Sunday, 11 August 2024

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐஐடி-யை குறிவையுங்கள் !!

நான் ஒறு வேலை காரனமாக குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தேன். அங்கு எனது தூரத்து சொந்த  தங்கை  மற்றும் என் மணைவியின் உயிர் தோழி வீட்டில் தங்கினோம்.

அங்கு தங்கை மகன் இம்ரானுடன் உறையாடயதில், அவன் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை எழுதி  சிறிய கட் ஆப்பில் இழந்ததாகவும், மீண்டும் அடுத்த வருடம்  நுழைவுத் தேர்வு எழுதுவதாகவும் கூறினார்.

அதன் காரணமாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அறிவுரை…

இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர்.இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.


 இந்த நிலையை  எவ்வாறு மாற்ற வேண்டும் ??.


பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விசயத்தில் அவர்கள் அவசரப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது.


நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்?

 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற ஏதேனும் ஒருப் படிப்பில்* சேர்த்துவிடுகிறோம். இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தேன் என்று பெருமைப் பீற்றுகிறோம். ஆனால், பிள்ளைகளோ, தரமாகத் தயாராகி வராமல், தகுதியற்றவற்களாக சமூகத்திற்குள் நுழைந்து, வேலையில்லாமல் திரிகின்றனர். தொழிற்நுட்ப கிரீயேட்டர்களாக வரவேண்டியவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களாக வலம் வருகின்றனர்.

பிஇ படித்துவிட்டு வீட்டிலும் இருக்க முடியாமல், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் முட்டுச்சந்துகளில் அறை எடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திண்டாடி, தங்களின் வாழ்வே சூரையாடப்பட்டுவிட்டதை உணர்கின்றனர்.


இதற்கெல்லாம் காரணம் என்ன?

'முதல் கோணலே முற்றும் கோணல்' என்பதுதான். முதலில் எந்தப் படிப்பில் சேரவேண்டும். அதையும் எங்கு சேர வேண்டுமெனத் திட்டமிட்டுச் சேரவேண்டும். எத்தனையோ தகுதியுள்ள, திறமையான, புத்திசாலி மாணவர்கள், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேவொரு ஓட்டை ஒடைச்சல் கல்லூரிகளில் சேர்ந்து நான்கு, ஐந்து ஆண்டுகளை விரையம் செய்துவிடுகின்றனர். அந்தக் கல்லூரிகளில் எந்த அறிவியல் புரிதலும் இல்லாத, அதேக் கல்லூரியில் படித்த மாணவர்களையே பேராசிரியர்களாக குறைந்தச் சம்பளத்திற்கு நியமித்து, தொடக்கத்திலேயே மாணவர்களின் வாழ்க்கையை அழித்துவிடுகின்றனர்.

ஆனால், பிராமணர்களும் வட இந்திய உயர் வகுப்பினரும், 12-ஆம் வகுப்பு முடித்தக் கையோடு, பிள்ளைகளை ஓரிரு ஆண்டுகள் வீட்டில் இருந்தே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கின்றனர்.அதற்கென எத்தனையோ புத்தகங்கள் வெளியில் கிடைக்கின்றன. அதனை முழுமையாகப் படித்து, இரண்டு மூன்று முறை நுழைவுத் தேர்வுகளை எழுதி, தங்களின் இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.

ஐஐடியிலும், மத்தியப் பல்கலைகழகங்களிலும் நுழைவதுதான் கடினம். நுழைந்தப்பின் எல்லாமும் மாணவர்களைத் தேடி வந்துவிடுகின்றன. பணம், தொழில்நுட்ப கருவிகள், வசதிகள், புத்தகம் என்று எல்லாமும் எளிதாக அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. சிறந்த அறிவியல் புரிதல் உள்ள மாணவர்களாக உருவாகி, புதியப் புதியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற பேராற்றல் கொண்ட மாணவர்களாக சமூகத்திற்குள் நுழைகின்றனர்.இந்த திட்டமிட்ட நகர்வு நம்மிடம் இருக்கிறதா?

இல்லை..

எல்லாவற்றிலும் ஓர் அவசரம். உடனே பிஇ சேர்ந்தாக வேண்டும். உடனே வேலைக்கு போயாக வேண்டும். உடனே கை நிறைய சம்பாதிச்சாக வேண்டும். இதன் விளைவு, இன்று பொறியியல் துறை கவிழ்ந்து கிடக்கிறது. எல்லாத் துறைகளிலும் தகுதியில்லாத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் சரிந்த கையோடு, பொறியாளர்களும் தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பலப் பொறியியல் கல்லூரிகளை மூடுகின்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

ஆனாலும், இன்றும் ஐஐடியன்களுக்கு வாழ்வு உச்சத்தில்தான் இருக்கிறது. ஐஐடியில் தன் படிப்பை முடிப்பதற்கு முன்பே, உலகம் முழுவதும் பறந்துச் சென்று பணியில் அமர்ந்துவிடுகின்றனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் ஒரே பதில்தான் வருகிறது. '12-ஆம் வகுப்பு படித்துவிட்டு, இரண்டு மூன்று ஆண்டுகள் கடினப்பட்டு படித்தேன்.. ஐஐடியில் சேர்ந்தேன்.. சாதித்தேன்..' என்பதுதான் அந்த பதில்.

உங்கள் வீட்டில் வளரும் இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...

இதே போல் என் தங்கை மகன் மற்றும்அனைத்து +2 மாணவர்களும்  இத்த ஆண்டு நுழைவுத் தேர்வுகளை எழுதி ஐஐடியில் சேர்ந்து  வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

உங்கள் நண்பன்  மு.அஜ்மல் கான்.

Monday, 5 August 2024

கஃபாவின் சாவியை பாதுகாக்கும் தற்போதைய காவலர்கள் யார் தெரியுமா..?

கஃபாவின் சாவியை பாதுகாக்கும்  தற்போதைய காவலர்கள் ...


 




மக்காவில் இருக்கும் போது மக்கத்து முஷ்ரிக்குகளின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், தோழர்களும் ஹிஜ்ரத் செய்து  #மதீனாவை அடைந்தனர். 


இஸ்லாமின் வளர்ச்சியுடன், கி.பி 630 இல், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் அவர்களது தோழர்கள் மீண்டு வந்து எதிரிகளை வென்று மக்காவைக் கைப்பற்றினர்.  


பனூ ஷைபா கோத்திரத்தினர்கள் :!!

பனூ ஷைபா கோத்திரத்தினர்கள் தான் அதுவரை கஃபாவுடையசாவியின்பாதுகாவலர்களாக இருந்தனர்.  


நபிகளார் அவர்களே அதன் பொறுப்பில் தொடர அனுமதித்தார்கள். 

இன்றும் கூட கஃபாவை கழுகும் போதும், சிறப்பு சந்தர்ப்பங்களின் போதும் பனூ ஷைபா கோத்திரத்தின் இன்றைய தலைமுறையினர்களே கஃபாவை திறக்கின்றனர். 


அந்த குலத்தினரின் பரம்பரையிலுள்ள தற்போது மீதமிருக்கும் உறுப்பினர்களின் படம் இது..


கஅபாவின் சாவியை பாதுகாக்கும்  முக்கிய பாதுகாவலர்கள் படம்:




1. ஷேக் சலாஹுதீன் ஸைனுல் ஆபிதீன் அல் ஷைபி, கஃபாவுடைய சாவியின் தற்போதைய பாதுகாவலர்.. 

(நடுவில் இருப்பவர்..) 


 2. அப்துரஹ்மான் ஸாலிஹ் அல் ஷைபி.. 

     (மேலே இடது) 


 3. அஹ்மத் அப்துர்ரஹ்மான் அல் ஷைபி. 

      (மேலே வலது..) 


 4. சாலிஹ் அப்துர்ரஹ்மான் சாலிஹ் அல் ஷைபி (கீழே வலது) 


 5. ஷாமிக் அப்துர்ரஹ்மான் அல் ஷைபி (கீழே இடது).... 


Friday, 2 August 2024

பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க எளிய மருத்துவ குறிப்புக்கள் !! ஒரு தவகல்..




பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக சிறந்த பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து பாதுகாத்து அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மிகவும் வலுவாக வைப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது.புதிதாக பிறந்த குழந்தையும் சரி, அதன் வளர்ச்சி கட்டத்திலும் சரி குழந்தை   ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியுடனும் வளர ஒரு தாயிடம் தாய்ப்பால் உற்பத்தி நிறைய இருக்க வேண்டும். ஒருவேளை தாய்ப்பால் அதிகம் சுரக்காத பட்சத்தில் Galactogogues எனப்படும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை மிதமான அளவில் தாய்மார்கள் முயற்சிக்கலாம்.உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.


தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.


காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.




மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.


கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

முருங்கைக்காய் ஜூஸ் (​​Drumstick juice​): முருங்கைக்கு தாய்ப்பால் உற்பத்தியை தூண்டும் திறன் உள்ளது. கறிகள் அல்லது சூப்களில் இதனை சேர்க்கலாம். ஃபிரெஷ்ஷான முருங்கைக்காயை ஜூஸ் செய்து எடுத்து 1 மாதத்திற்கு தினசரி அரை கிளாஸ் குடிக்கலாம். தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க நினைக்கும் பெண்கள் 1 மாதத்திற்கு ஒரு நாளைக்கு 2 முறை இதனை குடித்து வரலாம்.

சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.

சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும்.

உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.

ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.


பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

வெந்தய நீர் (​​Fenugreek water): தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கான மிக பிரபலமான மூலிகையாக வெந்தயம் இருக்கிறது. தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க நினைக்கும் ஒருவர், ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாக கொண்ட இந்த அற்புத மூலிகையான வெந்தயத்தை தேவையான அளவு எடுத்து முன்தினம் இரவு 1 கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்கலாம். பின்னர் காலையில் எழுந்ததும் அந்த வெந்தய தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.

ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5 கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.

பெருஞ்சீரக டீ (​​Fennel Tea): தாய்ப்பால் உற்பத்தி அதிகரிப்பதற்கான மற்றொரு பாரம்பரிய முறை பெருஞ்சீரகம் விதை அதாவது சோம்பு-வை பயன்படுத்துவது ஆகும். பொதுவாக பெருஞ்சீரகம் வயிற்றுப்போக்கு மற்றும் வாயுவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகின்றன. கர்ப்பிணிகள் பெருஞ்சீரக விதைகளை எடுத்து கொள்வது சிறந்த செரிமானத்திற்கு உதவுவதோடு, வயிற்று கோளாறுகளுக்கு நிவாரணம் அளிப்பதால் புதிதாக பிறந்த குழந்தை, தாய்ப்பாலின் மூலம் பெருஞ்சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகளை பெற கூடும். எனினும் இந்த விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், பல தாய்மார்கள் பெருஞ்சீரக விதைகள் தங்களுக்கு அல்லது தங்கள் குழந்தைக்கு பயனளித்ததாக நம்புகிறார்கள். எனவே பிரசவத்திற்கு பின் தாய்ப்பாலை அதிகரிக்க பல் புதிய தாய்மார்கள் பெருஞ்சீரக டீ போன்ற பாரம்பரிய பானங்களை எடுக்கிறார்கள்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

எள்ளு விதை லட்டு (​​Sesame seed laddu): பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் ஒரு அத்தியாவசிய மினரல் ஆகும். பால் இல்லாமல் கால்சியம் நிறைந்திருக்கும் உணவு பொருட்களில் ஒன்று எள் விதைகள். புதிய தாய்மார்களின் தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் அவர்கள் குழந்தையின் வளர்ச்சி இரண்டும் கால்சியத்தை நிறையவே சார்ந்துள்ளது. எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் டயட்டில் எள் சேர்த்து கொள்வது அவசியமாகிறது. கருப்பு எள்ளு, பேரீச்சம்பழம், தேங்காய் துருவல் மற்றும் தங்களுக்கு விருப்பமான நட்ஸ்களை சேர்த்து லட்டுகளை செய்து சாப்பிடலாம்.

மசூர் பருப்பு சூப் (Masoor dal soup): மசூர் பருப்பு ஒரு galactagogue அதாவது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவாக இருக்கிறது. இந்த பருப்பை கொண்டு சூப் செய்தோ அல்லது பிற உணவுகளில் சேர்த்தோ சாப்பிடலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் பருப்பை ஒரு பவுல் எடுத்து கொள்வது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதனை 1 ஸ்பூன் நெய் மற்றும் 1 சிட்டிகை மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல் .

Saturday, 27 July 2024

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

 

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும்.


பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.


1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.


2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?


3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.


4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!


5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.


6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.


7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.


8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.


9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.


10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.


11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.


12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.


13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.


14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்..

தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.


Thursday, 6 June 2024

MOST TOP SALADS OF WORLD


Mechouia Salad (4.9): A Tunisian grilled salad made with vegetables like tomatoes, peppers, onions, and garlic, often garnished with hard-boiled eggs, olives, or tuna.

Ovcharska Salad (4.8): A Bulgarian shepherd's salad, typically including tomatoes, cucumbers, peppers, onions, mushrooms, ham, cheese, and a hard-boiled egg.

Fattoush (4.5): A Levantine bread salad made with toasted or fried pieces of pita bread, mixed greens, and other vegetables.

Greek Salad (4.4): A popular salad from Greece, characterized by tomatoes, cucumbers, onions, feta cheese, and olives, typically dressed with olive oil and oregano.

Mizeria (4.4): A traditional Polish cucumber salad, usually made with sliced cucumbers, sour cream or yogurt, and dill.

Panzanella (4.2): An Italian bread and tomato salad, often including onions, basil, and a vinaigrette dressing.

Olivier Salad (3.9): A Russian salad made with diced potatoes, carrots, peas, pickles, eggs, and a mayonnaise-based dressing, often including meat like chicken or ham.

Caesar Salad (3.8): A classic American salad consisting of romaine lettuce, croutons, Parmesan cheese, and a creamy dressing.

Salade Niçoise (3.8): A French salad from Nice, typically featuring tomatoes, hard-boiled eggs, Niçoise olives, anchovies, and tuna, dressed with olive oil.

Esqueixada: A Catalan salad from Spain, made with shredded salt cod, tomatoes, onions, olives, and a vinaigrette.

Macaroni Salad: A pasta salad made with cooked elbow macaroni and a mayonnaise-based dressing, often including vegetables like celery and onions.

Bayerischer (Bavarian) Salad: Likely referring to a Bavarian potato salad, often made with warm potatoes, bacon, onions, and a vinegar-based dressing.

Thursday, 16 May 2024

Save 1000s of dollars for Free Excel Course !!






If you want to learn Excel ???

I have curated a free Excel course for you.


Following 15 free lessons to make you better at Excel than 90% of the people.


1. Presentation of Excel and PowerQuery 

https://lnkd.in/eyx2Hg3a


2. Excel Ultimate Guide 

https://lnkd.in/eT8wWia7


3. Excel Vlookup 

https://lnkd.in/eHjZrf_y


4. Excel Lookups 

https://lnkd.in/eCNRGYAg


5.Excel Shortcuts 

https://lnkd.in/esMKGVqf


6. Excel Tips

 https://lnkd.in/eh-QtbbR


7. Excel Financial Statements Template 

https://lnkd.in/ebHpsbNZ


8. Excel Waterfall Template 

https://lnkd.in/eP6sKmV8


9. Excel Table and Tabular Data

 https://lnkd.in/eF2FhZFk


10. Excel Charts Tips 

https://lnkd.in/et8E47rt & https://lnkd.in/eSJhViNu


11. Excel FP&A Tips

 https://lnkd.in/eCyegUQW


12. Excel vs PowerBI 

https://lnkd.in/epqjPW6s


13. Excel Dynamic Arrays

 https://lnkd.in/exUSTxUf


14. Excel Split Text in Seconds 

https://lnkd.in/e66gHfrC


15. Excel Financial Modeling

 https://lnkd.in/e34gyct3

 Help me spread this free course: like, share and comment!

Tuesday, 14 May 2024

உலகின் முதல் இஸ்லாமிய பெண் செவிலி ருஃபைதா பின்த் ஸ'ஆத் ( Rufaida Al Aslamia) பற்றிய ஒரு சமூக பார்வை !!

 

உலகின் முதல் செவிலியர் மற்றும் ரஸூலுல்லாஹ் (ஸல்)  காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் முதல் பெண் செவிலி ருஃபைதா பின்த் ஸ'ஆத் (ரலி) ....

நபிகள் நாயகம் முஹம்மது( ஸல் ) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ருஃபைதா, பனி அஸ்லாம் குலத்தை சேர்ந்தவர்கள்,போர்க்களத்தில் காயமடைந்த ஸஹாபாக்களுக்கு சிகிச்சையளிக்க நபிகள் நாயகத்திடம் அனுமதி பெற்று இயங்கியவர், மதினா பள்ளிவாசலுக்கு மிக அருகில் கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கும்    தேவையுடையோருக்கும் உதவுமாறு அனுமதியளிக்கப்பட்டிருந்தார்.

ருஃபைதா அவர்கள் சவூதியின் மேற்கு பகுதியான ஹிஜாஸில் ஹிஜ்ரி 2ல் பிறந்ததாக (கிபி 620) தோராயமாக அறியப்படுகிறது.

தமது தந்தையான ஸ'ஆத் அல் அஸ்லாமி அவர்களிடம் மருத்துவம் பயின்ற ருஃபைதா முதல் முஸ்லிம் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் அறியப்படுகிறார்.

ருஃபைதா ஒரு செவிலி , ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மாத்திரமல்லாது சிறந்த சமூக சேவகியாகவும், சமூகத்தில் சூழ்ந்திருந்த நோய்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும், அனாதை குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் ஒன்றினை தொடங்கி ஆரதவற்றவர் பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.

தம்மை போல பல விருப்பமுடைய அன்சாரி பெண்களுக்கு செவிலிப்பணிக்கான பயிற்சிகள் அளித்து பட்டறை ஒன்றும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறந்த செவிலியாக ருஃபைதா அவர்கள் கடைபிடித்த ஒழுங்குமுறைகள் தான் பின்னாளில் மத்தியகால இஸ்லாமிய பேரரசுகள் நிர்மாணித்த மருத்துவமனைகளிலும் , பிறகு ஐரோப்பாவிலும் நர்ஸிங் என பரவியது.

நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் காலத்திலேயே அவர்களோடு வாழ்ந்த செவிலி ருஃபைதா தான் இஸ்லாமிய உலகின் முதல் செவிலியாக அறியப்படுகிறார்.

தொகுப்பு  : அ. தையுபா  அஜ்மல்.

Tuesday, 23 April 2024

காரைக்குடி,கோட்டையூரின் புத்தக பொக்கிஷ மனிதர் ரோஜா முத்தையா செட்டியார்!!

இன்று புத்தக தினத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மூலம் ஒரு லட்சம் புத்தகங்களை , பொக்கிஷம் போல போற்றிப் பாதுகாத்து வந்த ஒரு தனி மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அந்த அபூர்வ மனிதரின் பெயர் ரோஜா முத்தையா செட்டியார். அவர் சிவகங்கை மாவட்டம் , நான் பிறந்த என் ஊர் காரைக்குடி கோட்டையூரில் பிறந்து [ 1926-1992 ]வாழ்ந்தவர்.தன்னுடைய நடுத்தர வயதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களை சேர்த்து விட்டாராம் செட்டியார்..!

தனி ஒரு மனிதனாக , எப்படி இவற்றையெல்லாம் பாதுகாப்பது ...?


இந்த புத்தகங்கள் அனைத்தையும் தஞ்சை பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடலாம்...அல்லது தமிழக அரசிடம் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டார் செட்டியார்,அதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் எடுத்தார்..!அடுத்த சில நாட்களில் , அதிகாரிகள் சிலர் வீடு தேடி வர, செட்டியாருக்கு அளவில்லா சந்தோஷம்.அப்பாடா என்று அரசு அதிகாரிகள் வந்து விட்டார்களே என ஆவலோடு வரவேற்றார், ஆனால் வந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள்.

செட்டியார் பற்றி கேள்விப்பட்டு , தானாகவே முன் வந்த சிகாகோ பல்கலைகழகத்தினர் ,கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து செட்டியாரிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் அவர்களே எடுத்துக் கொள்ள தயாராக இருந்தார்கள்.

என் பொக்கிஷங்கள் இந்த தமிழ் நாட்டிற்கு மட்டுமே சொந்தம். ” என்று சொல்லி விட்டார்.என்றாவது ஒரு நாள் , தன் புத்தக பொக்கிஷங்களை தமிழக அரசு எடுத்துக் கொள்ளும் என்று தளராத நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தாராம் முத்தையா செட்டியார் .

செட்டியார் , ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும்போது , அப்போதுதான் பிறந்த குழந்தையை எடுப்பதை விட , மென்மையாக எடுப்பாராம்... எந்த புத்தகத்தை யார் அவரிடம் கொடுத்தாலும் கோடி ரூபாய் பணத்தை கையில் வாங்குவது போல மகிழ்வோடு வாங்குவாராம்.

எல்லோரும் தாங்கள் உடுத்தியுள்ள வேட்டி அழுக்காகாமல்தான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால்....செட்டியார் தன் புத்தகத்தில் அழுக்கு இருந்தால்,

தான் உடுத்தியிருக்கும் பட்டு வேட்டியால் , புத்தகத்தில் இருக்கும் அழுக்கை மென்மையாகத் துடைப்பாராம்.

தான் வாழும் காலத்திலேயே , எல்லா புத்தகங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட ஆசைப்பட்ட முத்தையா செட்டியார் எதிர்பாராமல் 4.6.1992 அன்று இறந்து போனார்.

அதன்பின் சிக்காகோ பல்கலைக்கழகம் மீண்டும் செட்டியாரின் குடும்பத்தை தொடர்பு கொண்டது...செட்டியாருடைய சேகரிப்புக்கள் அனைத்தையும் , நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டது...

அந்த நூல்கள் அனைத்தையும் அமெரிக்கா கொண்டு செல்லாமல் , செட்டியார் ஆசைப்பட்டபடியே , சென்னையிலேயே ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் 1994-ம் ஆண்டு தொடங்கி , இப்போதும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது சென்னை தரமணியில் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புத்தகம் வாசிப்பது சுகானுபவம். அதை அனுபவித்தவர்கள், ஒரு போதும் மாற மாட்டார்கள். மனதுக்கும் மிக நெருக்கமாக உள்ள புத்தகங்களை வாசிக்கும் போது தான் சிந்தனை பிறக்கிறது. அது செயலாக மாறுகிறது. புத்தக வாசிப்பை வளப்படுத்துங்கள்புத்தகங்கள் வாசிப்பது ஒரு அருமையான பழக்கம். அது நம் அறிவை மேன்படுத்த உதவும். மேன்படுத்துவது மட்டும் இல்லாமல், ஒருவரை பல கோணங்களில் புத்தக வாசிப்பு சிந்திக்க வைக்கும். பல நேரங்களின் உங்களுக்கு புத்தக வாசிப்பு கைகொடுக்கும். 

எனக்கு அவ்வாறு தான் என் முதல் நேர்முகத்தேர்வுக்கு கைகொடுத்தது.
எல்லா கேள்விகளும் கேட்டு முடித்த பிறகு, நேர்முக தேர்வாளர் நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகத்தின் பெயரை கூறுங்கள் என்றார். நான் அப்போது படித்த புத்தகத்தின் பெயரை கூறினேன்
(The Bad Beginning  - A Series of Unfortunate Events, #1 by Lemony Snicket) அதில் வரும் மூன்று தவறுகள் என்ன. அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டார்.

மூன்று தவறுகளைக் கூறி அதில் இருந்து கற்றுக்கொண்டதை கூறினேன். நேர்முக தேர்வாளரும் அந்த புத்தகத்தை படித்து இருப்பர் போல.அவருக்கு நான் கூறிய பதில் பிடித்து இருந்தது. ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தி மறைமுகமா நீங்கள் Selected என்று வார்த்தைகள் இல்லாமல் கூறினார். புத்தகம் படிப்பது எவ்வளவு நல்லது என்று நான் உணர்ந்த தருணம் அது.


ஒரு வேலை நான் புத்தகம் படிக்காதவனாக இருந்து இருந்தால் நேர்முக தேர்வாளருக்கும் எனக்குமான தொடர்பு அன்றே முடிந்து இருக்கும். இருவரும் புத்தக வாசிப்பாளர்கள் என்பதினால் நாங்கள் இன்று வரை தொடர்பில் உள்ளோம். நான் அலுவகத்திற்கு சேர்ந்த பிறகு அவரை தேடி கண்டுபிடித்து இன்றளவும் தொடர்பில் உள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் காதலர்கள் இடையே இருக்கும் உறவை விட அற்புதமான உறவு இரண்டு புத்தகம் வசிப்பவர்கள் இடையே இருக்கும்.

புத்தகம் வாசியுங்கள். புத்தகம் வசிக்கும் நபர்களிடம் பேசுங்கள். அது ஒரு தனி உணர்வு. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உறவாக இருக்கும்.


இந்த புத்தக தினத்தில் புத்தகங்களை வாசிப்போம் என உறுதி எடுத்துக்கொண்டுஇன்றே தொடங்குங்கள்.

என்றும் என் வாழ்த்துக்களுடன்...

உங்கள் மு. அஜ்மல் கான்.

Sunday, 10 March 2024

Environmental Concerns Lead to Discontinuation of FM200 Fire Suppression Systems !!



FM200 (also known as HFC-227ea) is a clean agent fire suppression system that has been used for decades to protect valuable assets and critical infrastructure from fire damage. However, there has been a recent trend towards phasing out FM200 due to concerns over its environmental impact and safety risks.


One of the main concerns with FM200 is its impact on global warming . FM200 is a hydrofluorocarbon (HFC), which is a type of synthetic gas that has a high global warming potential. When released into the atmosphere, HFCs can contribute to climate change.


In addition to environmental concerns, there are also safety risks associated with FM200. While FM200 is a highly effective fire suppressant, it can be hazardous to human health in high concentrations. Exposure to FM200 can cause respiratory problems, eye irritation, and other health issues.


As a result of these concerns, many countries and organizations are phasing down the use of FM200 and other HFC-based fire suppression systems. The United States Environmental Protection Agency (EPA) has also announced plans to phase down the use of HFCs in various applications, including fire suppression.


While the phase-down of FM200 may be concerning for those who rely on this technology to protect their assets, there are alternative fire suppression systems available that are more environmentally friendly and safer for human health. For example, some companies are switching to water mist systems or inert gas systems, which use non-toxic gases like nitrogen or argon to suppress fires.

FM-200 Fire Suppression Systems Article_5:

Clean Agent Standards:

The most common standard that we have come across when using a Clean Agent Gas for Fire Suppression is the NFPA 2001 – Standard on Clean Agent Fire Extinguishing.

The standard covers the requirements for designing, installing, testing, inspecting, approving, operating, and maintaining the systems.

Is FM200™ banned?

No, FM200 is not banned, there is sometimes confusion with Halon, which during the start of 1992, it was instructed that no manufacturing of new Halon was allowed from 1994, under the Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer. This was due to its environmental impact on the Ozone Layer.

FM200 became one of the world’s leading replacements of Halon for Fire Suppressant and Clean Agent Gases.

Is FM200™ Safe?

Upon exposure to people, it is safe but should be noted one of the Hazards noted is ‘May displace oxygen and cause rapid suffocation’, due to the way it works, being heavier than air.

What other suppression gases are available?

Although the most common, FM-200™ it is not the only option when it comes to using a Clean Agent for Fire Suppression. Other gases available are:
·Novec™ 1230 [Halocarbon]
·Inergen [Inert Gas]
·Nitrogen [Inert Gas]
·Argonite [Inert Gas]

Room Integrity Testing:

Prior to the space being put into operation, that is being protected, there will need to be a ‘Room Integrity’ test carried out to test it for leakage, and thus ensure the gases holding time can be met.

5 Different Fire Classes A, B, C, D & K:

To understand the Fire Classes [A, B & C] that the FM200™ gas is applicable for, refer to the below table:





Wednesday, 6 March 2024

இஸ்லாத்தில் 5 கலிமா பற்றி அறிந்து, அவற்றை புரிந்து மற்றும் எளிதில் மனனம் செய்து கொள்ளுவோம் !!



1. கலிமா தய்யிப்

 

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி


பொருள்: முதல் கலிமா பரிசுத்தமானது

வணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.


2. கலிமா ஷஹாதத்


அஷ்ஹது அல்லாஹ் இலாஹ இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.


பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூரல்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.


3. கலிமா தம்ஜீது


சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹௌல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.


பொருள்: மூன்றாம் கலிமா தூய்மைப்படுத்துதல்

அல்லாஹ் பரிசுத்தமானவன். மேலும் எல்லாப் புகழும் அல்லாஹுத்தஆலாவிற்கே உரியன. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹுத்தஆலா மிகப் பெரியவன், பாவத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோனும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்.


4. கலிமா தவ்ஹீது


லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயெமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.


பொருள்: நான்காம் கலிமா ஒருமைப்படுத்துதல்

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. எல்லா அரசாட்சிகளும் அவனுக்கே உரியன, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. அவனே படைப்பினங்களை உயிர்ப்பிக்கவும், மரணிக்கவும் செய்கிறான். அவன் என்றும் நிலைத்திருப்பவன். நலமனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தி வாய்ந்தவன்.


5. கலிமா ரத்துல் குஃப்ர்


அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅவ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரத்து மினல்லகுஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.


பொருள்: ஐந்தாம் கலிமா இறைமறுப்பை நீக்குதல்

யா அல்லாஹ் நான் அறிந்தவனாக இருக்கும் நிலையில் உன்னைக் கொண்டு எந்த வஸ்துவையும் (இணை வைப்பதை) விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன். நான் அறியாமல் எக்குற்றம் என்னில் நிகழ்ந்ததோ, அதற்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். அக்குற்றத்தை விட்டும் நான் தவ்பா செய்து (இனி ஒரு போதும் அதை செய்வதில்லை என்ற உறுதியுடன்) மீண்டேன்.


தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.