Tuesday, 17 June 2008

நான் ஹிந்து மதம் பற்றி ஆராய்ச்சி செய்த போது என்னை ஆழமாக யோசிக்க வைத்த இந்த கேள்விகள் !!


1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்? இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வா
கனங்களாக கொண்டுள்ளனர்? ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?


3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்? ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?


4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன? அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?


5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?

6. புராணங்களில் எப்ப
ோதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார். கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை?



7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை? இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன? இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன? ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?


8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?


9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்? ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும்? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?


10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்? மானைக் கொல்வது தவறில்லையா?ا


11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை? ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா?


12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்? தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா? அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?


13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன்?


14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை?م


15.  மதுரை அழகர் கோவில்  மற்றும் கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா? உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா?


மாற்று  மத சகோதரர்கள் என்னை  தவறாக நினைக்க வேண்டாம்.. தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் அனைவரும் நல்ல முறையில்  முறை வைத்து  உறவுகளாக பழகி வருகிறோமே.!! இவற்றை  குலைக்கும் வகையில் மதவாத சக்திகள் நம்மை  தூண்டி விடுகிறது..


என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, முதலில் இவைகளுக்கு பதில் கிடைக்கட்டும்!

தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Wednesday, 11 June 2008

சிவகங்கைச் சீமையின் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய சிறப்பு பார்வை..

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

தாய்-தந்தையர் 
இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்குஅருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 1730ஆம் ஆண்டுஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். 


இளமை பருவம்..
இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி – கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார்.  

திருமண வாழ்க்கை 
 1746ல் சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.


மன்னர் மரணம்..
இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும், அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர்.மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.
கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்துபிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரைச் சமாதானம் செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும் மீட்டுத் தருவதாக ராணிக்கு வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச் சென்றார். 


ஆங்கிலேயர் படையெடுப்பு
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆங்கிலேயர்களின் சட்டதிருத்தம்..
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை தோற்றுவிக்கப் பட்டது.அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சியரபான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

படை திரட்டல்..
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. 
சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. 
இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.
விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.
வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.
அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

இறுதி நாட்கள்
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 
1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். 
முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது.பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் விருப்பாட்சி அரண்மனையில்  டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்

இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.




சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்..
1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 – 1783 – வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1783 – 1801 – மருது பாண்டியர்கள் – பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது
5. 1801 – 1829 – கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 – 1831 – உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 – 1841 – மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 – 1848 – போ. உடையணத்தேவர்
9. 1848 – 1863 – மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 – 1877 – ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 – முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 – 1883 – துரைசிங்கராஜா
13. 1883 – 1898 – து. உடையணராஜா
14. 1898 – 1941 – தி. துரைசிங்கராஜா
15. 1941 – 1963 – து. சண்முகராஜா
16. 1963 – 1985 – து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
17. 1986 – முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார். 

முடிவுரை :

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.
ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.

வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.


ஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் 

ஹைதராபாத் நிஜாமின் கஜானாவுக்கு வரி உண்டா ? ஒரு சிறப்பு பார்வை..

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான். 
இந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர்  காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பணியாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.
அன்றைக்கு வெள்ளையனின் காலில் விழுந்து கிடந்த மைசூரின் உடையாரும், திருவிதாங்கூர் ராஜாவும், ஆற்காடு நவாப்பும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும், தொண்டைமானும், இன்னும் சிந்தியாக்களும், மராத்திய பேஷ்வாக்களும் இன்றும் சுகபோகிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மாளிகைகள், இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்யாத இந்திய அரசு இன்றும் அவற்றைப் போஷித்து வருகின்றது.
திப்பு சுல்தான் உள்ளிட்ட தியாகிகள் வெள்ளையனை எதிர்த்த போது, ஹைதராபாத் நிஜாம்கள் பச்சையான துரோகம் புரிந்து காலனிய அரசுக்கு வால் பிடித்தார்கள். இவர்களின் ஊதாரித்தனமும், உல்லாச வாழ்வும் உலகறிந்தது. ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், ஒரு வாத்து முட்டையின் அளவுள்ள வைரத்தையே செருப்பில் பதித்து வைத்திருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப் பின் அதைக் கண்டெடுக்கும் அவரது வாரிசு, அந்த வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
இப்பேர்ப்பட்ட பெயருக்கும், புகழுக்கும் உரிய நிஜாம் குடும்பத்தார் இப்போது மாபெரும் அவமானத்தில் உழல்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன அவமானம்?
1995-ம் ஆண்டு நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய்களுக்கு வாங்குகிறது. இதற்கு வருமான வரித்துறை சுமார் 30 கோடி ரூபாய்களை வரியாக விதிக்கின்றது. தங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தை தாம் விற்பதற்கு அரசுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த நிஜாமின் வாரிசுகள், நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இடைக்கால ஏற்பாடாக சுமார் 15.45 கோடியை வருமானவரித் துறையிடம் வரியாகவும், 15.05 கோடியை வங்கியில் பிணைத் தொகையாகவும் வைக்கிறது அரச குடும்பம்.
இந்த 15.05 கோடியில் அரச குடும்பத்து வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஈவுத்தொகை போக தற்போது 8.66 கோடிதான் மீந்துள்ளது. மீதம் உள்ள தொகையோடு வட்டியையும் சேர்த்து 8.99 கோடியை நிஜாம் குடும்பம் வரிப் பாக்கியாக வைத்துள்ளது. சுமார் 120 வாரிசுகளைக் கொண்ட நிஜாம் குடும்பத்தினர் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று நோட்டீசு விடுத்துள்ளது வருமான வரித்துறை. அரச குடும்பத்துக்கே நோட்டீசா என்று கொதித்துப் போன நிஜாமின் வாரிசுகள், இதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை சென்று முறையிட்டுள்ளனர்.
இதைப் பற்றி மனம் வெதும்பிப் பேசிய நிஜாம் ஓஸ்மான் அலியின் கொள்ளுப் பேரன் நவாப் நஜஃப் அலிகான், “நாங்கள் தில்லி சென்று போராடுவோம். அப்போது தான் அரசகுடும்பத்துக்கு வருமான வரித்துறை இழைத்துள்ள அவமானத்தை இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று புலம்பியுள்ளார்.
வெள்ளையனை அண்டிப்பிழைத்த இந்தக் கைக்கூலிகள் தமது துரோகத்தனத்துக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகளை நட்ட ஈடின்றிக் கைப்பற்றுவோம் என்று அறிவிக்க துப்போ திராணியோ இல்லாத இந்த ‘சுதந்திர’ அரசின் நிதியமைச்சர் ’நிஜாமின் கவலையைப் போக்க அரசு நடவடிக்கையெடுக்கும்’ என்று உறுதியளிக்கிறார். திப்புவையும், மருதுவையும், கட்டபொம்மனையும் மறைத்து விட்ட முதலாளித்துவ ஊடகங்களோ நிஜாமின் ’துயரத்துக்கு’ மனமிரங்குகின்றன – மைசூர் உடையாரின் வருடாந்திர கேளிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.
கட்டபொம்மனைக் கைது செய்து கும்பினியின் காலை நக்கி அடிமைச் சேவகம் புரிந்த தொண்டைமானின் வாரிசு திருச்சியின் முன்னாள் மேயர் என்றால், வடக்கே சிந்தியாக்கள், காஷ்மீரின் கரண் சிங் என்று சுதந்திரத்துக்குப் பின் நேரடியாக ஓட்டுக் கட்சி அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைத் தொடர்ந்து ருசித்தவர்கள் ஏராளம்.  அப்படி நேரடியான வாய்ப்புக் கிடைக்காத வெள்ளைக்காரனின் சவுக்கு நுனிகளான ஜமீன்களும், இன்ன பிற சிற்றரசர்களும் வட்டார அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலச்சுவான்தார்களாகவே நீடித்து வருகிறார்கள்.
உண்மை என்னவெனில் இவர்களைப் பராமரிக்கும் இந்திய அரசு கூட கைக்கூலிகளின் அரசு என்ற முறையில் நடப்பது கும்பினியின் ஆட்சி தான் – என்ன, கவர்னரின் தலையில் தொப்பிக்குப் பதில் டர்பன் இருக்கின்றது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 10 June 2008

தமிழ்த் தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் பற்றிய சிறப்பு பார்வை...


தமிழில் பிறமொழிச் சொற்களை வகை தொகையின்றிக் கலந்து எழுதும் போக்கை இருபதாம் நூற்றாண்டில் தடுத்துநிறுத்தியவர் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் என்றால், தமிழைத் தூய தமிழாக வழக்கில்கொண்டுவர முனைந்து நின்றவர்கள் மொழிஞாயிறு பாவாணரும், அவர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ஆவார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த பாதிப்புகளைவிட இருபதாம் நூற்றாண்டில்தான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டன. சமற்கிருதச் செல்வாக்கு, இந்தி எதிர்ப்பு, வடபுல ஆதிக்கம், ஆங்கிலவழிக்கல்வி, ஈழத்தமிழர் போராட்டம் என்று பலமுனைகளில் தமிழும், தமிழர்களும் தாக்கப்பட்டனர். இவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டவர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்கவர்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பெருஞ்சித்திரனாரின் பெருமைமிகு வாழ்க்கை:
பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர். 

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னுவிவிம் பெயரில் கையயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையயழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகர முதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார். 

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம்உரையாலும்பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம்மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்வி பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார்.தமிழ் மொழி மீட்சி என்ற நோக்கத்தினடியாகப் பிறந்ததுவே தமிழக விடுதலை என்ற பாவலரேறு அவர்களின் குறிக்கோளும். அப்போது அவருடனிருந்த எண்ணற்ற இளைஞர்களின் கனவாகவும் அது உருப்பெற்றிருந்தது. ஆனால் ஒரு மக்கள் விடுதலை என்பது எவ்வளவு கடுமையான பணி, அதற்கு எத்தகைய பின்புலம் உருவாக்கப்பட வேண்டும், மக்கள் மனதில் ஒரு ஆர்வத்தை எழுப்பவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையை விட கட்டுப்படுத்த முடியா தன் ஆர்வத்தையே வலிமையாக்கி 1972இல் மதுரையில் தமிழக விடுதலை மாநாடு நடத்தித் தளைப்பட்டார். அம்மாநாட்டில் விளைவாக அவருடனிருந்த இளைஞர்களில் பலர் அகன்றனர். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

பாவலரேற்றின் அணியில் முற்றிலும் தனித்தமிழ் ஆர்வம், தமிழக விடுதலை வேட்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளுணர்வாகக் கொண்டோர் மட்டும் திரளவில்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அன்று இருந்த இரண்டாம் தர நிலையாலும் தங்களுக்கு வேலைவாய்ப்பற்றிருப்பதாலும் வெறுப்புற்றிருந்த தமிழ் இலக்கியம் முதுகலை பயின்ற இளைஞர்கள் எண்ணற்றோர் இணைந்தனர். 

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது. 

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும்
 1. தமிழ்,
 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும்,
 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு,
 5. இளைய தலைமுறை,
 6. காதல்,
 7. இயற்கை,
 8. இறைமை, 
9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன.

 தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார். 

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.  இவர்தம் இறுதி ஊர்வலத்தில் ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு 12 கல்தொலைவு நடந்து வந்தனர்

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.

பெருஞ்சித்திரனாரின் நூல்கள் :

1. எண்சுவை எண்பது
2. பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
3. ஐயை
4. கொய்யாக் கனி
5. கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
6. பள்ளிப் பறவைகள்
7. மகபுகுவஞ்சி
8. கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
9. நூறாசிரியம்
10. தன்னுணர்வு
11. இளமை உணர்வுகள்
12. பாவேந்தர் பாரதிதாசன்
13. இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
14. வாழ்வியல் முப்பது
15. ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
16. உலகியல் நூறு
17. அறுபருவத் திருக்கூத்து
18. சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
19. இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
20. செயலும் செயல்திறனும்
21. தமிழீழம்
22. ஓ! ஓ! தமிழர்களே
23. தனித் தமிழ் வளர்ச்சி வரலாறு
24. நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
25. இளமை விடியல்
26. இட்ட சாவம் முட்டியது
27. நமக்குள் நாம்....


கடந்த 1800 ஆண்டுகளாக தமிழகம்அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத்தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும் நாள் தொலைவிலில்லை.

அவ்வாறு தமிழகம் தன் தேசியக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் போதும் அதனை எய்திய பின்னரும் அத்தேசியக் குறிக்கோளுக்காகப் பாடுபட்ட நேர்மையான தலைவர்களில் காலவரிசையில் முதலாவதாக ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரே நிற்பார்.

தமிழகத் தேசியம் என்ற ஒன்றுக்காகப் பாடுபடுவதாகத் திராவிட இயக்கத்தை இத்தமிழக மக்கள் நம்பினார்கள். ஆனால் அவ்வியக்கம் தங்கள் தன்னலத்திற்காகப் பொய் பேசி இம்மக்களை ஏமாற்றிவிட்டது என்று இன்று அனைவருக்கும் புரிகிறது. அவ்வியக்கம் வீசியெறிந்துவிட்டத் தமிழகத் தேசியக் குறிக்கோளைப் பொன்னேபோல் போற்றி எண்ணற்ற இளைய தலைமுறையினரின் உள்ளங்களின் மீது அழுத்தமாக அமர்த்திவைத்துவிட்ட பாவலரேறு அவர்களின் மிகப்பெரும் பணி காலத்தால் அழியாதது. அதற்காக அவர் தன் உயிரையே தேய்த்துக் கொண்டார். அத்தகைய அரிய அந்தத் தமிழகத் தேசியத்தை அதன் திசையறிந்து, இலக்கு நோக்கி எடுத்துச் செல்வோம்.

நன்றி: திண்ணை இணையதளம், அந்திமழை  இதழ்.

தொகுப்பு :மு.அஜ்மல் கான் .