Thursday, 2 January 2025

மனித (70 கிலோ கிராம் எடையுள்ள) உடலில் உள்ள மூலப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு தவகல் !!




நம் உடலில்  உள்ள மூலப் பொருள்கள்..

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்

2. கார்பன் 16 கிலோ கிராம்

3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்

4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்

5. கால்சியம் 1.0 கிலோ கிராம்

6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம்

8. சோடியம் 100 கிராம்

9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம்

11. இரும்பு 4.2. கிராம்

12. ஃப்ளூரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம்

14. சிலிக்கன் 1.0 கிராம்

15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்

17. ப்ரோமின் 0.26 கிராம்

18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம்

20. அலுமினியம் 60 மில்லி கிராம்

21. காட்மியம் 50 மில்லி கிராம்

22. செரியம் 40 மில்லி கிராம்

23. பேரியம் 22 மில்லி கிராம்

24. அயோடின் 20 மில்லி கிராம்

25. தகரம் 20 மில்லி கிராம்

26. டைட்டானியம் 20 மில்லி கிராம்

27. போரான் 18 மில்லி கிராம்

28. நிக்கல் 15 மில்லி கிராம்

29. செனியம் 15 மில்லிகிராம்

30. குரோமியம் 14 மில்லி கிராம்

31. மக்னீசியம் 12 மில்லி கிராம்

32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்

33. லித்தியம் 7 மில்லி கிராம்

34. செஸியம் 6 மில்லி கிராம்

35. பாதரசம் 6 மில்லி கிராம்

36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்

37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்

38. கோபால்ட் 3 மில்லி கிராம்

39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்

40. வெள்ளி 2 மில்லி கிராம்

41. நியோபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்

43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்

44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்

45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்

46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்

47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்

48. தால்வியம் 0.5 மில்லி கிராம்

49. இண்டியம் 0.4 மில்லி கிராம்

50. தங்கம் 0.4 மில்லி கிராம்

51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்

52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம்

54. தோரியம் 0.1 மில்லி கிராம்

55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்

56. சமாரியம் 50 மில்லி கிராம்

57. பெல்யம் 36 மில்லி கிராம்

58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.

 மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.


 உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.


உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.


நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.


நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு உள்ளன.

நன்றி   :  டாக்டர் பாண்டியன், மதுரை. 

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர் !!

 


அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.
மஹ்ஷர் வெளியின் அகோரம்
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.
பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது, சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)
இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.
மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.
நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.

3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்

பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.
பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்

இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.
யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)

காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.
எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!
பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.

6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.
மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)

பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.

ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.  இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.
அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Thursday, 19 December 2024

Why Should You Care About Static Pressure in HVAC System !!

Static pressure is the invisible force your air handling unit (AHU) fan is constantly pushing against. It’s not about air speed—it’s about resistance to airflow.



📏 How it’s measured: inches of water column (in.w.c) or Pascals (Pa).

⚖️ Why it matters:

Too low = poor air distribution

Too high = overloaded fans and higher energy bills



Where Static Pressure Drops Happen


Air loses pressure every time it meets resistance, just like water in a pipe. Common culprits include:

Filters (especially clogged ones)

Heating and cooling coils

Duct bends, transitions, and long runs

Diffusers, grilles, and dampers


Each adds friction or turbulence, reducing pressure even if airflow stays the same.



Measuring & Controlling Static Pressure


Tools: Manometers, differential pressure gauges

Checkpoints:

Across filters (clogging)

Across coils (fouling)

Between supply and return ducts


Ways to control it:

Use low-resistance filters

Size ducts correctly

Minimize sharp bends

Keep filters and coils clean

Use VFDs to match fan speed to demand


Less resistance means less fan energy and higher system efficiency.


Why It Matters for Design and Operation


Mismanaged static pressure leads to:

Higher energy costs

Uneven comfort

Premature equipment wear

Poor indoor air quality


A balanced system, on the other hand, delivers consistent comfort, lower operating costs, and longer equipment life.

Thursday, 28 November 2024

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம் !! ஒரு சமூக பார்வை..


விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், குரு - சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும் கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதையும் ஊக்கப்படுத்து மட்டும் நோக்கமல்ல, பார்பன்னரல்லாத பிற ஜாதி இந்துக்கள் கல்லூரி படிப்பை கற்க கூடாது என்பதே!! 
18 வயதானவர்கள் மேற்கல்வி கற்க்காமல் தந்தை செய்யும் தொழிலை செய்தால் அவர்களுக்கு வங்கி கடனும் மானியம் கிடைக்கும் என்று ஆசை வார்த்த கூறி மக்களை மேற்கல்வி கற்க விடாமல் ஏமாற்றப் பார்க்கிறது பார்ப்பனியம்....
ஆனால் பார்பன்ன ஆண்களும் பெண்களும் தடையில்லாமல் எளிதாக உயர் கல்வி கற்க்கிறார்கள் .. அரசு வேலைகளை எளிதாக பெறுகிறார்கள்...

கல்வியின் அவசியம் அதன் பலன் பற்றி பல நூற்றாண்டுகளாக தெரிந்து கொண்டு செல்வ வளத்தை அனுபவித்து வரும் அவர்கள் இந்த முறையில் குலத் தொழிலான கோயிலில் மணியடிப்பதை மட்டும் செய்வார்களா ???

எல்லா உயர் பதவிகளை எளிதாக பெற்று ஆட்சியாளர்களாய் அரசு அலுவலர்களாய் ராணுவ உயர் அதிகாரிகளாய் நீதிபதிகளாய், மருத்துவர்களாய், தொழிலதிபர்களாய், கிரிகெட் உட்பட சகல துறைகளிலும் உயர் பதவியில் அமர்ந்துக் கொண்டு மற்றவர்களை குலத் தொழில் செய்ய வேண்டும் என பணிப்பது எந்த மாதிரியான அயோக்கியத் தனம் தெரியுமா..???

பரம்பரையாக ஒரு தொழிலை ஒரு வணிகத்தை செய்பவர்களின் வாரிசுகள் அதே தொழிலைத் தொடர வங்கிகள் மூலமாக கடன் உதவி,மானியம்‌ என பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்யும்.

மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பான MSME மூலமாக இதைச் செயல்படுத்தப்படும் இந்த விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

மத்திய அரசின் வேண்டுகோளை பல மாநில அரசுகள் அப்படியே ஏற்றுக் கொள்ள, தமிழ்நாடு அரசு மட்டும் அறிமுக நிலையிலேயே இந்த திட்டத்தில் மூன்று மாறுதல்களை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டது‌.அதுவும் இந்த வருடத்தின் துவக்கமான ஜனவரி மாதத்திலேயே கேட்டுக் கொண்டது.

ஆனால் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்ட அந்த மூன்று மாறுதல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
எனவே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயலாபடுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.


அப்படி என்ன அந்த மூன்று மாறுதல்கள்?

1.மத்திய அரசின் அந்த விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகையான தொழில்கள்‌ குடும்ப தொழில்கள் என கண்டறியப்பட்டு அதை பாரம்பரியமாக செய்து வர வேண்டும் என்ற விதி இருந்தது.அதாவது குலத்தொழில் என்றது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு அதைத் திருத்தி பட்டியல் இடப்பட்ட அந்த 18 வகை தொழில்களை யார் வேண்டுமானாலும்,எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் செய்யலாம்.அதற்கு சாதி,மதம் என எதுவும் தகுதியாக இருக்கக் கூடாது.ஆர்வமும், திறமையும் தான் தகுதிகளாக இருக்க வேண்டும் என்றது.

2. மத்திய அரசு வயது வரம்பு 30 க்குள் என்றது.
தமிழ்நாடு அரசு வயது வரம்பை 35 வரைக்கும் நீடித்துக் கேட்டது‌.அப்போது தான் அனுபவம் இருக்கும் என்றது.

3. பயனாளர்களை கண்டறியும் அதிகாரத்தைப் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மத்திய அரசு தந்தது.
அப்படி செய்தால் அதில் சாதி குறுக்கீடு இருக்க வாய்ப்புகள் வந்தாலும் வரும்.எனவே பயனாளர்களை கண்டறியும் அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு சொன்னது.



அரசர்கள் ஆண்ட காலம் முதல் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்த கலைஞர் காலம் வரை ஒரு கம்மாளர் இன மக்கள் தேவைப்பட்டார்கள். புரியும் படி சொன்னால் ஐந்தொழில் செய்வோர் விஸ்வகர்மா என்கிற skilled தேவை பட்டார்கள்..
நாளடைவில் உலகமயமாக்கல்.. அறிவியல் அதீத வளர்ச்சி.. போன்ற காரணிகளால் இன்று குறிப்பிட்ட அவர்கள் தேவை படுவதில்லை...
அதை உணர்ந்து அவர்களும் கல்வி ஒன்றே கரை சேர்க்கும் மா மருந்தென்று பயணிக்க தொடங்கி விட்டனர்..
தமிழக அரசு மத்திய government's 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்தாமல், அதில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. இவற்றில், குடும்ப அடிப்படையிலான தொழிலாளர்களைத் தேவையின்றி நீக்குவது மற்றும் பயனாளிகளின் குறைந்தபட்ச வயதினை 35 ஆக உயர்த்துவது அடங்கும். தற்போது, தமிழகம் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, ஜாதி மற்றும் குடும்ப அடிப்படையிலான வேறுபாடுகளை இல்லாமல், நிதி உதவி, பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஆதரவு அளிக்கும் ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்துள்ளது.
விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் ஓட்டுக்காக காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதை உணர்வது நல்லது!


மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கேட்ட சமூகநீதி புரியவில்லை....சரி....அது புரியும் வரையில் விஸ்வகர்மா திட்டத்தை தந்தைப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 11 October 2024

தமிழ்நாட்டிற்கு சாம்சங் போன்ற நிறுவனங்கள் தேவை தொழிலாளிகள் பணிக்கு திரும்ப வேண்டும் !!

ஒரு குழப்பத்தைத் தீர்க்க நிறுவனங்கள் பெரும்பாலும் கையாளும் உத்தி - பிரித்தாள்வது. அதற்காகக் கோடிக் கணக்கில் கூடச் செலவு செய்யத் தயங்கமாட்டார்கள். சங்கம் அமைப்பதை மட்டும் ஏற்கமுடியாது என்பது நிறுவனங்களின் முக்கியக் கொள்கை. இன்று போராட்டம் நடத்துபவர்கள் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொன்னால் கலைந்துவிடுவார்கள். அவை உண்மையில் கொடுக்கப்படுகின்றனவா, நாளையே வேறு தேவை என்றால் என்ன செய்வது என்பதெல்லாம் அவர்கட்குத் தேவையில்லை. அதுதான் நிறுவனங்களுக்குத் தேவை.'எங்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து தருவதாக சாம்சங் நிறுவனம் சொல்லிவிட்டது. இதற்கு மேல் எதற்குத் தொழிலாளர் சங்கம்' என்று சாம்சங் நிறுவன ஊழியர்கள் பேசுவதைத் தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிபரப்புகின்றனர். தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறது சாம்சங் நிறுவனம்.
பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமையையும், அரசியல் சட்டத்தையும் ஒரு சேர அவமதிப்பதற்கு எதிராக தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் வரவேண்டிய கோபம், அந்த சட்ட மீறலுக்கு எதிராக போராடுகிற கம்யூனிஸ்டுகளின் மீது ஏன் வருகிறது?
இடதுசாரி தலைவர்களை கைது செய்துள்ள தமிழக காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விசுவாசத்தை வெல்லும் வலிமை உழைக்கும் மக்களிடம் என்றும் உண்டு.
தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் அது தொடங்கப்பட்ட எண்பது ஆண்டுகளாக No Union Policy என்பதைத் தனது கொள்கையாக வைத்திருந்த நிறுவனம். 2020 ல் தான் முதன் முதலாக சாம்சங் தொழிலாளர்கள் யூனியன் வைத்துக்கொள்ளும் உரிமையைத் தென்கொரியாவில் வென்றெடுக்கிறார்கள்.
நாட்டின் GDP யில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு வலுவான பொருளியல் அடித்தளத்தைக் கொண்ட நிறுவனம் சாம்சங். அதனால் தென்கொரிய அரசாங்கத்தில் அவர்களது ஆதிக்கம் அதிகம். சாம்சங் அதிபர் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட கடுமையான புகார்கள் உண்டு. அதற்காக தண்டிக்கப்பட்டு பிறகு அரசு ஆதரவுடன் அங்கு விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென்கொரியா ஒரு முதலாளித்துவ நாடு என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உலக அளவில் பிரசித்தி பெற்றவர்கள். அது மட்டுமல்ல கட்டுமானத்துறையிலும் அவர்கள் வலுவானவர்கள். தென்கொரிய பொருளாதாரத்துக்கு அவர்கள் ஆதாரமானவர்கள். இந்தப் பின்னணியில்தான் யூனியனுக்கு எதிரான அவர்களது நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால் இன்றைய சூழலில் அவர்களது ஏகபோக சுரண்டலுக்கு உலக அளவில் தொழிலாளர்கள் கடிவாளமிடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு இருபத்தைந்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் சாம்சங். நிறைய கிளை நிறுவனங்கள். 4.5% ஊதிய உயர்வை, நீண்ட போராட்டத்துக்குப் பின் பெற்றிருக்கிறது ஒரு கிளை நிறுவனத்தின் தொழிற்சங்கம். அதையொட்டி மற்ற நிறுவங்களில் இருக்கும் தொழிற்சங்கங்களும் ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள் போன்றவற்றிற்காகப் போராடுகின்றன. தென் கொரியாவின் தொழிலாளர் சட்டங்கள் வலுவற்றவை. ஹுண்டாயை ஒட்டி தமிழத்தில் தொண்ணூறுகளில் நடந்த உரையாடல்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
நீங்கள் ஷிப்ட் முடிந்து செல்லும்போது, உங்களது பெயர் நோடீஸ் போர்டில் தென்பட்டால் நீங்கள் பணியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தம். எதிர்த்து கேள்வி கேட்கமுடியாது. அதேதான் சாம்சங்கிலும். பணிப் பாதுகாப்பு என்றெல்லாம் ஒன்றும்கிடையாது.
யூனியனே இல்லாமல் ஒரு நிறுவனம் எண்பது ஆண்டுகளாக நடக்கிறது என்றால் அதன் அத்துமீறல்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு தென் கொரிய சாம்சங் தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இங்கும் கூட நலச்சங்கம் போன்ற ஒரு பொம்மை சங்கத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர் சட்டங்களை வளைக்கலாம் என்று சாம்சங் நினைக்கிறது. அந்த வழிமுறை நம் நாட்டில் நம் மாநிலத்தில் பல நிறுவனங்களில் உள்ளதுதான். CITU தொழிற்சங்கம், தீவிரமான போராட்டங்களுக்கும் அதன் வலுவான பேரம் பேசும் ஆற்றலுக்கும் பெயர் போன தொழிற்சங்கம். கம்யூனிஸ பின்புலத்தில் அதன் உபவிளைவுகளும் உண்டு. ஆனால் சுரண்டலையே வியாபாரப் பின்புலமாகக் கொண்ட சாம்சங் நிறுவனம், நாங்கள் வேறு எந்த தொழிற்சங்கத்தை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் CITU வை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள். அதனால்தான் மந்திரிகளும் பங்கு பெற்ற ஆறுகட்ட பேச்சுவார்தைக்குப் பின்னாலும் கூட உடன்பாடு எட்டவில்லை.
திமுக ஒன்றும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் வெற்றி பெற பண உதவி செய்யும் முதலாளித்துவ கட்சி அது. இந்த பேரத்திலும் கூட அது தனது முதலாளித்துவ பண்பையே காண்பிக்கிறது. CITU தொழிற்சங்கத்தை விடுத்து வேறு ஒரு நலச்சங்கத்தின் பின்னால் தொழிலாளர்கள் திரண்டு, நிறுவனத்துடன் ஒருவித சமரசத்தைக் கையாள வேண்டும் என்றே அது விரும்புகிறது. தொழிலாளர்களின் பிடிவாதத்தால் அது சீண்டப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் காவலர்களை வைத்து தொழிற்சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்வது, அவர்கள் போராடும் இடத்தில் வேயப்பட்ட பந்தலைப் பிரித்து எறிவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறது.
ஒரு வெளிப்படையான முதலாளித்துவ அரசாக, முதலீட்டை ஈர்ப்பதை இலக்காக வைத்து செயல்படும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் தொழிலாளர் பக்கம் நின்றால் அது முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு தவறான சமிக்ஞயை அளித்துவிடும் என்று அஞ்சுகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வலுவான ஆதரவு சமிக்ஞயைத் இந்த அரசாங்கம் தர விரும்புகிறது. இந்த அரசு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற CITU தொழிற்சங்கத் தலைவரின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. கட்சி ஆதரவு இணையப் பொறுக்கிகள் களத்துக்கு வந்து பத்தாவது மட்டுமே படித்தவர்கள் இத்தனை சம்பளம் வாங்குகிறார்கள் போன்ற விவாதங்களைக் கிளப்புவது அதனால்தான்.
கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிசங்கு நிலையில் இருக்கின்றன. அவை வெளிப்படையாக தங்களது நிலைப்பாட்டை அறிவித்து தொழிலாளர்களுடன் நின்றிருக்க வேண்டும். வாக்கைக் குறிவைத்து, இந்த அரசின் மீது விமர்சனம் வைக்கிற அதிமுக போன்ற கட்சிகள் இதை ஒரு வாய்ப்பாக எண்ணுகின்றன. இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், ஸ்டாலின் இந்நேரம் சேகுவாராவாக மாறி பூந்தமல்லியை கியூபாவாக மாற்றியிருப்பார். எடப்பாடிக்கு அந்த அளவுக்கு கூறு போதாது.
ஒரு குழப்பத்தைத் தீர்க்க நிறுவனங்கள் பெரும்பாலும் கையாளும் உத்தி - பிரித்தாள்வது. அதற்காகக் கோடிக் கணக்கில் கூடச் செலவு செய்யத் தயங்கமாட்டார்கள். சங்கம் அமைப்பதை மட்டும் ஏற்கமுடியாது என்பது நிறுவனங்களின் முக்கியக் கொள்கை. இன்று போராட்டம் நடத்துபவர்கள் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொன்னால் கலைந்துவிடுவார்கள். அவை உண்மையில் கொடுக்கப்படுகின்றனவா, நாளையே வேறு தேவை என்றால் என்ன செய்வது என்பதெல்லாம் அவர்கட்குத் தேவையில்லை. அதுதான் நிறுவனங்களுக்குத் தேவை.
மென்பொருள் நிறுவன ஊழியர்கட்கென்று சங்கம் அமைப்பதே பெரும்பாடாகி, இன்றும் அப்படி ஒன்று இருப்பதே அறியாதவர்கள் தான் இங்கே மிகுதி. அந்தச் சங்கம் நீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத்தந்த நன்மைகள் வெளியே தெரிவதில்லை. தெரியாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது.

சங்கங்களினால் ஏற்படும் தீமைகளை மறுப்பதற்கில்லை. ப்ரிகால் நிறுவனத்தில் உறவினர் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சொற்களில் விளக்கமுடியாது. அதற்காகச் சங்கங்களையே தூக்கியெறி என்று சொல்வது, இடவொதுக்கீட்டைச் சிலர் கேடாகப் பயன்படுத்துகின்றனர் என்று அதையே தூக்கியெறிய நினைப்பது.நந்திகிராமில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த நாள்வரை கம்யூனிஸ்ட் அரசு மறுபடி ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.
எவன பாத்தாலும் தொழிலாளி அத பண்ணனும் இத பண்ணனும்னே சொல்லிட்டு இருக்கீங்களே யாராவது ஒருத்தன் யாரவது ஒருத்தன் அந்த நிறுவனத்த பாத்து எந்நாட்டு தொழிலாளிகளோட அடிப்படை உரிமைகளை பறிக்காதேனு பேட்டி கொடுக்கீறீங்களாய்யா ? இலவசத்துக் ஆசை பட்டால் உயிருக்கு உடமைக்கு மதிப்புக்கும் மரியாதைக்கு வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை தமிழக மக்கள் நீங்கள் யோசிக்க வேண்டும்!!



Thursday, 10 October 2024

Samsung நிறுவனம் தொழிலாளர்களை வஞ்சிப்பதற்கு உண்மையான காரணமென்ன?


நாம் யூனியன் என்கிற சொல்லை கேட்டாலே முதலாளி வர்க்கத்திற்கு ஆனியன் உரிப்பது போல கண் எரிச்சல் இல்லை... இல்லை,..
மனது எரிச்சல் ஏற்படும். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். போராடினால் தான் வெற்றி...!

நமக்கு போராட்டம் என்கிற வார்த்தையைக் கேட்டாலே காதை மூடிக் கொள்கிற ஒரு குணம் நம்ம மக்களிடையே சிலருக்கு உண்டு. தொழிற்சாலைகளை அமைத்து தொழிலாளர்களுக்கு வேலையும் சம்பளமும் கொடுப்பவர்கள் எல்லாம் லாப நோக்கம் சிறிதுமற்ற சேவை மனப்பான்மை மட்டுமே கொண்ட கருணை வள்ளல்கள் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வது. தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்காகத் தொழிலாளர்கள் போராடும்போது "அதான் இவ்வளவு கிடைக்குதுல்ல இதுக்குமேல என்ன வேணுமாம் இவங்களுக்கு" என்று முகவாயில் இடித்துக் கொள்வது. சம்பளம் தருகிற முதலாளியைப் பகைச்சுக்கலாமா முதலாளி கோவித்துக்கொண்டு தொழிற்சாலையை மூடிவிட்டு வேறு இடத்துக்குப் போயிருவாரே. தொழிலாளர்கள் வேலையை இழந்து விடுவார்களே என்ற அக்கறையோடு தொழிலாளர்களுக்குப் புத்தி சொல்கிறார்களாம் சிலர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதீர்கள் போய் வேலையைப் பாருங்கள் என்று . அதாவது போட்டதைப் பெற்றுக்கொண்டு வாயை மூடி வேலையைப் பாருங்கள் என்பதைத்தான் இப்படி அக்கறையாய்ச் சொல்கிறார்கள். அந்தத் தொழிற்சாலை மூலம் முதலாளிகளுக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான லாபம் அந்தத் தொழிலாளர்களின் தொடர்ந்த உழைப்பினால்தான் சாத்தியமாகிறது என்பதை மிகக் கவனமாக கவனத்தில் கொள்ளாமல் தவிர்த்து விடுவது. அப்படி உழைக்கும் தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைக்கவும் சேர்வதற்கும் உள்ள உரிமை அடிப்படையானது என்பதை இதெல்லாம் எதற்குத் தேவையில்லாத விஷயம் என்று அசட்டை செய்வது. அதுவும் இப்படிப்பட்டவர்களுக்கு யூனியன் என்ற வார்த்தை காதில் விழுந்தாலே போதும் முகம் அஷ்டகோணலாகி விடும். உலகத்தில் தொழிலாளர்கள் இன்று பெற்றுள்ள எட்டுமணி நேர வேலை, விடுப்பு, பணியிடப் பாதுகாப்பு, விபத்துக்கான இழப்பீடு உள்ளிட்ட அத்தனை உரிமைகளையும் முதலாளிகள் இரக்கம் பீறிட தொழிலாளியைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு முதுகைத் தடவி இந்தா ஐயா வச்சுக்கோ பிடி என வழங்கியதுபோல நினைப்பு இவர்களுக்கெல்லாம்.போராட்டமின்றி இங்கு எதுதான் சாத்தியமானது ?

வேலைக்கு சேரும்போதே தொழிலாளர்களிடம் இவ்வளவு சம்பளம் என்னென்ன சலுகைகள் என்று அக்ரீமெண்டில் கையெழுத்திட்டு தானே வேலையில் செய்கிறார்கள்...தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. இது ஆலை நிர்வாகத்தின் சலுகையல்ல.
இப்படி அமையும் தொழிற்சங்கங்களை அரசு பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் எதை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்வது என்பது நிர்வாகத்தின் முடிவு. ஆனால் அதுவும் ஜனநாயகப் பூர்வமான செயலாக இருக்க வேண்டும் எனில் தொழிற்சங்கத் தேர்தல் நடைபெற வேண்டும்.பெரும்பான்மைத் தொழிலாளர்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற சங்கத்தைக் கண்டிப்பாக நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும்.

சாம்சங்கைப் பொருத்தவரை , அரசே தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய முடியாது என்கிறது. இது அப்பட்டமான உரிமை மீறல் அல்லவா? அரசியல் சாசனத்துக்கு எதிரானதும்கூட .ஒரு தொழிலாளி வேலையில் சேர்கையில் அடிப்படை ஊதியம் (பத்தாயிரமோ பதினைந்தாயிரமோ இருபதாயிரமோ) ஒரு தொகைக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார் எனில் அடுத்து வரும் வருடங்களில் விலைவாசி உயர்வு மாறி வரும் பொருளாதாரம் போன்ற காரணங்களினால் அவர் ஊதியத்தை உயர்த்திக் கேட்கவே கூடாது என்பது இல்லை. அதேபோல தொழிற்சங்களில் சேரக்கூடாது என்றும் எந்த நிர்வாகமும் ஒப்பந்தம் போட முடியாது. ஆகவே சங்கம் அமைத்து சங்கங்களின் மூலம் ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலிமையாக எடுத்துச் சொல்ல ஒரு தொழிலாளிக்கு உரிமை உண்டு. எந்தத் தொழிற்சாலையிலும் நிர்வாகமும் சரி தொழிலாளர் சங்கமும் சரி , தொழிற்சாலையை மூட வேண்டும் என்ற நோக்கில் செயல்படவே மாட்டார்கள். நிர்வாகத்துக்கு, அது கோடிக்கணக்கில் லாபம் தரும் தொழில். தொழிலாளிக்கு அதுதான் அவருடைய வாழ்வாதாரம். பெறும் லாபத்திலிருந்துதான் தங்களுக்குச் சேர வேண்டியதைக் கேட்பார்கள்.நிர்வாகங்கள் மறுப்பது அவர்களின் அதிகப்படியான லாபத்தை பங்கு போட மனமின்றி. எந்தத் தொழிற்சாலையும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களால் மூடப்படவில்லை.
தொழிலாளியும் அவர் குடும்பத்தினரும் இங்கு வாழும் நம்மில் ஒருவர்தான். உணவு படிப்பு பிள்ளைவளர்ப்பு திருமணம் முதியோர் பராமரிப்பு போக்குவரத்து அந்தச் செலவு இந்தச் செலவு என ஆயிரம் தேவைகள் உள்ள சராசரிக் குடிமக்கள்தான். வேலை போனால் அடுத்து என்ன செய்வது எங்கு போவது என்ற பெருங் கேள்வியும் பொறுப்பும் உள்ளவர்கள்தான். இத்தனையையும் சுமந்து கொண்டு தன்னுடைய அடிப்படை உரிமைக்காகப் போராடுவதால்தான் சாம்சங் தொழிலாளியை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைபாட்டினை எடுக்கிறேன்.

தொழிற்சாலைகள் மூடுவதற்கான காரணத்தை மிக ஆதாரப்பூர்வமாக திருமுருகன் காந்தியின் பதிவை  கீழே எடுத்துக்காட்டி உள்ளேன்.

அவர் தொழிற்சங்கங்களால் மூடப்பட்ட நிறுவனமாக கோவை விஸ்கோஸ், பிரிக்கால், ஸ்டாண்டர்ட் கார் கம்பெனி, சென்னை நோக்கியா, பின்னி மில் என பட்டியலிடுகிறார்.
உண்மையான காரணமென்ன?
1. கோவை சிறுமுகையிலிருந்த விஸ்கோஸ் நிறுவனம் மிக மோசமான கழிவுகளை பவானி ஆற்றில் வெளியேற்றியது, அதனுடைய டெக்னாலஜி மிகப்பழமையான முறையாக இருந்தது. தொடர்ந்து சட்ட மிறல், விதிமீறலை செய்ததால் நீதிமன்றத்தால் இந்த நிறுவனம் 2001ல் மூடப்பட்டது.
2.கோவை ப்ரிக்கால் நிறுவனத்தில் CITU கிடையாது. சிபிஐ-எம்.எல்-லிபரேசன் அமைப்பின் AICCTU போராட்டத்தை முன்னடத்தியது. பிரிக்கால் நிறுவனம் சம அளவில் சம்பளத்தை தரவேண்டுமென தொழிலாளர்கள் போராடினார்கள். இப்போராட்டத்திற்கு அனைத்து சனநாயக அமைப்புகள், பெரியாரிய அமைப்பு உட்பட மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டமும் நடத்தப்பட்டது. ப்ரிக்கால் நிறுவனம் பண்ணையார் தனத்துடனும், சாதிய உணர்வுடன் இயங்கும் நிறுவனம் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.போராட்டத்தின் பின் 300 தொழிலாளர்களை பழிவாங்கியது ப்ரிக்கால். இதை தொழிற்சாலை தீர்ப்பாயம் கண்டித்து ரத்து செய்யச் சொன்னது. இக்கம்பெனி மூடப்படவில்லை.
3.ஸ்டெண்டர்டு கார் கம்பெனி இங்கிலாந்து கம்பெனியின் பிரிவாக சென்னையில் செயல்பட்ட கம்பெனி. இது கொண்டு வந்த கார்கள் அதிக விலையாகவும், குறைந்த செயல்திறனும், குறைவான மைலேஜும் கொண்டதாக இருந்தது. நிறுவனத்தின் விற்பனை படிப்படியாக குறைந்து வருடத்திற்கு ஆயிரம் கார்கள் எனுமளவில் கூட உற்பத்தி செய்ய இயலாத நிலையிலும், தொழிற்நுட்பத்திற்கான அனுமதியை வெளிநாட்டிலிருந்து பெறமுடியாமலும் முடங்கி போனது. இதனால் இது மூடப்பட்டது. இப்படியாக மூடப்படும் நட்ட சூழலில் தொழிலாளர்களுக்கான நட்ட ஈட்டை பலி கொடுப்பது முதலாளிகள் வாடிக்கை. இதை கேள்வு எழுப்பினால் தொழிலாளர்கள் மீது பழி போடப்படும் என்பதை அனைவரும் அறிவர்.
4. சென்னை பின்னி மில் போராட்டம் 1920 முதல் திரு.வி.க போன்றோரால் நடத்தப்பட்டு ஆங்கில அரசால் தொழிலாளர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட காலம் முதல் நீண்ட காலமாக தொழிலாளர் விரோத போக்குடைய நிறுவனம். அதன் மெசினரிகள் இந்தியன் வங்கிக்கு பாத்தியப்பட்டவை, மேலும் இன்சூரன்ஸ் பணத்தை பெற்று முடக்காமல் கம்பெனியை மீண்டும் நடத்தவேண்டுமென தமிழக அரசும், தொழிற்சங்கமும் நீதிமன்றத்தில் போராடின. பின்னி மில் போராட்டம் 1921-24 வரை நடந்தது. இந்த போராட்டத்தால் தான் இந்தியாவில் முதல் 'தொழிலாளர் சட்டம்' இயற்றப்பட்டது. சென்னையின் மேதின பூங்கா, தொழிலாளர் சிலை, தொழிலாளர் சங்கங்கள் என பல உருவான தொழிலாளர் இயக்கங்களின் பின்னனியில் பின்னிமில், கர்நாடிக் மில், பாம்பே-பர்மா ஆயில்கம்பெனி போராட்டங்கள் உண்டு. இவற்றிலிருந்து உருவான மாபெரும் ஆளுமை இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அழைக்கப்பட்ட தோழர்.சிங்காரவேலர். இச்சமயங்களில் சிங்காரவேலரும், சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் தந்தை பெரியாரும் இணைந்து இயங்கிய தமிழ்நாடு தொழிலாளர் சங்க வரலாறு தனித்துவமானது. சுயமரியாதை-சமதர்ம இயக்கம், தோழர் ஜீவாவின் பங்களிப்பு, தொழிலாளர் இயக்கம் என நிகழ்ந்ததன் பின்னனியில் பின்னி மில் என்பது மறக்க இயலாதது.
5. சென்னை நோக்கியாவின் சிக்கல்கள் இந்தியாவின் வருமான வரி தொடர்புடையது. இந்தியா-பின்லாந்து நாட்டிற்கு இடையேயான (DDTA) ஒப்பந்தங்களை வேறுவிதமாக இந்தியா கையாண்டது என நோக்கியா குற்றம் சாட்டியது. ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே வரிச் சலுகை எனும் ஒப்பந்தத்தை மீறி உள்நாட்டில் விற்பனை செய்ததற்கும் வரிச்சலுகை பெற்று தமிழக அரசை ஏமாற்றியது. நோக்கியாவின் பிறிதொரு நிறுவனத்துடனான ஒப்பந்தம், பணப்பரிமாற்றத்திற்கான வரியை இந்திய அரசு கேட்டது. மேலும் மைக்ரோசாப்ட் கம்பெனியுடனான சச்சரவுகளும் முன்னுக்கு வந்தது. இதுமட்டுமல்லாமல் நோக்கியா மொபைல் போன்களின் சந்தை குறைந்து போனது நாம் அறிந்தததே. சென்னை தொழிற்சாலையில் நடந்த விபத்தில் ஒருபெண் கொல்லப்பட்டார். தொழிலாளர்கள் ஓய்வெடுக்கக்கூட இடமில்லாத விடயங்களை போன்றவற்றை கோரிக்கையாக வைத்த தொழிலாளர்களால் நோக்கியா மூடப்பட்டது என்பது அயோக்கியத்தனம். நட்டமடைந்த நோக்கியா, மிகப்பெரும் வரியாக 15,000 கோடி ரூபாயை கட்டவேண்டிய நெருக்கடி, திருட்டுத்தனமாக உள்நாட்டில் வியாபரம் செய்து வரி ஏய்த்தது என பல காரணங்களால் நோக்கியா மூடப்பட்டு வியட்நாம் சென்றது. இதற்கு காரணம் சொல்லவேண்டுமானால் வருமானவரி துறையை சொல்லலாம்.
உண்மைகளை மறைத்து, பொய் செய்திகளை பரப்புவதால் மென்மேலும் தனிமையடைவீர்கள். 'ஊடகவியலாளர்' எனும் பெயரில் டிவி விவாதங்கள், யூட்யூப் பேட்டிகள் என அரசியலற்ற செய்திகளை கடந்த 3 வருடங்களாக பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். இந்த 'பத்திரிக்கையாளர்'களில் பெரும்பான்மையோருக்கு வாசிப்பும், களப்பணியும், மக்கள் மீதான அக்கறையும் கிடையாது.

நன்றி : திருமுருகன் காந்தி.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Sunday, 11 August 2024

அலைகடலின் தலைவன் என்று அழைத்த ஓமான் தேசத்தில் பிறந்த அஹ்மத் இப்னு மஜீத் !! ஓர் ஆய்வு தவகல்..

 






சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி 1420  அஹ்மத் இப்னு மஜீத் ஓமான் தேசத்தில் பிறந்த ஒரு ஆற்றல் மிகுந்த கடலோடி.

மீனவ பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர், தன் தந்தையிடமிருந்து பல கடலியல்  மரபு சார்ந்த அறிவை கற்றுத் தெளிந்தார்.


இந்தியா, இலங்கை, கீழைத்தேய நாடுகள் மற்றும் சீனாவிற்கு கடற் வழி பயணம் மேற்கொண்டு வணிக சாத்துக்களை பாதுகாப்புடன் மீண்டும் அரேபியாவுக்கு கறை சேர்த்த சிறந்த மாலுமியாக  திகழ்ந்தவர் இப்னு மஜீத்.


ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் பயணப்பட்டு நன்கு அறிமுகவானவர்.


ஒரு நூலில் குறிப்பிட்ட அளவு இடைவெளியில் அடுத்தடுத்து பல முடிச்சுகள் போட்டு ஒரு முடிச்சை பற்களில் கடித்து  துளையுள்ள சிறிய அட்டை ஒன்றின்  மூலம் சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரத்தின்  கோணங்களை கணக்கிட்டு அதன் மூலம் நடுக்கடலில் கப்பல் இருக்கும் நிலை, செல்ல வேண்டிய எல்லை ஆகியவற்றை துல்லியமாக கணிக்கும் திறன் பெற்றிருந்தார்.


இவரிடம் 11 நூற்றாண்டு காலத்து  ஆந்தலூசியா  திசை மானியும் அதே சமயத்தில் சமகால சீன மாலுமிகள் பயன் படுத்தும் திசை மானிகளையும் கைவசம் வைத்து பயன்படுத்தி வரலாற்று ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் மனிதர் update ஆக இருந்திருக்கிறார்.!


கி.பி1490 அஹ்மத் இப்னு மஜீத் எழுதிய புத்தகம் Kitab al-Fawa’id fi Usul ‘ilm al-bahr wa al-Qawa’ed, (Book of Useful Information on the Principles and Rules of Navigation ) உலகின் முழு கடற் பயண வழித்தடங்களில் பாதி வழித்தடங்களை குறித்து  அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது கடல்சார் துறைக்கு கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழ்கிறது.இந்த புத்தகம் தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் தேசிய நூலத்தில் உள்ளது.இவரது பல நூற்கள் பிரெஞ்சு மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.


1498 போர்ச்சுகீசிய நாடு காண் பயணி?! வாஸ்கோடகாமா இந்திய பயணத்திற்க்கு ஆப்பிரிக்கவின் கென்யா (மலிந்தி துறை முகத்திலிருந்து) தென்னிந்திய மலபார் கடற்கறைக்கு ஆழ்கடல் பயணத்திற்க்கு உதவியவர் அஹ்மத் இப்னு மஜீத் ஆவார். வாஸ்கோடாமாவுடன்  இந்திய பயணத்தில் உடன் சென்ற குழு உறுபினர்களில் ஒருவரான  Álvaro Velho எனும் படை வீரர் எழுதிய குறிப்பு Roteiro da viagem de Vasco de Gama  எனும் புத்தக்தில்  இப்னு மஜீதை மொம்பசாவில் சந்தித்து இந்திய பயணத்திற்க்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொண்டார் வாஸ்கோடகாமா என அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கப்பல் கட்டுமான தொழில்நுட்பம், கடலில் ஏற்படும் நீர் சுழற்சி, மணற் திட்டுகள், தட்ப வெப்ப சூழ்நிலை, பருவ காலங்களில் காற்றின் திசைவேகம், சூறாவளி , வசந்த காலங்களில் பயணிக்கும் பறவை இனங்கள்,   மற்றும் வானவியல்  குறித்த பட்டறிவை ஏடுகளில் எழுதினார்.இப்னு மஜீத் எழுதிய  கடல் சார்ந்த புத்தகம் மட்டும் சுமார் 30 க்கும் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு குறிப்பு.  

 அஹ்மத் இப்னு மஜீத்தை அன்றைய அரபுகள் مُعَلِّم‎ முஅல்லிம் என அழைத்தார்கள்.

முஅல்லிம் என்பதற்கு ஆசிரியர் என பொருள். 

ஐரோப்பிய கடலோடிகள் இவரை Master of Marine என்று அழைத்தார்கள்.

தொகுப்பு  : மு. அஜ்மல்  கான்.

After +2 /HSC/ PUC courses available in india (ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளது!!) ஒரு பார்வை...

 ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது  

என்னென்ன படிக்கலாம்  என்று மாணவ, மாணவிகளின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள்  பயன் பெறுங்கள்...



Science Courses (3 Years)


Bsc Physics

Bsc Chemistry

Bsc Botany

Bsc Zoology

Bsc Computer science

Bsc Mathematics

Bsc PCM

Bsc CBZ

Bsc Forestry

Bsc Dietician & Nutritionist

Bsc Home Science

Bsc Agriculture Science

Bsc Horticulture

Bsc Sericulture

Bsc Oceanography

Bsc Melsorology

Bsc Arthopology

Bsc Forensic Science

Bsc Food technology

Bsc Diary Technology

Bsc Hotel Management

Bsc Fashion Design

Bsc Mass Communication

Bsc Electronic Media

Bsc Multimedia

Bsc 3D Animation




Commerce Courses


CA Chatted Account

CMA Cost Management Account

 CS Company Secretary (Foundation)

B.Com Regular

B.Com Taxation &Tax Procedure

B.Com Travel & Tourism

B.Com Bank Management

B.Com Professional

BBA  /. BBM Regular

BFM Bachelor of Financial Management 

BMS

BAF


Humanities Courses


Advertising

BS General

Criminology

Economics

Fine Arts

Foreign languages

Home Science

Interior Design

Journalism

Library Science

Physical Education

Political Science

Psychology

Social Work

Sociology

Travel and Tourism


Management Courses


Business Management

Bank Management

Event Management

Hospital Management

Hotel Management

Human Resources Managemet

Logistics Management


Law Courses (3/5 Years) 


LLB,

BA+LLB

B.Com + LLB

BBM+LLB,

BBA. +LLB


MEDICAL COURSES 

 MBBS General Physician/Doctor  (4வருடம்): 

                  Ophthalmic
                  Ophthalmic
                  Gynecology
                  Dermatology
                  Orthopedics
                  Orthopedics
                  Radiology
                  Electro logy
                  Endocrinology
                  Cardiology
                  PlasticSurgeon
                 General Surgeons
                 Neuron Surgeons
                 Pediatrician
                 Thoracic Surgeons
                 Trauma Surgeons
                 Urologist
                 Gastroenterology
                 Oncology
                 Anesthesiology
                 Psychiatry
                 ENT/Ear nose Throat Specialist
                 Pathologist
                 Sexologist

       
BUMS Unani

BHMS Homeopathy

BAMS Ayurveda

BSMS Sidha

BNYS Naturopathy

BDS Dental

BVSc Veterinary.



PARAMEDICAL COURSES 


Nursing

Pharm D

B.Pharm

D.Pharm

M. Pharm

Anesthesia technical

Cardiac Care technical

Perfusion technology

Cathllab technology

Clinical Optometry

Dental Hygiene

Dental Mechanic

Dental Technician

Health Inspector

Medical imaging & Tech...

Medical Lab technician

Medical Records tech

Medical X Ray Technician

Nuclear Medicine Tech

Occupational Therapist

Operation theater Tech

Ophthalmic Assistant

PHYSIOTHERAPY

Radiographic Assistant

Radiotherapy Technician

Rehabilitation Therapy

Respiratory Therapy Tech.

Blood Transfusion Tech..

Bsc Renal Dialysis


B.E /B.Tech Engineering (4year)


Petro chemical Engineering

Petroleum Engineering

Civil Engineering

Mechanical Engineering

Aeronautical Engineering

Aerospace Engineering

Agricultural Engineering

Architecture Engineering

Automobile Engineering

Automation & Robotics Eng.

Artificial Intelligence eng 

Avionics Engineering

Biomedical Engineering

Bio technological Eng..

Chemical Engineering

Ceramics Engineering

Computer Science Engi..

Electronics &Comm.Engi.

Electrical & Electronics Engi.

Environmental Science Engi.

Information Science Engi

Industrial Engineering

Industrial Production Engi..

Instrumental Technology

Marine Engineering

Medical Electronics Engi..

Mining Engineering

Manufacturing Science Engi.

Naval Architecture Engi....

Nanotechnology Engi..

Polymer Technology Engi..

Silk Polymar Engi...

Carpet Technology Engi...

Textile engineering

Robotics

Genetic


POLYTECHNIC  DIPLOMA COURSES  (10 th class -3years ) 

Electronic and Communication Engineering

Civil Engineering

Chemical Engineering

Mechanical Engineering

Computer Science and Engineering

Electrical Engineering

Aeronautical Engineering

Automobile Engineering

Ceramic Engineering

Mining Engineering

Fashion Engineering

Biotechnology Engineering

Petroleum Engineering

Instrumentation and Control Engineering

Art and Craft

Production Engineering

Environmental Engineering

Textile Engineering

Agricultural Engineering


Management Courses  (2/3/5Years Duration):


BBA /BBM

BBA Aviation

BBA Air Cargo Management

BBA Aeronautical

BBA Retail Marketing

BBA Customer Care Management

BBA Airline & Airport Management

BBA Cargo Management

BBA Office Management

BBA Store Management

BBA Mall Management

BBA Logistics

Diploma in Retail Management

Diploma in Accounting and Finance

Diploma in Human Resources

Diploma in Information Technology

Diploma in Banking

Diploma in Infrastructure and Construction

Diploma in Marketing

Diploma in Interior Designing

Diploma in Textile and Leather Designing

Diploma in Plastic Technology

Diploma in Company Secretary ship

Diploma in Entrepreneurship

BCA SAP

BCA Cloud Computing 


MBA Logistics

         Aviation

         HR

         Management


Architecture (5 years +2)

B.Arch (NATAis Compulsory)

M.Arch .

 மாணவர் ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து நீங்கள் விருப்பமுள்ள  நல்லதொரு பிரிவை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு நல்வாழ்த்துக்கள் .

உங்கள்  மு.அஜ்மல் கான்.

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..

பெற்றோரின் தனித்துவமான பங்களிப்பை அங்கீகரிப்பது மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விப் பயணத்தில் தீவிரமாக ஈடுபட அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, கற்றலுக்கான அன்பை வளர்க்கும் மற்றும் மாணவர்களின் முழுத் திறனை அடைய அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு ஆதரவான சூழலை வளர்ப்பதில் கருவியாகும்.

இந்த 2023-24 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை  சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.


🔵 2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.


🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.


🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள்  விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.


🔵 பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி  வைத்து கொள்வது நல்லது. 


🔵 சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.


இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.


🔵 பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.


இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.


🔵 முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.


🔵 வருமான சான்றிதழ், தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கு மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே  இ- சேவை மையங்கள் மூலம்  விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.


🔵 நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.


பெற்றோர்களுக்கான அறிவுரை,


1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து  கொள்வது  நல்லது.


2. மாணவர்களின் TC, Mark sheet மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பி தேவை.


3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என மாணவர்களும் பெற்றோர்களும் பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.


மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும்,  எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.


கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.


தற்பொழுது பெரும்பாலான  கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு  சேருவதற்க்கு  ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.

உங்கள் நண்பன்  மு.அஜ்மல் கான்.