Thursday, 16 August 2018

ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை !!

ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.

அப்படியெனில்,

1. தரமான ஹெல்மெட்டுகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா?

2. பல்வேறு அளவுகளில் ஹெல்மெட்டுகள் தயாரிக்க நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளதா?
3. விதி மீறல்களின் போது போலீசார் லஞ்சம் வாங்காமல் தடுத்திட என்ன ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன?
4. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றால், அதற்கு கீழுள்ளவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா அல்லது அவர்கள் இருசக்கர
வாகனத்தில் பயணிக்கக்கூடாதா?
5. விபத்துகள் நேராமல் இருக்க, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா?
6. கனரக வாகனங்களின் போக்குவரத்துகள் கட்டுக்குள் உள்ளனவா?
7. வாகன ஓட்டுனர் உரிமம் முறையான தேர்வில்தான் வழங்கப்படுகின்றதா?
8. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர் வேறு ஒரு போக்குவரத்து அலுவலகத்தில்
உரிமம் எடுக்க முடியாமல் இருக்க ஏற்பாடு இருக்கின்றதா?
9. அலுவலகங்கள், போகுமிடங்களில் வண்டிகளுக்குப் பார்க்கிங் இருப்பது போல்ஹெல்மெட்டுகளைப் பாதுகாக்கவோ வைக்கவோ வசதி இருக்கிறதா?

நடைமுறையில் சேர்ந்துக்கொண்டால்
1. கொண்டை வைத்துள்ளோர்கள் ஹெல்மெட் போடுவது சிரமம்.
2. சிறுவர்களின் அளவிற்கு ஹெல்மெட் இல்லை.
3. நடுத்தரவர்க்கத்தினர், கணவன் மனைவி இரு குழந்தைகள் என ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர். (அதுவே தவறு.) நான்கு ஹெல்மெட்டுகள் போட்டுக்கொண்டு போய் எங்கே கழட்டி வைப்பார்கள், அதனை எப்படிப் பாதுகாப்பார்கள்?
4. ஹெல்மெட் அடிக்கடி தொலையவும் திருடு போகவும் வாய்ப்பு உள்ள நிலையில் திரும்பத்திரும்ப வாங்கிட மக்களால் முடியுமா?
5.பெட்ரோல் விலை உயர்வோடு ஹெல்மெட் விலையும்  சேர்ந்துகொண்டால் என்னதான் செய்வார்கள்?
இது போலீசார் லஞ்சம் வாங்கவும், லஞ்சம் கொடுத்தால் தப்பு செய்யலாம் என்று பொதுமக்களின் எண்ணம் வளரவும்தான் வழி
செய்யும்.
6.மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்றெல்லாம் சொல்லி மக்கள் உடல் நலத்தைக் கெடுக்கும் அரசு,ஹெல்மெட் போடாமல் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்று தெருவெங்கும் அறிவிப்பு வைப்பதோடு நின்று கொள்ளலாம்.
பிடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருக்கும்பொழுது இந்த தேவையற்ற ஆணியைப் பிடுங்க வேண்டியதில்லை.
மொத்தத்தில் இது ஒரு பொதுஜனவிரோதப் போக்கு.
இனி உங்கள் கருத்துகள்.....

Wednesday, 15 August 2018

மோமோ ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் !


பதின்வயதுகளுக்கு உரியவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ!


momo game image க்கான பட முடிவு உயிர்க்கொல்லி விளையாட்டு என்றவுடன் சட்டென உங்கள் நினைவுக்கு புளூவேல் விளையாட்டு வந்திருக்கும். கடந்த 2016, 2017களில் சுமார் 130 உயிர்களைப் பலிவாங்கிய விளையாட்டு அது. ஐம்பது நாட்கள், ஐம்பது சவால்கள். ஐம்பதாவது சவால் தற்கொலை செய்து கொள்வது என்பது தான் புளூவேல் விளையாட்டின் அடிப்படை. அந்த வலையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் தான்.
சமீப காலங்களில் நீல திமிங்கல விளையாட்டு, கிக்கி நடனம் ஆடும் சவால் என இளம் தலைமுறையினருக்கு ஆபத்து விளைவிக்கும் விசயங்கள் டிரென்டிங் ஆகி வருகிறது.
புளூவேல் சேலஞ்ச் எனப்படும் நீல திமிங்கலம் ளையாட்டு ஆனது ரஷ்யாவில் இருந்து பிரபலம் அடைந்தது.  இந்த விளையாட்டின்படி 50 நாள்களில் நிர்வாகிகள் தரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  இறுதி சவாலில் விளையாடுபவர் தற்கொலை செய்ய வேண்டும் என இருக்கும்.
இந்த விளையாட்டால் உலகம் முழுவதிலும் சிறுவர்கள், இளைஞர்கள் என 130 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.  மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் இதற்கு பலர் அடிமையாகி தற்கொலை செய்துள்ளனர்.
இதேபோன்று கிக்கி சவால் சமீபத்தில் பிரபலம் அடைந்து வருகிறது.  காரில் இருந்து இறங்கி சாலையோரம் நடனம் ஆட வேண்டும் என்பது இந்த சவால்.  இதனை செய்ய வேண்டாம் என இந்தியாவில் பல மாநிலங்களில் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கிக்கி நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் அவற்றை வெளியிட்டு பலரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில், இன்டர்நெட்டில் புதிய சவால் ஒன்று டிரென்டிங் ஆகி வருகிறது

இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை. அர்ஜெண்டினாவில் ஒரு பன்னிரண்டு வயது சிறுமி உற்சாகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய அண்ணனும், பெற்றோரும் அவள் மீது மிகவும் செல்லமாக இருந்தார்கள். ஒரு நாள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென போனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றாள். சற்று நேரத்துக்குப் பின் அவளுடைய சகோதரன் பார்த்தபோது அவள் பக்கவாட்டில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தொங்க நினைப்பது தெரிந்தது. அலறியடித்த அண்ணன் ஓடிப் போய் அவளைக் காப்பாற்ற முனைந்தான். அதற்குள் அவள் தூக்கில் தொங்கி விட்டாள். அலறல் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் ஓடிச்சென்று அவளை கீழே இறக்கினார்கள். ஆனால் பாவம் அவள் அதற்குள் இறந்துவிட்டிருந்தாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. பன்னிரண்டு வயதான தங்களுடைய செல்ல மகளுக்கு தூக்கு போடுமளவுக்கு என்ன மன அழுத்தம் ? எனும் கேள்வி அவர்களை நிலை குலைய வைத்தது.அப்போது தான் அவர்களுடைய பார்வை அருகிலிருந்த அவளது போன் மீது போனது. அந்த போன் அங்கே நடக்கின்ற விஷயங்களையெல்லாம் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அதிகரிக்க காவல் நிலையத்துக்கு ஓடினார்கள். அவர்கள் வந்து போனை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போது தான் ‘மோமோ‘ எனும் உயிர்க்கொல்லி விளையாட்டின் வீரியம் உலகிற்குப் புரிந்தது.

.  ஒரு வாளியில் கொதிக்க வைத்த நீரை எடுத்து கொண்டு மக்களிடம் செல்ல வேண்டும்.  அவர்கள் அறியாத நிலையில், வாளி தண்ணீரை அவர்கள் மீது ஊற்ற வேண்டும்.  அவர்கள் வலியால் அழும்பொழுது அதனை படம் பிடிக்க வேண்டும்.
இதுபோன்ற சவாலால் சமீபத்தில் இண்டியானா பகுதியை சேர்ந்த கைலேண்ட் கிளார்க் என்ற 15 வயது சிறுவனுக்கு 2வது நிலை தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று மற்றொரு சவாலும் உள்ளது.  கொதிக்கும் நீரை ஒருவருக்கு தெரியாமல் ஸ்டிரா வைத்து குடிக்க செய்ய வேண்டும்.  இதில் பலருக்கு 2வது மற்றும் 3வது நிலை தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த முட்டாள்தனம் நிறைந்த சவாலால் 8 வயது சிறுமி உயிரிழந்து உள்ளாள்.  அவரது மாமாவே இந்த சவாலை செய்யும்படி சிறுமியிடம் கூறியுள்ளார்.  இளம் வயதினர், குழந்தைகள் இதுபோன்ற செயல்களை செய்யாமல் தடுக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், உலகையே அதிர செய்த நீல திமிங்கலம் சவால், சமீபத்தில், டிடெர்ஜெண்ட் பேக்கெட்டுகளை அப்படியே சாப்பிடுவது என்ற டைடு போட் சவால் ஆகியவை ஆபத்தினை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விசயங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன.





“ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும். அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும். “இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோ வில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது. மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது. இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.

சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?

குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள். புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.

மேலும்  அறிய..


https://www.youtube.com/watch?v=dQnaGmOeJRU

தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

Tuesday, 14 August 2018

நிர்வாகம் முடிவு பண்ணா அதுல மாற்றமே இருக்காது !!!

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.
எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.
அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த  நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.
Image result for ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.
"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"
சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.
அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.
முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.
பத்து நாட்கள் முடிந்தது.
அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.
சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.
அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.
"இது எப்படி சாத்தியம்.?"
அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.
"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"
மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.
வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன்,
இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.
.
நீதி:
நிர்வாகம் (Minority Management)உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...
அதுல மாற்றமே இருக்காது 

Monday, 13 August 2018

கொள்ளிடம் ஆறு காவிரியின் இயற்கையான நீர் வடிகால் 'கொள்ளிடம்'

கொள்ளும் + இடம் = கொள்ளிடம்.
எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அது தாங்கும், ஏற்றுக்'கொள்ளும்' அதனால் அதன்பெயர் 'கொள்ளிடம்'

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 1 கி.மீ அகலமுள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர் கரைபுரண்டோடுகிறது.


காவிரியின் இயற்கையான நீர் வடிகால் கொள்ளிடம் ஆறு.

திருச்சிக்கு மேலே முக்கொம்பு எனும் இடத்தில் காவிரி ஆறு இரண்டாக பிரிகிறது. (கல்லணையின் தொழில்நுட்பட்பத்தில் வியந்த பிரிட்டிஷ் பொறியாளர் சர்.ஆத்தர் காட்டன் திருச்சியை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க மேலணையை முக்கொம்பில் கட்டினார்.

இதுதான் கொள்ளிடத்தின் பிறப்பிடம். இங்கு இரண்டாக பிரியும் காவிரி ஆறு கொள்ளிடம் என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திற்கு வடக்கேயும், காவிரியாக ஸ்ரீரங்கத்திற்கு தெற்கேயும் ஓடுவதால் ஸ்ரீரங்கம் தனித் தீவாகிறது.

முக்கொம்பிற்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படுவதால் திருச்சி நகரம் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

இதனை கடந்து வரும் காவிரியிலும் அதிகமான த
ண்ணீர் வந்தால் காவிரி டெல்டா பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க கல்லணையிலிருந்து வெள்ளநீர் உள்ளாறு என்ற கால்வாய்மூலம் கொள்ளிடத்தில் மடைமாற்றி விடப்படும்.
Image may contain: sky, outdoor, nature and water
வெள்ளத்திலிருந்து தஞ்சையையும், காவிரி பாசன பகுதிகளையும் பாதுகாக்கத்தான் சோழர்கள் காவிரியில் கல்லணையை கட்டினார்கள்.

கடந்த இரு தினங்களாக அதிகப்படியாக வந்த 40,000 கனஅடி தண்ணீர் திருச்சி முக்கொம்பிலிருந்தே நேரடியாக கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டதால் கொள்ளிடத்தில் கரைபுறண்டோடுகிறது தண்ணீர்.கல்லணையிலிருந்து கொள்ளிடத்திற்கு 7000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்த கொள்ளிடம் நீர் நேரடியாக கடலுக்கு போவதில்லை. கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள அணைக்கரையில் தேக்கப்பட்டு அங்கிருந்து வடவாற்றில் திருப்பிவிடப்படும். வடவாற்றுக்கு போக மீதம் உள்ள தண்ணீர்தான் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு நேரடியாக கடலுக்கு போகும்.

கொள்ளிடக்கரையிலிருக்கும் பெரிய நகரம் சிதம்பரம். சிதம்பரத்தை கடந்து பரங்கிப்பேட்டை அருகே கொள்ளிடம் கடலோடு கலக்கிறது.

வடவாற்றிக்கு போகும் நீர் வீராணம் ஏரியை நிரப்புகிறது. வீராணம் ஏரியை நிரப்பியதும் கடலூர் மாவட்டத்தின் இன்னொரு பெரிய ஏரியான பெருமாள் ஏரியையும் நிரப்பும்.

கொள்ளிடம் நதியால் ஒரு லட்சம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. அதன் பிறகுதான் கடலோடு கலக்கிறது. கொள்ளிடம் கடலோடு கலக்கும் இடத்தில் மீன்வளம் மிக அதிகம்.

அலையாத்தி காடுகள் எனப்படும் 'மேங்குரோவ் காடுகள்' கொள்ளிட நதியின் கழிமுகத்தில்தான் உள்ளது. சுனாமியிலிருந்து இந்த பகுதியை பாதுகாத்தது இந்த அலையாத்தி காடுகள்.

நதி நிலத்திற்கும் கடலிற்குமான தொப்புள் கொடி.

தன் பெயருடன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு!

நம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும். 
ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தைமாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியும் அல்ல.
Related imageஅதிகமான நமது பெண்கள் கணவனின் பிரபல்யத்திற்காக தனது பெயருடன் கணவனின் பெயரை இணைப்பதையே கௌரவமாக நினைக்கிறார்கள். அதுவே தனது பெயருடன் இஸ்லாம் கூறித்தந்துள்ள முறைக்கு மாற்றமாக தனது தந்தையின் பெயரை உபயோகிக்காமல் கணவனின் பெயரை உபயோகிப்பதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்கின்றார்கள்.
சரி இப்படி மார்க்கத்திற்கு மாற்றமாக நடப்பவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேற்க வினைகிறேன்.....
உலகையே மாற்றிய மாபெரும் மனித மாணிக்கமான எமது உயிரிலும் மேலான கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிகளின் பெயர்களில் எவருடையதாவது பெயருக்குப்பின்னால் நபிகளாரது பெயர் உபயோகிப்படுகின்றதா? 
மாற்றமாக அவர்களது தந்தைமார்களது பெயர்களே உபயோகிக்கப்படுகின்றது. உமது கணவர் நபிகளாரைவிட எந்தவிதத்திலும் மேலாகப்போவதில்லை. இஸ்லாம் இப்படி கணவர்மார்களுடைய பெயர்களை பாவிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால் உண்மையில் நபியவர்களின் மனைவிமார்களல்லவா முதன்முதலின் கணவனின் பெயரை தமது பெயருக்குப்பின்னால் உபயோகித்திருப்பார்கள்.
உண்மையில் இது மிகத்தரங்குறைந்த இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான அனுகு முறையாகும். தற்காலத்தில் இத்தகைய தவறுகள் திருமன அழைப்பு அட்டைகளில் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. 
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். யாரும் பெரிதாக கவனித்திராத மிகப்பெரிய தவறாகும். உதாரணமாக மணமகனின் தந்தையின் பெயர் முஹம்மத் என்றால் பெற்றோரின் பெயரை இடும் போது MR & MRS முஹம்மத் எனப்போட்டு விடுகின்றார்கள். அதை விட கொடுமையான விடயம் இன்னும் சில அழைப்பு அட்டைகளில் மனமகளின் பெயருக்குப் பின்னால் மனமகனின் பெயரை இட்டு விடுகின்றார்கள்.
இவை அனைத்தும் இஸ்லாம் காட்டித்தந்திடாத கீழ்த்தரமான நடைமுறைகளாகும். இதன் பிறகாவது இத்தகைய தவறுகளை விடுவதில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்வோம். 
அடுத்தவர்களுக்கும் இதனை எத்தி வைப்போம். இவ்வுலகம் நிரந்தரமற்றதாகும் வெறுமனே பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை விட்டுகொடுத்தால் நாளை மறுமையில் கைசேதப்படுவதை விட வேறு வழி இருக்காது.
எனவே இஸ்லாம் கூறிய பிரகாரம் எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் இன்ஷா அல்லஹ் வல்லவன் அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக.

Sunday, 12 August 2018

இன்று உலக யானைகள்தினம்,,, யானைகள் பற்றிய 13 தகவல்கள் !!

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்
யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 13 தகவல்களை மட்டும் உலக யானைகள் தினமான இன்று பகிர்கிறோம்.

1,உலகத்தில் 24 வகையான யானைகள் இருந்தன. அதில் 22 வகைகள் அழிந்து விட்டன. தற்போது யானைகளில் இருவகைகள் தான் உள்ளன. ஒன்று ஆப்ரிக்க யானை, மற்றொன்று இந்திய (ஆசிய) யானை. ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, ராபோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.

2,யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்டவை. யானை கூட்டத்திற்கு தலைவன் கிடையாது. தலைவி மட்டும்தான். யானைகளுக்கு அதிக உணவு மற்றும் தண்ணீர் தேவை. எனவே, போதிய உணவும், தண்ணீரும் கொண்ட காட்டுப் பகுதிகளே அவை வாழ ஏற்ற வாழ்விடமாக அமையும். யானைக்கு தந்தங்கள் உண்டு. தந்தங்கள் இல்லாத ஆண் யானையைத் தான் 'மக்னா' என்கிறோம். எனவே, யானையின் வலிமை என்பது தும்பிக்கை மற்றும் தந்தங்கள்தான். தும்பிக்கை, வாசனை உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஒரு மனிதனின் வாசனையை யானை அறிந்து கொள்ள முடியும்.




3,பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.

4,யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.

5,ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் எல்லாம் நாம் நினைவில் வேண்டுமானால் வாழலாம். இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை.6,யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'
7,மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.
8,யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.

9,யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.
10,யானை‌க்கு‌ட்டி‌க்கு 3 முத‌ல் 5 வயது‌க்கு‌ள் த‌ந்த‌ம் முளை‌க்‌கிறது.

10,யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே... அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.
11,உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.


12,முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

13.ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 32 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் சுமார் 2250 ல் இருந்து 3750 வரை இருக்கிறது. எனவே, புலிகளை போல், ஆசிய யானைகளும் உலக எண்ணிக்கையில் இந்தியாவில்தான் அதிகம். எனவே, பிற்கால சந்ததிகள் யானைகளை பார்க்க, நாம் அவற்றை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தும்பிக்கை வடிவில் மூக்கினைப் பெற்றுள்ள ஒரே விலங்கு யானை தான். பாலை வனப் பகுதி மற்றும் சதுப்பு நிலங்களை தவிர மற்ற எல்லா நிலத்தோற்றங்களிலும் புலிகளை போல் யானைகளும் வசிக்கின்றன.


அழிவின் விளிம்பில் யானைகள்: எப்போதுமே யானைகள் நமக்கொரு அலாதியான அனுபவத்தையே தந்து இருக்கிறது. ஆனால், நமக்கு சந்தோஷத்தை தரும் யானைக் கூட்டம் இப்போது சந்தோஷமாக இல்லை. சரி, சந்தோஷத்தைக் கூட விடுங்கள்... அதில் பெரும்பாலும் இப்போது உயிரோட கூட இல்லை. 

ஆரோக்கிய காடுகள் :
ஒரு காடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அங்கு யானைகள் வாழ்வது மிகவும் அவசியம். காடு என்ற சுற்றுச்சூழலில் யானைகளின் பங்கு அவசியம். காட்டில் தாவரங்களை உண்டு (சுமார் 120 வகை தாவரங்களின்) விதைகளை பரப்புகின்றன. வெகுதுாரம் செல்வதால் விதைகள் பல கி.மீ., துாரம் வரை பரவும். காட்டில் பல்லுயிரின பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது. யானையின் எச்சத்தில் பல வகையான பூஞ்சைகள் வளர்கின்றன. யானைகள் பல கி.மீ., நடந்து செல்வதால், காட்டில் வழிப் பாதைகளை உருவாக்குகின்றன. இன்று நம் காட்டில் இருக்கும் பல வழிகள் யானைகளால் உருவாக்கப்பட்டவை. யானையின் 'லத்தி' (சாணம்) மக்கும் போது, அதை மக்கச் செய்யும் பூச்சிகள், பல்வேறு பறவை இனங்களுக்கு உணவாகின்றன. மான் போன்ற பிற தாவர உண்ணிகளுக்கு காட்டில் உணவு கிடைக்க யானைகள் வழி வகுக்கின்றன. யானையின் உருவம் மிகப் பெரியது. இவை நடந்து சென்று உணவு உட்கொள்ளும் பொழுது, அங்கு இடைவெளி கிடைக்கிறது. இது மற்ற விலங்குகளுக்கு பயனாகிறது.


ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு,அஜ்மல் கான்.

Saturday, 11 August 2018

தமிழக அரசு அறிமுகபடுத்தியுள்ள காவலன் கைபேசி செயலி !!!

இன்றைய சூழலில் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு மிகக் குறைவாகவே உள்ளது. செய்தித்தாளை திறந்தாலே கொலை, திருட்டு, பலாத்காரம் என ஏகப்பட்ட அசம்பாவித சம்பவங்கள். ஆபத்து எப்பொழுது நம்மை நெருங்கும் என்று தெரியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் ’காவலன் டயல் 100’ மற்றும் ’காவலன் SOS’ என்னும் இரண்டு கைபேசி செயலியை அறிமுகம் படுத்தியுள்ளது தமிழக அரசு.







தொழில்நுட்பம் நம் கைநுனியில் கைபேசி வழியாக இருக்கிறது; ஆபத்தான நேரங்களில் உதவ காவலன் செயலியை உங்கள் கைபேசியில் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசலாம்.
காவலன் SOS மற்றும் காவலன் டயல் 100 செயலியின் நோக்கம்:
தமிழக காவல் துறை ஆபத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்த இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயிலி மூலம் பொது மக்கள் காவல் துறையின் உதவியை உடனடியாக நாடலாம். காவல் துறையை அணுக எந்த எண்ணை பயன்படுத்த வேண்டும் என்று குழம்பாமல் காவலன் செயலி மூலம் சில நொடிகளில் நீங்கள் இருக்கும் இடத்தையும் உங்கள் சிக்கலையும் காவல் துறைக்கு தெரியப்படுத்தி விடலாம்.
அவசர தேவையின்போது அதாவது இயற்கை சீரழிவு, பலாத்காரம், கடத்தல், திருட்டு, ஈவ் டீசிங் போன்ற சிக்கல்களில் இருந்து விடுப்பட இந்த செயலியை நாடலாம் என தமிழக காவல் துறை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடாமலும் புகார்களை அளிக்கலாம்.
காவலன் SOS செயலியின் செயல்பாடு:
இந்த செயலியை கூகுள் பிளே அல்லது IOSல் பெற்று உங்கள் முகவரி, கைபேசிய எண், ஆபத்தின் போது தொடர்புகொள்ள கூடிய இரண்டு உறவினர் அல்லது நண்பர்கள் எண்ணை குறிப்பிட்டு உங்கள் கணக்கை துவங்கலாம்.




ஆபத்து நேரத்தில் உங்களுக்கு உதவி வேண்டும் என்றால் செயலியின் SOS பொத்தனை அமுக்கினால் போதும் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரி, உங்கள் கைபேசி பின் கேமிராவில் மூலம் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு 5 நொடிகளில் காவலர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். தகவல் பெற்ற சில நிமிடங்களிலே உதவி உங்களை தேடி வரும்.

செயலிகளை பதிவிறக்கம் செய்ய: Kavalan Dial 100 | Kavalan SOS

Friday, 10 August 2018

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்!!

Image result for PAN card

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு இந்திய வருமானவரித் துறையினரால் பான் அட்டை வழங்கப்படுகிறது  நிரந்தரக் கணக்கு எண் (PAN – Permanent account number) பெற்றவர்களின் வருமானத்திற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது வருமான வரி வசூலித்தல் மற்றும் சட்டப்பூர்வமற்ற வருமானத்தைக் கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்குப் பான் அட்டை பெரிதும் உதவுகிறது
அதே சமயத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் பெற்றிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்.ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் எண் மற்றும் எழுத்துக்களால் ஆன 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை வருமான வரிச் சட்டப் பிரிவு 139A-ன் படி வருமானவரித் துறை வழங்குகிறது வழங்கப்படுகின்ற ஒவ்வொரு எண்ணும் தனித்த அடையாளத்தைக் கொண்டது. சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளைப் பெறுகின்றனர். உள்நோக்கம் இல்லாமல் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பிக்கும் பொழுது இரண்டு பான் எண்கள் ஒருவருக்கு ஒதுக்கப்படலாம். சிலர் வரி ஏய்ப்புச் செய்வதற்காகத் தெரிந்தே இரண்டு பான் அட்டைகளைப் பெற்றிருக்கலாம்

ஒன்றுக்கும் மேற்பட்ட (PAN)

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளால் ஏற்படும் விளைவுகள் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருத்தல் மோசடிக் குற்றமாகும். தங்களுடைய வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் வைத்திருப்பதை வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் கண்டறிந்தால் அந்தத் தகவலை உரிய அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவார்கள். அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை 1961 ஆம் ஆண்டைய வருமான வரிச் சட்டத்தின் 272B – பிரிவின்படி, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளைப் பெற்றிருந்தால், அதனுடைய நோக்கத்தைப் பொறுத்து அவருக்கு ரூபாய் 10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளின் மூலமாக வரி ஏய்ப்புச் செய்தல், முறையற்ற பணப் பரிமாற்றம் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களையும் அவர்களுடைய நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கிறது. வங்கி அல்லது நிறுவனங்கள் புகார் செய்தால் வாடிக்கையாளர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும்
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண் சிக்கலைத் தீர்ப்பது எவ்வாறு ?
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்களை நீங்கள் பெற்றிருந்தால் அவற்றில் ஒன்றை நீக்கிவிட வேண்டும். அதற்கு வருமான வரித்துறை இணையத் தளத்திற்குச் (NSDL’s website) செல்ல வேண்டும். அத்தளத்தில் உள்ள “change or correct existing PAN data” என்னும் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது, வருமானவரித் துறை இணையத் தளத்திலிருந்து விண்ணப்பித்தினைப் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்திச் செய்து அருகில் உள்ள UTI அல்லது NSDL PAN அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 8 அல்லது 10 நாட்களுக்குள் உங்களுடைய இரண்டாவது பான் எண் நீக்கப்பட்டு விடும்…

Tuesday, 31 July 2018

ஹெல்மட் விஷயத்தில் ஏன் கடுமையாக நெருக்கடி ??

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே! 
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. …
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. …
No automatic alt text available.குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா….
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ….
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா….
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா…
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்…
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்குமமேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே…
ஹெல்மெட்_அணிவதால். …
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது…
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே…
மீத்தேன் ஹை கார்பன் நீயூட்ரினோ இவையெல்லாம் எதற்காக .?
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். …
இப்பொழுது சொல்லுங்கள் ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்….

Monday, 30 July 2018

சீரகத்தை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்...!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
Image may contain: foodஅந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.


சீரக தண்ணீர்
..............................
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
சீரகப் பொடி மற்றும் தேன்..
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

மருத்துவக் குணங்கள்:
  1. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.
  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
  3. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
  4. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
  5. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட  இதைச் சாப்பிடலாம்.
  6. உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
  7. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
  8. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
  9. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டியை பொடித்து சாப்பிட்டால் மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
  10. சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
  11. சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  12. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.
  13. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
  14. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
  15. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.
  16. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
  17. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
  18. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
  19. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
    .