Wednesday 12 December 2012

இன்று உலக அதிஷ்ட தினம் !! ஒரு பார்வை...


இன்று (12-12-12) உலக அதிஷ்ட தினமாகும் என்று, சுவாமிமலை ஸ்தபதி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், அவ்வாண்டின் கடைசி இலக்கத்தை வைத்து, மாதம் மற்றும் தேதியும் ஒன்றாக அமைந்தால், அந்த நாள் அவ்வாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக எண்ணி மகிழ்வர்.




ந்த ஆண்டிலும் இல்லாத வகையில், இன்று, 12.12.12 என, அமைந்த இந்த நாள் பல்வேறு வகையில் சிறப்பினை பெறுகிறது. எண், 12ஐ அடிப்படையாக கொண்டு அமைந்த பல நிகழ்வுகள் நம் வாழ்க்கையிலும், நமது கலாச்சாரத்திலும், இலக்கியத்திலும் அமைந்துள்ள, பல அரிய செய்திகளை, பாபநாசம் அருகே சுவாமிமலை ஸ்தபதி மோகன்ராஜ் ஆய்வு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் ஆங்கிலமே இந்நாளுக்கு காரணமாகிறது. ஆங்கில ஆண்டே, கி.பி.,- கி.மு., என, காலத்தை நிர்ணயிக்கிறது.அவ்வகையில் ஆங்கில மாதமும், 12, புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய புகழ்பெற்ற நாடகத்தில், ஒன்று, 12வது இரவு, அதுபோல தமிழ்வளர்த்த திருமுறைகள், 12, சிதம்பரம் சிவகாமியம்மை பற்றிய பிள்ளை தமிழ், 12, கலிங்கத்து பரணியில் சக்தியின் வடிவம், 12 விதமாக கூறப்படுகிறது.

வராஹி படிம அமைதியில் காணப்படும் வகைகள், 12, சூரிய பகவான் தேரில்வர அவருக்குமுன் சாமரம் வீசிவரும் அப்சரஸ்களின் எண்ணிக்கை, 12, தேவி பாகவதத்தில் ஸ்ரீசக்கர கோட்டைகால், பித்தளை பிரஹாரத்தில் அமைந்துள்ள சக்திகளின் எண்ணிக்கை, 12, காளி தேவிக்கு ஏவல் செய்ய உடன் உள்ள யோகிகளின் எண்ணிக்கை, 12, சூரியனது சக்கரத்தில் காணப்படும் ஆரக்கால்களின் எண்ணிக்கை, 12, சிற்ப கலைக்கு புகழ்பெற்ற ஒரிசா மாநில கொணாரக் சூரியன் கோவிலில் காணப்படும் சக்கரங்களின் எண்ணிக்கை, 12.

இதற்கு முன் நாம் கடந்து வந்த ஆண்டுகள், 10.10.10., 11.11.11., என முன்னோக்கியும், இனிவரும் ஆண்டுகள், 13.13.13, 14.14.14 என, அமையாது என்பதை கருத்தில் கொண்டும், மாதம், 12 உடன் முடிவடைவதால், இந்த, 12.12.12 எவ்வாறு நமது வாழ்க்கையுடன் பிண்ணி பிணைந்துள்ளது.மேலும் ராசிகளின் எண்ணிக்கை, 12. ஒரு மனிதனின் ஜாதக அமைப்பு அடங்கும் கட்டத்தின் எண்ணிக்கை, 12, வைணவ பெருமையை உலகுக்கு எடுத்துரைத்த அந்த ஆழ்வார்களின் எண்ணிக்கை, 12, மாதங்கள், 12, பகல் பொழுது, 12, இரவு பொழுது, 12, பகல் உச்சி, 12, நடுநிசி இரவு, 12, தமிழ் உயிரெழுத்துக்கள், 12. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment