சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடிற்கு மத்திய அரசு ஓப்புதல் வழங்கியதை தொடர்ந்து டில்லியில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிக்க உள்ளன. இதில் வால்மார்ட், டெஸ்கோ என்ற இருநிறுவனங்களும் முதன்முறையாக தனது வர்த்தகத்தினை துவக்க உள்ளது. பெரும் எதிர்ப்பிற்கிடையே சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு எதிராக பார்லிமென்ட் லோக்சபா, ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து விவசாய உற்பத்தி மற்றும் வணிக குழுவில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் டில்லியில் பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ ஆகியன தனது வர்த்தகத்தினை திறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில்லறை வர்த்தக ஜாம்பவானான வால் மார்ட் இந்திய சந்தைக்குள் நுழைய அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.125 கோடி செலவு செய்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் ஜாம்பவானாக இருக்கும் வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழையத் தேவையான நடவடிக்கைகளை கடந்த 2008ம் ஆண்டு முதலே எடுத்துள்ளது. அதற்காக 2008ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்காவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ரூ.125 கோடி செலவு செய்துள்ளது.
இவர்கள் அமெரிக்க அரசு மூலம் இந்திய அரசை நெருக்கி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வைத்துள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த விவாதம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவிட்டுள்ளது வால்மார்ட்.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் உதவியை நாடலாம். மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு செலவும் செய்யலாம். ஆனால் அந்த செலவு கணக்கை ஒவ்வொரு காலாண்டிலும் அரசிடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி வால்மார்ட் சமர்பித்த காலாண்டு கணக்கில் தான் இந்த தகவல்கள் உள்ளன.
இந்தியா உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காரியம் சாதிக்க இந்த ஆண்டில் மட்டும் வால்மாப்ட் ரூ.18 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment