Friday, 9 May 2014

நபிகள் நாயகம் முஹம்மது ( ஸல் ) அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA) !! ஒரு வரலாற்று பார்வை..

பெயர்               :  முஹம்மது( பாட்டனார் சூட்டிய பெயர் . 
                                (அரபு மொழியில்  புகழப்படுபவர்   என்று பொருள் )

பிறந்த தேதி   :  கி.பி. 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திங்கள் கிழமை
பிறந்த இடம்  : மக்கா - சவூதி அரேபியா

தகுதி:

  •  40 வயதில் நபி( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தேர்வு செய்யப்பட்ட மனிதர்)
  •  ரஸுல் - இறைத்தூதர் ( புதிய சட்ட அமைப்பு வழங்கப்பட்டவர்)
  •  இறுதித் தூதர்
  • கல்வி :எழுதப்படிக்க கற்காதவர்
  • தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்.(முஹம்மது நபி (ஸல்) ஆமினா அம்மாவின் கர்பத்தில் ஆறு மாத சிசுவாக இருக்கும் போது அப்துல்லாஹ் மரணமடைந்தார். )

தாயார் : 

ஆமினா பின்து வஹப்
(முஹம்மது நபியின் ஆறாவது வயதில் தாயார் ஆமினா இறையடி சோந்தார்)

பாட்டனார் (கள்) :-
அப்துல் முத்தலிப் -பின் - ஹாஸிம் பின் - அப்து மனாப் பின்- குஸை
பெரிய தந்தை : அபூதாலிப்

 திருமணம்..
முதல் திருமணம் 25 வயதில் 40 வயதுடைய விதவைப்பெண் கதீஜா ( ரலி)  அவர்களை திருமணம் செய்தார்கள். 25 ஆண்டு மணவாழ்விற்குப்பின் கதீஜா (ரலி) மரணமடைந்தார்கள்.

மற்ற திருமணங்கள் கதீஜா (ரலி) வின் மரணத்திற்குப்பின் அரசியல் / சமூகநல்லிணக்கம் சமய மேம்பாடு ஆகிய காரணங்களுக்காக அண்ணலார் மேலும் பல பெண்களை திருமணங்கள் செய்தார்கள். அதில் ஜைனப் பின்து ஹுசைமா நபிகளாரின் காலத்திலேயே இறந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்த போது அவருக்கு 9 மனைவியர் இருந்தனர். ( 2 )

மனைவியர் பெயர்கள் :-
1) சவ்தா (ரலி)
2) ஆயிஷா பின்து அபூபக்கர் (ரலி)
3) உம்முசல்மா (ரலி)
4) ஹப்ஸா பின்து உமர் (ரலி)
5) ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி)
6) ஜுவைய்யா (ரலி)
7) உம்மு ஹபீபா பின்து அபீசுப்யான் (ரலி)
8) ஸபிய்யா (ரலி)
9) மைமூனா (ரலி)
10) ஜைனப் பின்து ஹுசைமா (ரலி)


குழந்தைகள்:-

 ( 4 பெண் 3 ஆண் மொத்தம் 7 )
1) காஸிம் (ரலி)
2) ஜைனப் (ரலி) - கணவர் - அபுல் ஆஸ் (ரலி)
3) ருகய்யா (ரலி) - கணவர் - உஸ்மான் (ரலி)
4) உம்முகுல்ஸும் (ரலி) - கணவர் - உஸ்மான் (ரலி) 5) ஃபாத்திமா (ரலி) - கணவர் - அலி (ரலி)
6) தாஹி (ரலி) ( இவர்கள் 6 பேரும் கதீஜா (ரலி) அம்மையாருக்கு பிறந்தவர்கள். )
7) இபுறாகீம் (ரலி) ( இவர் மாரிய்யதுல் கிப்திய்யா ( ரலி ) அவர்களுக்கு பிறந்தவர். ஆண்குழந்தைகள் மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர் )


முக்கிய நிகழ்வுகள்..
  • 40 வயதில் ஹிரா மலைக்குகையில் வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை சந்தித்தார்கள் . முதல் வேத வசனம் அருளப்பட்டது.
  • தாயிப் பயணம் - ஹிஜ்ரத்திற்கு முந்தைய ஆண்டு தனது 52 வயதில் மிஃராஜ் விண்ணுலகப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இறைவனை சந்தித்து உரையாடினார்கள்.
  • தனது 53 வயதில் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் குடியேறினார்கள்.இதுவே ஹிஜ்ரத் எனப்படுகிறது.
  • ஹிஜ்ரி 10 ம்ஆண்டு சுமார் 1 லட்சம் தோழர்களுடன் ஹஜ் செய்தார்கள். அதற்கடுத்த வருடம் பெருமானார் (ஸல் ) அவர்கள் இறந்து விட்ட காரணத்தால் அது விடை பெறும் ஹஜ் ( ஹஜ்ஜத்துல் வதா ) என அழைக்கப்படுகிறது. ( 3 )

போர்கள் :-
பல போர்கள் அவரது வாழ்க்கையின் மீது திணிக்கப்பட்டன. வலிய வந்து தொல்லை கொடுத்த அக்கிரமக்காரர்களை தடுக்கவும் உயிருக்கு நிகராகப் பாதுகாத்துப் போற்றி வரும் இஸ்லாமியப் பயிரைப் பாதுகாப்பதற்காகவும் மதீனாவில் அவர்  வாழ்ந்த 10 வருட காலங்களில் தானே 27 போர்களை மேற்கொள்ளவும் 38 படையெடுப்புகளுக்கு தனது தோழர்களை அனுப்பி வைக்கவும் நேர்ந்தது. ஆதிக்க விவாக்கமோ/ வலுவில் மதத்தை திணிப்பதோ அப்போர்களின் நோக்கமல்ல. அப்போர்களின் போது மிக எச்சரிக்கையாக மனித உயிர்கள் வீண் பலியாகாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டார்கள் . இப்போர்களில் மொத்தம் உயிரிழந்தவர்கள் 1018 போர் மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் மேற்கொண்ட 27 படையெடுப்புகளில் 9 ல் மட்டுமே சண்டை நடந்தது. அவையாவன.
1 பத் ஹிஜ் 2
2 உஹத் ஹிஜ் 3
3 அகழ்யுத்தம் ஹிஜ் 5
4 பனூகுறைழா ஹிஜ் 5
5 முரைஸிஃ ஹிஜ் 5
6 கைபா ஹிஜ் 7
7 பத்ஹ் மக்கா ஹிஜ் 8
8 ஹுனைன் ஹிஜ் 8
9 தாயிப் ஹிஜ் 8


ஒப்பந்தங்கள் :-

அகபா ஒப்பந்தங்கள்
  • நபி (ஸல் அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை ரகசியமாக சந்தித்து மதீனா மக்கள் செய்து கொடுத்த சத்தியப்பிரமாணங்கள் அகபா உடன்படிக்கைகள் எனப்படும் . கி பி 620 முதலாம் அகபா உடன்படிக்கையின் போது மதீனா வாசிகள் ஆறு பேர் முஸ்லிம்களாயினர்.
  •  கி.பி. 621 இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது 12 பேர் முஸ்லிம்களாயினர்.
  • கி.பி 622 மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது 70 பேர் முஸ்லிம்களாயினர் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மதீனாவைச் சுற்றி இருந்த பனூகைன்காஃ - பனூன்னழீ - பனூ குறைழா ஆகிய மூன்று யூதக் குழுக்களுடனும் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்.
  • ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ்ரத் 6 ம்ஆண்டு முஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுக்கும் இடையே நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் 3 அம்சங்களில் இரண்டு அம்சங்கள் ஒரு தரப்பாக / எதிரிகளுக்குச் சார்பாக இருந்த போதும் ( 4 )
  • 10 வருடங்களுக்கு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்ற 3 வது அம்சத்திற்காக இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். இது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது/ எனவே இந்த ஒப்பந்தத்தை தெளிவான வெற்றி என அல்லாஹ அருள்மறையில் (1-48) வர்ணித்தான்.

அற்புதங்கள் :-
அல்லாஹ்  ஒருவரை நபி எனத் தேர்வு செய்யும் போது மக்களிடம் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக அவருக்கு சில அற்புதமான காரியங்களைச் செய்யும் ஆற்றலை வழங்குகிறான். ஒரு நபி நிகழ்த்திக்காட்டும் வழக்கத்திற்கு மாற்றமான செயல்களுக்கு முஃஜிஸா ( அற்புதம் ) எனப்படும். நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களது பிரதான பெரிய அற்புதம் குர்ஆன் எனும் இறை வேதமாகும்/ ஆயினும் வேறு பல அற்புதச் செயல்களும் நபி ( ஸல் ) அவாகளது வாழ்வில் நடந்ததுண்டு அவற்றில் முக்கியமானது. நபிப் பட்டம் பெற்ற 5 ம் ஆண்டு அண்ணலாரது விரலசைவுக்கு ஏற்ப சந்திரன் இரு கூறாகப் பிளந்து தனித்தனியே சென்று பிறகு ஒன்றானது. 


சீர்திருத்தங்கள் :-
  • மது / சுதாட்டம் / விபச்சாரம் / திருட்டு ஆகியவற்றை ஒழித்தார்கள்.
  • பெண் சிசுக்கொலையை முற்றாகத் தடுத்து நிறுத்தினார்கள்.
  • ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத் தந்தார்கள்.
  • பெண்களுக்கு வாழ்வுரிமை /மண உரிமை மணவிலக்கு உமை எல்லாவற்றுக்கும் மேலாக சொத்துரிமையையும் பெற்றுத் தந்தார்கள்.
  • வட்டி / மோசடி/ கொலை /கொள்ளை ஆகிவற்றை தடுத்து நிறுத்தினார்கள்.
  • இனவெறி / நிறவெறி / ஜாதிக் கொடுமைகளை நீக்கி மனித சமத்துவம் நிலைநாட்டினார்கள்.

சாதனைகள் :-

தனது நாற்பதாவது வயதில் நபி எனப் பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து தொடாந்து 23 ஆண்டுகாலப் பிரச்சாரத்தின் காரணமாக சிலை வணக்கத்தில் மூழ்கிப்போயிருந்த அரபுலகத்தை ஏகத்துவ வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்து வந்தார்கள் . எந்த அளவுக்கென்றால் அதன் பிறகு அம்மக்கள் நெருப்பில் விழுவதை விடக் கொடிய விஷயமாக அதைக் கருதினார்கள்.
மூடப்பழக்க வழக்கங்களும் மூக்கத்தனமான நடைமுறைகளுமே வாழ்வாகக் கொண்டிருந்த அம்மக்களை மென்மைப் படுத்தி / அவர்களது அறிவாற்றலை வளர்த்து ஒரு சிறந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்களாக மாற்றினார்கள்.
சிறு சிறு குடும்பங்களாக வாழ்ந்து வந்த அரபுக்குலங்களை ஒரு தேசிய இனமாக உருவாக்கினார்கள்.

அரபுலகின் அறியப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக அரபு தீபகற்பம் / எமன் / பஹ்ரைன் உள்ளிட்ட பெரிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார்கள். உலகம் முழுமைக்கும் இறைவனின் இறுதித் தூதராக இருந்து முழுமையான இஸ்லாமிய நெறியை செயல்படுத்திக்காட்டினார்கள். இன்றைக்கு உலகில் வாழும் 3 ல் ஒரு பகுதியினர் நேரடியாகவும் மற்றும் பலர் மறைமுகமாகவும் அவரது வாக்கையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

தோழர்கள் :-

அன்னாரது தோழர்கள் சஹாபாக்கள் எனப்பட்டனர். தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறியோ முஹாஜி ( அகதி ) என்றும் மதீனாவைப் பிறப்பிடமாக கொண்ட தோழர்கள் அன்சார் ((உதவியாளர்)என்றும் அழைக்கப்பட்டனர்.

முக்கியமான தோழர்கள்
1 அபூபக்கர் (ரலி)
2 உமர் (ரலி)
3 உஸ்மான் (ரலி)
4 அலி (ரலி)
5 சஃதுப்னு அபீவக்காஸ் (ரலி)
6 சயீதுப்னு ஜைத் (ரலி)
7 அபூ உபைதா (ரலி)
8 சுபை (ரலி)
9 தல்ஹா (ரலி)
10 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

உயர்ந்தோனை நோக்கி..
தனது 63 வயதில் ஹிஜ்ரி 11 ரபீஉல் அவ்வல் 12 ம் தேதி ( கி பி 632 ) திஙகட்கிழமை பயணமானார்கள். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னை ஆயிஷா ( ரலி ) அவர்களின் அறையில் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இன்னா லில்லாஹி `வஇன்னா இலைஹி ராஜிஊன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் எங்கள் தலைவர்
அவருக்கு கீழ்பணிந்ததனால் எங்களுக்கு மரியாதை வந்தது 
( ஓரு அரபுப் பாடல் )

தொகுப்பு ;- மௌலானா மௌலவி அல்ஹாஜ் கோவை அப்துல் அஜீஸ்                                   பாக்கவி ஹஜ்ரத்,
                          மதுரை  அ .தையுபா அஜ்மல் .

Wednesday, 7 May 2014

மனித வாழ்வையே பாழடிக்கும் மதுவால் என்ன ஏற்படுகிறது?

Man drunk with red wine - stock photoமது குடியை கெடுப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள அனைத்து அவயங்களையும் செயலிழக்கச் செய்கிறது. செயல்படும் மனிதரை செயல்பட இயலாத மனிதனாக மாற்றுகிறது.

வேதியியல் முறைப்படி எத்தில் ஆல்கஹால் எனப்படும் மது, எத்தனையோ குடும்பங்களை நாசப்படுத்தியுள்ளது. படிக்கும் மாணவர் முதல் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோரும் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். மதுப்பழக்கம் - மதுவால் கல்லீரல் பாதிப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பு கட்டாயம் ஏற்படும். குறைந்தளவில் மட்டுமின்றி குறைவான நாட்கள் மது குடித்தாலும் கல்லீரல் பாதிக்கப்படலாம். கல்லீரலில் உள்ள ஒவ்வொரு செல்லும் மதுவால் பாதிக்கப்படுகிறது. இறுதியில் கல்லீரல் செயலிழந்து மஞ்சள் காமாலை, வயிற்று நீர், ரத்தவாந்தி, கால்வீக்கம், பசியின்மை முடிவில் மரணமும் ஏற்படலாம். இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே வழி. மாற்று அறுவை சிகிச்சை செய்தபின்னும் குடித்தாலும் மரணம் ஏற்படும். குறைந்தளவு மது அருந்துதல் இருதயத்தை காக்கும் என்று பேசப்பட்டாலும், மது அருந்துதல் நேரடியாகவே தசைநார்களையும் பாதிக்கலாம். இது மோட்டார் பம்பில் காயில் எரிந்து போவதற்கு சமமாகும். காயில் எரிந்து போன நிலையில், மின்சாரம் இருந்தாலும், மோட்டார் எப்படி ஓடும்? எனவே மதுவால் ஏற்படும் இருதய நோயை தடுக்க வேண்டும். மதுவால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பு மிகவும் மோசமானதாகும். எந்த நிலையிலும் இந்த நரம்பு பாதிப்பு சரியாகாது. சிறுமூளை, பெருமூளை மற்றும் முகுளம் பாதிப்பு ஏற்படும். இதனால் நோயாளிகளுக்கு கைநடுக்கம், கால்நடுக்கம், உடல் தளர்ச்சி, ஞாபக சக்தி குறைவு ஏற்படும். படபடப்பு, எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. மதுஅருந்துவோருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்படவும், மூளையில் சின்னச் சின்ன அடிபட்டாலும் மூளையில் ரத்தம் உறைதல் ஏற்படும். மதுஅருந்துவோரை நடைப்பிணமாக மாற்றுவது நரம்பு மண்டல பாதிப்பே. தானியங்கி நரம்பு மண்டல பாதிப்பு ஆண்தன்மையை குறைக்கிறது. பெரும்பாலான ஆண்களை மலடர்களாக மாற்றுகிறது. ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்ட கணவர்கள், மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கின்றனர். இந்த சந்தேகம் அவர்களை அடிக்கடி தூண்டி, அவர்களின் வாழ்க்கையையே பாழாக்குகிறது. மதுப்பழக்கத்தால் செயலிழக்கும் மற்றொரு முக்கிய உறுப்பு கணையம். இதனால் சர்க்கரை நோயும், கணையப் புற்றுநோயும் ஏற்படுகிறது. கணையத்தில் கிருமிகளும் ஏற்படலாம். வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல் ஏற்பட்டு, ரத்தவாந்தி ஏற்படுவதற்கு மது காரணமாகிறது. மதுவால் சிறுநீர் பாதிப்பு, டி.பி.,வியாதி, சளிதொந்தரவுகளும் ஏற்படும். முக்கியமாக கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் இரைப்பை புற்றுநோயும் ஏற்படலாம்.

மது அருந்தினால் உடலில் என்ன ஏற்படுகிறது என்று பார்ப்போம்...

மதுவால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மதுவின் பொதுவான் மூலக்கூறு எதில் ஆல்கஹால். பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால்(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1.ரம் --- 50-60%
2.விஸ்கி,பிராந்தி,ஜின் --40-45%
3.ஷெர்ரி,போர்ட் --20%
4.ஒயின் --10-15%
5.பீர் --4-8% பொதுவாக...
6.சாராயம் --40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி (excitement) நிலை: முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும்,  சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.

ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்ததில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும்  மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மிகி ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும்போது
1.தசை கட்டுப்பாடு இழக்கும்.
2.தொடு உணர்வுகள் குறையும்.
3.சிந்தனை,புரிந்துணர்வு,மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.  
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2.நடையில் தள்ளாட்டம்,
3.அதிக மயக்கம்,
4.ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது.
கால நேர, தூர  மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.

இவை எல்லாம் கூடச் குடிச்சால் தானே வரும். அளவோடு பாவித்தால் பிரச்சினை இல்லைத்தானே” என அவர் கேட்டார்.
உண்மை தான் ஆனால் ,மாரடைப்பு , நீரிழிவு ஆகியவற்றைத் தடுப்பதற்கான வாய்ப்புக் குறைந்த அளவு (ஆல்கஹால் 3மில்லிகிராம் ) மதுவை 20 தினசரி உபயோகித்தால் மட்டுமே கிட்டும் என்றே ஆய்வு கூறுகிறது.

என் கருத்து :
தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்...

அன்றாடம் வேலை செய்வோர் குடிப்பதால், அவர்களின் வேலையின் தரம் குறைகிறது. முக்கியமாக ஓட்டுனர்கள் குடித்துவிட்டு ஓட்டுவதால் சிலசமயங்களில் விபத்து நிகழ்ந்து பலஉயிர்கள் இழப்புக்கு காரணமாகிவிடுகிறது. எனவே மதுவானது எந்த நிலையிலும், எந்த அளவிலும், எந்த வயதிலும், உடலுக்கு தீமை செய்யக்கூடியதே. 20 சதவீத கல்லூரி மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், உடல் பருமன் வருவதற்கு மதுவும் காரணமாகிவிடுகிறது. பெண்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானால் அதைவிட்டு வெளியே வருவது பாதிக்கப்பட்ட ஆண்களைவிட கடினமானதாகும். கர்ப்பிணி பெண்கள் குடித்தால் அது வயிற்றில் உள்ள குழந்தையை நிச்சயம் பாதிக்கும். மதுவால் ஏற்படும் விளைவுகள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பாரம்பரிய அணுவை (ஜீன்கள்) பொருத்தே அமைகிறது. 

மது என்பது பழக்கப்பட்டு மனிதனை அடிமைப்படுத்தும் பொருள். சிறிது சிறிதாக தினசரி உபயோகிக்கும் போது அதற்குப் பழக்கப்பட்டு அடிமையாகி படிப்படியாக உபயோகிக்கும் மதுவின் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மதுவின் அளவு கூடினால் மேற்படி நன்மைகள் கிட்டாது. அத்துடன் மதுவின் தீயவிளைவுகள் அனைத்தும் வந்து சேரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

மது அருந்துவது என்பது செங்குத்தான வழுக்குப்பாறையில் வெறுங் கையால் பிடித்து ஏறுவதற்கு நிகரானது. சற்று கைப்பிடி தவறினாலும் அதல பாதாளத்தில் விழுந்து மரணத்தை அடைவது நிச்சயம். அத்தகைய சாகசத்தை விரும்புபவர்கள் மாத்திரம் மது அருந்தி மாரடைப்பு வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என விளக்கினேன்.

http://www.youtube.com/watch?v=0gMNg-3xo2I

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Tuesday, 6 May 2014

நாம் கப்றுகளை ஸியாரத் செய்வது எவ்வாறு?

நான் உங்களுக்குக் கப்றுகளை ஸியாரத் செய்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை ஸியாரத் செய்வது உங்களுக்கு நன்மையாக அமைவதற்காக இப்பொழுது ஸியாரத் செய்யுங்களென்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ஆதாரம்: முஸ்லிம்

அடக்கஸ்தலத்தில் நுழையும்போது அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களுக்காக துஆ கேட்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
‘இங்கு அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் கப்றாளிகளான மூமின்களே! அஸ்ஸலாமு அலைக்கும்; இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வோம்; அல்லாஹ் எங்களையும் உங்களையும் (கப்றுடைய வேதனையிலிருந்து) பாதுகாக்க வேண்டுமென அவனிடம் வேண்டுகிறேன்’ (முஸ்லிம்) என்று ஸியாரத்தின் போது ஓதிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
இதனையே நாமும் மொழிவது ஸுன்னத்தாகும். இதற்கு மாறாக இன்று நடைமுறையிலுள்ளவை அனைத்தும் ஸுன்னத்துக்கு முரணாகும்.
நபி (ஸல்) அவர்களின் வாக்குக்கமைவாக கப்றுகளின் மீது அமர்வதோ, அவற்றை மிதிப்பதோ கூடாது.
‘கப்றுகளை நோக்கித் தொழாதீர்கள்! அவற்றின் மீது அமராதீர்கள்!’ ஆதாரம்: முஸ்லிம்
வணக்கம் என்ற எண்ணத்துடன் கப்றைச் சூழ ‘தவாப்’ செய்தல் கூடாது. “(ஹஜ்ஜுக்குச் செல்லும் அவர்கள்) புராதன ஆலயத்தையும் ‘தவாப்’ செய்யவும்” (22:29) என்று குர்ஆனில் கூறப்படுவதன் மூலம் தவாப் செய்ய தகுதியுள்ள ஒரு ஆலயம் கஃபத்துல்லாஹ் மட்டுமேயாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். (பைத்துல் முகத்தஸ், மஸ்ஜிதுந்நபவி போன்றவைக்கூட இதற்கு உரித்தானவையல்ல)
குர்ஆனிலிருந்து எதனையும் அடக்கஸ்தலத்தில் ஓதக்கூடாதென பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘நீங்கள் உங்களுடைய வீடுகளை(க் குர்ஆன் ஓதாத) அடக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! எந்த வீட்டில் ஸூரத்துல் பகறா ஓதப்படுகிறதோ அந்த வீட்டைவிட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான்’ ஆதாரம்: முஸ்லிம்
அடக்கஸ்தலங்கள் குர்ஆன் ஓதும் இடமல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு சைக்கினையாக அமைந்துள்ளது. கப்றுகளுக்கு அருகில் குர்ஆன் ஓதுவதாக வந்துள்ள ஹதீஸ்கள் ஸஹீஹானவையல்ல .
கப்றுகளில் உள்ளவர்கள் நபிமார்களாகவோ, அல்லது அவுலியாக்களாகவோ இருப்பினும் அவர்களிடம் உதவி தேடுதல் பெரிய ஷிர்க்காகும். அல்குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.
“நபியே நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தைச் சதா திருப்புவாயாக! இணைவைத்து வணங்குவோரில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். ஆகவே உமக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை (ஆண்டவன் என) நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அச்சமயமே அக்கிரமக்காரரில் நீரும் ஒருவராகி விடுவீர்” (10: 105,106)
கப்ரின்மீது மலர்வளையம் சாத்துவது தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இது கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான ஒரு செயலாகவும், பிரயோசனம் எதுவுமில்லாமல் பணத்தை வீணாகச் செலவுசெய்வதாகவும் இருக்கின்றது.
இதற்காக செலவு செய்யப்படும் பணம் ஸதகாவுடைய எண்ணத்துடன் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுமானால், இதன்மூலம் இறந்தவர்கள் பயனடைவதுடன், ஏழைகளும் பயனடைவார்கள்.
ஹதீஸில் வந்துள்ள தடைக்கமைவாக கப்றின் மீது கட்டிடம் அமைப்பதும், அதன்மீது மரணித்தவரின் பெயரோ, அல்லது குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், கவிகள் போன்றவைகளோ எழுதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
‘கப்றின் மீது சாந்து பூசுவதையும் அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’ஆதாரம்:முஸ்லிம்
கப்றுடைய அடையாளத்தை அறிந்து கொள்வதற்காக ஒரு சாணளவு உயர்த்தி வைத்தல் போதுமானது. உத்மான் இப்னு மழ்ஊன் (ரலி) அவர்களுடைய கப்றின் மீது, நபியவர்கள் அடையாளத்துக்காக ஒரு கல்லை வைத்து விட்டு ‘எனது சகோதரனுடைய கப்றை அறிந்து கொள்ள அடையாளமிடுகிறேன்’ என்று கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத் (ஹஸன்)

பட்டபடிப்பு துறையை தேர்தெடுக்கும் முன் எந்தெந்த பணிகளில் என்னென்ன ஆபத்துக்கள் உள்ளன ? ஒரு தவகல் !!


ஒருவர் செய்யும் பணி என்பது அவரின் வாழ்வுக்கான ஒரு முக்கிய ஆதாரம். ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் அனைத்தும் என்பதில் தொடங்கி, நம் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமாக நாம் செய்யும் பணி திகழ்கிறது.
நாம் மேற்கொள்ளும் பல பணிகள், நமது உடல் நலத்தை பாதிப்பதாக உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆரம்பத்தில், சிறிய உடல்நலப் பிரச்சினையாக தொடங்கி, பின்னர் அது பெரிதாக மாறும் வரை, நாம் அதை பொருட்படுத்துவதில்லை. 
முந்தைய நாட்களில், சுரங்கத்தில் வேலை பார்க்கும்போது, நுரையீரலை பெரியளவில் பாதிப்பதாக இருந்தது மற்றும் சத்தம் நிறைந்த தொழிற்சாலையில் வேலை பார்ப்பவரின் காதுகள் பாதிக்கப்பட்டன.
இன்றைய நாட்களில், பல நவீன முன்னேற்றங்கள் வந்துவிட்டன. பல்வேறான புதிய பணிகள் உருவாகியுள்ளன. அதில் பல ஆபத்துக்களும் முளைத்துள்ளன. முன்பைவிட, பணி சார்ந்து வரும் நோய்கள் பெரியளவில் அதிகரித்துள்ளன. உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில், உடலுக்கும், மனதுக்கும் தீங்கு ஏற்படுத்தும் சில முக்கிய பணிகளைப் பற்றி இங்கே விவாதிக்கலாம்.
Business Processing Outsourcing - BPO..
இந்த வகைப் பணியில், இரவுநேரப் பணி என்பதை தவிர்ப்பது மிகவும் கடினம். தொடர்ச்சியான இரவுநேரப் பணி என்பது, ஒருவரின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கக்கூடியது. அதேசமயம், நீங்கள் பகலில் தூங்கினாலும், பணிநேரத்தை பகலுக்கும், இரவுக்கு இடையில் மாறி மாறி அமைத்துக் கொண்டாலும் சரி, உடல் நிச்சயம் பாதிக்கப்பட்டே தீரும். அந்த பாதிப்பு நீண்டகால தன்மையதாய் இருக்கும்.
கட்டுமானப் பணிகள்..
கட்டுமான பணி என்பது, ஒவ்வொருவருக்குமே பணி செய்யும் இடத்தில் ஆபத்தை விளைவிப்பதாய் இருக்கிறது. அவர்கள் பணியாளர்களாக இருந்தாலும் சரி, டிசைனர்களாக இருந்தாலும் சரி, ஆபத்து இருக்கிறது.
தார், சில வகையான சிமெண்ட்டுகள் அல்லது பெயின்ட்டுகள் ஆகியவை, நுரையீரலை பாதிக்கின்றன. கட்டுமான பணிகளின்போது நிகழும் விபத்துக்கள், சாலைகளில் நடக்கும் விபத்துக்களைப் போன்று அடிக்கடி நடப்பவையாக இருக்கின்றன.
துப்புரவு தொழிலாளர்கள்...
பல வகையிலும் பாதிக்கப்படும் பணியாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில், பலரும் செய்ய முன்வராத தொழிலை செய்யும் இவர்கள் சந்திக்கும் சுகாதார பிரச்சினைகள் பல. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அள்ளுவதிலிருந்து, சாக்கடை சுத்தம் செய்வது உள்பட, உச்சகட்ட கொடுமைத் தொழிலான மனித மலம் அள்ளுவது வரை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.
இதன்மூலம் இவர்கள் சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகள் கணக்கிலடங்காதவை. கிளீனிங் ஏஜெண்ட்டுகள், ரசாயன பாதிப்பு அதிகம் கொண்ட அமிலங்களை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இதிலும் ஆபத்துக்கள் அதிகம்.
கார்பரேட்..
பொதுவாக, கார்பரேட் பணிகள் என்பவை, ஒருவர், ஒரு நாளில், அதிகநேரம் கணினி முன்பாக அமர்ந்து, கண்களுக்கு அதிகமான சுமையைக் கொடுத்து, முதுகு பகுதியை சிரமப்படுத்தி, கழுத்துப் பகுதியை கஷ்டப்படுத்தி வேலை செய்ய வேண்டியுள்ளது.
எனவே, இதுபோன்ற பணி சூழல்களில் இருப்பவர்கள், கண் பிரச்சினை, இதய நோய், முதுகு வலி, கழுத்து வலி, பக்கவாதம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இத்துறையில் ஈடுபடுபவர்களில், பல பேர், மன அழுத்தம் காரணமாக, தற்கொலைக்கு முயல்வதும் உண்டு.
தொழிற்சாலை..
அதிகமான இரைச்சல், ஆபத்தான இயந்திரங்கள், மின்சார ஆபத்துக்கள், மாசுபட்ட காற்று உள்ளிட்ட பல்வேறான சுகாதாரப் பிரச்சினைகளை, தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் சந்திக்க வேண்டியுள்ளது.
மேலாளர் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை, காது சரியாக கேட்காத பிரச்சினை உள்ளிட்ட பல சுகாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சு மில் போன்றவற்றில் வேலை செய்வோர், நுரையீரல் பிரச்சினைகளால் அவதிப்படும் நிலை உருவாகிறது.
மேலும், ஆபத்தான இயந்திரங்களில் பணிபுரிவதால், அவற்றால் அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன. மேலும், நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழப்பதும் தொழிற்சாலைகளில் அடிக்கடி நேரும் ஒரு துரதிருஷ்ட சம்பவமாக உள்ளது.
Floral Designer..
இத்தொழில், கவர்ச்சிகரமானதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருந்தாலும், இதற்கென்று ஆபத்தான அம்சங்களும் உள்ளன. ஒரு தோட்டக்காரர், செடியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அதே வேளையில், ஒரு செடி, தண்டிலிருந்து வெட்டப்பட்ட பின்பும், அதை பாதுகாக்கும் பணியில், floral designer ஈடுபடுகிறார்.
புளோரல் துண்டுகளை உருவாக்குவதில் பல ரசாயனங்களும், வேதிப் பொருட்களும் பயன்படுத்தப்படுவதால், நீண்ட நாட்கள் இத்தொழிலில் ஈடுபடுகையில், பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
சுரங்கம்..
சுரங்கப் பணி என்பது, நெடுங்காலமாகவே ஆபத்தான ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. என்னதான், பாதுகாப்பு உபகரணங்களை இன்றைய நிலையில் பயன்படுத்தினாலும், ஆபத்துக்கான வாய்ப்புகள் முழுமையாக நீங்கியபாடில்லை.
சுரங்கம் என்பது, அதன் உள்ளே இருப்பவருக்கு எப்போதும் பாதுகாப்பில்லாத ஒரு இடம்தான். சுரங்கத்திற்குள் ஒருவர் சுவாசிக்கும் காற்று ஆரோக்கியமற்றதாகும். எனவே, இப்பணியில் ஈடுபடுவோர், பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
ஆராய்ச்சி..
ஆராய்ச்சி என்பது, அறிந்திராத ஒன்றை வெளிப்படுத்துவதாகும். அதேசமயம், அறிந்திராத ஒரு பொருளில், அறியப்படாத ஆபத்துக்களும் இருக்கும் என்பதும் நிதர்சனம். எனவே, பல்துறை ஆராய்ச்சியாளர்கள், தங்களின் பணியின்போது, என்னவிதமான ஆபத்து நிகழும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
இல்லையெனில், உடல்நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு பணியிலும், ஏதாவது ஒரு சிக்கல் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. அது நாம் மிக மிக விரும்பும் பணியாக இருந்தாலும் சரி. எனவே, முன்னெச்சரிக்கையாக செயல்படுவதே புத்திசாலித்தனம்.
தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல் .
நன்றி :  கல்விமலர் 

Monday, 5 May 2014

சாக்லெட்டின் சரித்திரம் என்ன ? சாக்லெட் என்கிற விஷயத்தை யாரு உருவாக்கினது பற்றிய தவகல் !!


சாக்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் கொள்வர். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து நீட்டும். பெரியவர்களும் குழந்தைகளுக்கு நிகராக சாக்லெட் சாப்பிட ஆசை கொள்வர். இருந்தாலும் உடல் பருமன் மற்றும் பல உடல் உபாதைகள் காரணமாக பெரியவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள். மேலும் குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஆகிவிடும் என்று காரணம் சொல்லி, சாக்லெட் வாங்கிக் கொடுப்பதை குறைத்துக் கொள்வார்கள்.
சாக்லெட்டில் அதிக கலோரி நிறைந்துள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்று எண்ண வேண்டாம். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் அவ்வாறு ஆகும். ஆனால் அளவாக சாப்பிட்டு வந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் சாக்லெட் சாப்பிட்ட பிறகு நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் இதை அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன் சாக்லெட் சாப்பிட கொடுக்க வேண்டாம்.


சாக்லெட் வரலாறு 
               கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து, ஸ்பெயினுக்குத் திரும்பும்போது அங்கிருந்து கொண்டு வந்த பல விலையுயர்ந்த பொருட்களில் சாக்லெட்டும் அடக்கம். ப்ரவுன்  கலரில் சிறு சிறு கொட்டைகளாக, இன்றும் சாக்லெட் செய்ய பயன்படுத்தப்படும் கோக்கோ கொட்டைகள் அவை. மெக்ஸிகோ மாமன்னர் மோர்டிஸோமாவின் அரண்மனையில் கோக்கோ கொட்டைகளால் ‘சாக்லெட்டி’ என்ற கசப்பான பானம் தயார் செய்யப்பட்டு வந்தது. இதைக் கண்ட் ஹெர்னான்டே கோர்ட்டேஸ், இந்த பானத்தில் சர்க்கரை கலந்து இனிப்பாக்கினர். கூடவே, வெனிலா போன்ற சுவைகளிலும் இந்த பானத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த புதிய பானம் பலரையும் கவர்ந்தது. ஸ்பெயினிலும், ஸ்பெயினின் காலனி நாடுகளிலும் கோக்கோவை பயிரிட்டு வியாபாரம் செய்தார்கள். ஆனால், அவர்கள் இந்த முறையை ரகசியமாக வைத்திருந்தால் மற்ற ஐரோப்பிய நாடுகள் சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகே கோக்கோவை பயிர் செய்ய முடிந்தது. 1657ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், 18ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சாக்லெட் அறிமுகமானது, 1847ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனங்கள் கடித்து சாப்பிடக்கூடிய சாக்லெட்டை உருவாக்கின. 1876ஆம் ஆண்டு டேனியல் பீட்டர் (சுவிட்சர்லாந்து) சாக்லெட்டுடன் பாலைக் கலந்து ருசியான சாக்லெட்டுகளை உருவாக்கினர்.

இனிப்பு நீர் வியாதி வந்துவிடுமோ, அல்லது இருக்கும் நோய் அதிகரித்து விடுமோ என்று பயந்துபோய் சாக்லெட் சாப்பிடத் தயக்கம் காட்டி வருபவர்களுக்கு ஒர் இனிப்பான செய்தி.

மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பததோடு வயதாக வயதாக உடல் உறுப்புகள் செயல்படும் தன்மைக்குசாக்லெட் மிகவும் உதவுகிறதென அண்மையை ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

 சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அறிவியலை முன்னோக்கி எடுத்துச் செல்லும் அமெரிக்கா அறிவியலாளர்கள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தொடக்க நிலை ஆய்வு முடிவுகள் பற்றிய ஆய்வில் இத் தகவல்கள் காணப்படுகின்றன.

  • சாக்லெட் தயாரிப்புக்கு மூலப் பொருளாக விளங்கும் கோக்கோவில் காணப்படும் Flavanols என்னும் அமிலம் முன்கூறப்பட்ட விளைவுகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
  • சம்பந்தப்பட்ட அந்த அமிலத்தை உள்ளடக்கிய கோக்கோ கலவையை உட்கொண்ட ஆய்வுக்குட்பட்ட மனிதர்கள் ஆராய் வந்தபோது  முளையின் ரத்தவோட்ட்த்தை Flavanols அமிலம் வகுவாக சீர்ப்படுத்துவதோடு தசைகள் சார்ந்த சில உறுப்புகளின் இயக்கங்களையும் மேம்படுத்தவதாக அறியப்பட்டிருக்கிறது.
  • மூளை வளர்ச்சிக்கு, இதயத் துடிப்பு மேம்படவும் சாக்லெட்டில் காணப்படும் இந்த அமிலம் உதவுவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  • சாக்லெட்டிலுள்ள சம்பந்தப்பட்ட அமிலத்தினால் செரிவூட்டப்பட்ட பானத்தை அருந்திய பெண்ணொருத்தி ஆய்வுக் கூடச் சூழலில் பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது இரண்டு முதல் மூன்று மணி நேரப் பிரிவில் மூளையில் ரத்தவோட்டம் விரைவாக இருந்து மூளையின் செயல்பாடும் அதிகரிக்க ஆய்வாளர்கள் கண்டனர்.
  • மூளையின் விரைவான ரத்தவோட்ட நிலை வயதானவர்களுக்கு சில நல்ல விளைவுகளை ஏற்படுத்து வதோடு சிறிய அளவிலான வாதநோய் தாக்கு தலையும் தடுக்க இயல மென அந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  • தொடக்க நிலை ஆய்வுகளில் ‘சாக்லெட்’ உண்பதால் முளையின் செயல்பாடுகள் மேம்படுவதாக நம்ப இடமுண்டு என்றாலும் முழுமையான பலன்களை தொடரச்சியான ஆய்வுகள் வழி உறுதி செய்ய வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  • இதற்கிடையே சாக்லேட் உண்பதால் முளையின் ரத்தவோட்டம் அதிகரிக்கிறது என்ற நிலையின் அடிப்படையில் உடனடியாக அதிக அளவில் சாக்லெட் உண்பதைத் தொடங்க வோண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கவே செய்துள்ளனர். 
  • சுமார் 200 கலோரி அளவுள்ள சாக்லெட் சாப்பிடலாம் என்பதே அவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.
அப்புறம் என்ன... சாக்லேட்டின் மருத்துவ நலன்கள் பற்றி இங்கே தெரிந்து கொண்டொமெ!!
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Friday, 2 May 2014

நாம் அடித்து நொறுக்கப்பட வேண்டிய தனியார் சுங்கச் சாவடிகள்...!

'எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை 'எனச் சொல்ல முடியாமல் இருக்கும் ஒரு அமைப்பு என்றால் அது ; டோல்கேட்' ( Toll gate) என்னும் தனியார் சுங்க சாவடி  மையங்கள்தான். கோடிக்கால் பூதம் போல் இந்த வழியா வந்தாலும் டோல்கேட், அந்த வழியாக வந்தாலும், குறைந்த அளவு தூரத்திலும் டோல்கேட் . இதில் 'NEXT  TOLL PLAZA 500 METERS 'என மிரட்டும் எச்சரிக்கை பலகை வேறு. 

ஒருவேளை நம் நேரத்தையும் பணத்தையும் சாவடிப்பதால் இப்படி 'சாவடி' என பேர் வந்ததோ? எனத் தெரிய வில்லை. 

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் தங்க நாற்கரச்சாலைத் திட்டத்தை அமைக்க முற்பட்ட வாஜ்பாய்   தலைமையிலான  பா.ஜ.க. அரசு, நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் செயல்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தது. சாலைகளை நேர்படுத்தி, விரிவுபடுத்துவதற்கான செலவை ஈடுகட்டிக்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சாவடி அமைத்தது.சாலைகள் சிறப்புற அமைந்ததால்தான் இன்று எளிதில் பயணிக்க முடிகிறது. நேரம் மிச்சமாகிறது. எரிபொருள் செலவு குறைகிறது. வாகன பழுது குறைவாகிறது.

இப்படியாக  ‘கட்டு, சொந்த மாக்கிக்கொள், செயற்படுத்து (பின்னர் அரசிடம்) திருப்பிக்கொடு' என்ற முறை யில் சாலைப் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார்மயப்படுத்தியது. சுங்கம் வசூலிக்கும் உரிமை அந்நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வழங்கப்பட்டது. 

ஆனால், 15 வருடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றவருக்கு மத்திய அரசு உரிமக் காலத்தை 30 ஆண்டுகள் நீட்டித்து வழங்கியது. அதன் பின்னணி ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கும், அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிட பன்மடங்கு ஆதாயம் பார்த்துவிட்டன தனியார் நிறுவனங்கள். 
சுங்கச் சாவடி மையங்களுக்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு மேலும் நீட்டித்துக் கொண்டு போவது நியாயமில்லை.  இந்த  தனியார் நிறுவனங்கள், அரசு ஆதரவுடன் கோடிக் கணக்கில் சுங்கம் வசூலித்துக் கொள்ளையடித்து வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நாடு முழுவதுமுள்ள 62 சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 2 சுங்க சாவடிகளும் அடக்கமாகும். 50 கோடி ரூபாய்க்கு குறைவான செலவில் மேம்படுத்தப்பட்ட சாலைகளில், சுங்கச் சாவடிகள் இருக்காது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதனிடையே நாகப்பட்டினம் -& மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை, பொங்கலூர் ஆகிய இரு இடங்களில், கடந்த மாதம் புதிதாக சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதற்கு எழுந்த பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அந்த 2 சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கும் முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது.அடிக்கும் கொள்ளை கொஞ்சமா.? நஞ்சமா.?
உதாரணத்திற்கு செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடி குறித்துப் பார்ப்போம்...

90 கி.மீ தூரம் சாலை போட இவர்கள் போட்ட முதலீடு 80 கோடி ரூபாய்...
10 வருடத்தில் இவர்கள் சுங்கச்சாவடியில் வசூல் செய்தது 2268 கோடி...
நாள் ஒன்றுக்கு 90000 வாகனங்கள் செல்கிறது.,ஒரு வாகனத்திற்கு சராசரியாக 70 ரூபாய் என வைத்து கொண்டால், நாள் ஒன்றுக்கு 63 லட்சம் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது...

மாதம் 18 கோடியே 90 லட்சம்.. வருடத்திற்கு 226 கோடியே 80 லட்சம்..
10 வருடத்திற்கு.....
கார் - 35 ரூ,
நடுத்தர வாகனங்கள் - 70 ரூ,
லாரி, பஸ் - 110,
கண்டய்னர் போன்றவைகளுக்கு 210 ரூபாய்...
இதில் இவர்களாகவே சொல்லாமல் கொள்ளாமல் சுங்க வரியை வேறு உயர்த்தி கொள்வார்கள்...
2014ம் ஆண்டு, விடுமுறைகால அமர்வு நீதிபதிகளான நீதிபதி ஆர்.சுதாகர், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் - இது ஒரு இல்லீகள் பிசினஸ் என்று தீர்ப்பு வழங்கி அந்த வசூலை நிறுத்தும்படியும் கூறி உள்ளார்கள்...


“நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை” என்று பராசக்தி வசனம் போல் அனைத்து சுங்க சாவடிகளையும் மூட வேண்டாம். ஆட்டுக்கு தாடி போல தேவையற்று உருவாகியிருக்கும் சில சுங்க சாவடிகளை மூட வேண்டும். பல சாவடிகளில் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கக் கூடாது. 

ஒரு சுங்கச்சாவடியில் இவ்வளவு கொள்ளை என்றால்.,
தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுங்கச்சாவடிகள்,
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த சுங்கச் சாவடிகளில்....
கொள்ளை எவ்வளவு என்பது கணக்கில் அடங்காது...
புதிதாக வாங்குகிற வாகனங்களுக்கு சாலை வரி கட்டுகிறோம்..
அந்த வாகனத்துக்காக போடும் பெட்ரோலில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் சாலை வரியாக கொடுக்கிறோம்..

சாலைவரி, மோட்டார் வரி என வசூலித்த பிறகும், என் தேசத்துக்குள் நான் நடமாட ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?

சாலைகள் அரசுக்கு சொந்தம் - இது ""welfare state " கிடையாதா? என மக்கள் நினைப்பதை , கேட்பதை அரசு செயல்படுத்த வேண்டும்.

இதுவும் போதாதென்று இது போன்ற சுங்கச்சாவடிகளில் சாலைக்காக தனியே சுங்கவரி வாங்கி மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறார்கள்...
அரசின் உதவியோடு இப்படி பட்ட கொள்ளைகள் நடத்தப்படுகிறது.. - தடுத்து நிறுத்துவார் யார்? 

நாமேதான் ...

துபாயில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகள் கவனத்திற்கு!


துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே1 முதல் வரும் 80 நாட்களுக்கு விமானநிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் சில குறிப்பிட்ட விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பராமரிப்புப் பணி இரண்டு இரண்டு ஓடுதளங்களில் மாற்றி மாற்றி நடைபெற உள்ளதால், முதல்கட்டமாக தெற்குப்பகுதி ஓடுதளம் வரும் மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், வடக்குப் பகுதி ஓடுதளம் மே 31ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.             
இந்தக் காலகட்டத்தில் துபாய் வந்து செல்லும் விமானங்கள் 26 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் விமான சேவைகளும் அருகில் உள்ள மற்ற விமான நிலைங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விமான புறப்படும் 3 மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை சென்றடைவது மிகவும் நல்லது.
EMIRATES AIRLINES..
துபாயில் (Dubai Airport Termial 3) இருந்து சென்னை செல்லும் எமீரேட்ஸ் விமானத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
1. தினமும் அதிகாலை 2.45 புறப்பட்டு காலை 8.20 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
2. தினமும் மதியம் 2.45 புறப்பட்டு இரவு 8.20 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
3. தினமும் இரவு 9.25 புறப்பட்டு அதிகாலை 3.00 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
இண்டிகோ விமானம்:
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் இருந்து இதுவரை 56 ஏர்லைன் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அவை தற்போது 37 விமானங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் இந்த புதிய சேவையை மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானம் துபாய் டெர்மினல் ஒன்று (Dubai Airport Termial 1) இருந்து தினமும் இரவு 10.20 புறப்பட்டு காலை 4.15 மணியளவில் சென்னை சென்றடையும். இதில் எந்த வித மாற்றமும் இல்லை.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்….
அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில், துபாய் விமான நிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகளால் இதுவரை துபாயிலிருந்து அமிர்தசரஸ், லக்னோ, திருச்சி, ஜெய்ப்பூர் மற்றும் புனே வரை செல்லும் விமானங்கள், இந்த 80 நாட்களுக்கு சார்ஜாவிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருத்து தினமும் காலை 8.00 புறப்பட்டு மதியம் 01.40 மணியளவில் திருச்சி சென்றடையும்.
ஏர் இந்தியா
துபாயில் விமான நிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகளால் இதுவரை துபாயிலிருந்து சென்னை செல்லும் விமானம், இந்த 80 நாட்களுக்கு சார்ஜாவிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருத்து தினமும் இரவு 10.00 புறப்பட்டு அதிகாலை 3.50 மணியளவில் சென்னை சென்றடையும்.
ஏர் அரேபியா
தினமும் சார்ஜாவில் இருந்து சென்னை செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
சார்ஜாவில் இருத்து தினமும் இரவு 10.10 புறப்பட்டு அதிகாலை 3.40 மணியளவில் சென்னை சென்றடையும்.
ஜெட் ஏர்வேஸ் உறுதி…
விமான பயணப் பாதை மாற்றப்பட்டுள்ளதால் தங்களது விமானங்கள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை என பயணிகளுக்கு ஜெட் ஏர்வேஸ் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றும் இதர விமானம் பற்றிய தகவல்களை அறிய துபாய் ஏர்போர்ட் (www.dubaiairport.ae) அல்லது டிராவல் ஏஜேன்ஸிஸை தொர்பு கொள்ளவும்.
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.