Friday, 7 December 2012

இலங்கையில் ‘ ஈழத் தமிழகம்’ !! ஒரு சிறப்பு பார்வைஇலங்கை தமிழர் பிரச்சினைக்கு 1961-ம் ஆண்டே ஐ.நா. சபைக்கு அண்ணா கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை அழிக்க நினைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

 இலங்கையில் ‘ ஈழத் தமிழகம்’ அமையாமல் போனதற்கு காரணம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

சென்னையில், ஒகஸ்ட், 12ம் திகதி நடத்தப்பட்ட டெசோ மகாநாட்டில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, சம உரிமை, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்காக அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து அதை நேரில் சமர்ப்பிப்பதற்காக ஸ்டாலின், டி.ஆர்.பாலு சென்றனர். இவர்கள் மூலம் ஐ.நா. சபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை அமைச்சராக இருந்த ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். இது தான் விதண்டாவாதம். தமிழன் உருப்படாமல் போனதற்கு இது தான் காரணம் என திமுக தலைவர்கருணாநிதி தெரிவித்தார்.


தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, திருமாவளவன் நடத்திய மாநாட்டு சுவரொட்டிகளில் இருந்த ´ஈழம்´ என்ற வார்த்தையை காவல் துறையை பயன்படுத்தி அழித்த கருணாநிதி, இன்றைக்கு ´ஈழம்´ என்று கூறிதான் மாநாடு நடத்துகிறார் என்றால் அதற்குக் காரணம், ஈழத் தமிழர் பிரச்சனையை கையில் எடுக்காமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாத நிலை உள்ளதே. இந்த நிலையை ஏற்படுத்தியது நாம் தமிழர் கட்சி. ஈழத் தமிழர் பிரச்சனையால் ஆட்சியை இழந்த திமுக தலைவர் கருணாநிதி, இப்போது அதே பிரச்சனையை கையில் எடுத்திருப்பது இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

போர் நடந்தபோது காயமுற்ற மக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குருதியை காவல்துறையை ஏவி தடுத்து நிறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி. மருந்து பொருட்கள், மண்எண்ணெய் என்று எந்த பொருளும் ஈழத்திற்குச் செல்லாமல் தடுத்தவர் கருணாநிதி. இந்த இடத்தில் நான் ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். ஜெயலலிதா ஆட்சியி்ல் இருந்தபோது, இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதுமில்லை என்றும், குருதி முதல் மண்எண்ணெய் வரை நாட்டிற்கு கொண்டு வருவதில் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை. இதனை பிரபாகரனே என்னிடம் தெரிவித்தார். இப்படி ஆட்சியில் இருந்தால் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஈழத் தமிழர்களை காட்டிக்கொடுப்பதும், ஆட்சி போன பிறகு அரசியலிற்காக ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசுவதும்தான் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..


திமுக தலைவர் கருணாநிதி தனது அரசியலை நிலைநிறுத்திக்கொள்ளவே டெசோ மாநாட்டை நடத்தினார். ஆனால், அவரால் இதற்கு மேல் மீண்டும் ஒருமுறை அவர் தமிழ்நாட்டை ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அப்படி நடக்க நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை கருணாநிதி இருந்தாரென்றால், அதற்கு அவருடைய அரசியல் வலிமையோ அல்லது திறனோ காரணமல்ல, தமிழ்நாட்டு மக்களின் அறியாமையே காரணம்.

இன்றைக்கு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக டெசோ மாநாட்டைக் கூட்டும்திமுக தலைவர் கருணாநிதி, அங்கு தமிழினம் கொன்றொழிக்கப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்திட செய்தது என்ன? தமிழர்களுக்கு எதிராக நடத்திய அந்தப் போருக்கு முழு அளவிற்கு உதவிய நாடு இந்தியா. அதன் ஆட்சிப்பீடத்தில் இருந்த கட்சி காங்கிரஸ், அந்தக் கட்சியின் தலைமையில் இருந்த மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. எனவே இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதற்கு இலங்கை ஜனாதிபதி காரணமென்றால், அதே குற்றத்தை செய்த மத்திய காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோன திமுக தலைவர்கருணாநிதியும் குற்றவாளிகளே.

இன்று ஐக்கிய நாடுகள் சபை தாம் தமிழீழ மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம்இ சிறி லங்காவில் எமது செயல்பாடு சரியாக இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்வதோடு மீண்டும் இவ்வாறு வேறு எங்கும் நடைபெறாமல் இது தமக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்று கூறி நிற்கிறார்கள்.

மிக சாதாரணமாக அவர்கள் அறிக்கைள் விட்டு இருக்கிறார்கள்.
இழந்தவர்கள் நாம் மண் இழந்து தாய் இழந்து மொழி கலாச்சாரம் இழந்து உலகம் முழுவதும் அழைக்கிறோம்! இதற்கு நீதி தரவேண்டும்!

தாய் தந்தை சகோதர சகோதிரிகளை இழந்து மன நோயால் பாதிக்கப்பட்ட இனமாக இருக்கும் எங்களுக்கு இதே ஐக்கிய நாடுகள் சபை நீதி தரவேண்டும்!
நமது மக்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்க வேண்டியவர்கள் நாம் தமிழர்களேவொளிய சர்வதேசமல்ல!

ஆகவே ! இன்று நம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுடன் சேர்ந்து தனி ஈழமே தீர்வு- ஐ நா மன்றமே பொது வாக்கடுப்பு நடத்து' என்று அதற்க்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.அது  உங்களிடம் வரும்போது மறக்காமல் கையெழுத்திட  கேட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்  மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment