Thursday, 10 March 2011

சுனாமி (Tsunami)- ஒரு பார்வை ..


சுனாமி (Tsunamiஎன்பது யப்பானிய மொழியில் "harbor wave" (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில் , ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது.அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி 150, 000 மேலான மனித உயிர்களை பலிகொண்டும் , பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்ல பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்ட இயற்கைப் பேரழிவுடன் தொடர்புள்ள தகவல்கள் வருமாறு உள்ளது.


Propagation du tsunami en profondeur variable.gif






கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாண்டிரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன்வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tsunami-kueste.01.vm.jpg
The wave further slows and amplifies as it hits land. Only the largest waves crest.
Tsunami comic book style.png
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில்அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755 ஆம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
  • 1883 ஆம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
  • அதன் பின்னர் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964 ஆம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரித்தானிய கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.






இயற்கை சீற்றங்களில் தற்போது மக்களை மிகவும் அச்சுறுத்தி வருவது சுனாமி என்றழைக்கப் படும் ஆழிப் பேரலை .உலகில் பல்வேறு பகுதிகளை தாக்கிய சுனாமிகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றை பார்ப்போம் 

1 ) ஜப்பான் 

1983 ல் ஜப்பானின் நோஷிரோ கரையை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 10  மீட்டர் வரை இருந்தது . 

2 ) சாலமன் தீவு  

2007 ல்  சாலமன் தீவுகளை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 12  மீட்டர்வரை இருந்தது .

3 ) சாமொவா தீவு  

2009 ல் சாமொவா தீவை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 14  மீட்டர் வரை இருந்தது

4 ) பாப்புவா நியூ கினியா   

1998 ல் பாப்புவா நியூ கினியாவை  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 15  மீட்டர் வரை இருந்தது.

5 ) சிலி    

1960 ல் சிலி நாட்டிலுள்ள வால்டிவியா என்னுமிடத்தை   சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 25  மீட்டர் வரை இருந்தது.

6 ) அமெரிக்கா    

1964 ல் அமெரிக்காவின் அலாஸ்க்காவை   சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக30  மீட்டர் வரை இருந்தது.

7 ) இந்தோனேஷியா     

2004 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக  சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30  மீட்டர் வரை இருந்தது.இது வரை தாக்கிய சுனாமிகளில் அதிக உயிர்களை பலி கொண்ட சுனாமி இதுதான் .

8 ) ஜப்பான்    

11 -3 -2011 ல் ஜப்பானை    சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30  மீட்டர் வரை இருந்தது.

9 ) ஜப்பான்    

1993 ல் ஜப்பானின் ஹோக்கைடோவை     சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக31  மீட்டர் வரை இருந்தது.

10 ) அமெரிக்கா     

1958 ல் அமெரிக்காவிலுள்ள லித்துயா கடலில் சுனாமி உருவானது .   உலகிலேயே மிகப் பெரிய்ய சுனாமி இதுதான் .இதனால் உருவான அலைகள்  520  மீட்டர் உயரம் வரை இருந்தன .நல்ல வேளையாக  இந்த சுனாமி தாகிய இடத்தில் அதிகம் மக்கள்  வசிக்கவில்லை .இந்த சுனாமி காரணமாக இரண்டுபேர் உயிரிழந்தனர் .

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து 
படங்கள்  : கூகுளிலிருந்து





தமிழ் மக்களின் பண்டய இலக்கியங்களில் ஆழிப்பேரலை அல்லது கடல்கோள் என்பது சுனாமியை அர்த்தப்படுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் இது மூலமாக பழங்கால தமிழர்களினாலும் இத்தகைய பேரழிவுகள் எதிகொண்டதினை அறியமுடிகின்றது. சுனாமி தொடர்பிலான தகவல்களும் நிகழ்வுகளும் கடந்த 4000 வருடம் காலமாக மிகவும் அறியப்பட்டும் பேசப்பட்டும் வந்தபோதிலும் சர்வதேசரீதியில்1963 ம் வருடம் நடந்த அனைத்துலக விஞ்ஞான மாநாட்டில் அகிலத்திற்கும் பொதுவான "சுனாமி' (Tsunami) எனும் சொல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இயற்கை பேரழிவு பற்றிய பதிவுகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து (4000 வருடங்கள்) இன்றுவரை பதிவாகிய மிகப்பெரிய சுனாமிகள் முறையே 1883 (36,000 பேர் பலி) , 1998 ஜுலை (36,000 பேர் பலி) , 2004 ம் டிசம்பர் (150,000 பேர் பலி) என்பன அதிக மனித உயிகளை காவுகொண்ட பேரழிவுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த நூற்றாண்டில் 2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியில் 11 நாடுகளைச் சேர்ந்த 150,000 மக்களின் உயிகளை உடனடியாகவும் மேலும் பல நூறு உயிகளை அடுத்த சில நாட்களிலும் பறித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் குறிப்பாக இந்தோனேசிய நாட்டின் தீவுகளில் ஒன்றாகிய சுமத்திரா எனும் பகுதியில் கடலுக்கடியில் நிகழ்ந்த மிகப்பெரிய பூமியதிர்வு காரணமாக உருவாகிய ஆழிப்பேரலை (சுனாமி) பலிகொண்ட பன்நாட்டு மக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு.
  • இந்தோனேசியா 80,246
  • இலங்கை (ஸ்ரீலங்கா) 28,627
  • இந்தியா 8, 955
  • தாய்லாந்து 4,812
  • சோமாலி 142
  • மலேசியா 66
  • பர்மா 53
  • தான்சனியா 10
  • பங்களாதேஷ் 2
  • சீசெல் 1
  • கென்யா 1
2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியால் பதிக்கப்பட்ட பெளதீக தரவுகள்.பூகோளரீதியில் வர்ணிக்கப்படும் முக்கிய 11 தட்டுக்கள் இரண்டில் பலநூறு வருடமாக நெருக்குதல் காரணமாக உருவாகி இருக்கக்கூடிய ஒட்டுமொத்த விசையின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு என சொல்லப்படுகின்றது. இந்து சமுத்திரத்தின் கடலுக்கடியிலான பூமியதிர்வு இந்தோனேசிய நாட்டின் உள்ளூர் நேரம் காலை 7.58 க்கு நிகழ்ந்தது. பூமியதிர்வு அளவிடும் அலகில் 9.0 எனும் குறியீட்டினால் அழைக்கப் படுகின்றது. இராட்சத வெடிப்பு காரணமாக உருவாகிய அலையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 1000 கிலோமீற்றராக பதிவாகியுள்ளது. சுமத்திரா சுனாமி 7000 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சீசெல் நாட்டினையும் தாக்கியிருந்தது.
மேலும் இந்த பேரழிவின் தாக்கம் இப்படி இருக்கும் என கற்பனையில் கூட பலர் நினைத்திருக்கவில்லை. இருந்த போதிலும் நடந்து முடிந்துவிட்ட சுனாமி அன்று தமிழ்நாட்டில் பலர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிந்ததாகவும் செய்தி மூலம் அறிந்தோம். மேற்படி நபர் சுனாமி பேரழிவு பற்றிய விபரணச் சித்திரத்தினை (Discovery Channel) சிலகாலம் முன்பு பார்வையிட்டதாகவும் , அதில் சுனாமி காலத்தில் எவ்வாறு உயரமான குன்று அல்லது மலைகளில் ஏறி தப்ப முடியும் என சொல்லப்பட்ட விடயத்தினை கிரகித்த காரணத்தினால் அன்று அவரும் அந்த முறைகளில் பலரை உதவி செய்து காப்பாற்றி உள்ளாராம். ஆகவே எவ்வளவு விடயங்கள் , தகவல்கள் , செய்திகள் எங்கெல்லாம் உதவும் என்பதற்கு நல்ல உதாரணமாக மேற்படி சம்பவம் உள்ளது.


+++


ஆசியக் கண்டத்தை உலுக்கிய இந்த சுனாமி குறித்து ஏறக்குறைய அனைத்து உலகமும் அக்கறையுடன் கவனம் செலுத்திய அந்த (26-12-2004) நாளில் டெல்லியில் மத்திய அரசு சத்தமின்றி ஒரு காரியம் செய்தது. 


உலக வங்கியின் உத்தரவுப்படி, Patent Act எனப்படும் காப்புரிமை சட்டத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான – மக்களுக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதற்கான கையொப்பத்தை இட்டவர் பெரும்பாலான இந்தியர்களால் விவரம் புரியாமலே பாராட்டப்படும் அன்றைய குடியரசுத்தலைவர் "கனவு நாயகன்" அப்துல் கலாம். 


+++


சுனாமியால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும், சுனாமியால் பலன் அடைந்த ஒரே துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான். சுனாமி நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகத்தான் விநியோகிக்கப்பட்டது. அல்லது அவ்வாறு கணக்கெழுதப்பட்டது.


அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மிஞ்சும்வகையில் ஊழல்மயமான பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த சுனாமி நிவாரணத்தில் ஒரு கை பார்த்தன. மிகச்சிறிய அளவில் இயங்கி வந்த பல நிறுவனங்கள் இந்த சுனாமி காரணமாக கோடிஸ்வர நிறுவனங்களாக வளர்ந்தன.


+++


இந்த சுனாமி குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தகவல் வந்தது: அது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இருக்கட்டும். 


இன்றைய நிலையில் மீண்டும் ஒரு சுனாமி வந்தால் அதை சமாளிக்க இந்தியாவோ, தமிழ்நாடோ தயாராக இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். 


+++
சுனாமியில் மனிதர்களுக்கு பேரழிவுகள் ஏற்பட்டாலும், பெரும்பாலான விலங்குகள் தப்பித்தன. அடைத்து வைக்கப்பட்ட மற்றும் கட்டிப்போடப்பட்டிருந்த கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம். அவ்வாறில்லாத விலங்குகள் அனைத்தும் தப்பிவிட்டன. 


ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கு இயற்கையின் மொழி புரிகிறது. ஆறாம் அறிவு கொண்டுள்ளதாக நம்பப்படும் மனித இனத்திற்கு இயற்கையின் மொழி புரியவில்லை. 


+++ 


நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தாலே வெள்ளம் பெருக்கெடுத்தோடி மனித உயிர்கள் பலிவாங்கப்படும் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்றிலுமாக புறந்தள்ளி, முழுப்பொய்களைக் கொண்டு அணுமின் உலைகள் உருவாக்கப்படுகின்றன. 


ஆனால் வெள்ளம், புயல், சுனாமி போன்ற அழிவுகளுக்குப் பின்னாலும் பலர் இருந்து சிரமப்படக்கூடும். ஆனால் அணுமின் உலைகளில் அதுபோன்ற அவலங்கள் நேராது என்று நம்பலாம். ஏனென்றால் இங்கே உள்ள அணுமின் உலைகளில் பெரிய விபத்துகள் ஏதும் நேரிட்டால் புலம்புவதற்கு யாரும் மிஞ்சப்போவதில்லை...!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment