Thursday, 19 December 2013

மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் பற்றிய தவகல்!! ஒரு பார்வை...


உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.


மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை. 

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்பது Omega3 Fatty Acid மருந்து வகை மாத்திரை. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு மாரடைப்பு போன்ற நோய்கள் வருவது இல்லை என்ற அடிப்படையில், இம்மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பிரதேச மக்கள் காலை, மதியம், இரவு என எல்லா நேரத்திலும் மீன் அல்லது மீன்சார்ந்த உணவையே உண்கின்றனர். எனவே இந்த பாதுகாப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த Omega3 என்ற மாத்திரை E P A மற்றும் D H A மருந்துகளை கொண்டது. இந்த உணவு சார்ந்த மருந்தை தினமும் உட்கொண்டால் ரத்தநாளத்தின் உட்சுவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ‘டிரைகிளிசரைட்ஸ்’ என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. H D L என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால் L D L என்ற கெட்ட கொழுப்பு அளவு குறைவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வகை மருந்துகள் ரத்தக் குழாய் நோய்களை மட்டுமின்றி, ஹார்ட் பெயிலியர், இருதய மின்னோட்ட குறைபாடுகளையும் சரிசெய்கிறது. எனவே இந்த வகை மருந்து இருதயத்திற்கு பல வகை நன்மைகளை தருவது உண்மையே!!

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.


கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி...

பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன. அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக இருந்தாலும், அவர்களுக்கு தெரியாமலேயே கருசிதைவு ஏற்பட்டுவிடும். இத்தகைய கருசிதைவு 20 வாரங்களில் நடைபெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக கருசிதைவு ஏற்படும். அதற்கு காரணம், அவர்கள் பலவீனமாக இருப்பது, கவனக்குறைவுடன் நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது போன்றவைகளே. இவை அனைத்து தேவையில்லாமல் நடப்பது அல்ல. அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்து கொள்வதிலேயே இருக்கின்றன. அதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரணமாக விடுகின்றனர். ஆகவே அவ்வாறு கருசிதைவு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கர்ப்பமாக இருக்கும் போது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். அதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமல்லாமல், சில நாட்கள் முதுகு வலியும் ஏற்படும். அதிலும் அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி, மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி போல் இருக்கும். இந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.
* இரத்த போக்கு அதிகமாகவோ, குறைவாகவோ, விட்டுவிட்டோ, முதல் மூன்று மாதங்களில் ஏற்படுமாயின், அதுவும் கர்ப்பம் கலைந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளே. இவ்வாறு அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும் போது, உடனே மருத்துவரை அணுகி, கருப்பையை சுத்தம் செய்துவிட வேண்டும். இல்லையென்றால், கருப்பையில் இருந்து கருப் போல் உருவாகும் இரத்த கட்டிகள் முழுதும் வெளியேறாமல், கருப்பையில் நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும். பின் அது தாயின் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் மற்றொரு முறை கர்ப்பமாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.
* கர்ப்பத்தின் போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழந்தை இருப்பதை ஓரளவு உணர முடியும். ஆனால் கர்ப்பம் கலைந்துவிட்டதென்றால், அந்த உணர்வு போய்விடுவதோடு, மார்பில் வலி மற்றும் அதிக படியான பசி போன்றவை ஏற்படும். அவை அனைத்து ஒவ்வொருவரின் உட நிலையைப் பொறுத்தது. ஆனால் இந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏதேனும் இது போன்ற எண்ணங்களோ அல்லது அறிகுறிகளோ ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.
இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.


தொகுப்பு  : அ .தையுபா  அஜ்மல்.

Monday, 16 December 2013

ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே ??!! எதற்காக? ஒரு சிறப்பு பார்வை ....


அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள்.  அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்....  இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை :(  கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல 'சரியான காரணங்கள்', பல 'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்!

சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்.... 


முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள்,  குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!!   இதற்கு காரணங்கள்தான் என்ன?

சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை  அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?




என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா?  இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை?   எதில் குறை? இல்லை  எதில் பிழை????  கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால் அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும், குழந்தை பிறந்தும் ஒரு பெண் படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி, சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்கு போகும் பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக தென்பட்டது. அவைகளிங்கே !



பெண்கள் வெளியில் செல்லும்போது…

ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.
”நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவே லர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல் வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களை யும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.

இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அஹ்கா முன்னிஸா’ எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள்.
இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்க வேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டா லும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதை களிலும், கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்.

தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது :

தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்??? 

மனைவியர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, மன நிறைவை  கொடுக்காது தவறிவிடுகின்றனர். பொன்னும் பொருளும் மட்டும் ஒரு பெண்ணிற்கு  போதுமென்றால் அது தன் தாய்வீட்டிலோ அல்லது தனது சம்பாத்தியத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமே? ஆனால் அதையும் தாண்டி பாசமென்ற  ஒன்றும், காதலென்ற அதீத அன்பும் அனைத்துப் பெண்களுக்கும் தேவைப்படுமென்பதை எத்தனை கணவர்மார்கள் அறிந்து வைத்துள்ளார்கள்???  கணவன் மனைவியென்றால் என்ன? புரிந்துணர்ந்து, ஈருடல் ஓருயிராய் வாழ்வதுதானே?

சரி அதுக்கும் ஓடி போவதற்கும் சம்பந்தம் என்ன என கேட்கலாம்.
மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மைக் குறைவுள்ள கணவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டினால் தனக்கு கேவலமென்று மறைப்பதோடு மனைவின் தேவைகளை நிறைவேற்றத் தவறி, வீட்டிற்குள்ளே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் குறைகளையும் குற்றங்களையும் மனைவி மீதே சுமத்தி அன்றாட வாழ்வையே அவதிக்குள்ளாக்குவது தனது பலவீனத்தை மறைக்க! இவர்களை போன்றவர்களை அல்லாஹ் எவ்வாறு கண்டிக்கிறான் எனப் பாருங்கள்...
ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள் - 2:231
தம் மீது எக்குற்றமும் இல்லை என  அனைத்திற்கும் மனைவி நியாயம் தேட முற்பட்டாலும்  'கல்லானாலும் கணவன்' என  முத்திரையையும் குத்தி விடுகிறது இச்சமூகம்.  இதை விடக் கொடுமையானது  இச்சமுதாயம் இந்த விஷயத்தில் ஆண்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி பெண்களின் மேல் பழி போடுவதுதான்!  குழந்தை பெறவோ, உடல் சுகம் கொடுக்க முடியாதவளோ உடனே கணவனால் விவாகரத்து கொடுக்க அனுமதிக்கும் சமூகம் பெண்களுக்கு மட்டும்  இதை மறுப்பதோடல்லாமல் மார்க்கம் கூறியபடி அக்கணவனுடன் வாழமறுத்து வேறொரு திருமண செய்ய எத்தனித்தாள் எனில் அவள் மீது அவதூறு கூறுகிறது....அஸ்தஃபிருல்லாஹ்.... 
 எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்- 24:4

அவதூறு செய்வோருக்கு இறைவன் கொடுத்த தண்டனையைப் பாருங்கள்! தேவையற்ற அவதூறுக்கு பயந்து தானே இஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ நேரிடுகிறது?  இச்சமூகம்தானே அவள் தவறான பாதைக்கு செல்வதை தீர்மானிக்கிறது?

மேலும், நண்பர் என்று அதீத நம்பிக்கை வைத்து அதிகமாக வீட்டுக்குள் அனுமதிப்பது! கணவர் இல்லாத நேரத்திலும் தனியே வர அனுமதிப்பது, வெளியில் போக அனுமதிப்பது,  இதனால் கணவரை விட அதிகம் நேரம், நெருக்கம் நண்பருடன்  அதிகமாகிறது... அத்துடன் நண்பர்களின் குணாதிசயங்களை அதிகமாக மனைவியிடம்  கூறுவதால் காதல், பாசம் உள்ளுணர்வில் ஏற்பட ஆண்களே வழி வகுத்துக் கொடுக்கின்றனர். இதனாலும் தவறுகள் அதிகரிக்கிறது.

அடுத்து தனக்கான செல்வமொன்று வீட்டிலிருப்பதையே மறந்துவிட்டு,  செல்லென்னும் அழைபேசி வழியே ஆண்டுக் கணக்கில் உறவாடிவிட்டு பணம் பணம் என்று செல்வத்தின் பின்னேயே ஓடி ஓய்கின்றனர். இங்கே இவள்  சொல்லியழக்கூட ஆளில்லாமல், சாய்ந்து அழக்கூட தோளில்லாமல் வாட்டம் கண்டு, வாழ்வே ஆட்டம் கண்டதுபோல் உணருகிறாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல கணவர்கள் செய்யும் செயல்களை!

குறைகளை களைந்தெறிவோம்:

சிந்திக்க வேண்டும்! குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடி போன பின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீர்களா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி????

இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும். உங்கள் மனைவியர்கள் மீது முதலில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வரவேண்டும். அடுத்து அவள் மீது அதீத பாசம், அன்பு கொள்ளவேண்டும்.
உங்களிடம் மட்டுமே தன் தேவைகளை நிறைவேற்ற நினைக்கும் அவளுக்கு தேவையானவைகளை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அது வாங்கிக்கொடுக்கும் பொருள்களில் மட்டுமல்ல!  உங்களுக்கு [மார்க்கமும் அனுமதிக்காத] பிடிக்காத காரியத்தில் ஈடுபட்டால் கண்டியுங்கள் முடிந்தவரை அன்பாக! வெளியிலிருந்து வந்தால் மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். சிடுசிடுப்புடன் இருக்காதீர்கள். உப்பு சப்பு இல்லாத விசயங்களுக்கெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். அன்பொழுக பேசாவிட்டாலும் அணுசரனையாக பேசுங்கள்.

அவளின் சில விசயங்களுக்காகவும் விட்டுக்கொடுங்கள். வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் களைப்படைந்திருந்தால்  பரிவாக நடந்துக்கொள்ளுங்கள்.  அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.  அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள். அவளுக்கு பிடித்தபடி உடையணிந்துக் கொள்ளுங்கள். வீட்டுப்பொறுப்பு, குடும்ப நிர்வாக விசயத்தில் அனைத்திலும் அவளை கலந்துக் கொள்ளுங்கள். அவளுக்குத் தேவையானவற்றிற்கு  கஞ்சத்தனம் பாராது செலவழியுங்கள். படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை உங்கள் உற்ற நண்பனிடம்கூட வெளிப்படுத்தாதீர்கள். அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறத்தில் உறவாடுங்கள். சிலருக்கு கண்ணியமான பேச்சுகள் பிடிக்கும், சிலருக்கு நகைச்சுவை பேச்சுப் பிடிக்கும், சிலருக்கு கொஞ்சம் கொஞ்சலாக பேசுவது பிடிக்கும். எது பிடிக்குமென்று உணர்ந்துக் கொண்டு அதுபோல் நடந்துக் கொள்ளுங்கள்.
அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்- 4:19
இவையனைத்தும் எங்கு தடைபடுகிறோ அல்லது தடைபடுவதுபோல் எண்ணப்படுகிறதோ அங்கே தவறுகள் உள்நுழைந்து மனக்கட்டுப்பாட்டை தட்டுக்கெட வைக்கிறது. அன்பையும் ஆறுதலையும் இனக்கவர்ச்சியையும் ஈர்ப்பையும் உணர்ச்சிகளையும் ஊக்கம் தரும் வார்த்தைகளையும் எதிர்ப்பார்க்கும் மனங்கள், அது கிடைக்காது ஏங்கித் தவிக்கும்போது அவையத்தனையும் ஒட்டுமொத்தமாய் கிடைக்கப் பெறும்போது, அதாவது கிடைக்கப் பெறுவதைபோல் உணர்த்தப்படுவதால்  ஓடிப்போக நினைக்கிறது... பின்வரக்கூடிய விளைவுகள் புரியாமல் அதோடு தன் வாழ்க்கை அர்த்தமற்றுப் போவதை உணராமல்!!

நீங்கள் படிக்கும் காலத்தில் பெண்களோடு பழகியதுபோல்தான்  தன் மனைவியும் பிற ஆண்களோடு பழகியிருப்பாள் என்ற வீணான தவறான சந்தேகத்தால் உங்கள் வாழ்க்கையின் அழகியலை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஒளிவு மறைவின்றி உங்களிடம் ஒப்படைத்த விசயங்களை வைத்து அவர்களை 'இடுக்கு கிடைக்கும்போதெல்லாம் கொடுக்கு' போடாதீர்கள். அப்புறம் உங்களிடம் அனைத்தையுமே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.. உங்களைவிட்டு ஒதுங்கியே வாழ நினைப்பார்கள்.. அப்படியே  உங்களுடன் ஒட்டியிருந்தாலும் மனதளவில் ஒட்டாமலே இருப்பார்கள்..
 மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்- நபிமொழி
அதுமட்டுமல்லாது நடத்தைகளில் பழக்க வழக்கங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களறியாது அவர்களை கண்காணியுங்கள். இக்காலகட்டத்தில் ஓடிப் போவோருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது செல் எனும் கைப்பேசியே! இனக்கவச்சியையும், இல்லாத ஒழுக்கங்களையும் காட்டிக்கொடுக்கிறது. சினிமாவும் சீரியல்களும். அதை அப்படியே செயல்படுத்த மன்னிக்கவும் கூட்டிக் கொடுக்கிறது கைபேசியும் கணினியும். அவற்றுடன் அவர்கள் அதிக நேரம் உரையாடல்கள் தொடர்ந்தால் அந்த நம்பரை செக் செய்துக் கொள்ளுங்கள்.. வீணாக சந்தேகப்பட்டு அப்புறம் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

[ இவையனைத்தும் கணவர்கள் மனைவிமார்களுக்கு மட்டும் செய்யக்கூடியவைகள் அல்ல மனைவிகளும் கணவர்மார்களுக்கு செய்யக்கூடியவைகள் [சிலதைத்தவிர]. ஏனெனில் தவறுவது பெண் மட்டுமல்ல ஆணும்தான்! ஆனால் ஆணின் இச்செயல்கள் மட்டும் அழுத்தம் கொடுக்கப்படாமலே அமுக்கப்பட்டுவிடும். பெண்ணின் இவ்விழிச் செயல் ஆண்டாண்டு காலம் அசிங்கமாக பேசப்படும்..]

இவையெல்லாம் மீறி ஒன்றுமில்லாத காரணங்களுக்காக குடும்பத்தைவிட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு, யார் எக்கேடு கெட்டாலென்ன, மானம் காற்றில் பறந்து கந்தலானாலென்ன, தன் சுகம் மட்டுமே முக்கியம் என்று தறிகெட்டு தடம்மாறி போகிறவர்களை, உற்றார்களோ உறவினர்களோ அல்லது அந்த ஊர் ஜமாத்தோ ஊர்காரர்களோ ஏற்றுக்கொள்ளக் கூடாது. தண்டனை கடுமையானால் தவறுகள் குறையக்கூடும். என்ன செய்துவிடுவார்கள் நாளு நாட்கள் பேசுவார்கள், அப்புறம் 6 மாதமோ 1 வருடமோ ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டு வந்தால் என்ன செய்யப் போகிறார்கள் என்ற நினைப்புதான் பலரை இத்தவறுகளுக்கு தூண்டுகோளாய் அமைகிறது. அதேபோன்று மனைவியிருந்தும், கணவர்கூடவேயிருந்து தவறு செய்பவர்களுக்கும் தக்க படிப்பினை தரவேண்டும். [தெரியாமல் அறியாமல் செய்துவிட்டேன், இனி அத்தவறுகளின் பக்கம் போகமாட்டேன் என்று இறைவன்மீது ஆணையிட்டு தவறை உணர்ந்தவரை தவிர]
9:106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அதைவிடுத்து இறைவனுக்காக ஏற்றுக்கொள்றேன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு உள்ளுக்குள் ஒரு ஒப்பாத வாழ்க்கை வாழ்வோர் நிறைய!  "நீ உனக்காக வாழ்! நான் எனக்காக வாழ்க்கிறேன்! ஆனால் நாம் இருவரும் இணைந்திருந்தபடியே!" என்று  வாழ்க்கை நடத்துவோருமுண்டு. நஊதுபில்லாஹி மின்ஹா. இறைவன் காப்பற்றவேண்டும். அவனே அனைத்தையும் அறிந்தவன்..

உங்கள் துணையோடு உங்களுக்கு சந்தேகமா? அல்லது உடன்படாமைகள் தொடர்கிறதா? தீர்க்கப் பாருங்கள்; அல்லது தீர்த்து விடுங்கள் [அச்சொ உயிரையல்ல] அவ[ரி]ளின் உறவை. கூடவே வைத்துக்கொண்டு குத்திக்குத்திக் காட்டுவதில் வாழ்க்கைதான் வலுவிழந்து போகும். குடும்பம்தான் நிம்மதியிழந்து தவிக்கும். ஒன்று சுமூகமான முடிவெடுங்கள்! அல்லது மார்க்கம் சொல்லித் தந்தவாறு பிரச்சனைக்கு  தீர்வு காணுங்கள். வல்ல இறைவனின் உதவியோடுஇருவருமே நிம்மதி காணுங்கள்; இல்லறத்தை நல்லறமாக்குங்கள்; இல்லத்தை இனிமையாக்குங்கள்; சமுதாயத்தையும் நல்வழிப்படுத்துங்கள்!
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் 2:284

தொகுப்பு  : அ .தையுபா  அஜ்மல்.

சிக்குன் குனியா காய்ச்சல் தாக்குதல் பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை...





 தற்போது தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா தாக்குதல் அடிமட்டத் தொழிலாளி முதல் ஐ.டி. துறை வரை பரவலாக இருக்கிறது.தமிழ்நாட்டிலும் இன்னும் சில மாநிலங்களிலுமாக பல லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப் பட்டி இருக்கிறார்.














முதுமையில் சிலரைத் தாக்கக்கூடிய ஆர்த்திரைடிஸ் நோய்கூட உடலின் ஏதாவது ஒரு மூட்டுப் பகுதியை மட்டுமே பொதுவாகப் பாதிக்கிறது. ஆனால், சிக்குன் குனியா உடலில் உள்ள எல்லா மூட்டு இணைப்புகளிலும், அசைக்கவே அஞ்சும் அளவுக்கு வலி உண்டாக்குகிறது. உட்கார, எழுந்திருக்க, படுக்க, கை கால்களை அசைக்க விரும்பினால், ஒவ்வொரு அசைவையும் கடும் வலியுடன்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிரமப்பட்டு எழுந்து நடந்தால், ஏறத்தாழ குரங்கிலிருந்து உதயமான ஆதி மனிதனைப் போல சற்றே மடித்த காலும், கூனுமாக நடக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்த நோயின் பெயரை 'முடக்கிக் குறுக்கும் நோய்' என்று 'ப்ரிக்க ஸ்வாஹிலி' மொழியில் சூட்டியிருக்கிறார்கள்.




சிக்குன் குனியா காய்ச்சல் :
கூன் குனியாவினால்கடுமையான சுமார் 103 கிரி காய்ச்லில் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை கடுமையான ஜூரத்திற்கு உட்படுகின்றார்கள், கூடவே உடலில் உள்ள அத்தனை மூட்டுக்களிலும் தாங்க முடியாத வலி. இந்த மூட்டு வலி ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை 
 தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர்  துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம்  தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம்  குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்.காய்ச்சல்  சிகிச்சை என்பது காய்ச்சலைக்  குறைக்கும் மருந்துகளும், வலி நிவாரணிகளும் மட்டுமே! உடல் உழைப்பிலான  தினக்கூலி வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் சிக்குன் குனியாவால்  பாதிக்கப்பட்டால், குடும்பமே மிகப் பெரும் துயரத்துக்கு உள்ளாகும்.






சிக்குன் குன்யா காய்ச்சல் குணமடைய ...
அதிமதுரம், நற்சீரகம், சடமாஞ்சி, சாரணை வேர், தோல் நீக்கிய வில்வ வேர், முடக்கத்தான், நிலவேம்பு, குருந்தொட்டி சமூலம், நல்ல மிளகு, துளசி, தூதுவளை, ஆடாதோடை இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து நல்லா இடிச்சி பொடியாக்கி அதோட தண்ணி சேத்து மூணுல ஒரு பங்கா வத்துற வரை கொதிக்க வையி...' 'இந்த கஷாயத்த வடிகட்டி மூணு வேளையும் சாப்பிட்டு வர... எல்லாம் சரியாப்போகும்'

சிக்குன் குனியாவுக்கு யார் பொறுப்பு? 

அரசின் கையாலாகாத்தனத்தாலும், நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறானஎண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இது மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய வேண்டாத பீதியையும் கலக்கத்தையுமே ஏற்படுத்துவதுடன்அரசு மீதும் மக்களுக்குள்ள நல்லெண்ணெத்தையும் சீர்குலைப்பதாகவே அமையும். எனவே அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்கூன் குனியா பரவலாகஉள்ளதை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு, அந்நோய் பரவால் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்தமுனைய வேண்டும்."

கொசுக்களைக் கட்டுப்படுத்தமுடியாத அரசாங்கங்கள்தான் பொறுப்பு. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சிக்குன் குனியா பாணி நோய்கள் வருவதில்லையே, ஏன்? பொது சுகாதாரத்தை அங்குள்ளஅரசுகள் ஒழுங்காகப் பேணுவதுதான் காரணம். கட்டமைப்பு என்ற பெயரில் பிரமாண்டமான சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நிகராக பொது சுகாதாரத்துக்கு நமது அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை.


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .



Thursday, 12 December 2013

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம்!! ஒரு சிறப்பு பார்வை ....

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றியபோது:
 
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு புதிய பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் துவங்கப்படும். இயற்கையான மரணத்துக்கு குறைந்த ஆயுள் காப்பீட்டு திட்டமும் இதில் அடங்கும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்படுவதோடு,  அவர்களுடைய பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை நவீனமயமாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என தான் நம்புவதாகவும் கூறினார்.

வளைகுடா வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள், அவர்கள் எந்நேரமும் இந்தியாவுக்கு திரும்பி வருவார்கள். அதனால் அவர்கள் அனுப்பும் பணம் மட்டும்தான் அன்னியசெலாவாநியாக கருதப்படுகிறது, ஆனால் வளைகுடாவில் வேலை செய்பவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்தாலும் இந்தியர்களே.....
வெளிநாடு வாழ் இந்தியர்களில் 40 % வளைகுடா மற்றும் மலேசிய சிங்கபூர் நாடுகளில் உள்ளனர். ஆனால் அந்நிய செலாவணி இங்கு அனுப்புவது 70% அவர்கள் தான்.இவர்களை விட அதிகம் சம்பாதித்து, அங்கேயே சொத்து வாங்கி குடிமக்களாகி விடும் அமெரிக்க ஐரோப்பா வாழ் இந்தியர்கள் அனுப்புவதோ வெறும் 30 %,ஆனால் அரசோ அமெரிக்க வாழ் இந்தியர்களைத்தான் NRI க்களாகக் கருதி எல்லா சட்டமும் வசதிகளும் செய்கிறது. பாவம் சில ஆயிரம் ரூபாய்க்காக வாழ்க்கையையே பாலைவனத்தில் தொலைப்பவர்கள் அரசுக்கு கிள்ளுக்கீரை.பல லட்சம் இந்தியர்களுக்கு சிறிய தூதரகம்.அதிலும் தமிழ் தெரிந்தவர்கள் இருப்பதில்லை சிடு சிடுவென எரிந்து விழுந்து உயிரேடுப்பதே அவர்கள் வேலை?ஏனெனில் நம்மவர்கள் பணபலம் ,அரசியல் ஆதரவு இல்லாதவர்களாயிற்றே!!

 அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அந்த தேசத்து குடி உரிமை பெற்று அங்கேயே வாழும் இந்தியர்கள்தான் NRI என்று செல்லமாக அழைக்கபடுகிரார்கள் நமது அரசாங்கத்தால். என்ன செய்வது.....


வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் உலகி்ல் முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட உள்ளதாக அமீரகத்திற்கான இந்தியத்தூதர் எம்.கே.லோகேஷ் அவர்கள் , அமீரகத் மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் கமால் பாஷாவிடம் தெரிவித்தார். அபுதாபி இந்திய தூதரகத்தில் புதிய தலைமுறை அமீரகச் செய்தியாளர் கமால் பாஷாவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின்போது அமீரகத்தில் துவக்கப்படவுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் ப்றறி விளக்கினார். 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, அவர்களது பணி சார்ந்த ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பது, தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.‌ இந்நிலையில், இதுபோன்ற பணிகளுக்காக, வெளிநாடு செல்லும் இந்தியர்களின் நிலையும் இதேதான். இதை மாற்ற நினைக்கும் மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்நிதயர்களுக்கான துறை, இத்தரப்பினருக்காக, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பலன்கள் கொண்ட சிறப்புத் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில், இந்த திட்டம் முன்மாதிரியாக தொடங்கி வைக்கப்படுகிறது.
“இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. எனவே விரைவில் இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவிருக்கிறோம்.” என ஐக்கிய அரபு எமிரேட்-டுக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் கூறினார்.

கடைநிலை ஊழியர்களுக்கு சிறப்புத்திட்டம்: 
மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் சாதாரண தொழிலாளர்களாகவே வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, காப்பீடு, ஓய்வூதியம் இல்லாத நிலையில் அதுபோன்றவற்றை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தில் சேர்ந்து ஆண்டுக்கு 5,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தும் ஆண்களுக்கு 2,000 ரூபாயையும், பெண்களுக்கு 3,000 ரூபாயையும் இந்திய அரசு அவர்களது கணக்கில் 5 ஆண்டுகளுக்கு செலுத்தி வரும். 5 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்புவோருக்கு ஆயுள் காப்பீடு, மறுவாழ்வு உதவித் தொகை, ஓய்வூதியம் ஆகிய மூன்று வகையான பலன்கள் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணி செய்து தாயகம் திரும்பும் கடை நிலை ஊழியர்களுக்கு (வகுப்பிற்கு கீழ் படித்திருக்கிறஇ பாஸ்போர்டில் ECR ( Emigration Check Required )முத்திரையுள்ளவர்களுக்கு இத்திட்டம்)பலனளிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்தியத் தூதர் எம்.கே.லோகேஷ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. எனவே விரைவில் இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவிருக்கிறோம்.’ வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இந்த திட்டத்தில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான இந்தியத் தூதர் கேட்டுக்கொண்டுள்ளார் திட்டத்துக்கு இந்தியர்கள் வரவேற்பு: இந்த சிறப்புத் திட்டத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் வாழும் இந்தியர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்னர். 
மேலும் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவிருக்கிறோம் என ஐக்கிய அரபு எமிரேட்-டுக்கான இந்திய தூதர் லோகேஷ் தெரிவித்தார். வெளிநாட்டில் பணி செய்து தாயகம் திரும்பும் கடை நிலை ஊழியர்களுக்கு பலனளிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இந்த திட்டத்தில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான இந்தியத் தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சிறப்புத் திட்டத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் வாழும் இந்தியர்களிடம் மிகுந்த வரவேற்பு காணப்படும் என்று எதிர்பர்க்கப்படுகிறது..

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Thursday, 5 December 2013

கோழி முட்டையின் ஊட்டச்சத்துக்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை...


http://falloutofline.files.wordpress.com/2008/12/eggs1.jpgகோழியின் முட்டை மூன்று முக்கிய பாகங்கள் அடங்கியுள்ளது. ஓடு, முட்டை வெள்ளை பகுதி மற்றும் மஞ்சள்கரு ஆகியவையாகும். முட்டை ஓடு சுண்ணாம்புப் படிகங்கள் மற்றும் புரதங்களைக் கொண்டுள்ளது. ஓட்டிற்கு உள்ளே பிசுபிசுப்பான நிறமற்ற திரவம் முட்டை வெள்ளை பகுதியாகும். இது முட்டையின் மொத்த எடையில் 60% ஆகும். முட்டையில் உயர் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டை உணவுப் பொருட்களில் கெட்டியாவதற்கும், குழம்பாக்குவதற்கும், மணம் மற்றும் நிறம் சேர்ப்பதற்கும் பயன்படுகிறது.



முட்டை கலவை 
எடை சதவிகிதம்
பகுதிஎடை
முட்டை ஓடு8 – 11
வெள்ளைப் பகுதி56 - 61
மஞ்சள் கரு27 – 32
முட்டை வெள்ளை பகுதி மற்றும் மஞ்சள் கருவின் சதவிகித தொகுப்பு 
 
ஊட்டச்சத்துமுட்டை வெள்ளைமுட்டை மஞ்சளகரு
தண்ணீர்88.048.0
புரதம்11.017.5
கொழுப்பு0.232.5
கனிமங்கள்0.82.0



முட்டை வெள்ளைப் பகுதி மெல்லிய மற்றும் தடித்த பகுதிகளால் உருவானது. புதிய முட்டையின் வெள்ளைப் பகுதி 20 – 25% (1-5 நாட்கள் பழையது). முட்டை வெள்ளையில் தண்ணீர் தவிர அதிக புரதங்கள் உள்ளன. பல்வேறு வகையான புரதங்கள் முட்டை வெள்ளையில் உள்ளன. 
மரபியல் 
முட்டையின் வெள்ளை 55% புரதங்களைக் கொண்டுள்ளது. இது பாஸ்போ கிளைக்கோ புரதம் ஆகும். இவை A1, A2  மற்றும் A3 ஆகிய மூன்று கூறுகளை உருவாக்குகிறது. இவை பாஸ்பரஸ் அளவில் மட்டும் மாறுபடுகின்றன.

முட்டை வெள்ளை புரதம் 
முட்டை வெள்ளைப் பகுதி 13% புரதம் கொண்டுள்ளது. இது பாஸ்பரஸ் மற்றும் சல்பர் கொண்டுள்ளது. 

ஓவமுகாய்டு
இது ஒரு கிளைக்கோபுரதம். இதில் முட்டை வெள்ளைப் புரதங்கள் 10% உள்ளது. 

ஒவமுசின்
முட்டை வெள்ளைப் பகுதியின் பிசுபிசுத் தன்மைக்கும் அதன் தடிமனுக்கும் இதுவே காரணமாகும்.

லைசோசைம் 
முட்டை வெள்ளையில் 3.5% லைசோசைம்  புரதம் உள்ளது. இந்த நொதியூக்கி பாக்டீரியாவின் செல் சுவர்களை கரைக்கும் திறன் கொண்டது. இது பயோட்டினை இணைக்கிறது மேலும் விட்டமின் கிடைக்காமல் செய்கிறது.

அவிடின் 
முட்டை வெள்ளை புரதத்தில் அவிடின் 0.05% ஆகும். முட்டையை இயல்பு மாற்றி வெப்பப்படுத்தும்பொழுது அல்லது சமைக்கும்பொழுது பயோடின் பாதிக்கப்படுவதில்லை. 

ஒவோகுளோபுளின்
இந்த புரதம் G1 மற்றும்  G2 என்ற இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் சிறந்த காரணிகளாகும்.

ஒவோஇன்ஹிபிடார்
முட்டை புரதம் 0.1% ஒவோஇன்ஹிபிடார்ல்உருவாக்கப்பட்டது

முட்டைமஞ்சள்கரு

முட்டைமஞ்சள்கருவின்திடம் 50% ஆகும்.
உலர் எடை அடிப்படையில் முட்டை மஞ்சள் கரு சதவிகித தொகுப்பு
ஊட்டச்சத்துதுகள்கள்பிளாஸ்மா
கொழுப்பு3477-81
புரதம்6018
சாம்பல்612
முட்டை மஞ்சள் கருவில் முக்கிய புரதம் லிபோப்ரேடின்ஸ் (கொழுப்பு புரதம்). இதில் லிப்போவைட்டிலின் மற்றும் லிப்போவைடெலினின் உள்ளது. முட்டை மஞ்சள் கருவில் உள்ள லிப்போ புரதங்கள் பாலேடு போன்ற பொருட்கள் தயாரிக்கும்பொழுது குழம்புப்பதத்தை கொடுக்கிறது.

முட்டை மஞ்சள் கருவில் கொழுப்பு அமிலத்தின் கலவை
கொழுப்பு அமிலம்கொழுப்பு அமிலத்தின் மொத்த %
C16:0 பாமிற்றிக் அமிலம்23.5
C18:0 ஸ்ட்டியரிக் அமிலம்14.0
C18:1 ஒலியிக் அமிலம்38.4
C18:2 லினோலியிக் அமிலம்16.4
C18:3 லினோலெனிக் அமிலம்1.4
C18:4 அராக்கிடோனிக் அமிலம்13
முட்டை / 100 கிராம் ஊட்டச்சத்து மதிப்பு
ஊட்டச்சத்துஅளவுஊட்டச்சத்துஅளவு
ஆற்றல் (கிலோ கலோரி)173.0கரோட்டின் (µ /கிராம்600*
புரதம் (கி)13.3தயாமின் (மிகி)0.1
கொழுப்பு (கி)13.3ரிபேஃபிளாவின் (மிகி)0.4
கால்சியம் (மிகி)60.0நியாசின் (மிகி)0.1
பாஸ்பரஸ் (மிகி)220.0ஃபோலிக் அமிலம் (µ /கிராம்78.3
இரும்பு (மிகி)2.1  
*+360 மிகி விட்டமின் A



கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் உள்ளது 362.00 கலோரிகள் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)
கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் உள்ளது:

- 0.60 கிராம் கார்போஹைட்ரேட் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 32.40 கிராம் கொழுப்பு (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 16.80 கிராம் புரத (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

கனிமங்கள்

கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் உள்ளது:

- 145.00 மிகி கால்சியம் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 7.60 மிகி இரும்பு (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 0.00 மிகி மெக்னீசியம் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 580.00 மிகி பாஸ்பரஸ் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 120.00 மிகி பொட்டாசியம் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 60.00 மிகி சோடியம் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

வைட்டமின்கள்

கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் உள்ளது:

- 0.98 மிகி வைட்டமின் ஏ (ரெட்டினால் அல்லது கரோட்டின்) (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 0.30 மிகி வைட்டமின் பி 1 (thiamin, தையமின்) (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - 100 உணவு)

- 0.50 மிகி வைட்டமின் B2 அல்லது ரிபோப்லாவின் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 0.24 மிகி வைட்டமின் B6 அல்லது பைரிடாக்சின் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 0.00 வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் மிகி (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)

- 0.00 மிகி வைட்டமின் ஈ அல்லது தொக்கோபெரோல் (கோழி தான் முட்டையின் மஞ்சள் கரு 100 கிராம் - உணவு 100)



முட்டையின் தரத்தை மதிப்பிடுதல் 

முட்டைக் கரு ஒளி வழி ஆய்வு 
முட்டையின் தரத்தை ஒளி கரு வளர்நிலை காணல்மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒளியில் கரு வளர்நிலை காணல் மூலம் தரத்தை மதிப்பிடலாம்.
முட்டை ஓட்டில் விரிசல் 
காற்று செல்லின் அளவு 
ஆல்புமினின் உறுதித் தன்மை 
மஞ்சள் கருவின் நிலை மற்றும் இயக்கம் 
இந்தப் புள்ளிகள், அச்சுகள் மற்றும் வளரும் கருவின் சாதகத் தன்மை 
நீரில் மிதக்கவிடுதல் 
முட்டை தண்ணீரில் முழ்கினால் அது நல்ல தரமான முட்டை. தரமற்ற முட்டைகள் நீரில் மிதக்கும். (காற்று செல் அதிகமாவதன் காரணமாக). இது நீரில் மிதந்தால் முட்டை எடை இழந்துவிட்டது  என்று பொருள்.

வெண்கரு தர அலகு 
தரமான முட்டையாக இருந்தால் 72 வெண்கரு தர அலகும் தரம் குறைந்தவை 36-60 ஆகவும் இருக்கும்.

வெள்ளை குறியீடு 
முட்டையின் வெள்ளைப் பகுதியின் அடர்த்தியின் உயரத்தைக் கொண்டு விட்டம் வகுக்கப்பட்டு வெள்ளை குறியீடு கொடுக்கப்படுகிறது.

மஞ்சள் கரு குறியீடு 
மஞ்சள் கரு அகலம் மற்றும் உயரத்தைக் கணக்கிட மஞ்சள் கரு குறியீடு உதவுகிறது.

தரம் பிரித்தல் 
முட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் நுகரப்படாமலிருந்தால் அவை கெட்டுவிடும். சரியான பராமரிப்பு இல்லாவிட்டால், தரம் குறைந்துவிடும்.

சேமிப்பின் போது சிதைவடைதல் 
இனப்பெருக்க திறனுள்ள முட்டைகள், இனப்பெருக்கத் திறனில்லாத முட்டைகளைவிட விரைவாக சேதமடைகின்றன. சேமிப்பின்பொழுது இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு சேதமடைதல் நடைபெறுகிறது. முட்டையின் வெள்ளைப் பகுதி பாகு நிலைக்கு மாறுகிறது மற்றும் வேகமாக பரவுகிறது. காற்று கலம் மற்றும் கன அளவு அதிகரிக்கிறது. நீர் இழப்பு, கார்பன் டை ஆக்ஸைடு, புரதம் உடைந்து முட்டை வாசனை மோசமடைகிறது.
பாக்டீரியா சிதைவு நடைபெறுகிறது.

முட்டை புரதங்கள் மீது வெப்ப விளைவு 
வெப்பமூட்டும்போது முட்டை புரதத்தின் இயல்பு மாறுகிறது. அதன்பின் முப்பரிமாண பிணைப்பு உருவாகிறது. முட்டை வெள்ளைப் பகுதியின் முக்கிய புரதம் ஓவல்புமின் புரதத்தை வெப்பமூட்டும்பொழுது சிறு குமிழ் புரதமாக இயல்பு மாறுகிறது. முட்டையை குறிப்பிட்ட வெப்பநிலைக்கும் அதிகமாக வெப்பமூட்டும்பொழுது வெள்ளைப்பகுதியில் சுருக்கங்கள் ஏற்பட்டு தடிமனாகிறது.

முட்டைகளைப் பாதுகாத்தல் ...
முட்டையை உடைத்தல், பிரித்தல் மற்றும் பாஸ்டியர் முறை பாதுகாப்பு மற்றும் உறைவித்தல் ஆகிய வழிமுறைகள் உள்ளன. முழு முட்டை அல்லது மஞ்சள் கருவை 60 – 61.50 C ல் பாஸ்டியர் முறையில் 3.5 – 4.0 நிமிடம் எந்த மாற்றமும் செய்யாமல் வைக்க வேண்டும். பாஸ்டியர் வழங்கப்பட்ட முழு அல்லது பகுதி முட்டையை கேன்கள் அல்லது பொருத்தமான கொள்கலனில் நிரப்பி குளிரூட்டும் அறையில் 290C காற்றோட்டத்தில் வைக்க வேண்டும். உறைவித்தல் 48 முதல் 72 மணிநேரம் வரை நடைபெறும். ஆபத்தை விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க முட்டைகள் பாஸ்டியர்  செய்யப்படுகின்றன.

குளிர்பதன சேமிப்பு 

முட்டைகள் பொதுவாக 1.50C முதல் 00C அதாவது அதனுடைய உறைநிலையைவிட சற்று அதிகமான குளிரில் சேமிக்கப்படுகிறது. உயர்தர முட்டைகள் மட்டுமே சேமிக்கப்படுகின்றன. சேமிப்பு அறை 85 – 90% காற்றோட்டம் மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்டு விரும்பத்தகாத வாசனைகள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. குளிர்பதன சேமிப்பின் மூலம் முட்டைகளின் தரத்தை 6 மாதத்திற்கு தக்க வைத்துக் கொள்ளலாம். குளிர்பதன சேமிப்பில் வைப்பதற்கு முன் முட்டைகளை ஒளி கனிம எண்ணெயில் மூழ்கச் செய்ய வேண்டும்.

உலர்த்துதல் 
முழு முட்டை அல்லது தனியாக மஞ்சள் கரு அல்லது முட்டையின் வெள்ளைப் பகுதியை பாதுகாக்கும் சிறப்பான முறையாகும். உலர்த்துதல் மூலம் முட்டை நீண்ட நாட்களுக்குப் புதிது போல் உள்ளது.

முட்டை மதிப்புக் கூட்டல்
வறுத்த முட்டை
வறுத்த முட்டையின் வடிவம், அதன் வெள்ளைப் பகுதியின் தடிமன் மற்றும் அதை சமைத்த வெப்பநிலையையும் பொறுத்தது. வறுத்த முட்டையை தயார் செய்ய ஏற்ற வெப்பநிலை 126 – 1370C ஆகும்.

கூழ்
கூழ் கெட்டியாவதற்கு முட்டை பயன்படுகிறது. தரமான கூழ் முட்டைகள், பால், சர்க்கரை மட்டுமே கொண்டிருக்கும். கூழில் இரண்டு வகைகள் உள்ளன. கலக்கப்பட்ட மற்றும் மென்மையான கூழ் ஆகும்.

முட்டை வெள்ளை நுரை
இது முட்டை பொருட்கள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆம்லேட்கள் மற்றும் சாஃபல்ஸ்
ஆம்லெட்டுகள் சாதாரணமாக அல்லது நுரையுடன் இருக்கும். சாதாரண ஆம்லெட்களில் முட்டை மஞ்சள் கரு மற்றும் வெள்ளைத் தனியாகப் பிரிக்கப்படுவதில்லை. முழு முட்டை வாசனை பொருட்கள் சேர்த்து கலக்கப்படுகிறது. நுரை ஆம்லேட், முட்டையின் வெள்ளைப் பகுதி மற்றும் மஞ்சள் கரு தனித்தனியாக பிரிக்கப்பட்டு கலக்கப்படுகிறது. ஆம்லெட் தயாரிப்பதற்கு குறைவான வெப்பத்தில் சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லா பக்கமும் நன்றாக வேகும்.

சாஃபல்ஸ்
இது நுரை முட்டையை ஒத்துள்ளது. இதை தவிர தடித்த வெள்ளை சாஸ்  அடித்தளம் மற்றும் இதனுடன் சீஸ், காய்கறி கூழ் மற்றும் அரைக்கப்பட்ட இறைச்சி சேர்க்கப்படுகிறது. டெசர்ட் சாஃபல்ஸ் இனிப்பானது. இதில் எலுமிச்சை, ஸ்ட்ராபெரி மற்றும் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. சாஃபல்ஸ் நீராவியில் வேகவைக்கப்படுகிறது.

முட்டை தூள்
உலர்த்துதல் முட்டை பாதுகாப்பில் ஒரு முறையாகும் மற்றும் முட்டை தூள் வணிக முட்டை பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுவதால் இதற்கு தேவை இருந்து கொண்டே இருக்கும். முட்டை வெள்ளை பகுதி, மஞ்சள் கரு அல்லது முழு முட்டையை பாஸ்டியர் முறை வழங்கப்பட்டபின் ஏதாவது ஒரு உலர்த்துதல் முறையில் உலர்த்த வேண்டும். முட்டையை உலர்த்துவதற்கு தெளிப்பு முறை உலர்த்துதல் பொதுவான முறையாகும். திரவ முட்டையை தெளிப்பான் மூலம் உலர்த்தும் அறைக்குள் வெப்பக் காற்று மூலம் தெளிக்க வேண்டும். தூள் முட்டை குளிர்விக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது. முட்டை வெள்ளையில் குளுக்கோஸ் உள்ளது. நீரிழப்பு ஏற்பட்ட முட்டை வெள்ளை அல்லது முழு முட்டையை உறையும் நிலைக்குச் சற்று அதிகமான வெப்பநிலையில் வைத்தால், குளுக்கோஸ் முட்டை புரதத்துடன் சேரும்பொழுது பழுப்பு நிறமாக மாறுகிறது. இதைத் தடுக்க குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் மூலம் குளுக்கோஸ் நீக்கப்பட வேண்டும் அல்லது உலர்த்துவதற்கு முன் ஈஸ்ட் நொதித்தல் மூலம் அகற்றப்பட வேண்டும். உலர்ந்த முட்டைகளை சீல் செய்த கொள்கலனில் வைப்பது சிறந்தது. உலர்ந்த முட்டை வெள்ளை சேமிக்கும்போது மிகவும் சீராக உள்ளது. 180C குறைவான மாற்றங்களே ஏற்படுகின்றன. உலர்ந்த முட்டைகள் உபயோகிக்கும் முன் சரியான அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. முறையாக சேமித்தால் உறைய வைத்த முட்டையும், உலர்த்திய முட்டையும் ஓடுடன் கூடிய முட்டைபோல் நடைமுறையில் சமமான ஊட்டச்சத்து மதிப்பு கொண்டவை.

சமையலில் முட்டையின் பங்கு 
தேவையான பொருட்கள் சிலவற்றை சேர்ப்பதன் மூலம் முட்டையில் பல உணவுப் பொருட்கள் தயாரிக்கலாம். தனியாக அல்லது மற்ற உணவுகளுடன் சோ்த்து உபயோகிக்கும்பொழுது இது முக்கிய புரத உணவாகிறது.

முட்டை ஊறுகாய் தயாரித்தல் 
முட்டை

நீரில் கழுவவும்

800C வெப்பநிலையில் உப்பு (2.0%) மற்றும்
a
சோடியம் பைகார்பனேட் (2.0%) சேர்க்கவும்
a
கொதிக்க வைக்கவும்
a
குளிர வைத்து உரிக்கவும்
a
கிருமி நீக்கிய முட்கரண்டி கொண்டு                          கிருமி நீக்கம் செய்த கத்தி
காடை முட்டைகளை துளையிடவும்                      கொண்டு கோழி முட்டைகளை
a
ஊறுகாய் குழம்பு சேர்க்குமுன் வெட்டிக் கொள்ளவும்
a
எண்ணெய்யை சூடேற்றவும்
a
மற்ற தேவையான பொருட்களை சேர்த்து வதக்கவும்
a
முட்டை சேர்க்கவும்
a
குளிரவைக்கவும்
a
இரசாயன சேர்க்கைகள் சேர்க்கவும்
a
ஆன்டிஆக்சிடன்ட் (0.1%) வினிகர் (8.0%) சேர்க்கவும்
a
புட்டியிடவும்
a
சேமிக்கவும் (குளிர்பதன வெப்பநிலையில்)

முட்டை ஊறுகாய்
தேவையான பொருட்கள்
அளவு
கோழி முட்டைகாடை முட்டை
முட்டை2 முட்டை6 முட்டை
மிளகாய் தூள்7 கி7 கி
இஞ்சி2 கி2 கி
பூண்டு2 கி2 கி
மிளகு2 கி2 கி
கடுகு பொடி1 கி1 கி
இலவங்கப் பட்டை1 கி1 கி
உப்பு5 கி5 கி
எண்ணெய்15 கி15 கி
செய்முறை :
முட்டையை தண்ணீரில் நன்கு கழுவி பின்னர் 800C ல் 2% சாதாரண உப்பு மற்றும் 2.0%  சோடியம் பைகார்பனேட் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் எளிதாக உரிக்க முடியும். வேகவைத்து உரித்த பின்னர், சுத்தமான முட்கரண்டி கொண்டு காடை முட்டைகளை துளையிட வேண்டும். கோழி முட்டைகளை சுத்தமான கத்தி கொண்டு ஊறுகாய் குழம்பு சேர்ப்பதற்கு முன் துண்டாக்க வேண்டும். எண்ணெய்யை சூடேற்றி மசாலா பொடிகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வேகவைத்த முட்டைகளை இதனுடன் சேர்க்க வேண்டும். பாதுகாப்பு பொருட்களை சேர்த்து புட்டியிட வேண்டும்.

முட்டை புட்டு
தேவையான பொருட்கள்அளவு
கோழி முட்டைகாடை முட்டை
முட்டை2 முட்டை8 முட்டை
பால்2 கப்2 கப்
சர்க்கரை10 தேக்கரண்டி10 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ்சில துளிகள்சில துளிகள்
செய்முறை :
  • பாலை சர்க்கரையுடன் சேர்த்து கொதிக்க வைத்து பின் குளிர வைக்க வேண்டும்.
  • முட்டையை எசன்சுடன் சேர்த்து நுரை வரும் வரை கலக்கவும்.
  • கலக்கப்பட்ட முட்டையை குளிர்ந்த பாலுடன் சேர்க்கவும்.
  • இந்தக் கலவையை புட்டு அச்சிற்குள் ஊற்றவும்.
  • பின்பு இவற்றை 30 நிமிடம் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். தொடர்ந்து குளிர வைக்கவும்.
  • குளிர வைக்கப்பட்ட புட்டுவை குளிர்பதன வெப்பநிலையில் வைக்கவும்.
முட்டை கூழ்
தேவையான பொருட்கள்
அளவு
கோழி முட்டைகாடை முட்டை
முட்டை3 முட்டை12 முட்டை
பெரிய வெங்காயம்22
பச்சை மிளகாய்22
தக்காளி33
மிளகாய் பொடி¼ தேக்கரண்டி¼ தேக்கரண்டி
கடலை எண்ணெய்50 மிலி50 மிலி
கடுகுதேவையான அளவுதேவையான அளவு
உப்புருசிக்கேற்பருசிக்கேற்ப

செய்முறை :
  • முட்டையை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக்கவும்.
  • தக்காளி, மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  • நறுக்கிய வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்க்கவும்.
  • பிறகு 2 நிமிடம் வதக்கவும். முட்டைகள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும்.
முட்டை போண்டா
தேவையான பொருட்கள்
அளவு
கோழி முட்டைகாடை முட்டை
முட்டை3 முட்டை12 முட்டை
கடலை மாவு100 கி100 கி
மிளகாய் தூள்1 தேக்கரண்டி1 தேக்கரண்டி
உப்புருசிக்கேற்பருசிக்கேற்ப
எண்ணெய்வதக்கவதக்க
செய்முறை :
  • கடலை மாவு சலித்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • பேஸ்ட் போல் ஆவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  • முட்டையை வேகவைத்து உரிக்கவும்.
  • உரித்த முட்டையை கடலைமாவில் முக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொறிக்க வேண்டும்.
முட்டை கட்லெட்
தேவையான பொருட்கள்
அளவு
கோழி முட்டைகாடை முட்டை
முட்டை3 முட்டை12 முட்டை
வேகவைத்த உருளைக்கிழங்கு22
கொத்தமல்லி இலைகள்5 கி5 கி
சிறிதாக நறுக்கிய வெங்காயம்11
கடுகு1 தேக்கரண்டி1 தேக்கரண்டி
உப்பு மற்றும் மிளகு தூள்ருசிக்கேற்பருசிக்கேற்ப
பச்சை மிளகாய் (நறுக்கியது)11
எண்ணெய்வதக்குவதற்குவதக்குவதற்கு
செய்முறை :
  • வேகவைத்த முட்டையை இரண்டாக்கவும்.
  • உருளைக்கிழங்கு வேகவைத்த, பிசைந்து தயாராக வைக்கவும்.
  • சுவைசேர்க்க  சிறிதாக நறுக்கிற வெங்காயம், நறுக்கிய மிளகாய், கொத்தமல்லி இலை, மிளகுதூள், உப்பை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.
  • உருளைக்கிழங்கு மசியலை இரண்டாக வெட்டிய முட்டையின் மேல் பூச்சாக வைக்கவும்.
  • இதை நன்கு கலக்கிய முட்டையில் நனைத்து பின் தூளாக்கிய ரொட்டியில் நனைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொறிக்கவும்.
முட்டை பஞ்சு கேக்
தேவையான பொருட்கள்
அளவு
கோழி முட்டைகாடை முட்டை
முட்டை3 முட்டை12 முட்டை
சர்க்கரை120 கி120 கி
வெண்ணெய்60 கி60 கி
மைதா மாவு120 கி120 கி
சமையல் சோடாஒரு சிட்டிகைஒரு சிட்டிகை
வெந்நீர்தேவையான அளவுதேவையான அளவு
உப்புஒரு சிட்டிகைஒரு சிட்டிகை
சாரம்சில துளிகள்சில துளிகள்
செய்முறை :
  • முட்டையை எசன்சுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
  • மைதா மாவை சலித்து அதனுடன் உப்பு சமையல் சோடா சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • மைதா மாவுடன் வெண்ணெய் சர்க்கரை தண்ணீர் மற்றும் கலக்கிய முட்டையை சேர்க்கவும்.
  • இதைக் கேக் அச்சில் ஊற்றி 167 – 1900Cல் 20 நிமிடம் சமைக்க வேண்டும்.
முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
அளவு
கோழி முட்டைகாடை முட்டை
முட்டை3 முட்டை12 முட்டை
வெங்காயம்22
தக்காளி55
பூண்டுசிறய துண்டுசிறிய துண்டு
இலவங்கப்பட்டைசிறிய துண்டுசிறிய துண்டு
கடுகு½ தேக்கரண்டி½ தேக்கரண்டி
உப்புருசிக்கேற்பருசிக்கேற்ப
எண்ணெய்25 மிலி25 மிலி
செய்முறை :
  • தக்காளி, மிளகாய்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  • எண்ணெய்யை கடாயில் ஊற்றி சூடாக்கவும்.
  • பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சாறை கடாயில்  ஊற்றி 5 நிமிடங்கள் சமைக்கவும்.
  • இந்தக் குழம்பில் முட்டையை சேர்த்து மேலும் 5 நிமிடம் சமைத்து இறக்கவும்.




ஆதாரம் 
http://foodwithapinchoflove.files.wordpress.com/2008/05/6-custard-served.jpg
http://farm3.static.flickr.com/2391/1594686738_6662a19eda.jpg
www.dkimages.com/.../Chocolate-Souffle-7.html
www.salkkaaram.com/2007/12/egg-pickle.html
www.himfr.com
http://farm4.static.flickr.com/3175/2757456628_5765e87c47.jpg
http://d2.biggestmenu.com/00/00/bc/264ec1639bb99948_m.jpg
http://farm1.static.flickr.com/13/15930006_ccd3cb6986.jpg?v=0

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.