Thursday, 27 December 2012

ரஜினிகாந்த் சொத்து பற்றிய பேட்டிVs பிறந்தநாள் கொண்டாட்டம் !!! ஒரு சிறப்பு பார்வை....

ரஜினிகாந்த் அளித்த பேட்டி :


எனது உயிரிலும் மேலான ரசிக்க பெருமக்களே பேருந்தில் நடத்துனராக இருந்த நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆயிரங்களில் ஆரம்பித்த எனது வாழ்க்கை உங்கள் அன்பினால் ஆயிரங்கள் இலட்சங்களாகின அது போதாதென்று உங்கள் அன்பு அதிகரிக்க அதிகரிக்க இலட்சங்கள் கோடிகளாகி.ஈழ தமிழர்களின் இடம்பெயர்வாலும் இன்று கோடிகள் பல்கிபெருகிவிட்டன. உங்கள் அன்பினால் சேர்த்த பணத்தில் எனது முதல் மகளுக்கு சீதனம் மட்டும் 100 கோடியும் அடுத்த மகளுக்கு அதை விட அதிகமாகவும் கொடுத்து கல்யாணமும் செய்து வைத்தேன் . அதை விட இன்னும் பல கோடிகள் சேர்த்து வைத்துள்ளேன். எந்திரனில் மட்டுமே எனது வருமானம் உங்களுக்கே தெரியும். எத்தனை கோடிகள் என்று. 

எனது பல்லாயிரம் ரசிகர்கள் நான் உடல் நலம் இல்லாமல் இருந்த போது மண்சோறு சாப்பிடுவது , தீச்சட்டி எடுத்தது, அலகு குத்தி காவடி எடுத்தது , இப்படியாக பல வேண்டுதலை செய்ததை நான் அறிவேன். உங்கள் இந்த அன்பை நான் இதுவரை காலமும் எனது வியாபாரத்துக்கு பயன் படுத்திவிட்டேன் என்று நினைக்கும் போது மிகவும் மனது வேதனை படுகிறது. 

எனது படம் வெளியாகும் நேரங்களில் பல ரசிகர்கள் எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,பாலபிசேகம் செய்வதுவும் எனக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டேன். மேலே ஏறும் நீங்கள் விழுந்தால் உங்கள் வைத்திய செலவுக்கு கூட உங்களிடம்  பணம் இல்லை என்பதுவும் தெரியும், எனது படத்துக்கு பாலபிசேகம் செய்யும் ரசிகர்களின் வீட்டில் குடிப்பதுக்கு பால் இல்லாமல் கூட இருந்திருக்கும் அது எல்லாமே தெரிந்திருந்தும் எனது சுய நலத்துக்காக உங்களை பயன் படுத்திவிட்டேன். அதை விட கொடுமையான விடயம் என்னை பார்த்து புகை பிடிக்க பழகிப்போன சிறுவர்கள் எத்தனையோ பேர் என்று தெரிந்தும் அது எனது "ஸ்டைலுக்கு"  கிடைத்த வெற்றியாக கருதினேனே தவிர அதை படங்களில் நிறுத்தவே இல்லை நான் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது நீங்கள் பட்ட மன வேதனையை, உங்கள் புகை பழக்கம் உங்கள் ஆயுளை குறைக்கும் என்று தெரிந்தும் நான் தடுக்காமல் எவ்வளவு சுயநலத்துடன் இருந்துவிட்டேன்.

பாடல் வரிகளில் தத்துவங்களை சொல்லி சொல்லி சேர்த்த பணத்தை கோடிகணக்கில் மகள்களுக்கு சீதனமாகவும் எனது குடும்ப சுக போகத்துக்கும் செலவழித்து விட்டேன்.மற்றயவற்றை சேமிப்பிலும் வைத்து இருக்கிறேனே தவிரஉங்களை பற்றி சிந்திக்கவே இல்லை. அது மட்டும் அல்ல எனது பிறந்த மாநிலத்தில் தொழில்சாலைகளை அமைத்து என்னை உயர்த்தி அழகு பார்த்து ஏணியை போல இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுக்காமல் துரோகம் செய்தேன். இப்படியாக எனது மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல் நான் உடல் நலம் இல்லாமல் வைத்திய சாலையில் இருக்கும் போது மிகவும் பயந்துவிட்டேன் எனது உயிர் போய்விடுமோ என்று பல சிந்தனைகள் வந்தன வாழ்க்கையே அப்போதுதான் புரிந்தது அது மட்டும் அல்லாமல் அப்போதுதான் உங்கள் அன்பு எனக்கு முழுசாக புரிய தொடங்கியது எனக்காக இவளவு செய்யும் உங்களுக்கு எதுவுமே செய்ததில்லையே என்று மனம் ஏங்கியது. அதை நான் வைத்திய சாலையில் இருந்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிந்து இருபீர்கள். என்னடா சுடலை ஞானம் போல வைத்திய சாலையில் இருக்கும் போது சொன்னானே உடல் நிலை சரியாகியதும் கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திருப்பி வாங்கினதே இல்லை என்று வசனம் பேசியவன் உடல் நிலை சரியாகியதும் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு அடுத்த படத்தில நடிக்க போய்ட்டானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியாமல் இல்லை. இந்த வாக்கும் அரசியலுக்கு வருவானா, மாட்டானா என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருப்பதை போல நினைத்திருப்பதுவும் எனக்கு புரியாமல் இல்லை.

ஒருவனுக்கு அதுவும் எனக்கு என் மனைவிக்கும் காலாம் பூராவும் சுகபோகமாக வாழ எதனை கோடி வேண்டும் அனால் என்னிடம் எத்தனை கோடிகள், சொத்துகள் இருகின்றன இவற்றை எல்லாம் நான் சேர்த்து வைத்து இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனை தமிழர்கள் பசியால் துடித்துக்கொண்டு இருப்பார்கள் என்பதுவும் எனக்கு தெரியாமல் இல்லை. நானெல்லாம் என்ன தலைவன் என்னை அரசியலுக்கு வருவேனா மாட்டேன என்று எல்லாம் எதிர்பார்கிறார்கள் இத்தனை ஏழைகள் பசியால் துடிக்கும் போது பல கொடிகளை ஒதுக்கி வைத்து இருக்கிறேனே என் பணம் என்ற சுய நலத்தில் தானே ? என்னை எல்லாம் எந்த நம்பிக்கையில் அரசியலுக்கு அழைக்கிறார்கள்? என் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவன் நான் அரசாங்க பணத்தில் உதவி செய்வேன் என்று நம்பி வர சொல்கிறார்களோ!!! இப்படியான பாமர முட்டாள் ரசிகர்களை இப்படி இத்தனை காலமும் ஏமாற்றியது எனக்கு மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

என்னிடம் இருக்கும் பணத்தில் எத்தனை ஏழைகளின் குடும்பத்துக்கு கடன் உதவி செய்யலாம், தொழில் செய்ய உதவி செய்யலாம் அது மட்டும் அல்ல ஒரு படம் நடித்தால் குறைந்தது 25 கோடி கிடைக்கும் ஒருவனுக்கு 2 லட்சங்கள் படி கொடுத்தாலே ஒரு படத்தின் மூலம் 1250 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என்னால் மட்டுமே இப்படி என்றால் மொத்த நடிகர்களும் சேர்ந்தால்? நடிகர்கள் மட்டும் அல்ல என்னை போன்ற பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்தால் தமிழ் நாட்டையே  மாற்றிவிட முடியாதா? எனது இரு மகள்களுக்கு மட்டும் கொடுத்த சீதன பணத்தில் 12 ,500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுத்து இருக்கலாம். இதை எல்லாம் சிந்தித்து பார்க்கும் போது நானெல்லாம் எவ்வளவு சுயநலவாதி என என் மனச்சாட்சியே என்னை பார்த்து துப்புகிறது.

முத்து படத்தில் சொத்துகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது போலவும், சிவாஜி படத்தில் மற்றவர்களுக்காக வாழ்வது போல,இப்படி சமுக சிந்தனையாளன் போல  நடித்து சேர்த்த காசை நான் மட்டும் எனது குடும்பம் மட்டும் அனுபவிக்கிறோம். ஒரு மனிதாபிமானமுள்ள மனிதனாக நியவாழ்விலும் நடிப்பது வேதனையளிக்கிறது.நானும் எவ்வளவு நாளாத்தான் நல்லவனாவே நடிக்கிறது?????? 

இன்று புதுவருட நாளிலே எனது மனச்சாட்சி விளித்து கொண்டது, எனது மகள்கள் திறமையானவர்கள் சொந்த காலில் நிக்கும் தகுதி தன்னம்பிக்கை உள்ளவர்கள் அது மட்டும் அல்ல அவர்கள்  கணவர்கள் இருவரும்  நிறையவே சம்பாதிக்கிறார்கள் அத்துடன் நான் கொடுத்த பல கோடிகள் அவர்களிடம் இருகின்றன எனவே அவர்களை பற்றி இனி எனக்கு கவலை இல்லை. என்னுடைய கவலை எல்லாம் என்மேல் ஒப்பற்ற பாசம் வைத்து இருக்கும் உங்களை பற்றியதே!!!அதனால் தான் இந்த முடிவு எனது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை எடுத்துகொண்டு மீதமாக உள்ள பணத்தை உங்களுக்காக பயன் படுத்த போகிறேன்.

இப்படிக்கு உங்கள் தொண்டனாக இந்த நிமிடம் முதல்.
ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்...

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 63வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்த ஆண்டு 12-12-12 என்ற அரிய நாளில் பிறந்த நாள் வந்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரஜினியின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினர்.

நீரில் மிதந்து ரசிகர் தியானம்
தேனி அருகே வீரபாண்டியில், நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழவும், உலக அமைதி வேண்டியும், புதன்கிழமை 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு ரஜினி ரசிகர் தியானம் செய்தார்.
கோம்பை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் விஜயன் (50). இதே ஊரில் உணவகம் நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வரமுடையார் கோயில் ஆகியவற்றில் வழிபாடு நடத்தினார். பின்னர், வீரபாண்டியில் உள்ள கிணற்றில் கைகளைக் கூப்பி நீரில் மிதந்தவாறு 3 மணி நேரம் வரை தியானத்தில் ஈடுபட்டார்.
ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழவும், உலக அமைதி வேண்டியும் தண்ணீரில் மிதந்தவாறு தியானம் செய்ததாகவும், இதுவரை ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காத எனக்கு, விரைவில் அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும், இறைவனை வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.


ரஜினி பிறந்த நாள்: மாணவர்களுக்கு உணவு
பாளையங்கோட்டையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் புனித கபரியேல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது.
மன்ற மாவட்டத் தலைவர் எஸ். பானுசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எஸ். பகவதிராஜன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. சக்திசுப்பிரமணியன், ஆசிரியை எஸ். ஈஸ்வரி, சூரியா கணேசன், வீரமணிகண்டன், அம்பலவாணன், மணி, தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டியில் ரஜினி பிறந்த நாள் விழா
ஆண்டிபட்டி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில், ரஜினியின் 63-வது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, ஆண்டிபட்டி பாலவிநாயகர் திருக்கோயில், மீனாட்சியம்மன் திருக்கோயில் மற்றும் சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
விழாவுக்கு, ஆண்டிபட்டி ரஜினிகாந்த் மன்ற நகரச் செயலர் ராஜஹரிகாந்த் தலைமை வகித்தார். நகரத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில், ரஜினிகாந்த பூரண நலம் வேண்டி பிரார்த்தனை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், நகரப் பொருளாளர் பிருந்தாவனம், சுரேஷ், தெய்வேந்திரன், ரஜினி பிரபாகர், குருமூர்த்தி, காசிராஜன், கவுன்சிலர் முருகன், படையப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டுகட்டணமில்லா பேருந்து இயக்கம்

பழனியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டது.
வித்தியாசமான நாளான 12-12-12 அன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். இதையொட்டி, பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்த தர்மத்தின் தலைவன் ரஜினி ரசிகர் மன்றம், மாவீரன் ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் பாயும்புலி ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் சார்பில், கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டது.
பழனியில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் மினி பஸ்ûஸ ஒப்பந்த முறையில் வாடகைக்கு எடுத்த ரசிகர் மன்றத்தினர், ரஜினியின் பிறந்தநாளான புதன்கிழமை முழுவதும் அந்த பஸ்ஸில் எங்கு ஏறி, இறங்கினாலும் கட்டணம் இல்லை என அறிவித்திருந்தனர்.
இதன்மூலம், ஏராளமான கூலித் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெற்றனர்.
பாலசமுத்திரத்தில் கேக் வெட்டி பஸ் இயக்கத்தை, மாவட்டத் தலைமை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பாணி, பழனி நகரத் தலைவர் முருகானந்தம், பொறுப்பாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
மேலும், முரட்டுக்காளை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மலைக்கோயிலில் ரஜினிகாந்தின் 63-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
தேவகோட்டை மலைக்கோயிலில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவி லில் சுவாமிக்கு ரஜினி பெயரில் விஷேச அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகர்மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம், நகர் செயலாளர் படையப்பா ரவி, இணைச் செயலாளர் ரஜினி மகேஷ், அமைப்பாளர் சரவணன், பொறுப்பாளர் மலைச்சாமி, ரஜினிகுமார், கணேசன், அழகுமளிகைகண்ணன், மதியழகன், ராமநாதன், விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாள் திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 63-வது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தும் புதன்கிழமை கொண்டாடினர்.
ரஜினிகாந்த்தின் இந்த பிறந்தநாள் 12.12.12 என்ற நாளில் வந்துள்ளதை சிறப்பு நிகழ்வாகக் கருதி ரசிகர்கள் ஆராவாரத்துடன் இந்த விழாவைக் கொண்டாடினர்.
ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், திருச்சி புத்தூரில் உள்ள பார்வையற்ற மகளிருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
ரஜினி பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த சிவாஜி திரைப்படம் 3டி தொழில்நுட்பத்துடன் புதன்கிழமை திரையிடப்பட்டது.
திருச்சி சோனா திரையரங்கில் இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை மாநகர்முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
ராசிபுரத்தில் ரஜினி காந்த் பிறந்த நாள் விழா
ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 நாளன்று இடம் பெற்றதால், அவரது ரசிகர்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ராசிபுரம் ரஜினி காந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் ரஜினியின் 30 அடி கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து, திரளான பெண்கள் பங்கேற்ற 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவியில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தினர்.

நமக்கு விழிப்புணர்வு வேண்டும் !! விழித்துக்கொள் தமிழா!! இன்னுமாய் தூங்குகிறாய் ....
ஒரு நடிகனை நடிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியேயும் அதுபோலவே என நம்பும் ஒரு ரசிகனின் கற்பனையாக இந்த பதிவை இங்கு பதிகிறேன். ஒரு நடிகன் நடிகனாக இருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வது அவசியம் அற்றது அது அவ ரது சொந்த பிரச்சனை. விமர்சனம் செய்வது தவறு. ஒரு நடிகனை அந்த துறையை விட்டு அரசியல், நாடு, தலைவன் என அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வத்துக்கு முன்பு அதுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும். போது தொண்டு போது வாழ்கையின் சமுதாய அக்கறை படத்துக்கு வெளியேயும் இருக்கிறதா என்று சிந்திக்கவேண்டும். இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியலில் வேறு எந்த நாடிலும் இல்லாத கொடுமை இருக்கிறது எல்லா தேர்தலிலும் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெரிவு செய்து வாக்களிப்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தெரிவு செய்துவிட்டு பின் போடுகிறார்கள் ஏனெனில் யாருக்கு போட்டாலும் ஒன்றுதான் அப்போதைய நிலவரப்படி யார் அதிக கேட்டவர்கள் என பார்த்து அவர்களுக்கு போட கூடாது   என நினைத்து மற்றவர்களுக்கு போடுகிறார்கள்.

இந்த பதிவை பார்த்து எனக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு கோபம் என்று நினைக்கவேண்டாம் ஒரு ரசிகனாக ரஜினி படத்தை நானும் ரசிப்பேன். என்றும் வெறியனாகியதில்லை. இது ஒரு ஆதங்கம் ரஜனியை ஒரு சிறு உதாரணமாக எடுத்தேன் இப்படியான பல பணக்காரர்கள் நாளும் எங்களை சுரண்டுகிறார்கள் சினிமா காரர்களாக மட்டும் அல்ல அரசியல் வாதியாக, முதலாளியாக இப்படியானவர்களுக்கு மனிதாபிமானமே இருப்பதில்லை. வெளியில்  தேனொழுக பேசி பேசியே அவர்கள் குடும்பம் பல தலைமுறை சுகபோகமாக வாழ வழி செய்து விடுவார்கள் இது தெரியாமல் நாமஎல்லாம்  அவர்கள் சொல்லும்   வார்த்தையை  நம்பி அவர்கள் பின்னால் சென்று எங்கள் வாழ்கையை தொலைக்கிறோம்.எங்கள் அறியாமைதான் அவர்கள் மூலதனம்.

மக்களே சிந்தியுங்கள். உங்களால் தான் சமுதாய சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவே பயப்பிடுகிறார்கள்.

இந்த சினிமா, அரசியல் இதை ஒரு எல்லையுடனே வைத்து கொள்ளுங்கள் இல்லை உங்கள் வாழ்கையை அழித்துவிடும்.உங்கள் மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment