Saturday, 7 September 2013

வ. உ. சிதம்பரம்பிள்ளை நாட்டிற்கு ஆற்றிய பணிகள் ஒரு சிறப்பு பார்வை...


கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் விடுதலைப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில் ஈடுபட்ட நேரு, இராசாசி போன்ற தலைவர்கள் அதற்கு விலையாக இந்த நாட்டையே பெற்றார்கள். இதுவா தியாகம்? தியாகம் என்பது முற்றிலுமாக தன்னை இழப்பது.


கட்டபொம்மன், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், பகத்சிங் என்று பலபேர் வெள்ளையரை எதிர்த்து, தன் நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தார்கள். அந்த தியாகிகளின் வரிசையில் அர்பணிப்போடு பிரிட்டிசு அரசை எதிர்த்து போராடியகடைசி தமிழன் தான் வ. உ. சிதம்பரம்பிள்ளை ! கப்பலோட்டிய தமிழன் என்றும் வ. உ. சி என்றும் அழைக்கப்படும் வ. உ. சிதம்பரம்பிள்ளை செப்டம்பர் 5 1872ல் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார். 

வ.உ.சி. மற்ற எந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நேராத அவலம் வ.உ.சிக்கு மட்டுமே நேர்ந்தது. அவர் ஒருவர்தான் பிரித்தானிய அரசின் ஒடுக்குமுறைககும் உள்ளானர். தான் சார்ந்திருந்த காங்கிரசு கட்சியின் துரோகத்திற்கும், சதிக்கும் ஆளானார்.



வ.உ.சி. வாழ்க்கையின் முற்பகுதி பிரித்தானிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சீரழிந்தது. அவரின் பிற்பகுதி அவர் சார்ந்த காங்கிரசு கட்சி செய்த துரோகத்தில் சிக்கி பாழானது.
வாழும் காலத்திலேயே, தான் கொண்ட கொள்கையின் இரண்டு நேர் எதிர் நிலைகளையும் சந்தித்த தியாகி, அநேகமாக வ.உ.சிதம்பரமாக மட்டுமாகத்தான் இருப்பார். 


பார்சி குமுகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரித்தானிய இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு வழங்கல் செய்து அந்த “சிற்றுண்டி ஒப்பந்தம் ‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.
இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா.

அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர். இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம். ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரித்தானியருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர். “வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் என்பது வணிகம் அல்ல, அது பிரித்தானிய வல்லாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய குழுமத்திற்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு தண்டல் செய்தார் வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.


கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரித்தானிய இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரித்தானிய அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய தொடங்கின . தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது. ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது. சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான்.
ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை. திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரித்தானிய ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது. வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர். ”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் சிக்கலை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி. மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வணிகர்கள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர். நிலைமை எல்லை மீறியது. நிருவாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் சிக்கலை வல்லாதிக்க எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த உத்தி வியக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரித்தானிய அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும். வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி. அன்றைய காங்கிரசு கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான். உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர பற்றாளரான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார். சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார். பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது. எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது. மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை. சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை.

எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை. சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார். அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி. காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள். கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது. சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்” என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார்.
இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி. அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரசு தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரசு உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரசு கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு. வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது. 19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27) பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரசு மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார். 1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று சிறை அதிகாரியிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரசு கைவிடவில்லை. திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.


1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் நீதி கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரசு மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி. பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரசு “சிறப்பிக்க ‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய மேல் ஆளுநராக இருந்த இராசாசி : “கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார். இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார். அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி. எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.



தூத்துக்குடி "கோரல் நூற்பாலை" தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளுக்காக போராடி வெற்றி கண்டார்.வெள்ளையர்களை எதிர்த்தமைக்காக கைது செய்ப்பட்ட வ.உ.சி தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டு ஆங்கில அரசு செய்த சித்தரவாதைகளை தாங்கிக்கொண்டார்.
ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக ஆங்கிலேயருக்கு எதிராக போராடிக் கொண்டே இருந்தார்.இத்தகைய பெருமை மிகு சுதந்திப் போராளி பல நூல்களை தமிழில் எழுதியிருக்கிறார். தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார். அவர் பெருமையை அரசாங்கங்கள் உணரவில்லை. நாமாவது உணர்வோம்.


ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 4 September 2013

மஹ்ஷர் மைதானத்தில் அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்!! ஒரு பார்வை...

மஹ்ஷர் வெளியின் அகோரம்..
                                                                 மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.
பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது.. 

1, சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) 
 
2,பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)  

3,தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்... 

அர்ஷ் என்பது அவனுடைய மிகப் பிரம்மாண்டமான ஆசனமாகும்.

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்...


அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.


.

1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.
மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.

நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்...

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.

3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்..

பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.
பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்..

இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.
யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)

காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.
எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!
பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.

6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.
மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்..

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.

ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,

1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.  இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.

நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.

அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!

அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

 தொகுப்பு : .மு.அஜ்மல் கான்.

Tuesday, 3 September 2013

Engineers India Limited (EIL) Recruit Fresh Engineers..



Engineers India Limited (EIL) was set up in 1965 to provide engineering and related technical services for petroleum refineries and other industrial projects. EIL is working under the administrative control of Ministry of Petroleum and Natural Gas (MoP&NG), Government of India. In addition to Petroleum Refineries, with which EIL started initially, over the years it has diversified and excelled in various other fields. EIL today has emerged as India’s leading design, engineering and turnkey contracting company providing a complete range of project services needed to conceptualize, plan, design, engineer and construct projects to meet the specific requirements of its clients in the following fields:
    undefined
  • Petroleum Refining
  • Petrochemicals
  • Pipelines
  • Offshore Oil & Gas
  • Onshore Oil & Gas
  • Terminals & Storages
  • Mining & Metallurgy
  • Infrastructure
EIL is capable to provide services from concept to commissioning in all the sectors listed above and its association with clients extend beyond the commissioning of their plants through monitoring the operation of each plant and accumulating feedback on its performance. EIL can provide its services in the following modes:
a) Project Implementation Services (EPCM) such as Conceptual Studies, Feasibility Studies, Detailed Project Reports, FEED Package, Basic Design Engineering Package (BDEP) Project Management, Planning & Scheduling, Cost Engineering, Process Design, Detailed Engineering, Procurement Services, Construction Management & Supervision, Commissioning and plant start‐up assistance etc.
b) Project Management Consultancy (PMC) Services
c) Specialist Services such as Heat & Mass Transfer Equipment Design, Engineering & Technology Development and Design, Environmental Engineering, Information Technology Services, Specialist Materials and Maintenance Services, Energy Conservation Services, Plant Operations & Safety including HAZOP Studies, Safety Integrity Levels (SIL) studies and Risk Analysis, Yield and Energy and Optimisation Studies.
d) Engineering, Procurement & Construction (EPC) / Lumpsum Turnkey (LSTK) Contracts
e) Open Book converted LSTK Projects
EIL has been involved in setting up of almost all the large projects that have come up in India in the Oil & Gas Sector in the last four decades and has also successfully executed several assignments in the middle‐east and south‐east Asia. EIL has to its credit a large number of major projects successfully completed and operating smoothly at the rated capacity, creating an array of satisfied clients.


We believe that the strength and success of the organization lies in its people. In the engineering consultancy business, people are not just the key assets, but also the key differentiators. Hence our motto is “Delivering Excellence through People”.
We provide opportunities to work in various specialized fields and diversified projects facilitating planned professional and career development. Growth opportunities are based on well defined career path, multi-Skilling and training interventions at each level. Most of our top executives have grown from within -- a testimony to the unlimited opportunities for growth available to the meritorious.  

We at EIL believe in getting the brightest people in and create an environment where they can perform their best. EIL has a state of the art learning center in Gurgaon called EIL – T&D Centre where a wide range of Functional / Behavioral / Managerial programs is conducted. We also collaborate with top engineering institute for knowledge exchange and technical training in specialized areas.
Our thrust areas include:
  • Performance Management which links business goals with individual performance goals.
  • Identification of competencies for critical roles through Competency Mapping study
  • Identifying competency gaps and bridging such gaps through appropriate training and developmental programs.
  • Building a strong Leadership Pipeline across all levels of the company that will enable accomplishment of EIL strategic objectives.
  • Advance Management programme for soft skill development
  • Build a Pervasive Business Intelligence integrating Electronic Document Management System (EDMS), Enterprise Resource Planning (ERP) and Knowledge Management (KM) System.
Apart from an excellent atmosphere for growth, the company offers a package of remuneration that compares with the best in the Indian industry. It includes basic pay and dearness allowance, contributory provident fund, conveyance maintenance reimbursements, leave fare assistance / encashment, holiday home facility, medical facilities for self and dependent, gratuity, self contributory post-retirement scheme and soft loans, etc.

Celebrating Life, Work, Family and Culture
EIL combines work with fun- and promotes a lifestyle which is based on work/life balance. We believe that there is an equal need for fun and celebrations in our life as there is for work and achievements.
Our team events, cultural celebrations and informal gatherings ensure that there is more to working at EIL than the official work.
We offer opportunities for celebrations of important festivals and provide opportunities for families of our team members to intermingle and understand the values of EIL.
Important celebrations in the EIL calendar include:
  • Annual Cultural get together
  • Annual Departmental Picnic
  • Annual Sports
  • Cricket, Football, Badminton, Carom Tournaments etc.
Current Opening 
For open recruitment advertisements are published in leading national dailies. Interested candidates meeting EIL's requirements can apply online. The candidates meeting the eligibility criteria are called for a written test. Based on their performance in the written test, they are further called for interview.

For campus recruitment, EIL visits the IITs, NITs and other reputed technical institutes of the country for recruiting final year engineering graduates/ post graduates, and prominent business management institutes for final year MBA students. It also recruits Chartered Accountants from various centers of the Institute of Chartered Accountants of India (ICAI). 




Management Trainee(Adv:HRD/RECTT./ADVT./2013-14/04)
  Advertisement Details
  Frequently Asked Questions
  Click to Apply   (Please read advertisement details before applying)

Last Date of Application: 10/9/2013

More Details:  Click http://recruitment.eil.co.in/






பன்றி இறைச்சி பற்றி இஸ்லாம் கூறும் ஒரு அறிவியல் உண்மை....

undefinedபூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும்,சகதியிலும், மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும்மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் -
வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில்வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும்பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில்நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய
மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம்
.
பன்றி. இதன் இறைச்சி ஹராம் என்பது இறைவேதத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிமாகிய நாங்கள்  ஒத்துக் கொள்கிறோம். ஆனால் மாற்றுமதத்தவராகிய என் நண்பர்களுக்கு  தெளிவாக்க அறிவியல்பூர்வமான விளக்கத்தை கூற வேண்டும் என்பதே இந்த கட்டுரையின்  நோக்கமாகும் .


உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான் நாம்  எல்லோருக்கும்  அறிந்த உண்மை .தனது நண்பர்களைஅழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி.அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் ''மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு'(அதாவது எனது மனைவியுடன் நீ, உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக
இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான்.இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடுஉடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும்அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் ''ஐலேண்ட்'என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் 'பண்பாடு'மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது
.


ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...


பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படும் விளைவு :

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.


"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each release an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excitement occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. Through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.


டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.


ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.

இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.

நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.

ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.


    இந்நோயின் இன்றைய சாட்சி இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ் ஆவார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்நோயை குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
    மேலதிகமான விபரங்களைப் பெற டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களின் Islamic Dietry Laws  எனும் வீடியோவைப் பார்வையிடவும். 

'பன்றி இறைச்சி உண்ணத் தடை' பற்றி அருள்மறை குர்ஆன்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்குஅத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர்சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.'
(அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 ஸூரத்துல் பகராவின் 173வது வசனம்).

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்து ஸூரத்துல் மாயிதாவின் மூன்றாவதுவசனத்திலும், அத்தியாயம் ஆறு ஸூரத்துல் அன்ஆம்- 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு
ஸூரத்துன் நஹ்ல் - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் -இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாகஅமைந்துள்ளன.


பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்குஎடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்றுபைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லெவிட்டிக்கஸ் வசனம் 7 முதல் 8 வரையிலும், பைபிளின்அத்தியாயம் 14 - டியுட்டர்னோமி வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடைபற்றி அறிவிக்கின்றன.மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - புக் ஆஃப் இஷையா 2 முதல் 5 வரையுள்ளவசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு :

பன்றி இறைச்சி ஹராம் என அல்குர்ஆனில் கட்டளையாக குறிப்பிடப்பட்டிருப்பதனால் முஸ்லிம்கள் அதனை விலக்கிக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத பலர் அதனை ருசியான உணவாக உட்கொள்கின்றனர். 

    முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, இஸ்லாமிய மார்க்கமானது மனிதனை புனிதனாக்க இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும். எனவே அதில் ஆகுமாக்கப்பட்டவைகளும் (ஹலால்), தடுக்கப்பட்டவைகளும் (ஹராம்) மனிதனது நலனுக்காகவே வழங்கப்பட்டவையாகும். அவற்றிற்கான காரணங்கள் (Logic & Reasons) சிலவேளை வெளிப்படலாம் அல்லது நமக்கு வெளிப்படுத்தப்படாமலே கூட இருக்கலாம். எவ்வாறாயினும் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய யாவருக்கும் (அவர் எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்) இக்கட்டளைகள் நன்மையே பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிற நோய்களைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்படுவது போல், இந்நோய் குறித்து பரவலாக பிரச்சாரம் நடத்தப்படவில்லை. எனவே இதன் அபாயம்  பொது மக்களுக்கு (ஏழை எளிய மக்களுக்கு) விளங்க  அரசு  சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்  மேற்கொள்ளப்படவேண்டும் .


ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

ரிசர்வ் வங்கியின் 23 வது கவர்னராக தமிழரான ரகுராம் கோவிந்த் ராஜன் !!



மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் கோவிந்த் ராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்கு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார்.

 ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நிதி அமைச்சகத்தில் சேர்ந்தார். கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவர் சர்வதேச பொருளாதார நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்துள்ளார். முன்னதாக பண வீக்கத்தை கட்டுப்படுத்த அவர் அளித்த பரிந்துரைகளை மத்திய ரிசர்வ் வங்கி ஏற்று அமல்படுத்தியது. அவர் ஏற்கனவே பல பொருளாதார ஆலோசனைக் குழுக்களில் இருந்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில் அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். அவர் இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பப்படுகிறது.

'தற்போது நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண பல திட்டங்கள் உள்ளன. ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அனைவருக்கும் வங்கிச் சேவை, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு ஒரேநாளில் தீர்வு காண மாய மந்திரகோல் எதுவும் நம்மிடம் இல்லை. அதேநேரத்தில் இந்த பிரச்னைகளுக்கு ரிசர்வ் வங்கியால் தீர்வு காண முடியும். ஒவ்வொரு பிரச்னையாக படிப்படியாக தீர்த்து வைக்க திட்டமிட்டுள்ளோம்" என்று ரகுராம் ராஜன் கூறினார்.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

Monday, 2 September 2013

How to Keeping your kids Active....

Most of the  parents blame video and computer games for this, as well as the Internet in general. While those things have certainly contributed to a more sedentary lifestyle, it is really up to the parents to keep children active as much as possible. One of the best ways to do this is to stay active with them. Young children often play outside with others in the neighborhood, but there are some children that do not fit in with their peers, and there are also children that grow up in neighborhoods where there are no other children or where it is not safe to play outside without adults.

For these children, and for others that are not getting enough exercise, parents must work to keep them active. Taking them to the park is helpful, but after a while this ceases to be interesting, so parents must find other ways of ensuring that their children stay active. One way to do this is to have them take a class such as martial arts or ballet where they will get consistent exercise. If a parent can take the class with them, that is even better, but some classes are designed only for children. Naturally, a kid should not be forced to enroll in something that he or she will not enjoy, regardless of whether exercise is needed.

For children that do not want to enroll in this kind of structured activity, though, there are other options. Playing Frisbee or horseshoes or badminton with parents or other relatives can help a kid stay active, as can outdoor play with friends. This does not mean that a child should be forbidden to play video games or watch television. However, the time spent doing those things should be limited. This is especially true if the kid is not in a physical education class at school or if he or she makes no effort at all to get any kind of exercise. Children that stay active are less likely to be obese, and they often have fewer health problems as they get older, making staying active very important for them both now and in the future.About The Author 


Dave Roth runs a leading outdoor game and a sports product site that sells horseshoes, volleyball, and Cornhole gear, go to http://www.corntossmania.com right away.

Get more information regarding corn hole game http://thebestshoppingblog.com/games-shopping/why-is-cornhole-popular-with-college-kids.html


Read More Articles from the "Parenting" Category: 

Activities for Active Toddler Boys
by Rachel Paxton


Build Character with This Triple A Recipe
by Jean Tracy


5 Baby Shower Gifts That Mom Will Love
by Cynthia Marcano


Beating The Stay At Home Mom Stereotypes
by Stephanie Foster


Parenting Young Adults -- A Psycho-spiritual Approach
By Sharon Shore


Is Your Baby's Size Normal
By Sarah Veda


4 Blocks to Building a Lifelong Relationship With Your Daughter
By Sandy Heinz


Housework with Toddlers - Here Comes Trouble!
By Carrie Lauth


Guide To Massaging New Born Babies
By Sharon Hopkins


Teaching Handwriting to Children
By Nick Ramsay


Collection By M.Ajmal Khan.