Wednesday, 13 March 2013

பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும் மூலநோய்!! ஒரு விழிப்புணர்வு தவகல்....


ஒவ்வொரு மனிதனிற்கும் பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும்மூலநோய் 35 வயதிலிருந்து 40 வயதிற்குல்  ஏற்படும். அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்  உடலில் ஏற்படும் இந்த  மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். 

எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான். குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


இந்த பிரச்சனையை மருத்து உலகில் ஹெமராயிட்ஸ்’ (Haemorhoids)என்றுழைக்கப்படும் நம்முள் பலருக்கு இந்த உபாதை இருந்தாலும் மருத்தவரிடம் செல்லவோ அதைப்பற்றி சொல்லவோ ஏனோ கூச்சப்படுகிறார்கள்! இதில்கூச்சப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. தொண்டையில் சதை வளர்வதுப்போல்(Tonsils)இதுவும் ஒருவகைஅவ்வளவு தான்.
மலம் வெளியே வரும் பாதையில்(Anus) உள்ள இரத்தக் குழாய்கள் வீங்கி புடைப்பதால் வலிசொறி எடுத்தல்சில நேரங்களில் இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

இதில் மூன்று வகை உள்ளன.
1.1st degree- உள்மூலம் – இதில் இரத்தம் வடிதல் மட்டும் இருக்கும் வலி இருக்காது.
2.2nd degree- வெளிமூலம் – சிறிது வெளியே புடைத்திருக்கும்(கோலிக்காய் போன்று) இதில் இரத்தம் வடிதலுடன் வலியும் சேர்ந்து இருக்கும்.
3.3rd degree- பாதையின் கடைசிப் பகுதி(Anus) வெளியே வந்து  துருத்திக் கொண்டிருக்கும். வலிஇரத்தம் வடிதல் சொறி எடுத்தல் எல்லாமே இருக்கும்.

இவை ஏன் ஏற்படுகின்றன?
1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்தால்
2. வயதாவதால்(இரத்தக் குழாய்கள் வலுவிழந்து விடுகின்றன)
3. கர்ப்பக் காலங்களில் கர்ப்பப்பை மூலத்திலுள்ள இரத்தக் குழாய்களின் மேல் அழுத்துவதால்.
4. மலம் இருக்க வேண்டும் எனத்தோன்றும் போது(Natures Call) சில பல காரணங்களால் அதைத் தவிர்த்து விட்டு நேரத்தையும் நளையும் கடத்துவதால்.
5. இயற்கையிலேயே (Hereditary) அந்த இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் பலகீனமாக இருப்பதால் (weak and fragile veins)

மலம் கழிப்பதை தள்ளிப் போடுவதால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வோமா?

தினமும் கழிவுப் பொருட்கள் மலக்குடலை வந்தடையும் போது அது சற்றே இனக்கமாக நீர்ப்பதத்துடன் இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதைவெளியேற்றாவிட்டால் அதிலுள்ள நீரை மலக்குடல் திரும்ப உறிஞ்சி கொள்ளும்(Reabsorption)

அதனால் மலம் இறுகி கட்டியாகி விடுகிறது (Rock Like Mass) பின்பு அதை வெளியேற்ற நாம் கொஞ்சமாகவோஅதிகமாகவோ சிரமப்பட வேண்டியிருக்கும் (Straining at stools)அதனால் மலத்துவாரம் வழுவழுப்புத் தன்மையை சிறிது சிறிதாக இழந்து அந்தஇடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைந்து புடைக்க ஆரம்பிக்கின்றன விளைவு?  ‘மூலம்-Piles’

நிவாரணம்
1. “Sitz bath” எனும் ஒன்று Surgical Supplies கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அதில் சுடு நீர்(warm water) நிரப்பி அதில் நமது அடிப்பாகம் படுமாறு ஓர் அரைமணிநேரம் அமரலாம் Epsom Salt எனும் உப்பை வாங்கி அதில் ஓர்கை அளவு எடுத்து சுடுநீரில் கலந்தும் உட்காரலாம். இவை வலி இருக்கும்(Anus) பகுதியில் இரத்த ஓட்டத்தை கூட்டும்அதே வேளையில் புடைத்துள்ள மூலம்-பைல்ஸ்’ சுருங்கி வலியும் குறையும்.
2.அதேபோன்றுஓர் பிளாஸ்ட்டிக் பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பிஅதை ஒரு தலையனை உறைக்குள் வைத்து அதன் மேலும் அரைமணி நேரம் உட்காரலாம்.
3. அல்லது சுடுநீரில் சிறிது நேரம்ஐஸ்கட்டிகளின் மேல் சிறிது நேரம் என மாறி மாறி உட்காரலாம்.
4. விக்ஸ் வேப்போரப் (Vicks Vaporub) எனும் மருந்தை வாங்கி வலிக்கும் இடத்தைச் சுற்றி (Around the anus not into the anus)தடவலாம்.
5. மாம்பழ சீசனில் மாங்கொட்டைகளைச் சேகரித்து நிழலில் நன்றாக காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் மூல வலி அதிகமாக இருக்கும் போது, 2 கிராம் பொடியை தேனில் குழைத்து காலையும் மாலையும் சாப்பிடலாம்.
6. வலி அதிகமாக இருக்கும் போது ஓரிரு நாட்கள் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து விட்டுபழங்களாக உண்ணலாம்.
7. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது(Piles)  வந்துவிட்டால் வலி இருக்கும் போது இடது பக்கமாக ஒருக்களித்து படுக்க வேண்டும் . இவ்வாரு நான்கு மணிநேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரம் படுக்கலாம். அவ்வாறு செய்தால் பெருத்துவிட்டு கர்ப்பப்பை இரத்தக் குழாய்களின் மேல் அழுத்திக் கொண்டிருப்பது குறையும்அதனால் வலியும் குறையும்.
8. அதிகமாக வலி இருக்கும் போது அதிக காரம்போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
9. இறுதியாக நமது சொந்த முயர்சிகளினால் வலியோ இரத்தம் வடிதலோ நிற்காவிட்டால் மருத்துவரிடம் செல்வதே நல்லது ஏனென்றால் உங்களுக்குவந்திருப்பது மூலவியாதியா(Piles) அல்லது மூல வெடிப்பா(Fissures) அல்லது மலக்குடலில் உள்ள வேறு எதாவது கோளாறா (புற்று நோயாகக்கூட இருக்கலாம்) எனத் தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவரால் என்னவெல்லாம் செய்ய இயலும்...
1. உள் மூலமாக(internal piles) இருந்தால் இரத்தக் குழாய்கள் சுருங்குவதற்கும்,மூலவாயின் வழுவழுப்புத் தன்மையை அதிகரிப்பதறகும்இரத்தக் குழாய்கள் வலிமையைக் கூட்டுவதற்கும் மருந்துகள் தரலாம்.
2. வெளி மூலமாக (External piles)  இருந்தால் வெளியே துருத்திக் கொண்டிருக்கும். இரத்தக் குழாய்களை சுற்றி ஒருவித நூலால் இறுக்கிக் கட்டி (Tie off) அது தானாகவே சுருங்கி கிழே விழும் படி செய்யலாம்.
3.லேசர்(Laser) எனும் ஒளிக்கற்றையால் அந்த இடத்தை கருக்கி (Burn away) விடலாம்.
4.இறுதியாக ஒரு சிறிய ஆபரேஷன் மூலம் நீக்கிவிடலாம்.

மூலம் (Piles)வராமல் அல்லது குறைந்தது அடிகடி வராமல் தடுக்க இயலுமா?
முயன்று பார்க்கலாமே! அதில் தவறில்லையே

1. முதலில் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எப்படிஎவ்வளவு தலை போகிற வேலை இருந்தாலும் கழிவறை செல்லும் உணர்வு தோன்றி விட்டால் அதை புறக்கணிக்காது உடனே சென்று மலம் கழித்து விட வேண்டும்.
2.அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் உள்ளவர்கள் அதை ஈடுகட்டும் வகையில் சிறிது நேரம் நிற்கவோ அல்லது சற்று நடக்கவோ வேண்டும் ஒரு மணிநேரத்திற்கு  ஒருமுறை ஐந்து நிமிடங்கள் நடந்தாலேபோதுமானது மலப்பாதையின் அழுத்தம் குறையும்.
3.உங்கள் சக்திக்கு மீறிய பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்கெளரவம் பார்க்காது (Ego உள்ளவர்கள் கவனிக்க) பக்கத்தில் இருப்பவரின் உதவியை நாடுவதில் தவறில்லை.
ஒரே இடத்தில் நின்று சைக்கிள் மிதிக்கும் ஒருவித உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்(cycling on excersise bike)
4.உங்கள் சிறுநீர் மஞ்சள் கலரில்(Dark yellow) இல்லாமல் வெளிறிய மஞ்சள் கலரில்(Pale Yellow) இருக்குமாறு தண்ணீர் நிறைய பருக வேண்டும்.
5. உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் வகையில் தானிய உணவுகள்,காய்கறிகள்பழங்கள் ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
6. இறுதியாகமலத்துவாரத்தைச் சுற்றியுள்ள தசைகளும்(A ring of muscles) இரத்தக் குழாய்களும் (viens) பலம் பெறும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து செய்து வரலாம்.


வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!




முள்ளங்கி :முள்ளங்கிஜூஸ் பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.



மாதுளை :மாதுளைதோல் இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.



இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ் நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.

அத்திப்பழம் : அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.

வெங்காயம் :

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்
.

உடற்பயிற்சி: 
மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சள் : மஞ்சள் மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.


வாழைப்பழம் :தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.



சரியான நிலை மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


How to Buy Our Health Insurance...

Health insurance for individuals, families and the self‑employed...
How to buy health insuranceFinding health insurance in today's marketplace can seem impossible. If you're one of the millions of Indians who buys their own health coverage, individual health insurance can offer you a confusing array of options – not all of them good, and few that are inexpensive.
Sure, it may seem easy to find an agent who will offer you cheap health insurance, but here's the thing:health coverage isn't cheap if it doesn't adequately cover your expenses when you need it most.
Thanks to the recently passed health reform legislation, the landscape is changing for consumers. Millions of uninsured will soon have access to quality, low-cost health insurance. Their biggest challenge? Knowing their options so they can choose the right coverage.

Learn. Compare. Save.....

Browse  about insurancearticles  . Find out how to cut your health care costs, get coverage if you're self-employed, or use COBRA to keep your coverage.
Familiarize yourself with health insurance terms, and read the most frequently asked questions about health coverage.
Find out how health reform will affect your benefits and your budget. Or learn how it stands to help populations that historically have faced barriers to affordable health coverage, including women and the LGBT community.
Use free, no-obligation health insurance quotes to compare private health insurance in your area, plan benefits and coverage costs.

Plans May vary greatly State by state. Review your state guides to check your coverage options, including whether your state offers high-risk health insurance pools for those with pre-existing conditions.

Once you've done a few insurance quote comparisons to identify the best coverage for your needs, you can actually buy the low-cost plan that fits your needs. Buying online is increasingly popular because it's fast, secure and private.

How to buy health insurance

Buying health insurance can be complicated, but like a lot of things, it’s easier if you break the job into smaller tasks and work your way through them.

10 tactics for selecting an affordable individual health plan..
Buying individual health insurance is a big decision. It’s complicated, it’s expensive, and it can have big financial implications. Like a lot of things, it’s easier if you break the job into smaller tasks and work your way through them.

Make a list of services you and your family may need.

Consider your age, gender, and family medical history. Do you have any ongoing health conditions? Do you use any medications on a regular basis?
At a very minimum, plan to buy a high deductible health plan, which is also referred to as catastrophic coverage. In a nutshell, a high deductible plan offers a lower premium, and you pay most routine expenses out of pocket. If you have a serious accident or become seriously ill, your insurance coverage will kick in once you reach your deductible.

Learn how your state regulates insurance.

Click on your state with IRDA approval.. 
  • Tips for comparing health insurance policies.
  • Companies authorized to sell health insurance where you live and which of those companies sell individual policies.
  • Warnings about recent scams or companies that have been generating consumer complaints.
  • Information about state mandates – what a health insurance policy must cover in your state.

Know your rights under reform.

The Affordable Care Act (ACA) is already working in favor of health care consumers. For example, insurers are now prohibited from imposing lifetime limits on most benefits. 

Comparison shop.

You can contact an agent or get online quotes. Be aware that working with an agent may not give you the full picture. Agents generally work with a subset of the available insurance companies. Using an online site will generally show you more options to consider.
Also, be aware that each company offers a variety of policies. You need to compare the individual policies, not just the companies.

Don’t forget out-of-pocket costs.

Consider the premium and cost-sharing requirements, like deductibles, copayments or coinsurance. If the policy doesn’t cover the services you’re most likely to need, it’s not a bargain. On the flip side, you may end up paying more than you have to if the policy includes things you don’t need.

Consider what the policy includes …

Types of services – Here are some common health care services to consider when evaluating health insurance coverage:
  • Hospital care
  • Surgery (inpatient and outpatient)
  • Office visits to your doctor
  • Emergency room visits
  • Maternity care
  • Well-baby care
  • Immunizations
  • Medical tests
  • X-rays
  • Mental health care
  • Dental care and braces
  • Vision care and glasses
  • Prescription drugs
Facilities and Doctors – What hospitals, doctors and clinics that are in network for the policy you’re considering? Do you need a referral to see a specialist?
Medications – If you regularly use a certain medication, is that drug on the plan’s formulary or preferred drug list?

… and what the policy doesn't include

Health insurance policies may have a list of services that are specifically excluded. When evaluating a plan, look for limitations, exclusions, and restrictions.


IRDA Approved Companies for Mediclaim in India

  1. Apollo DKV Insurance Company Ltd.
  2. Aviva Life Insurance
  3. Bajaj Allianz General Insurance Co. Ltd.
  4. Birla Sun Life Insurance
  5. E-Meditek Solutions Limited
  6. Family Health Plan Limited
  7. Health India-Bhaichand Amoluk Insurance Services Pvt. Ltd.
  8. HSBC Health Insurance
  9. ICICI Lombard General Insurance Co. Ltd.
  10. Life Insurance Corporation Of India
  11. Max New York Life Insurance
  12. Med Assist India Ltd.
  13. MetLife India Assurance Company
  14. National Insurance Company
  15. Paramount Health Group
  16. Reliance Health
  17. Royal Sundaram Alliance Insurance Company Limited
  18. Star Health and Allied Insurance Company Limited
  19. Tata AIG
  20. The New India Assurance Co. Ltd.
  21. United Healthcare
  22. United India Insurance
Read More
  • Want to know more? Understand the basic definition in the article "What is Insurance"


Thanks to  Mrs. 

Health Insurance contributor.


Written By M.Ajmal Khan.

Monday, 11 March 2013

கத்தார் தோஹா மியூஸியம்!!ஒரு தவகல்..


கத்தார் மியூஸியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட்...கத்தார் தலைநகர் தோஹாவில் பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷ‌ங்களின் உலகம்.கடலுக்கு நடுவில் அதி நவீனமாக,உயர்ந்த தொழில் நுடபத்துடன் அழகுற நிர்மானிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் கத்தாரில் 2008ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 22ஆம் தேதி ஆரம்பிக்கபட்ட இந்த ஹைடெக் ஆர்கிடெக்சருடன் பிரம்மிக்கத்தக்கவகையில் பிரமாண்டமாக உலகில் மிக பிரபலமான முன்னணி கட்டிடக்கலை நிபுணர் IEOH MING PEIஎன்பவரால் வடிவமைக்கப்பட்டது.
பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷ‌ங்களின் உலகம்.


தெற்குப்பகுதி கடற்கரை ஓரம் மேன் மேட் ஐலேண்ட் ஆக அமையக்க்ப்பட்டுள்ளது.3000 சதுர மீட்டர் ‍‍(376740 சதுர அடி)ஐந்து மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது

மேற்கூரையை பார்க்கும் பொழுது இறைவனின் அளப்பறிய ஆற்றலை எண்ணி வியந்தேன்.இத்தகைய கறபனை வளத்தை மனிதனுக்குள் தான் இறைவன் அமைத்தான் என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.ஒரே மோல்டில்,மெட்டாலிக் எஃபெக்ட்டுடன் நிமிர்ந்து பார்ப்பவரை ஆச்சர்யப்படவைத்தது.
கண்ணாடித்தடுப்புக்குள் அமர்ந்து பார்த்தால் அருகிலேயே தெரியும் பரந்த கடல் தூரத்தே கட்டிடங்கள்,கடலில் ஜிவ் வென்று படகு சவாரி செய்யும் கத்தாரிகள்(இவர்களின் பொழுதுபொக்கே படகுசவாரிதான்)தகதகக்கும் வெயிலை மீறி வரும் ரம்யமான குளிர்..
அழகுமிகு பரந்து விரிந்த காரிடார்.ஹோட்டல்,ஷாப்பிங்மால் மற்றும் தியானக்கூடம் கஃபேட் ஏரியா என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட இங்கு நுழைவு கட்டணம் இல்லாவிட்டாலும் தீவிரமான பரிசோதனைக்குப்பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப்டுகின்றனர்.
வித்தியாசமான கோணத்தில் அகலமான படிக்கட்டுகள் கண்ணைகவருகின்றன.
நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலியெடுக்கும் உயரத்தில் மெட்டல் குதிரை கம்பீரமாக‌.
வைரம்,மற்றும் எமரால்ட் பதிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டின் நெக்லேஸ்.
தங்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட திருக்குர் ஆன்
டிரங்குப்பெட்டி.அதிகலை நயத்துடன் வருடங்கள் பல கடந்தாலும் பளீரிடுகின்றது.இங்கு செராமிக்,மெட்டல்,ஜுவல்,கிளாஸ் ,கிளாத் போன்ற கலெக்ஷன்களின் எண்ணிக்கை 2500க்கும் மேல் உள்ளது.
11 ஆம் நூற்றாண்டின் அரசருடைய ஆடை.விபரம்தரப்படவில்லை.தொட்டால் தூள் ஆகிவிடும்.பளபள கண்ணாடிப்பெட்டியினுள் பக்குவமாக பாதுகாத்து வருகின்றனர்.நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராவும்,ஊழியர்களும் பாதுகாப்பும் அனைத்துப்பொருட்களையும் கண்ணாடிக்கூண்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்து இருந்த விதத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அலங்கார கூஜா.பொன்னெழுத்து பொறிக்கப்பட்டு தகதகக்கின்றது.
12ஆம் நூற்றாண்டின் திரு குர் ஆன்.தங்க எழுத்துக்களில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் அதனுடைய கருத்துக்களைப்போல்,அறிவுரைகளைப்போல்,சத்தியங்களைப்போல் மின்னுகின்றது.தொட்டு மகிழவேண்டும்,நெற்றி பதிக்க வேண்டும்,சிலவரிகள் ஓதி திளைக்கவேண்டும் ஆவல் எழுப்புகின்றது.
பார்ப்பதற்கு உருவத்திலும்,நிறத்திலும் கிளியைப்போல் தோற்றம் தரும் ஃபால்கான் பறவை.தங்கதில் ஆன எனாமல்,ரூபி,எமரால்ட்,வைரம் சபையர் போன்றவற்றினால் செய்யப்பட்டது.இதன் அழகைப்பார்த்து அதனை விட்டு நகரவே மனதில்லை.இங்கே அணிவகுத்து நிற்கும் பொருட்கள் 7வது நூற்றாண்டில் இருந்து 19 வது நூற்றாண்டு வரை உள்ளவையாகும்.மூன்று கண்டங்களில் முக்கியமாக இந்தியா,வளைகுடா,ஸ்பெய்னில் இருந்து திரட்டப்பட்டவை ஆகும்
வேலைப்பாட்டுடன் கூடிய 13 வது நூற்றாண்டின் செராமிக் தட்டு.
ஆபரணங்கள்.பல நூற்றாண்டுகளுக்கு முந்தய டிசைன்கள் இப்பொழுது ஆண்டிக்,குந்தன் என்று புதிய பெயரில் பவனி வருகின்றது.
மெட்டலில் ஆன மிருகம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 6 March 2013

ஆரோக்கியமான அத்திப்பழம்!! ஒரு தவகல்..


அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், 
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம், 
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். 
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம். 
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.


 அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு  பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.

அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம்-4 கிராம், கால்ஷியம்-200 மி.கி, இரும்பு-4 மி.கி, வைட்டமின்-100 ஐ.யு, தயாமின்-0.10 மி.கி, கலோரி அளவு-260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.


பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலனோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.

இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.