Saturday, 12 March 2011

சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை..


முன்னுரை :
   சுற்றுசூழல் சுற்றுப்புறத்தை சூழவுள்ள இயற்கை சூழலைக் சிறப்பாக குறிக்கின்றது. சுற்றுசூழல் என்ற சொல்லை சமூக பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்
**சுற்றுச்சூழலைக் காத்திடுவோம்!
**சுகமாய் வாழ வழிவகுப்போம்!
**வெற்று வார்த்தை இதுவல்ல,
**விளையும் நன்மையோ பலப் பல! 
   இன்றைய சூழ்நிலையில் எல்லோர் இதயத்திலும் இருக்க வேண்டிய கருத்து இதுவேயாகும்.

சுற்றுச்சூழல் :
         நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்றப் பொருள்களின் தொகுப்பே சுற்றுச்சூழலாகும். பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த நன்மைகளையும் தீமைகளையும் ஆராய்ந்து பார்த்தால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே விஞ்சி நிற்கின்றன.

அன்றைய நிலை :
         பண்டைக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நிறைந்த முழுமையான மெய்யுணர்வினைப் பெற்றிருந்தான். அவனிடம் தொலைநோக்குப் பார்வை, தன்னலமற்றத் தன்மை நிறைந்து காணப்பட்டது. அதன் விளைவாய் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையினை வாழ்ந்து காட்டினான்.

இன்றைய நிலை :
         மெய்ஞானம் ஒடுங்கி விஞ்ஞானம் தலைதூக்கியது. கேள்விகளே அறிவின் விழிப்புநிலை என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைதி போயிற்று. வெற்று ஆரவாரங்கள் தலை தூக்கின. பொதுநல நோக்கற்ற தொலைநோக்குப் பார்வையற்ற சுயநலச் சமுதாயம் வேரூன்றியது. விளைவு?...... இவ்வாறு விளைந்ததுதான் இருபதாம் நூற்றாண்டு.

நில மாசு:
         நிலம் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது என்பதறிவோம். நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன
         நிலத்தில் விளையும் காய்கறிகளில் இந்த நச்சுத் தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்துவிடுகிறது. குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் கூட இந்த காய்கறிகளின் நச்சு கலந்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


நீர் மாசு:
     தண்ணீரை மாசுபடுத்துவது என்பது நிலத்தடி நீரை மாசுபடச் செய்யும் காரணிகளை உள்ளடக்கியது. தேங்கி நிற்கும் தண்ணீருக்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாமல் போகும் பட்சத்தில் தண்ணீர் மாசுபடுகிறது. 
    உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு மட்டுமே குடிநீர். அந்த தண்ணீரும் தற்போது குறைந்தும், மாசுபட்டும் வருவது உயிரினத்துக்கே விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும்.
         கழிவுகளை வீட்டுக் கழிவுகள், ஆலைக் கழிவுகள் என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நச்சுத்தன்மை உடையனவாக இருக்கின்றன. மனித அலட்சியங்களினால் அசட்டை செய்யப்படும் கழிவுகள் ஏதோ ஒரு வகையில் மனிதனையே சென்றடைகிறது என்பது தான் உண்மை. கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் வாயிலாகவோ, தரையை சேதப்படுத்தும் கழிவுகள் தானியங்களாகவோ, நீராகவோ காற்றில் கலக்கும் நச்சுகள் சுவாசம் வழியாகவோ ஏதோ ஒரு விதத்தில் மனிதனைச் சரணடைகின்றன இந்த கழிவுகள்.

ஒலி மாசு:
         ஒலி மாசு (அல்லது சுற்றுசூழலில் மிகையான சத்தம்) என்பது மனதிற்கு ஒவ்வாத மனிதன்-, கால்நடைகள்- அல்லது இயந்திரங்கள் பிறப்பிக்கும் இரைச்சல் அல்லது ஓலியாகும், அது மனிதனின் வாழ்க்கை முறைகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கின்றது. பொதுவாக நம்மை இக்காலத்தில் வெகுவாக பாதிக்கும் ஓலி மாசு, இன்றைய சூழ்நிலையில் போக்குவரத்தின் காரணமாகும், குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.
வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், கட்டிட பணிகள், தரையை சுத்தம செய்யும் இயந்திரங்கள், குரைக்கும் நாய்கள், கருவிகள், மின் விசைகள், ஒளிபரப்பு கருவிகள், விசைகள், ஒலிபெருக்கி, மின்சார விளக்குகள் எழுப்பும் ஒலி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டு பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும், இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாகும்

பசுமை இல்ல விளைவு..
         பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவையாவன, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் 'பசுமை இல்ல வாயுக்கள்' (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த 'வாயுப் போர்வை' பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது 'பசுமை இல்ல விளைவு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வானிலை..
         உயர்ந்து வரும் வெப்பநிலை, மழை பெய்யும் நிலவரங்களை மற்றக்கூடியது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படுதலை அதிகரிக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் மற்றும் துருவப் பனிப்படிவங்கள் உருகுவது அதிகரிப்பதால், கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புயல், சூறாவளி போன்றவற்றுக்கும் வெப்பநிலை மாற்றங்களின் விளைவுகளே காரணம் என்று கருதப்படுகிறது.

கடல் மட்டம் அதிகரித்தல்..
         வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்று கடல் மட்ட உயர்வு. கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

ஓசோன் படலம்:
          துருவப் பகுயில் வானில் விழுந்துள்ள ஓசோன் ஓட்டை இன்னொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. காற்றில் ஏற்படும் மாசு (குளோரோபுளூரோகார்பன்) இதன் முக்கிய காரணியாக விளங்கும் அதே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி, பிரிட்ஜ், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாயுவும் இந்த ஓசோன் ஓட்டைக்கு குறிப்பிடத்தக்க காரணமாக விளங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

         புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் வலுவிழப்பதால் தோல் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதனுக்கு வருகின்றன. கடலின் மேற்பரப்பில் வாழும் மீன்கள் அழிகின்றன. புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் இறந்து போகும் மீன்களை உண்ணும் பெரிய மீன்களும் அதனால் பாதிக்கப்பட்டு இயற்கைக்கே அது அச்சுறுத்தலாகி விடுகிறது. தொடர்ந்து ஓசோன் படலம் வலுவிழந்தால் பூமியில் மனிதர்கள் உட்பட உயிரினங்களே அழிந்து போகும் என்பது அதிர்ச்சித் தகவல்

நிகழவேண்டிய மாற்றம் :
         இன்றைய சூழ்நிலையை நான் சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. நாம் வசிக்கும் இந்த உலகை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஐம்பெரும் பூதங்களுக்கும் கேடு விளையாவண்ணம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் வேண்டும். மனித இனத்தின் அறிவின் முதிர்ச்சியால் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், இயற்கையின் செல்வமாகிய காடுகள், ஆறுகள், அருவிகள், மலைகள் இவையாவற்றின் நலன் குறையலாமோ?
    நாம் இயற்கையைப் பாதுகாத்தால், நம்மையும் இயற்கை பாதுகாக்கும். தூய்மை, ஒழுக்கம், நேர்மை, வாய்மை, அடக்கம் நிறைந்த மனித சமுதாயம் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். நலம் யாவும் வழங்கும் நல்லதொரு சூழ்நிலை உருவாக்கவேண்டும்.

முடிவுரை :
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது சாதி, மத, இன, மொழி, நாடு வேறுபாடுகளற்று மனிதகுலம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவற்றை தவறவிடும் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணரவேண்டும். அன்றாடம் நிகழ்த்தும் சிறு சிறு செயல்களின் மூலம் நமது சுற்றுப்புறத்தைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்ட.
பொதுவிடங்களில் குப்பைகளைச் சேர்க்காமல் குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடுதல். பொதுவிடங்களில் தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுப்படுத்துதல், தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவு நீர் தேங்குமிடங்களில் அடைப்புகள் ஏற்படுத்துதல், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு"
என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க நல்லதொரு சூழலை உருவாக்க எண்ணித் துணியுங்கள்! வெற்றி நிச்சயம்!!

தொகுப்பு & ஆக்கம்   : மு.அஜ்மல் கான்.

Friday, 11 March 2011

இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்!!

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. 

மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும், இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசுதேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கவும் முடிவு செய்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்காமல், இவற்றை ஜல்லிகளில் கலந்து "பிளாஸ்டிக் கோட்டிங்' கொடுத்து அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்கவும் ஆய்வு செய்தார். பிளாஸ்டிக் தார்ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் தார் ரோடு, கோவில்பட்டியில் 2002ல் போடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடால் ஏற்படும் பயன்கள், தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 2002-03ல் தமிழக அரசு புத்தகமாக வெளியிட்டது. மத்திய அரசு 2002ல் பிளாஸ்டிக் ரோட்டிற்கு காப்புரிமை வழங்கியது. கிராம வளர்ச்சி துறைமூலம் தமிழகத்தில் 2000 கி.மீ., அதிகமான பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை, கேரளா, சிம்லாவிலும் வாசுதேவன் மேற்பார்வையில் பிளாஸ்டிக் ரோடுகள் அமைக்கப்பட்டன.

காப்புரிமை: தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கேட்டது. ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது 2006ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு மத்திய அரசு 2006ல் காப்புரிமை வழங்கியது. 2002 முதல் 2008வரை இந்தியாவில் போடப்பட்ட பிளாஸ்டிக் ரோடுகளின் தன்மை, பயன்கள், தரம், உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுக்கு இரண்டாம் கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கியதுடன், இவரது அறிக்கையை ஆய்வு செய்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் ரோடு அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும் பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள், உழைப்புகள் குறித்து (கைடு லைன்) மற்றொரு புத்தகம் வெளியிட்டது. இந்த புத்தகத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்பு துறைகளுக்கும் அனுப்பப்பட்டு, அந்த புத்தகத்தில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் தரமானது, நீடித்து உழைக்கக்கூடியது என குறிப்பிட்டுள்ளது.

அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமங்களில் பிளாஸ்டிக் தார்ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்து கொடுத்து, அதற்கான கைடு லைன் வெளியிட்டது. அதில், பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்க விரும்பும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள், தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பினால், செலவில் பாதியை மானியமாக வழங்க இருப்பதாகவும், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற பேராசிரியர் வாசுதேவனை அணுகலாம் என கைடு குறிப்பிடப்பட்டிருந்து. சிம்லாவில் பிளாஸ்டிக் ரோடு, அதன்பின் சிம்லாவில் வாசுதேவன் மேற்பார்வையில் 150 கீ.மீ,. ரோடு அமைக்கப்பட்டது. "பிளாஸ்டிக் மறு சுழற்சி கமிட்டியில் டேட்டா புத்தகம் தயாரிக்கும் உறுப்பினராக வாசுதேவனை, கேரள அரசு சேர்த்தது.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பிப்.,4ல் வெளியிட்டுள்ள அரசு கெஜட்டில், பிளாஸ்டிக் ரோடு போட தடை இல்லை என்றும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலைகள் அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது: இது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண ரோட்டை காட்டிலும், ஐந்து ஆண்டுகள் கூடுதலாக உழைக்கும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பாதிப்படைவதில்லை. தேய்மானம் மிக குறைவு. பராமரிப்பு செலவுகள் கிடையாது. தார் பயன்பாடு 10 சதவீதம் குறைவு. ஒரு கி.மீ.,க்கு 50 ஆயிரம்வரை செலவு மிச்சம். கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்படும் மாசு தவிர்க்கப்படும். தட்பவெட்ப நிலை சீராகும். பிளாஸ்டிக்கை பிரித்துவிடுவதால், குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது எளிது. இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரோடு அமைத்தால், பிளாஸ்டிக்கால் இவ்வுலகிற்கு ஏற்பட்டுவரும் ஆபத்தை நீக்கலாம்.பிளாஸ்டிக் ரோடு அமைக்க விரும்புவோர் 0452 248 2240 அல்லது 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : ஒனிந்திய.காம் 

Thursday, 10 March 2011

சுனாமி (Tsunami)- ஒரு பார்வை ..


சுனாமி (Tsunamiஎன்பது யப்பானிய மொழியில் "harbor wave" (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில் , ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது.அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி 150, 000 மேலான மனித உயிர்களை பலிகொண்டும் , பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்ல பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்ட இயற்கைப் பேரழிவுடன் தொடர்புள்ள தகவல்கள் வருமாறு உள்ளது.


Propagation du tsunami en profondeur variable.gif






கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாண்டிரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன்வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tsunami-kueste.01.vm.jpg
The wave further slows and amplifies as it hits land. Only the largest waves crest.
Tsunami comic book style.png
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில்அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755 ஆம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
  • 1883 ஆம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
  • அதன் பின்னர் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964 ஆம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரித்தானிய கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.






இயற்கை சீற்றங்களில் தற்போது மக்களை மிகவும் அச்சுறுத்தி வருவது சுனாமி என்றழைக்கப் படும் ஆழிப் பேரலை .உலகில் பல்வேறு பகுதிகளை தாக்கிய சுனாமிகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றை பார்ப்போம் 

1 ) ஜப்பான் 

1983 ல் ஜப்பானின் நோஷிரோ கரையை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 10  மீட்டர் வரை இருந்தது . 

2 ) சாலமன் தீவு  

2007 ல்  சாலமன் தீவுகளை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 12  மீட்டர்வரை இருந்தது .

3 ) சாமொவா தீவு  

2009 ல் சாமொவா தீவை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 14  மீட்டர் வரை இருந்தது

4 ) பாப்புவா நியூ கினியா   

1998 ல் பாப்புவா நியூ கினியாவை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 15  மீட்டர் வரை இருந்தது.

5 ) சிலி    

1960 ல் சிலி நாட்டிலுள்ள வால்டிவியா என்னுமிடத்தை   சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 25  மீட்டர் வரை இருந்தது.

6 ) அமெரிக்கா    

1964 ல் அமெரிக்காவின் அலாஸ்க்காவை   சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக30  மீட்டர் வரை இருந்தது.

7 ) இந்தோனேஷியா     

2004 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30  மீட்டர் வரை இருந்தது.இது வரை தாக்கிய சுனாமிகளில் அதிக உயிர்களை பலி கொண்ட சுனாமி இதுதான் .

8 ) ஜப்பான்    

11 -3 -2011 ல் ஜப்பானை    சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30  மீட்டர் வரை இருந்தது.

9 ) ஜப்பான்    

1993 ல் ஜப்பானின் ஹோக்கைடோவை     சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக31  மீட்டர் வரை இருந்தது.

10 ) அமெரிக்கா     

1958 ல் அமெரிக்காவிலுள்ள லித்துயா கடலில் சுனாமி உருவானது .   உலகிலேயே மிகப் பெரிய்ய சுனாமி இதுதான் .இதனால் உருவான அலைகள்  520  மீட்டர் உயரம் வரை இருந்தன .நல்ல வேளையாக  இந்த சுனாமி தாகிய இடத்தில் அதிகம் மக்கள்  வசிக்கவில்லை .இந்த சுனாமி காரணமாக இரண்டுபேர் உயிரிழந்தனர் .

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து 
படங்கள்  : கூகுளிலிருந்து





தமிழ் மக்களின் பண்டய இலக்கியங்களில் ஆழிப்பேரலை அல்லது கடல்கோள் என்பது சுனாமியை அர்த்தப்படுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் இது மூலமாக பழங்கால தமிழர்களினாலும் இத்தகைய பேரழிவுகள் எதிகொண்டதினை அறியமுடிகின்றது. சுனாமி தொடர்பிலான தகவல்களும் நிகழ்வுகளும் கடந்த 4000 வருடம் காலமாக மிகவும் அறியப்பட்டும் பேசப்பட்டும் வந்தபோதிலும் சர்வதேசரீதியில்1963 ம் வருடம் நடந்த அனைத்துலக விஞ்ஞான மாநாட்டில் அகிலத்திற்கும் பொதுவான "சுனாமி' (Tsunami) எனும் சொல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இயற்கை பேரழிவு பற்றிய பதிவுகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து (4000 வருடங்கள்) இன்றுவரை பதிவாகிய மிகப்பெரிய சுனாமிகள் முறையே 1883 (36,000 பேர் பலி) , 1998 ஜுலை (36,000 பேர் பலி) , 2004 ம் டிசம்பர் (150,000 பேர் பலி) என்பன அதிக மனித உயிகளை காவுகொண்ட பேரழிவுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த நூற்றாண்டில் 2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியில் 11 நாடுகளைச் சேர்ந்த 150,000 மக்களின் உயிகளை உடனடியாகவும் மேலும் பல நூறு உயிகளை அடுத்த சில நாட்களிலும் பறித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் குறிப்பாக இந்தோனேசிய நாட்டின் தீவுகளில் ஒன்றாகிய சுமத்திரா எனும் பகுதியில் கடலுக்கடியில் நிகழ்ந்த மிகப்பெரிய பூமியதிர்வு காரணமாக உருவாகிய ஆழிப்பேரலை (சுனாமி) பலிகொண்ட பன்நாட்டு மக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு.
  • இந்தோனேசியா 80,246
  • இலங்கை (ஸ்ரீலங்கா) 28,627
  • இந்தியா 8, 955
  • தாய்லாந்து 4,812
  • சோமாலி 142
  • மலேசியா 66
  • பர்மா 53
  • தான்சனியா 10
  • பங்களாதேஷ் 2
  • சீசெல் 1
  • கென்யா 1
2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியால் பதிக்கப்பட்ட பெளதீக தரவுகள்.பூகோளரீதியில் வர்ணிக்கப்படும் முக்கிய 11 தட்டுக்கள் இரண்டில் பலநூறு வருடமாக நெருக்குதல் காரணமாக உருவாகி இருக்கக்கூடிய ஒட்டுமொத்த விசையின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு என சொல்லப்படுகின்றது. இந்து சமுத்திரத்தின் கடலுக்கடியிலான பூமியதிர்வு இந்தோனேசிய நாட்டின் உள்ளூர் நேரம் காலை 7.58 க்கு நிகழ்ந்தது. பூமியதிர்வு அளவிடும் அலகில் 9.0 எனும் குறியீட்டினால் அழைக்கப் படுகின்றது. இராட்சத வெடிப்பு காரணமாக உருவாகிய அலையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 1000 கிலோமீற்றராக பதிவாகியுள்ளது. சுமத்திரா சுனாமி 7000 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சீசெல் நாட்டினையும் தாக்கியிருந்தது.
மேலும் இந்த பேரழிவின் தாக்கம் இப்படி இருக்கும் என கற்பனையில் கூட பலர் நினைத்திருக்கவில்லை. இருந்த போதிலும் நடந்து முடிந்துவிட்ட சுனாமி அன்று தமிழ்நாட்டில் பலர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிந்ததாகவும் செய்தி மூலம் அறிந்தோம். மேற்படி நபர் சுனாமி பேரழிவு பற்றிய விபரணச் சித்திரத்தினை (Discovery Channel) சிலகாலம் முன்பு பார்வையிட்டதாகவும் , அதில் சுனாமி காலத்தில் எவ்வாறு உயரமான குன்று அல்லது மலைகளில் ஏறி தப்ப முடியும் என சொல்லப்பட்ட விடயத்தினை கிரகித்த காரணத்தினால் அன்று அவரும் அந்த முறைகளில் பலரை உதவி செய்து காப்பாற்றி உள்ளாராம். ஆகவே எவ்வளவு விடயங்கள் , தகவல்கள் , செய்திகள் எங்கெல்லாம் உதவும் என்பதற்கு நல்ல உதாரணமாக மேற்படி சம்பவம் உள்ளது.


+++


ஆசியக் கண்டத்தை உலுக்கிய இந்த சுனாமி குறித்து ஏறக்குறைய அனைத்து உலகமும் அக்கறையுடன் கவனம் செலுத்திய அந்த (26-12-2004) நாளில் டெல்லியில் மத்திய அரசு சத்தமின்றி ஒரு காரியம் செய்தது. 


உலக வங்கியின் உத்தரவுப்படி, Patent Act எனப்படும் காப்புரிமை சட்டத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான – மக்களுக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதற்கான கையொப்பத்தை இட்டவர் பெரும்பாலான இந்தியர்களால் விவரம் புரியாமலே பாராட்டப்படும் அன்றைய குடியரசுத்தலைவர் "கனவு நாயகன்" அப்துல் கலாம். 


+++


சுனாமியால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும், சுனாமியால் பலன் அடைந்த ஒரே துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான். சுனாமி நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகத்தான் விநியோகிக்கப்பட்டது. அல்லது அவ்வாறு கணக்கெழுதப்பட்டது.


அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மிஞ்சும்வகையில் ஊழல்மயமான பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த சுனாமி நிவாரணத்தில் ஒரு கை பார்த்தன. மிகச்சிறிய அளவில் இயங்கி வந்த பல நிறுவனங்கள் இந்த சுனாமி காரணமாக கோடிஸ்வர நிறுவனங்களாக வளர்ந்தன.


+++


இந்த சுனாமி குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தகவல் வந்தது: அது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இருக்கட்டும். 


இன்றைய நிலையில் மீண்டும் ஒரு சுனாமி வந்தால் அதை சமாளிக்க இந்தியாவோ, தமிழ்நாடோ தயாராக இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். 


+++
சுனாமியில் மனிதர்களுக்கு பேரழிவுகள் ஏற்பட்டாலும், பெரும்பாலான விலங்குகள் தப்பித்தன. அடைத்து வைக்கப்பட்ட மற்றும் கட்டிப்போடப்பட்டிருந்த கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம். அவ்வாறில்லாத விலங்குகள் அனைத்தும் தப்பிவிட்டன. 


ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கு இயற்கையின் மொழி புரிகிறது. ஆறாம் அறிவு கொண்டுள்ளதாக நம்பப்படும் மனித இனத்திற்கு இயற்கையின் மொழி புரியவில்லை. 


+++ 


நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தாலே வெள்ளம் பெருக்கெடுத்தோடி மனித உயிர்கள் பலிவாங்கப்படும் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்றிலுமாக புறந்தள்ளி, முழுப்பொய்களைக் கொண்டு அணுமின் உலைகள் உருவாக்கப்படுகின்றன. 


ஆனால் வெள்ளம், புயல், சுனாமி போன்ற அழிவுகளுக்குப் பின்னாலும் பலர் இருந்து சிரமப்படக்கூடும். ஆனால் அணுமின் உலைகளில் அதுபோன்ற அவலங்கள் நேராது என்று நம்பலாம். ஏனென்றால் இங்கே உள்ள அணுமின் உலைகளில் பெரிய விபத்துகள் ஏதும் நேரிட்டால் புலம்புவதற்கு யாரும் மிஞ்சப்போவதில்லை...!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 8 March 2011

வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்க வாய்ப்பு...

 


வெளிநாடுகளில் கல்வி பயில்வது அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களை இந்தியர்கள் அதிகமாக நாடுகின்றனர்.
அத்தகைய நாடுகளின் கல்வி வசதி குறித்து சிறிய குறிப்புகள்...


ஆஸ்திரேலியா:
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு ஆஸ்திரேலியா செல்கின்றனர்.
2003-ம் ஆண்டில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்காக சேர்ந்தனர்.
அதே ஆண்டில் 14,400 இந்திய மாணவர்கள் சேர்ந்தனர்.
அவர்களில் 2,000 பேர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தனர்.
கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங் ஆகியவற்றில் அதிக மாணவர்கள் சேருகின்றனர்.
என்ஜினீயரிங் படிப்பில் பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் கல்வி அளிக்கின்றன.
www.studyinaustralia.gov.au
ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்குச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கின்றன.
மேலும் விவரங்கள் கிடைக்குமிடம்:
Australian Education International,
Australian High Commission,
1/50-G, Shantipath, Chanakayapuri,
New Delhi-110021. Tel. 011 26888223 ext 172.
E-mail:
anu.jain@dfat.gov.au


ஜெர்மனி:
ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் படித்த என்ஜினியர்களுக்கு எல்லா நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. . என்ற இணைய முகவரியில் இப்படிப்புகள் குறித்த விவரங்களை அறியலாம்.
சர்வதேசத் தரத்திலான பல்கலைக்கழகங்கள் ஜெர்மனியில் உள்ளன.
படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஜெர்மனிக்குச் செல்கின்றனர்.அங்கு ஆங்கிலத்திலேயே கல்வி அளிக்கப்படுகிறது. ஜெர்மனி மொழியையும் ஓரளவு கற்றுக் கொண்டால் ஜெர்மனி மக்களிடம் பழக வசதியாக இருக்கும்.

 ஏப்ரல் மற்றும் அக்டோபரில் வெளிநாட்டு மாணவர்கள் ஜெர்மனியில் சேர்க்கப்படுகின்றனர்.பெரும்பாலான வகுப்புகள் அக்டோபரிலேயே தொடங்குகின்றன. பள்ளியில் 13 ஆண்டுகள் படித்தவர்களே ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் சேர முடியும். எனவே இந்தியாவில் 10வது மற்றும் பிளஸ் டூ படித்த மாணவர்கள், ஜெர்மனியில் மேலும் ஓராண்டு 'பிரிட்ஜிங் கோர்ஸ்' படித்த பிறகே அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சேர முடியும்.


ஜெர்மனியில் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை.
மாணவர்கள் ஸ்காலர்ஷிப் மூலமாகவே படிக்கிறார்கள். எனவே மாணவர்கள் தங்குமிடம், உணவு, மருத்துவ இன்சூரன்ஸ், போக்குவரத்து ஆகியவற்றுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும்.
அங்கு வாழ்வதற்கு ஒரு மாதத்துக்கு ரூ.35,000 தேவைப்படும்.

கீழ்க்காணும் முகவரியில் மேலும் தகவல் பெறலாம்:

Max Muller Bhavan,
13, Khader Nawaz Khan Road, Chennai-600006.
phone- 91-44-2 833 1442/50 Fax 91-44-28331450.
E-Mail: daadch@vsnl.in - Internet: www.daad.de/ibz/chennai.

ஜப்பான்:
ஜப்பானில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 6 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
என்ஜினியரிங் படிப்புகள் 5 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
இப்படிப்புகளுக்கு ஜப்பான் அரசின் ஸ்காலர்ஷிப்பும்,சில தனியார் நிறுவனங்களின் ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள ஜப்பான் கான்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில் மேலும் விவரங்களைப் பெறலாம்.
முகவரி:
12/1 Cenatoph Road, 1st Street, Teynampet,
Chennai - 600018. India. Tel. 044-24323860.
Fax- 044-24323859, Email-cgjpchen@eth.நெட்


ரஷியா:
ரஷியாவில் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், வோல்கோகிராட் உள்பட சில பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க வாய்ப்புள்ளது.இங்கு படிக்கும் மாணவர்கள் பல நாடுகளிலும் மதிக்கப்படுகின்றனர்.
ஹையர் செகன்டரி படிப்பில் 40 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் பி.இ. படிப்பில் சேரலாம். இது 4 ஆண்டு படிப்பாகும். அதற்கு முன்பாக ஓராண்டுக்கு ரஷிய மொழியைப் படிக்க வேண்டும்.
படிப்பு மற்றும் இடத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணம் மாறுபடும். ரஷிய மொழியில் படித்தால் கட்டணம் குறைவு. ஆங்கிலத்தில் படித்தால் கட்டணம் அதிகம். சென்னையில் உள்ள ரஷியக் கலாசார மையத்தில் மேலும் விவரங்களை அறியலாம்.
முகவரி:
74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018,
போன்: 044-24986860/ 8215, 52177188.
பேக்ஸ்: 044-24986860.
email: info@studyabroadedu.கம

சிங்கப்பூர்:
வசதியான பெருநகரச் சூழலில் உயர்படிப்பு படிக்க ஏற்ற இடம் சிங்கப்பூர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு படிக்கிறார்கள்.

அங்கு மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இங்கிலாந்தைச் சேர்ந்த நியூ செளத் வேல்ஸ் பல்கலைக்கழகம், சிங்கப்பூரில் 2007-ம் ஆண்டில் சிங்கப்பூரில் தனது கிளையைத் தொடங்கவுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களோடு கூட்டு ஒப்பந்தங்களை வைத்துள்ளன.
சுற்றுலா படிப்பில் சேர விரும்புவோருக்காக சென்டோசா தீவில் புதிய கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.
www.singaporeedu.gov.sg

நன்றி :
. என்ற இணைய தள முகவரியில் விவரங்களைக் காணலாம்.

Thursday, 3 March 2011

கடலை ஏழைகளின் முந்திரியா!! ஒரு மருத்துவ பார்வை...


கடலை. பெண்பிள்ளைகளிடம் பேசும் பேச்சுக்கு கடலை என்ற பெயரை எவன் வைத்தானோ தெரியவில்லை. எங்கே சொன்னாலும் அந்த பேச்சைத் தான் நினைக்கிறார்கள். மகத்துவமான உணவான நிலக்கடலை பற்றிய நினைவு பெரும்பாலானோருக்கு வருவதில்லை. 


நிலக்கடலை என்று பொதுவாய் அழைக்கப்படும் இந்த பருப்பு வகை வேர்க்கடலை, மணிலாக்கடலை, மணிலாக்கொட்டை என்றும் அழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டில் முதன்முதலில் விளைவிக்கப்பட்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும் உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

போர்த்துகீசியாவில் இருந்து இந்தியா வந்த வாஸ்கோ டி காமாவுடன் வந்த ஏசு சங்க பாதிரியார்கள் மூலம் இந்தப்பயிர் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கலாம் என்று லேய்பேர்கர் (1928) குறிப்பிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்திருக்கலாம் என்று சுப்பா ராவ் (1909) கருதுகிறார். மணிலாக்கொட்டை என்ற பெயரை இதற்கு சான்றாக வைக்கிறார் சேஷாத்ரி (1962).
இன்று உலகஅளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக உள்ளது இந்தியா. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.  முக்கியமாய், ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி பிரதானமாய் இருக்கிறது.

கடலை சாகுபடியில் மிக முக்கியமானது விதைக்கும் நேரம். ஒரு வாரம் தள்ளிப்போனாலும் சாகுபடி பாதிக்கும் கம்மியாய் குறைந்து போகும். ஜூன் மாத முதல் வாரத்தில் இருந்து ஜூலை மாத இறுதி வாரத்திற்குள் கடலை விதைத்து விட வேண்டும். மேலும் இந்த நேரத்தில் செய்யும் விதைப்பினால் இலைத்துளைப்பான் (Leaf miner) மற்றும் Spodopteraa ஆகிய நோய் தாக்குதகளை குறைக்கலாம். கடலைச்செடிகளுக்கு ஊடுபயிராய் ஆமணக்கு, காராமணி மற்றும் சோயா பயிரிடுவதன் மூலமும் நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.இதெல்லாம் சரிதான். ஆனால் கடலை சாப்பிடும் முறை இருக்கிறதே… அது எப்படியெல்லாம் சாப்பிடப்படுகிறது என்று பார்ப்பதுதானே நம் ஆசை. முதலில் நம் நாட்டுக்கு வருவோம். இந்தியாவில் கடலை கொண்டு பெரும்பாலும் செய்யப்படுவது சமையல் எண்ணெய். அதன் பிறகு கடலையை அவித்தோ வறுத்தோ உண்பார்கள். கடலை மூலம் செய்யப்படும் கடலை மிட்டாய், கோகோ மிட்டாய் போன்றவை குழந்தைகள் விரும்பி உண்ணும் மிட்டாய்களாய் இன்றும் இருக்கின்றன. சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் “Peanut Planet” என்றோர் கடை இருந்தது. இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. கடலை இன்றும் நம் தமிழக சமையலில் மட்டுமல்லாமல் இந்திய சமையலில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உதாரணம் கடலை சட்னி. அது இருந்தால் எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை தோசைக்கு. 


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலை கொண்டு செய்யப்படும் வெண்ணெய் (Peanut Butter) புகழ்பெற்ற உணவாக உள்ளது. மேலும் பல்வேறு சாக்லேட் நிறுவனங்கள் இவற்றைக் கொண்டு சாக்லேட் தயாரிக்கின்றன. Butterfinger, Reese’s Peanut Buttercups, Twix, Snickers போன்றவை உலகப்புகழ் பெற்ற சாக்லேட் வகைகள். மேலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலும் வேர்க்கடலை சூப் போட்டு குடிக்கின்றனர்.



எதற்கு என்று கேட்கிறீர்களா? எதற்கும்.
கடலை என்பது உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகச் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப்பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிடவேண்டும்.
இன்று பெரும்பாலான ஏழைகள், நடுத்தர மக்கள் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுவதும், உயர்தட்டு மக்கள் முந்திரியை நெய்யில் வறுத்து சாப்பிடுவதும், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தானே. கொழுப்புச் சத்து நிறைந்த பருப்பு வகைகளை அதிக அளவில் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நட்ஸ் வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம்.    'நாள் ஒன்றுக்கு 30 கிராம் நட்ஸ் உடலுக்குத் தேவை. அதிலும் உணவில் நெய், பருப்பு, எண்ணெய் இவற்றை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. எல்லா வகை நட்ஸையும் கலந்து 30 கிராம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்’ என்கிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. வேர்க்கடலை  கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.. 

வேர்க்கடலை எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவா?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க் கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடு வதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும். வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்து விடுகின்றன.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும் போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும். ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டு விடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடு வதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிடவேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக்கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.


மேலை நாடுகளில்  கடலை உணவு...

ஆப்பிரிக்கர்களின் உணவில் கடலை ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ளது. கோழி அடித்து குழம்பு வைத்தாலும், குரங்கை கொன்று கறி சமைத்தாலும் அதில் கடலை இருக்கும். ஆப்பிரிக்க மக்களின் உணவு பழக்கங்களில் கடலை எத்தகைய இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கே காணலாம். மேற்கு ஆப்பிரிக்க கடலை சூப் பிராந்திய வேறுபாடுகள் எடுத்து பலவாறு மாறியது. கானாவில்  அது கிழங்கு, வாழைக்காய், மற்றும் ரொட்டி மற்றும் மரவள்ளிக் கிழங்கு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வேரினால் செய்யப்பட்ட fufuவுடன் பரிமாறப்பட்டது., மாலி மற்றும் செனகலில், மாபி (Maafe) என்று அழைக்கப்படும் கடலை சூப்பில் கோழி இறைச்சி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்ப்பார்கள்.

Thiébou guerté என்ற உணவு செனகல் நாட்டில் பிரபலம். நேரடி மொழிபெயர்ப்பில் கடலை அரிசி என்று வரும். செனகல் நாட்டின் மிக முக்கிய பணப்பயிர் கடலை தான். ஆகையால் அங்கு உண்ணப்படும் பெரும்பாலான உணவு வகைகளில் கடலை இடம்பெறுகிறது.


தென்அமெரிக்க நாடுகளே இந்த கடலையின் தொடக்கவிடம் என்பதை முன்னரே கண்டோம். ஆயினும் வேர்க்கடலை கொண்டு உருவாக்கப்படும் தனித்துவமான உணவுகள் நிறைய இல்லை என்பது ஆச்சயமூட்டும் ஒரு விஷயம். Papas Con Ocapa மற்றும் Chicken Fricasse போன்ற உணவுகளே அதிகம் செய்யப்படுகின்றன.


என்னுரை : 
                      என்னதான் சொல்லுங்கள். ஒரு மழைநாள் மாலையில் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு அம்மா உப்பு போட்டு அவித்துக் கொடுத்த வேர்க்கடலையை உரித்து எடுத்து சாப்பிடுவது போன்ற ஒரு சுவை எந்த சாக்லேட்டிலும் கிடைக்காது.  அதேபோல் என்னதான் கோழி, மீன், திராட்சை என்று வாங்கி வைத்தாலும் மசாலாவில் புரட்டி எடுத்த கடலைதான் மிகச்சிறந்த துணையுணவு.

ஆக்கம் & தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.


Tips on Getting Pregnant @ 30+Age and fertility: Getting pregnant in your 30s..

Although it is common knowledge that fertility, in both men and women, begins to drop off in ones late twenties many couples do not begin trying to get pregnant until their late twenties or early thirties. This is no surprise considering our present day recession so, here are some fertility tips for women, and some for men as well who are in their later years and trying to conceive.

Couples, who have been trying to conceive, find themselves having to deal with stress when conception does not happen immediately or within a few months. This one thing, stress has more of an effect on fertility than most realize. Everyone deals with stress at one time or another so think about how that stress affected your body, headaches, insomnia, constipation or diarrhea. Stress affects all the organs in the body, and this includes the reproductive system.

Tip 1: Do not get stressed out if you do not get pregnant immediately, for those over the age of thirty it can take as long as a year before getting pregnant. The best thing you can do is have sex quite frequently and make it fun as if you are still on your honeymoon.

Tip 2: "Get Healthy" and not just healthy but as healthy as possible for your age. This also includes getting your weight where it belongs, if you are overweight, lose weight, if you are underweight, gain weight. Getting your weight where it belongs is very important, in that being over or under weight adversely affects the reproductive system.

Tip 3: This kind of goes with tip two; eat healthily. Eating healthy foods and avoiding foods that have no nutritional value such as, fast foods and processed food, can help increase fertility. By eating healthy foods that supply the body with the nutrition it requires, the body and all its organs, including the reproductive system will function more normally thus, increasing fertility.

Tip 4: Exercise to not only kick-start your fertility but also to get the body in shape. A body that is in top physical condition will enable the body and all its organs to once again, function more normally. An added benefit of having your body in top shape is that it will make labor and delivery easier on you, if you are planning natural childbirth.

Tip 5: Your lifestyle may need to be changed, especially if you drink alcoholic beverages (more than three a day) or smoke. You will need to quit both, and this goes for men as well. Avoid beverages high in caffeine, as caffeine affects the reproductive system. Also, avoid places where chemicals, radiation, or toxins are present, all can affect fertility.

These five fertility tips for women can also be applied to men as most of the above tips also affect mens reproductive systems, and reduces mens sperm count as well as the quality of the sperm. Whether you have started trying to conceive or not these tips can help you reach your goal. If after six months you still have not gotten pregnant, then consider seeing a fertility specialist to make sure there are no infertility issues.

If you are still having problems after applying these fertility tips for women, and want more detailed information that can help then contact me for knowing more about IVF Fertility infertility specialist,fertility centres that can provide the best affordable quality infertility,fertility treatments with advanced reproductive technologies like IVF,ART, GIFT, ZIFT, TET, ICSI,IMSI,donor egg,surrogacy services.

Contact Us For More details:

Morpheus ART Fertility Centers
Tel: 91 22 42030903
Fax: 91 22 42030901
http://www.morpheus-art.com
info.morpheus.art(at)gmail.com

Tuesday, 1 March 2011

Most Popular Top 5 Professional Training Courses for Students......

There are numbers of professional training courses available in the various institutes, but few of them are in growing demand of students like Telecommunication Network Engineering, Biotechnology, Automobile engineering and two most common as well as popular MBA and Computer Science and Engineering.

Automobile Engineering :Automobile engineering is the branch of engineering which deals with the study on how to design, manufactured operate automobile like buses, trucks, car etc. Career as an Automobile Engineering is a great thought. Main duty of automobile engineers is to design, test and develop vehicles and components from concept stage to production stage.

The vehicle after being launched in the market also needs implement. Then it comes to the duty of the automobile engineers to improve the vehicles in response to the customer feedback. In recent times, owing to the rapid growth of the automobile industry in the country, the demand for the skilled professionals has also been increased considerably. Hence opting for career in automobile engineering will be interesting as well as rewarding.

Telecommunication Network Engineering:Telecommunication is one of the largest as well as complicated branch of engineering. Its application is so wide that it affects our day to day life in various ways. The technology of telecommunication is a rapidly growing sector where there is a great job opportunity for the skilled professionals.

This technology is growing at tremendous rate. A telecommunication engineering course imparts training to students on various telecommunication devices like mobile phone, TV, computer networking etc. India facing a huge demand for telecommunication engineers due to rapid growth in the field of satellite, internet and mobile telephony.

Biotechnology:Biotechnology is one the most revolutionary and beneficial professional training course as well as combination of technologies applied to living cells. Its application varies from agriculture to industries- food, chemicals, bio-products, textiles, medicine etc all these make it one of the fastest growing field. An individual thinking of making career in Biotechnology must have a scientific aptitude and keen interest in the biological science. Candidate should be calm by nature and able to work accurately, knowledge of computer is must.

Computer Science and Engineering:Choosing career as Computer Science and Engineering is of great beneficial. It is the study of theoretical foundation of information and computation and of practical techniques for their implementation and application in computer system. It is also described as systematic study of processes that create, describe and transform information. The Computer Science and Engineering Department offers courses leading to a Bachelor of Technology in Computer Science as well as In Information Technology.

MBA : Imagine a career where you can make an impact on the world and yourself. MBA is the master of Business Administration which is most popular among the graduates. The MBA designation was originated in the USA, in the late 19th century. The core courses in MBA program are designed to introduce students to various area of business such as accounting, human resource, finance, marketing, operation management etc. MBA program also offers option for the students to take general business course throughout the program or can choose area of specialization and focus on one- fourth of their studies in this subject.

Earning MBA degree can provide you with management skills and business expertise that open new career opportunities to you. An MBA program will also launch you into the much higher pay range that upper level manager and executives enjoy. In the high level position an MBA degree will allow you to hold, your work will often be more interesting and rewarding.