கத்தார் மியூஸியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட்...கத்தார் தலைநகர் தோஹாவில் பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷங்களின் உலகம்.கடலுக்கு நடுவில் அதி நவீனமாக,உயர்ந்த தொழில் நுடபத்துடன் அழகுற நிர்மானிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் கத்தாரில் 2008ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 22ஆம் தேதி ஆரம்பிக்கபட்ட இந்த ஹைடெக் ஆர்கிடெக்சருடன் பிரம்மிக்கத்தக்கவகையில் பிரமாண்டமாக உலகில் மிக பிரபலமான முன்னணி கட்டிடக்கலை நிபுணர் IEOH MING PEIஎன்பவரால் வடிவமைக்கப்பட்டது.
பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷங்களின் உலகம்.
தெற்குப்பகுதி கடற்கரை ஓரம் மேன் மேட் ஐலேண்ட் ஆக அமையக்க்ப்பட்டுள்ளது.3000 சதுர மீட்டர் (376740 சதுர அடி)ஐந்து மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
கண்ணாடித்தடுப்புக்குள் அமர்ந்து பார்த்தால் அருகிலேயே தெரியும் பரந்த கடல் தூரத்தே கட்டிடங்கள்,கடலில் ஜிவ் வென்று படகு சவாரி செய்யும் கத்தாரிகள்(இவர்களின் பொழுதுபொக்கே படகுசவாரிதான்)தகதகக்கும் வெயிலை மீறி வரும் ரம்யமான குளிர்..
அழகுமிகு பரந்து விரிந்த காரிடார்.ஹோட்டல்,ஷாப்பிங்மால் மற்றும் தியானக்கூடம் கஃபேட் ஏரியா என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட இங்கு நுழைவு கட்டணம் இல்லாவிட்டாலும் தீவிரமான பரிசோதனைக்குப்பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப்டுகின்றனர்.
வித்தியாசமான கோணத்தில் அகலமான படிக்கட்டுகள் கண்ணைகவருகின்றன.
நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலியெடுக்கும் உயரத்தில் மெட்டல் குதிரை கம்பீரமாக.
வைரம்,மற்றும் எமரால்ட் பதிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டின் நெக்லேஸ்.
தங்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட திருக்குர் ஆன்
டிரங்குப்பெட்டி.அதிகலை நயத்துடன் வருடங்கள் பல கடந்தாலும் பளீரிடுகின்றது.இங்கு செராமிக்,மெட்டல்,ஜுவல்,கிளாஸ் ,கிளாத் போன்ற கலெக்ஷன்களின் எண்ணிக்கை 2500க்கும் மேல் உள்ளது.
11 ஆம் நூற்றாண்டின் அரசருடைய ஆடை.விபரம்தரப்படவில்லை.தொட்டால் தூள் ஆகிவிடும்.பளபள கண்ணாடிப்பெட்டியினுள் பக்குவமாக பாதுகாத்து வருகின்றனர்.நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராவும்,ஊழியர்களும் பாதுகாப்பும் அனைத்துப்பொருட்களையும் கண்ணாடிக்கூண்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்து இருந்த விதத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அலங்கார கூஜா.பொன்னெழுத்து பொறிக்கப்பட்டு தகதகக்கின்றது.
12ஆம் நூற்றாண்டின் திரு குர் ஆன்.தங்க எழுத்துக்களில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் அதனுடைய கருத்துக்களைப்போல்,அறிவுரைகளைப்போல்,சத்தியங்களைப்போல் மின்னுகின்றது.தொட்டு மகிழவேண்டும்,நெற்றி பதிக்க வேண்டும்,சிலவரிகள் ஓதி திளைக்கவேண்டும் ஆவல் எழுப்புகின்றது.
பார்ப்பதற்கு உருவத்திலும்,நிறத்திலும் கிளியைப்போல் தோற்றம் தரும் ஃபால்கான் பறவை.தங்கதில் ஆன எனாமல்,ரூபி,எமரால்ட்,வைரம் சபையர் போன்றவற்றினால் செய்யப்பட்டது.இதன் அழகைப்பார்த்து அதனை விட்டு நகரவே மனதில்லை.இங்கே அணிவகுத்து நிற்கும் பொருட்கள் 7வது நூற்றாண்டில் இருந்து 19 வது நூற்றாண்டு வரை உள்ளவையாகும்.மூன்று கண்டங்களில் முக்கியமாக இந்தியா,வளைகுடா,ஸ்பெய்னில் இருந்து திரட்டப்பட்டவை ஆகும்
வேலைப்பாட்டுடன் கூடிய 13 வது நூற்றாண்டின் செராமிக் தட்டு.
ஆபரணங்கள்.பல நூற்றாண்டுகளுக்கு முந்தய டிசைன்கள் இப்பொழுது ஆண்டிக்,குந்தன் என்று புதிய பெயரில் பவனி வருகின்றது.
மெட்டலில் ஆன மிருகம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment