Sunday 30 December 2012

வேற்றுக் கிரக மனித எலும்புகளா ?


மெக்சிக்கோ நாட்டில் நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட 
எலும்புக்கூடுகளால், உலகமே பரபரப்பில் மூழ்கியுள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த எலும்புக்கூடுகளை
 அகழ்வாராட்சி செய்பவர்கள் இன்னும் முழுதாக தோண்டி எடுக்கவில்லை. அதன் மேற்பரப்பை சுத்தம் செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் வேற்றுக்கிரக மனிதர் அமைப்பைப் போன்ற தோற்றமுடைய பல எலும்புக்கூடுகளும் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளது. முதல்கட்டமாக அவற்றை தோண்டி எடுத்து பின்னர் பகுப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மெக்சிக்கோ தெரிவிதுள்ளது. இச் செய்தி வெளியாகிய சில மணிநேரத்திலேயே உலக நாடுகள் பலவற்றில் இருந்து விஞ்ஞானிகள், பகுப்பாய்வாளர்கள் தொல்பொருள் நிபுனர்கள் எனப் பலர் மெக்சிக்கோவுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

இது இவ்வாறு இருக்கையில், இது மனிதர்களுடைய எலும்புகூடுகளாக
இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் பெண்கள் தமது கழுத்து நீளமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில இருப்பு ஆபரணங்களை அணிவது உண்டு. இதேபோல தமது தலை சற்று நீளமாக (நீள் வட்டமாக) இருக்க பண்டைய காலத்தில் சில இன மக்கள், செயற்கையாக தமது மண்டை ஓட்டை வளரவைத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. எமது உடலில் உள்ள எலும்புகளை இம் முறை மூலம் வளைக்க முடியும். மற்றும் நீளமாக்கவும் முடியும். சில இருப்பு அச்சுக்களைப் பாவித்து இவ்வாறு மண்டை ஓட்டை நீளமாக்குவதை இவர்கள் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டிருந்தார்களா ? என்ற கோணத்திலும் ஆய்வாளர்கள் தமது ஆராட்சிகளை நடத்தி வருகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 
மண்டை ஓடுகளில் உறைந்துள்ள இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ வை பரிசோதனை செய்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment