Friday, 7 May 2010

Top 5 Star Hotels in Chennai City..




S.No

Hotel

Address
1
Taj Coromandel
37, Mahatma Gandhi Road Nungambakkam Chennai - 600 034, India
Web: 
www.tajhotels.com
Tel: (91-44) 6600 2827
 Fax: (91-44) 6600 2089
2
Taj Connemara
No.2 Binny Road, Chennai 600 002.
3
Trident Oberaoi Hotel
Trident, Chennai 1/24 G.S.T Road, Chennai 600 027, India
Tel : +91 44 2234 4747
Fax : +91 44 2234 6699
Website : www.tridenthotels.com
4
The Park-Chennai
Mr. Lemuel Herbert Ass. Vice President & General Manager 601, Anna Salai, Chennai 600006, India 
Tel : +91 (0)44 4267 6000
Fax : +91 (0)44 4214 4100 
Website : www.theparkhotels.com
5
Redisson GRT
RADISSON HOTEL GRT CHENNAI 531 GST Road, Saint Thomas Mount, Chennai 600016, India 
Tel : + 91 44 2231 0101
Fax : + 91 44 2231 0202 
Website : www.radisson.com
6
Taj Mount Road
Taj Mount Road No. 2 Club House Road Chennai - 600 002 Tamil Nadu India
Tel : : (91-44) 66313131
Fax : (91-44) 66313030
Website : www.tatahotelgroup.com
7
Sheraton Chola
Cathedral Road, Chennai 600 086 Tamil Nadu, India
Tel :Tel : (91) (44) 28110101
 Fax : (91) (44) 28110202
Website : www.itcwelcomgroup.in
8
The Sheraton Park Hotel & Towers
T.T.K. Road Chennai 600 018 Tamil Nadu, India
Tel :Tel : (91) (44) 24994101
 Fax : (91) (44) 24997101/24997201
Website : www.itcwelcomgroup.in
9
Le Royal Meridien
1 GST Road St Thomas Mount Chennai, Tamil Nadu 600 016 India
Tel :(91) (44) 2231 4343
Fax : (91) (44) 2231 4344
Website :
  

நீங்க வெட்டிபேச்சு பேசுபவரா? இதை ப‌டிக்க‌ ம‌ற‌க்காதீங்க‌...

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார்.
1,"ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
2,"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
3,"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
4,"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?


மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"


"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"

நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா? இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்

Monday, 3 May 2010

உலகசாதனை புத்தகம் (GUINNESS BOOK) உருவான கதை!! ஒரு தவகல்..


உலகசாதனை புத்தகம் (GUINNESS BOOK)
பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்­றில்­லாமல் வாழும் போது தனக்கும் அடுத்­த­வ­ருக்கும் பிர­யோ­ச­ன­மான வாழ்க் கையை வாழ்­வ­துடன் எமது பெயரை நிலை­நாட்டும் சாத­னை­யொன்­றையும் நிலை­நாட்ட முயற்­சிக்க வேண்டும் என்­ப­வர்­க­ளுக்­கான தளமே கின்னஸ் உலக சாத­னைகள்.
ஒவ்­வொரு வரு­டமும் வெளி­வரும் கின்னஸ் புத்­தகம், பல்­து­றை­களில் சாதனை படைத்­த­வர்­களின் பெயர்­களை சுமந்­து­வரும். அந்த சாத­னை­களில் சில வேடிக்­கை­யான சாத­னை­க­ளா­கவும் சாத­ர­ண­மா­ன­தா­கவும் புது­மை­யா­ன­தா­கவும் இருக்கும். அவை முயற்­சித்தால் நாமும் முறி­ய­டித்து விட­லாமே என்ற எண்­ணத்தை தோற்­விக்கும்.
எத்­தனை கன­மான விட­யத்­தையும் தாங்கும் மூளையும் இத­யமும் அத்­தனை கன­மா­ன­தல்­லவே. அது­போ­லவே சாத­னை­யா­ளனும் சாதா­ர­ண­மாக இருக்­கிறான் என்ற நம்­பிக்­கையை ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் மன­திலும் விதைப்­ப­துபோல், கின்னஸ் புத்­த­கத்தின் ஆரம்­பமும் சாதா­ர­ண­மா­கவே அமைந்­தது.

உலகசாதனை புத்தகம் (GUINNESS BOOK) உருவான கதை..
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.


எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை. அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். 

கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். 

முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
எத்­து­றையில் சாதனை படைக்­கலாம்?
என்ன சாதனை படைப்­பது என்­பது குறித்த ஒரு திட்டம் இருந்தால் அதன் பால் நீங்கள் முயற்­சிக்­கலாம். அது விசித்­தி­ர­மா­ன­தாக இருந்­தாலும் சரி விவே­க­மா­ன­தாக அமைந்­தாலும் சரி அதே­போல வேடிக்­கை­யாக அமைந்­தாலும் அவை அதி உயர் மட்டம் என்றால் சாத­னை­யாக அமைந்­து­விடும்.
ஒரு நிமி­டத்தில் அதிக தட­வைகள் கைதட்டிக் கூட உலக சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே சிறிய விட­யங்­க­ளாக இருந்­தாலும் அவை உலக சாத­னை­யாக கவ­னத்தில் கொள்­ளப்­படும்.
இவ்­வாறு உங்­க­ளுக்கு எது­வி­த­மான யோச­னையும் இல்லை என்றால் பழைய சாத­னை­களை முறி­ய­டிக்க முயற்­சிக்­கலாம். அல்­லது கின்னஸ் இணையப் பக்­கத்தில் Explore Records என்ற பகு­தியில் முயற்­சிக்­கூ­டிய சாத­னை­களை இடம்­பெறும். இதனை ஒரு குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் செய்து முடித்தால் அது சாத­னை­யாக அமையும்.   
அண்­மையில் ஒரு நிமி­டத்தில் முகத்தில் அதி­க­ள­வான கட­தா­சி­களை ஓட்­டினால் சாதனை என்ற அம்­சமும் ஒரு நிமி­டத்தில் அதிக நாணயக் குற்­றி­களை அடுக்­கு­வதும் சாத­னை­யாக நிகழ்த்­து­வ­தற்கு கின்னஸ் வாய்ப்­ப­ளித்­தி­ருந்­தது.
இது போன்ற இன்னும் ஏரா­ள­மான விட­யங்கள் சாத­னைக்­காக காத்­தி­ருக்­கின்­றன. அவை வாரத்­திற்கு சுமார் 1000 என்ற ரீதியில் கின்னஸ் அமைப்­ப­ா­ளர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெ­று­கின்­றதாம்.
கின்னஸ் உலக சாதனைப் புத்­தகம் தொடர்பில் 2005ஆம் ஆண்டு முதல் அதன் பிர­தம ஆசி­ரி­ய­ராக சேவை புரியும் க்ரேக் கிளண்டே கூறுகையில், புத்தகம், டீ.வி, ஈ புத்தகம், எப்ஸ், புதிய தொழில்நுட்பம் (2014ஆம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகம் 3டி வடிவில் வெளி யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.) என எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் கின்னஸ் புத்தகம் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 40 ஆயிரம் சாதனைகள் பட்டியலிடப்படுகிறது. ஆனால் அவற்றில் 10 சதவீதமானவையே புத்தகத்தில் இடம்பெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதுவெல்லாம் சாதனையா நினைக்கா மல் இதுவல்லவோ சாதனை நீங்கள் துணிந்து செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதனையாக அமையலாம். இதன் மூலம் உங்களது பெயரும் நாளை பெறுவாய்ந்த கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம்.

தொகுப்பு: அ.தையுப அஜ்மல்.