சென்னையின் புறநகர்ப்பகுதியான திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். பஸ் பெருங்குடி அருகே வந்த போது, முன்னால் சென்ற செங்கல் ஏற்றிய லாரி மீது பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த சேகர் (18), மனோஜ் குமார் (18), பால குமாரன் (16), விஜயன் (16) ஆகிய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை விபத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் சென்னைவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பஸ்சுக்குள்ளே இடம் இருந்தாலும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தால் இப்படி தான் போக நேரிடும்...அதுவும் ஸ்டைல் - லா ஒவ்வொரு stop ங்கிலும் இறங்கி ஏறுவது...பஸ் move ஆகி ஒன்றரை கிலோமீட்டர் போகும் வரை அதன் பின்னாலேயே ஓடி பின்னர் ஏறுவது....பஸ்ஸில் வரும் figure களுக்காக பல வகையில் scene போடுவது, சாகசங்கள் செய்வது ....எல்லோரும் ஒரே பஸ்ஸில் வந்தால் கூத்தடிக்க வசதியாக இருக்கும் என்று, இருக்கும் பஸ்சை எல்லாம் வவிடுவது....ஒரே நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்புவது.. இப்படி பல ஒழுங்கீன செயல்கள் குறையும் வரை இப்படி தான் நடக்கும்.பஸ்சுக்குள்ளே இடம் இருந்தாலும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தால் இப்படி தான் போக நேரிடும்...அதுவும் ஸ்டைல் - லா ஒவ்வொரு stop ங்கிலும் இறங்கி ஏறுவது...பஸ் move ஆகி ஒன்றரை கிலோமீட்டர் போகும் வரை அதன் பின்னாலேயே ஓடி பின்னர் ஏறுவது....பஸ்ஸில் வரும் figure களுக்காக பல வகையில் scene போடுவது, சாகசங்கள் செய்வது ....எல்லோரும் ஒரே பஸ்ஸில் வந்தால் கூத்தடிக்க வசதியாக இருக்கும் என்று, இருக்கும் பஸ்சை எல்லாம் வவிடுவது....ஒரே நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்புவது.. இப்படி பல ஒழுங்கீன செயல்கள் குறையும் வரை இப்படி தான் நடக்கும்.
அளவுக்கு அதிகமாக பயணிகளை பேருந்துகளில் ஏற்றுவதும் , PEAK HOUR -சில் அதிகப்படியான பேருந்துகளை இயக்காததுமே இது போன்ற விபத்துகளுக்கு காரணம். அரசு விழித்துக்கொள்ளுமா இனிமேலாவது ?
இளைஞர்கள் இப்படி வீம்புக்கு, வீராப்பு காட்டி, வீர மரணம் அடைவது வாடிக்கையாகி விட்டது. தடுத்து நிறுத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது. கேள்விக்குறியாகிறது வருங்காலாத்தின் இளைஞர்கள் வாழ்க்கை
பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் புத்தக சுமைகளுடன் படிக்கட்டில் தொங்கிச் செல்கின்றனர். பஸ்ஸþக்குள் இடம் இருந்தாலும், மாணவர்கள் படிக்கட்டை விட்டு உள்ளே வருவதில்லை என நடத்துநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நடத்துநர்கள் எத்தனை முறைதான் சொன்னாலும் படிக்கட்டு பயணிகள் கேட்பதில்லை, நெருக்கடியைச் சமாளித்து வாகனம் ஓட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் ஓட்டுநர்கள்.
மாணவர்களின் கவனமின்மை ,நமது குறுகிய (ஆக்ரமிப்பால்) சாலை ,பேருந்து நடத்துனாரின் மனிதாபமின்மை இப்படி பல காரணங்கள் விபத்துக்கு .இனியும் இது போல் நிகழாமல் இருக்க மக்களும் அரசும் விழிப்போடு இருப்பது அவசியம்.
மாணவர்களுக்கு அதிகமான கவுன்சிலிங் பள்ளிகளில் இதைப் பற்றி கொடுக்க வேண்டும்.. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பயணத்தின் ஆபத்தை குறித்து, இன்னும் அதிகமான விழிப்புணர்வுவை அரசாங்கமும், கல்வித்துறைகளும் ஏற்ப்படுத்தி தர வேண்டும்.
பஸ்களுக்கு ஹைட்ராலிக் பிரஷர் கதவுகள் வேண்டும். ஓட்டுனர் அருகில் சின்ன திரை கொண்ட ஸ்க்ரீன் இருக்க வேண்டும். அதில் பின் கதவு, முன் கதவு நன்கு தெரிய வேண்டும். இந்த வசதிகள் இருந்தால் விபத்தை 100 ௦௦% தவிர்க்கலாம்.
மாணவர்கள் பஸ் ஏறும்போது அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்துத் துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை.
ஆக்கம் : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment