Wednesday, 9 July 2014

சீனர்களின் அடுத்த டூப்ளிகேட் பிளாஸ்டிக் அரிசியா? ஒரு அதிர்ச்சி தவகல்!!!

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும். இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.

கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!

மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!
 மீண்டும் ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதிவரும் நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம் மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான அரிசியிலேயே காட்ட தொடங்கிவிட்டார்கள். 

இதுலவேற நம்ம கவர்மென்டு சில்லரைவர்தகத்தில் அந்நிய முதலீடுன்னுங்கிற பேர்ல எல்லா நாட்டுகாரனுங்களையும் இந்தியாவுக்குள்ள விட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள வாங்கிட்டு அப்புறம் அவன் நாட்டிலிருந்து அப்புறம் பிளாஸ்டிக் அரிசியைதான் கொண்டு வந்து விப்பான். நம்ப மக்களும் விலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு சீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில் உள்ளமாதிரி அந்நிய பொருளை வாங்கமாட்டோம்ன்னு கோசம் போட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த நடத்த வேண்டிய நிலமைக்கு  ஆளாகபோகிறோம்.  

இதைகண்டுபிடித்து  செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்திரிக்கைதான். அதற்கான லிங்க்
 

ஆங்கிலத்தில் படிக்க லிங்க் 

என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??


இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் சகோதர,சகோதரிகளே !!

தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல்.

Tuesday, 8 July 2014

குருதி முறிவுக் காய்ச்சல்/ரத்த முறிவுக் காய்ச்சல் அல்லது 'டெங்கு' காய்ச்சல் பற்றிய விழிப்புனர்வு ஆய்வு!!

குருதி முறிவுக் காய்ச்சல், ரத்த முறிவுக் காய்ச்சல் அல்லது 'டெங்கு' காய்ச்சல் மனிதர்களிடையே தீ நுண்மங்களால் ஏற்படும் ஒரு நோய் ஆகும். இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலும் கடுமையான மூட்டு வலியும் தசை வலியும் ஏற்படும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது


மழைக்காலத்தில் நாம் கண்டு பயப்படும் இன்னொரு நோய் டெங்கு காய்ச்சல். அறுபதுகளின் துவக்கத்தில் ‘டிங்கி’ ஜுரம் என அறிமுகமான  ‘டிங்கி’ என்ற பெயரால் பல நகைச்சுவைத் துணுக்குகள் உருவாயின. ஆனால், அதன் சரியான பெயர் ‘டெங்கு’ என்பதே.

இந்நோய் ஏற்படக் காரணமாக உள்ளது டெங்கு நுண்ணியே. (நுண்ணி என்பது வைரஸ்தாங்க.... தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் நுண்கிருமி என்றால் பாக்டீரியா, அதிநுண்கிருமி என்பது வைரஸ் அதாவது நுண்ணி என்கிறார்கள்)

இவை ஊன்நீர் வகைகளாகப் (Serotypes) பிரித்தால் நான்கு வகைப்படும். அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அதைப் பிறகு சொல்கிறேன். இவை வயது, பால், இனம் ஆகிய வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் ஒன்றாகத் தாக்கும்.

இவற்றைப் பரப்பும் கொசுக்களை ‘ஈடஸ் ஈஜிப்டை’ என்கிறார்கள். இவை பகல் நேரத்தில் கடிப்பவை. அதனால் நமக்குத் தெரியும். மழை நீரில் அல்லது குளிர்சாதனப் பெட்டி (ரிஃபிரி ஜிரேட்டர்), ஏ.சி ஆகியவற்றில் தேங்கும் சிறிதளவு நீரில்கூட கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகிவிடும். நகர்ப்புறங்களில் சிறு பாத்திரங்களில் இவை பெருகி, நோயைப் பரப்புகின்றன.

சாதாரணமாக, மருத்துவர்களிடம் ஜுரம் என்று போனால் மழைக்காலத்தில் ‘‘இதெல்லாம் வைரஸ் ஃபீவர் (viral fever)’’ என்பார்கள். ‘‘அதுக்குப் போய் ‘டெஸ்ட்’ எல்லாம் பண்ண வேண்டாம்.... போய் மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க!’’ என்பார்கள்


அந்த ‘வைரஸ் ஃபீவர்’ தான் டெங்கு. பொதுவாக ஒரு நாள் காய்ச்சலுக்கே, என்ன சோதனை செய்யலாம் என வரைமுறைகள் உள்ளன. நம் ஊரில் ‘‘எதுக்கும் எல்லாம் பாத்துடலாமே, டாக்டர்’’ என்று நோயாளிகள் தாமே முடிவு செய்வது தவறு.

முதல் நாள் காய்ச்சலில் ஒரே ஒரு சோதனை போதும். (உச்சி முதல் பாதம் வரை மருத்துவர் சோதித்தாலே பல முறை காரணம் புரியலாம்). குளிர் அல்லது கடுமையான தலைவலி ஏற்பட்டால் மலேரியா உள்ளதா எனச் சோதிக்கலாம். அது ஒன்று மட்டுமே ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கக் கூடும்.


டெங்குதானா என உறுதி செய்வது, அவசியமற்றது. அதற்கென பணம் செலவழிப்பது வீண். ஏனெனில், டெங்கு காய்ச்சலுக்கென தனிப்பட்ட மருந்துகள் ஏதும் கிடையாது. வெறும் பக்கபலம் தரும் சிகிச்சை மட்டுமே போதும். மேலும் 15 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே _ அதிலும் 5% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே உயிருக்குத் தீங்கு ஏற்படும் அளவு பாதிப்பு ஏற்படலாம். 

டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது. ஒரு வகையான கொசு மூலம் இது பரவுகிறது. வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.


நோய் அறிகுறிகள் :


1. காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.


2. சருமத்தில் வேனற்கட்டிகள், அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும்.

3. தசை வலி.

4. மூட்டுகளில் வலி.

5. தலைவலி.


நோய்க் கணிப்பு :
வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.

த்ராம்போசைட்டோபீனியா : டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (platelets)எண்ணிக்கை குறைவாக காணப்படும்.

டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

1990 ஆம் ஆண்டுகளில் கொசு மூலம் பரவும் முக்கியமான நோயாக டெங்கு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதற்கு பாதிப்படைந்துள்ளனர். இது ஒரு தொற்று நோயாக பரவும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.

ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. வெப்பமண்டல நாடுகளில் இது மிகவும் சகஜமாக தோன்றுகிறது. மக்கள் நெரிசல், தண்ணீரை திறந்த வெளியில் சேமிப்பது, பாசன கால்வாய்கள் ஆகியவைகளில் இந்த வகை கொசுக்கள் அதிகம் முட்டையிடுகின்றன. 


சிகிச்சை :

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை, ஓய்வும், திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென் மாத்திரைகள் ஆகியவை அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்திற்கும் குறைவாக இறங்கும்போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.

கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள், கொசு விரட்டிகள் இவைகளின் பங்கு அவசியமாகும். வாழ்விடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் வெள்ள காலங்களில் எந்த நீரையும் நன்றாக காய்ச்சிய பிறகு பயன்படுத்துவது மிக மிக அவசியமாகும்.




டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி?


‘ஏடிஸ்’ அதிரவைக்கும் அதிபயங்கர கொசு!
ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி?

வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.

இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.


இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.

அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம். 



கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கூட இங்கு குறைவுதான். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் அடிக்கடி பரவி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தென் மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந் தனர்.இதையடுத்து, சுகாதாரத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 200 மஸ்தூர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு நல்ல தண்ணீரில் வளரும் கொசுக்களை அழிப்பது எப்படி என்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 2200 மஸ்தூர்பணியாளர்களை இந்த மாதம் 1ஆம் தேதி முதல் நியமிக்க உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு நிலுவை ஊதியத்தையும் பழைய நிதியில் இருந்து உடனே வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது.மாவட்டம் தோறும் ஒரு வட் டாரத்துக்கு 15 பேர் வீதம் மஸ்தூர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வரு கின்றனர். ஒரு வட்டாரத்தில் 5 அல்லது 6 ஆரம்ப சுகாதார மய்யங்களுக்கு உட்பட்ட கிராமங் களில், இவர்கள் சுகாதாரத்துறை ஆய்வாளர்களுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுவர்.

இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சுகாதாரத்துறை  மாநிலம்  முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மாநகர பகுதியிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. புகை மூலம் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் சகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.


மேலும் அறிய  கீழ  உள்ள  சுட்டியை  அழுத்தவும் ...
http://ajmal-mahdee.blogspot.com/2012/06/blog-post_01.html


தொகுப்பு :மு.அஜ்மல் கான் .

Monday, 7 July 2014

Dr. APJ அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்!!!

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். 

Sunday, 6 July 2014

பட்டப்படிப்பிற்கு அரசு தரும் சலுகைகளை அடைவது எப்படி ?

பள்ளி வாழ்க்கையை முடித்துவிட்டு கல்லூரி பட்டப்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் பட்டப்படிப்பு குறித்த அரசின் சலுகைகளையும் தெரிந்து கொள்வது கட்டாயமான ஒன்றாகும். பிளஸ்2 மாணவர்களுக்கு எப்படி அரசு கல்விக்கான உதவித் தொகைகளும், சலுகைகளையும் கொடுத்ததோ அதே போல் கல்லூரியில் சேரும் போதும் பல்வேறு சலுகைகளை தருகிறது. இது குறித்த விஷயங்கள் மாணவர்களுக்கு தெரியாத காரணத்தினால் பலர் அரசின் சலுகைகளை நழுவவிடுகின்றன. இப்போது அரசின் சலுகைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.  


இலவச கல்வி... 


தற்போது தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் 62 கலை அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 162 அரசு உதவிப்பெறும் கல்லூரிகளும் செயல்பட்டுவருகிறது. சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் மாணவர்களின் மீதான அக்கறை மற்றும் நலன் கருதி அப்பிரிவு மாணவர்கள் உயர்கல்வி ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. அனைத்து அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இளங்கலை வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. 

அரசு கல்வியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முதுகலைப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இதே சலுகை அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு வரை வழங்கப்படுகிறது. இதே போல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்காக 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு மாணவரின் பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


தொழில்கல்வி, தொழில்நுட்ப கல்வி, பி.இ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ மாணவர்களுக்கு மத்திய அரசலர் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மைனாரிட்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுவதும் வழங்கப்படும். மற்ற கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு, சேர்க்கை கட்டணம், கற்பிப்பு கட்டணம், தேர்வு கட்டணம், நூலக கட்டணம் உட்பட அதிகபட்சமாக ரூ20 ஆயிரம் வரை வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாணவரின் பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். 

முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் வருடம் புதுப்பிக்கும் போது முதல் ஆண்டில் 50 சதவீத மதிப்பெண் பெற்று அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மைனாரிட்டி மாணவர்கள் இச்சலுகைகளை பெறுவதற்கு www.tn.gov.in , www.momascholarship.gov.in என்ற இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான (சாதி சான்று, வருமான சான்று, பேங்க் கணக்கு எண் ஐஎப்எஸ் கோடு உள்பட) சான்றுகளுடன் குறிப்பிடப்பட்ட கால கெடுவிற்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

 தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

Saturday, 5 July 2014

E-mail writing Guideline for General and Professional People..

When we were in elementary school, we learned how to compose a business letter by including the date, a return address, a greeting, and so on. Those rules still serve us well for letters. Unfortunately, there are no such guidelines for email.

About E-mails :1.4 billion e-mail users are in the world.2.8 milllion e-mails are sent and received a second and 90 trillion a year and 300 billion a day.
Reference : Radicati Group ‘e-mail statics report(2009~2013)’

A day do we send and receive?
How many e-mails Sending and Reception
Mailboxes are filled with worthless e-mails.
More than half of the hundreds of e-mails received are irrelevant.
Time is wasted in sorting out e-mails.
Unnecessary work e-mails lower work efficiency and concentration of employees.

I receive 150 e-mails a day, but only 50 e-mails concern me. It takes me more than 1 hour to sort out the e-mails.There are many e-mails of which I cannot figure out the contents right away by looking at the title with numerous RE’s and FWD’s. I have to open each and every e-mail to find the information I want.
One of my seniors sends me e-mails by only writing “FYI”. I often wonder whether I should handle the matters concerned myself or just read them as reference If the names of attached files are not clear enough, I have to open every file and change the names.How ever,Our Inappropriate use of e-mails may be use causing irritation and inconvenience to our colleague.

How is your e-mail culture?
As for your company, most work is done through e-mail especially when we communicate with different disciplines, clients and partner companies,so e-mail is the basic tool of work and communication for us.
Remove unnecessary recipients and CCs.
1,Clarify the recipients, CCs and sender at the top of the e-mail text.
2,Do not send e-mails inconsiderately to all of the members.
3,Remove irrelevant recipients or CCs when you reply to a group e-mail.
4,No more re-sending e-mails by writing only “FYI”

We want recipients of our email to treat our message seriously, yet we often give little thought to the message we send, because it's quick and easy, at least from a technical perspective. It's up to us to apply common sense and good taste to the messages we send. Here are a few guidelines you might find helpful, whether you're using Outlook, Outlook Express, or a web client:

  • Keep it brief: I never make it through a long email. I find myself scanning, and I miss important details. You're not writing a book or a love letter, you're sharing information. Share the information and move on.,If your message runs longer than two or three short paragraphs, consider (a) reducing the message, or (b) providing an attachment. But in any case, don't snap, growl, or bark. A face-to-face meeting or conference call might be better.
  • Include a succinct subject: Long subject lines are as bad as no subject at all. Pinpoint a few keywords that convey the email's purpose.
  • Check your spelling and grammar: Put your main point in the opening sentence. Most readers won't stick around for a surprise ending. our email client has tools for checking your spelling and grammar so use them. Many people are sensitive to misspelled words and poor grammar. They see it as a lack of concern. If you don't care, why should they?
  • Don't use emoticons and acronyms: Emoticons and acronyms are fine for personal email, but don't use them in your professional correspondence.
  • Don't use ALL CAPS: ALL CAPS is the email equivalent of angry shouting. You wouldn't use ALL CAPS in a professional letter, so don't use them in email.
  • Limit copies: Only copy those who absolutely need to be in the loop. Otherwise, colleagues will start ignoring your email.
  • Greet your recipients: Use a short greeting to acknowledge your reader; include their name if you can.Remember to say "please" and "thank you." And mean it. "Thank you for understanding why afternoon breaks have been eliminated" is prissy and petty. It's not polite.
  • Include a closing: Let the reader know you're done by including a complimentary closing and signature.Add a signature block with appropriate contact information (in most cases, your name, business address, and phone number, along with a legal disclaimer if required by your company). Do you need to clutter the signature block with a clever quotation and artwork? Probably not.
  • Retain the thread: When responding to an email, include previous messages and add your response to the top. That way, the recipient is privy to all the Finally, reply promptly to serious messages. If you need more than 24 hours to collect information or make a decision, send a brief response explaining the delay.
Your work is done if you send an e-mail?

The ultimate purpose of e-mails is to conduct work smoothly and achieve good results through cooperation of everyone involved.In order to receive high-quality feedback to an urgent or important e-mail, you need contact them to check whether the persons
in charge read it on time and understood it correctly.Writing e-mails thoughtfully is directly connected to “consideration” for others.When your small inconvenience brings about great convenience to others, this is called “consideration.”Check once again whether you followed basic etiquette before sending an e-mail in order to establish an e-mail culture of respect and consideration.

Prepared & Collection by M.Ajmal Khan.

Tuesday, 1 July 2014

வீடுகட்ட வங்கியில் என்.ஆர். ஐ -க்கள் வீட்டுக்கடன் (NRI Home loan) வாங்குவது எப்படி? ஒரு சமூக பார்வை..

நண்பர்களே, 
நான்  கடந்த விடுமுறையில் இந்திய சென்ற போது  என் நண்பனின்  வீட்டுக்கடன்  பெறுவதற்காக HDFC பேங்க் வில் சென்று வங்கிக் கடன் வாங்கியுள்ளோம். அதன் அனுபவத்தையும் 
அதற்கு தேவைப்படும் ஆவணங்களையும் உங்களுடன் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். நான் முதலில் வங்கியின் (NRI Home loan) உதவி மேலாளரை அனுகினேன், அவர் கீழ்கண்ட ஆவணங்களுடன் வர சொன்னார். ஒரே நாளில் கடன் கிடைத்து விடும் என்றார். நானும் கீழ்கண்ட ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.



 
 உங்களை பற்றிய தகவல்கள். KYC ( Know your Customer)

1. Ration card, Voter Id, Passport, Driving Licence, Pan Card. இதில் எதாவது இரண்டு அல்லது மூன்று ஆவணங்கள் கண்டிப்பாக வேண்டும்.

2. Work Permit Copy (உங்களின் வேலை அனுமதி அட்டை) , Nature of work & Contract of work (அதாவது நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் & எத்தனை வருட ஒப்பந்தத்தில் வேலை செய்கிறீர்கள் என்பதையும் உங்கள் அலுவலகத்திலிருந்து பெற வேண்டும்).

3. Salary slip or pay slip for 1 year.(உங்களின் சம்பள ரசீது ஒரு வருடத்திற்கானதை தர வேண்டும்)

4. Bank Statement for 1 year (  நீங்கள் வேலைப் பார்க்கும் நாட்டில் உள்ள உங்கள் வங்கி கணக்கின் ஒரு வருடத்திற்கான வங்கி பரிவர்த்தனை விபரம்)

5. Salary certificate with attestation of High commission of India ( உங்கள் கம்பெனியின் லெட்டர் பெடில் உங்கள் சம்பளத்தை குறிப்பிட்டு அதில் இந்திய தூதரகத்தின் முத்திரை வாங்க வேண்டும்).

6. Income Tax Details ( நீங்கள் வேலை பார்க்கும் நாட்டில் ஒரு வருடத்திற்கான உங்களின் வருமான வரி ரசீது) 

7. Passport copy xerox the pages stamp by Immigration ( குடி நுழைவுத்துறையால் முத்திரை குத்தப்பட்ட அனைத்து பக்கங்களும்)


Documents (ஆவணங்கள்)

8. Power Of Attorney(POA) attestation by High commission of India (நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் உங்கள் இடத்திற்கான அதிகாரம் (மற்றொருவருக்கு) வழங்குதல், இதற்கான விண்ணப்பத்தை உங்கள் வங்கியின் அதிகாரியிடமிருந்து பெற்று நீங்கள் இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில் முத்திரை வாங்க வேண்டும்).

9. Registration of Power Of Attorney(POA) at District Register office and Sub-Register office.( நீங்கள் அனுப்பிய POA சான்றிதழை உங்கள் மாவட்ட பதிவாளர் அலுவத்திலும் பின்பு வட்டார துணை பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது வெளி நாட்டிலிருந்து POA அனுப்பிய தபாலின் உரையையும் கொண்டு செல்ல வேண்டும்.


10. Individual patta of plot ( உங்கள் இடத்தின் தனிப் பட்டா, சிலருடைய இடம் கூட்டுப்பட்டாவில் இருக்கும்) எனக்கு தனிப்பட்டா வாங்க இரண்டு மாத காலம் பிடித்தது. அந்த அளவிற்கு நம்ம அதிகாரிகள் வேகமாக(?) வேலையை முடிச்சி தாராங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஆள் இருந்தால் வேகமா முடியும் இல்லைனா, ஆமையை விட மெதுவாக தான் நடக்கும்.

11. Non Agriculture Certificate of land (இந்த இடம் விளை நிலம் அல்ல, மனைப்பகுதி தான் என்பதை உங்கள் வட்டார தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும், இந்த சான்றிதழ் பெறுவதற்கு தாசில்தார் உங்கள் இடத்தை நேரில் பார்வையிடுவார், அதற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆகும், ஒருவேளை நீங்கள் அவருக்கு கையூட்டு கொடுத்தால், வேலை வேகமாக முடியும்)

12. இந்த இடத்திற்கான மூலப்பத்திரம் 

13. Estimation certificate from your Engineer ( வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்பதை  அரசு பதிவு பெற்ற கட்டிட பொறியாளரிடமிருந்து)

14. Plan approval and Lay out from Panchayat office, or Municipality or Corporation(உங்கள் பகுதி பேரூராட்சியாகவோ அல்லது நகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ இருந்தால் அவர்களிடம் உங்கள் வீட்டு வரைபடம் மற்றும் வழியமைப்பு ஆகியவற்றில் அனுமதி பெற வேண்டும். இதற்கும் நேரில் பார்த்து தான் அனுமதி அளிப்பார்கள். குறைந்தது 15 நாட்களாவது ஆகும்)

15. Valuation Certificate from an Approved Engineer ( அரசு பதிவு பெற்ற பொறியாளரிடமிருந்து இடத்திற்கான மதிப்பீட்டு சான்றிதழ் பெற வேண்டும். இவர் எவ்வளவு கடன் தரலாம் என சொல்கிறாரோ அதிலிருந்து 80 சதவீதம் தான் நமக்கு கடன் தருவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த பொறியாளரிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை வங்கி அதிகாரி தெரிவித்துவிடுவார்)

16. Encumbrance certificate for 32 years (32 வருத்திற்கான வில்லங்க சான்றிதழ்)

17. Land tax receipt (வீட்டு வரி ரசீது)

18. Legal opinion certificate from a Lawyer( வழக்கறிஞரிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும், எந்த வழக்கறிஞரிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை வங்கி அதிகாரி தெரிவித்துவிடுவார்).



இவை அனைத்தையும் உங்கள் இடத்தின் பத்திரத்துடன் வங்கி அதிகாரியிடம் சமர்ப்பித்தால் கடனுக்கான படிவத்தை பூர்த்திசெய்து ஓரிரு நாளில் கடன் கொடுத்து விடுவார்கள்.

இந்த அனைத்தும் வாங்குவதற்கு கிட்டதட்ட 3 மாதங்கள் ஆயிற்று. கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் அனைவரும் நம்மை அலைய விடுவாங்க பாருங்க, அதற்கு கடனே வாங்க வேண்டாம்னு ஆகிடும். அந்த அளவுக்கு கடுப்பேத்துவாங்க. இவ்வளவுக்கும் இவனுங்களுக்கு கையூட்டு கொடுத்தே இவ்வளவு நாள் ஆகுதுன்னா பாருங்க. 



உங்களுக்கு சொந்தக்காரர்கள் இந்த அலுவலகங்களில் இருந்தால் இன்னும் வேகமாக முடியுமென்பதில் சந்தேகமில்லை. 

 மேற் குறிப்பிட்ட  ஆவணங்கள் அனைத்தும் இருந்தால் இடை தரகர்கள் மூலம் 10 நாட்களுக்குள் பெற்றுவிடலாம்.

குறிப்பு :உங்களிடம் கடனை  அடைக்க தகுதி இருந்தால்  மட்டுமே!! 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு .அஜ்மல் கான்.