Thursday, 10 September 2009

உம்ரா செய்வது எப்படி ? ஒரு சிறப்பு பார்வை..

'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா) 


    மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.

    இன்று உம்ரா செல்லக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர், ஆனால் உம்ராவிற்கான வழிகாட்டுதல்கள் தனியாகத் தொகுக்கப்படாமல் ஹஜ்ஜுடன் சேர்த்து கூறப்பட்டடிருப்பது புதிதாக உம்ராச் செல்லக் கூடியவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இக்குறையை நீக்குவதற்காக இங்கு உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.

    1. இஹ்ராம் :
    மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)
    பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)
    உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும். அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً (லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّلَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.



     2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
    لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ
(அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)


    3. தவாஃப் செய்தல்:
    மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.
    அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.
    ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.
    ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.
    தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.
    ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை,
    رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும்.
    (பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.
    தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.


    4. தவாஃப் செய்து முடிந்தால்...?:
    தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.
    இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.
    தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.



    5. ஸயீ செய்வது:
    தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஸஃபாவை நெருங்கும் போது,
    إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ
    'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.
    பின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.
    لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ 
    'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'. பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும். துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மாவாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
    பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும். (பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)
    மர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.
    ஸஃபாவிலிருந்து மாவாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும்.
    ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை.
    
    6. ஸயீ முடிந்ததும்:
    ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.
    கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.
    இத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது.
    (குறிப்பு: இஹ்ராமில் தடுக்கப்பட்டவை, இஹ்ராம் கட்டியவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை போன்ற மேலதிக விபரங்களை விரிவான நூற்களில் காணவும்.)

    உங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

During Notice Period What to do Things to be done !!

Things To Do During Your Notice PeriodDear Gentle Man,
Whatever be the reason for your exit, you need to serve your notice period just like every other employee. Whether you are leaving the organisation voluntarily or have been asked to put down your papers, your last few days at the company will reflect your true self to your boss and colleagues as you are no longer trying to please them. Different employees have to serve different amount of periods depending upon their ranking and position. If you are a junior, you will have to serve a minimum span of one month and if you’re at a senior position, your period can range between three to six months. Instead of using this term as a relaxed downtime, you can do things to leave a striking last impression on your colleagues and superiors.Notice period is generally considered as one of the most important time of your career. No matter what the reason is, it is crucial that you walk out of your workplace gracefully when it’s time to leave. Take a look at Six things that you must keep in mind while cruising through your notice period:
Transition: It is always good to have a plan before you approach your boss. Despite the fact that you and your boss might have different approaches, it is always better to think about what might happen after you leave. It’s appreciative of your work ethics and principles.
Professionalism: You need to have a professional approach. Think twice before you speak. Never say things that you would regret in the future or might harm your career. Continue to maintain the same work ethics until you step out of your office for good. It is always better to leave on a good note.
Plan: Switching jobs is a major step in your career. It’s always good to have a plan before you move on from your current organization. This can help you handle stress in a better manner. Have a temporary plan for your finances, job requirements, commute, and other changes the new job might bring to your current lifestyle.
Resume: It’s always better to keep your resume updated. Also, remember to fill in details of different projects handled by you efficiently. During your notice period make time to pen down all your accomplishments in that organization that might be of your advantage in the corporate world.
Desk: Start clearing all your personal belongings from your desk. You don’t have to wait for the last day to carry the load of things.It’s always nice to clear your desk. This can help the other individual moving into your space can start fresh.

Certificate: Collect the Experience certificates/No Objection certificate(NOC) /Documents we have to get from our employer at the time of leaving.

Work permit : If your in Abroad check  all government related Violations, Remaining Fines prior to country Exit. Otherwise we will be suffer during the Emigration.  

Prepared & Collection By M.Ajmal Khan.

Wednesday, 9 September 2009

உடலளவில் ஆண், பெண் என்ன வேறுபாடு!! ஒரு மருத்துவ பார்வை..


பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு உடை, தலைமுடி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட மாறுபடுகிறது. உடலைப் பொருத்தவரை பிறப்புறுப்புகள், மார்பகம் போன்றவை முக்கியமான வித்தியாசங்கள். இவை எல்லாம் நமது பார்வைக்கு தெரியும் வெளிப்படையான வேறுபாடுகள். 

ஆனால் இவற்றையெல்லாம் விட ஆணுக்கும், பெண்ணுக்குமான உடல் வித்தியாசங்கள் ஏராளமாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் பட்டியல் போடுகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். ஆணைவிட பெண்ணின் இடுப்புப் பகுதி மிகப் பெரிதாக இருக்கும். இது குழந்தைப் பிறப்புக்காக இயற்கை ஏற்படுத்திய வடிவம். ஆணின் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர்க்கப்படுகிறது. அதனாலே ஆணுக்கு தொந்தி உருவாகிறது. 

பெண்ணுக்கு இப்படி அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றில் சேமிக்கப்படுவதில்லை. அதனால்தான் பெண்களுக்கு தொந்தி இருப்பதில்லை. அப்படியென்றால் அந்த கொழுப்பு எங்கு சேர்க்கப்படுகிறது என்றால், தொடையிலும் இடுப்பின் பின்பகுதியிலும் சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஆண்களின் தொடையைவிட பெண்களின் தொடை பெரியதாக தெரிகிறது. இதுபோக உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லின் தோற்றமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாக இருக்கும்.

இதற்கு காரணம் குரோமோசோம்கள் இடையே உள்ள வித்தியாசம் என்கிறார்கள், மருத்துவர்கள். அதேபோல் பெண்களின் ரத்தத்தில் ஆண்களின் ரத்தத்தில் உள்ளதைவிட நீரின் அளவு அதிகம் இருக்கும். இதனால் பெண்களுக்கு 20 சதவீத சிவப்பணுக்கள் குறைவாகவே இருக்கும். பெண்கள் அடிக்கடி ரத்தச்சோகை பாதிப்புக்கு ஆளாவதற்கு இதுவும் ஒரு காரணம். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன. அது குறையும் போது ஆக்சிஜனும் குறைகிறது.

இந்த காரணத்தினால் தான் வெப்பம் மிகுந்த இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் பெண்கள் மயங்கி விழுகிறார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு நுரையீரல் சிறியதாகவே இருக்கும். பெண் நுரையீரலைவிட ஆணின் நுரையீரல் 30 சதவீதம் பெரியதாக இருக்கும். அதனால் நுரையீரல் கொள்ளளவும் அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்களிலும் திருவிழா கூட்டத்திலும் பெண்கள் சோர்ந்து போவதற்கு இதுதான் காரணம். உற்சாகம் என்ற விஷயத்தில் பெண்கள், ஆண்களை விஞ்சி நிற்கிறார்கள்.

இந்த உற்சாகத்திற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் தனி ஹார்மோனின் சக்திதான் என்கிறார்கள். நோய் என்று எடுத்துக் கொண்டாலும் கூட பெண்களை விட ஆண்களே அதிகம் மரணமடைகிறார்கள். மார்பக புற்றுநோய், பெண்ணின் பிறப்புறுப்பு நோய், கர்ப்பப்பை கட்டி போன்ற நோய்களைத் தவிர மற்ற அனைத்து நோய்களும் ஆண்களுக்கே வருகின்றன. வெயிலை அதிகமாக பெண்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆண்கள் அதிகமான வெயிலில் சோர்ந்து போய்விடுவார்கள்.

இதற்கு காரணம் பெண்களின் உடலில் உள்ள வளர்சிதை மாற்றம்தான். வயிறு, கல்லீரல், குடல்வால் போன்ற உறுப்புகள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரியதாக இருக்கும். முரட்டுத்தனம் என்பதை எடுத்துக் கொண்டால் ஆண்களின் முரட்டுத்தனம் பெண்களைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்கும். ஆண்களைவிட பெண்களின் இதயம் எப்போதும் வேகமாகத் துடிக்கும்.

சராசரியாக ஆண்களுக்கு நிமிடத்திற்கு 72 முறை இதயம் துடிக்கிறது என்றால் பெண்களுக்கு 80 முறை துடிக்கிறது. ஆண்களின் பற்களைவிட பெண்களுக்கு பற்கள் விரைவாகவே விழுந்துவிடும். பொக்கைவாய் தாத்தாக்களைவிட, பொக்கைவாய் பாட்டிகளே அதிகம். ஆணைவிட பெண்ணுக்கு தலை, தண்டுவடம், கால்கள் முதலியவை மிகச் சிறியவை. இப்படி பல விஷயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாகவே இருக்கின்றன.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Tuesday, 8 September 2009

கற்றாழை (Aloevera )மருத்துவம் .....

 
கற்றாழையின் தாவரவியல் பெயா: “ஆலோவேரா” (AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.)
            கற்றாலை மருத்துவக்குணம் நிறைந்தது சித்தவைத்தியத்தில் இதனை “குமரி” என அழைக்கப்படுகின்றது. இம் முகிலி இருபக்பகமும் சாதுவான முள்போன்ற நீண்ட மேல் நோக்கிய தாள் போன்ற அமைப்பைக் கொண்ட இலைகளை உடையது. இதனை “சுகத்துக்குத் தாழை” என்று கூறுவர் இது  காலப் போக்கில் மருவடைந்து “சோற்றுக்கற்றாழை” ஆகிவிட்டது. 

          தாவரங்கள் பொதுவாக நிலத்திலிருந்து அகற்றியதும் வாடி வதங்கி காலதாமதமானால் இறந்து விடும் ஆனால் சோற்றுக்கற்றாழை நிலத்திலிருந்து அகற்றியதும் இறந்து விடாது வளியில் இருக்கும் ஈரப்பதத்தை ஈத்து வளர்வதுடன் உலர்ந்த தாளிகளின் நீரையும் ஈத்து வளரும் தன்மையுடையது. பொதுவாக கிராமபுறங்களில் வீட்டின் கூரையின் தாள்வாரத்தில் தாள் ஒன்றினை கட்டி விடுவர்கள் அத்தாழை மேல்நோக்கி திரும்பி புதிய குருத்துக்கள் உருவாகி வளர்வதை அவதானிக்கூடியதாகவிருக்கும். இத்தாவரம் ஒவ்வொரு வருடமும் பூக்கொத்தை உருவக்கும். இதன் காரணத்தினாலே இத்தாவரத்தை “வான்குமரி” என அழைப்பதும்முண்;டு.
       கற்றாழையின் தாவரவியல் பெயர் “ஆலோவேரா” அல்லது “ஆலோ” என்றும் குறிப்பிடுவர். இதில் இன்னுமேர் வகையும் உண்டு. அது “ஆலோவாவிடன்ஸ்” இவை இரண்டினதும் மருத்துவத் தன்மையும் ஒன்றுதான். இவ் முகிலிகையை நவீன அறிவியல் உலகம் காயகற்ப அதிசய முகிலிகையாக குறிப்பிடுகின்றனர். இதில் இருபதிற்கு மேற்பட்ட அமிலோஅமிலங்கள் உண்டென்று குறிப்பிடுகின்றனர். உடலின் கட்டுமாணப் பணிக்கான புரதச் சத்தின் அடிப்படை அலகுகளை அமிலோ அமிலங்கள் என்று அழைப்பர். இதில் மனித ஆரோக்கியத்துக்குத் தேவையான மிக முக்கிய எட்டு வகை அமிலோஅமிலம் இதில் உண்டு. இந்து இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் குன்றி விடும் எனக்குறிப்பிடுகின்றனர். இதனால் இத் தாவரத்தை முழு மருத்துவக்குணமுள்ள தாவரமாக கருதுகின்றனர். 

          கற்றாழை தொர்பாக பார்;க்கும் போது ஒன்று ஆரோக்கியத்துக்குத் தேலையான அமிலோஅமிலங்கள் இருக்கின்றன அடுத்து. அது இன்ரைய அறிவியல் இதனை அழகுசாதனப் பொருட்களுக்கு அடிப்பாடையான பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரசியநாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் முதுமை அடைந்து இறக்கும் தருவாயில் இருந்த  கற்றாலை உணவாக கொடுக்பப்பட்டு; வெள்ளை எலிகளுக்கு கொடுத்து ஆயூட் காலத்தை இருமடங்காக அதிகரித்ததை அவதானித்தாக கட்டுரை வெளியாகியிருந்தது. வெள்ளை எலிகளின் ஆயூட்காலம் முற்பது மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
   இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை ப்புரிந் திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர். 

     தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலை
குட்டம் ரசம் அல்லார் மந்தம்
 பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
 அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்
 குமரிக்கு மருண்டு” 
 1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
 2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்” என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு. 
     குமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி.  குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி  திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.; 

3.“புல் சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு. 

 4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி  

5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.

6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
 
 7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.

8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள்  இதனை போக்க வவ்லது குமரி. 

9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஐPரனத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன். 
 
10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது  சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .       

பயன் படுத்தும் முறைகள்:
       சோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்.

2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில்  தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.

3. சோற்றுப்பகுதியை துண்டுகளாக நறுகி எடுக்கவேண்டும். உண்ண ஆரம்பிக்கும் போது முதலில் அரைச் சதுரடிப் பிரமாணமாக ஒரு வாரமும் இரண்படாவது வாரத்தில் ஒரு சதுரடிப் பிரமாணமாகவும் அடுத்து ஒன்றரை சதுரடி பிரமாணமாகவும் நான்காவது வரத்தில் இரண்டு சதுரடிப் பிரமாணமாகவும்  காலையில்  வெறு வயிற்றில் உணவு உண்பற்கு அரைமண்த்தியாலயம் முன்தாக உட் கொள்ள வேண்டும். பொதுவாக இரண்டு சதுரடிப் பிரமாணம் கொண்ட ஒரு துண்டில் ஒரு நாளுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அணைத்தும் அடங்கியுள்ளது. ஒரு நாளுக்குப் போதுமானதாகும். இத்துன்டுகளை சக்கரை, பணம்கற்கண்டு, கற்கண்டு போன்றவற்றில் போட்டு புறட்டியுட் சுவையுட்டியும் பயன் படுத்தலாம் அல்லது வெறுமனேயும் பயன் படுத்தலாம். குமரியின் பாதப்படுத்திய துண்டுகளை சீலையில் கட்டிதொங்விட்டு சிறுது நேரத்தின் பின் அதை புளிக்கொளம்பாகம் தயார் செய்து உணவாகவும் பயன் படுத்தலாம். அடுத்து இதை குமரியை சாறாக்கி தொடம்பழச்சாறும் சேர்த்து பழரசமாகவும் பயன் படுத்தலாம். லேக்யமாக்கியும் பயன்படுத்தலாம்.

4. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.
5. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உகயோகிக்த் தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.
6. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.        குமரி குளிர்மையானது  இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும். ஆத்துடன் மகரி~p தேரையரின் பாடலில் செப்பிய 
“பொல்லா மேகம் கபம் புல்  சூலை
குட்டம்  ரசம் அல்லார் மந்தம்
 பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
 அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை
குமரிக்கு மருண்டு” 
                அனைத்து பெற்று வழமாய் இளைமையாய் இறை இன்பம் பெற உறுதியா உடல் பொற்று இரண்றற்று ஒன்றாய் அவனுள் அவனாய் உய்வோம். “நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம்” சித்தர்கள் வாழ்வியலை சிரமேற்று அவர்கள் அடியை பின்பற்றி காயத்தை கற்பமாக்கி வாழ்வாங்கு வாழ்வோம். 

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு  இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள்  நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.

கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும்  காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும். 

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். 

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. 

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. 

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. 

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள்

மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்.( யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், யாஹ்வே அல்லது எல்(ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தைதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.


உசாத்துணை தொடுப்புகள் :
A Resource for Turkic and Jewish
History in Russia and Ukraine
Israel deliberately forgets its history

Wednesday, 2 September 2009

பரளிக்காடு சுற்றுலா- ஒரு பார்வை..

ரளிக்காடு : கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் அழகானதொரு சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.

இரண்டு கட்டமாக பரிசல் பயன்படுத்தும் அளவு ஆட்கள் இருந்தால், ஒரு பிரிவை படகு சவாரிக்கும் மற்றொரு பிரிவை மலையேற்றத்திற்கும் அனுப்பிவிடுகிறார்கள். பின் மதிய உணவு முடித்து இடம் மாறிக்கொள்ள வேண்டியது தான்.

அங்கு 10 மணிக்கே வர வேண்டும் என சொல்லி இருந்ததால் காலை 7 மணிக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தாலும் மயில் விஜி வீட்டில் காலை உணவு முடித்து கிளம்ப 8.45 மணி ஆகிவிட்டது. வழியில் இரண்டு சோதனை சாவடிகளிலும் தெளிவாக வழி சொன்னார்கள். பரளிக்காடு செல்ல 10.30 மணிக்கு மேல் ஆனது. வன அலுவலர் திரு. சீனிவாசன் அவர்கள்இன்முகத்துடன் எங்களை வரவேற்றார். எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டதும் தேநீர் குடிக்க தந்தார்கள்.ஆரம்பமே அழகாய் இருந்தது. எங்களுக்கு முன்பே ஒரு மருத்துவத்தம்பதிகள் காந்திருந்தார்கள். நாங்கள் தான் தாமதம் என்று நினைத்தால் எங்களுக்கு பின்னும் சிலர் வந்தார்கள். அனைவரும் வரும் வரை ஓய்வெடுக்க பெரிய ஆலமரங்களுக்குக் கீழே நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட ஆலமரத்தில் சில ஊஞ்சல்கள் அமைத்திருக்கிறார்கள். 10 பரிசலுக்குமான ஆட்கள் சேர்ந்ததும் பயணம் செல்ல தயாரானோம். 50 அடி ஆழ நீர்த்தேக்கம் என்பதால் லைஃப் ஜாக்கெட் அணிவித்து பாதுகாப்பாக அனுப்பினார்கள்

வெயிலும் நிழலும் மாறி மாறி அழகான க்ளைமேட். பரிசலையும் வெயிலிலும் கரையோர மரங்களின் ஊடாக நிழலிலுமாக செலுத்தி மேலும் இனிமையான பயணமாக்கினார்கள்.மிக நல்ல பரிசல் ஓட்டிகள். இனிமையாக பழகினார்கள். எனக்கும் கொஞ்ச நேரம் பரிசல் ஓட்டக் குடுத்தார்கள். என்னுடன் பயணித்தவர்கள் தான் திகில் தோய்ந்த முகத்துடன் இருந்தார்கள். என்னால் வேகமாக ஓட்ட முடியவில்லை. அவர்கள் ஒரு கட்டையின் மேல் அமர்ந்து சவுகரியமாக துடுப்புப் போடுகிறார்கள். நான் கேட்டபோது நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே செலுத்த சொல்லிவிட்டார். அவ்வளாவு சவுகர்யமாக இல்லை. ( இல்லைனா மட்டும் 100 கிமீ வேகத்துல ஓட்டிடற மாதிரி ).

சிறுது தூரம் சென்றதும் அனைத்துப் பரிசல்களையும் கரையோரம் நிறுத்திவிட்டு, காட்டில் சென்று பார்க்க சொன்னார்கள். இறங்கிய இடத்தில் காட்டெறுமையின் கொம்பு மற்றும் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அங்கு ஒருபுகைபடப்பிடிப்பு முடித்து கண்ணுக்கு தெரிந்த வழியில் காட்டிற்குள் சென்றோம். சிறிது தொலைவு சென்று பின் அதே வழியில் திரும்பி வருவதாக நினைத்து வழி தவறினோம். வழி கண்டுபிடிப்பதற்காக ஆளுக்கொரு திசையில் கொஞ்ச நேரம் தொலைந்து திரிந்தது ஆங்கிலப் படக் காட்சிகள் போல் இருந்தது. சினிமாவில் வருவது போல் பேர் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தோம். அழகான அனுபவம். பின் கரையை அடைந்து பயணத்தைத் தொடர்ந்தோம். பின் எதிர் கரை பக்கம் பயணம் செய்து திரும்பினோம். சுமார் இரண்டு மணி நேரம். மிக அற்புதமான பரிசல் பயணம். பரிசல்களை அருகில் செலுத்தி திண்பண்டங்கள் மாற்றிக் கொண்டதும் அறிமுகமே இல்லாத சக சுற்றுலாப் பயணிகளுடன் சந்தோஷமாய் பேசிகொண்டு வந்ததும் மறக்க இயலாத தருணங்கள்.
பரிசல் பயணம் முடிந்ததும் மதிய உணவு தயாராய் இருந்தது. அந்த பகுதி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களால் தயாரிக்கப் பட்டு மரிமாறப்பட்டது. உணவு வகைகள் ;
  • சர்க்கரைப் பொங்கல்
  • சப்பாத்தி
  • வெஜ் பிரியாணி
  • தயிர் பச்சிடியும் குருமாவும்
  • ராகி களி
  • கீரைக் குழம்பு மற்றும் கருவாட்டுக் குழம்பு.
  • தயிர்சாதம்
  • வாழைப் பழம்
மிக மிக சுவையாக சமைத்திருந்தார்கள். தேவையான அளவு சாப்பிடலாம். நானும் அண்ணாச்சி வடகரைவேலனும் போட்டிப் போட்டுக் கொண்டு களி சாப்பிட்டோம். என்ன இருந்தாலும் ஊரில் வீட்டில் கீரைக்குழம்புடன் ராகிக் களி சாப்பிடும் சுவை இல்லை. அதுவும் பழைய களியுடன் கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சுவையா இருக்கும். அதை ஒப்பிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டால் சுவையே. ஆனாலும் மூன்று உருண்டைகள் உள்ளே தள்ளினேன். மற்றவை எல்லாம் மிக நன்று. நாற்காலிகள் தவிர வேறு ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதில்லை. யாரோ நீரில் போட்டுவிட்ட ப்ளாஸ்டிக் பை ஒன்றை பரிசலில் சென்று எடுத்துவந்தார்கள். அவ்வளவு சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
மதிய உணவு முடிந்ததும் திரு. சீனிவாசன் அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினோம். அத்திக்கடவு செல்லும் வழியைத் தொலைத்து 15 கிமீ தூரம் சென்று திடீர் சந்தேகத்தில் திரும்பிவந்து சரியான பாதையை அடைத்து அத்திக்கடவு சோதனை சாவடி வந்தோம். அங்கே ஒரு வன அலுவலர் மலையேற்றத்திற்கான வழியை சொன்னார். வழிகாட்டவே அவரை நியமித்திருக்கிறார்கள் போல.
ஆற்றங்கரை அருகே ஏற்கனவே இருந்த ( எங்களுடன் பரிசல் பயணம் வந்தவர்கள்) வாகனங்களைக் கடந்து ஆற்றை அடைந்து ஆனந்தக் குளியல் போட்டோம். ஆற்றில் குளித்து( ஆற்றில் மட்டுமா? ) எத்தனை ஆண்டுகள் ஆகிறது. நீரின் வேகம் சற்று அதிகமாகவே இருந்ததாலும் பழக்கமில்லாத ஆறு என்பதாலும் ( நீர் சுழல் மற்றும் நீருக்கடியில் இருக்கும் பாறைகள் பற்றி தெரியாது) அதிக தூரம் நீந்த முடியவில்லை. சற்று உள் சென்றாலும் நீ நம்மையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது. எங்காவது பாறைகளை பிடித்துக் கொள்ளலாம் என்றாலும் அவைகளில் பாசிப் படிந்து இருக்கிறது. ஆனாலும் முடிந்த வரை ஆட்டம் போட்டோம். 4.30 மணிக்கு மேல் யானைகள் தண்ணீர் குடிக்க வரும் என்பதால் வெளியேற வேண்டும் என்றார்கள். அவைகளுக்கு எப்படி 4.30 ஆச்சின்னு தெரியும்? காட்டில் பெரிய கடிகாரம் இருக்குமோ? :) ( அய்ய.. மொக்கைடா சாமி ). மதியம் செம கட்டு கட்டியதாலும் ஆற்றுக் குளியலில் அதிக நேரம் செலவிட்டதாலும் மலையேற்றம் செல்லவில்லை.

வழியில் காரமடையில் காஃபி குடித்துவிட்டு கோவையை அடைந்தோம். ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். நேரம் போனதே தெரியவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை எங்குமே நேர விரயம் இல்லை. மிகச் சரியாக இருந்தது.

சுருக் தகவல்ஸ்
  • கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
  • மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும்.
  • பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300
  • 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200
  • 10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.
  • பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
  • வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.
  • தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : திரு. சீனிவாசன் : +91 9047051011
  • தகவல்களுக்கு : http://coimbatoreforests.com/baralikaduEco.htm
நாம் செலுத்தும் கட்டணத்தில் பரிசல் ஓட்டுபவர்களுக்கு 150 ரூபாயும் உணவிற்கு ஒருவருக்கு 100 ரூபாயும் தருகிறார்களாம். மீதம் உள்ள பணம் அந்த பகுதி மக்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்களாம். பரிசல் ஓட்டுபவர்கள் வார இறுதியில் இங்கும் மற்ற நாட்களில் வெளி வேலைக்கும் செல்கிறார்கள். உணவு கொடுத்த சுய உதவிக் குழுவினர் 2 ஆண்டுகளுக்கு முன் 10,000 முதலீட்டில் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் 100 ரூபாயில் ஒருவருக்கான உணவுக்கு 35 ரூபாய் எடுத்துக் கொண்டு மாத சம்பளமும் எடுத்துக் கொண்டு உபரியாக ரூபாய் 80,000 சேமிப்பில் வைத்திருக்கிறார்களாம். சபாஷ்.

இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு குடிலுக்கு ரூ.2000 வாடகை. 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறார்கள்.

மொத்தத்தில் அரசு நடத்தும் சுற்றுலாப் போல இல்லாமல் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து குடும்பத்தில் ஒருவர் போல பழகிய திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் சேவையைப் பாராட்டினால்தான் இப்பதிவு முழுமை பெறும்.


நன்றி: திரு சஞ்சய் காந்தி ..