Sunday, 9 December 2012

Maldives cancels airport agreement with Indian corporate


Male International Airport
The Republic of Maldives announced on Monday that it would take back the operations of the international airport at Male from the Indian corporate GMR Group with effect from Saturday, cancelling its agreement for a US $ 511 million project. According to media reports, New Delhi threatens that it would consider freezing aid to Maldives, especially a US $ 25 million loan immediately needed by the Maldives for the payment of salaries to its civil servants. But the general public and businessmen in the Maldives feel that it is a big victory for their efforts in freeing their airport from the clutches of the Indian corporate. The agreement with GMR Group was signed in the times of the earlier president, Mohamed Nasheed. 




GMR Group (Grandhi Mallikarjuna Rao Group) is headquartered in Bangalore. Its chairman Grandhi Mallikarjuna Rao is a Telugu entrepreneur coming from Srikakulam in Andhra Pradesh.

New Delhi was long handling Maldivian affairs, including job opportunities in the archipelago, through Andhra connections.

Besides the Male International Airport, the GMR Group in engaged in running the operations of Indira Gandhi International Airport, New Delhi, Rajiv Gandhi International Airport in Hyderabad and Sabiha Gokcen International Airport in Turkey. 

Immediately after vested with the operations rights of the Male airport, the GMR Group increased the airport tax and took over the duty free trade, including the alcohol trade, from local businessmen, who view the Indian trade approaches as unsophisticated, arrogant and naked in greed.

The ways of business were too obvious to invite local resistance.

A booklet in Dhivehi, appearing a couple of months ago and widely circulated among the local people narrated the native efforts and labour of the Maldivian people in building the international airport from a World War II airstrip of the British. 

At a time when no one believed that a passenger aircraft could land in the atolls of tiny islets, the first president of the second republic of the country, Mr Ibrahim Nasir proved in the 1960s that it could land. 

Two adjacent islets were joined together by the labour of the Maldivian people. The president sat next to the pilot in the first flight that came from Colombo and landed at the airport to cast fears aside. The airport is today named after him, as Ibrahim Nasir International Airport.

The booklet questioned the wisdom of the Maldivian government today in handing over the airport to the corporate of a country that had never contributed anything in opening up the archipelago to the outside world.

The nexus between the Indian High Commission, especially the Indian High Commissioner in Male and the GMR Group was another irritant widely debated in the country.

In early November, the Spokesperson of the President’s Office of the Maldives, Abbas Adil Riza described the Indian High Commissioner D.M. Mulay as a “traitor and enemy of the Maldives and the Maldivian people.”

After the announcement of the Maldives government last Tuesday of its intention of cancelling the agreement with GMR Group, New Delhi was quick in considering the transfer (or promotion) of the present High Commissioner to New York as Consul General and the appointment of Rajiv Shahare as the new High Commissioner for the Maldives.

The GMR Group, as a Multinational Corporate of Singapore connection, has filed a case in the High Court of Singapore against the cancellation of the agreement and the Singapore High Court on Monday issued an injunction against the Maldivian government decision.

The injunction prompted President Mohamed Waheed’s Special Advisor Dr Hassan Saeed, Defense and acting Transport Minister Mohamed Nazim and Home Minister Dr Mohamed Jameel to call a press conference on Monday shortly after midday, reported Minivannews of Maldives.

“The government remains firm and committed towards implementing its decision to terminate the agreement. We will not reconsider it,” said Maldivian Defence Minister Nazim, adding that the government would re-take the airport on Saturday and would give it to Maldives Airport Company Limited (MACL) to run the operations.

“This is a sovereign country. We have given them a sovereign guarantee. That means the government will compensate for their damages. An injunction cannot be issued like this to a sovereign state,” said presidential advisor Saeed, commenting on the Singapore High Court injunction.

According to spokesperson of the International Aviation Transport Authority (IATA), it was the organization’s understanding that the airport owner “remains unchanged–it is still the Maldives government. What is changing is the operator of the airport.”

The Civil Aviation Authority (CAA) of Maldives has informed GMR that it would withdraw the operator’s aerodrome certificate at 23:59 on December 7 (Friday) and Maldives immigration has halted the work permit renewal of people associated with GMR project.

Opponents of the government move, including the former president Naseem, say that this is a breech of international law on the part of Maldives and this will affect direct foreign investment in future. 

Like the affairs of the island of Sri Lanka, the Maldivian affairs too are entangled amidst the contentions of the West, India and China. In addition, Maldives also has connections with the forces of the Islamic world. The local entrepreneurship of the Maldives too has many shady connections.

On the part of India, it has lost its credibility and moral leadership of the region with the role it played and continues to play in the genocide of Eezham Tamils. This subconsciously operates and will continue to operate against Indian interests in the region, commented political observers in the region. 

The Indian media reacting to the developments in the Maldives, fail to tell the Indian public that to what extent the sentiments unfolding in the Maldives are a latent result of the policy followed by India in grooming Rajapaka regime and coupling the Maldivian regime along with it, the observers commented further. 

Related Articles:
11.09.12   Blake visits Maldives as the country threatens to leave Comm.. 
24.04.12   Militarisation of southern South Asia centres-around Sri Lan.. 
16.02.12   Self-denial of heritage in Maldives sends message to Establi.. 
13.12.11   China announces Indian Ocean naval base in Seychelles 
17.11.11   China timed SAARC summit to open embassy in Maldives 
28.09.11   Regimes in Sri Lanka, Maldives, forge questionable alliance 
22.09.11   Discussions in Geneva show world plunging into ‘State Anarch.. 
22.08.11   It is not mere corruption, but militarisation of corruption .. 
23.06.11   Eezham question gets entangled in competition of SCO and NAT.. 
07.05.11   Blake’s visit follows Maldives ditching UN panel report 

மனித உரிமைகள் தினம்(Human Rights) -ஒரு பார்வை


 சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். 

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதும் அல்ல. எனவே ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 

இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

டிசம்பர் 10 என்ற இதே நாளை 1950ம் ஆண்டிலிருந்து 'சர்வதேச மனித உரிமைகள் தினமாக' அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தில் பிறக்கும் எல்லா மனிதர்களும் சமமான உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிக்கின்றனர் என்ற உண்மையை தான் இந்த நாளில் உலகம் உரத்து கூற வேண்டியது. 

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்த தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமைகள் சாசனம்' 30 உறுப்புரைகளைக் கொண்டது. 

1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். 

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. 

4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. 

5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை 

7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள். 

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை. 

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை 

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். 

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு. 

15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும். 

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. 

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.

அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

1979லிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிக்க தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது.

1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது.

நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2, 3 மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் அதிகமாக இருந்தது.

இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சமத்துவமற்ற நிலை, வழக்கு ஆதாரம் இல்லாமல் கைது செய்தல், காணாமல் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். முழு உரிமைகளும் அது பற்றிய விழிப்புணர்வு தேவை.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

நோபல் தமிழர்’ டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்அவர்களுடன் நேர் காணல்!!



இன்று நம் இந்தியாவுக்கு பெருமை இவரால் என்று சந்திக்கும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ளும் பெயர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணன் – ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1952ம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்த இவர் மூன்றாவது வயதில் குஜராத்தில் உள்ள பரோடாவிற்கு தந்தையுடன் சென்று அங்குள்ள ஜீசஸ் மேரி கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 1976-ம் ஆண்டு ஓகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில், பி.எச்.டி. பட்டம் பெற்றார்.
இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையைத் துவக்கி,கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1978ல் இளநிலை உயிரியல் துறையில் (Biology) இணைந்தார்.
மவுரிசியோ மாண்டல் என்பவருடன் ஆராய்ச்சியில் இணைந்தவர் 1996-ம் ஆண்டு யூடா பல்கலைக்கழத்தில் உயிர் வேதியியல் (Bio Chemistry) துறை பேராசிரியராகச் சேர்ந்தார். முதுநிலை ஆராய்ச்சியாளராக இங்கிலாந்து Medical Research Council (MRC) ஆய்வகத்தில் ஆர்.என்.ஏ.இ (ரிபோ நியூக்ளிக் அமிலம்)வில் உள்ள புரோட்டீன்கள் குறித்த ஆய்வில் இறங்கினார்.

செல்லில் மிகச்சிறிய மூலக்கூறான ‘ரிபோசோமின்’ சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வை அங்கு முடித்தார். அச்சிறப்பிற்குரிய ஆய்வுக்குத்தான் நோபல் பரிசு அவரைத் தேடி வந்திருக்கிறது.
இவருடன் இதே ஆய்வை மேற்கொண்ட தாமஸ் ஸ்டேய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடாயோநாத் ஆகியோரும் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களின் தந்தை, தாய் இருவருமே விஞ்ஞானிகள். பரோடாவில் பயோகெமிஸ்டிரி பேராசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மூளை வளர்ச்சி குறைவதற்கு காரணங்கள் மற்றும் அவற்றைச் சரி செய்வது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள். மேலும் இவரின் துணைவியார் வீராரோஸ்பெரி, குழந்தைகள் புத்தக எழுத்தாளர். 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஒரு மகன் திரு. இராமன் (இசைக்கலைஞர்). ஒரு மகள் தான்யா (மருத்துவர்).

அறிவியல் குடும்பத்தில் வளர்ந்ததால் அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது என்றாலும் பெற்றோர்கள் என்னை மருத்துவராகத்தான் பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் நான் இன்று ஆராய்ச்சியாளராகி நோபல் பரிசை பெற்றிருப்பதை எண்ணும்போது நான் பெரிய அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன் என்று சொன்ன நோபல் பரிசு சாதனையாளர் டாக்டர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுடன் இனி நாம். . .

ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு நோபல் பரிசு பெறுவோம் என்று தாங்கள் நினைத்தது உண்டா?
விஞ்ஞானிகள் எவரும் நோபல் பரிசால் கவர்ந்திழுக்கப்பட்டு ஆராய்ச்சித் துறைக்கு வருவதில்லை. ஆராய்ச்சித் துறைக்கு வருபவர்கள் சில தீர்க்கப்படாத கேள்விகளுக்கு விடைகாண வேண்டும் என்கிற உத்வேகத்தில் தான் வருகிறார்கள். அதற்குப் பின்பு தொடர்ச்சியாக ஆராய்ச்சியிலேயே தன்னை முழுமையாக அர்ப் பணித்து விடுகிறார்கள். “உங்களுக்கு வெகுமதி கிடைக்கும் என நினைத்து ஒரு செயலை செய்தீர் கள் என்றால் அதில் வெகுமதி கிடைக்காதபோது தோல்வியும் அவமானமுமே மிஞ்சும். எனவே வெகுமதி கிடைக்கும் என்று எந்தச் செயலையும் எந்தத் துறையையும் தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இருக்கும் துறையில் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.”

எந்தச் செயல் உங்களை ஆராய்ச்சித் துறைக்கு அழைத்து வந்தது எனக் கருதுகிறீர்கள்?
என் தாய் தந்தை இருவரும் விஞ்ஞானிகள் என்பதனால் அந்த தாக்கம் எனக்குள்ளும் ஏற்பட்டது. என் மாணவப் பருவத்தில் தேசிய அறிவியல் திறனை அறியும் தேர்வு எழுத என் தாய் என்னை ஊக்கப்படுத்தினார். இளம் வயதில் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை அல்லாது அறிவியல் துறையைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த தேசிய அறிவியல் திறன் தேர்வு (National Science Talent Search Exam) முயற்சி தான் என்னை இந்த ஆராய்ச்சித் துறைக்கு கொண்டுவரச் செய்தது. ஆனால் தற்பொழுது இந்தத் தேர்வு பொறியியல் மற்றும் மருத்துவத் துறைக்கு விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இது தேவையில்லை. காரணம் இத்துறைகளுக்கு தானாகவே திறமையுள்ளவர் கள் வந்து சேர்கிறார்கள். எனவே ஆராய்ச்சித் துறைக்கு மட்டுமே இத்தேர்வு இருப்பது நல்லது.

அவரவர் தேர்ந்தெடுத்த துறையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு அவசியமா?
தாய் தந்தையின் ஊக்கம் ஒரு மாணவன் தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதிக்க பெருமளவு காரணமாகிறது. வீட்டுப்பாடங்கள் போன்ற திணிப்புகள் அதிகம் இல்லாமல் தகுந்த ஆலோசனைகளை தகுந்த நேரங்களில் அவர்கள் தந்து உதவிடும்போது மாணவர்கள் சாதித்து விடுகிறார்கள்.

இடைவிடாத ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் நீங்கள் நேரத்தை எப்படி பகிர்ந்து கொள்கிறீர்கள்?
நானொரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான்கு சக்கர வாகனம் இல்லை. செல்போன் உபயோகிப்பது இல்லை. நெடுந்தூரம் நடந்து செல்வது, மிதிவண்டியில் செல்வது, இசை கேட்பது, எப்பொழுதாவது படம் பார்ப்பது இவைதான் என் பொழுதுபோக்காக இருக்கிறது. தற்பொழுது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள அமைதியான சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் ஆராய்ச்சியின்பால் கால நேரம் மறந்து என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது.

உங்கள் ஆராய்ச்சி பணிக்கு மத்தியில் நண்பர்கள், பொது வாழ்க்கைக்காக நேரம் ஒதுக்க முடிகிறதா?
என்னுடன் பணிபுரியும் விஞ்ஞானிகள், மாணவர்கள், பள்ளிக்கால நண்பர்கள் என எனக்கு குறைந்தளவு நண்பர்களே உள்ளார்கள்.எப்போதாவது அவர்களை சந்தித்து உரையாடுவது உண்டு. தென்னிந்திய, குஜராத் உணவு வகைகளை நான் தயார் செய்து அதனை நண்பர்களுக்கு பரிமாறி மகிழ்வது உண்டு.

‘ரிபோசோம்’ ஆராய்ச்சியில் உங்களுக்கு ஆர்வம் வரக்காரணம்?
என்னுடைய முனைவர் பட்ட படிப்பு முடிந்ததும் முதுமுனைவர் பட்டத்திற்கு (Post Doctoral Fellow) யேல் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் பீட்டர் மோரின் ‘ரிபோசோம்’ ஆராய்ச்சித் திட்டத்தில் சேர்ந்தேன். அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக பணி செய்து கொண்டிருந்த போது ‘ரிபோசோமில்’ ஆராய்ச்சி செய்வது என்பது மிகச்சிறந்தது என்பதை உணர்ந்தேன். எனவே மேலும் மேலும் ஆராய்ச்சி களை அத்துறையிலேயே செய்ய ஆரம்பித்தேன்.

உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து . . .
‘நோபல் பரிசு’ வெற்றிக்கு பலர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்றாலும் 30எஸ் ரிபோசோம் ஆராய்ச்சியில் 1999லிருந்து 2001 வரை என்னுடைய ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய மாணவர்களைச் சொல்லலாம்.
இதனால்தான் இன்றைக்கு இந்த ஆராய்ச்சி சாத்தியமானது என்று சொல்லுமளவு ஏதேனும் செய்தி இருக்கிறதா?
தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம்தான் எல்லா வெற்றிக்கும் காரணம். எக்ஸ்-ரே கதிர் வீச்சை உருவாக்கும் திறன் தற்பொழுது நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் எக்ஸ்-ரே மூலம் படிகத்தை ஆய்வு செய்யும் திறனும் நன்றாக வளர்ந்துள்ளது. இந்த படிக அமைப்பை மிகத் துல்லியமாக கணிக்க புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கருவிகள், கணினி மூலம் அதன் மென்பொருளைக் கொண்டு படிகத்தை ஆய்வு செய்ய உருவாக்கப் பட்ட மென்பொருட்கள், செல்லில் உள்ள ரிபோசோமைத் தனியாக பிரித்தெடுக்கும் திறன், படிகத்தை நுண்ணியமாக கண்டுபிடிக்கும் திறன் ஆகியவைகள் என்னுடைய கண்டுபிடிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடத்தில் உங்கள் ஆராய்ச்சி பணி அமைந்தது குறித்து?
நான் அமெரிக்காவில் இருக்கும் பொழுது யூடா பல்கலைக்கழகத்தில் உள்ள என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் மிகவும் சந்தோசமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் ரிபோசோம் ஆய்வு என்பது கடினமானது. அந்த ஆய்வை என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் செய்தால் பல வருஷங்கள் ஆகும் எனக் கருதினேன். ரிபோசோம் ஆராய்ச்சியை விரைவில் முடிக்கக்கூடிய சிறப்பான ஆய்வுக்கூடம் எது வென்று தேடியபோது இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம் என அறிந்தேன். ஆராய்ச்சிக்கு பண உதவி, சூழ்நிலைகள், ஆராய்ச்சியை தொடர்ந்து பல காலம் செய்வதற்கான அனுமதி அங்கு கிடைத்தது. உடனே ஆராய்ச்சியில் அமர்ந்தேன்.

அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் 3 லிருந்து 5 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்தார்கள். என்னுடைய ஆராய்ச்சிக்கு இன்னும் கூடுதலாக ஆண்டுகள் தேவைப் பட்டதால் நான் அமெரிக்காவில் பெற்ற சம்பளத்தில் 40 சதவீத அளவு குறைந்த ஊதியம் தான் MRC யில் கிடைக்கும் என்று தெரிந்தும் எனது ஆராய்ச்சிப் பணிக்கு கிடைக்கும் நீண்ட கால உதவி ஒன்றை மட்டுமே கருதி இங்கிலாந்து ஆய்வுக்கூடத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பலதுறையினரும் இணைந்து செய்யக்கூடிய ஆராய்ச்சி (Inter disciplinary research) குறித்து உங்கள் கருத்து?
பொதுவாக பெரிய ஆராயச்சி வெற்றிகள் வெவ்வேறு துறைகளில் இருக்கின்ற விஞ்ஞானி கள் இணைந்து செயல்படும்போதுதான் கிடைக் கிறது. அந்த வகையில் ரிபோசோம் ஆராய்ச்சி யில் எக்ஸ்-ரேயில் படிகத்தின் அமைப்பை படிப்பது இயற்பியல் துறையைச் சார்ந்தது. அதன் செயல்பாடுகளை படிப்பது உயிரியல் துறையைச் சார்ந்தது. மேலும் படிக அணுக்களை கண்டுபிடிப்பது வேதியியல் துறையைச் சார்ந்தது. இப்படி மூன்று முக்கியத்துறை விஞ்ஞானி களையும் ஒன்றிணைத்ததின் பலன்தான் எங்கள் ரிபோசோம் ஆராய்ச்சிக்கு கிடைத்த நோபல்பரிசு.

உங்கள் எதிர்காலத் திட்டம்?
ரிபோசோம் ஆராய்ச்சியில் தற்பொழுது தான் ரிபோசோமின் வடிவத்தை கண்டுபிடித்து உள்ளோம். இன்னும் வெவ்வேறு நிலைகளில் ரிபோசோம் எப்படி இருக்கிறது, எப்படி எல்லாம் அதன் செயல்பாடுகள் அமைகிறது என ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது. ரிபோசோம்கள் செயல்படும் போது படங்கள் எடுக்கப்பட்டு இடம் பெயர்தல், தனக்கு தேவை யான சக்தியை எவ்விதம் பெறுகிறது போன்ற பல சிக்கலான கேள்விகளுக்கு விடைகாண வேண்டி யிருக்கிறது.

நீங்கள் மேற்கொண்ட ரிபோசோம் ஆராய்ச்சியின் பலன் குறித்து?
இந்த ஆராய்ச்சியின் மூலம் தான் இந்தப் பொருள் வந்தது என்று நேரிடையாக எதுவும் கூறமுடியாது. ஆனால் நிறைய நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரை களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்னுடன் நோபல்பரிசு பெற்ற தாமஸ் ஸ்டெய்ட்ஸ் என்பவர் ‘ரிப் எக்ஸ்’ என்ற கம்பெனியை நிறுவியுள்ளார். இந்த கம்பெனியி லிருந்து புதியவகையான ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் சந்தைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இதழ் ஒன்றில் வந்த செய்தி உங்களை ஆராய்ச்சித் துறைக்கு அழைத்துச் சென்றதாக அறிந்தோம். இதழ்களின் பணி குறித்து . . .
இதழ்கள் அறிவியல்பூர்வமான கட்டுரை களை கொண்டுவருவது நல்லது. என்ன சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும்? நீங்கள் கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இதுபோன்ற கேள்விகளை வெற்றியாளர்களிடம் கேட்பதை தவிர்த்து சாதிப்புக்குண்டான சூழல், சுற்றியிருப்பவர்களின் ஆலோசனை, சிந்தனைகள் குறித்து கேட்பது தான் ஒருவர் சார்ந்த துறையில் சாதிக்கத் தூண்டும். கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இந்தியாவின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர் களைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். மிகச்சிறந்த திறமையுடன் இருக் கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருக்கிறது.

இயற்பியல் துறையிலிருந்து நீங்கள் உயிர் வேதியியல் துறைக்கு மாறுவதற்கான காரணம்?
நான் இயற்பியல் துறையில் பி.எச்டி. பட்டப்படி முடித்த பின்பு உயிரியல் துறையில் இரண்டாண்டுகள் பட்டப் படிப்பு படித்தேன். இந்தப் படிப்புதான் என்னை இயற்பியல் துறையில் இருந்து உயிரியில் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், துறைசார்ந்த தீர்க்கமான அறிவு பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தது.

உங்கள் வெற்றியின் ரகசியம்?
என் வெற்றியின் ரகசியத்தை இன்னும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் சிலவற்றை உறுதியாகக் கூறமுடியும். ஒன்று அதிர்ஷ்டம், இரண்டாவது வழிநடத்தியவர்கள் திறமை சாலிகள், மூன்றாவது வெற்றி தோல்விகளை கண்டுகொள்ளாது, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, நான்காவது சம்பளம் குறைவானாலும் ஆராய்ச்சியில் வெற்றிகாண முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்த இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம். உடன் பணிபுரியும் மாணவர்கள், ஆராயச்சியாளர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவும் என் வெற்றியின் ரகசியமாக கருதுகிறேன்.

உங்களுடைய ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெறுவதற்கு வேண்டிய தகுதிகள்?
என்னுடன் பணிபுரியும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்தந்தத் துறையில் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் துறைசார்ந்த ஆற்றலுடன் மற்ற துறைகளிலும் ஆற்றலைப் பெற்றிருப்பது நுண்ணிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவும் என்பதால் மேற்கண்ட தகுதிகள் உடை யவர்களை உடன் வைத்துள்ளேன்.

உங்கள் குழு ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் தரும் ஊக்கம் எத்தகையது?
நாம் செய்யும் ஆராய்ச்சி ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமான ஒன்று. ரிபோசோம் குறித்து ஆராய்ச்சியில் வெற்றிபெற்றால் பின்வரும் தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கண்டுபிடிக்கப் படாத நிறைய கேள்விகளுக்கு பதில் தரும் வாய்ப்புகள் அதில் இருக்கிறது என எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பேன்.

ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை?
• நீங்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் குழு மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
• அதிக நபர்கள் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்கிற எண்ணம் தவறானது. ஏனெனில் அதிக நபர்கள் இருந்தால் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
• தேவையானதை மட்டுமே ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சியின் பால் கிடைக்கும் முடிவுகள் எளிமையாகத் தெரியப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும்.

நோபல் பரிசை பெறும் அளவு இந்திய ஆராய்ச்சி யாளர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை?
முதலில் நோபல் பரிசை பெறுவதற்கென்று ஆராய்ச்சிகளைத் தொடரக்கூடாது.
• நோபல் பரிசு மட்டுமே குறிக்கோள் என்று ஆராய்ச்சியைத் தொடர்ந்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது தோல்வியும் விரக்தியும்தான்.
• உங்களுக்கு பிடித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மட்டுமே உங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தும்.
• இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நன்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார் கள். எனவே என் ஆலோசனையாக எதுவும் தேவைப்படாது என்றே கருதுகிறேன்.

இந்தியாவில் ஆராய்ச்சியாளர்களை அதிகம் உருவாக்குவதற்கு நீங்கள் தரும் ஆலோசனை?
• ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
• அதிக நாட்கள் ஆராய்ச்சியை தொடர்வதற் கான நிதியுதவி வழங்கப்படுதல் வேண்டும்.
• 30 முதல் 40 ஆண்டுகளாக இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதற்கு பல்கலைக்கழகங் களுக்கு தந்துவந்த நிதிஉதவி குறைந்து இருக் கிறது. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக் கான நிதியுதவியைக் குறைத்துவிட்டு தேசிய ஆராய்ச்சி கழகங்களுக்கு நிதியுதவியை அதிகப்படுத்தியதனால் பல்கலைக் கழகங் களில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இதனால் இளைய தலைமுறை யினர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் திறனை வளர்த்தால் இன்னும் விஞ்ஞானிகள் அதிகம் உருவாகி ஆராய்ச்சியில் சாதிக்க முடியும்.


முந்தைய நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்...

1. ரவீந்திரநாத் தாகூர் இலக்கியம் 1913

2. சர்.சிவி. ராமன் இயற்பியல் 1930

3. ஹர்கோபின்ந்த் கொரானா மருத்துவம் 1968

4. சுப்பிரமணியம் சந்திசேகர் இயற்பியல் 1983

5. அன்னை தெரசா அமைதி 1979

6. அமர்த்தியா சென் பொருளாதாரம் 1998

7. வி.எஸ். நைபால் இலக்கியம் 2001

8. ஆர்.கே. பச்சோரி அமைதி 2007

தொகுப்பு:மு.அஜ்மல் கான் .

Saturday, 8 December 2012

ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் !!

போராநான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக
போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்

அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.

ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.

அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.

''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (ஹிஜப்) அணிந்து கொண்டாலும் நிகாபை (ணிஃஅப்) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)

ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.

இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.

நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.

பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.

நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.

சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.

நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.

Friday, 7 December 2012

உலகில் ஊழல் குறைந்த நாடுகள்!! ஒரு பார்வை...



உலகில் ஊழல் குறைந்த நாடுகளிலிருந்து ஊழல் கூடிய நாடுகள் வரையான தரவரிசை பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  இதில் உலகில் ஊழல் மிகக்குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் 90 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திற்கு வந்துள்ளன.
176நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஊழல் கூடிய நாடுகளாக சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி இடத்திற்கு வந்துள்ளன.  ஊழல்குறைந்த நாடுகள் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் நான்காம், ஐந்தாம் ஆறாம் இடங்களில் சுவீடன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், ஏழாவது இடத்தில் ஒஸ்ரேலியா, நோர்வே ஆகிய நாடுகளும், 9ஆவது இடத்தில் கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன.

ஜேர்மனி 13ஆவது இடத்திலும் பிரித்தானியா 17ஆவது இடத்திலும் அமெரிக்கா 19ஆவது இடத்திலும் உள்ளன.  ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி பிரான்ஸ், ஒஸ்ரியா, ஆகியன ஊழல் நிறைந்த நாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன. இத்தாலி 72ஆவது இடத்திலும் ஒஸ்ரியா 25ஆவது இடத்திலும், பிரான்ஸ் 22ஆவது இடத்திலும் உள்ளன. 
இலங்கை 79வது இடத்திலும், சீனா 80ஆவது இடத்திலும் இந்தியா 94ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கை 40 புள்ளிகளையும் இந்தியா 36 புள்ளிகளையுமே பெற்றுள்ளன.  பாகிஸ்தான் 139ஆவது இடத்திலும் ரஷ்யா 133ஆவது இடத்திலும் உள்ளன.

ஊழல் குறைந்த நாடுகளில் முதலாம் இடத்தை பிடித்த நாடுகள் 90 புள்ளிகளை பெற்ற அதேவேளை ஊழல் நிறைந்த சோமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 8 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளன.   இந்த ஆய்வில் உலகில் எந்த ஒரு நாடும் 100புள்ளிகளை பெறவில்லை.
டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் அமைப்பு வெளியிட்டிருக்கும் தரவரிசை பட்டியலை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்
http://www.transparency.org/cpi2012/results

என் கருத்து...
அதிகளவில் இந்தியாவில் தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை விட பிராந்திய மற்றும் வட்டார தலைவர்கள் அதிக ஊழல்வாதிகளாகவும் அதே போல் தேசிய அளவை விட நகரங்களில் உள்ள அதிகாரிகள் அதிக ஊழல் மலிந்த வர்களாக இருப்பதாகவும் அக்கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ஊழல் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களே இந்த ஊழல்நிலைக்கு காரணம் இந்தபாதிப்புக்கள் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.நீதி,நேர்மை,நியாயம் என்றமூன்றிற்கு பதிலாக மோசடி,அநியாயம்,ஊழல் என்ற மூன்று கோட்பாடுகள் காணப்படுகின்றது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

இலங்கையில் ‘ ஈழத் தமிழகம்’ !! ஒரு சிறப்பு பார்வை



இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 1961-ம் ஆண்டே ஐ.நா. சபைக்கு அண்ணா கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை அழிக்க நினைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

 இலங்கையில் ‘ ஈழத் தமிழகம்’ அமையாமல் போனதற்கு காரணம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

சென்னையில், ஒகஸ்ட், 12ம் திகதி நடத்தப்பட்ட டெசோ மகாநாட்டில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, சம உரிமை, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்காக அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து அதை நேரில் சமர்ப்பிப்பதற்காக ஸ்டாலின், டி.ஆர்.பாலு சென்றனர். இவர்கள் மூலம் ஐ.நா. சபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை அமைச்சராக இருந்த ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். இது தான் விதண்டாவாதம். தமிழன் உருப்படாமல் போனதற்கு இது தான் காரணம் என திமுக தலைவர்கருணாநிதி தெரிவித்தார்.


தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, திருமாவளவன் நடத்திய மாநாட்டு சுவரொட்டிகளில் இருந்த ´ஈழம்´ என்ற வார்த்தையை காவல் துறையை பயன்படுத்தி அழித்த கருணாநிதி, இன்றைக்கு ´ஈழம்´ என்று கூறிதான் மாநாடு நடத்துகிறார் என்றால் அதற்குக் காரணம், ஈழத் தமிழர் பிரச்சனையை கையில் எடுக்காமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாத நிலை உள்ளதே. இந்த நிலையை ஏற்படுத்தியது நாம் தமிழர் கட்சி. ஈழத் தமிழர் பிரச்சனையால் ஆட்சியை இழந்த திமுக தலைவர் கருணாநிதி, இப்போது அதே பிரச்சனையை கையில் எடுத்திருப்பது இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

போர் நடந்தபோது காயமுற்ற மக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குருதியை காவல்துறையை ஏவி தடுத்து நிறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி. மருந்து பொருட்கள், மண்எண்ணெய் என்று எந்த பொருளும் ஈழத்திற்குச் செல்லாமல் தடுத்தவர் கருணாநிதி. இந்த இடத்தில் நான் ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். ஜெயலலிதா ஆட்சியி்ல் இருந்தபோது, இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதுமில்லை என்றும், குருதி முதல் மண்எண்ணெய் வரை நாட்டிற்கு கொண்டு வருவதில் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை. இதனை பிரபாகரனே என்னிடம் தெரிவித்தார். இப்படி ஆட்சியில் இருந்தால் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஈழத் தமிழர்களை காட்டிக்கொடுப்பதும், ஆட்சி போன பிறகு அரசியலிற்காக ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசுவதும்தான் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..


திமுக தலைவர் கருணாநிதி தனது அரசியலை நிலைநிறுத்திக்கொள்ளவே டெசோ மாநாட்டை நடத்தினார். ஆனால், அவரால் இதற்கு மேல் மீண்டும் ஒருமுறை அவர் தமிழ்நாட்டை ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அப்படி நடக்க நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை கருணாநிதி இருந்தாரென்றால், அதற்கு அவருடைய அரசியல் வலிமையோ அல்லது திறனோ காரணமல்ல, தமிழ்நாட்டு மக்களின் அறியாமையே காரணம்.

இன்றைக்கு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக டெசோ மாநாட்டைக் கூட்டும்திமுக தலைவர் கருணாநிதி, அங்கு தமிழினம் கொன்றொழிக்கப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்திட செய்தது என்ன? தமிழர்களுக்கு எதிராக நடத்திய அந்தப் போருக்கு முழு அளவிற்கு உதவிய நாடு இந்தியா. அதன் ஆட்சிப்பீடத்தில் இருந்த கட்சி காங்கிரஸ், அந்தக் கட்சியின் தலைமையில் இருந்த மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. எனவே இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதற்கு இலங்கை ஜனாதிபதி காரணமென்றால், அதே குற்றத்தை செய்த மத்திய காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோன திமுக தலைவர்கருணாநிதியும் குற்றவாளிகளே.

இன்று ஐக்கிய நாடுகள் சபை தாம் தமிழீழ மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம்இ சிறி லங்காவில் எமது செயல்பாடு சரியாக இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்வதோடு மீண்டும் இவ்வாறு வேறு எங்கும் நடைபெறாமல் இது தமக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்று கூறி நிற்கிறார்கள்.

மிக சாதாரணமாக அவர்கள் அறிக்கைள் விட்டு இருக்கிறார்கள்.
இழந்தவர்கள் நாம் மண் இழந்து தாய் இழந்து மொழி கலாச்சாரம் இழந்து உலகம் முழுவதும் அழைக்கிறோம்! இதற்கு நீதி தரவேண்டும்!

தாய் தந்தை சகோதர சகோதிரிகளை இழந்து மன நோயால் பாதிக்கப்பட்ட இனமாக இருக்கும் எங்களுக்கு இதே ஐக்கிய நாடுகள் சபை நீதி தரவேண்டும்!
நமது மக்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்க வேண்டியவர்கள் நாம் தமிழர்களேவொளிய சர்வதேசமல்ல!

ஆகவே ! இன்று நம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுடன் சேர்ந்து தனி ஈழமே தீர்வு- ஐ நா மன்றமே பொது வாக்கடுப்பு நடத்து' என்று அதற்க்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.அது  உங்களிடம் வரும்போது மறக்காமல் கையெழுத்திட  கேட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்  மு.அஜ்மல் கான் 

கருவிய ல்விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்!!


கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட்கில் ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். 
இவரது மனமாற்றத்தி ற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வச னம்.‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறும ணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத் திருந்த பின்பே -அதாவது
மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.
ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.
இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.
அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி
நன்றி – சமரசம்