்.
பின்னர் மெதுவாய் fபாதர் நீங்கள் கிறிஸ்துவரா?முஸ்லிமா? என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்கிறார்.

"ஆட்சேபகரமற்று நான் ஒரு முஸ்லிம்" என்றேன்.

"முஸ்லிம் கையில் பைபிளா?
ஏனிந்த மாற்றம்? எப்படி வந்தது இந்த ஆகர்ஷனம் (Attraction?
பைபிளின் புனிதம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்! தேவனின் மகிமையை என்னென்பேன். ஒ! ஜீஸஸ்" கண்களில் நீர்த்துளிகள். மெய்சிலிர்க்கப் பேசுகிறார்.

அவரின் ஆதங்கம் தணியும் வரை நான் மவுனமாயிருக்கிறேன். பிறகு மெதுவாய்ப் பேசினேன்.

"சகோதரியே! உங்கள் வயது?"
"22 வயது"

" எனக்கு 38 வயது ஆகிறது. நீங்கள் பைபிளை எத்தனை வருடமாய் படிக்கிறீர்கள்?"

" சிறு வயது என்றால், சுமாராக எத்தனை வயதில்?"
" 12 வயது முதல்!"

" அப்படியானால் 10 வருடமாய் படிக்கிறீர்கள்- நான் எனது 15 வயது முதல் இன்று 23 ஆண்டுகளாய் படிக்கிறேன்.!"

" நானும் ஐந்து ஆறு வருடமாய் தீவிரமாய் படிக்கிறேன்!"

" நீங்கள் - புராட்டஸ்டண்டா - கத்தோலிக்க்ரா? பியூரிட்டடா - கிறிஸ்துவரின் எப்பிரிவு?

" நான் ரோமன் கத்தோலிக்!"

" வெரிகுட்! உங்களுக்குள் இத்தனைப் பிரிவுகளும் ஒரே பைபிளை கடைப்பிடிக்கிறீர்களா?"

" இல்லை . நான் தேர்ந்தெடுத்தது K.J.V (King James) வர்ஷன்."

" பைபிளை எழுதியது யார்?"

" யார் சொன்னது எழுதியது என்று? பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டது?".

" யார் மூலமாக?"

" ஏசுநாதர் (ஈஸா நபி) மூலமாக!"

" அப்படி என்றால் அதற்கு முன் பைபிள் இல்லையா?"

" அதன் பெயர் பழைய ஏற்பாடு (Old Testament) "

" ஏசுநாதர் தான் இதை அருளினார் என்று பைபிளில் எங்கே போட்டுள்ளது?
நான் தான் கடவுள்; என்னையே வணங்குங்கள்; என்று ஏசு எங்காவது ஓரிடத்தில் சொல்லி உள்ளாரா?"

" பார்த்துத் தான் சொல்ல வேண்டும்."

" சரி போகட்டும் என் சகோதரியே!

ஒரு புனித நூல் என்றால் - கடவுளிடமிருந்து இறங்கியது என்றால், அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாதல்லவா?"

" கட்டாயமாக!"

" இறங்கியது முதல் அது உருமாறாது யாராலும் திருத்தப்படாது, அப்பழுக்கற்று அப்படியே இருக்க வேண்டுமல்லவா?"

" நிச்சயமாக!"

" சகோதரியே! எல்லா சுவரிலும் எல்லாச் சர்ச்சுகளிலும் பொதுவாக என்ன எழுதி உள்ளது? ஏசு எதற்காக இப்பூவுலக்கு வந்தார்?"
" ஏசு சமாதானத்தை போதிக்க வந்தார் என்று எழுதியுள்ளது. ஏசு சமாதானத்தையே விரும்பினார் என்று நாங்களனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்."
" சகோதரியே, பைபிளில் என்ன போட்டுள்ளது பாருங்கள்."
என்கையிலுள்ள பைபிளை தருகிறேன்.

49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.

51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.

53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
லூக்கா - 12:49,51,52,53

34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.

35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு - 10:34,35
ஏசுவின் வரிகளைச் சுட்டிக்காட்டியதும், பைபிளை என் கையிலிருந்து பிடுங்கி மேற்படி வசனங்களை திரும்பத் திரும்ப படிக்கிறார்.

முகம் சிவக்க,மனம் குழப்ப,புருவம் நெளிய தயவுடன் கொஞ்சம் இருங்கள்!(Excuseme) எனக்கூறிவிட்டு நெரெ(Cabincrew) பணிப்பெண்கள் அறை நோக்கிச் சென்று தனது பைபிளை எடுத்து புரட்டுகிறார். அட்டை, விலாசம்,அடிக்கப்பட்ட இடம் இவைகளை சரிப்பார்க்கிறார். இரண்டும் ஒன்று தான். வாசகங்களும் ஒன்றே! ஒரு பாட்டில் நீர் கொண்டுவந்து முழுவதும் குடிக்கிறார், வியர்வைத் துடைக்கிறார், சோர்ந்து அமர்கிறார், தன் கண்களையே நம்ப முடியாது தவிக்கிறார்.

அவரின் குழப்ப நிலையைக் கண்ட நான் " என்ன அன்புச் சகோதரியே! தங்கள் மனம் புண்படும்படி நான் ஏதாவது கூறியிருந்தால் மன்னியுங்கள். எனக்கு உங்கள் வயதில் சகோதாரிகளுண்டு.என் கருத்தை நான் கூறவில்லை. பைபிளில் உள்ளதையே எடுத்து வைத்தேன்! பாவம் உங்கள் 10 ஆண்டு பைபிளின் பாசத்தை நான் சிதைத்து விட்டேனா?"

' இல்லை சார், எனக்கு அதிர்ச்சியாய் உள்ளது! எப்படி இப்படி எழுதப்பட்டுள்ளது? யார் இப்படி செய்தது? என்னால் நம்ப முடியவில்லை!'

" சகோதரியே,அதை முஸ்லிம்களோ இந்துக்களோ செய்யவில்லை, செய்யவும் முடியாது. இதை சரிபார்த்தவர்கள் லிஸ்ட்டில் 32 மேதாவிகள் (Bible Scholars and 52 Demominations) 52 - உயர் பாதிரிஸ்தானிகர்கள் கூடி சரிப்பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனால் மொழிபெயர்ப்பில் கோளாறு இல்லை. அப்படிக் கருத்தில் கொண்டாலும் இதோ தழிழ் பிரதி, இதுவும் அப்படியே! இதோ அரபிப்பிரதி" (தனக்கும் அரபி தெரியும் என்று வாங்கிப் படிக்கிறார்) ஆமோதிக்கிறார்.

" சகோதரியே! ஏசுநாதர் பேசிய மொழி என்ன?"

" அராமிக் (ARAMIC)"

" பைபிளிம் மூலப்பிரதி எந்த மொழியில் இருந்தது?"

" ஹிப்ரு (HEBREW)"

" தற்போது அராமிக் மொழியும் வழக்கில் இல்லை, மூலப்பிரதியும் காணாது போய்விட்டது."

" அராமிக் வழக்கில் இல்லை - பைபிளின் மூலப்பிரதி காணாது போய்விட்டது என்று யார் சொன்னது?"

" பைபிளே சொல்கிறது."

கடைசியில் திறந்து Summary of the book of the bible ( நூல் வரலாறு)K.J.V என்ற தலைப்பின் கீழ்: அதில் உள்ள வாசகம் இதோ!

NEW TESTAMENT

The New Testament, Which has a total of twenty seven Books, being with the four Gospels, which record the life and teachings of christ from four different view points Although the Originai autograph No Longer Exist.

27 புத்தகங்களைக் கொண்ட புதிய ஏற்பாடானது 4 சுவிஷேஷங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏசுநாதரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நாலு கோணங்களில் பதிவு செய்கிறது. அதன் மூலப்பிரதி காணாமல் போய்விட்டதால்...

" சகோதரியே, நிலைமை இப்படி இருக்க நீங்கள் எதைவைத்து இதை நிருபிப்பீர்கள்? கடவுளால் அருளிய வேதம் காணாமல் போனதா? எப்படிச் சகோதரியே நம்புவது? காலம் காலமாய் கடைசி நாள் கியாமத் (Day of Judgemant) வரை வழிகாட்ட வேண்டிய நூல் எங்கோ வழி தவறினால், அதைப் பின்பற்றினால் என்ன நிலைமை?

குருடன் குருடனுக்கு வழிக்காட்டினால் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதுவும் வழிகாட்ட வந்த முதல் குருடனே காணாது போன பின்,அடுத்தவன் அழைக்கிறான் -வாருங்கள் அவன் காட்டிய பாதையில் நான் கூட்டிச் செல்கிறேன் " ஏசு அழைக்கிறார்" என்று கூப்பாடு போட்டால் எப்படியம்மா ஏற்றுக் கொள்வது?

நான் பரந்த மனதுடனே கேட்கிறேன் எது சரி - சகோதரியே?

பிறகு, ஏசுவை நீங்கள் என்னவென்று நினைக்கிறீகள்?" என்றேன்.

" அவரே கடவுள் என்று எண்ணி வழிபடுகிறேன்" என்றார்.

" சரி - அவர் கடவுள் என்றால் ,எதை வைத்து அவரைக் கடவுள் என்கிறீர்கள்?"

" ஒரே வரி உலகில் யாருமே உடலுறவற்று பிறக்கவில்லை. அவரே - அவர் மட்டும் தந்தையற்று பிறந்துள்ளார்".

" தந்தை இல்லாது பிறந்ததனால் மட்டுமே அவர் இறைவன் என்றால் அதே பைபிளில் வரும் ஆதம் - ஏவாள் (ADAM & EVE) தாயுமற்று தந்தையுமற்று பிறந்துள்ளானரே! அவர்களை எப்படி அழைப்பது Super God என்றா?
ஆரம்பமும் அற்று முடிவும் அற்று,தாயும் இன்றி தகப்பனும் இன்றி, வம்ச வரலாறு,வம்ச வழியும் இன்றி,சமாதானத்தின் ராஜா மெல்கிதேக்கு(Kings of Peace)என்றழைக்கப்படும் தீர்க்கதரிசி பற்றி பைபிளின் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் வருகிறதே - அதிகாரம் 7:2 முதல் 4வது வசனம் வரை - அவரை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை?

ஏசுநாதரே கடவுள் என்றால்,அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் 3 நாள் இப்பூலகையும், கோள்களையும் வான்களையும் ஜீவராசிகளையும் யார் கவனித்துக் கொண்டது?

அவரது தாயின் வயிற்றில் 10மாத வளர்ச்சியின் போது உலகையாரம்மா கவனித்துக் கொண்டது?

நாத்திகனுக்கு இவைகள் நல்ல பிடியாகி விட்டதே!

ஏசுநாதரின் கடைசி வார்த்தைகள் என்ன என்று பைபிள் சொல்கிறது?

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு " ஏலோயீ! ஏலோயீலாமா சபக்தானி" என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு 'என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று அர்த்தமாம்.
மாற்கு 15:34

அவரே தேவன் (கடவுள்) என்கிறீர்கள். ஆனால் அவரே 'என் தேவனே! என் தேவனே!! ஏன் என்னைக் கைவிட்டீர்' என்கிறார். யாரையம்மா அழைத்தார்? தன்னைத் தானே அழைத்தாரா? ஏனிந்த குழப்பம்?"

மவுனம் பதிலாய் உள்ளது.

" கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கப்பெறும் என்று மத்தேயூ - 7:7ல் கூறியுள்ளப்படி நாம் கேட்டு கடவுளிடமிருந்து கிடைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். இவர் கேட்டே கிடைக்கவில்லையே! எப்படியம்மா இவர் பேச்சை நாம் கேட்பது என்று எந்த பாமர மகனும் யோசிப்பானல்லவா?"

இதற்கும் அச் சகோதரியிடமிருந்து மவுனமே பதிலாய் வந்தது.

" ஒரு புனித நூல் அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டுமல்லவா? யாரோடும் ஆண், பெண் பேதமின்றி, பகிர்ந்து அர்த்தத்துடன் படிக்க வேண்டுமல்லவா? ஒரு புனித நூலை ஓதும்போது மனது கலக்கமோ, தயக்கமோ இன்றி உள்ளம் தெளிவடைய வேண்டுமல்லவா? மாறாக குழப்பமோ குதர்க்கமோ ஏற்பட்டால் அது புனித நூலாகாதல்லவா?"

" ஆமாம்!"

" சரி, சகோதரியே! நீங்கள் குளிக்கும்போது நான் மாடியிலிருந்து பார்ப்பது கூடுமா?"

" தண்டனைக்குரிய குற்றம்"

" சாதாரண மனிதனான எனக்கே கூடாது என்றால் இறைநேசச் செல்வர்கள் இதைச் செய்யலாமா?"

" யார் செய்தாலும் மிகப் பெரிய தண்டனை தரப்பட வேண்டும்".

" அப்படியானால் டேவிட்டை ஏன் தன்டிக்கவில்லை?"

" எந்த டேவிட்?"

(DAVID தாவூது) பைபிளில் வரும் ஏசுவின் முன்னோர்கள், ஏசுவின் பரம்பரை பட்டியலில் முதல் இடம் வகிப்பவர்!" (Genealogy)

" எங்கே போட்டுள்ளது?"

" இதோ - சாமுவேல் - அதிகாரம் - 11"
II Samuel - Chapter II version: 2 to 5

அதிகாரம் பதினொன்று சாமுவேல்

2. ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது ( டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

3. அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய பத்சேபாள் - என்றார்கள்.

4. அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான், அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.

5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான்.

" போதும் நிறுத்துங்கள் சகோதரியே! ஒரு நபி - ஒழுக்கத்தை போதிக்க வேண்டியவரே - விபச்சாரம் அதுவும் பிறன் மனைவி என்று விசாரித்து தெரிந்து இந்தத் தவறை செய்துள்ளார்.

" அதன் பின்னால் உரியாவை ( பத்சேபாளின் கணவனை) பின்னர் கொலை செய்ய திட்டமிட்டு முடிக்கிறார்.

இதுதான் பைபிளின் லட்சணமா ?

சிந்தியுங்கள் பிறகு முடிவெடுங்கள்.

இஸ்லாம் உங்களை கட்டாயப் படுத்தி அழைக்கவில்லை சிந்தித்து முடிவு எடுக்க சொல்கிறது கிறித்துவர்களே என்னை நம்பாதிர்கள் நான் ஒரு ஆடு மேய்த்தவன் என்னைக் கர்த்தர் என்றும் ராவுத்தர் என்றும் அழைக்காதிர்கள் படைத்தவன் எவனோ அவனையே வழி படுங்கள் அல்லாஹ் ஒருவனே கடவுள் அவனுக்கு நிகரா எவனும் இல்லை.

Saturday, 8 December 2007

மனிதனுடைய மூளை - ஒரு பார்வை

ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400g வரை ஆகும் .
இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g.
நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஆக்சிஜனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.
மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.
மூளையின் நான்கில் மூன்று பங்கு முழுவதும் நீரால்நிரப்பப்பட்டுள்ளது.
நமது மூளைக்கு உலகிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிக அளவு எண்ணங்களை சேமித்து வைக்கும் ஆற்றல் உள்ளது.
மனித மூளை 25 watts அளவு சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது ஒரு குமிழ் விளக்கை (Light Bulb) பிரகாசமாக ஒளிரச் செய்ய போதுமானதாகும்.
நமது மூளை 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இடது மூளை உடலின் வலது பக்கத்தினையும் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது.
ஆனால் வலது மூளையை விட இடது மூளை 186 million நியுரோன்களை மேலதிகமாக கொண்டுள்ளது.
ஆக்சிஜன் இல்லாமல் மூளை நான்கு முதல் ஆறு நிமிடம் வரை உயிர்வாழும். அதன் பிறகு செல்கள் இறக்கத்தொடங்கிவிடும்.
மூளையின் மிகக் குறைந்த வேகம் 416 km/hour அல்லது 260 mph.இது நவீனயுகத்தின் “Super Car” களினால் அடைய கூடியமிகக்கூடிய வேகமாகும்.
மூளையின் எடை உடலின் எடையில் வெறும் 2% மட்டுமே,ஆனால் உடலின்மொத்த சக்தியில் 20% ஐ தனது தேவைக்கு எடுத்து கொள்ளுகின்றது.
மூளையானது பகலில் சிந்திக்கும் திறனை விட இரவில்சிந்திக்கும் திறன்கூடியது. இதனால் தான் நாம் இரவில் நித்திரைக்கு செல்லும் முன் படிப்பது அதிக நாட்கள் மனதில் நிற்கின்றது.
அளவில் சிறியதும் ஆற்றலில் பெரியதுமான மூளையைப் போல் இயங்கக் கூடிய கணினியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐபிஎம் நிறுவனம். ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தயாரித்துள்ளது.
இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட CPU with Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024 GB)) நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.
ஆனால் பல ஆண்டு ஆராச்சிக்கு பிறகு பல கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.(?) புனையின் முளையை விட 100 மடங்கு குறைந்த அளவே செயல்படக் கூடியது.

படத்தை பார்த்தால் இந்த கம்யூட்டரை வைப்பதற்கு எத்தன க்ரவுண்ட் இடத்தை தேவையோ தெரியவில்லை?
மூளை என்பது நூறு கோடி நியூரான் மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது . இது எவ்வாறு இயங்குகிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆனால் இவ்வளுவு சிறிய அளவில் மிகப் பெயரிய ஆற்றல் கொண்ட மூளை ஆராய்ச்சியாளர்களுக்கு இது புரியாத புதிராகவே உள்ளது!
தொகுப்பு: அபு நபீலா

Thursday, 6 December 2007

ஒரு பெண்ணின் கல்வி கனவையாவது தீயிட்டு கொளுத்தி இருக்கும்?

சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில்  ஒரு தலையங்கம் பெண்கள் ஹாஸ்டலில் தண்ணி அடிக்கிறார்கள் , தம்  அடிக்கிறார்கள்,ஆணுறை கிடக்கிறது என்றெல்லாம் நான் அந்த கட்டுரையை படிக்கவில்லை என்றாலும் அதில் என்ன எழுதி இருந்திருப்பார்கள் என்பதை ஒரு மாதிரியாக கணிக்க முடிந்தது...என்ன எழுதி இருப்பார்கள் அதில் கலாச்சாரம் கெட்டு விட்டது..,  மேற்கத்திய கலாச்சார பித்து பிடித்து அலைகின்றனர், கல்லூரி பெண்கள் கற்பை பெரிதாக மதிப்பதில்லை , மது , சிகரெட் எல்லாம் சாதாரணம் என்று சொல்லி அதை செய்யும் பெண்களிடம் பேட்டி கண்டிருப்பார்கள் அதை அட்டை படத்தில் போட்டு ஒரு சின்ன பரபரப்பை உண்டாக்கி சுழற்சியை கூட்டி காசு பார்த்து இருப்பார்கள்.தலைவர் பிரபாகரன் இறந்ததாக அறிவிக்க பட்ட போது அவர் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியாமல் கிராபிக்சில் அவர் படத்தை போட்டு காசு பார்த்த கயவர்கள்  தானே இவர்கள் .இந்த பதிவை  படிக்கும் ஒருவர் கூட அந்த பத்திரிக்கையை வாங்கி விட கூடாது என்ற காரணத்தினாலே அந்த பதிப்பு வந்து ஒரு மாதத்துக்கு பிறகு அதை பற்றி எழுதுகிறேன்..,
        அந்த கட்டுரையின் மூலம் என்ன பாதிப்பு வந்துவிடும் என்று நீங்கள் கருதலாம் . முதல் பாதிப்பு அதை படிக்கும் பட்டம் பெறாத கிராமத்து பெற்றோர்கள் எப்படி தங்கள் பெண்களை நகரத்தில் தங்கி படிக்க அனுமதிப்பார்கள்.என்னால் உறுதியாக சொல்ல முடியும் அந்த கட்டுரை நிச்சயம் ஒரு பெண்ணின் கல்வி கனவையாவது தீயிட்டு கொளுத்தி இருக்கும்..,இன்னொன்று அதில் நிரம்பி வழியும் ஆணாதிக்க பார்வை இதுவே ஒரு ஆண்கள் ஹாஸ்டலில் தண்ணி அடிக்கிறார்கள் தம் அடிக்கிறார்கள் என்று ஒரு தலையங்கம்  போடுங்கள் படிப்பவர்கள் சிரிப்பார்கள். அப்படி ஏதும் நடக்காத ஆண்கள் ஹாஸ்டல் பற்றி  வேண்டுமானால் தலையங்கத்தில் வரலாம்..,

               கற்பு? ஒரு பெண் திருமணதிற்கு முன்போ பின்போ கணவனை தவிர வேறு ஆண்களுடன் உறவு கொண்டால் அவளுக்கு தான் எத்தனை பெயர்கள் .., தேவுடியாள்,குச்சிக்காரி,விபச்சாரி,வேசி இன்னும் அவர் அவர் ஊருக்கு ஏற்றார் போல் நிறைய பெயர்கள்..,இத்தனை பெயர்களுக்கும் அதன்  எதிர்பாலினத்தில் பெயர்களே இல்லை என்பது தானே இங்கு நிலைமை ..,