இன்றைய அவசர உலகில் காப்பீடு என்கிற இன்ஷூரன்ஸ், ஆயுள்மற்றும் பொருட்களுக்கு மிக அவசியமானதாக மாறி இருக்கிறது.
இந்த காப்பீடு என்பது சிறிய தொகை மூலம் நம்மை, நம்மைசார்ந்திருக்கும் குடும்பத்தினரை பாதுகாப்பதாக இருக்கிறது.
ஒரு குடும்பத்துக்கு ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, விபத்துக்காப்பீடு, வாகனக் காப்பீடு, கடன்வசதி, ரொக்கம் மற்றும், கடன் அட்டை காப்பீடு போன்றவை அவசியமானதாக இருக்கிறது.
இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
ஆயுள் காப்பீடு..!
முதலில் ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
இதை ஆங்கிலத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ் என்பார்கள்.
இதில் எண்டோவ்மென்ட், யூலிப், டேர்ம் பிளான் என பல திட்டங்கள்இருக்கின்றன.
காப்பீடுநோக்கத்தோடு வடிமைக்கப்பட்டிருப்பது டேர்ம் பிளான். இதில் மற்ற வகை ஆயுள் காப்பீடு பாலிசிகளோடு ஒப்பிடும் போதுகுறைவான பிரீமியத்தில் அதிக ஆயுள் கவரேஜ் கிடைக்கும். இந்தபாலிசியில் பாலிசிக் காரணத்தில் உயிருக்கு ஏதாவது அசம்பாவிதம்ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். பாலிசி முதிர்வில் எதுவும்கிடைக்காது.
30 வயதுள்ள ஒருவருக்கு 30 ஆண்டு கால ஆயுள் காப்பீடு பாலிசிக்காக தினசரி ரூ.30 செலவு செய்தால் 50 லட்ச ரூபாய்க்குகாப்பீடு வசதி கிடைக்கும்.
அதாவது மாதம் 900 ரூபாய் பிரீமியம்.
மருத்துவ காப்பீடு..!
வியாதி அல்லது திடீர் விபத்தினால் எதிர்பாராமல் அதிக மருத்துவச் செலவு ஏற்பட்டு விடுகிறது. தனியார் மருத்துவமனையில் மூன்று தினம் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என்றால் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் தேவைப்படும்.இதை சமாளிக்க மருத்துவ காப்பீடு அவசியமாகும்.
இதை ஆங்கிலத்தில் மெடிக்கிளைம் அல்லது ஹெல்த் இன்ஷூரன்ஸ்பாலிசி என்பார்கள்.
35 வயதுள்ள ஒருவர் தினசரி ரூ.10 செலவு செய்தால் 3 லட்சரூபாய் கவரேஜ் கொண்ட மருத்துவ காப்பீடு வசதி பெறலாம்.அதாவது மாதம் 300 ரூபாய் பிரீமியம் கட்டினால் இந்த வசதிகிடைக்கும்.
வீடு காப்பீடு..!
கன மழை, வெள்ளம், தீ விபத்து, பூகம்பம், கலவரங்கள் உள்ளிட்டகாரணங்கள் நம் வீட்டுக்கு சேதம்மற்றும் பாதிப்பு ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால்சமாளிக்க வீட்டு உரிமையாளர்பாலிசி கை கொடுக்கும்.
இதனை ஆங்கிலத்தில் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி அல்லது ஹோம்இன்ஷூரன்ஸ் என்கிறார்கள்.
தினசரி 12 ரூபாய் செலவில் வீட்டுக்கு 30 லட்ச ரூபாய்க்கும், வீட்டிலுள்ள பொருள்களுக்காக 3 லட்ச ரூபாய்க்கும் காப்பீடு வசதி கிடைக்கும். ஆண்டுக்கு 360 ரூபாய் பிரீமியம் செலுத்துவது மூலம்இந்த வசதியை பெற முடியும்.
வாகன காப்பீடு..!
பைக் மற்றும் கார்களை காப்பீடு செய்வது கட்டாயமானது.வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. மேலும், விபத்தில் சேதம் மற்றும் பாதிப்பு அடைகின்றன.
இந்த காப்பீட்டை பெற தினசரி ரூ.30 அல்லது மாதத்துக்கு ரூ. 900பிரீமியம் கட்டுங்கள்.
கடன் காப்பீடு..!
இன்றேக்கு பலர் வங்கிக் கடன் வாங்கிதான் வீடு வாங்குகிறார்கள்.அது போன்ற நேரத்தில் வீட்டுக் கடன் காப்பீடு பாலிசி ஒன்றை எடுப்பது கட்டாயம். இந்த பாலிசியை ஆங்கிலத்தில் ஹோம் லோன்இன்ஷூரன்ஸ் என்பார்கள்.
ஒருவர் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்ட கூடிய விதமாக 50 லட்சரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.இந்த கடன் தொகைக்கு ஒரே பிரீமியமாக (ஒற்றை பிரீமியம்) 1.75 லட்ச ரூபாய் செலுத்தினால் அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கு இந்தக்கடன் தொகைக்கு காப்பீடு கிடைக்கும். அதாவது, நாள் ஒன்றுக்கு 24ரூபாய்தான் பிரீமியம்.
வீட்டுக் கடன் வாங்கியவர், இந்தக் காப்பீடு பாலிசி எடுத்திருந்தால், திடீரென அவருக்கு இறப்பு ஏற்பட்டால் கடன் தொகை முழுவதையும் காப்பீடு நிறுவனமே செலுத்திவிடும்.
ரொக்க, கடன் அட்டை காப்பீடு
இன்றைக்கு வங்கிக்கு செல்வது என்பது அரிதாகி வருகிறது. காரணம்,ரொக்க அட்டை என்கிற டெபிட் கார்ட், கடன் அட்டை என்கிற கிரெடிட்கார்டு ஆகும்.
தினசரி 4 ரூபாய் பிரீமியம் கட்டுவது மூலம் ரொக்க, கடன் அட்டைகள் திருடு போனால் அல்லது அவை தவறாகபயன்படுத்தப்பட்டால் காப்பீடு வசதியை பெற முடியும்.
கார்ட் தொலைந்து விட்டது அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து வங்கிக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன் ஏழு தினங்களில் ஏற்படும் இழப்புக்கு 50,000 ரூபாய் வரையிலும், தகவல் தெரிவித்த பின்னர் ஏற்படும் இழப்பிற்கு 15 லட்ச ரூபாய் வரையிலும் காப்பீடு வசதிகிடைக்கும்.
தினம் ரூ.100 போதும் ...
தினசரி 100 ரூபாய் அல்லது மாதம் 3,000 ரூபாய் மூலம் ஓரளவுக்குநல்ல வசதியாக குடும்பத்தை இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம்பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதுவே ஓரளவுக்கு வசதியுள்ள குடும்பம் என்றால் மாதம் 1,000முதல் 1,500 ரூபாய் பிரீமியத்தில் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment