தங்கத்தின் மீது இந்தியப் பெண்களுக்கு இருக்கும் நேசமும், நெருக்கமும் கூடிக் கொண்டே போகிறது. ஆபரணங்களாக்கி அணிந்தார்கள். பட்டுப்புடவைகளில் பார்டர் ஆக்கி உடுத்தி னார்கள். தங்கபஸ்பமாக்கி சாப்பிட்டார்கள். இதோ இப்போது அழகு நிலையங்களில் தங்கத்தை உடலில் பூசிக்கொண்டு தகதகவென மின்னத் தொடங்கி யிருக்கிறார்கள். பெண்களின் இந்த ஜொலிப்புக்கு முதற்காரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது ஆச்சரிய தகவல்.
அஞ்சலிக்கு 27 வயது. சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மூன்று மாதங்களில் திருமணம். வருங்கால கணவர் அவள் வீடு தேடிச் சென்று, பெற்றோர் அனுமதியோடு தனது காரிலே அருகிலுள்ள பிரபல பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவள் தயங்கித் தயங்கி மேலும் கீழும் பார்க்க `சும்மா உள்ளே போயிட்டு வாயேன். நான் உன் துணைக்கு இங்கேயே இருக்கிறேன்..’ என்று அந்த அழகு நிலையத் திற்குள் அனுப்பிவைத்திருக்கிறார். அங்கே அவளுக்கு வருங்கால மாப்பிள்ளையால் புக்கிங் செய்யப்பட்டிருந்தது, தங்கப் பூச்சு அலங்காரம். தன்மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையில் அவள் ஆனந்தப்பட்டுப்போனாள்.
அலங்காரம் முடிந்து வீடு திரும்பியபோது அம்மா, `ஏதோ உன்னிடம் ஒரு மாற்றம் தெரியுதே.. முன்னைவிட பளபளன்னு ஆகியிருக்கியே..’ என்று கேட்டிருக்கிறார்.
திருமணம் நிச்சயமான ஒருசில இளைஞர்களால் இப்படி தங்கள் வருங்கால மனைவிகளுக் காக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த அலங்கார பழக்கம், இப்போது நிச்சயதார்த்தம் செய்தி ருக்கும் நிறைய இளைஞர்களை தொற்றிக்கொண்டுள்ளது. திருமணத்திற்கு முன்பே மனைவி களுக்கு தங்கம் பூசி, அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட முடிவு செய்து விட்டார்கள்போல் தெரிகிறது.
இந்த தங்க சமாச்சாரத்தை நாம் கேள்விப்பட்ட தருணத்தில் `கோல்டு ஸ்பா’ பற்றிய செய்முறை விளக்கம் கிரீன் ட்ரெண்ட்ஸ் அழகு நிலையத்தில் நடக்க, அங்குள்ள அழகுப் பெண்கள் கூட்டத் திற்குள் நாமும் புகுந்து கொண்டோம், தங்கத்தை எப்படி பூசுகிறார்கள் என்று பார்க்க! இது திருவான்மியூரில் நடந்தது.
தங்கத்தால் `பாடி பாலீஷிங்’ செய்வது எப்படி என்பதை `காஸ்மட்டாலஜிஸ்ட்’ பிரசன்னா செய்து காட்டினார். மாடலாக இளம்பெண்கள் இடம்பெற்ற னர். அதில் பெரும்பாலானவை ஆண்கள் பார்க்க வும், படம் எடுக்கவும் அனுமதிக்கப்படாதவை. ஏன்என்றால் தங்கத்தால் பாடி பாலீஷிங் பெண் களின் உச்சி முதல் பாதம் வரை செய்யப்படுகிறது. மெனிக்யூரும், பெடிக்யூரும் கூட இதில் இடம் பெறுகிறது.
`சரி. பாடி பாலீஷிங்கில் என்னென்ன நடக்கிறது? அது எப்படி உடல் அழகில் மாற்றங்களை நிகழ்த்துகிறது’ என்பதை கேட்டாவது நாம் தெரிந்துகொள்ளலாமே! பிரசன்னாவிடம் கேட்டோம்..
“முதலில் கோல்டு பாலீஷிங் சருமத்தில் என்னென்ன மேம்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்களுக்கு விளக்குவோம். அப்போதே அவர்கள் முகத்தில் அழகான மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். இந்த பாலீஷிங் சருமத்தை மென்மையாக்கி, இளமைக்கு மாற்றும். பொன் நிறம் கிடைக்கும். நச்சுத் தன்மை வெளியேறி சருமம் புத்துணர்ச்சி பெறும். சுருக்கங்கள் மறையும்…” (இப்படியே அவர் நிறைய அடுக்கிக்கொண்டு போனார்)
மணப்பெண்கள் இந்த அலங்காரத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?
“மணப்பெண் அலங்காரம் என்பது இப்போது எல்லோராலும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக் கிறது. அதில் முகம், கூந்தல், மற்றும் வெளியே தெரியும் சருமப்பகுதிகளுக்குத்தான் முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். ஆனால் இன்றைய பெண்கள் உடல் பகுதிகளில் எந்த பாகுபாடும் இன்றி முழு அழகுடன் திகழவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரே மாதிரியான மேம்பட்ட அழகை உடல் முழுவதும் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை அழகில் அக்கறை கொள்ளாதவர்கள் கூட திருமணம் நிச்சயம் ஆனதும், முழுஉடல் அழகில் அக்கறை கொள்ளத் தொடங்கிவிடு கிறார்கள். அதனால் மணப்பெண்கள் இந்த வித அழகை அதிகம் நாடுகிறார்கள். மணமகன் களும் இந்த அலங்காரத்தை விரும்புகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். கோல்டு பாலீஷிங்கிற்கு பயன்படுத்தும் ஜெல், ஆயில், ஸ்கிரப், பேஸ்ட் போன்ற அனைத்திலும் தங்கம் கலக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். உச்சி முதல் பாதம் வரை தங்க கலவையால் அழகுபடுத்தலாம்..”
இந்த அழகு அலங்காரத்தை செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு ஒரு மணிநேரம் வரை எடுத்துக் கொள்கிறார்கள்.
முதலில் முழு உடலுக்கும் கிளன்சிங் எனப்படும் சுத்தப் படுத்துதலை தொடங்குகிறார்கள். இதன் மூலம் சருமத்தின் மேல்புற அழுக்கு நீங்கி, வியர்வை துவாரம் திறக்கும் என்கி றார்கள். இதை பத்து நிமிடம் செய்துவிட்டு, அதை துடைத்து அப்புறப்படுத்திவிட்டு, ஸ்கிரப்பிங் செய்கிறார்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறார்கள். இது, சருமத்தை மென்மையாக்கி, ரத்த ஓட்டத்தை தூண்டும் என்கிறார்கள். இதை 20 நிமிடம் செய்கிறார்கள்.
அதன் பின்பு `பேக்’ போடுகிறார்கள். பேஸ்ட் போன்று காட்சியளிக்கும் இதனை உடல் முழுவதும் பூச, 20 நிமிடங் கள் எடுத்துக்கொள்கிறார்கள். அது உலர்ந்த பின்பு, விசேஷ மாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஷவருக்குள் அனுப்புகிறார் கள். மிதமான சுடுநீரில் அதை கழுவி விட்டு, `ஷவர் ஜெல்’ பயன்படுத்தி குளிக்கவைக்கிறார்கள். ஷவரில் மேல் இருந் தும், இரு பக்கங்களில் இருந்தும் தண்ணீர் பூப்போல விழுந்து மேனியை நனைத்து சுத்தம் செய்கிறது. நன்றாக குளித்து உடலை துடைத்துவிட்டு, உடலுக்கு ஈரப்பதத்தை தரும் `மாயிஸ்சரைசரை’ பூசுகிறார்கள். இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் தங்கம் கலந்திருப்பதால், இதனை கோல்டு பாடி பாலீஷிங் என்று சொல்கிறோம்.”
தங்கம் கலந்த ஆயில் இருக்கிறதா, அதை பெண்களின் உடலில் எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
“தங்கபஸ்பம் கலந்த ஜெல் இருக்கிறது. அதை மசாஜ் ஆயிலாக பயன்படுத்துவோம். முதலில் ஜெல் போல் தோன்றி னாலும் மசாஜ் செய்யச் செய்ய அது எண்ணெய் போல் ஆகிவிடும். இது உடலுக்கு அதிக ரிலாக்ஸ் தரும். இதிலும் முதலில் கிளன்சிங் உண்டு. பின்பு நீராவி குளியல் செய்வார் கள். இப்போதுள்ள வாழ்க்கை முறையில் பலருக்கும் வியர்வை வெளியாகும் வாய்ப்பே இல்லை. அலுவலகத்தில் இரவு பகல் பாராது ஏ.சி.யில் வேலை பார்க்கிறார்கள். வீட்டிலும் ஏ.சி.யில்தான் தூங்குகிறார்கள். இதனால் வியர்வை வராமல், உடலில் உள்ள நச்சுக்களில் ஒரு பகுதி வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது. நீராவி குளியலால் உடல் நன்றாக வியர்த்து, நச்சுக்கள் வெளியேறும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடல் இயக்கம் மேம்பட்டு உடல் வலிகள் நீங்கி ரிலாக்ஸ் ஆகிவிடுவார்கள்..”
தங்கம் கலந்த ஜெல், பேஸ்ட், ஆயில், பேக் போன்றவைகளை உடலில் பயன்படுத்தினாலும், அவற்றை எல்லாம் கழுவி அப்புறப்படுத்தி விடுவதால் தங்கத்தின் மினுமினுப்பு உடலுக்கு முழுமையாக கிடைக்குமா?
“நாம் மருத்துவ ரீதியாக மூலிகை எண்ணெய், ஜெல், பேக் போன்றவைகளை சருமத்தில் தேய்க்கும் போது அவை வியர்வை தூவாரத்தின் வழியாகவும், சருமத்தின் ஈர்ப்புத்தன்மையாலும் உடலுக்குள் சென்று வினையாற்றுகின்றன. அதுபோல் இதையும் நாம் உடலில் தேய்த்து போதிய நேரம் வரை வைத்திருந்து விட்டுத்தான் அப்புறப்படுத்துகிறோம். அதனால் தங்கம் கலந்த மினுமினுப்பு உடலுக்கு கிடைத்துவிடும்.”
சருமம் நான்கு வகையானவை. எல்லா வகை சருமத்திற்கும் இந்த தங்கப்பூச்சு ஒத்துவருமா?
“பொதுவாக சில வகை சருமங்களுக்கு சில அழகு சாதன பொருட்கள் ஒத்து வராது. அலர்ஜியை ஏற்படுத்தும். தங்கம் கலந்த அழகு சாதன பொருட் கள் எல்லாவகை சருமத்திற்கும் பொருந்தும். தங்கத் தால் அலர்ஜியே தோன்றாது” என்றார், பிரசன்னா.
சாக்லேட், முத்து, பழவகைகள், மூலிகை பொருட் களால் ஆன பேஷியல், பேக் வகைகள் நிறைய உள்ளன. இப்போது, தங்கம் கலந்த அழகு சாதன பொருட்களை தங்க கலரில் இருக் கும் வடகிழக்கு மாநில பெண்கள் தமிழக பெண்களுக்கு பூசுகிறார்கள். தமிழக பெண்களின் சருமமும் தங்கம்போல் மின்னினால் மகிழ்ச்சிதான்!
நன்றி-தினத்தந்தி
No comments:
Post a Comment