Friday, 2 January 2015

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) பற்றிய சிறப்பு தவகல்கள்...

1.  வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) யார்?
வெளிநாடு  வாழ் இந்தியர்கள் என்றால் இந்தியாவிற்க வெளியில் வாழும் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என்ற பொருள். 

2. இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்தியர்கள் யார்?
அயல்நாட்டு  பரிவர்த்தன மேலாண்மை சட்டம், 1999 (FEMA) வின் படி இந்தியாவில் வசிக்காதவர்கள் எல்லா நம் பிரிவு 2 (ஏ) வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆவார்கள். ஒரு மனிதனின் குடியுரிமை இனிமேற்கொண்டு குடியிருப்பு தகுதியை வைத்து தீர்மானித்தும் நிர்பந்தம் இல்லை என்ற முக்கியமான திருத்தத்தை  கொடுத்து ( FERA 1973 பின்பாக)

3. இந்திய வம்சாவளியினர் யார்? (PIO)
இந்திய  வம்சாவளியினர் என்றால் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் நாட்டை தவிர பிற நாட்டில் வாழும் குடிமக்கள் ஆவர் இருப்பினும்
அ.  அவர் எந்த நேரத்திலும் கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும்.
ஆ. இந்திய அரசியலமைப்பின் படி அல்லது குடியுரிமை சட்டம், 1995 யின் படி அவர் அல்லது அவனது பெற்றோரில் யாரேனும் ஒருவர் அல்லது அவனது பெற்றோரின் தாய் அல்லது தந்தை இந்திய குடிமக்களாக இருந்திருக்க வேண்டும்.
இ.  இந்திய குடியினரின் கணவன் அல்லது மனைவியாக அவர்கள் இருக்க வேண்டும் அல்லது (அ) அல்லது (ஆ) வில் குறிப்பிட்டபடி இருக்க வேண்டும்.
      இந்திய  வம்சாவளியினர் இந்திய காப்புறுதி மூலம் பெறும் முதலீடுகளைப் போலவே இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்தியர்களின் முதலீடுகளும் நடத்தப்படும். இரண்டுக்கும் ஒரே அங்கீகாரம் மற்றும் விலக்குகளும் தேவை. 

4.கடல்கடந்த கூட்டுக்குழு (OCB) என்றால் என்ன?
கடல் கடந்த கூட்டுக்குழு என்றால் குறைந்த இந்தியர்களால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்தப்படும் ஒரு சங்கம், கூட்டு வணிகம், சமூகம் மற்றும் பிற கூட்டுக்குழு அமைப்பாகும். மேலும் OCB களால் அறுபது  சதவிகிதத்திற்கு மேல் பயனள்ள வட்டி விகிதம் கொண்ட கடல்கடந்த அறக்கட்டளையையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்தப்படுவது ஆனால் திரும்பப் பெறமுடியாது.
      வணிக  கழக முதலீட்டுத் திட்டம்  W.E.F  நவம்பர் 29,2001 லிருந்து OCB க்கள் விலக்கப்பட்டுள்ளனர் W.E.F செப்டம்பர் 16, 2003 இன் படி வகுப்பு முதலீட்டாளர்கள் என்ற முறையில் OCB இனர் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மேற்குறிப்பிட்ட தேதிகளுக்கு முன் காப்புறுதி செய்தவர்கள் அதனை அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதன்படி OCB இனர் சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்கலாம் ஆனால் அது தற்போது உள்ள முதலீட்டை கணக்காக பொருள் தன்மை அற்றதாக ஆக்குவதற்காக மட்டுமே!

5. ஒரு NRI/PIO எங்கு சேமிப்பிடக்கணக்கை தொடங்க வேண்டும்?
ஒரு NRI/PIO சேமிப்பிட கணக்கை NSDL இல் உள்ள ஏதேனும் ஒரு சேமிப்பு ஒறுப்பினருடன் (DP) தொடங்கலாம். கணக்கை துவங்குவதற்கு DP யிடம் இருந்து பெறப்பட்ட படிவத்தில் NRI/PIO எந்த வகை தங்களுக்கு தேவை NRI  யை குடியிருப்பிளர் என்று ஒப்பீடு  செய்யவும் உள் வகை (தாய்நாட்டுக்கு திரும்புபவர் அல்லது தாய் நாட்டுக்கு திரும்பாதவார் என்பதை குறிப்பிட வேண்டும்.

6.  ஒரு NRI சேமிப்பிட கணக்கை தொடங்குவதற்கு இந்திய ரிசர்வு வங்கியின் (RBI) அனுமதியை பெற வேண்டுமா?
சேமிப்பிட கணக்கை தொடங்குவதற்கு RBI யின் அனுமதி தேவையில்லை இருப்பினும் சேமிப்பிட கணக்கில் வரும் வரவு செலவுகளுக்கு பொது அல்லது சிறப்பு அனுமதி நியமனம் செய்யப்பட்ட தகுதியுடைய வணிகரிடமிருந்து சூழ்நிலை காரணமாக எதிர்பார்க்கப்படுகிறது.
7.  பல்வேறு திட்டங்களின் மூலம் முதலீடு செய்ய விரும்பும் NRI/PIO எல்லா காப்புறுதிகளையும் ஒரே சேமிப்பிட கணக்கில் வைத்துக்கொள்ள இயலுமா?
முடியாது. வேளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டம் (FDI) “வணிக இணைப்பு கழக முதலீட்டுத் திட்டம் (PIS) மற்றும் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப முடியாத “முதலீட்டுத் திட்டம்” ஆகிய திட்டங்களின் மூலம் முதலீடு செய்யும் முன்னிட்டு வாங்கப்பட்ட காப்புறுதிகள் தனித்தனியாக சேமிப்பிட கணக்கில் கொள்ள வேண்டும். PIS மூலம் முதலீடு செய்வது தயாகத்திற்கு திருப்பி அனுப்புதல் தாயகத்திற்கு திருப்பி அனுப்பமுடியாத முதலீடுகளை அல்லது அடிப்படையாக கொண்டு இருக்கும். FDI மூலம் முதலீடு தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதை அடிப்படையாக கொண்டு இருக்கும். 
 
8. ஒரு NRIஐ காப்புநிதிகளை பொருள் தன்மையற்றது ஆகவே அல்லது பொருள் தன்மை உடையதாக  ஆக்கவோ RBI யின் அனுமதியை பெற வேண்டுமா?
சிறப்பு அனுதி எதுவும் தேவையில்லை. சேமிப்பிட கணக்கில் காப்புநிதிகளை கொள்வது என்பதே மாறுதலுக்குட்பட்டது என்பதை குறிக்கிறது. ஆகவே அதற்கு அனுமதி தேவையில்லை இருப்பினும் NR தாயகம் திறப்பு அனுப்புதல் NR தாயகம் திருப்பி அனுப்ப முடியாத தகுதிகளை ஏற்கனவே பெற்ற கைப்பட எழுதி காப்புநிதி களை மட்டுமே அதற்கு தொடர்பான சேமிப்பு கணக்கில் பொருள்தன்மையற்றதாக ஆக்க முடியும்.

முடியாது !! ஒரு NRI தனித்தனி சேமிப்பிட கணக்கை தாயகம் திரும்பி அனுப்புதல் மற்றும் தாயகம் திரும்பி அனுப்ப முடியாத காப்புநிதிகளுக்கு தொடங்க வேண்டும்.

10.  இந்தியாவில் வாழும் ஒருவர் இந்தியாவை விட்டு வேறிடவாழ்வுடையவராக மாறும் தருணத்தில் அவன்/அவள் தங்களுடைய காப்புநிதிகளான குடியிருப் பாளரிலிருந்து புறங்குடியிருப்பாளராக தம் தகுதிகளை மாற்ற வேண்டுமா?
 FEMA பிரிவு 6 (5) இன்படி,NRI தான் இந்தியாவில் வாழ்ந்த போது கொண்ட காப்புநிதிகளை புறங் குடியிருப்பாளராக ஆன பின்பும் அவன்/அவள் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம் ஆனால் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப முடியாத அடிப்படையின் கீழ் காப்புநிதிகளை வைத்துக் கொள்ளலாம்.

11.  NRI ஒருவர் இந்திய குடியிருப்பாளராக ஆகும் தருணத்தில் அவன்/ அவள் தன்னுடைய காப்புநிதிகளை புறங்குடியிருப்பாளரிலிருந்து இந்திய குடியிருப்பாளராக மாற்ற வேண்டுமா?
ஆம். வணிக இணைப்பு கழக முதலீட்டு திட்டத்தின் மூலம் காப்புறுதிச் சொத்துக்களை முதலீடு செய்த முதலீட்டாளர் அதற்கு காரணமாயிருந்த தகுதியுடைய நியமனம் செய்யப்பட்ட  வணிகர் கிளைக்கும், சேமிப்பிட கணக்கை தான் சேர்ந்து தொடங்கிய சேமிப்பு ஒறுப்பினருக்கும்  (DP) தெரிவிக்க வேண்டியது அவன் /அவள் அவர்களின் கடமையாகும். அதன் தொடர்ச்சியாக புதிய சேமிப்பிட கணக்கை குடியிருப்பாளர் நிலையிலிருந்து தொடங்க வேண்டும். NRI சேமிப்பிட கணக்கிலிருந்து குடியிருப்பாளர் கணக்கிற்கு காப்புநிதிகளை மாற்றிவிட்டு NRI சேமிப்பிட கணக்கை மூடி விட வேண்டும்.

12.  அயல்நாடு வாழ் இந்தியர் (NRI) பங்குகளிலும், கடனீட்டுப்பத்திரங்களிலும், பரஸ்பர நிதிகளிலும் முதலீடு செய்ய முடியுமா?
அயல்நாடு வாழ் இந்தியர்கள், பங்குகளிலும், இந்திய கம்பெனிகளின் பத்திரங்களிலும், பரஸ்பர நிதி அலதுகளிலும் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் வணிகக் கழக முதலீடுகளான, பங்குகள், இந்தியக் கம்பெனிகளின் கடனீட்டுப் பத்திரங்களில் பங்குச் சந்தை வாயிலாக முதலீடு, போன்றவற்றிலும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த வசதிகள் தாயகத்திற்கு திரும்பியவர்களுக்கும் திரும்பாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

13.  பொதுமக்களுக்காக வெளியிடப்படும் காப்புறுதிச் சொத்துக்களை அயல்நாடு வாழ் இந்தியர் வாங்க முடியுமா?  அதற்கு எத்தகைய அனுமதி/அங்கீகாரம் தேவை?
ஆம், அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு பங்குகளை விற்கும் கம்பெனிகள், இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடமிருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும். அதனால், அயல்நாடு வாழ் இந்தியர் தனிப்பட்ட முறையில் எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை.

14. அயல்நாடு வாழ் இந்தியர்கள் தங்குளுடைய பங்குகளுக்கும் காப்புறுதிச் சொத்துக்களுக்கும் கிடைக்க வேண்டிய ஊக்கத்தொகை மற்றும் கிடைக்க வேண்டிய பலன்கள் ஆகியவற்றிற்காக அனுமதி பெறவேண்டுமா?
 இல்லை.

15.  வணிக இணைப்புக் முதலீட்டுத் திட்டம் என்றால் என்ன?
இந்தத்திட்டத்தின் கீழ், இந்தியப் பங்குச் சந்தைகள் மூலம், இந்தியக் கம்பெனிகளின் பங்குகள், கடனிட்டுப் பத்திரங்கள் உள்நாட்டுப் பரஸ்பர நிதி அலகுகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய அனுதிக்கப்பட்டுள்ளனர்.
தாயகம்  திரும்பிய மற்றும் திரும்பாத  அயல்நாடு வாழ் இந்தியர்கள் இருவருமே முதலீடு செய்யமுடியும். உள்நோக்கி பணம் அனுப்பும் முறையின் (Inward remittance) மூலமோ அயல்நாடு வாழ் இந்தியரின் என்.ஆர் இ./ எப்.சி.என்.ஆர் கணக்குகளில் பற்று வைப்பதன் மூலமோ அவர்கள் பணம் செலுத்தலாம்.  அதே முறையில் தாயகம் திரும்பாதவர்களும் பணம் செலுத்தலாம்.
பங்குவிற்பனைக்கு, செலுத்த வேண்டிய வரிகளை அவர்கள் செலுத்த வேண்டும்.

16.  வணிக இணைப்புக் கழகத்தில் விண்ணப்பிக்கும் முறை என்ன?
இந்தியாவிலிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் தகுதிவாய்ந்த கிளையில், உரிய விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டியதில்லை.

17.  தகுதி வாய்ந்த கிளை என்பது என்ன?
வணிக இணைப்புக் கழகத் திட்டத்தின் கீழ் அயல்நாடு வாழ் இந்தியார்களுக்கு சில கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளித்துள்ளது. பொரிய வங்கிகளின் பிரதானக் கிளைகள்தான் அவை. ரிசர்வ் வங்கியிலிருந்து அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு விற்பனையாளர் கிளையின் மூலம் அயல்நாடு வாழ் இந்தியர் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

18.  ஒன்றுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் அயல்நாடு வாழ் இந்தியர் விண்ணப்பிக்கலாமா?
இல்லை. அயல்நாடுவாழ் இந்தியர் ஒரே ஒரு கிளையில் தான் விண்ணப்பிக்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் தகுதிவாய்ந்த கிளையின் மூலமே தனது பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ள முடியும்.

19.  வணிக இணைப்பக் கழகத் திட்டத்தின்கீழ், தாயகம் திரும்பிய அல்லது திரும்பாத அயல்நாடு வாழ் இந்தியர் என்ற முறையில், இந்திய பங்குச் சந்தைகளின் மூலம், பங்குகளை மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களை வாங்கவோ விற்கவோ முடியுமா?
அயல்நாடு வாழ் இந்தியர் வணிக இணைப்பக் கழகத் திட்டத்தின் கீழ் பங்குச் சந்தைகளின் மூலம் இந்திய கம்பெனிகளின் பங்குகளை, மாற்றத்தக்க கடனீட்டுப்பத்திரங்களை வாங்கவோ விற்கவோ முடியும்.
அது தொடர்பான விதிமுறைகள் கீழ் கொடுக்கப்படுகின்றன.
1. வணிக இணைப்புக் கழகத் திட்டத்தின் கீழ் பங்குச் சந்தைகளில் பங்குகள், பங்குச் சந்தைகளில் தான் விற்பப்பட முடியும். இந்தியாவில் வாழ்கின்றவர்களுக்கு அல்லது வாழாதவர்களுக்கோ இருந்தாலோ இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும்.
2. இத்தகைய வர்த்தகங்கள், பங்குச் சந்தைகளின் பதிவு செய்யப்ட்ட தரகர்களின் மூலமே நடக்க வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் கிளையின் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர் தனது அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ளலாம்.
4. விலைக்கு வாங்கப் பங்குகளை அயல்நாடு வாழ் இந்தியர் பெற்றுக் கொள்கிறார் விற்ற பங்குகளை கொடுத்து விடுகிறார்.
5. இத்திட்டத்தின் கீழ், ஒரு கம்பெனியில் அயல்நாடு வாழ் இந்தியர் விலைக்கு வாங்கும் பங்குகளின் உச்சவரம்புகள் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி, செபி  அல்லது அதை போன்று அதிகாரம் படைத்த நிறுவனங்கள் வகுத்துள்ள விதிகளுக்கு அயல்நாடு வாழ் இந்தியர் கட்டுப்பட வேண்டும். பங்கு விற்பனைக்குரிய வரிகள் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு அயல்நாடு வாழ் இந்தியரோ அல்லது பி.ஐ.ஓ.வோ இந்தியக் கம்பெனிகளின் மூலதனத்தில்  5 சதவிகிதப் பங்குகளை மட்டுமே வாங்கமுடியும்.  எந்தவொரு கம்பெனியிலும் வெளிநாடுவாழ் இந்தியர் வாங்கும் எல்லா பங்ககளும், அந்தக் கம்பெனி மூலதனத்தில் 10 சதவிகிதத்தை தாண்டக்கூடாது.  (இந்த வரம்பு, கம்பெனியின் பொது நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றுவதன்மூலம் 24மூ வரை உயர்த்தப்பட முடியும்).

20. புறச் சந்தை வணிகத்தின் மூலம்,(இந்திய ரிசர்வ் வங்கியின் வணிக இணைப்புக் கழக முதலீட்டுத் திட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் பரி வர்த்தனைகள்) அயல்நாடு வாழ் இந்தியர்ளால் பரிமாற்றம் செய்யப்படும் காப்புறுதி ஆவணங்களுக்கு எத்தகைய அனுமதியைப் பெற வேண்டும்?
புற வணிகப் பரிமாற்றங்களுக்கு பெறப்படவேண்டிய அனுமதி அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

21. பங்குகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் சேமிப்பிடப் பங்கேற்பாளருக்கு அளிக்கப்படும் குறிப்பாணைகளைச் செயல்படுத்த ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதி பெற வேண்டுமா?
வணிக இணைப்புக் கழக முதலீட்டுத் திட்டத்தின்கீழ், தனிப்பட்ட அயல்நாடு வாழ் இந்தியர், ஒரு கம்பெனியின் 5 சதவிகிதப் பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது.  அதைக் கண்காணிக்க வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் பொறுப்பாகும்.  வணிக இணைப்புக் கழக முதலீட்டுத் திட்டத்தின் கீழ், வாங்கப்பட்ட பங்குகளை, பங்குச் சந்தையின்மூலம்தான் விற்கமுடியும்.  கேள்வி எண். 19-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைக் காண்க.  வணிக இணைப்புக் கழக முதலீட்டு திட்டத்தின்கீழ், வாங்கப்படும் அல்லது விற்கப்படும் பங்குகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை.

22. நியமனதாரராகவும், நியமிக்கவும் வெளிநாடுவாழ் இந்தியரால் முடியுமா?  நியமனதாரர் இந்தியாவில் வசிப்பவராக இருக்கலாமா?
 ஆம்.

23. கணக்குத் தொடங்கும்போது எந்தவகையான வங்கிக் கணக்கைக் கொடுக்க வேண்டும்
கீழ்வரும் வங்கிக் கணக்குகளைக் கொடுக்கலாம்.
தாயகம்  திரும்பியவர்களுக்கு - என்.ஆர்.ஐ. (பங்கு/ வட்டி திரும்பியபின்)
தாயகம்  திரும்பியவர்களுக்கு - என்.ஆர்.இ.
மேலே கூறப்பட்டவைகள், பங்குத் தொகைளையும், வட்டியையும் நேரடியாக வரவு வைப்பதற்காக சேமிப்பிடப் பங்கேற்பாளரின் சேமிப்பிடக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
வணிக இணைப்பு  முதலீட்டுத் திட்டத்தின்கீழ்  தாயகம் திரும்பியவர்/ திரும்பாதவர் என்ற முறையில் முதலீடுகளுக்குப் பெறப்படும் பங்குத்தொகைகளை /வட்டியைப் பெறும் தகுதி, என்.ஆர்.இ. (வணிக இணைப்பு முதலீட்டுத் திட்டம்) மேலும் என்.ஆர்.ஐ. (வணிக இணைப்பு முதலீட்டுத் திட்டம்) போன்ற கணக்குகளுக்கு இல்லை.

மேலும்  விபரங்கள் பெற:
இந்திய ரிசர்வ் வங்கியின் 2004, ஜீலை 01 நாளிட்ட 2004 - 05ஃ4 என்ற எண்ணுள்ள தலையாய சுற்றறிக்கையை வெளிநாடு வாழ் இந்தியர் வாசிக்கலாம்.
· இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை எண்.20 நாள்: 2, மே - 2000.
· இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.in என்ற இணையதளத்தில், தலைப்பு 3 - காப்புறுதிச் சொத்துக்கள், பங்குகள் மற்றும் கம்பெனி இட்டுவைப்புகள் ஆகியவற்றில் முதலீடு என்ற பகுதியில் வெளியாகியிருக்கும் கேள்வி - பதில்கள் பகுதி.
· ஏ.பி. நேரடி சேவைச் சுற்றறிக்கை எண்.16  நாள்: 4,  அக்டோபர்- 2004.

மறுதலிப்பு:
இந்தக்  கேள்வி பதில்கள், ‘பெமா’ விதிமுறைகளைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் தேசிய காப்புறுதிச் சொத்து சேமிப்பிடம் லிமிடெட் தயாரித்தவைகளாகும்.  இதைத் தயாரிக்கும்போது அதிகபட்ட கவனத்தை என்.எஸ்.டி.எல். கொண்டிருந்தது.  இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஏற்படும் இழப்பகள் சேதாரங்கள் ஆகியவற்றிற்கும் தகவல்களின் துல்லியத் தன்மைக்கும் என்.எஸ்.டி.எல். பொறுப்பேற்காதது.  இந்திய ரிசர்வ் வங்கியின் வழிவகைப்பாடுகளையும் அதில் ஏற்படும் மாற்றங்களையும் வாசகர்கள் ஆழ்ந்து படித்து அறிந்து கொள்ளவும்..

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

பிச்சாவரம் வன சுற்றுலாதலம் பற்றிய சிறப்பு பார்வை ..

தமிழகத்தில் பரவலாக அறியப்படாத, ஆனால், நேரில் சென்று அறிந்தவர்களை ஆச்சரியப்படுத்தும் சுற்றுலா தலங்களில் ஒன்று பிச்சாவரம். இதன் இயற்கை எழில் சற்றே வித்தியாசமானது. அனைவரையும் ஈர்க்கக் கூடியது.கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. இந்தியாவிலேயே சதுப்பு நிலக்காடுகள் சுற்றுலாத் தலமாகத் திகழ்வது பிச்சாவரத்தில் மட்டுமே என்கிறது. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன. 



கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது.மேலும் இது சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குறுக்கும் நெடுக்குமாக இங்கு செல்லும் எண்ணற்ற சிறு சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக அமைந்திருக்கின்றன.ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் உருவாகும் சதுப்பு நிலத்தில் அமைந்த காடுகளே சதுப்பு நிலக் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
 1,358 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சதுப்பு நிலக்காடு, வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் இணைந்த பகுதியாகும். இந்த சதுப்பு நிலக்காட்டில் 50க்கும் மேற்பட்ட தீவுகளும், அவற்றைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகளும், வாய்க்கால்களும் உள்ளன.

 சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும்.செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.


காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மருத்துவ குணம் கொண்ட தில்லைமரம்:  பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தில்லை மரம் மருத்துவக்குணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும். தனது தொழுநோய் குணமடைய வேண்டி் முதலாம் பராந்தக சோழகன் தில்லை நடராஜரை வேண்டி இங்கு வந்து தங்கி 45 நாட்கள் முனிவர் ஒருவரிடம் தில்லை மூலிகை தாவரத்தை மூலம் சிகிச்சை பெற்று அந்நோய் குணமடைந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் சுரபுண்ணை செடி புற்றுநோய் மற்றும் கொடி நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையம் சோதனை மூலம் கண்டறிந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

படகுசவாரி: பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுகுழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. படகுகுழாமில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம் துடுப்பு படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ.200  கட்டணமும், மோட்டார் படகில் இரண்டு மணி நேரத்திற்கு 8 பேர் பயணம் செய்ய ரூ.2100 வசூலிக்கப்படுகிறது.   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுசவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி எண்கள்:  பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் உதயகுமார் தொலைபேசி எண்: 04144-249249. சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739; கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-249227. வெப்சைட் முகவரி: www.killai.com.

தங்கும் விடுதி மற்றும் உணவகம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனம் உணவகம் மற்றும் பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறந்துள்ளது. மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை (Confrance HALL) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கி சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார். பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.

வேறெங்கும் கிடைக்காத அனுபவம்..
சதுப்பு நிலக்காட்டில் அமைந்துள்ள சுற்றுலாத் தலம் என்பதாலும், வனத்திற்குள் சிறு சிறு வளைவுகளின் வழியாக படகில் பயணிப்பது வேறெங்கும் கிடைக்காத அனுபவம் என்பதாலும், சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர்..சுற்றிலும் விதவிதமான மரம் செடி கொடிகள், மயில், மீன் கொத்தி, நாரை, பருந்து என விதவிதமான பறவைகள், குள்ளநரி, நீர் நாய் போன்ற விலங்குகள் உள்ளன.இவற்றை பார்ப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை தருவதாய் உள்ளது என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

அறிய வேண்டிய பல்வேறு அம்சங்களையும், பொழுதுபோக்கையும் கொண்டுள்ள பிச்சாவரத்திற்குச் செல்ல சிதம்பரம் மற்றும் கடலூரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய இடங்களில் ஒன்று பிச்சாவரம் என்பதில் சந்தேகம் இல்லை.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

ஸ்டெம் செல்ஸ் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு பார்வை...

நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிரினங்களிலும் உயிர் உள்ளது என்பதை நாம் மறுப்பதில்லை. உயிர் என்பது என்னஎன யோசிப்போமேயானால், விஞ்ஞானபூர்வமான பதில் உயிரணுக்களின் இயக்கம் என்பதுதான். எல்லா உயிரினங்களிலும் உயிர் அணுக்கள் உண்டு. ஆங்கிலத்தில் செல் (Cell) எனும் சொல் உயிரணுவைக் குறிக்கும். மனிதர்களின் உடலில் எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow)ல் தான் அதிகமாக ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் காணப்படும். ஸ்டெம் செல்கள் இந்த நூற்றாண்டின் உன்னதமான கண்டுபிடிப்பு எனச் சொல்லலாம். ஏனெனில் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்டு, மருந்து மாத்திரைகளை நம்பியே மருத்துவம் செய்துகொண்டு வரும் நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்களின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம்தான். ஸ்டெம் செல்களால் தீர்க்க முடியாத புற்றுநோய், இருதயக் கோளாறு, பார்கின்சன்ஸ், அல்சமீர், சர்க்கரை வியாதி என பலவகையான நோய்களுக்கு அருமருந்தாக வந்துள்ளது. மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் இனி நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக மனிதனை வாழவைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. 

ஸ்டெம் செல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்க்பப்படும் விதையணுக்கள், நமது உடலில் உள்ள எழும்பு மஜ்ஜையில்( போன் மேரோ) இருக்கின்றன. இந்த செல்களை, ரத்த சுத்திகரித்தல் முறையில் எடுத்து, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஸ்டெம் செல் தெரப்பி, தற்போது ஆங்கில மருத்துவத்தில் மாபெரும் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. குறிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சிறுநீரக நோயாளிகளுக்கு, அளிக்கப்படும் ‘ஸ்டெம் செல் தெரபி’ இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இருவரின் ஸ்டெம் செல்களைக் கொண்டு, அவருக்கான இதயம், நுரையூரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால், மனிதர்கள் நோயிலிருந்து உயிர் பிழைக்கலாம்! உண்மையில் அது மருத்துவத்துறையின் பொற்காலமாக அமையப்போவது உறுதி.


ஸ்டெம் செல் சிகிச்சையின் வரலாறு...


முதன் முதலில் ருதால்ஃப் லுட்விக் கர்ல்விர்சோவ் (1821- 1912) என்பவர் ஒரு செல்லிலிருந்து புதிய செல் பிரிந்து வளரும் என்ற நவீன செல் கோட்பாட்டை வெளியிட்டார். இவரே நவீன செல் பற்றிய அறிவியலின் முன்னோடி. இவருடைய மாணவரான ஜூலியஸ் பிரடெரிச் கொஹெய்ம் புண்களில் பழுதுபட்ட செல்களின் மறுசீரமைப்பு புதிய செல்கள் ரத்த ஓட்டத்தின் மூலமாகவே எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலிருந்து புண்களை வந்தடைந்து வளருகின்றது என்பதனையும் கண்டறிந்தார். P.E  டொன்னால் தோமஸ் ஆராய்ச்சியில் எலும்பு மஜ்ஜை குறைபாடுள்ள நோயாளியின் ரத்த ஒட்டத்தில் மற்றொருவரிடம் எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை செல்களை செலுத்தி ஆராய்ந்தபோது புதிய எலும்பு மஜ்ஜை உருவாகியதுடன் புதிய ரத்த செல்களும் உருவானது.

ஸ்டெம் செல் என்றால் என்ன?


எமது உடலானது கோடிக்கணக்கான கலங்களால் ஆனாது. மனிதனது மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் அவ்வாறே. உதாரணமாக 200 வகையான சிறப்பான பணிகளை ஆற்றும் கலங்கள் மனித உடலில் உள்ளன. சருமக் கலங்கள், எலும்புக் கலங்கள், நரம்புக் கலங்கள், ஈரல் கலங்கள், நோயெதிர்புக் கலங்கள் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.




இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான சிறப்பியல்புகள் உள்ளன. அவ்வாறே தனித்தனியான விசேட பணிகளும் உள்ளன. நரம்புகக் கலங்கள் செய்திகளைக் கடத்துகின்றன. நோயெதிர்புக் கலங்கள் நோயைக் கொண்டு வரும் கிருமிகளை அழிக்கின்றன. அதேபோல சூலகத்தில் உள்ள கலங்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.

ஸ்டெம் செல்கள் வேறொரு விதத்தில் விதந்து குறிப்பிட வேண்டிய கலங்கள் ஆகும். இவை நிரந்தரமாக தனியொரு பணிக்கானவை அல்ல. ஆனால் பல்வேறு வகைப்பட்ட கலங்களாக வேறுபாடடைந்து பெருகும் ஆற்றல் பெற்றவை. அதாவது இவை ஈரல் கலங்களாகவோ, எலும்புக் கலங்களாகவே அல்லது வேறெந்தக் கலங்களாகவும் மாற்றமுற்று பெருகக் கூடியவை. 


இன்றைய மருத்துவ உலகில் அதிகம் ஆராயப்படுகின்ற விசயம் ஸ்டெம் செல் ஆகும். இது உயிரினங்களில் உள்ள மிகநுண்ணிய மூலசெல்லாகும். இந்த ஸ்டெம் செல்ஸ் பல்கிப்பெருகும் குணமுடையது. அது உடலின் எந்த ஒரு முதிர்ந்த செல்லாகவும் மாறக்கூடியது. இதில் பலவகை உள்ளது. 

     1. எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) 
     2. அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (adult stem cells)
     3. கார்ட்பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cordblood stem cells) 


எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
மனித சினைமுட்டையுடன் Ovum விந்து Sperm இனைந்து கருவுற்று, மூன்றாவது நாள் ஒற்றைசெல் கரு Zycote நிலையிலிருந்து, நான்காவது நாள் Totipotent தன்மையுடன் உள்ள Morula என்ற பிரிக்கப்படாத (undifferentiated) 16 செல் என்ற நிலையை அடையும். இந்த நிலையில் இது மேலும் பல எம்பிரயோனிக் செல்களை உருவாக்க இயலும். பின்பு ஐந்தாம் நாள் Blastocyst என்ற 64 செல்லிருந்து 150 செல் வரையிலுள்ள நிலையை அடையும், அப்போது அது மூன்று பகுதிகளாக (differentiate) பிரியும், அதில் வெளிப்பகுதியான trophoblast தொப்புள்கொடியுடன் (umbilical cord) சேர்ந்த (Placenta) நஞ்சுக்கொடியாகவும், தலைப்பகுதி போன்ற Embryoblast மற்ற அனைத்துவகை செல்களை inner cell mass உள்ளடக்கியதாகவும் இருக்கும், உள்ளிருக்கும் Blastocoele என்ற காலி இடத்தில் கரு வளரும். இந்த வகை ஸ்டெம் செல்ஸ், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் மூலஆதாரம் blueprint போன்று இருப்பதால் இதனை பயன்படுத்தி அனைத்துவகை (pluripotent) செல்களையும் உருவாக்கலாம். இந்த எம்பிரயோனிக் செல் Blastocyst என்ற நிலையிலிருந்து Gastrula என்ற நிலையை அடையும். இது Ectoderm, Mesoderm, Endoderm மற்றும் Germ cell உள்ளடக்கியது. இது மேலும் 220 விதமான செல் தொகுதியாக பிரிந்து இறுதியில் முதிர்ந்த Adult செல்களாக மாறும். இனி இந்த எம்பிரயோ, நஞ்சுக்கொடியுடன் (Placenta) கர்ப்பப்பையில் ஒட்டிக்கொண்டு வளரத்தொடங்கும். இனி இந்த எம்பிரயோ 2 மாதம் வளர்ந்ததின் பிறகு பேடஸ் (Fetus) என்று கூறலாம்.

இந்த Morula/Blastocyst நிலையில் உள்ள எம்பிரயோவில் உள்ள எந்த ஒருசெல்லும் பல்கிப்பெருகி உடலில் உள்ள மற்ற செல் தொகுதியாக மாறக்கூடியது. ஆனால், இந்த எம்பிரயோனிக் ஸ்டெம் செல் பிரித்தெடுக்கப்படும்போது அந்த கரு அழிந்துவிடக்கூடியதாக இருப்பதால் இந்த வகையான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை தடுக்கப்படவேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.

அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (Adult Stem Cells)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான Multipotent செல்களாக மாறக்கூடியது. இது somatic stem cells என்றும் அழைக்கப்படும். தற்போது மனித தோல் மற்றும் முடியிலிருந்து கூட இந்த வகை ஸ்டெம் செல்லை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வகை ஸ்டெம் செல்லிலிருந்து ஆண், பெண் பாலிணத்திர்குறிய விந்து Sperm மற்றும் கருமுட்டை Ovum செல்களை (Germ cells) உருவாக்க இயலாது. இவ்வகை செல்லை சில மாற்றங்களை ஏற்படுத்தி எம்பிரயோனிக் ஸ்டெம் செல் போன்றதாக Induced Pluripotent Stem Cells (iPSCs) மாற்ற முடியும்.

கார்ட் பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cord blood stem cells)
Cord blood-derived embryonic-like stem cells (CBEs)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ், குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்திலிருந்து எடுக்கப்படுகின்ற ஸ்டெம் செல் ஆகும். தொப்புள்கொடி இரத்தத்தில் உள்ள CD34+, CD38- வகை செல்கள் பிரிக்கப்படாத (undifferentiated) செல்களாகும்.

இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான வியாதிகளுக்கு எலும்புமஞ்சை (bone marrow) மாற்று சிகிச்சையை போல பேருதவியாக இருக்கும். தற்போது உலகமெங்கிலும் இவ்வித சிகிச்சைக்கு உதவியாக இருக்க குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்தை எடுத்து அதற்கான தொப்புள்கொடி இரத்த வங்கியில் சேமித்து வைக்கிறார்கள். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏற்படும் வியாதியைக் குணப்படுத்தவும் அல்லது அவர்களின் பழுதுபட்ட உறுப்புகளின் குறைபாட்டை சரிசெய்யவும் பயன்படும்.

இந்த ஸ்டெம் செல் மருத்துவத்தில் Adult Stem cell மற்றும் Cord blood stem cell சிறந்ததாக இருந்தாலும் இவற்றைக்கொண்டு மனித உயிர்செல் Human Cloning உருவாக்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய வண்செயலாகும்.



ஸ்டெம் செல்களிலிருந்து லட்டுத்தன்மை பற்றிய நுண் அறிவு..
Kyoto University  யில் பணியாற்றும் Mitinori Saitou தலைமையிலான ஜப்பானிய விஞ்ஞானிகளே இந்த புதிய சாதனையைச் செய்தவர்கள் ஆவர். மலட்டுத்தன்மை பற்றிய நுண் அறிவு, நெறிமுறைகளுடன் முரண்படாத தன்மை, இயற்கையுடன் இசைவான நவீன சிகிச்சை முறைகள் போன்ற விடயங்களில் ஆய்வாளர்களுக்கு புதிய எல்லைகளை இந்த ஆய்வு திறந்து விட்டிருக்கிறது. 

முட்டை எவ்வாறு உருவாகி வளர்கிறது என்பதன் சூட்சுமங்களைக் கண்டறிந்து குழந்தையில்லா பெண்களில் இதனைப் பயன்படுத்த முடியும். ஸ்டெம் செல்களிலிருந்து அவர்களுக்கான முட்டைகளை உருவாக்கலாம். அதிலிருந்து அவர்களது பாரம்பரிய அம்சங்களுடன், அவர்களது ஊனும் உடலும் போன்ற சொந்தக் குழந்தைகளை உருவாக்குவதற்கான வழிவகைகளை புதிய தொழில் நுட்பங்களுடன் செயற்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

சுண்டெலி கருத்தரிப்பு...

Mitinori Saitou  தலைமையிலான குழுவினர் சுண்டெலியிலிருந்து கலங்களை எடுத்து அவற்றை மரபியல் ரீதியாக மீள் நிரலாக்கம் (Reprogramme) செய்ததன் மூலம், அதனை முட்டையின் முன்னோடிக் கலங்களாக (egg precursor cells) மாற்றினர். பெண் சுண்டெலியின் பொருத்தமான உடற்கலங்களுடன் அவற்றைக் கலப்பதன் மூலம் மாற்றியமைக்கபட்ட சூலகங்களை உருவாக்கினர். சுண்டெலியின் உடலிற்குள் இவற்றை உட்செலுத்தியபோது காலகதியில் இவை முட்டைகளாகப் பரிமணித்தன. இவ்வாறு கிடைத்த முட்டைகளை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க  (invitro fertilisation IVF) வைத்தனர். டெஸ்ட் ரியூப் முறை என்போமே, அது போலக் கருத்தரிப்பு நிகழ்த்தப்பட்டது.

இதன் மூலம் பெற்றெடுத்த சுண்டெலிக் குஞ்சுகள் நல் ரோக்கியமானவை.
இவ்வாறு ஸ்டெம் செல்சிலிருந்து முட்டையை உருவாக்கும் முயற்சி இப்பொழுதுதான் புத்தம் புதிதாகச் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2003ம் ஆண்டளவில் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அது குட்டியைப் பெற வைக்கும் அளவிற்கு செல்லவில்லை.

இப்பொழுது செய்யப்பட்ட செயன்முறையின் வளர்ச்சியானது பாலூட்டிகளில் மட்டுமின்றி மனிதர்களிலும் பெண்களின் கரு ஆற்றலை உடலுக்கு வெளியே வளர்த்து உள்ளே வைக்கும் பொறிமுறைக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்த ஆராச்சிய்க்கு சைட்டு குழவினர் இரண்டு வகையான ஸ்டெம் செல்ஸ்களைப் (மூலக் கலங்கள்) பயன்படுத்தினர். 



  1. முதலாவது கருவுரு அல்லது முளையம் என்று சொல்லப்படுவதிலிருந்து பெறப்பட்ட ஆதி ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) ஆகும். இவை உடலின் எந்தப் பகுதியின் கலங்களாகவும் மாற்றமடையக் கூடியவையாகும்.
  2. தூண்டுதலால் பெறப்பட்ட பன்முறை ஆற்றலுள்ள ஸ்டெம் செல்ஸ்induced pluripotent stem cellsஆகும். உதாரணமாக சருமத்திலிருந்து பெறப்பட்ட கலத்தை மறுநிரலாக்கம் செய்து முளையஸ்டெம் செல்களின் நிலைக்கு மாற்றிப் பெறப்படுவை.

குருதிப் புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை 1968 ஆம் ஆண்டு முதலில் செய்யப்பட்டது. இதற்கும் அடிப்படை ஸ்டெம் செல்களே. நீரிழிவு, இருதய நோய்களில் இதைப் பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. பக்டிரியா பங்கஸ் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் ஏற்கனவே ஸ்டெம் செல் பயன்படுகிறது

ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணு..


 கியோட்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவை ஒரு வருடத்திற்கு முன்னரே உருவாக்கியுள்ளார்கள். அதனை இயற்கையாக எலியிலிருந்து பெறப்பட்ட முட்டையுடன் செயற்கை முறையில் கருக்கட்டச் செய்து, எலிகளை உருவாக்கியுள்ளனர்.

ஒப்பீட்டளவில் ஸ்டெம் செல்லிருந்து விந்து (Sperm) உருவாக்கல் சுலபமானது. ஏனெனில் விந்தணுவானது எளிமையான கலங்கள் ஆகும். ஆனால் முட்டையினது கலம் (egg) மிகவும் சிக்கலானவை. எனவேதான் இப்புதிய செயன்முறையானது அசாதாரணமான வெற்றியாகக் கருதப்படுகிறது.


பெறுபேறுகளின் விகிதாசாரம் குறைந்தளவே இருந்தபோதும் ஸ்டெம் செல்லிருந்து பெறப்பட்ட முட்டையிலிருந்து ஆரோக்கியமான சுண்டெலிகளை உருவாக்கிய விகிதாசாரம் விகிதம் குறைவாக இருந்தது. சாதாரண முட்டையிலிருந்து 17.9% விகிதம் உருவாக்க முடிந்தபோது ஸ்டெம் செல் முட்டையிலிருந்து 3.9% சதவிகிதமே உருவாக்க முடிந்தது. ஆனாலும் இதை ஒரு பின்னடைவாகக் கருத முடியாது

குழந்தைப் பேறற்ற பெண்களில் முட்டைகளை உருவாக்கக் கூடிய இம்முயற்சி மிக வரவேற்கத்தக்கது. அறிவியல் பாய்ச்சலுடன் கூடிய மிக முன்னேற்றகரமான தொழில் நுட்ப வளர்ச்சி இதுவாகும். இந்தச் செயல்முறை விகிதாசார ரீதியில் பெரு வெற்றியல்ல என்ற போதும், குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்தன என்பதும், அவை வளர்ந்த பின்னர் மலட்டுத்தன்மையின்றி கருவளம் கொண்டவையாக இருந்தன என்பதும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும். 

புதிய எல்லைகள் வகுக்கப்படும்...

நீண்ட காலம் எடுப்பதும் அர்ப்பணிப்புடன் கூடியதுமான இச்செயன்முறை, புத்தறிவியல் ரீதியில் ஒரு முக்கியமான மைற்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் இவை மேலும் முன்னேற்றம் அடைந்து மனிதர்களில் களஆய்வு ரீதியாகச் செய்யப்படுவதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் முட்டைகளை உருவாக்க முடிவதானது மலட்டுத்தன்மைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் புதிய சிகிச்சைமுறைகளை அறிமுகப்படுத்தவும் உதவும். அதற்கு மேலாக முட்டையின் வளர்ச்சி, அவை முதிர்ச்சியடையும் விதம், ஏன் அவை சிலரில் தவறாக உருவாகின்றன, அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி போன்ற விடயங்களில் ஆழமான நுண்ணறிவு பெற உதவும். இது மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்

எய்ட்ஸை குணமாக்கிய ஸ்டெம் செல்ஸ் புதிய சாதனை...


தற்போது எய்ட்ஸ் யால்பாதிக்கப்பட்டஇரண்டு அமெரிக்கர்கள், ஸ்டெம்செல் சிகிச்சைக்குப் பின்னர்பூரண குணமடைந்துள்ளனர்.இதனால், எய்ட்ஸ் நோய்சிகிச்சையில் புதிய சகாப்தம்தொடங்கியுள்ளது. இது என்னபுதுக்கதை என்கிறீர்களா?
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்உள்ள ‘திமோத்தி ஹெண்ட்ரிச்’மருத்துவமனையில் இந்தநோயாளிகள் இருவருக்கும்,எலும்பு மஜ்ஜையில்இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்செல்கள் செலுத்தப்பட்டன.இதைத்தொடர்ந்து,அவர்களுக்கு இருந்து வந்த ஹெச்.ஐ.வி. கிருமிகள் ரத்தத்தில் இருந்தும், தசைகளில் ருந்தும் முழுமையாக அகன்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து விடுதலைப்
பெற, ஸ்டெம் செல் சிகிச்சை புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த
இரு நோயாளிகளுக்கும் மீண்டும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என,மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?

தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகியுள்ளது. உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள். தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்திவாய்ந்த செல்களைப் பாதுகாத்து வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய்வாய்ப்படும்போது இவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.
இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்). 

தொப்புள் கொடி ஸ்டெம் செல்லிருந்து  தலஸ்சீமியா நோய்க்கு தீர்வு 
ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா. இந்த 2 பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.ஆனால், தற்போது ஸ்டெம் செல்லை இறக்குமதி செய்து, சிகிச்சை செய்துகொள்ள 25 லட்ச ரூபாய் ஆகிறது. இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான நடவடிக்கையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வரும் ரத்த வங்கியான ஜீவன் வங்கிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.

தொப்புள் கொடி ஸ்டெம் செல் ரத்த வங்கி..
தொப்புள்கொடி ரத்த வங்கி மூலம் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்கள் பாதுகாக்கும் மூலம், உங்கள் குழந்தை துரதிருஷ்டவசமான நிகழ்வுகள் போது உங்கள் குழந்தை உதவ முடியும் என்று செய்தபின் பொருந்தும் செல்கள் உத்தரவாதமான மூல வேண்டும் உறுதி வேண்டும்.
ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது. தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2015 ஜூன் மாதத்திற்குள் 15,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம். சேமிக்கப்படும் ஸ்டெம் செல்லில் 75 சதவிகிதத்தை அரசு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, ஜீவன் ரத்த வங்கி அளிக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும். மீதி 25 சதவிகிதம் நோயாளியின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்" என்கிறார் இதுகுறித்து, ‘புதிய தலைமுறை’யிடம் பேசிய ஜீவன் ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் பி.சீனிவாசன்.

ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல்.

ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால், இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது வாரத்தில் எங்களை தொடர்புகொண்டு பதிவு செய்தால் போதும். மற்ற நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்கிறார், டாக்டர். சீனிவாசன்.

விவரங்களுக்கு 
044 - 28351200, 044 - 28150300

வருங்காலத்தில் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு செல்வத்தை சேமிக்கின்றோமோ இல்லையோ, தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, நம் குழந்தைகளுக்கு ஏதேனும் வியாதிகள் ஏற்பட்டால், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல் மூலம் சரிசெய்யலாம்.
இதுதான் தொப்புள் கொடி உறவோ!!!. 

ஆக்கம் மற்றும் தொகுப்பு ;அ.தையுபா அஜ்மல்.