Wednesday, 4 January 2012

முந்தைய இமாம்களுடைய அரும்பணியை மறந்து விடக்கூடாது

அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றிருக்கும் நாம் அந்த மார்க்கத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மார்க்கம் எவ்வாறு நம்மை வந்தடைந்தது, இந்த மார்க்கத்திற்கும் நமக்கும் மத்தியிலுள்ள தொடர்புகள் எவ்வாறு அமையவேண்டும், என்பதையெல்லாம் நாம் புரிந்துக் கொண்டால் தான் இந்த மார்க்கத்தை முழுமையாக நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும்.

மார்க்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு அல்லாஹ்வினுடையது:

இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டுவதற்கும்; இஸ்லாமிய மார்க்கத்திற்கு வரும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் தவிடு பொடியாக்கி மார்க்கத்தை இந்த பூமியில் மேலோங்கச் செய்வதற்கும் உரிய மாபெரும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். ஆகவே அந்தப்பணிகளுக்கு ஏற்ற, தகுந்த மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டேயிருக் கின்றான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்.
-முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.
(அல்குர்ஆன்: 9:33)
இந்த வசனத்தில் தூதர்கள் அனுப்பப்பட்டதன் உயரிய நோக்கத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இந்த உலகத்தில் உள்ள மதச்சித்தாந்தங்களுடன் பத்தோடு பதினொன்றாக இருப்பதற்காக இஸ்லாத்தை அல்லாஹ் அருளவில்லை, மாறாக இந்த உலகத்தில் மதச்சித்தாந்தங்கள் என்று எத்தனை இருக்கின்றனவோ அத்தனையைவிடவும் இஸ்லாம் முதன்மையானதாக இருக்க வேண்டும். அத்தனைச் சித்தாந்தங்களையும் விஞ்சியதாக இஸ்லாம் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை அல்லாஹ் குறிப்பிடுவதை இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்படும் உதவியாளர்கள்:
மேற்கூறப்பட்ட மகத்தான நோக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக அல்லாஹ் பல நிலைகளில் உதவிகளைப் புரிந்து கொண்டேயிருந்தான். ஸஹாபாக்களில் ஆரம்பித்து இன்று வரை அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மக்கள் இந்த மார்க்கத்திற்காக உழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தனி மனிதனோடு புறப்பட்ட இந்த மார்க்கம் மேலோங்கி மேலோங்கி அதன் இறுதி நிலை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

எங்கெல்லாம் இரவு, பகல் உதிக்கின்றனவோ அங் கெல்லாம் இந்த மார்க்கம் சென்றடையும். கண்ணி யமானவன் கண்ணியத்துடனோ, கேவலமானவன் இழிவைச் சுமந்தோ இந்த மார்க்கத்தைப் பெற்றேத் தீருவான். இந்த மார்க்கம் ஒவ்வோரு கிராமத்திலுள்ள வீட்டிலும் போய்க்கதவைத் தட்டும்.

நகரத்திலோ, கிராமத்திலோ, குக்கிராமத்திலோ இருக்கக்கூடிய எந்த வீட்டிற்குள்ளும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை கொண்டுபோய் நுழைக்காமல் விடமாட்டான். இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக பிரச்சாரம் செய்யவோ, போராட்டங்கள் புரியவோ அல்லாஹ் வானத்திலிருந்து மலக்குகளை அனுப்பமாட்டான். அல்லாஹ் இந்த சமுதாயத்திலி ருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை களம் இறக்குகின்றான். அவர்கள் மார்க்கத்திற்காக உழைக்கின்றார்கள், தியாகம் செய்கின்றார்கள். அவர்களுக்கு உதவியாக தனது புறத்திலிருந்து மலக்குகளை அனுப்புகிறான், உதவிகள் புரிகிறான், பல அற்புதங்கள் நடந்தேறுகின்றன. அவர்களுக்கு அல்லாஹ் பரகத் செய்கின்றான்.
இவ்வாறு இந்த மார்க்கம் மேலோங்கிக் கொண்டிருக்கின்றது. மேலோங்கியே தீரும் என்று அல்லாஹ் முடிவெடுத்திருக்கின்றான் அது நடந்து கொண்டிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் இந்த மார்க்கம் நம்மை வந்தடைவதற்காக எவ்வளவு பேர் என்னென்ன தியாகங்களை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தியாகங்களை செய்த தியாகிகளின் வரலாற்றைத் நாம் தெரிந்து கொள்ள கடமைப்பட்டி ருக்கின்றோம்.
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது (அல்குர்ஆன் 12:111) என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருப்பது போல, இது வரலாற்றுடன் தொடர்புள்ள ஒரு தலைப்பு. இந்த வரலாறுகளின் மூலம் நாமும் படிப்பினை பெற வேண்டும், அதன் அடிப்படையில் நமது செயல்பாடுகளை அமைத்துக்க கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நினைவூட்டலின் நோக்கம். அப்படி அறிவதன் மூலம் நமது ஈமானிய பலம் கூடுவதற்கு வாய்ப்பாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.

நாம் குர்ஆன், சுன்னாவின் சிந்தனைக்கு வந்திலுக்கின்றோம். ஷிர்க் (இணைவைப்பு), பித்அத் போன்ற மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களை இனம் கண்டு அவற்றிலிருந்து விலகி தவ்பா செய்தவர்களாக இருக்கின்றோம். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
மார்க்கத்தின் எதார்த்த நிலையை முதன் முதலில் தமிழகம்தான் தந்திருக்கின்றதா? இதை முதன் முதலில் தமிழகத்திலிருந்து தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயமாக இல்லை. இந்த மார்க்கத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடியவர்களை அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கிறான்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் ஒரு சிலரை அனுப்புகின்றான். அவர்கள் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கின்றார்கள்.
ஒரு நபரை அல்லாஹ் அனுப்புகிறான் அவர் வந்து மார்க்கத்தின் பெயரால் மலிந்து கிடக்கின்ற அனாச்சாரங்களை களையெடுக்கின்றார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மார்க்கம் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது. அதாவது எதார்த்த (உண்மை) நிலை நம் சமுதாயத்திற்கு உணர்த்தப்பட்ட பிறகும் திரும்பவும் அப்படியே வழி தவறி போய்விடுகிறார்கள். திரும்ப அல்லாஹ் அடுத்த நூற்றாண்டில் இன்னொரு நபரை அனுப்புகின்றான். இப்படியே அல்லாஹ் அனுப்பிக் கொண்டேயிருக்கின்றான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:என்னுடைய சமுதாயத்தில் ஒரு பிரிவினர் தொடந்து சத்தியத்தில் இருப்பார்கள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்களாக ஒரு பிரிவினர் இந்தச் சமுதாயத்தில் இருந்து கொண்டேயிருப்பார்கள். அவர்களுடைய கொள்கைக்கு யார் மாறு செய்கின் றார்களோ அவர்களை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கட்டளை மறுமைநாள் வரும் வரைக்கும் இது நீடித்துக் கொண்டே இருக்கும்.

முன்மாதிரிச் சமுதாயம்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்தார்கள். அதற்கு பிறகு ஸஹாபாக்கள் தியாகம் செய்தார்கள். இன்றைக்கு மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் ஸஹாபாக்களின் தியாகங்கள் கூட மறுக்கப்படும் நிலைதான். இந்த மார்க்கத்திற்காக உழைத்த, உயிரைக் கொடுத்த நபித்தோழர்களின் தியாகங்களை கூட புறக்கணித்து ஒரு தவறான சாயம் பூசப்படும் நிலையை நாம் பார்க்கின்றோம். ஆனால் அல்லாஹ் முதன் முதலில் இந்த மார்க்கத்தை இந்த உலகத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதற்கு முன்மாதிரிச் சமுதாயமாக அவர்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்துகின்றான்.

இந்த மார்க்கத்திற்கு இப்படியெல்லாம் கூட தியாகங்களைச் செய்ய முடியும் என்று தியாகத்திற்கே உதாரணமாக அவர்கள் திகழ்ந்ததை வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.

தமிழக மக்களின் நிலை
ஸஹாபாக்களுக்குப் பிறகு தியாகிகளின் நீண்ட பட்டியல் இருக்கின்றது. அந்த தியாகிகளின் வரலாற்றிற்கும் தமிழக மக்களுக்கும் மத்தியில் மிக நீண்ட இடைவெளி உள்ளது. எப்படிப்பட்ட தியாகங்கள் செய்யப்பட்டு நம் வரை இஸ்லாம் வந்துள்ளது என்ற வரலாற்றுத் தகவல்கள் தமிழக மக்களை வந்தடையவில்லை. இந்த வரலாற்றுத் தொடர் விடுப்பட்டதற்கு உர்தூ, அரபி போன்ற மொழி அறியாமையின் காரணமும் ஒன்றாகும்.
சஹாபாக்களின் தியாகங்கள் பற்றி நாம் இங்கு அதிகம் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தளவிற்கு அவர்கள் மார்க்கத்திற்காக தியாகம் செய்திருக்கின்றனர்.

ஸஹாபாக்களுக்குப் பின்னும்…?
ஸஹாபாக்களின் தியாகங்களைப் பற்றி நாம் அங்காங்கே ஒரு சில சம்பவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்குப்பிறகு அல்லாஹ் தாபிஈன்களில் சில மக்களை மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காகவே தேர்ந்தெடுக்கின்றான்.

தாபியீன்களில்…
  • ஸயீத் இப்னு முஸய்யிப்(ரஹ்) (ஹிஜ்ரீ- 90 மரணம்)
  • உர்வாபின் சுபைர்(ரஹ்)
  • ஸாலிம் பின் அப்துல்லாஹ்பின் உமர்(ரலி) (உமர் (ரலி) பேரர்) (ஹிஜ்ரீ -106 மரணம்)
  • காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்கர்(ரஹ்) (ஹிஜ்ரீ-106)
  • உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) (ஹிஜ்ரீ-101)
இவர்களெல்லாம் குர்ஆன், சுன்னா வழியில் ஷிர்க், பித்அத்துகளைக் களையெடுப்பதற்காக பாடுபட்டவர்களில் மிகவும் முயற்சி எடுத்தவர்கள் ஆவர்.

தபவுத் தாபியீன்களில்… இமாம் மாலிக்(ரஹ்)

தாபியீன்களுக்குப் பிறகு தபவுத் தாபியீன்களின் காலம். அதில் தலையாய இடத்திலிருப்பவர் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள். நான்கு மத்ஹப்களின் இமாம்களில் ஒருவராக பிரபலமாகியிருக்கும் இமாம் மாலிக் பின் அனஸ்(ரஹ்) அவர்கள் இந்த பூமியில் குர்ஆன், சுன்னாவை நிலைநாட்டுவதற்காக என்னவெல்லாம் தியாகங்களை மேற்கொண்டார்கள் என்பது பற்றி நமக்குக் கூறப்பட்டதோ? இல்லையோ? இமாம்களின் பெயரைச் சொல்லி விமர்சித்ததையும் அவர்களை துச்சமாகக் கருதி அவர்களைக் குறை கூறியதையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

மத்ஹபுகளை விமர்ச்சிப்பது வேறு, இமாம்களை விமர்ச்சிப்பது வேறு, தன்னுடைய வாழ்க்கையில் ஐங்காலத் தொழுகையைப் பேணுதலாகத் தொழாதவர்களெல்லாம் இஸ்லாத்திற்காக தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்த இமாம்கள் மீது மிக மோசமான வார்த்தைகள் துணிந்து உபயோகப்படுத்துவதை தமிழக மக்களுக்கு மத்தியில் மட்டும்தான் காணமுடிகிறது.

நம்முடைய பலவீனம், கல்வியின்மை, கல்விக்கும் நமக்கும் மத்தியிலுள்ள இடைவெளி இவற்றின் காரணத்தால் இஸ்லாத்திற்காக மிகப்பெரிய தியாகங்கள் செய்திட்ட, எவர்களுடைய முயற்சியினால் இன்று நாம் குர்ஆன், சுன்னாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோமா அப்படிப்பட்ட தியாகிகளை புறந்தள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய துணிவு சில தமிழக பேச்சாளர்கள் சிலரிடம் வந்திருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் இஸ்லாத்திற்காக எவ்வளவு பெரிய தியாகங்கள் செய்தார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை பாருங்கள்.
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் காலத்தில் ஒரு கலீஃபா இறந்து விட, அடுத்ததாக ஜஃபர்பின் சுலைமான் என்பவருடைய ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் இமாம் மாலிக் (ரஹ்)அவர்களுக்கு ஆட்சிக்கட்டிலிலிருந்து ஒரு நெருக்கடி வருகிறது. “ஒரு மனிதன் நிர்ப்பந்திக்கப்பட்டு தலாக் சொன்னால் அந்த தலாக் செல்லாது என்ற ஹதீஸை மக்களுக்கு நீங்கள் அறிவிக்கக்கூடாது” என்பது தான் அந்த நெருக்கடி.காரணம், அங்கு ஆட்சித் தலைவருக்கு நிர்ப்பந்தமாக பைஅத் வாங்கப்பட்டு வந்த சமயம் அது. நிர்ப்பந்தமான தலாக் செல்லாது எனும்போது நிர்ப்பந்தமாக வாங்கப்பட்ட பைஅத்தும் செல்லாது என்றாகிவிடும் அல்லவா? ஆனால் இமாம் அவர்கள் நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள் நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த சுன்னாவை ஒருநாளும் மறைக்கவே மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டார்கள்.
இறுதியில் ஆட்சியில் இருந்தவர்கள் சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரையும் ஏவி விட்டு இமாம் அவர்களை ஒரு கழுதை மேல் ஏற்றி அமர வைத்து சாட்டையாலும், கற்களாலும் அடித்து ஊர்வலமாக ஓட ஓட விரட்டுகிறார்கள். அந்த நேரத்திலும் இமாம் அவர்கள் கலங்கவில்லை, கதறவில்லை அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த, உதித்த வார்த்தைகள் இதோ:“என்னை யார் முன்னதாக அறிந்திருக்கின்றீர் களோ என்னை நீங்கள் அறிந்திருக்கீன்றீர்கள். என்னைப் பற்றிய அறிமுகம் எவருக்கு இல்லையோ அறிந்து கொள்ளுங்கள்; அஸ்பஹீ இனத்தைச் சேர்ந்த அபூஆமிரின் பேரனான அனஸின் மகன் மாலிக் நான் தான். நான் சொல்கிறேன் நிர்ப்பந்திக்கப்பட்டு வாங்கும் தலாக் செல்லாது” என்று இரத்தம் சொட்ட சொட்ட தொடர்ந்துசொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள். இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் மக்களுக்கு சுன்னா சென்றடைய வேண்டும் என்பதற்காக தொகுத்த நூல் தான் “முஅத்தா மாலிக்” என்ற பிரபலமான நூலாகும்.

அவர்கள் ஹிஜ்ரீ 179-ல் வஃபாத்தாகிறார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய மாணவர் இமாம்ஷாஃபீ(ரஹ்) அவர்கள் வருகிறார்கள்.

இமாம் ஷாஃபியீ(ரஹ்)
இவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடமும் வகீம் பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்களிடமும் கல்வியை கற்கிறார்கள். இது தவிர பல அறிஞர்களைச் சந்திக்கச் சென்று தமது கல்வி அறிவை வளர்த்துக் கொண்டு அவர்களும் ஒரு ஹதீஸ் நூலைத் தொகுக்கின்றார்கள்.
அதுதான் இன்று முஸ்னத் ஷாஃபியீ என்று அறியப்படும் நூலாகும். மேலும் “அர்ரிஸாலா” என்ற ஓர் அற்புதமான ஹதீஸ்கலை நூலையும் தொகுக்கின்றார்கள். அது மட்டுமல்ல ஹதீஸ் தொகுப்பிலேயே ஹதீஸ் கலையை உருவாக்கியவர்களே இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் தான்.
இரண்டு ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தோன்றினால்அதை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு ஹதீஸ் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிக்கக்கூடாது என்றிருக்கும் பிரிதொரு ஹதீஸ் நபி(ஸல்)அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழித்தார்கள் என்றிருக்கும்.
இஹ்ராம் அணிந்துவிட்டால் திருமணம் தடை என்று ஒரு ஹதீஸிலும் இஹ்ராம் அணிந்து நபிகள்(ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள் என்று மற்றோர் ஹதீஸிலும் இருக்கும். இப்படி முரண்பாடாக வரக்கூடிய ஹதீஸ்களை எப்படி விளங்கிக் கொள்வது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் “இக்திலாஃபில் அஹாதீஸ்” என்ற நூலைத் தொகுக்கிறார்கள். ஆழமான தீர்வை தருகிறது அந்நூல்.
மேலும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கப்ரு வழிப்பாட்டினர், சூஃபியாக்களின் கொள்கைகள் அனைத்தையும் தரைமட்டமாக்குவதற்காக கொள்கை ரீதியான பல புத்தகங்களைத் தொகுத்து இந்த சமுதாயம் குர்ஆன், சுன்னாவின் சிந்தனையிலிருந்து வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டிருக்கின்றார்கள் இமாம் அவர்கள். இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் பின் ஷாஃபியீ(ரஹ்) அவர்கள் 204-ல் வஃபாத்தாகிறார்கள்.


இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்):
அதற்குப் பிறகு அப்பணியை சிரமேற்கொண்டு செயல்படவும் மார்க்கத்திற்காக தம்முடைய இன்னுயிரை நீத்திடவும் தயாராகிறார்கள் இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்களின் மாணவர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள்.இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் வரலாற்றை படிக்கும் போது கல்விப்பணியில் இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ(ரஹ்) இவர்களையெல்லாம் விஞ்சி நிற்பதை அறிய முடிகின்றது. தம்முடைய தந்தையிடமிருந்தும் தம்முடைய சகோதரரிடமிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்ட இமாம் அவர்கள்
சுமார் 30,000 ஹதீஸ்களைக் கொண்ட முஸ்னத் அஹ்மத் என்ற மிகப்பெரிய ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுக்கின்றார்கள். இந்த ஹதீஸ்களை மக்களுக்கு போதிக்கும்போதெல்லாம் என்னுடைய சொந்த கருத்தை எழுதாதீர்கள் என மக்களை எழுதவிடாமல் தடுத்து விடுவார்கள்.
இதனாலேயே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் சொந்தக் கருத்துக்களடங்கிய நூல் எதுவுமே இருக்காது. எல்லாம் ஹதீஸ் நூற்களாகத்தான் இருக்கும். தமது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹதீஸ்கள் மட்டுமே தொகுக்கப்படவேண்டும் என்று விரும்பிய இமாம் அவர்கள் அப்துல்லாஹ் என்ற தமது மகனாரிடம் “அப்துல்லாஹ்வே! இந்தப் புத்தகத்தை நீ மிக மிக பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி நூலாக அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். காரணம், இதில் நான் தொகுத்தளித்துள்ள 30,000 ஹதீஸ்களும் 7,00,000 ஹதீஸ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்” என்று கூறுகிறார்கள்.

இமாம் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்த 30,000 ஹதீஸ்களைத்தான் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலாக நாம் பார்க்கிறோம். அஹ்மத் என்று வருவதெல்லாம் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் தொகுப்பு நூலான முஸ்னத் அஹ்மத் என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ்கள்தாம்.

இமாம் அவர்கள் இந்த குர்ஆன், சுன்னாவை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட சிரத்தை எண்ணிலடங்காதது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஃபித்னா தோன்றுவதுபோல் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் காலகட்டத்திலும் மிகப்பெரிய பித்அத்(ஃபித்னா) தோன்றுகிறது. மஃமூன் என்பவரின் ஆட்சிக்காலத்தில் “குர்ஆன் படைக்கப்பட்ட பொருள்” எனும் கூற்று பெரும் குழப்பமாக திகழ்ந்தது. குர்ஆன் படைக்கப்பட்ட பொருள் என்று சொன்னால் படைக்கப்பட்ட பொருட்கள் அழிவதைப் போன்று குர்ஆனும் அழிந்து போய்விடும் எனும் சித்தாந்தத்தை பரப்பிக்கொண்டிருந்தார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் அது அழிந்துவிடும் எனில் அல்லாஹ்வும் அழிந்து விடுவான் என்றாகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆகவே இத்தீய கொள்கையை ஒரு போதும் வளரவிடக்கூடாது என்று அக்காலத்தைய இமாம்களெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக் கிறார்கள்.இதில் பலரும் துன்புறுத்தப்படுகிறார்கள். மஃமூன் என்ற அரசனின் கடைசி காலத்தில் தான் (ஹிஜ்ரீ 218-ல்) இந்த ஃபித்னா தொடங்குகின்றது அவர் மரணிக்கின்றார். அவர் மரணித்தவுடன் இந்த ஃபித்னா இல்லாமல் ஆகிவிடும் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) எண்ணுகின்றார்கள்.

ஆனால் அதற்குப்பிறகு முஃதஸிம் என்பவர் ஆட்சிக்கு வருகிறார். இவரும் அந்தத் தீயக்கொள்கையில் உறுதியாக இருக்கின்றார். இக்கொள்கையை எதிர்க்கின்றவர்களை சிறையிடைக்கக் கட்டளையிடுகின்றார். அப்பொழுது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களும் அவர்களுடன் முஹம்மத் பின் நூஹ் என்பவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பக்தாதுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் காரணமாக முஹம்மத் பின் நூஹ் அவர்கள் வழியிலேயே வஃபாத்தாகி விடுகிறார்கள். எஞ் சியிருப்பது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் மட்டும்தான்.
ஒரு சிலர் ஆட்சியாளருக்கு பயந்து கொண்டு இக்கொள்கையை விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் ஃபித்னாவை ஒழிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இமாம் அவர்கள் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. இமாம் அவர்கள் 30 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தப் பிறகு அரசன் முஃதஸிம் இமாம் அவர்களை சிறையிலிருந்து விடுவித்து என்ன நினைக்கின்றீர்கள்? கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்று விசாரிக்கின்றார்.

அதற்கு இமாம் அவர்கள் “எந்த மாற்றமும் இல்லை” என துணிந்து கூறுகின்றார்கள். அப்படியா னால் அங்குள்ள 2 கம்புகளில் ஏதேனும் ஒன்றில் கைவையுங்கள்! என்று கூறுகிறான். இமாம் அவர்களுக்குக் காரணம் புரியவில்லை ஒரு கம்பில் இமாம் கைவைத்து விடுகின்றார்கள். அதற்குப்பிறகு அந்தப் பகுதியிலுள்ள கோரமுகம் கொண்ட சில சாட்டை வீரர்கள் வருகின்றார்கள். இரக்கம் என்பதையே அல்லாஹ் அவர்களின் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டானோ என்னவோ இமாம் அவர்களை அடிக்க ஆரம்பிக்கின்றனர் ஒரு அடியிலேயே இமாம் அவர்கள் மயக்க முறுகிறார்கள் கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிகிறது. அடுத்து ஒரு அடி இப்படியே 30-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் சில நூல்களில் 80-க்கும் அதிகமான சாட்டையடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி உடம்பில் ஒரு இடம்கூட அடிவிழாமல் மிஞ்சவில்லை எனும் அளவிற்கு அடிக்கப் படுகிறது. இறுதியில் இமாம் அவர்களின் உடலுக்கு மருந்திடுவதற்காக மருத்துவர் வந்து அவர்களுடைய உடம்பில் சில சதைத்துண்டுகளை துண்டித்து எடுக்கின்றார். காரணம் அந்த சதைத்துண்டு களெல்லாம் செத்துப்போயிருந்தன, அதற்கு உயிர் இல்லை. அடித்துக் கொண்டிருக்கும் போதே சில சதைத்துண்டுகள் தொங்கிக் கொண்டும் இருந்திருக்கின்றது.

பிறகு அதையெல்லாம் துண்டித்து எடுத்து விட்டுதான் மருத்துவம் செய்யப்படுகின்றது. பிறகு இமாம் அவர்களால் தொழக்கூட முடியாத நிலை இருந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம். இதுவே இமாம் அவர்களின் மரணப்படுக்கையாகி விடுகின்றது. இப்படி சத்தியத்திற்காக இமாம்கள் பட்ட கஷ்டங் களையும் யாருக்காகவும், எதற்காகவும் மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்ளாத நிலையையும் அவர்களின் வரலாற்றில் பார்க்கின்றோம். இமாம் அவர் கள் ஹிஜ்ரீ 241 வஃபாத்தாகிறார்கள்.
அவர்களுக்குப் பிறகு யஹ்யா இப்னுமுயீன் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 233) அலீ இப்னு மதீனீ (ஹிஜ்ரீ 234) என ஹிஜ்ரீ 200களில் இந்த மிகப்பெரிய அறிஞர்கள் இஸ்லாத்திற்காக தங்களுடைய தியாகத் தை பதிந்திருகின்றார்கள்.

இமாம் புகாரீ (ரஹ்):
அடுத்து இமாம்களுடைய மாணவர்களின் காலம் வருகின்றது அவர்கள்தான் குர்ஆன், சுன்னாவை நிலை நாட்டுவதற்கான அடுத்த தியாகிகள் கூட்டம். புகாரீ என்ற ஹதீஸ் நூலை நாம் பார்க்கின்றோம். அதை தொகுத்த இமாம் புகாரீ அவர்கள் மேற்கண்ட தியாகிகளின் மாணவராக இமாம்களுக்கு அடுத்த கால கட்டத்தில் வருகின்றார்கள்.
  1. இமாம் இமாம் புகாரீ (ரஹ்) ஹிஜ்ரீ : 256
  2. இமாம் முஸ்லிம் (ரஹ்) ஹிஜ்ரீ: 261
  3. இமாம் அபூதாவூத் (ரஹ்) ஹிஜ்ரீ : 275
  4. இமாம் திர்மிதீ (ரஹ்) ஹிஜ்ரீ : 279
  5. இமாம் நஸாயீ (ரஹ்) ஹிஜ்ரீ : 303
இவர்கள் அனைவரும் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களின் மாணவர்களாவர். மத்ஹபு இமாம்களின் மாணவர்கள் தான் இவர்கள். இந்த இமாம்கள் அனைவருமே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்ற அறிஞர்களிடமிருந்தும் ஹதீஸ்களைத் தேடிப் பெற்று மிகப்பெரும் தொகுப்பு நூல்களை நமக்குத் தந்து குர்ஆன், சுன்னாவை நிலை நாட்ட பாடுபட்டிருகின்றார்கள்.
இவர்களோடு தியாகங்கள் முடிந்து விட்டதா? என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மாணவர்கள் வருகின்றார்கள்.
  • இமாம் இப்னு ஹ§ஸைமா(ரஹ்) அவர்கள் – (ஹிஜ்ரீ 311)
  • இமாம் தாரகுத்னீ- (ஹிஜ்ரீ 385)
  • இமாம் கத்தீப் – (ஹிஜ்ரீ 463)
  • இமாம் அப்துல் கனி அல்மக்திஸீ அவர்கள்- (ஹிஜ்ரீ 600)
இப்படியாக 6-வது நூற்றாண்டு வரைக்கும் அந்தத் தொடர் நீண்டு கொண்டேபோகிறது.
மேற்கண்ட எத்தனையோ அறிஞர்கள் இவர்களது இந்தப் பெயர்களெல்லாம் நம் காதுகளில் விழுந்திருக்கின்றதா? ஏதோ நாம் தான் முதன் முதலில் இந்த உலகத்திற்கு குர்ஆன், சுன்னாவை அறிமுகப்படுத்துகிறோம் என்பது போன்ற மாயை இங்கு உருவாக்கப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் குர்ஆன், சுன்னாவை மேலோங்கச் செய்யும் பணி சங்கிலித் தொடராக வந்து கொண்டேயிருக் கின்றது என்பதுதான் உண்மை.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)
இந்தத் தொடரின் முத்தாய்ப்பாய் 7-ம் நூற்றாண்டில் வருகை தருகின்றார்கள், ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)அவர்கள்.
ஸைகுல் இஸ்லாம் எனப் போற்றப்படும் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் (ஹிஜ்ரீ728) கால கட்டம் மார்க்கத்தின் பெயரால் அனைத்துக் குப்பைகளும் நிறைந்திருந்த காலமாகும் இஸ்லாம் என்ற பெயரில் ஷிர்க், பித்அத், குஃப்ர், முஃதஸிலா, கத்ரிய்யா,சூஃபியாக்கள் என்றெல்லாம் எத்தனை கொள்கைக் குழப்பங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் நிறைந்திருந்த காலம் அது.
அத்தனை அனாச்சாரங்களும் நிறைந்திருந்த காலகட்டத்தில் பிறந்த இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் அத்தனைக் கொள்கைக் குழப்பங்களுக்கும் எதிராக போராடினார்கள். தார்த்தாரியர்களின் ஆட்சியில் மாட்டிக்கொண்ட இமாம் அவர்கள் ஒரு பக்கம் கல்விப்பணி, ஒருபக்கம் ஃபத்வா, ஒரு பக்கம் ஜிஹாத் என பல வகைகளில் மார்க்கத்திற்காக பெரும் சேவை செய்திருப்பதை அறிய முடிகிறது. அவர்கள் சுமார் 6 போர்க்களங்களில் வாளெடுத்துப் போரிட்டிருக்கின்றார்கள் என்பதையும் வரலாற்று நூலில் பார்க்க முடிகிறது.
இப்படி பல வழிகளில் மார்க்கத்தை நிலை நாட்ட பாடுபட்ட இமாம் அவர்கள் இறுதியில் அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு சிறையிலேயே -ஹிஜ்ரீ- 728-ல் மரணமடைகிறார்கள் இப்படி பல தியாகங்களுக்கு மத்தியிலும் இமாம் அவர்கள் பல நூல்களைத் தொகுத்திருக்கின்றார்கள். அதில் 30 பாகங்களைக் கொண்ட “மஜ்மூஅத்துல் ஃபதாவா” என்ற மிகப் பெரிய ஃபத்வா நூலும் ஒன்று. இன்று உலகம் முழுக்க பரவலாக காணக்கிடைக்கின்ற அதை ஒருவர் படித்து விட்டாரெனில் தவறான அனைத்து கொள்கைகளையும் எதிர்த்து போராடும் அளவிற்கு ஆதாரங்களை தொகுத்து வைத்திருக்கின்றார்கள்.
அந்த ஆட்சி நஜ்தில் இருந்து ரியாத், கஸீம், அல் ஹஸ்ஸா ஆகிய பகுதிகளுக்கு விரிவடைந்ததோடு இமாம் அவர்களின் பிராச்சாரமும் விரிவடைந்து மக்கா, மதீனா என ஹிஜாஸ் மாகாணத்திற்கு வருகி ன்றது. அன்றைய மக்கா, மதீனாவின் பள்ளிகளில் புர்தா, ஷிர்க்கான கவிதைகள் என அனாச்சாரங்கள் மலிந்திருந்தது.மார்க்கத்திற்கு முரணான அத்தனை அனாச்சாரங்களையும் ஒழித்ததில் இமாம் அவர்க ளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாதுகாப்பதற்கு அளித்துள்ள உத்தரவாதம் என்பது எங்கெல்லாம் அல்லாஹ் வகுத்தளித்த கொள்கைக்கு மாற்றமான, எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவோ அங்கெல்லாம் அதற்கு எதிராக மார்க்கத்தை முழுமையாக பின்பற்றக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி மார்க்கத்தின் உண்மை நிலையை காப்பதுதான் அல்லாஹ் எடுத்துக் கொண்டுள்ள உத்தரவாதத்திற்கு அடையாளமாகும்.
இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களுக்குப் பிறகு இப்னு கய்யூம், தஹபீ, இப்னு கஸீர் என்ற தஃப்ஸீரைத்தொகுத்த இப்னு கஸீர்(ரஹ்)- (ஹிஜ்ரி 774) இமாம் ஷன்ஆனீ, இமாம் ஷவ்கானீ (ஹிஜ்ரி 1250) இவர்களெல்லாம் வருகின்றார்கள்.

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரலி):
இவர்களுக்குப் பிறகு (ஹிஜ்ரீ -1206-ல்) முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் வருகின் றார்கள். இவர்கள் தான் வஹ்ஹாபி என்று அறியப்படுகின்றார்கள்.
நஜ்தில் தோன்றிய இமாம் அவர்கள் ஸவூதி மன்னரோடு தொடர்பு கொண்டு மன்னர் ஸவூத் அவர்களின் உதவியுடன் கொள்கை சீர்திருத்தப்பணிகளை செய்தார்கள்.

இமாம் அவர்கள் மாணவர்களின் சிறு குழுவை உருவாக்கி, அங்குள்ள பள்ளியிலேயே பாடம் படித்துக் கொடுக்கின்றார்கள். பக்குவம் பெற்ற மாணவப்பட்டாளம் ஒன்று உருவானதும் முதல் வேலையாக அந்த நகரத்தில் எங்கெல்லாம் கப்ருகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றனவோ அத்தனை கப்ருகளும் உடைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் லட்சியமாக இருந்தது. ஒரு பக்கம் மன்னரின் ஆதரவு, இன்னொரு பக்கம் மார்க்கம் போதிக்கப்பட்ட மாணவர்களின் குழு இந்த பலத்தைக் கொண்டும் அங்கு கப்ரு வழிபாடு, ஷிர்க், சூஃபியிஸம் அனைத்தும் அல்லாஹ்வின் உதவியால் அழித்தொழிக்கப்பட்டன.

அந்த ஆட்சி நஜ்தில் இருந்து ரியாத், கஸீம், அல் ஹஸ்ஸா ஆகிய பகுதிகளுக்கு விரிவடைந்ததோடு இமாம் அவர்களின் பிராச்சாரமும் விரிவடைந்து மக்கா, மதீனா என ஹிஜாஸ் மாகாணத்திற்கு வருகின்றது. அன்றைய மக்கா, மதீனாவின் பள்ளிகளில் புர்தா, ஷிர்க்கான கவிதைகள் என அனாச்சாரங்கள் மலிந்திருந்தது.மார்க்கத்திற்கு முரணான அத்தனை அனாச்சாரங்களையும் ஒழித்ததில் இமாம் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாதுகாப்பதற்கு அளித்துள்ள உத்தரவாதம் என்பது எங்கெல்லாம் அல்லாஹ் வகுத்தளித்த கொள்கைக்கு மாற்றமான, எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவோ அங்கெல்லாம் அதற்கு எதிராக மார்க்கத்தை முழுமையாக பின்பற்றக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி மார்க்கத்தின் உண்மை நிலையை காப்பதுதான் அல்லாஹ் எடுத்துக் கொண்டுள்ள உத்தரவாதத்திற்கு அடையாளமாகும்.பெயரளவில் முஸ்லிம்கள் என்கின்ற பெரும் கூட்டத்தை அல்லாஹ் விரும்புவதில்லை மாறாக சிறிய கூட்டமாக இருந்தாலும் கொள்கைப்பிடிப்புள் ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.

ஹிஜ்ரி -12-ம் நூற்றாண்டு வரையில் குர்ஆன், சுன்னாவை நிலைநாட்ட பாடுபட்ட தியாகம் செய்த சிலரை பார்த்திருக்கின்றோம்.

அப்துர் ரஹ்மான் முபாரக் பூரி
ஹிஜ்ரீ 1353-ல் ஒரு மிகப்பெரிய அறிஞர் வருகின்றார். ஆம்! அவர்தான் அப்துர் ரஹ்மான் முபாரக்பூரி. இந்தியாவில் பிறந்த அவர்கள் மார்க்கத்தை கற்றுக்கொண்டு இந்த குர்ஆன், சுன்னாவிற்காக செய்த தியாகம் மகத்தானதாகும். திர்மிதீ என்கிற நூலை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நூலிற்கு இமாம் அவர்கள் ஸுஹ்பதுல் அஹ்வதீ என்கிற ஓர் அருமையான விளக்கவுரை நூலை எழுதுகின்றார்கள்.
இந்தியாவில் பிறந்த ஷைக் அவர்கள் எழுதிய இந்த நூல் தான் உலகம் முழுக்க இன்றைக்கு திர்மிதீயின் விரிவுரையாக கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முபாரக்பூரி என்பது இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்பூரி என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அர்ரஹீக்குல் மக்தூம் என்கிற மிக பிரபலமான (நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) நூலைத் தொகுத்தவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.

ஷம்ஸுல் ஹக்
ஷம்ஸுல் ஹக் ஹிஜ்ரீ 1329-ல் (மரணம்) வருகின்றார்கள்.அவர்கள் அபூதாவூத் என்கிற ஹதீஸ் நூலிற்கு அரபியிலேயே ஹவ்ழுல் மஹ்பூஸ் என்கிற ஓர் அழகான விரிவுரையை எழுதுகின்றார்கள். இந்தியாவில் பிறந்த இமாம் அவர்கள் இந்த மார்க்கத்திற்காக செய்த தியாகத்தின் சின்னமாக அந்த விரிவுரை நூல் இருக்கிறது.

இதுதவிர பல நூல்களை இமாம் அவர்கள் எழுதுகின்றார்கள். (எந்தளவிற்கென்றால்) இருக்கக்கூடிய ஷிர்க், பித்அத் செய்பவர்களெல்லாம் கொதித்தெழுகின்றார்கள். குர்ஆன், சுன்னாவின் பிரச்சாரம் வீரியமடைந்து வருகின்றதே கப்ரு வழிபாடு கூடாது, புர்தா கூடாது இப்படி அனாச்சாரங்களை எல்லாம் எதிர்க்கின்றார்களே என ஆர்ப்பரிக்கின்றார்கள்.
அதன் வெளிப்பாடாய் கி.பி 1926-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25,26-ம் தேதியன்று லக்னோவில் மிகப்பெரிய மாநாட்டை கூட்டுகிறார்கள். அந்த மாநாட்டின் பெயர் முஸ்லிம் ஹிஜாஜ். ஹிஜாஜ் மாகாணத்தில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தோன்றி ஏகத்துவப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார். அந்தப் பாதிப்பு இங்கேயும் தவ்ஹீத் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டை ஏற்பாடு செய்கின்ற அந்த அணிக்குப் பெயர் அஞ்சுமனே ஹிஸ்புல் அஹ்னாஃப்.ஹனஃபி மக்களின் கூட்டம் என்கிற ஒரு மாநாடு நடைபெற்றது அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த தீர்மானங்களில்………!
மன்னர் அப்துல் அஜீஸிடமிருந்து மக்காவை விடுவிக்க வேண்டும். அவர்தான் இந்த மக்காவை கையில் வைத்துக்கொண்டு இங்குள்ள ஷிர்க், பித்அத்களிலெல்லாம் வஹ்ஹாபியக் கொள்கையைத் திணித்து இந்த நிலையை உருவாக்கியது. எனவே அவரை அந்த ஆட்சியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இந்த அப்துல் அஜீஸ் ஷிர்க், பித்அத்தெல்லாம் கூடாது என்று சொல்லக்கூடிய வஹ்ஹாபிக் கொள்கையில் இருப்பவர். எனவே இவர் ஆட்சியில் இருக்கும் வரை எவரையும் ஹஜ்ஜுக்குப் போக விடக்கூடாது. அங்கு சென்றால் ஷிர்க், பித்அத், கப்ரு என எதுவும் இல்லை என தெரிந்துக்கொள்வார்களோ என்கிற அச்சத்தில் ஹஜ்ஜுக்குப் போக விடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றார்கள்.
அடுத்து இந்தக் கோரிக்கையை நிறை வேற்றுவதற்காக ஷிர்க், பித்அத்திற்கு ஆதரவாக அன்றிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற “ஷியாயிஸ” கொள்கையைச் சார்ந்த ஈரான் அரசாங்கத்தின் உதவியை நாடவேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றுகின்றார்கள்.
அந்த மாநாட்டிற்குப் பிறகு 1926-ன் கடைசியில் இன்னொரு மாநாடு அதே லக்னோவில் நடக்கின்றது. அதில் எடுககப்பட்ட முக்கிய தீர்மானங்கள்……!
இந்த அப்துல் அஜீஸ் ஆட்சியில் இருப்பதனால்தான் குர்ஆன், சுன்னா போன்ற செய்திகளெல்லாம் பரவுகின்றது. எனவே இந்த ஆட்சியை மாற்றவேண்டும். அதாவது ஹிஜாஸிற்கு ஆட்சிமாற்றம் தேவை. நீங்கள் தான் அதை செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீங்கள் எங்கள் பகுதியை காப்பாற்றிக் கொடுங்கள். மக்கா, மதீனாவை காப்பாற்றிக் கொடுங்கள் என பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது யார்? இன்று இங்கு இந்திய முஸ்லிம்களில் யாரெல்லாம் பரேலவி கொள்கையிலும், ஷியாக் கொள்கையிலும் கப்ர் வழிபாட்டிலும் இருக்கின்றார்களோ அவர்கள்தான் குர்ஆன், சுன்னாவை அழித்தொழிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் உதவிகேட்டு லக்னோவில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியவர்கள் என்பதை அறிகிறோம்.

குர்ஆன், சுன்னா மாநாடுகள்
இப்படியே இவர்கள் நடத்திக் கொண்டு போகட்டும் என விட்டால் சரிபடாது இனியும் பொறுக்க முடியாது என நினைத்த குர்ஆன், சுன்னாவை பேணக்கூடிய மக்கள் 1926-ல் 11-வது மாதத்தில் டெல்லியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்துகின்றார்கள்.

அடுத்து அஞ்சுமனே முஹம்மது என்கிற இயக்கம் 1345-ல் குஜராத்தில் மாநாடு நடத்துகின்றது. அடுத்து அஞ்சுமனே அஹ்ல ஹதீஸ் என்கிற இயக்கம் பீகாரில் மாநாடு நடத்துகின்றது.

பேர்ணாம்பட்டில் விழிப்புணர்வுக் கூட்டம்
இந்த காலகட்டத்தில் ஒரு முக்கிய செய்தியையும் நாம் காண முடிகிறது. அஞ்சுமனே இத்திபாவுஸ் ஸலஃப் என்று சொல்லக்கூடிய ஸலஃபுகளைப் பின்பற்றக்கூடிய ஒரு இயக்கத்தின் சார்பில் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய பேர்ணாம்பட்டில் அதே காலகட்டத்தில் அதாவது 1345-வாக்கில் ஒரு மாநாடு நடத்தப்படுகின்றது.



தமிழகத்தில் கால் ஊன்றிய குர்ஆன், சுன்னா
சனாவுல்லாஹ் அம்ரஸ் பூரி
1906-ல் ஸைகுல் இஸ்லாம் ஸனாவுல்லாஹ் அம்ரஸ்பூரி அவர்கள் அம்ரஸ்தர் என்கிற ஊரில் பிறந்த மிகப்பெரிய இமாமான அவர்கள் மிர்ஸாகுலாம் காதியானி காலத்தில் வாழ்ந்தவராவார்கள்.அவர்கள் தான் காதியானியிஸத்திற்கே சாவு மணி அடித்தார்கள். இவர்களுடைய தலைமையில் குர்ஆன், சுன்னா கொள்கையைக் கொண்ட அஹ்லே ஹதீஸ் கூட்டமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஏற்படுத்தப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் ஷைக் அவர்கள் டெல்லியில் “தாருல் ஹதீஸ் அர்-ரஹ்மானிய்யா”என்கிற மதரஸாவை துவங்குகின்றார்கள். இந்த மதரஸாவில் புடம் போட்டு எடுக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் இன்றைக்கு தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸை போதித்துக் கொண்டிருக்கக்கூடிய உமராபாத் மதரஸாவில் ஷைகுல் ஹதீஸாக இருக்கக்கூடிய ஜஹீருத்தீன் அவர்கள்.

அவர்களுடைய கடும் உழைப்புதான் இந்தியா முழுக்க குர்ஆன், சுன்னா ஆணித்தரமாக மக்கள் மத்தியில் தழைத்தோங்குவதற்கு காரணமாக அமைந்திருந்தது.இதுபோன்ற கொள்கை பிடிப்புள்ள அறிஞர் பெருமக்கள் உருவாகக் காரணமே ஷைக் அவர்கள் நிறுவிய “தாருல் ஹதீஸ் அர்-ரஹ்மானிய்யா” என்ற மதரஸாதான்.இமாம் ஸனாவுல்லாஹ் அவர்களின் பணி அத்தோடு முடிந்துவிடவுமில்லை. 1321-ஹிஜ்ரியில் அஹ்ல ஹதீஸ் என்கிற பத்திரிக்கையை துவங்கி அதில் தவறான அனைத்துக் கொள்கையினருக்கும் பதில் தருவது, விளக்கம் சொல்வது போன்ற மாபெரும் பணியை இமாம் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.

சித்தீக் ஹஸன் கான்
இன்னொரு முக்கியமான ஒரு அழைப்பாளர் சித்தீக் ஹஸன் கான். போபாலில் மன்னராக இருந்த இவர்கள் அந்தப் பதவியைப் பயன்படுத்தியே மார்க்கத்தைப் போதித்துக் கொண்டிருந்தார்கள். குர்ஆன், சுன்னாவைப் படிப்பது மட்டுமல்லாமல் மிகப்பெரியதொரு ஃபத்ஹுல் பயான் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன் என்ற தஃப்ஸீரை(குர்ஆன் விரிவுரையை)அரபியிலேயே 8 பாகங்களாக எழுதியிருக்கின்றார்.
சுமார் 222 புத்தகங்களை எழுதிய இவர் அதில் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அரபியிலேயே எழுதியிருக்கிறார். அரும்பெரும் தஃப்ஸீரை உருவாக்கிய மிகப்பெரிய பெருமை சித்தீக் ஹஸன் கான் அவர்களுக்கு இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

முந்தைய அறிஞர்களின் அரும்பணியை மறந்து விடக்கூடாது
இத்தனைக்கும் பிறகு தான் தமிழகத்தில் குர்ஆன் சுன்னாவைப் பெற முடிகின்றது. இந்த மிகப்பெரும் தியாகிகள் ஒன்றிணைந்துதான் இன்று தமிழகத்தில் தவ்ஹீது உதயமாகியிருக்கின்றது.
இதையெல்லாம் நினைவு படுத்துவதன் நோக்கம் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு சேவை செய்வதற்காக எல்லாக் காலங்களிலும் எல்லாப் பகுதியிலும் ஒரு கூட்டத்தை எழுப்பியிருக்கின்றான். அந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு அல்லாஹ் வேலை வாங்குகின்றான். அது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

இன்றைக்கு யாரெல்லாம் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கின்றார்களோ அவர்களும் அந்தப்பட்டியலில் வந்தவர்களே தவிர இவர்கள் புதிதாகத் தோன்றியவர்கள் அல்ல என்பதைப் புரிந்துக் கொள்வதுடன் எல்லா இமாம்களும் அவரவர்களுடைய காலக்கட்டத்தில் கடுமையாக தியாகங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள், இந்த மார்க்கத்திற்காக உழைத்திருக்கின்றார்கள்.அதிலும் குறிப்பாக அந்த இமாம்கள் ஒருவரையருவர் மதித்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் துஆ செய்திருக்கின்றார்கள்.
எவர்களுடைய பெயர்களெல்லாம் சொல்லப்பட்டதோ அனைவருக்கும் அனைத்து விஷயங்களிலும் மிக சரியாக இருந்தார்கள் என சொல்ல வரவில்லை. சில கருத்து வேறுபாடு இருந்திருக்கும். சில விஷயங்களில் முரண்பட்ட கருத்துக்கள் இருந்திருக்கும் ஆனால் அவர்களின் இலக்கு என்ன என்பதுதான் முக்கியம்.
அவர்களில் ஒவ்வொருவரும் தமக்கு முன் சென்ற அறிஞர்களை மதித்திருக்கின்றார்கள். ஆக நாமும் இதற்கு முன்னால் யாரெல்லாம் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்தார்களோ அவர்களை மதிக்க வேண்டும். இதற்குப் பின்னால் வரக்கூடியவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
அவர்கள் ”எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்”” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். 59:10
தியாகிகளை மதிக்க வேண்டும் என்கிற காரணத்தினால் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூட தாம் ஒரு நபியாக இருந்தும் கூட தனக்கு முன் சென்ற(சிறுசிறு) தியாகிகளைக் கூட சொல்லிக்கொண்டிருந்தார்கள். குகை வாசிகள், நெருப்புக்குன்ற வாசிகளின் சிறுவர்கள் பற்றியெல்லாம் புகழ்ந்து சொல்லியிருக்கின்றார்கள்.
நாமும் அதுபோன்று தியாகிகளின் பட்டியலில் நம்மை இணைத்துக் கொள்ள பாடுபட வேண்டும். அவர்களில் குர்ஆன், ஹதீஸை போதித்தவர்களின் கருத்தை மதிக்கக்கூடிய மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்று நாம் குர்ஆன், சுன்னாவின் சிந்தனைக்கு வந்திருக்கின்றோம். ஷிர்க் (இணைவைப்பு) பித்அத் போன்ற மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களை இனம் கண்டு அவற்றிலிருந்து விலகி தவ்பா செய்தவர்களாக இருக்கின்றோம். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

இந்த மார்க்கத்தின் எதார்த்தமான, உண்மையான நிலையை நாம் தமிழகத்தில் புதிதாகக் கண்ட ஒரு நிலையில் இருக்கின்றோம். இந்த மாதிரியான மார்க்கத்தின் எதார்த்த நிலையை முதன் முதலில் தமிழகம் தான் தந்திருக்கின்றதா? இதை முதன் முதலில் தமிழகத்திலிருந்து தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயமாக இல்லை.

இந்த மார்க்கத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடியவர்களை அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் இந்த மார்க்கத்தை புதுப்பிக்கிறான்.


அல்ஹம்துலில்லாஹ்!

100 மருத்துவக் குறிப்புகள்.....

100 மருத்துவக் குறிப்புகள்.....

by Ajmal Khan on Monday, 12 September 2011 at 07:45
•1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

•2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்...போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

•3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

•4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

•5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

•6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

•7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

•8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

•9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.பெண்களுக்காக…

•10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

•11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.•12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

•13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!

•14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை
‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

•15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

•16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

•17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

•18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

•19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

•20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

•21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

•22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

•23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

•24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

•25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

•26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

•27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.•

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

•29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

•30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

•31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து!

•32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

•33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

•34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

•35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

•36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

•37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

•38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

•39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

•40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
 
•41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

•42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

•43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

•44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

•45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

•46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

•47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

•48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!

•49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


•50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.


•51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.


•52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்… டப்..!


•53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

•54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

•55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

•56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

•57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்.

•58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

•59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

•60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.•61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி!

•62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

•63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

•65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

•66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

•67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

•68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.•

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

•70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

•71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

•72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

•73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

•74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

•75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!

•76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்

.•77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

•78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

•79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

•80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

•81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

•82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

•83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

•84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

•85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.


நில்… கவனி… செல்!

•86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

•87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

•88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

•89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

•90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

•91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

•92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

•93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

•94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை

•95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

•96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

•97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

•98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.•99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

•100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

Tuesday, 3 January 2012

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

                        வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

     by Ajmal Khan on Monday, 10 October 2011 at 14:38
 
வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!
ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000
மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா என்ன?
அதேபோன்று தான் ஒரு மனிதன் தனது குறிக்கோளினை நோக்கி பயணம் செய்யும்போது தடைகள் கண்டு மனம் தளராது வீறு நடை போட வேண்டும்.கிராமத்தில் கண்மாய் கரை ஓரத்தில் இருக்கும் ஆல மரத்தினை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பழத்தில் இருக்கும் சிறு விதை தரையில் விழுந்து பெரிய மரமாகிறது. அதேபோன்று தான் சிறு முயற்சி வெற்றி வாழ்வில் அடித்தளமாக அமையும்.ஒரு மலையின் உச்சியினை அடைய வேண்டுமென்றால் அதனை சுற்றியுள்ள குன்றுகளை பார்த்து பிரமிக்கக் கூடாது. மலை உச்சியினை அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி வேண்டும். ஒரு காது கேட்காத மற்று திறனாளிக்கு அவர் மீது பிறர் அள்ளி வீசுகின்ற வசைபாடுகள் மற்றும் கேளிப்பேச்சுகள் அறியாமல் இருப்பதால் தான் அவர் அன்றாட வேலையினை செய்ய முடிகிறது. அவர் காது கேட்கும் திறனிருந்தால் அவர் மீது வீசப்படுகின்ற வசைபடுகளால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவார்.
வானத்தில் வட்டமிடும் பறைவைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவைகள் தங்களுடைய இறகுகளால் எவ்வளவு தூரம் உயரமாகவும் வேகமாகவும் பறக்க முடியுமோ அதனைப் பொருத்து அது தன் இறைகளை தேடவும் வல்லூருகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.ஆனால் மனிதன் பறப்பதிற்குப் பதிலாக பூமியில் வாழ்கின்றான். அவன் வெற்றிக் கனியினைப் பறிக்க தன் செயல்களில் விரைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை அடைய முடியுமல்லவா?
உங்கள் முயற்சியில் முழுப் பயன் பெற கீழ்க் கண்ட செயல் முறைகள் தேவை:
1) ஒரு கூட்டுக் குடும்பத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை பந்த பாசத்துடன் பழகுவதினை நாம் காணலாம். அதே குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சண்டை வந்து அந்த வீட்டின் நடுவே சுவர் எடுத்தால் அவர்களுக்கிடையேயுள்ள மனக் கசப்பு மேலும் அதிகமாவதுடன், அவர்களுடைய குடும்பதினருக்குள்லேயுள்ள பந்த பந்த பாசமும் அறவே முறிந்து விடும். உதாரணத்திற்கு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெர்லின் சுவரால் ஜெர்மானிய மக்கள் மேற்கு கிழக்கு எனப் பிரிந்து வாழ்ந்தனர். பனிப்போர் முடிவுக்கு வந்ததும் அந்த சுவர் இடிக்கப் பட்டதால் இன்று ஒன்று பட்ட ஜெர்மானிய நாடு உலகில் சக்தி வாய்ந்த பெண் ஜனாதிபதியான மார்களினைகொண்டு விளங்குகின்றது. ஆகவே மனிதனின் பந்த பாசத்திற்கு எந்த தடையும் இருக்ககூடாது.
2) உங்கள் வாழ்வு பழமைவாதம், பிற்போக்கு மற்றும் புறையோடியதாக இருக்ககூடாது. புது அனுபவங்கள் மற்றும் புதுமைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

3) உங்கள் வேலைகளில் அல்லது முயற்சிகளில் உங்கள் குடும்ப உறுப்பினர், சக ஊழியர், வேலையாட்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினை தேடுங்கள்.

திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட உங்களுக்கு முயல்கள் பதுங்கும் குழிகள், பதுங்கும் புலிகள், சீரும் பாம்புகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரிய யானைகளோ அல்லது உயர்ந்த ஒட்டகசிவிங்கிகளோ கண்ணுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. ஆகவே நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை அளந்து வையுங்கள்.உங்களின் அறியாமையிலிருந்து தெளிவு பெற பிறரால் எடுத்துச் சொல்லப்படும் நல்ல அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கையின் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு ஒரு உதாரணமாக 11.9.2011 இல் நீயுயார்க் உலக வர்த்தக மைய விமான தாக்குதல் நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை சொல்லாலம் என நினைக்கின்றேன். 47 வது வட பகுதியின் தளத்தில் உள்ள பர்ஸ்ட் யூனியன் வங்கியில் வேலை பார்த்த நியூ ஜெர்செயினைச் சார்ந்த 49 வயதான ஜோஸ் என்பவர் தான் இருந்த கட்டிடத்தினை விமானம் தாக்கியதும் லிப்ட் வேலை செய்யததால் மாடிப் படி வழியே இறங்க ஆரம்பித்தார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் சில வேலையாட்கள் வர மறுத்து லிப்ட் இயங்கும் என எதிர் பார்த்து நின்றனர். ஜோசுவுடன் வந்தவர்கள் மாடிபடியே இறங்கி கீழே வருவதற்கும் வர்த்தக மையம் முழுமையாக கீழே விழுவதிற்கும் சரியாக இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் நல்ல போதனைகளை நாம் ஒருபோதும் நிரகரிகக்கூடாது என்று இந்த சம்பவம் விளக்குகின்றதல்லவா?

மனிதன் முன்னேற மனக்கிளர்ச்சி உந்துதல் வேண்டும். அப்போதுதான் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னாள் ராமேஸ்வரம் தீவாக இருந்தது. அதனை தமிழ்நாட்டுடன் இணைத்து போக்கு வரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்ததால் ஒரு பாம்பன் கடல் பாலம் உருவானது. அதேபோன்று தான் எந்த திட்டமும் செயல் படுத்த மன ஆர்வம் வேண்டும். ஒருவனுடைய வெற்றிபயணம் அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்திப்பதில் அடங்கும். உங்கள் நடை முறைகளை மாற்றினால் உங்கள் எண்ணங்களை மாற்றலாம். எந்த வெற்றியும் ஒருவனுடைய குறிக்கோளின் முடிவாகாது. மாறாக அவனுடைய முயற்சிகளின் அடிகள் தான் முக்கியமாகும். ஜமைகா ஒலிம்பிக் ஓட்ட வீரர் ஹுசைன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விசில் அடிப்பதிற்கு முன்பே ஓட எத்தநித்ததால் அந்த போட்டியில் ஓடும் தகுதியினை இழந்தார். அனால் தான் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்வேன் என்று சபதம் எடுத்து ஓடி வெற்றி பெட்டதோடு மட்டுமல்லாமல் நானூறு மீட்டர் ரிலே ஓட்டபந்தயத்தில் 37.04 வினாடி எடுத்து புதிய சாதனைப் படைத்தார். ஆகவே போல்ட் வெற்றிபெற எடுத்துக் கொண்ட முயற்சியே மேலானது.

உங்களுடைய வெற்றிக்கான முயற்சிகளுக்கு நேரம், காலம் பார்த்து காலவரையின்றி காத்திருக்க வேண்டாம். எண்ணிய உடனே செயலில் இறங்க தயக்கம் காட்டக் கூடாது. உலகில் வெறுப்பு , யுத்தம் , சாவு, நோய், பிணி, தனிமை,இழப்பு இன்னும் பல தடங்கள் நம்மை எதிர் நோக்கும். அவைகளை எதிர் கொள்ளுவதே வெற்றியினைக் கொடுக்கும். ஒரு மல்லிகை செடி வளர்க்க ஆசைப்பட்டு செடி வாங்கி வந்து தொட்டியில் நட்டு தண்ணீர் ஊற்றிய பின்பு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டால் அந்த செடி வாடி விடுமல்லவா? அதேபோன்று தான் முயற்சியில் பல சங்கடம் இருக்கின்றது என எண்ணி செயலில் இறங்காமல் வாழா இருக்கக்கூடாது. உலக மிடில் குத்துச் சண்டை வீரர் ரேயிடம் 2001 ஆம் ஆண்டு ஒரு நிருபர், 'எவ்வாறு எதிரி விட்ட அதனை குத்க்களையும் தாங்கினீர்கள்' என்று கேட்டார். அதற்கு ரே சொன்னார், 'பந்து அடிக்க அடிக்கத்தான் மேலே எழும் அதுபோன்று தான் நானும் அடி வாங்கி அடி வாங்கி ரோசப்பட்டு ஆக்ரோசமாக விட்ட குத்தில் எதிரியினை வீழ்த்தினேன்' என்று. அதேபோன்று தான் முயற்சிகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் தனக்கு ஏற்படும் முடிவு என எண்ணாமல், அந்த இடர்பாடுகள் தனது வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் என்று எண்ணி செயலில் இறங்கினால் வாழ்வின் காலச்சக்கரம் சுழல்வது மிகவும் எளிதாகும் என்றால் மிகையாகாது!

சிறந்த 25 பொன்மொழிகள்!!!


                                             சிறந்த 25 பொன்மொழிகள்!!!

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

புகையில்லா புதுவாழ்வு!

                                                புகையில்லா புதுவாழ்வு!

ஒரு மிதமான பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள்.

புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.
புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்ச...ுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.

சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.
''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார்.
பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.

ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!


என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?


புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான் இந்த வெண் சுருட்டுகள்!

உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுபடி ஒரு நாளைக்கு 20 வெண் சுருட்டுகள் வீதம், 20 வருடங்களுக்கு தொடர்ந்து புகைத்தால் நுரையீரலில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட ஒரு கணிப்புதான்! ஆனால் இப்போது காலம் மாறி கிடக்கும்போது, பத்து வருட அளவிலேயே பெரும் கேடுகள் நிகழ்ந்து விடுகின்றன. முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். ஒவ்வாமை, தும்மல், சளித் தொந்தரவுகள், இடைவிடா இருமல், இழுப்பு போன்றவை வரும். பிறகு இது ஆஸ்துமாவாக, மூச்சிரைப்பாக மாறும். சிலருக்கு காசநோயும் வரலாம். இவற்றின் தொடர்ச்சியாக நுரையீரல் புற்றுநோயும் வரலாம். இது விளையாட்டான செயல் அல்ல. கடும் விளைவுகளில் சிக்கிக்கொண்டு சிதறுண்டு போவதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்து நம்மை அழித்து விடும். பிறகு பாதிக்கப்படுவது இதயம். இதயத்தின் ரத்தக் குழாயில் நச்சுக்கள் படியும்போது இதயத்தில் சுவர்கள் தடித்து வீங்கி, ரத்தக்குழாயின் அளவு சுருங்கி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

சுருங்கச் சொன்னால் சுத்தமான குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் இரண்டறக் கலப்பது போலத்தான் இங்கும் நடக்கிறது. இதயத் தமனியின் வீக்கம், நுரையீரல் நீர்க்கோவை, இதயத் தசைகளின் செயலிழப்பு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் மூச்சு மண்டல - இதய செயலிழப்பும் ஒரு சேர ஏற்பட்டு அது உயிரை உடன் பறித்து விடுகிறது. புகைப்பவர்கள், தேநீர் குடித்துக்கொண்டே புகைக்கும்போது பசி உணர்வு இல்லாமல் போகிறது. இப்படி தொடர்ந்து வினைகள் நடக்கும்போது எதிர்வினையாக குடற்புண்ணும், குடற் சுருக்கமும் ஏற்பட்டு பசி இல்லாமல் போகிறது. இந்நிலை நீடித்தால் குடற்புற்று நோய் வரும். இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியில் ஊதிய பிறகு மனம் முழுவதாக நிறைவடைவதில்லை. மூளையின் முன் பக்க செல்கள் வேதிப் பொருட்களை தொடர்ந்து சுரந்து மீண்டும், மீண்டும் புகைக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன. இல்லை என்றால் ஒரு விதமான பயம் - பதட்ட உணர்வு நிலைக்கு அழைத்து செல்கின்றன. இந்த நரம்பு சார்ந்த வேதிகளின் அதாவது 'கார்ட்டிசால்', 'அட்ரீனலின்' போன்றவை பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன. இல்லை என்றால் மனம் குழம்பிய நிலையை தற்காலிகமாக தோற்றுவித்து விடுகின்றன. இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாத மனிதன் மீண்டும் அந்த நெருப்பை பற்றவைத்து விடுகிறான். அதே நெருப்பிலேயே வெந்தும் சாகிறான். மன உறுதி, தியானம், உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, சுயக் கட்டுப்பாடு, யோகா போன்றவற்றால் மட்டும்தான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும். புகை பிடிக்காமல் இருந்தால் எப்போதும் நிம்மதி கிடைக்கும். அந்த பழக்கத்திற்கு அடிமையானால், அதற்கு என்றென்றும் அடிமைதான். எதற்கும் அடிமையாகாமல் இருக்க புகையில்லா, விழிப்புணர்வு நாளில் புது உறுதி ஏற்போம். புகையை அடியோடு மறப்போம்.
பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டம்.....

இந்திய சுதந்திரப் போராட்டம்.....
 
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும்.

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்ற அதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில்பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு. பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான்.

நெப்போலியனையே கடற்ப்போரில் தோற்கடித்த ஆங்கிலப் படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர். 50 கோடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்தது.

ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெறி ஆகும். 1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். ஆத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள்துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி - பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி - பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர். கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில்முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.*

இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்ககள். ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும் சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.**

(* வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85) (** மேற்படி., பக்கம்.63)

மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர எழுச்சியை ஊட்டினர். இதனை வீரசாவர்க்கர், 1857-இல்…தேசயாத்திரை செய்வதாக கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகசியமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான உறைகள் வெகு சுதந்திரமாக் கைக்கொள்ளப்பட்டன.

அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவரப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்*. -என்று வியந்து தன் நூலில் வடித்துள்ளார்.

பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர்.

(* மேற்படி, பக்கம். 63-64)

அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அவமாப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர்.அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.

அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! - என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.*

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.** நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

(* ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10)
(** B.L.Grover, S.Grover, A New Look at Modern Indian History, P665)


பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. அதில் கைதான - கொல்லப்பட்ட - தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர். முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.- திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.
இஸ்லாமியர் நடத்திய அரசுகள் - அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர் இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுதான் காரணமாகும். இதில் தப்பிப் பிழைத்த ஒரு சில செல்வந்தர்கள் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டனர். அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக - கூலிகளாக - ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம்

இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது. இது பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர வேண்டும். அது காலத்தின் தேவை.

ஏனென்றால் இன்றும் இஸ்லாமியரின் வளர்ச்சியை இம்மண்ணில் தடுக்க, அவர்களைப் பொருளாதரத்தில் வீழ்த்துவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்களது நோக்கம் கோவை போன்ற இடங்களில் நிறைவேறி வந்துள்ளதையும் காணலாம்.
இவ்வாறு இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போரான சிப்பாய் கலகம் உருவாக உத்வேகம் அளித்தவர்கள் - அக்கலகத்தை தங்கள் பிரச்சாரங்கள் மூலம் சுதந்திரப் போராட்டமாக மாற்றியவர்கள் - அப்போராட்டத்தில் இழப்புகளுக்கு ஆளானவர்கள் பெரும்பான்மை முஸ்லிம்களே என்பது வீரசாவர்க்கர் போன்றோர் தரும் வாக்கு மூல உண்மையாகும்.


ஒரு பிடி மண்
பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 -இல்-பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.


1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக்  காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்.-என்று பகதுர்ஷா
ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.


இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், "என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.


பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது. 
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும்.அவனை முடித்து உய்pரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம்.- என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.*
தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும்ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு - போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.


... ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.**
(* காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர் பக்கம், 7., ** வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம்,58.)


இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.


...ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 99.


ஆனால் மே 10-ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமைiயாக இறங்கினர்.


தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.
மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். ஒரு நாள் காலை... காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.



ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே... பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு... இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து...)


பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்! (கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு ...


ஹட்ஸன்: உமது கண்களில் என்ன... நீர் வற்றி விட்டதா?


பகதுர்ஷா: ஹட்ஸன் ... அரசர்கள் அழுவதில்லை! (என்று பெருமிதத்துடன் கூற... தலை குனிந்த வாறு வெளியேறுகிறான் ஹட்ஸன்)*


அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்... உடம்பிலிருந்து துண்டாய்! பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.


* Kasim Rizwi, The Great Bahadur Sha Jaffer, P.10.


சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது. "என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்." - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.


கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 296-297.


தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,* அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்! - என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே ... ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(* அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)

ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்!....

ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்....

 உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள அகர் மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள ஓர் அமைப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் 150 ரூபாய்க்கு மேல்...’ என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்?
 ஒரு கிலோ அகர் எண்ணெய் ஒரு லட்சம் ரூபாய் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அது என்ன அகர் எண்ணெய்?
உலகிலேயே மிக விலை உயர்ந்தது அகர் மரம். சந்தன மரத்தைவிட சுமார் 10 மடங்கு சந்தை மதிப்பு கொண்டது. இன்றைய சந்தை விலை நிலவரப்படி 1 கிலோ அகர் மரத்தின் விலை தரத்தைப் பொறுத்து 50 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரையும், 1 கிலோ அகர் எண்ணெயின் விலை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாக்கும் அதன் தரத்தைப் பொறுத்து விற்கப்படுகிறது. இந்த மரத்திலிருந்து 500 வகையான வாசனைத் திரவியங்கள், அகர் பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும், மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

 அகர் மரம் வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து, அகர் கன்றுகளைப் பயிரிட வைத்து, உரங்கள் மற்றும் தேவையான உதவிகளை பைசா செலவின்றி இலவசமாகச் செய்து வருகிறது, கர்நாடகாவைச் சேர்ந்த வனதுர்கி என்கிற அமைப்பு. தவிர, மரங்கள் வளர்ந்த பிறகு, அவற்றை நல்ல விலைக்கும் வாங்கி சந்தைப்படுத்துகிறார்கள்.
 இந்த அமைப்பின் நிறுவனர் 32 வயதான தர்மேந்திராவிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரை, பரம்பரையாக விவசாயம்தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்குச் சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வேளாண்மை சார்ந்த புதிய உத்திகளையும், தொழில் நுட்பங்களையும் கற்று புது ரகச் செடிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி, ஒருமுறை இந்தோனேஷியாவிற்குச் சென்றபோது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். இதைப் பார்த்த எனக்கு, நம் நிலத்திலும் அகர் மரம் பயிரிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, முதலில் குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து எங்கள் சொந்த எஸ்டேட்டில் பயிரிட்டோம். செலவில்லாமலேயே நல்ல வருமானம் கிடைத்தது. சந்தன மரங்களின் வேர்கள் ஒட்டுண்ணித் தன்மை கொண்டவை. இதனுடன், அகர் மரத்தை ஒப்பிட்டால் சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கக் கூடிய வருமானத்தை, அகர் மரம் வளர்க்க ஆரம்பித்த 8 லிருந்து 10 ஆண்டுகளுக்குள் கொடுக்க ஆரம்பித்துவிடும்.
நம் தென்னிந்தியாவில் அதிக விவசாயிகள் இருந்தாலும், அகர் மரம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அதனால், இது குறித்து நம் விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வந்ததால், வனதுர்கி அமைப்பை ஆரம்பித்து 30 பேர் கொண்ட எங்கள் அமைப்பினருடன் சேர்ந்து செயலில் இறங்கிவிட்டேன். அன்றிலிருந்து, இன்றுவரை இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அகர் மர வளர்ப்பைப் பற்றிக் கற்றுக்கொண்டும், குறைந்த விலையில் செடிகளை வாங்கிக்கொண்டும் சென்றுள்ளனர்.

ஒரு அகர்மரக் கன்றை 50 ரூபாக்குக் கொடுக்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலேயே அதிக அகர் மரப் பண்ணைகள் வைத்திருப்பதும், தென்னிந்தியாவில் அகர் மர வளர்ப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எங்கள் வனதுர்கி அமைப்புதான். அகர் மரத்தின் பூர்வீகம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இம்மரத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. அகர் மரங்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இம்மரம் நம் நாட்டின் கலாச்சாரத்துடனும், இறை நம்பிக்கையுடனும் ஒன்று கலந்திருக்கின்றது.

இம்மரத்தை விவசாயிகளுக்கு எங்கு விற்பது, எப்படி சந்தைப்படுத்துவது என்ற கவலை தேவையில்லை.ஏனென்றால், நாங்களே நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். அகர் மர வளர்ப்பிற்கு முக்கியமானது பொருத்தமான தட்பவெட்ப நிலைதான். பலதரப்பட்ட மண் வகைகளில் வளர்ந்தாலும் இயற்கை மண் வளம் மிக்க காட்டுப் பிரதேசங்களில்தான் நன்றாக வளரும். ஆண்டிற்கு 125 -750CM (சேன்டி மீட்டர்) வரையிலான மழையளவுள்ளும், கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1,500 மீட்டர்கள் உயரமுள்ளதுமான பிரதேசங்கள்தான் அகர் மர வளர்பிற்கு ஏற்றவை" என்று, அகர் மரம் குறித்த பல்வேறு தகவல்களை ஆர்வமாக நம்முடன் பகிர்ந்துகொண்டார் தர்மேந்திரா.

அகர் மரம் பயிரிட்டபின், அறுவடை வரையிலும் விவசாயிகளுக்கு எவ்விதச் செலவையும் கொடுப்பதில்லை. சிறப்பான கவனம் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியமும், சிரமமும் ஏற்படுவதில்லை. இந்த மரங்களின் மெல்லிய இலைகள் உதிர்ந்து, அவைகளே மரங்களுக்கு இயற்கை உரமாகி விடுகின்றன. கர்நாடகாவில் மட்டும் 3,600 அகர் மரப் பண்ணைகள் உள்ளன. நம் தமிழக விவசாயிகள் அகர் மரத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அகர் மர வளர்ப்பைக் கற்றுக்கொடுக்கும் வனதுர்கி அமைப்பின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், விவசாயிகளையும் தன்னுடைய அமைப்பில் பங்குதாரர்களாக்கிக் கொண்டு, அவர்களின் விளைபொருட்களை வாங்கிக்கொள்ள முன்கூட்டியே ஒப்பந்த முறையும் போட்டுக்கொள்கிறது. இதற்காக 10 வருட அக்ரிமெண்ட் முறையும் உண்டு.

இந்தச் சங்கம்,விவசாயிகளுக்கு மருத்துவ இன்சூரன்சும் செய்துகொடுத்துள்ளது. அகர் மர வளர்ப்பு பற்றி மட்டுமல்லாமல், புதிய ரக விவசாய முறைகளையும், ஜீரோ பட்ஜெட் முறைகளையும் இலவசமாகக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். விவசாயத்திற்குத் தேவையான உரங்களை ஆர்கானிக் முறையில் இந்த அமைப்பினரே தயாரித்து இலவசமாகக் கொடுக்கின்றனர். இம்மரங்கள் மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், வாலோஸ் ஆகிய நாடுகளிலும் வளர்கின்றன.

சந்தன மரம் வளர்ப்பதற்கு வழங்குவது போலவே, அகர் மர வளர்ப்பிற்கும் மத்திய அரசு 75 சதவிகிதம் மானியத்தை ஆயுஷ் துறையின் மூலம் வழங்குகிறது. மேலும் மானியம் வழங்கும் வழிமுறைகள் பற்றி மற்ற துறைகளிலும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனதுர்கி அமைப்பு மலைவாழ் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மருத்துவச் செலவு மற்றும் படிப்புச் செலவுகளைப் பார்த்து வருகிறது. இவர்களுக்கு மேலும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.

"அகர் மரங்கள் தோற்றத்தில் சிறிய மரவகையைச் சேர்ந்தவை. விசேஷ கவனம் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. காப்பி, தேயிலை, பாக்கு, தென்னை முதலிய தோட்டங்களில் ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.
அகர் மரங்களுக்கு தேசிய அளவிலும், உலக அளவிலும் எப்போதும் அதிகத் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. மரங்களைச் சுத்தப்படுத்த ஆலையும் வைத்துள்ளோம். இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் விவசாயக் குடும்பங்கள் ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தைப் பெற முடியும்" என்று கண்களில் நம்பிக்கையுடன் பேசி முடித்தார் தர்மேந்திரா.
தொடர்புக்கு: 94484 34561
நன்றி: புதிய தலைமுறை.
http://www.puthiyathalaimurai.com/this-week/348
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

நட்புக்காக என்றும் உங்களுடன்....