Friday, 28 December 2012

குடிநீர் பாட்டில்கள்!! ஒருசமூக பார்வை...


380612_353078248087820_336448263084152_878439_1393921865_n
வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.

Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை.அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.
இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள்.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது.


அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.
தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது.
More Detail..
                 http://www.colorado-recycles.org/pdf/recyclingtips/newresincodes.pdf

போலிகார்பனேட் பாட்டில்..
போலிகார்பனேட்டில் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களைப் பள்ளிக்கூட மாணவர்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட வேண்டும். இந்த போலிகார்பனட் பாட்டில்கள் எதிர்கால சந்ததயினருக்கு சொல்லொணா கேடுகளை உண்டாக்கும்போலிகார்பனேட் தண்ணீர் பாட்டில்கள் தக்கென்று, நீண்ட நாட்களுக்கு உழைக்கும் வண்ணம் பல வித வண்ணங்களில் அழகாக இருக்கும். இவை பேரங்காடிகளிலும், புத்தகக் கடைகளிலும் பரவலாக விற்கப்படுகின்றன. இந்த போலிகார்பனேட் உறுதியாக இருக்கும். இதனுள் முக்கோண வடிவத்தில் பிசி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் இவை போலிகார்பனேட் பாட்டில்கள் என்று அடையாளம் காணலாம்.

ண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த போலிகார்பனேட்  பாட்டில்களை வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். போலிகார்பனேட் பாட்டில்கள், உடலில் ஹார்மோன்களின் இயக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் பிஸ்பெனோல் ஏ என்ற இரசாயனத்தை போலிகார்பனேட் பாட்டில்கள் வெளியாக்குகின்றன. இவை பல்வேறுவிதமான ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இன உற்பத்தி உறுப்புக்களில் சேதம், புற்றுநோய் திசுக்கள் உருவாகுதல், பெண்களுக்குப் பரவலாக ஏற்படும் மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கு விரைப் புற்றுநோய் மற்றும் விந்துக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புக்களுக்கும் போலிகார்பனேட் பாட்டில் உபயோகத்திற்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனிதர்களின் சீரான உடல் இயக்கத்திற்கு உடலில் பல்வேறுவிதமான ஹோர்மோன்கள் சுரக்கின்றன. ப¢ஸ்பெனோல் ஏ இந்த சுரப்பிகளின் சீரான இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றின் வேலையைக் கெடுக்கிறது. இதனால் உடல் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

போலிகார்பனேட் பாட்டில்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அவற்றை வெப்பமான இடங்களில் வைக்கும்பொழுதும், சூடான திரவத்தை அவற்றில் ஊற்றும்பொழுதும் அவற்றின் உள்ள பிஸ்பெனோல் ஏ வெளியாகி அந்தத் திரவத்தோடு கலக்கிறது.

மிசோரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் சாதாரண வெப்ப நிலையில் கூட பிஸ்பெனோல் வளியாவதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 18லிருந்து 74 வயதுக்கு உட்பட்ட 1,455 பேரின் சிறுநீர் மற்றும் இரத்தத்தைப் பரிசோதனை செய்தபொழுது, 25 விழுக்காட்டினருக்கு உடலில் பிஸ்பெனோல் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

பிஸ்பினோல் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு, போலிகார்பனேட்டால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் ப¡ட்டில்களை பள்ளிக்கூடங்களில் உபயோகிப்பதைக் கல்வி அமைச்சு தடை செய்ய வேண்டும்

நம் நாட்டிலும் பெற்றோர்கள் இந்த போலிகார்பனேட் பாட்டில்களை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக்கெ¡டுக்காமல் இருப்பது நன்மை பயக்கும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment