Sunday 23 December 2012

க்ளோனிங் மனிதன் தொழில்நுட்பம்!! ஒரு சிறப்பு பார்வை

நமது நாட்டிலும் க்ளோனிங் உயிர் உருவாக்கப்பட்டுவிட்டதுஅது ஒரு கன்று.மறு கன்றுஎருமையின் மறு பதிப்பு.எருமையின் மறு உயிர்ப்புஒரு எருமையின் உயிர்ச் செல்லை எடுத்து உருவாக்கப்பட்ட கன்று அதுஉலகின் முதல் க்ளோனிங் படைப்பு ஆடு, 'டாலிஉருவாக்கப்பட்டு பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டனக்ளோனிங் மனிதனே உருவாக்கப்பட்டுவிட்டதாக பல நிறுவனங்கள் கூறிக்கொள்கின்றன. 

க்ளோனிங் என்றால் என்ன?
மனிதனின் செல்லிலிருந்து செல்லை எடுத்து அதிலிருந்து அதே போன்ற மனிதனை உருவாக்கிவிட்டார்கள்.க்ளோனிங் என்பது பல மட்டங்களில் நடந்து வருகிறதுஒரு செல்லிலிருந்து மறு செல்லை உருவாக்குவதுஒரு உறுப்பிலிருந்து மறு உறுப்பை உருவாக்குவது என்று பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.அவை வெற்றியும் பெற்று வருகின்றனஒரு செல்லிலிருந்து மறு செல்லை உருவாக்கிநோய் காணும் செல்லுக்குத் தீர்வு காணலாம்ஒரு செல்லிலிருந்து ஒரு உறுப்பை உருவாக்கி குறை கொண்ட உறுப்புக்குத் தீர்வு காணலாம்இதற்கெல்லாம் உலகில் ஆதரவு இருக்கிறது.

.ஒரு மனிதனை அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் மனித குளோனிங் தொழில் நுட்பமுறை இன்னும் 50 வருடங்களில் சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மருத்துவ அறிவியலில் நவீன கண்டு பிடிப்பான குளோனிங் முறை, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி சர்ஜான் கர்டன் 1950-ல் தவளையை குளோனிங் முறையில் உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து 1996-ல் டென்மார்க் நாட்டு விஞ்ஞானி 'டோலி' என்ற ஆட்டுக் குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கினார்.
தற்போது இங்கிலாந்து விஞ்ஞானி சர்ஜான் கர்டன் மனித குளோனிங் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு மருத்துவக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் மனித குளோனிங் பற்றி கூறியதாவது:-
1978-ல் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை லூயிஸ் பிரவுனை உருவாக்க உயிரியல் அறிஞர்கள் முயற்சித்தபோது, மக்களிடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுபோன்ற அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மனித குலத்துக்கு கேடானது என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கிய பிறகு மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். காரணம் அந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தின் மூலம் குழந்தை பெற இயலாத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது.
அதேபோல ஒரு உயிரினத்தை அப்படியே அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் குளோனிங் விஞ்ஞான தொழில் நுட்பத்துக்கும் உலகம் முழுவதும் எதிர்ப்பு உள்ளது.
டெஸ்ட் டியூப் தொழில் நுட்பத்தைப்போல குளோனிங் தொழில் நுட்பத்தாலும் மனித குலம் பயன்பெறும். இதன் மூலம் நோயற்ற குழந்தைகளை உருவாக்க முடியும். அப்போது மக்கள் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
குழந்தை இல்லாத தம்பதியரில் தாயின் அண்டச் செல் மற்றும் தோல் செல்களைப் பயன்படுத்தி குளோனிங் குழந்தையை உருவாக்க முடியும். அது பாதுகாப்பானது மற்றும் மிகுந்த பலன் தரக்கூடியது. இன்னும் 50 ஆண்டுகளில் மனித குளோனிங் சாத்தியமாகும்.
ஒரு தம்பதி குளோனிங் தொழில் நுட்பம் மூலம் குழந்தை பெற விரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

மனிதனை ஏன் உருவாக்க வேண்டும் ?
ஆனால் மனிதனை ஏன் உருவாக்க வேண்டும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறதுமனிதனை மனிதன் உருவாக்கலாமாஅது தர்மமாஅது சரியா,தவறாநியாயமா என்றெல்லாம் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாக்கப்பட்டு அவர்கள் வளர்ந்து இயல்பான முறையில் குழந்தைகளை உருவாக்கிவிட்டார்கள்கரு முட்டைகளையும்உயிரணுக்களையும் சேமித்து வைத்துவாடகைத் தாய் மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனஇப்போது க்ளோனிங் மூலம் உருவாக்கப்பட பல குழந்தைகள் செல் உருவில் தயாராக இருக்கின்றன.மனிதனை மனிதன் மறு பதிவு செய்தால் என்னஅப்படிச் செய்தால் என்ன ஆகும்ஒரே மாதிரி பல மனிதர்கள் உருவாகிவிடுவார்களாஒரே மாதிரி என்றால் என்னஒரே தோற்றம் கொண்ட மனிதர்களாஒரே குணம் கொண்ட மனிதர்களாஒரே நிறம் கொண்ட மனிதர்களா?ஒரே திறமை கொண்ட மனிதர்களாஒரே அரசியல் கொண்ட மனிதர்களா?ஒரே அதிகாரம் கொண்ட மனிதர்களா?மனிதன் இயல்பாகப் பிறந்துஇயல்பாகப் பரிணாமம் அடைந்துஇயல்பாக முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் குளோனிங் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் வாதம்ஒரே மாதிரியான மனிதனை உருவாக்கிவிடக் கூடாது என்பது அவர்களின் எச்சரிக்கை.

இப்போது இயல்பாக இருக்கும் மனிதன் ஒரே மாதிரி இருப்பதில்லையா என்பது கேள்விஅரசியல்கலாச்சாரம்சமூகம் என்ற மன நிலை ஒரே மாதிரியான மனிதனைத்தான் உருவாக்கி வைத்திருக்கிறதுஒரே மாதிரி சிந்திப்பவர்கள்ஒரே மாதிரி அடிமையாக இருப்பவர்கள்ஒரே மாதிரி அதிகாரம் செலுத்துபவர்கள்ஒரே மாதிரி எழுதுபவர்கள்ஒரே மாதிரி படிப்பவர்கள்ஒரே மாதிரி பேசுபவர்கள்ஒரே மாதிரி கேட்பவர்கள் என்று எப்போதும் ஒரே மாதிரிதான் மனிதன் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறான்.வேறு மாதிரி இருந்துவிட்டால் அவன் ஒதுக்கப்படுகிறான்அவன் அதிகாரத்திற்கு எதிரானவன் என்று பார்க்கப்படுகிறான்.


ஒரே மாதிரி மனிதன் குளோனிங் செய்யப்பட்டால்தான் என்ன?
 ஒரே மாதிரி ஒபாமாக்கள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி மன்மோகன் சிங்குகள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி சச்சின் டெண்டுல்கர்கள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி ரஹ்மான்கள் உருவாகிவிடுவார்களா?
ஒரே மாதிரி ஜெயகாந்தன்கள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி அஜ்மல் கான்கள் உருவாகிவிடுவார்களா?
அப்படி உருவானால் அவர்கள் யாருக்கு அச்சுறுத்தல்
அவர்கள் யாரைப் போல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அச்சுறுத்தலா
அல்லதுஅவர்கள் யாரைப் போல் இல்லையோ அவர்களுக்கு அச்சுறுத்தலா?
தன் நிலை பறிபோய்விடுமோ என்ற அதிகார வெறி,பாதுகாப்பின்மை தொடர்ந்து மனிதனை அலைக்கழிப்பில் தள்ளியிருக்கிறதுபோட்டி,பொறாமைமனச் சிக்கல் என்று ஏதேதோ வேதனைகள் மனிதனைக் கட்டிப்போட்டுவிடுகின்றன.இப்போது குளோனிங் பிம்பம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.குளோனிங் மூலம் உருவாக்கப்படும் மறுமனிதன் தன் மூல மனிதனைப் போல இருப்பானா?அதற்கான ஆராய்ச்சிகள் இல்லைஅல்லது அதற்கான தீர்வுகள் வெளியே சொல்லப்படவில்லைஒரு மனிதனின் செல்களைக் கொண்டு மறு மனிதனை உருவாக்கிவிட்டால் அவன் அதே போல் வளருவானா என்று தெரியவில்லைவளர்ப்பு முறை என்பது முக்கியமாக இருக்கும்உள்ளே இருக்கும் மரபணுக்கள் அடிப்படை குணங்களை நிர்ணயிக்கும் திறன் பெற்றவையாக இருக்கலாம்மேம்பட்ட ஆற்றல் பெறுவதும்ஆற்றல் அழிவதும் சூழலின் பாதிப்பால் நிகழும்குளோனிங் ஒரு உயிரை உருவாக்கலாம்ஒரே உயிரை ஒத்த உயிரை உருவாக்கலாம்ஆனால் மனிதனை உருவாக்க முடியுமா என்பது கேள்விமனிதன் என்பவன் ஒரு சமூகம்ஒரு அரசியல்ஒரு அதிகாரம்ஆனால் அது போன்ற ஆபத்துகள் நிகழ்ந்துவிடும் என்றுதான் தேவாலயங்கள் குளோனிங் முறையை எதிர்க்கின்றனஅடிப்படைவாதிகள் அதற்கு எதிரான கருத்துகளை வைக்கிறார்கள்புரட்சியாளர்கள்கூட குளோனிங் குறித்த சரியான பார்வையை பதியவைக்கவில்லை.இன்னும் குளோனிங் ஒரு புதிராக இருக்கிறதுமனிதனை உருவாக்குகிறார்களாஒரு சமூகத்தை உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறதுஒரு சமூகம் உருவாகிவிடும் என்றால் அதை ஏன் தடுக்க வேண்டும்ஒரு அறிவியல் கூடத்தில் ஒரு சமூகம் உருவாகிவிடுவதில்லைஒரு அறிவியலறிஞனின் மேஜையில் ஒரு அரசியல் உருவாகிவிடுவதில்லைமனித மூளையில் சமூகமும்,அரசியலும்அதிகாரமும் மண்டிக் கிடக்கின்றனஅதை எப்படி மறுஉருவாக்கம் செய்வது என்பதுதான் கவனத்திற்குரிய கவலையாக இருக்க முடியும்.

ஒரு மொத்த சமூகத்திற்குமான நோய் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதுஒரு மொத்த நோயாளி இனத்திற்கு மருந்து பொதுமைப்படுத்தப்பட்டுவிட்டதுமனித சமூகத்திற்கு பொதுவாக எல்லாமே இருந்துவிடுகிறதுஒரே மாதிரியான உணவு முறைஒரே மாதிரியான உபகரணங்கள்ஒரே மாதிரியான அரசியல் அமைப்புஒரே மாதிரியான ஊடக மாதிரிகள்ஒரே மாதிரியான வாழ்வு முறைஎல்லாம் ஒரே மாதிரி என்பது போல் காட்டப்படுகிறதுஒரே மாதிரியான மனிதனை உருவாக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற அம்சங்களே காரணிகளாக இருந்துகொண்டிருக்கின்றனஒரே மாதிரியில் சிக்காத மனித மன நிலையை குளோனிங் உருவாக்கிவிடும் என்று எதிர்பார்த்துவிட முடியாது.ஆய்வு அறையில் மனிதனை உருவாக்கி அதிகார சங்கிலிகளில் பிணைக்கத்தான் அமைப்பு விரும்புகிறதுஅப்படி ஏராளமான மனிதர்கள் உருவாகிவிட்டால் அவர்கள் அதிகார வரம்புக்குள் வராத படிமங்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் ஆளும் மன நிலைகளுக்கு இருக்கிறது.ஆளும் மன நிலைகள் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லைஆளும் மன நிலை ஒரு ஆட்டோக்காரரிடமும் இருக்கிறதுஒரு பிச்சைக்காரரிடமும் இருக்கிறதுயார் பெரியவர்சிறியவர் என்பது பிரச்சினை இல்லையார் மேலாண்மை கொண்டவர்கள் என்பதுதான் பிரச்சினைஒரு மனிதன் மறுபதிப்பாமூல மனிதனா என்பது பிரச்சினை இல்லைஅவனுள் எது இருந்ததுஎது இல்லை என்பதுதான் முக்கியமானது.குளோனிங் மனிதனுக்குள் எது இருக்கும்எது இருக்காதுஅதுதான் கேள்வி.


 குளோனிங் சாத்தியமே என்பது இஸ்லாமிய கருத்து !!
மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மேலே பார்த்தோம் . 25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும் சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின்  கணித்திருக்கிறார்கள்..

இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்து, ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்!!.
தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி, அந்த வானவர், ஈஸாவின் நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப் பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது. அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாகவும் இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படை யில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருந்திருப் பார் என்று நினைக்கலாம். இது தவறாகும். ஏனெனில், அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத் தூதராகவும் ஆக்கியதாக இங்கு கூறப்படுகிறது.

இறைத் தூதர் என்றால், இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.
பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன், இறைச் செய்திகளை விளங்கி, மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.
இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50


ஆக்கம் :மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment