Thursday, 19 March 2009

கணிதமேதை "அல்ஜிப்ரா'வின் தந்தை" முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி (Muhammad ibn Mūsā al-Khwārizmī) பற்றிய ஆய்வுக்கட்டுரை...

முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி (Muhammad ibn Mūsā al-Khwārizmī) ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார்.  இவர் பொகா 780 ஆம் ஆண்டளவில் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும் அக்காலத்தில் குவாரிசும் (Khwārizm) என்று அழக்கப்பட்டதுமான இடத்தில் பிறந்தார். இவ்விடம் அக்காலத்தில் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.

கணிதம் இன்றைய நவீன கணினிக்கு அடிப்படை என்பதை நாம் மறுக்க முடியாவிட்டாலும் இந்தியர்களும் மிகப்பெரியளவில் தங்களுடைய பங்களிப்பை இத்துறையில் செலுத்தியுள்ளனர் என்றால் மிகையல்ல. 

கணிதப்பாடம் என்றாலே சிலருக்கு அலர்ஜி  இவற்றை தேர்ந்தெடுக்காமல் மற்ற பிரிவை தேர்ந்தேடுத்தோரும், கணித வகுப்புக்கு கட்டடித்து புறக்கணித்தோரும் ஏராளமாக இருப்பார்கள். கணிதப் பாடத்தைக் கடினம் என்று கருதுவோர் தாங்கள் புரிந்துகொள்வதில் ஏற்படும் குறைபாடே காரணம் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.

இப்படி எல்லோரையும் !? அலற வைக்கும் கணித பாடத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதி அல்ஜிப்ரா. இருபடி கோவைகளை காரணிப்படுத்தி அதன் தீர்வை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை கி.பி 780 ஆம் ஆண்டு குவாரிஸ்ம் என்ற இடத்தில் பிறந்த முஹம்மது இப்னு மூஸா அல் குவாரிஸ்மி அவர்களால் இன்றைய கணிதப் பாடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 'அல்ஜிப்ரா' கண்டுபிடிக்கப்பட்டன. 

கல்வி வாழ்க்கை முடிந்து, சம்பாதிக்கத் தொடங்கி, கல்யாணம் குடும்பம் என்றாகிய பிறகு கணிதத்திற்கு வேலை இல்லை. ஆனால் எங்கள் ஹஜ்ரத்ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு முறை சொன்னார்கள், ஜியாமெட்ரிலெ, யுக்லிட்ஸு ஒரு பிரின்சிபலை சொல்லி இதை ஒத்துக்கொள் என்பான். அதை ஒத்துக்கொண்டுத்தான் ஆகணும். அது பிறகுதான் புரியும். அதே சிஸ்டம்தான் நம்ம கிட்டேயும் ஒரு வார்த்தையை கொடுத்து அதை அல்லாவுடைய பேராகச் சொல்லி ‘திக்று’ செய் என்பேன். என்னா, ஏதுண்டு யோசிச்சுக்கூடப் பார்க்காம செஞ்சுத்தான் ஆகணும். ஏன்னு கேட்கிறதா இருந்தா நாளையிலேந்து வராதே என்றார்கள்.
வேலூர் மதரஸாவில் ஓதிய ஆலிம்சா ஜியாமெட்ரி பத்தி சொல்றாங்க, அல்ஜிப்ராவைப் பத்தி சொல்றாங்க, யுகலிட்ஸ் என்கிறாங்க, யுகலிட்ஸ்..! அது யார் அல்லது என்னவென்றே புரியவில்லையே.!? என அப்போது நான் சிந்தித்ததுண்டு, காலஓட்டத்தில் அவர்கள் சொன்னமாதிரியே விளக்கம் தானாகவே புரிய ஆரம்பித்தது. யுக்லிட் , ஜியாமெட்ரியின் தந்தை என்று ரொம்ப வருஷத்துக்கு பிறகுதான் தெரிந்தது. அல்ஜிப்ரா எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி இருந்துச்சு அப்போ. இப்ப எல்லாம் போச்சு. என்றாலும் அல்ஜிப்ராவைக் கண்டுபிடித்தது ஒரு இஸ்லாமியர் என எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம், அல்லது கேட்ட ஞாபகம். அதில் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கணிதவியலில் கிரேக்கர்கள் சூரர்களாக இருந்தார்கள் என்பதுதான் என் நம்பிக்கை.
அருட்கொடையாளர்கள் வரிசையில் அல் குவாரிஸ்மி வந்தபோதுதான் தெரிந்தது மனித சமுதாயத்துக்கு அரேபியர்கள் எத்துணை அர்ப்பணிப்பு செய்திருக்கிறார்கள் என்பது. இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தனித்து நிற்காமல் இந்திய தத்துவங்களையும் கிரேக்கத் தத்துவங்களையும் இணைத்துக்கொண்டு புதிய வழிமுறைகளை புதையலாகத் தந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களுடைய ஆய்வுகளில் அகம்பாவமோ கர்வமோ இல்லை. முந்தைய காலத்தவர்களையும் பிற நாட்டவர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புக்களையும், தத்துவங்களையும், அறிவுகள் முதல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அறிவுக்காகவே வாழ்ந்து developed invention-ஐ இம்மனித சமுதாயத்துக்கு தந்திருக்கிறார்கள் எனும்போது பெருமிதம் கொள்வதில் தவறில்லை.

AL KHWARIZMI – The Father of Algebra (780-850)
முஹம்மது பின் மூஸா அல் குவாரிஸ்மி(محمد بن موسی خوارزمی) என்ற முழுப் பெயரைக் கொண்ட அல் குவாரிஸ்மி எப்போது பிறந்தார், அவருடைய இளமைக் கால வாழ்க்கைப் பற்றிய உறுதியான குறிப்புகள் ஏதும் கிடைக்காவிட்டாலும் கி.பி 800 க்கு முன் தற்போதைய உஸ்பெகிஸ்தானிலுள்ள தெற்கு ஏரல் கடல் அருகிலுள்ள குவார்ஜம் பகுதியில் பிறந்தார் என சிலராலும், கிபி 780ல் சிர்காவில் பிறந்தார் என சிலராலும் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான ஆய்வாளர்கள் அவர் குவார்ஜம்(Kheve)ல் பிறந்தார் என கூறுகின்றனர். சிலர் பாக்தாது என்கின்றனர், ஆனால் டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கிடையிலான அல் குத்ரபுல்லி என்ற பட்டணத்தில் பிறந்தவர், இவர் முன்னோர்கள் க்வாரிஸம் பகுதியிலிருந்து குடியேறி இருக்கலாம் என்கிறார் வரலாற்றாசிரியர் அல் தப்ரி. அதேபோல் அவர் மறைந்தது பாக்தாது என்றாலும் எந்த ஆண்டு என்பதில் கருத்து வேறுபாடு உள்ளன. சிலர் கிபி 850 என்கின்றனர், சிலர் 833 அல்லது 840 என்கின்றனர்.
அவருடைய பிறப்பில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் குவாரிஸ்மி என்ற அவரின் பெயரை வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாக அன்று பாரஸீகத்தின் ஒரு பகுதியாக இருந்த குரோஸம் அல்லது Khwarizm பகுதியில் பிறந்திருக்கவேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். இன்றைய உஸ்பெகிஸ்தானில் Oxus நதியின் தென் பாகத்தில் இருக்கிறது. இதே பகுதியில் தான் அல் பைரூனியும் 973ல் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாஸிய கலிஃபா ஹாரூன் அல் ரஷீதின் ஆட்சி அரபுலகின் பொற்காலமாக இருந்தது. பாக்தாதைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த கலிஃபா தன் ஆட்சியை மத்தியதரைக் கடலிலிருந்து இந்தியாவின் சிந்து பகுதி வரை விரிவு படுத்தினாலும் தன்னுடைய அரசவையில் பல்வேறு அறிஞர்களை பங்குபெற செய்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். எனவே கல்வியைப் பெறுவதற்காக இந்தியா, சீனா மற்றும் பல பாகங்களிலிருந்தும் பாக்தாதை நோக்கி வந்தனர் என்கிறது ஒரு குறிப்பு. அப்போது வணிகத்திற்கும் கல்விக்கும் சிறந்த நகரமாக விளங்கியது. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் மகன் மாமூன் பின் ராஷீத் தன் தந்தையின் தடத்தைப் பின்பற்றினார். விளைவு பாக்தாதில் தந்தை நிறுவிய அறிவகத்தில் (Dar-al-Hikma – house of wisdom)  குறிப்பிடத்தக்க அறிவியலாளர்களை பணியில் அமர்த்தி பல்வேறு கிரேக்க, பைசாந்திய, இந்திய தத்துவம் மற்றும் அறிவியல் கையெழுத்துப் பிரதிகளை அரபியில் மொழிபெயர்ப்பு செய்தார். மிகப் பெரிய நூலகத்தை நிறுவினார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் அலக்ஸாண்டிரியாவில் நிறுவப்பட்ட நூலகத்தைவிட இந்நூலகம் பெரிதாக இருந்ததாக ஆய்வாளார்கள் கூறுகின்றனர். தவிர வான் ஆய்வகங்களை (Observatories) நிறுவி வான் ஆய்வுக்கு பெரிதும் உதவினார்.
ஹாரூன் ரஷீது காலத்தில், இன்றைய உஸ்பெகிஸ்தானில் பிறந்த அல் குவாரிஸ்மி இளமை காலத்தில் தன் பெற்றோர்களுடன் பாக்தாதில் குடியேறினர் என சில தகவல்கள் கூறுகின்றன. எனவே இவருடைய கல்வி தன் சொந்த ஊரில் சிலகாலாமும் பின் பாக்தாதிலும் இருந்திருக்கவேண்டும்.
கணிதத்துறையிலும், வானவியலிலும், புவியியலிலும் சிறந்து விளங்கிய இவர் கணிதவியலில் ஆற்றிய பங்கு மகத்தானது. மத்திய காலத்தில் வாழ்ந்த கணிதவியலார்களைவிட கணிதத்தில் பல பிரிவுகளில் இவருடைய அடிப்படைக் கொள்கை( Basic concept) மகத்தானதாக இருக்கிறது என்று பிலிப் ஹிட்டி என்பவர் கூறுகிறார்.
அல்ஜிப்ராவின் தோற்றம்
அறிவகத்தில் (house of wisdom) தன்னுடைய சகாக்களான பனு மூஸாசகோதரர்களோடு பணியாற்றிய குவார்ஜமி மொழிபெயர்ப்பு பணியுடன் கணிதவியலையும், வானவியலையும் ஆராய்ந்தார். கலிஃபா அல் மாமூனின் ஊக்கத்தால் உந்தப்பட்டு இரண்டு புத்தங்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தார். ஒன்று அல்ஜிப்ரா (இயற்கணிதம்; குறிக்கணக்கியல்) பற்றியது; மற்றொன்று வானவியல் பற்றியது.
Manuscript copy of al-Khwarizmi’s book of algebra; the MS was copied in 743 H in Cairo, 500 years after the death of al-Khwarizmi. © Oxford University, the Bodleian Library.
a copy of algebra book
His work on algebra was outstanding, as he not only initiated the subject in a systematic form but he also developed it to the extent of giving analytical solutions of linear and quadratic equations, which established him as the founder of Algebra’ என்கிறார் ஃபிலிப் ஹிட்டி.
வாழ்க்கையில் சந்திக்கும் மரபுசார் சொத்து(legacy), மரபுரிமை(inheritance),வணிகம், அளவீடு, பங்கீடு, நில அளவை, கட்டுமானம், geometrical computation இன்னும் பல காரியங்களுக்கு இந்த அல்ஜிப்ரா மிக சுலபமான வழியை வகுத்துக் கொடுக்கிறது. இஸ்லாமியப் பேரரசில் அன்று அவர்களுக்கு பிரச்சினையாக இருந்த கணக்கீட்டு முறை அனைத்துக்கும் தீர்வைக் கொடுத்தது.
கிபி 830 ம் ஆண்டு வெளியிடப்பட்டது இவரது பிரசித்திவாய்ந்த புத்தகமான ‘அல் கித்தாப் அல் முக்தசர் ஃபி ஹிசாப் அல் ஜபர் வல் முக்காப்லா’ – الكتاب المختصر في حساب الجبر والمقابلة (The Compendius Book on Calculation and Balancing). இது மிகவும் உபயோகமான, சுலபமான கணிதமுறையை தந்தது(ernie.bgsu.edu). Al Khwarizmi introduced natural number  in his book, namely solution of equation. His equations are linear or quadratic  and are composed of units, roots and squares. For example, to al-Khwarizmi a unit was a number, a root was x, and a square was x2. However, although we shall use the now familiar algebraic notation in this article to help the reader understand the notions, Al-Khwarizmi’s mathematics is done entirely in words with no symbols being used.
He first reduces an equation (linear or quadratic) to one of six standard forms:
1. Squares equal to roots.
2. Squares equal to numbers.
3. Roots equal to numbers.
4. Squares and roots equal to numbers; e.g. x2 + 10 x = 39.
5. Squares and numbers equal to roots; e.g. x2 + 21 = 10 x.
6. Roots and numbers equal to squares; e.g. 3 x + 4 = x2.
The reduction is carried out using the two operations of “al-jabr and al-muqabala”. Here “al-jabr” means “completion” and is the process of removing negative terms from an equation. For example, using one of al-Khwarizmi’s own examples, “al-jabr” transforms x2 = 40 x – 4 x2 into 5 x2 = 40 x. The term “al-muqabala” means “balancing” and is the process of reducing positive terms of the same power when they occur on both sides of an equation. For example, two applications of “al-muqabala” reduces 50 + 3 x + x2 = 29 + 10 x to 21 + x2 = 7 x (one application to deal with the numbers and a second to deal with the roots).
‘அல் ஜபர் வ முக்காப்லா’ லத்தின் மொழியில் Robert of Chester  என்பவரால் 1145 ல் ‘Liber algebrae et almucabala’ என்ற பெயரில் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பிறகு F. Rosen  என்பவரால் 1831 ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. லத்தீன் மொழியில் வரும் algebrae என்ற வார்த்தை ‘அல்ஜிப்ரா’வாக நிலைத்துவிட்டது. அரபி புத்தகத்தின் நகல் ஆக்ஸ்போர்டிலும் லத்தின் மொழிபெயர்ப்பு கேம்ப்ரிட்ஜிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
Diophantus  ஐ சிலரால் அல்ஜிப்ராவின் தந்தை என்று அழைக்கப்பட்டாலும் Diophantus ஐ காட்டிலும் சுலபமான செய்முறைகளை அல்ஜிப்ராவில் ஆரம்ப நிலையிலேயே அல் குவாரிஸ்மி புகுத்திவிட்டார். Diophantus ன் செய்முறைகள் கரடுமுரடாக இருந்ததால் அரபு கணிதவியலார் அதை தவிர்த்து வந்தனர். இவருடைய நேரடியான  சமன்பாட்டு வழிமுறைகள் Diophantus மற்றும் பிரம்மகுப்தாவின் வழிமுறைகளைக் காட்டிலும் சுலபமாகவே அமைந்துள்ளது.  இவரது கண்டுபிடிப்புக்குப் பெரிதும் உதவியாக இருந்தது பாபிலோனிய, இந்திய, கிரேக்க கணிதமுறைகள். எனவே பண்டைய கணிதவியலாரின் அல்ஜிப்ரா வேறு வடிவத்தில் இருந்தாலும் தீர்மானிக்கமுடியாத நிலையில் தவிர்க்கக்கூடியதாக இருந்தது.
Arithmetic
அல் குவாரிஸ்மியின் இன்னொரு பெரிய ஆய்வு ‘ஹிந்து-அரபிய எண்களைப்(hindu arabic numarals) பற்றியதாக இருந்தது. இது பிரம்மகுப்தாவின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. தூரதிருஷ்டவசமாக அவர் எழுதிய ஆய்வு புத்தகம் Kitāb al-Jama wa-l-tafrīq bi-ḥisāb al-Hind (“The Book of Addition and Subtraction According to the Hindu Calculation”) மறைந்துவிட்டது. ஆனால் லத்தீன் மொழி பெயர்ப்பான ‘Alogritmi de numero Indorum’என்றும் ஆங்கிலத்தில் ‘ Al Khwarizmi on the Hindu Art of Reckoning’ என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கணிதவியலே இன்றும் ‘Algorismi or Algorithm‘  என இவருடைய பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. 
Al-Khwarizmi wrote numerous books that played important roles in arithematic and algebra. In his work, De numero indorum (Concerning the Hindu Art of Reckoning), it was based presumably on an Arabic translation of Brahmagupta where he gave a full account of the Hindu numerals which was the first to expound the system with its digits 0,1,2,3,….,9 and decimal place value which was a fairly recent arrival from India. Because of this book with the Latin translations made a false inquiry that our system of numeration is arabic in origin. The new notation came to be known as that of al-Khwarizmi, or more carelessly, algorismi; ultimately the scheme of numeration making use of the Hindu numerals came to be called simply algorism or algorithm, a word that, originally derived from the name al-Khwarizmi, now means, more generally, any peculiar rule of procedure or operation. The Hindu numerals like much new mathematics were not welcomed by all. In 1299 there was a law in the commercial center of Florence forbidding their use; to this day this law is respected when we write the amount on a check in longhand (ernie.bgsu.edu).
பண்டைய காலத்தில் ’0′ அராபிய கணிதத்திலும் கிரேக்க எகிப்திய கணிதத்திலும் இல்லாமலிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டபிறகுகூட பூஜ்யம் மதிப்பில்லாதது என பல கணிதவியலார் நம்பினர், மேலும் அது வேறு எண்கூட சேர்வதால் அதன் மதிப்பு உயரும் என்பதையும் மறுத்தனர். மறுபக்கம் ரோமானிய எண்கள் எழுத்து(Alphabet) வடிவில் இருப்பதால் சாதாரண கணக்கிடல்கூட(simple calculation) கடினமாகும்போது சிக்கலான கணக்கு(complex mathemetics) சாத்தியமில்லாமல் போகிறது. தவிர அப்போது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உபயோகித்துவந்த எண்கள் இடர்பாடாடும் தடுமாற்றமும் உள்ளதாகவும் (awkward and clumcy) இருந்ததாக JJ. O’Connor and EF. Robertson கூறுகின்றனர். அப்போது கணிதத்துறையில் ஒரு சிக்கலான சூழலே அமைந்திருந்தது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிலும் மாயா இனத்தவராலும் பூஜ்யம் புள்ளி வடிவில் இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். என்றாலும், இந்தியாவில் 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிதவியல் நிபுணர் ஆரியபட்டா(கி.பி.476) முதலில், ’0′ வைக்  கண்டுபிடித்து சூன்யம் என பெயெரிட்டார். 0,1,2,3,4,5,6,7,8,9 எண்களை உருவாக்கினார். அல் குவாரிஸ்மி தன் கணித முறையில் ’0′ புகுத்தி பின்னம் முதல அனைத்திலும் அதன் முக்கியத்துவத்தைக் காட்டி கணிதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் (JJ. O’Connor and EF.Robertson). 
அரபியில் எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. ஆனால் எண்கள் மட்டும் இடமிருந்து வலமாக எழுதப்படுகிறது. இந்திய எண்ணான ’0′வை சிஃபர் (الصفر) என்ற பெயரில் அரபியர்கள் கணிதத்துறைக்கு எடுத்துக்கொண்டதால் நன்றிக்கடனாக எண்களை மட்டும் இடமிருந்து வலமாக எழுதப்படுவதாக ஒரு கதை உண்டு. இதற்கு சான்றாக துபாயிலுள்ள ‘இப்னு பதூதா‘ வணிகவளாகத்தில் , ‘The number used throughout the world today as called “Arabic” because they were taken by the Arabs from ancient Indian Sanskrit developed into system and then passed on to the rest of the world.’ என்ற குறிப்பு காணக்கிடைக்கிறது. எனவே எண்களின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது அல் குவாரிஸ்மியிலிருந்து மற்ற அரபிய ஆய்வாளர்கள் மூலம் ஐரோப்பா முதல் உலகெங்கும் பரவியதால் அரேபிய எண்கள் என சொல்லப்படுகிறது. எண்கள் முழுவதும் இந்தியாவிலிருந்து பெறப்பட்டதால் அவை இடமிருந்து வலமாக எழுதப்படுவதன் காரணம் தெளிவாகிறது.
Evoluation of Hindu-Arabic numerals
யுக்லிட்ஸால் கவரப்பட்ட அல் குவாரிஸ்மி, ஜியாமெட்ரி கணிதத்திற்கு யுக்லிட்ஸின் முறையைப் பின்பற்றினார். கலிஃபா மாமூன் ராஷிதின் காலத்தில், அறிவகம்(House of Wisdom) ஆய்வகத்தில் பணிபுரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் பின் மத்தார்  என்ற அறிஞர் Equlid’s Elements  ஐ அரபியில் மொழிபெயர்த்தார். அப்போது அல் குவாரிஸ்மி இளைஞராக இருந்தாலும் குவாரிஜ்மியின் குழுவில் ஹஜ்ஜாஜூம் ஒருவராக இருந்திருக்கிறார்.
((குறிப்பு: ஹிஜ்ரி 40 (கிபி 661)ம் ஆண்டில் ஈராக்கின் கவர்னராக இருந்த கொடுங்கோளன் பெயரும் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் என்பதே. இவன் இறந்தபோது ஈராக்கிய மக்கள் தெருக்களில் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களாம், இமாம் ஹசன் பஸரியும், இரண்டாம் உமரும்(உமர் பின் அப்துல் அஜீஸ்) இறைவனுக்கு நன்றி செலுத்தினார்களாம். எனவே ஒரே பெயருடைய இருவரும் வேறு வேறு காலத்தவர், மாறுபட்ட அறிவு உடையவர்கள்.))
வானவியல்
இந்திய வானவியலை ஆதாரமாக வைத்து இவரது ஆய்வுகள் இருந்தன. இவர் எழுதிய zij al-Sindhind (ﺰﻳﺝ “astronomical tables of Sind and Hind”)என்ற நூல் சுமார் 37 அத்தியாயங்களையும் 116 அட்டவணைகளையும் கொண்டது. இதில் காலண்டர், சூரியன், சந்திரன், கிரகங்கள் இவைகனின் நிலையைக்(true position) கணக்கிடும் முறை, spherical astronomy, astrological tables, parallax and ecalipse calculation, tables of sines and tangents, visibility of the moon இடம்பெற்றிருந்தன. இவருடைய இவ்ஆய்வு இஸ்லாமிய வானவியலில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.
கிபி. 820ல் எழுதிய இந்த புத்தகமும் மறைந்துவிட்டது.  அடிலார்டு(Bath-England) என்பவரின் ஊகப்படி மஸ்லாமாஹ் இபுனு அஹ்மது அல் மஜ்ரிதி என்ற ஸ்பெயின் வானவியல் விஞ்ஞானி(கிபி 1000) அதை லத்தினில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அதன் கையெழுத்துப் பிரதிகள் நான்கு Bibliothèque publique (Chartres), the Bibliothèque Mazarine (Paris), the Bibliotheca Nacional (Madrid) and the Bodleian Library (Oxford) ஆகிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்திய, கிரேக்க(Hellenistic) முன்னோடிகளின் வழியில் சூரிய கடிகாரம் ஒன்றை வடிவமைத்து அதற்கென்று பிரத்தியேக அட்டவணை ஒன்றயும் உருவாக்கினார். இவருடைய இக்கடிகாரத்தின் மூலம் உலகின் எப்பாகத்திலிருந்தாலும் நேரத்தை கணிக்கமுடியும். இவர் வடிவமைத்த கடிகாரத்தையே பல பள்ளிவாசல்களில் தொழுகை நேரம் கணிப்பதற்காக வைத்திருந்தனர்.
முதல் quadrants(கால் வட்ட வடிவிலான) and mural instruments மற்றும் the sine quadrant, யும் கண்டுபிடித்தார். sine quadrant, was used for astronomical calculation The first horary quadrant for specific latitudes யும் கண்டுபிடித்தார். இதன் உதவியால் ஒவ்வொரு மணித்துளியில் அட்சரேகை, மற்றும் கால மாற்றங்களை அறிய முடிந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு அட்சரேகைகளைக் கணக்கிட்டனர், சூரியனின் உயர வித்தியாசங்களையும் கணக்கிட்டனர். இன்றும் இது கடல் பயணத்தில்(navigation) பயன்படுத்தப்படுகிறது.
புவியியல்
குவாரிஸ்மியின் மூன்றாவது ஆய்வு புவியியல் பற்றியது, இவர் எழுதிய ‘கித்தாப் சூரத் அல் அர்ள்’ (كتاب صورة الأرض “Book on the appearance of the Earth” or “The image of the Earth”) என்ற நூல். இது கிபி 833 ல் எழுதி முடிக்கப்பட்டது. தாலமியின் புவியியலை ஆதாரமாகக்கொண்டு 2402 ஊர்களின் அட்சரேகை, தீர்க்கரேகை, மலைகள், நதிகள், கடல்கள், தீவுகள், கடல்தீரங்களைக் குறிப்பிட்டுள்ள அவர், அட்சரேகை தீர்க்க ரேகைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொரு அட்சரேகைப் பகுதிகளிலும் தட்பவெட்பப் பகுதிகளாக பிரித்தார்.
தாலமியின் தவறான மத்தியத்தரைக்கடல் (கானரி தீவுகளிலிருந்து கிழக்குக் கடற்கரை வரை) வரைபடத்தைத் திருத்தி அமைத்தார். (கானரி தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கிறது.)  Ptolemy overestimated it at 63 degrees of longitude, while al-Khwarizmi almost correctly estimated it at nearly 50 degrees of longitude. தாலமியின் வரைபடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலும் இந்தியப் பெருங்கடலும் தரையினால் சூழப்பட்டிருந்தாக (land locked seas) தவறாக வரையப்பட்டிருந்ததை திருத்தி சரியாக வரைந்தார்(both oceans are open bodies of water). இஸ்லாமியப் பகுதி, ஆப்ரிக்கா, தூரக்கிழக்கு நாடுகள்(the regions of Islam, Africa and the Far East) பற்றிய குறிப்புகள் தாலமியைவிட சரியாக இருந்தன. ஆனால் ஐரோப்பாப் பற்றி தாலமியின் அடிச்சுவற்றையே பின்பற்றுகிறார்.
இன்றைய ஆஸ்திரேலியாவும்      குவாரிஸ்மி வரைந்த ஆஸ்திரேலியா படமும்
கலிஃபா மாமூன் அல்-ரஷீதின் ஆதரவுடன் எழுபது புவியியல் நிபுணர்களின் உதவியால் இன்றைக்கு காணப்படும் உலக வரைபடத்தைப் போன்ற அமைப்பையுடைய  வரைபடம் ஒன்றை உருவாக்கினார். அதில், கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்பே  தென் அமெரிக்கா இடம்பெற்றிருந்தது.
இவரது ‘கித்தாப் சூரத் அல்-அர்ளு’ ஸ்டார்ஸ்பர்க் பல்கலைக்கழக நூலகத்திலும் லத்தின் மொழிபெயர்ப்பு Biblioteca Nacional de España மேட்ரிட்லும் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.
இதர ஆய்வுகள்.
அவரது இதர ஆய்வுகளில் ஒன்று யூதர்களின் காலண்டர். ‘ரிசாலா ஃபி இஸ்திக்ராஜ் தாரிக் அல்-யஹூத்’ (Extraction of the Jewish Era) என்ற அவரது நூலில் 19 வருட சூரிய  காலண்டரின் கணிப்பும் Tishrī மாதத்தின் முதல் வாரம் முதல் நாள் இவைகளையும், யூத வருடத்திற்கும் பண்டைய பாபிலோனிய செலியுசிட் பேரரசு உபயோகித்த Seleucid era வுக்கும் இடையிலான கால வித்தியாசத்தை கணக்கிடும் முறையையும், யூதக் காலண்டர்படி சூரிய சந்திரனின் சராசரி தீர்க்கரேகைகளின் (mean longitude) விளக்கமும் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று அல் பைரூனியும் விளக்கியிருக்கிறார்.
அஸ்ட்ரோலோப் அமைக்கும்(construction of astrolabes) விதமும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் ‘கித்தாப் அல் ருகாமத்’(Book of sundial) மற்றும் ‘கித்தாப் அல் தரீக்’(the book of history) என்று இரண்டு நூல்கள் எழுதியுள்ளதாகவும் அவை தொலைந்துவிட்டதாகவும் இப்னு அல்-நதீம் என்ற அறிஞர் தன்னுடைய Kitab al-Fihrist என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் Two texts deserve special interest on the morning width (Ma’rifat sa’at al-mashriq fī kull balad) and the determination of the azimuth  (திசைவில், திசை ரேகை கிடைத்தளம்) from a height (Ma’rifat al-samt min qibal al-irtifāʿ).
பெர்லின், இஸ்தான்புல், தாஷ்கண்ட், கெய்ரோ, பாரிஸ் நகரங்களில் அரபி கையெழுத்துப் பிரதிகள் அனேகம் காணக்கிடைக்கிறது அவைகளில் சில அல்-குவாரிஸ்மியுடையதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இஸ்தான்புலிலுள்ள கையெழுத்துப் பிரதிகளில் சில அறிஞர் நதீம் குறிப்பிட்ட சூரிய கடிகாரத்தைப் பற்றியது, இன்னும் சில மக்காவின் திசையைக் குறிப்பிடும் பிரதிகளும் உள்ளன.
கிபி. 813 – 833  இடையிலான இருபதாண்டு குறுகிய காலத்தில் பெரும்பாலான ஆய்வுகளையும் ஆய்வு நூல்களையும் குவாரிஸ்மி எழுதி முடித்துள்ளார். இவரது பெரும்பாலான நூல்கள் 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டது, அதன்பிறகே இதர ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின்பு சீன மொழிக்குச் சென்றது. அதன் பிறகு படையெடுப்புகளினால் அழிந்தது.
அல்-குவாரிஸ்மிக்குப் பிறகு அபு மன்சூர் இப்னு தாஹிர் அல் பக்தாதி( 980-1037), உமர் கையாம்(1048–1131) ஆகியோர் அல்ஜிப்ராவை இன்னும் விரிவாக்கினர் (JJ. O’Connor and EF.Robertson).  இன்று வணிகத்திலிருந்து வங்கி வரை, கம்ப்யூட்டரிலிருந்து கட்டுமானம் வரை அனைத்திலும் பயன்பாட்டிலுள்ள கணிதத்தின் தந்தையை மறந்தாலும் அல்ஜிப்ராவை மறக்கமுடியுமா……..? காலம் உள்ளவரை அல்ஜிப்ரா இருக்கும்வரை, அல்காரிதம் இருக்கும்வரை அல் குவாரிஸ்மியும் கூடவே இருந்துகொண்டிருப்பார்.
இந்திய எண்கள் பற்றி விளக்கிய இந்த நூல் பதின்ம இட எண்முறையை (decimal positional number system) மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தியது.  தொலமியின், புவியியல் என்னும் நூலைத் திருத்தி இற்றைப்படுத்திய இவர் வானியல், சோதிடம் ஆகியவை தொடர்பிலும் நூல்களை எழுதியுள்ளார்.

1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர்.  அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற இயற்கணிதவியலின் தந்தையும் இவர்தான்.  இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.



கிபி 820 ஆம் ஆண்டளவில் இவரால் எழுதப்பட்ட இயற்கணிதம் என்பதே ஒருபடிச் சமன்பாடு, இருபடிச் சமன்பாடு என்பவற்றின் முறையான தீர்வுகள் தொடர்பான முதல் நூலாகும்.
பலர் இவரை இயற்கணிதத்தின் தந்தை என்கின்றனர். வேறு சிலரோ இந்தப் பட்டத்தை டயோபந்தஸ் என்பவருக்குக் கொடுக்கின்றனர். எண்கணிதம் என்னும் இவரது நூலின் இலத்தீன் மொழிபெயர்ப்பு 12 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. 


கணித வரலாற்றில் பெருமளவில் பங்காற்றிய அல்ஜிப்ராவின் தந்தை முஹம்மது இப்னு மூஸா அல் குவாரிஸ்மி அவர்கள் கி.பி. 850 ஆம் ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் காலமானார்..

குறிப்பு:
குவாரிஜ்மியைப் பற்றிய சில தெளிவான குறிப்புகள் H.பீர் முஹம்மது அவர்கள்  ‘கணிதமும் வரலாற்று அரபுலகமும்’ என்ற தலைப்பில் திண்ணையிலும் அவரது வலைத்தளத்திலும் எழுதியுள்ள கட்டுரையைப் பார்க்கலாம்.
இவர்களைப் பற்றி எழுதுவதாக இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம், அவ்வளவு செய்திகள் தோண்டத் தோண்ட வந்துக்கொண்டிருக்கிறது. தமிழ் இணையத்தில் தேடிப்பார்த்தவரை போதுமான செய்திகள் இல்லை. ஆனால் வேறு யாரும் புத்தகமாகப் போட்டிருக்கலாம். அது கிடைக்கவில்லை. என்னால் முடிந்தவரை எழுதியுள்ளேன்.  பொறியியலிலும் தொழில்நுட்பத்துறையிலும் இருப்பவர்களுக்கு கணிதம், விரல் நுனியில் இருக்கும், மொழிபெயர்ப்பில், கருத்தில் தவறுகள் இருக்கலாம்.கண்ணுறுபவர்கள் சுட்டிக்காண்பிக்கவும்.
ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
இவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை சமீபத்தில் ஆங்கில இணையதளம்மொன்றில் நான் படித்தவை இதோ...

Sources:
http://en.wikipedia.org/wiki/Al-Ma’mun                                                                                           
http://wiki.answers.com/Q/Who_invented_the_number_name_zero                                          
http://en.wikipedia.org/wiki/Ban%C5%AB_M%C5%ABs%C4%81                                                   
http://en.wikipedia.org/wiki/Natural_number                                                                                         
http://rudra.hubpages.com/hub/Aryabhatta                                                                                             

http://www.yesiknowthat.com/muhammad-ibn-musa-al-khwarizmi/




Muhammad ibn Musa al-Khwarizmi was a Mathematician who lived around the 780′s and has made great contributions to the world of mathematics and science. Noteworthy, though, is his development of the algorithms in the same field of mathematics. Since, in computer science, these form the basis for primary calculations, he has therefore been termed as the father of computer science. His discovery of this kind of mathematics has been used in many computer science calculations and discoveries. 

Muhammad ibn Musa al-Khwarizmi was a member of the house of Wisdom in Baghdad, where he contributed most of his findings and research. The house of wisdom was merely a center where research into scientific issues was done. It also conducted some teaching activities there. Interestingly, this man has also been linked to the success of modern day algebra. He based most of his works on findings that had been written by scientists and mathematicians who lived before him. But the constant studies and discoveries in mathematics have been used as the foundation for many scientific discoveries.

In an attempt to take his mathematical skills further, Muhammad ibn Musa al-Khwarizmi also made some calculations about the position of the moon. As if that was not enough, his calculations even went as far as including the position of the sun and planets. The calendars and the features of it that portray the accuracy of counting days in a year are also attributed to him and his calculations. Many of the works he did in this area were later picked up by scientists who lived after him for further development and refinement.

It can be noted from the foregoing that this scientist had done a lot of work in terms of coming up with important astrological findings and calculations that proved to be of great importance in the years that followed. But one of the most interesting features about his work is his introduction of the roman numerals in English. To date, this system is still in place and working as he had envisioned it..

Collection & Prepared By M.Ajmal Khan.


வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் பணமா என்ன? ஒரு விழிப்புணர்வு ஆய்வு..

வாழ்க்கையில் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒரு சிலரே நினைத்ததை சாதிக்கின்றனர். மற்ற எல்லோரின் கனவுகளும் இறுதி வரை கனவுகளாகவே நிலைத்து விடுகின்றன. ஏன் ஒரு 
சிலர் மட்டும் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்?  அநேகர் ஏன் வாழ்க்கையில் தோற்கிறார்கள்? வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 
மேலே படியுங்கள்.... 

வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கனவு கண்டவர்களே. வாழ்க்கையில் கனவுகளும் இலட்சியங்களும் இல்லாதவர்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கனவு காண்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதுமில்லை என்பது தான் நிஜம். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் கனவு நனவாகும் என்று முழுமையாக நம்பினார்கள். 

அவர்கள் கனவுகள் நனவாக பல வருடங்கள் பிடித்திருக்கலாம். அவர்கள் தங்கள்
 இலட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது அதற்கான திறமைகளும் தகுதிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நிச்சயமாக நம்பினார்கள். அதற்காக உழைத்தார்கள். கடுமையாக உழைத்தார்கள். அவர்களது முழு சிந்தனையும் அவர்களின் இலட்சியத்தின் மேல் மட்டுமே இருந்தது. 

'அதெல்லாம் கஷ்டம், நம்மால் முடியாது, அதில் ரொம்ப ரிஸ்க் இருக்கிறது, அதெல்லாம் 
நடக்காது' என்று சொன்னவர்கள் எல்லோரும் தோல்வியுற்றார்கள். 

முதலில் கனவு காணுங்கள். அவை நனவாகும் என்று முழுமையாக நம்புங்கள். அதற்கான 
தகுதிகளையும், திறமைகளையும் அயராமல் வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்களுக்குக்  கட்டாயம் வசப் படும்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். சந்தோஷத்தை தேடியே எல்லா உயிரினங்களும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தை தேடி தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் வாழ்க்கையின் வெற்றி என்பது ஒருவொருக்கொருவர் வேறுபடலாம்.வாழ்க்கையின் வெற்றி என்பது எதைப் பொறுத்து இருக்கிறது? நிறைய பேர் பணம் சம்பாதித்து விடுவது தான் வாழ்க்கையின் வெற்றி என்று நினைக்கின்றனர். சிலர் புகழ் அடைவதும், பணம் சேர்ப்பதும் தான் வாழ்க்கையின் வெற்றி என்று கருதுகிறார்கள். சிலர் அழகான மனைவி அல்லது கணவன் கிடைப்பதே வாழ்வின் வெற்றி என்று கூட நினைக்கலாம். சிலர் அன்பான குடும்ப வாழ்க்கை அடைவது தான் வாழ்வின் வெற்றி என்று கருதலாம்.


பணம் வாழ்க்கையில் வசதிகளைப் பெருக்க பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சந்தோஷத்தைக் கொடுக்குமா என்றால் அதை உறுதியாகக் கூற முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. பணத்தினால் சந்தோஷத்தை கொடுக்க முடியுமென்றால் சித்தார்த்தன் அன்று அரண்மனையை விட்டு வெளியேறியிருக்க மாட்டானல்லவா? மர்லின் மன்றோ தற்கொலை செய்திருக்க மாட்டாளல்லவா? மைக்கேல் ஜாக்சன் இறந்திருக்கமாட்டாரல்லவா? புகழ் இருந்தும் மன்றோவும் ஜாக்சனும் நிம்மதி இல்லாமலிருந்தார்கள் என்பது தானே நிஜம்?

உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான சந்தோஷத்தை அடைவதே ஆகும். சந்தோசம் என்பது நமது மனதின் ஒரு நிலை தான். அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடியும் என்பது தான் உண்மை. போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும்  இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர் தான் உண்மையான சந்தோஷத்தைப்  பெற முடியும். அவர்கள் வாழ்க்கை தான் வெற்றியான வாழ்க்கையாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் இருப்பதை வைத்து திருப்தியாக வாழும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்கள் வசப்படும்.

வாழ்க வளமுடன்!
தொகுப்பு :அ .தையுபா அஜ்மல்.

Friday, 13 March 2009

உலகின் முதல் ஆம்புலன்ஸ்..

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

நர்சுகள் அறிமுகமான விதம்
நியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.

டாக்டருக்கு தண்டனை...!
பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.

முதல் மருத்துவ உடை...
அறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆராய்ச்சிக்கு உதவியவர்...
ஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.

முதல் மருத்துவ பத்திரிகை...
அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

சுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...
நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள். 

Wednesday, 11 March 2009

விஞ்ஞானி கலிலியோ வரலாறு...

கலிலியோ கலிலீ (Galileo Galilei) இத்தாலி நாட்டிலுள்ள பைசா நகரத்தில் கி.பி.1564 - ஆம் ஆண்டு பிப்ரவரி 15 - ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை வின்சென்சோ கலிலீ. சிறந்த இசைமேதை. கலிலியோ ஆறு பிள்ளைகளில் மூத்தவர்.

முற்காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிவைத்தபடி ஆண்களுக்கு 32 பற்கள் உண்டு என்றும், பெண்களுக்கு 28 பற்கள் தான் உண்டு என்றும் நம்பிவந்தனர். அதையே, கலிலியோவின் பள்ளியிலும் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். கலிலியோ அதை பரிசோதனை செய்துபார்த்தார். வீட்டில் அவரது அம்மா மற்றும் பக்கத்துவீட்டுப் பெண்களின் பற்களையும், ஆண்களின் பற்களையும் எண்ணிப்பார்த்து அரிஸ்டாட்டில் கூறியது தவறு. ஆண், பெண் அனைவருக்கும் 32 பற்கள் உண்டு என்ற உண்மையைக் கூறினார்.

கலிலியோவின் தந்தை அவரை மருத்துவராக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் பைசா நகரத்திலுள்ள பைசா பல்கலைக்கழகத்தில் (University of Pisa) 1581 - ல் சேர்ந்தார். கலிலியோவுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லை, கணிதத்தைக் கற்றார். இயல்பிலேயே கலிலியோவுக்கு இயந்திர இயலிலும், இசையிலும், ஓவியத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.


 
 
 
மாபெரும் விஞ்ஞானி கலிலியோ--- இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக் கிறது। அரசு மரியாதை செய் கிறது। அறிவியல் உலகத் திற்கு சிறந்த பங்களிப்பு செய் யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனி மையாக இல்லை. அவர்க ளது கண்டுபிடிப்புகள் மதநம் பிக்கைகளுக்கு விரோதமான தாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளி யிட முடியாது. மீறி வெளியிட் டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப் படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலி லியோ கலிலி தன் வாழ்நாளில் சந்தித்தார். நவீன விஞ்ஞானத்தை உருவாக்கியதில் அவரது பங்கு மகத்தானது. வானவியல், இயற் பியல் மற்றும் கணிதவியலில் அவரது கண்டுபிடிப்புகள் ஒரு அறிவி யல் புரட்சியையே ஏற்படுத்தின. ஆனாலும் மதவாதிகளின் தண் டனையை அவர் எதிர்கொள்ளவேண்டி வந்தது.

 
1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்। அறிவியல் உண்மைகள் அவை வெளி யிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம்....

Tuesday, 10 March 2009

The Iguazu Waterfalls, Argentina-Brazil Border - Amazing and Beautiful places !!






Iguassu Falls is a natural phenomenon you may visit at the border of Argentina and Brazil. There are more than 270 falls in the area where
the cliffs and islets lie scattered in a half moon shape. From the visitor center, you can head down the trails or ride a picturesque train. There are two basic circuits: an upper path and a lower path. 
 Iguazu Falls are known throughout the world as one of the most beautiful  and majestic natural waterfalls man has ever seen. The falls themselves sit  on the Iguazu River and rest on the border between Brazil and Argentina.  Visited by many people every year, the Iguazu Falls are one of the most popular  natural tourist destinations in South America.  The first European explorer to find Iguazu Falls was Alvar Nunez Cabeza de Vaca,  a Spanish Conquistador, who came upon them in 1541. The fall went mostly   invested after that until being rediscovered once again in the late  nineteenth century. The name Iguazu comes from a local Indian  language and roughly translates as "Big Water".



The lower path leads to the base of the falls where the intense crash of the falls releases a thick mist into the air. It is a truly unique experience worth an adventure.






undefined
The Iguazu Waterfalls 1


































http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=evF9zIe0GaY
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7VnnU7Ks8G4
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wndkgwcdDQU

I needed some place that would not only wipe away all the dust and grime of that nation, but also allows me to forget all my follies I committed therein. My intended escape route out of Uruguay was ‘over the land’ trip to Porto Alegre in Brazil, but as nothing ever happens according to plan, on a whim, I bought a ticket to Foz do Iguacu, gateway town to the famous Iguacu Falls, which many tout as the world’s eighth natural wonder – that kept me wondering what the other seven were! 


Think Niagara Fall is impressive? Straddling the frontier between Argentina and Brazil, Iguazu Falls are taller and more than twice as wide. It is among the most visited spots in all of Latin America, and it’s hardly surprising as the beauty of these waterfalls is breathtaking to say the least! At the same time, the falls' natural setting has been beautifully preserved and the surrounding forests are home to all sorts of birds and wildlife. For those fortunate to make the trip, I recommend you cross into Brazil (one-day visa permits that can be processed overnight). The view from the Brazilian side to the Argentinian side is an incredible panorama whose beauty is matched only by its powerful sound!!! 


Prepared  & Collection by: M.Ajmal Khan.