Sunday, 29 July 2012

விமானம் பறப்பது எப்படி?- ஒரு ஆய்வு...


இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் .சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது...



இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நான்கு விதமான விசைகள் உண்டு
ஆ ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (LIFT)

இ முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
ஈ கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
உ பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight = Lift
Drag = Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.
விமானத்தின் எடை 'லிப்ட்' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் 'லிப்ட்' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி... பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் 'டிராக் விசையை கொடுப்பது' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (யஹஸ்ரீன்ன்ம் ஈப்ங்ஹய்ங்ழ் பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும் அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்...
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.) அல்குர்அன் 55-33

நன்றி டி.என்.டி.ஜே நெட்
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

Friday, 27 July 2012

ஸகாத்தின் முக்கியத்துவம் என்ன?-- ஒரு சிறப்பு பார்வை ...



ஸகாத்தின் பொருள் என்ன?
இதன் பொருள் தூய்மையுறச்செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன் மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும் உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர்ஏற்பட்டது.

ஸகாத்தின் நோக்கம் என்ன ?
செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது. كي لا يكون دولة بين الاغنياء منكم ( الحشر 59:7) உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது (59:7)

ஸகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)

ஸகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?
ஸகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம்விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஸகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை.அவர்களிடம்குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள்,அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாகவேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும்.

ஸகாத் விதியானோர் ஐந்து பேர்
1. முஸ்லிமாக இருத்தல்
2. சுதந்திரமானராக இருத்தல்
3. நிஸாபை அடைதல் (85 கிராம் தங்க மதிப்புடைய பொருளைப் பெறுதல்) 4. பொருளுக்கு உரியவராக ( Owner) இருத்தல்.
5. விளை பொருளைத்தவிர அனைத்தும் ஓராண்டு பூர்த்தியாகுதல் இத்தகுதிகளைப்பெற்ற அனைவரும் ஸகாத் கொடுக்க வேண்டும்.

யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் ?
(8 பிரிவினர்)انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ( التوبة 9:60)
1)யாசிப்போர் (ஃபக்கீர்)
2) ஏழைகள் (மிஸ்கீன்)
3) ஸகாத் வசூலிப்போர்.
4) இஸ்லாத்தை தழுவ விரும்புவோர்.
5) அடிமைகளை விடுதலை செய்வதற்காக!
6) கடன்பட்டோர்.
7) இறைவழியில் அறப்போர் செய்வோர்.
8) பயணிகள் (வழிப்போக்கர்) ( அல்-குர்ஆன் 9:60 )

யார் யாருக்கு கொடுககக்கூடாது ?
1) வசதியுள்ளோர்.
2) உடல் வலிமை பெற்றோர்.
3) தனது பெற்றோர்.பிள்ளைகள் ( அல்-அஸ்லு வல்ஃபர்உ)
4) நபியின் குடும்பத்தினர்.
5) முஸ்லிமல்லாதோர்.
6) தீயவர்கள்.

எப்போது வழங்க வேண்டும் ?
இது ரமளானில் தான் வழங்கவேண்டுமென பலரும் எண்ணிக்கொண்டு அம்மாதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாம் அவ்வாறு குறிப்பிடவே இல்லை.

பின் எப்போது கொடுக்க வேண்டும் ?
ஒருவருக்கு உணவு,உடை, வீடு, வாகனம், தொழிலுக்குத் தேவையான பொருட்கள் (கருவிகள்) போன்றஅவசியத் தேவைகள் போக ஒருகுறிப்பிட்ட அளவு அல்லது அதற்கு மேல் செல்வமிருந்தால் கணக்கிட்டு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்கவேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட அளவை (நிஸாபை) பெற்றவுடன் அல்ல. அந்த தொகை ஒர் ஆண்டு முழுவதும் அவனிடம் இருந்து, ஆண்டு இறுதியில் கொடுத்தால் போதுமானது.
எந்த அளவுக்கு ஸகாத் வழங்கவேண்டும் ?
20 தீனாருக்கு குறைவானவற்றில் ஸகாத் கடமையில்லை.20தீனார்கள் ஓராண்டு முழுவதும் உம்மிடமிருந்;தால் அதற்கு நீர் ஸகாத் கொடுக்க வேண்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : அஹ்மது, அபூ தாவூது, பைஹகீ) மேற் கண்ட நபி மொழியில் 20 தீனார் அளவு அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வைத்திருப்போர்தான் ஸகாத் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். என்பது தெரிய வருகிறது.
நபிகள் நாயகம் காலத்தில் செல்வம் என்பது தங்க வெள்ளி நாணயங்களாகவோ, கால்நடைகளாகவோ சொத்தாகவோ இருந்தது. இப்போதுள்ளது போல் விலையுயர்ந்த வைரங்கள், பிளாட்டினங்கள் இருந்ததில்லை. கரன்ஸி நோட்டுகள் இருந்ததில்லை. தங்கத்தின் மதிப்பை வைத்தே நோட்டுகள் அச்சடிக்கப் படுவதால் தங்கத்தின் விலையையும் வைத்தே இன்று அனைத்தையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஸகாத் கடமையான பொருட்கள்:
ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:
1) தங்கம், வெள்ளி,
2) வியாபாரப் பொருட்கள்
3) கால் நடைகள் 4) விவசாய விளைச்சல்கள்
5) புதையல்கள்

ஸகாத்தின் சதவிகித அளவுகள்
1. 2.5 (இரண்டரை)சதவிகிதம்
2. 5 சதவிகிதம்
3. 10 சதவிகிதம்
4. 20 சதவிகிதம் என பொருளின் இனம் மாறுபடும் போது சதவிகிதமும் மாறு படுகிறது.இனி இவற்றை விரிவாகாப் பார்ப்போம்.

1. இரண்டரை சதவிகிதம் ஸகாத்
1. தங்கம்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கிலிருந்த ஒரு தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4..25 கிராமாகும். 20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை( அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். ( இப்னு மாஜா)
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால்அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.
உதாணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால் அதில் இரண்டரை கிராம்(இரண்டரை சதவிகிதம்) -தங்கத்தை அல்லது அதற்கு இணையான விலையை ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஸகாத்தை வழங்க வேண்டும்.

2. வெள்ளிவெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திங்கள், வெள்ளிக் காசுகள் போன்றவற்றிற்கும் ஸகாத் வழங்கப்பட வேணடும்.200 திர்ஹமோ அதைவிடக்கூடுதலோ வெள்ளிக்காசுகள் வைத்திருப்போர் மீது ஸகாத் கடமையாகும்.ஐந்து ஊக்கியா (ஒரு ஊக்கியாh 40திர்ஹம்.40ஓ5ஸ்ரீ200 திர்ஹம்) அளவை விடக்குறைந்த வெள்ளிக்காசுகளுக்கு ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரிய்யி (ரலி), புகாரி : 1447)
200 திர்ஹம் (வெள்ளி) இருக்கும் போது அதில் ஐந்து திர்ஹம் ஸகாத் கொடுக்க வேண்டும்..
மேற்கூறிய ஹதீஸிலிருந்து 200 திர்ஹத்திற்கு குறைவான எடைக்கு ஸகாத் கிடையாது எனத் தெரிகிறது.இன்றைய மெட்ரிக் எடையில் ஒரு திர்ஹத்திற்கு 595 கிராம் ஆகும். 200 திர்ஹத்திற்கு(200ஒ2.975) 595 கிராம் ஆகிறது. தனது அவசியத்தேவை போக ஒருவரிடம் ஓராண்டிற்கு 595 கிராம் அல்லது மேற்பட்டுவெள்ளியிருந்தால் (40 ல் ஒரு விகிதம்) இரண்டரை சதவீதம் (அதாவது 14.875 கிராம்) ஸகாத் வழங்க வேண்டும்.

3. நகைகள்; தங்க வெள்ளி நகைகளில் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஸகாத் உண்டா என அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்;பட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் ஸகாத் கொடுக்க வேண்டுமெனகீழுள்ள ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
இருபெண்கள் தங்கக் காப்புகள் அணிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது உங்களிருவருக்கும் மறுமை நாளில் நெருப்புக் காப்புகள் அணிவிக்கப்படுவதை விரும்புவீர்களா ? என அவர்ளிடம் கேட்டபோது விரும்பமாட்டோம் என பதிற் கூறினர். அவ்வாறாயின் உங்கள் கைகளில் அணிந்திருப்பவைகளுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள்; என நபி (ஸல்) எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருப்னு சுகைபு (ரலி),ஆதாரம்: இப்னு ஹஸம்

நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா ? எனக்கேட்hர்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அஹ்மத்
நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஸகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தங்க வெள்ளி நகைகளுக்கும் ஸகாத் உண்டு என்பதை நபி(ஸல்)அவர்கள் வலியுறுத்துவதைக் காணலாம்.(தங்கம், வெள்ளிக்குரிய மதிப்பீட்டை அன்றைய மார்கெட் நிலவரப்படி கணித்துக்கொள்ளவேண்டும்) ஆண்டுதோறும் கொடுக்கவேண்டுமா?ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஸகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டு தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை பரவலாகக் காணமுடிகிறது. இவர்கள் முன்வைக்கும் வாதத்தையும் ஆதாரஙடகளையும் பின்னர்காண்போம்.
எனினும் ஆண்டு தோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமென்றே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களின் பின்னர் வந்த கலீபாக்கள்காலத்திலும் ஆண்டு தோறும் வசூலித்து வந்துள்ளதைக் காணமுடிகிறது.
நபிகளாரின் காலத்திலும் குலபேயே ராசிதீன்கள் காலத்திலும் ஸகாத் வசூலிப்பதற்காக வருடந் தோறும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். எந்த நாயகத் தோழரும் அவ்வாறு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க வுமில்லை. இதை வைத்தே உலகின்பெரும்பாலான அறிஞர்கள் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமெனத் தீர்;ப்பு வழங்கியுள்ளனர்.
ஸவூதி அரேபியாவின் மிகப்பெரும் மார்க்க மேதைகளான அஷ்ஷைகு பின் பாஸ் (ரஹ்) அவர்களும், ஸாலிஹ்அல்-உதைமீன் (ரஹ்) போன்றவர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.

4. ரூபாய்கள் 85 கிராம் தங்கத்திற்கு நிகரான வகையில் கரன்ஸிநோட்டுகள் குறிப்பிட்ட காலஅளவு நம்மிடமிருந்தாலும்வங்கியிலிருந்தாலும் அதற்கான ஸகாத்தையும் நாம் கணக்கிட்டு கொடுத்து வரவேண்டும்.

5. வியாபாரப் பொருட்கள்
வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியேஆக வேண்டும்.ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-நாங்கள் வியாபாரத்திற்கென வைத்திருக்கும் பொருட்களுக்கு ஸகாத் வழங்க வேண்டுமென நபி ( ஸல் )அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆதாரம் : அபூ தாவூது, பைஹகீ
மூலதனத்திற்கும் மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டுமா? என்று பலரும் கேட்கின்றனர். மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்கவேண்டும் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.ஆதாரம்: உமர் (ரலி) அவர்கள் ஆடுகளைப் பெற்றிருந்த ஒருவரிடம் அதற்குரிய ஸகாத்தை கேட்டபோதுஅவை ஈன்ற குட்டிகளை விட்டு விட்டு ஸகாத் கொடுக்க முன் வந்தார். அப்போது அதற்குரிய குட்டிகளையும்கணக்கில் சேர்ப்பீராக! என அவர்கள் கூறிய செய்தி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முவத்தாவில் இடம் பெற்றிருக்கிறது. இதை ஆதாரமாகக் கொண்டு வியாபாரத்தில் இலாபமாகப்பெற்ற தொகைக்கும் சேர்;த்தே ஸகாத்தை கணக்கிடவேண்டும் என்பதை அர்ரவ்லுல் முரப்பஃ ஸரஹ் ஸாதுல் முஸ்தக்னஃ பாகம்4,பக்கம்17ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)
1) ஒருவர் பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து ஜனவரிமாதம் ஒரு வியாபாரத்தைத் தொடங்குகிறார் என்றுவைத்துக்கொள்வோம்.ஓராண்டு முடிந்து அடுத்த ஜனவரியில் கணக்குப்பார்க்கும்போது வியாபாரம் வளர்ந்து செலவு சம்பளம் போக 5 இலட்ச ரூபாய் அதிகமிருக்கிறது. இப்போது மூலதனமாகிய ரூ10இலட்சத்துக்கும் ஓராண்டுக்குப்பிறகு இலாபமாகக் கிடைத்த 5 இலட்சத்துக்கும் சேர்த்து 15இலட்சத்துக்கு இரண்டரைசதவீதம்(அதாவது 37,500 ரூபாய் ) ஸகாத் கொடுக்க வேண்டும். மூலதனமாகிய 10 இலட்ச ரூபாய்க்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்பதற்கு ஆதாரமில்லை.

2)அடுத்து பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து வியாபாரம் செய்கிறோம். வினியோக வியாபாரிகளிடமிருந்து கடனாகப் பெற்ற ஐந்து இலட்சத்திற்குரிய வியாபாரப் பொருட்களும் கடையில் உள்ளன.வரவேண்டிய பாக்கிக்கடன் தொகை மூன்று இலட்சம் உள்ளது. ஆண்டு இறுதியில் கணக்குப் பார்க்கும் போது 7 இலட்ச ரூபாய் இலாபமாக கிடைத்துள்ளன. இப்போது கடையில் ஆண்டு இறுதியில் 1010 5107 ரூ 22 இலட்சம் உள்ளன. இவற்றில் கடனாகப் பெற்ற தொகையையும் வரவேண்டிய தொகையையும் கழித்து 14 இலட்சத்திற்கு ஸகாத்கொடுக்க வேண்டுமா ? அல்லது இருப்புக்கு மட்டும் கொடுக்க வேண்டுமா என்ற ஐயங்கள் எழுகின்றன..ஆண்டு இறுதியில இருப்பில் உள்ள மொத்த தொகைக்கும் (அதாவது 1010510710 ரூ 22 இலட்சத்துக்கு இரண்டரை சதவிகிதம் (ரூபாய் 55000.00) ஸகாத் கொடுக்க வேண்டும்.

3) பிறருடைய பொருள் நம் பொறுப்பில் இருந்தாலும் அது ஸகாத்துடைய அளவை அடைந்து ஓராண்டு முழுமையாகநம்மிடம் இருந்து விட்டால் ஓரராண்டுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடவேண்டும். அந்தப் பொருளை ஸகாத்துடைய காலவரையை அடைவதற்கு முன் திருப்பிக் கொடுத்து விட்டால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.

4) அது போல நாம் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன் தொகை நம்மிடம் ஒருவருடம் இருந்துவிட்டாலும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விடவேண்டும். ஸகாத் காலவரைக்கு முன்னர் திருப்பிச் செலுத்திவிடடால் ஸகாத் செலுத்த வேண்டியதில்லை.

கடன் தொகை
5)சதாரணக் கடனாகட்டும். வியாபாரக் கடனாகட்டும். கடன் கொடுத்த தொகை கண்டிப்பாக வரும் தொகையும் உண்டு. வராதவையும் உண்டு. கண்டிப்பாக வரும் தொகைக்கு அந்த ஆண்டே கணக்கிட்டு ஸகாத் கொடுத்து விடவேண்டும். வராத தொகைக்கு கையில் கிடைத்ததும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடவேண்டும். பலஆண்டுகள் சென்று இந்த கடன் தொகை கிடைப்பதாக இருப்பின் அவற்றிற்கு அண்டு தோறும் என்ற கணக்கில்லாமல் ஒரேஒரு தடவை மொத்தத் தொகைக்கும் கொடுத்தால் போதுமானது.

6. வங்கியில் போடும் வைப்பு நிதி,, குறித்த கால வைப்பு நிதியும் சேமிப்புப் பத்திரம் நிறுவனப்பங்குகள் அவை கைவசமிருக்கும் பணமாகக் கருதி ஒரு வருடம் பூர்த்தியானதும் ஆண்டுதோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும்.

7. சொந்த வீடுகள், வாடகை வீடுகள்நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஸகாத் கிடையாது. ஆயினும் வாடகைக்கு விடப்படும் வீடுகளில் வரும் வருமானத்திற்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.

8. கடைகள், விடுதிகள் (லாட்ஜுகள்) வாடகைக்கு விடப்படும் டைகள்,கட்டடங்கள்,விடுதிகள்(லாட்ஜுகள்) ஆகியவற்றிற்கும் ஸகாத் கிடையாது.அதில் வரும் வாடகைக்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.

9. நிலங்கள், வீட்டு மனைகள்விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் ஆகியவற்றுக்கும் ஸகாத் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து வரும் வருவாய்க்கும், விற்பனை செய்வதாக இருந்தால் அதன் மதிப்புத் தொகைக்கும் இரண்டரை சதவீதம் ஸகாத் கடமையாகும். இவை வியாபாரச் சரக்குகளைப்; போன்றவையாகும்.

10. வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள்வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஸகாத் இல்லை. ஆனால், அவற்றின் வருமானத்திற்கும் வாடகைக்கும் ஸகாத் உண்டு.

பொதுவாகவே மேற்கூறிய அனைத்திற்கும் அவற்றின் மொத்த மதிப்பீட்டிற்கு-அஸலுக்கு-( ஏயடரந ழக pசழிநசவல) ஸகாத் கிடையாது. அவற்றின் வருமானத்திற்கும், அவற்றை விற்கும் போதும் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

11. கால் நடைகள் கால் நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகை மனித வாழ்வுக்கும் ஒரு நாட்டின் வளத்திற்கும் வருவாய்க்கும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. அவற்றின் பாலும் மாமிசமும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை. அதன்தோல், உரோமம், கொம்பு ஆகியவை பெருமளவில் அந்நியச்செலாவணியைப் பெற்றுத்தருகிறது. பயணம் செய்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறாக மனிதத் தேவைகளுக்கும் பொருளாதார வளத்திற்கும் பயன்தரும் இந்த கால் நடைகளை சிறப்பித்து திருமறையில் வரும் 43:12, 16:5,7 வசனங்கள் சிந்தனைக்குரியதாகும், எனவே இறைவன் வழங்கிய இந்த அருட்கொடைகளுக்கு ஸகாத் வழங்குவது கடமையாகும். நம் நாட்டைப் பொறுத்தவரை ஸகாத் கொடுக்குமளவுக்கு யாரும் கால்நடைகள் வைத்திருப்பதில்லை.
எனினும் அதன் விபரத்தை சுருக்கமாகக் காண்போம்.

ஸகாத் விகிதங்கள் கால்நடைகள் எண்ணிக்கை ஸகாத் இல்லை ஸகாத் கொடுக்க வேண்டும்.
1. ஆடுகள்
1 முதல் 39 வரை ஸகாத் இல்லை
40 முதல் 120 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
121 முதல் 200 வரை ‘ ‘ இரண்டு ஆடுகள்
201 முதல் 399 வரை ‘ ‘ மூன்று ஆடுகள்
400, அதற்கு அதிகமுள்ளதற்கு ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு அதிகம் வழங்கவேண்டும். (புகாரி ஹதீஸ் எண:;1454))
(வெள்ளாடு,செம்மரியாடு,ஆண்-பெண் ஆடுகள் யாவும் சமமாகும்)

2. மாடுகள்
1 முதல் 29 வரை ஸகாத் இல்லை (எருமைகள);
30 முதல் 39 வரை ——- ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்று
40 முதல் 59 வரை ——- 2 வருடம் ‘ ‘ ஒரு கன்று
60 அல்லது அதற்குமேற்பட்டதற்கு ஓவ்வொரு 30 மாடுகளுக்கு ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் ஓவ்வொரு 40 மாடுகளுக்கு இரண்டு ஆண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும்

3. ஒட்டகைகள்
1 முதல் 4 வரை ஸகாத் இல்லை
5 முதல் 9 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
10 முதல் 14 வரை ஓராண்டு நிறைவு பெற்ற இரண்டு ஆடுகள் 15 முதல் 19 வரை ஓராண்டு நிறைவு பெற்ற மூன்று ஆடுகள்
20 முதல் 24 வரை ஓராண்டு நிறைவு பெற்ற நான்கு ஆடுகள்
25 முதல் 35 வரை ஓராண்டுநிறைவுபெற்ற ஓர் பெண் ஒட்டகம்;
36 முதல் 45 வரை இரு வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
46 முதல் 60 வரை 3 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
61 முதல் 75 வரை 4 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம
76 முதல் 90 வரை 2வருடம்நிறைவுபெற்ற 2 பெண் ஒட்டகங்கள்
91 முதல் 120 வரை 3 வருடம்நிறைவுபெற்ற2 பெண் ஒட்டகங்கள
ஒவ்வொரு 40 க்கும்ஒவ்வொரு 50 க்கும் 2 வருடம் நிறைவுபெற்ற 1 பெண் ஒட்டகம் 3 வருடம்நிறைவுபெற்ற 1 பெண்xட்டகம்
குதிரைக்குரிய ஸகாத் வியாபாரப்பொருளைப்போன்றதாகும். சொநத உபயோகத்திற்கு ஸகாத் கிடையாது. வியாபாரத்திற்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.

2) 5 சதவிகிதம் ஸகாத்
12. தானியங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தானியங்களில் கோதுமை மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுவந்தன. வேறு தானியங்களும் அப்பகுதிகளில் உற்பத்தியாகவுமில்லை. ஆயினும் நெல், சோளம், ரவை, ராகி கிழங்கு போன்ற உணவு வகை எதுவாயினும் கோதுமையைப் போன்று கணக்கிட்டு ஸகாத் கொடுக்க வேண்டும்.எனினும் முன்னர் நாம் குறிப்பிட்ட பொருள்களின் ஸகாத்திலிருந்து இவை மாறுபடுகின்றன. தங்கம் வெள்ளி வியாபாரப் பொருட்களுக்கு ஆண்டு தோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும். ஆனால் தானியங்களைப் பொறுத்தவரை அவ்வாறன்று. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரியஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும்.

3) 10 சதவிகிதம் ஸகாத்
(உற்பத்தியில் 5 சதவிகிதம்)
நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்து விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதம் ஸகாத்கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் ஒருபங்கு (1ஃ20) கொடுக்க வேண்டும்.)
உற்பத்தியில் 10 சதவிகிதம் நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்படாமல் விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் இரு பங்கு (2/20) கொடுக்க வேண்டும்.) அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி
ஓராண்டு முடிவடைய வேண்டும் என்பதில்லை.அறுவடையான உடனேயே கொடுத்து விடவேண்டும் இங்கேகவனிக்கத்தக்கதாகும். அதற்குரிய உரிமையை அறுவடை நாளிலேயே கொடுத்;து விடவேண்டும் என அல் குர்ஆன் (6:141) அறிவுரை பகர்கிறது.

தானியங்களுக்குரிய அளவு (நிஸாப்)
கோதுமைதானியங்களுக்கும் ஒரு வரையறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்;துள்ளார்கள்;.’ ஐந்து வஸக்’ அளவுக்குக் குறைவான உற்பத்திக்கு ஸகாத் கிடையாது என நபி ( ஸல் )அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூது, தீhமிதி,நஸயீ, இப்னு மாஜா,தாரமீ, முஅத்தா, அஹ்மத்.
எனவே, ஒரு வஸக் என்பது 60 ஸாவு ஆகும் ஒரு ஸாவு 2.5 மப (இரண்டரை கிலோ) ஃ 5 வஸக் 5ஒ60ஸ்ரீ 300 ஸாவு 300 ஸாவு (300ஓ2.5 மப ஸ்ரீ) 750 கிலோவாகும் .
750 கிலோ கோதுமை உற்பத்திக்கே ஸகாத் வழங்கப்படவேண்டும். அதற்கு குறைந்த அளவுக்கு ஸகாத்வேண்டியதில்லை. ஒரு வருடத்தில் பல முறை உற்பத்திச் செய்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த அளவுவிளைச்சலுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
நெல் கோதுமையைப் பொறுத்த வரை அப்படியே அரைத்து மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும்..ஆனால் நெல்லைப் பொறுத்தவரை அதன் மேல் தோலான உமியை நீக்கிய பிறகே உண்ணுவதற்கு ஏற்றதாகும். ஆகவே. நெல்லுக்கு ’10 வஸக்’ ( 1500 மப) உற்பத்தியானால் தான் அதற்கு ஸகாத் உண்டு என மார்க்கஅறிஞர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். தண்ணீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்பட்டிருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதமும் தண்ணீர் பாய்ச்சுவதற்காகசெலவு செய்யப்படாமலிருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதமும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
நிலத்திலிருந்து உற்பத்தி யாகும் பொருட்களுக்கு மட்டுமே ஸகாத் கடமையாகும். நிலம் எவ்வளவு இருந்தாலும்நிலத்திற்கு ஸகாத் கிடையாது.
13. பேரீத்தம் பழம் , உலர்ந்த திராட்சை இந்த இரண்டும் அறுவடை செய்த உடனேயே ஸகாத் கொடுக்க வேண்டும். இவை தவிர எந்த பழவகைகளுக்கும் ஸகாத் கிடையாது.
14. காய்கறிகள்காய்கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படுமேயாhனால் அவற்றின் ஸகாத்காலமும் அளவும் நிறைவு பெற்றால் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டும்.

4) 20 சதவிகிதம் ஸகாத்
15. கனிமப் பொருள், சுரங்கப்பொருள்சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோகங்கள், கனிமப் பொருட்கள், பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதையல்கள், போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் (கனீமத்) பொருட்கள் ஆகியவற்றிற்கு 20 சதவிகிதம் ஸகாத் வழங்ப்படவேண்டும்.

முக்கியக் குறிப்பு :
1. வைரக்கல், பிளாட்டினம் பல நர்டுக்கரன்சிகள், வலையுயர்ந்த சேமிப்புப் பொருட்கள் ஆகிய ற்றிற்கு ஸகாத்கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2. ஆடு, மாடு, ஒட்டகை அல்லாத மிருகங்களுக்கும் ,பறவைகளுக்கும் ஸகாத் கிடையாது. விற்பனைக்கென்றால் ஓராண்டுநிறைவு பெற்றதும் வியாபாரப் பொருளைப்போல் இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
3. பழவகைகள், காய் கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும அதன்விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
4. மேலே குறிப்பிடப்படாத எதுவாயினும் சொந்த உபயோகத்திற்கோ, பாது காத்து வரும் எண்ணத்திலோஉள்ளவையாயின் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரைசதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
16. சில்லரையாக வினியோகித்தல்; சில்லரையாக வினியோகிப்பது ஸகாத் முறையாகாது. கடமையும் நிறை வேறாது.
17. பைத்துல் மால் பொது நிதிபைத்துல் மால் பொது நிதி ஒன்றை உருவாக்கி பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்குப்பயன் படும் வகையில் அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
இதன் மூலமே உலகளாவிய அளவில் வறுமையை ஒழித்து ஏழைகள் ஏற்றம் பெறச் செய்து சமுதாயத்தில் வாழ்வையும் வளத்தையும் காணமுடியும். இதுவே இஸ்லாம் விழையும் ஸகாத் முழறயாகும். வல்ல நாயன் ஸகாத்தின் முக்கியத்தை உணர்ந்து அதை உரிய முறையில் வினியோகிப்பதற்கு நல்லருள் புரிவானாக.

நன்றி:இஸ்லாம் கல்வி.


தொகுப்பு:மு.அஜ்மல் கான்.

Thursday, 26 July 2012

ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்--ஒரு சிறப்பு பார்வை...


நோன்பு
ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.மனித ஆன்ம பரிசுத்தத்திற்கு வழி வகுக்கும் இவ்வணக்கத்தை மேற்கொள்ளும் ஒருவரின் உள்ளத்தில் எழக்கூடிய ஐயங்கள் எவை என யூகித்து அவற்றைத் தெளிவுபடுத்துமுகமாக இவ்வாக்கம் எழுதப்படுகின்றது.

சந்தேகம்:-
அனைத்து இபாதத்துக்களும் “நிய்யத்” அவசியமானது. நோன்பிற்கும் “நிய்யத்” அவசியமானதே. நோன்பின் நிய்யத் எனக் கூறப்படும் வாசகங்கள் ஆதாரபூர்வமானவைதாமா?
தெளிவு:-
“நிய்யத்” என்றால் “எண்ணங்கொள்ளல்” என்பதே அர்த்தமாகும். “நிய்யத்தை” வாயால் மொழிதல் கூடாது. எந்த இறை வணக்கத்தைச் செய்தாலும், அல்லாஹ்வுக்காக செய்கின்றேன் என்ற இஹ்லாஸான எண்ணத்துடன் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
நோன்பின் நிய்யத் என நபி(ஸல்) அவர்கள், குறிப்பிட்ட ஏதேனும் வாசகங்களைக் கற்றுத் தந்துள்ளார்களா? என வினவினால் அனைத்து ஹதீஸ்களும் “இல்லை” எனத் தலையசைக்கின்றன. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ழி ரமழான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹித் தஆலா” என்றநோன்பு நிய்யத் (?) வாசகங்கள் ஒரு ஹதீஸ் கிரந்தத்தில் கூட இடம்பெறவில்லை. (வேண்டுமானால் உலமாக்களிடம், இந்த வாசகங்கள் எந்த ஹதீஸ் கிரந்தத்தி;ல் இடம்பெற்றுள்ளது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் நழுவுவதை நீங்களே காண்பீர்கள்) ஹதீஸ்களில் இல்லாத இந்த துஆவை மக்கள் கூறும் விதத்திலும், இந்த துஆவின் வாசகங்களிலும் அநேக தவறுகள் உள்ளன.

தராவீஹ் தொழுது முடிந்தவுடன் இமாம் இந்த துஆவை (?) மஃமூனுக்குச் சொல்லிக் கொடுப்பார். இமாம் இதை அரபியிலும் கூறி பொருளையும் தமிழில் கூற மஃமூம்களும் வழிமொழிவர். நிய்யத் இரு மொழிகளில் கூற வேண்டுமா? மக்களுக்கு அரபியில் சொல்ல (?) முடியுமென்றால் தமிழ் தேவையில்லை. அல்லாஹ்வுக்குத் தமிழ் தெரியாது; மக்களுக்கு அரபு புரியாது என்ற தவறான எண்ணம் அடி மனதில் இருப்பதனால் தானோ என்னவோ இவர்கள் இரு மொழிகளிலும் சொல்லிக் கொடுக்கின்றனர்.
சில இடங்களில் அரபியிலும், தமிழிலும் மும்மூன்று விடுத்தங்கள் சொல்லிக் கொடுப்பர். தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம் என்று சமாளிக்க முடியாத அளவுக்கு சின்னஞ் சிறுசுகளின் உள்ளங்களில் கூட இந்த துஆ ஆழப் பதிந்துள்ளது. தொழுகைக்கும் அரபு, தமிழ் என்று ஆறுவிடுத்தம் இவர்கள் “நிய்யத்”துச் சொல்லுவார்களோ?
ஆதாரமில்லாத நிய்யத்தை அர்த்தமற்ற விதத்தில் சொல்லிக் கொடுக்கின்றனர். சொல்லப்படும் வாசகங்களாவது தவறில்லாமல் இருக்கக்கூடாதா? “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக!” எனச் சொல்லப்படுகின்றது.
றமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஒருவன் சென்ற வருடத்து நோன்பையோ, வருகின்ற வருட நோன்பையோ நோற்கப் போவதில்லை. எனவே, “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின்” என்ற வார்த்தை அர்த்தமற்றதாகின்றது. “பர்ழான நோன்பை” என்ற அடுத்த வாசம்கூட றமழான் மாதத்தில் சுன்னத்தான நோன்பு இல்லை என்பதால் தேவையற்ற ஒன்றாகின்றது.
அடுத்து “நாளை பிடிக்க” நிய்யத்துச் செய்கிறேன் என்று சொல்லப்படுகின்றது. நாளை எதையேனும் செய்வேன் எனக் கூறுவதாயின் “இன்ஷா அல்லாஹ்” என்ற வாசகத்தை இணைத்தே கூற வேண்டும் என்ற சின்ன விடயம் கூட “துஆ”க் கண்டு பிடிப்பாளருக்கோ, அதை அணுவும் பிசகாது நடைமுறைப் படுத்தும் ஆலிம்களுக்கோ தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
மேலும் ஒரு விபரீதம் நிகழ்வதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா முஸ்லிம்களும் ஸஹரில் சாப்பிட்டு விட்டு “நாளை நோன்பு பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன்” (அதாவது இன்று நான் நோன்பு பிடிக்கவில்லை) என்று கூறிவிடுகின்றனர். இது எவ்வளவு விபரீதமான வார்த்தை? இதை உலமாக்களும் கண்டு கொள்வதில்லை; மக்களும் சிந்திப்பதில்லை. மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்களோ அதை அப்படியே செய்வதை உலமாக்களும், உலமாக்கள் எதைச் செய்தாலும் அது பற்றி சிந்தனை செய்யாது பின்பற்றுவதைப் பொது மக்களும் வழமையாகக் கொண்டுள்ளனர். சாதாரண தமிழ் அறிவுள்ளவன் கூட இந்த “துஆ” தவறானது என்பதை அறியமுடியுமல்லவா?
இறுதியாக “அல்லாஹ்வுக்காக” என்று சொல்லப்படுகின்றது. நோன்பின் நிய்யத் என்று சொல்லப்படும் வார்த்தைகளிலே இது ஒன்று மாத்திரம் தான் அர்த்தமுள்ளதாக உள்ளது. எனவே, “நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன்” என்ற எண்ணத்துடன் மாத்திரம் நோற்போமாக!

சந்தேகம் :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்புநோற்கலாமா?
தெளிவு :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்புநோற்கலாம். தொழுகைக்காக மாத்திரம் அவர் குளித்துக் கொண்டால் போதுமானது. இது பற்றி அன்னை ஆயிஷா(ث), உம்மு ஸல்மா(ث) ஆகியோர் கூறும் போது, “நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பும் நோற்பார்கள்” என அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: தாரமீ-1725, புஹாரி-1925, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா- 1704, முஅத்தா-644,645)
சந்தேகம்: நோன்பாளி ஒருவர் பகலில் உறங்கிக் கொண்டிருக்கும் போது “இஹ்திலாம்” ஏற்பட்டு (கனவில் விந்து வெளிப்பட்டு) விட்டால் அவரின் நோன்பு முறிந்து விடுமா?
தெளிவு :-
உறக்க நிலையில் ஒருவர் முழுக்காளியாவதால் நோன்பு முறிந்து விடாது. அவர் தொடர்ந்து அந்நோன்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், “கனவின் மூலம் முழுக்காளியானவர் நோன்பை விட்டுவிட வேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்:பாகம்-1:பக்:554)

சந்தேகம் :- ‡“ஸஹர்” உடைய முடிவு நேரம் எது?
தெளிவு :-ஸஹர் செய்யுமாறும், அதில் அதிகம் பரக்கத் உள்ளதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள பல ஹதீஸ்கள் உள்ளன. (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஹதீஸ் எண் -1692). இந்த ஸஹர் உணவை முடிந்தவரை தாமதப்படுத்துவதையே இஸ்லாம் விரும்புகின்றது. சுப்ஹுடைய நேரம் வந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தால் கூட உண்பதை நிறுத்த வேண்டியதில்லை. சுப்ஹுடைய நேரம் வந்துவிட்டது என்று உறுதியானால் தான் உண்பதை நிறுத்த வேண்டும். இதையே “குமரி இருட்டு நீங்கி விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரை புசியுங்கள், பருகுங்கள்…” (2:187) என்ற வசனம் உணர்த்துகின்றது.
றமழான் காலத்தில் மக்களை எழுப்புவதற்காகவும், சுப்ஹுடைய தொழுகைக்காகவும் இரு அதான் கூறும் வழிமுறை நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அந்த இரு அதான்களுக்குமிடையில் சுமார் 50 ஆயத்துக்கள் ஓதும் இடைவெளி இருந்ததாக ஸஹாபாக்கள் கூறுகின்றனர். (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா 1694)
சுப்ஹுடைய தொழுகைக்காக கூறப்படும் இரண்டாவது அதான் வரையிலும் உண்ணல், குடித்தல், எதுவும் தடுக்கப்படடதல்ல; சுப்ஹுடைய அதான் கூறுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னரே ஸஹருடைய நேரம் முடிந்து விட்டது என்ற கருத்து தவறானதாகும். ஏனெனில் “பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள், உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” என நபி() அவர்கள் ஏவியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆராதம்: இப்னு குஸைமா 1932)

சந்தேகம் :‡தாமதித்து எழுந்த ஒருவர் உண்ண ஆரம்பிக்கும் போதே சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் அவர் தொடர்ந்து உண்ணலாமா? அல்லது உண்ணாமலே பட்டினி நோன்பு இருக்க வேண்டுமா,
தெளிவு :-தாமதித்து எழுந்த ஒருவர் உண்ணும் போது சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் உண்பதை உடனே நிறுத்தி விட வேண்டியதில்லை. இதை அறியாத மக்கள் பலர் சுப்ஹுடைய அதானுக்குப் 15 நிமிடங்கள் இருக்கின்ற போது எழுந்தால் கூட பட்டினி நோன்பிலிருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வதுடன், தனது நோன்புக்கும், யூத நஸாராக்களின் நோன்புக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் “ஸஹர்” எனும் சுன்னத்தையும் விட்டு விடும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதோ! இந் நபிமொழியைக் கவனியுங்கள்.
“தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)

சந்தேகம் :‡நோன்பாளியொருவர் மறந்த நிலையில் எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் நோன்பு முறிந்து விடுமா?
தெளிவு :-பதினொரு மாதங்கள் உண்டு பழக்கப்பட்டிருப்பதனால் சில வேளைகளில் நோன்பாளிகள் எதேச்சையாக எதையேனும் வாயில் போட்டு விடுவதுண்டு. இவ்வாறு மறதியாக உண்பதால் நோன்பு முறியவும் மாட்டாது; அதன் பலன் குறைந்து விடவும் மாட்டாது. அவர் தொடர்ந்து நோன்பிலேயே இருக்க வேண்டும்.
“யாரேனும் ஒரு நோன்பாளி மறதியாக எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் அவர் தனது நோன்பை (நிறுத்திவிடாமல்) பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்ள். (அறிவிப்பவர்: அபூ ஹுறைரா(ரழி) – ஆதாரம்: புஹாரி, தாரமீ, முஸ்லிம்)

சந்தேகம் :‡
நோன்பாளி பகல் வேளைகளில் பல் துலக்குவதால் நோன்பின் பலன் குறைந்து விடுமா?
தெளிவு :-நோன்பாளி பகல் வேளைக்குப் பின் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து ஷாபி மத்ஹபு உடையோருக்கிடையே நிலவி வருகின்றது. நோன்பாளியின் வாயின் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிடச் சிறந்ததாகும் என்ற கருத்துடைய ஹதீஸ்களையே அவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.
இந்த ஹதீஸ் வாயில் வாடை வீச வேண்டும் என்ற கருத்தைத் தரவில்லை. இது இயற்கையாகப் பசியின் போது எழுகின்ற மணத்தையே குறிக்கும் என்று மாற்றுக் கருத்துடைய சிலர் விளக்கமளிப்பர்.
தர்க்க ரீதியாக நோக்கும் போது நாற்றம் வீசும் வாயே கஸ்தூரி போல் மணக்கும் எனின் நாற்றமற்ற நல் மணம் கொண்ட வாய் அல்லாஹ்விடத்தில் அதிக நறுமணமுள்ளதாக இருக்கும். எனவே, நோன்பு காலத்தில் மற்றக் காலத்தை விட அதிகமாகப் பல் துலக்க வேண்டும் என்றும் கூட இதே ஹதீஸை வைத்து முடிவு செய்ய வேண்டும். தர்க்க ரீதியாக இத் தீர்மானத்திற்குப் பின்வரும் ஹதீஸ் பலமுள்ள சான்றாகத் திகழ்கின்றது.
“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கின்ற போது என்னால் கணிப்பிட முடியாது என்கின்ற அளவுக்கு அதிகமாக பல்துலக்க நான் கண்டேன்” என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) கூறினார்கள். (புஹாரி:1933, அபூ தாவூத், திர்மிதி:721)
இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் “இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள், முற்பகலிலோ, பிற்பகலிலோ பல் துலக்குவதில் தவறிருப்பதாகக் கருதவில்லை” எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
எனவே, நோன்பாளி அதிகளவில் பல் துலக்க வேண்டும். அதுவே, தூய்;மைக்கும், சுகாதாரத்திற்கும், தொழும் போது அணியில் இருப்போர்க்கும், மலக்குகளுக்கும் தொல்லை கொடுக்காத வழிமுறையாகும்.

சந்தேகம் :‡-
நோன்பாளி பகல் வேளையில் நீராடலாமா? உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக தண்ணீரை தன் மேனியில் ஊற்றிக்கொள்ளலாமா?
தெளிவு :-
மக்களில் சிலர் நோன்பென்றால் தன்னைத் தானே வருத்திக் கொள்வதென்று கருதுவதால் கஷ்டத்தை நீக்கும் எதையும் செய்யலாகாது என நினைக்கின்றனர். இதனால் தான் நோன்பாளி பகலில் நீராடக் கூடாது என்றும், வெயிலைத் தணிக்க தண்ணீரை ஊற்றிக் கொள்வது நோன்பின் “பாயிதாவை” குறைத்து விடும் என்றும் நம்புகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தாகத்தை அல்லது சூட்டைத் தனிப்பதற்காக தங்கள் தலையில் நீரை ஊற்றிக் கொள்வதை நான் பார்த்தேன்” என அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஅத்தா, அபூ தாவூத்)
குளிக்கும் போது உடல் உரோமத்தால் நீர் உட்செல்வதால் நோன்பு முறியாது. அவ்வாறே மணச் சவக்காரம் உபயோகித்தல், வாசனை பூசல், நுகர்தல், கண்ணுக்கு சுருமா இடல் என்பவற்றாலும் நோன்புக்கு எத்ததைய பாதிப்பும் இல்லை என்பதைக் கவனத்தில கொள்க.

சந்தேகம் :‡-நோன்பாளி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன் மனைவியை முத்தமிட்டுவிட்டார். இப்போது இவரது நோன்பின் நிலை என்ன? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
தெளிவு :-நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)
சில அறிவிப்புக்களில். “நானும் நோன்பாளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பாளியான அவர் என்னை முத்தமிட்டார்” என்று காண்ப்படுகிறது. (அபூ தாவூத், கிதாபுல் ஸவ்ம் 24ம் பாடம்)
இது நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரிய சட்டமல்ல. என்பதற்கும் அநேக சான்றுகள் உள்ளன. அதில் ஒன்றை மாத்திரம் வேறு சில தேவை கருதி இங்கே குறிப்பிடுகின்றோம்.
“ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தமது மனைவியை முத்தமிட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெரியதொரு தவறைச் செய்து விட்டேன். நோன்புடன் (என் மனைவியை) முத்தமிட்டுவிட்டேன் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ நோன்பு நோற்றிருக்கும் போது வாய் கொப்பளிப்பது பற்றி என்ன எண்ணுகிறாய்? என வினவினார்கள். உமர்(ரழி) அவர்கள், அதில் தவறில்லையே எனப் பதிலளித்தார்கள். உடலுறவு, நீர் அருந்துதல் போன்றது என்றால் முத்தமிடுவது வாய்கொப்பளிப்பது போன்றது தான் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் சூசகமாக உணர்த்தினார்கள்” (ஆதாரம்: தாரமீ-1724, அபூதாவூத்- 2385, இப்னு குஸைமா-1999)
எனவே, நோன்பாளியான கணவன்-மனைவி முத்தமிட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதை உணரலாம். உணர்ச்சி வசப்பட்டு உடலுறவில் ஈடுபட்டுவிடுவோமோ என்ற அச்சம் இருப்பின் அதிலிருந்து விலகிக் கொள்ளல் கடமையாகும். நபியவர்களின் உவமானத்தைக் கூர்ந்து நோக்கும் போத இன்னுமொரு உண்மையையும் அறியலாம். “நோன்பாளி ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது தொண்டை வரை நீர் சென்று விடும் அளவுக்கு எல்லை மீறிச் செல்லலாகாது” என்பது நபிமொழி. இதனோடு ஒப்பிட்டு உவமையை நோக்கும் போது முத்தமிடுவதில் எல்லை மீறிச் சென்றிடலாகாது என்பதையும் யூகிக்கலாம்.

சந்தேகம் :‡- நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ? 
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187 

சந்தேகம் :‡- ஊசி போடலாமா ? 
தெளிவு:-உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது. 

சந்தேகம் :‡- வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா? 
தெளிவு:-எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத் 

சந்தேகம் :‡- கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் நோன்பை விடலாமா? 
தெளிவு:- நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம் 

சந்தேகம் :‡- நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா? 
தெளிவு:-நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்) 

நோன்பு எதை கொண்டு திறப்பது ? 
தெளிவு:- நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

நன்றி : எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், 
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 25 July 2012

நோன்பின் சட்டங்கள்,ஒழுக்கங்கள்,பயன்கள்-ஒரு சிறப்பு பார்வை...

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும். 

மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும். 

தண்ணீரில் மூழ்குதல் தீவிபத்தில் சிக்குதல் போன்ற அபாயங்களிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விடும் கட்டாயத்திற்கு ஆளானவர் நோன்பு நோற்றுச் சிரமப்பட வேண்டியதில்லை. தவறிய நோன்பைப் பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம். 

பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம். விட்டுவிட அவருக்கு அனுமதியிருப்பதால் விட்டுவிடவும் செய்யலாம். இப்பயணம் உம்ரா போன்றதற்காகவோ வாகன ஓட்டி (டிரைவர்)களாகப் பணி செய்வதற்காகவோ இருக்கலாம். இத்தகையவர்கள் தாம் வசிக்கும் ஊர்களுக்கு வந்தவுடன் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளவேண்டும்.ர மழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

    நோன்பாளி செய்யக் கூடாதவை
    எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

    நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

    நோன்பின் தற்காலிக சலுகைகள்
    நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)

     எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

    அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

    நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
    நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

    நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

    நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

    சஹர் செய்தல் 
    நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

    ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

    நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

    நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது.



நோன்பை முறிக்கக்கூடியவை

மனைவியுடன் உடல் உறவு கொள்வது: நோன்பு நோற்று இருக்கும் நிலையில் உடல் உறவு கொண்டு விட்டால் முறிந்த நோன்பை மீண்டும் நோற்பதுடன் அதற்கான அபராதத்தையும் நிறைவேற்ற வேண்டும். அபராதத்தில் முந்தியது ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும்.

சுய இன்பத்தைக் கொண்டு அல்லது மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப்படல்

உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.

உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது. (உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.)

மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.

இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது. (பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.)

வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. (நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது)

நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.

நோன்பின் ஒழுக்கங்கள்

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை




நோன்பின் பயன்கள்
நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.
உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.
உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படும்.
நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.
உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புகளுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.
இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது.
தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.
இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப் படுகிறார்கள்.
நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன.
நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது. இதனால் ஒரு சமநிலை உண்டாகிறது. இந்த ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது.
நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.
நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த மருந்தாகும்.

Tuesday, 24 July 2012

போலியான காதலை கொண்டாட ஒரு காதல் தினமா? ஒரு விழிப்புணர்வு பார்வை...

valentine
காதலர்தினம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காதலர் தின கொண்டாட்டத்தை சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வந்தாலும், இந்துத்துவா சிந்தனையாளர்கள் இதை கடுமையாக எதிர்ப்பதை நாம் பார்க்கிறோம். இவர்களின் இந்த எதிர்ப்புணர்வுக்கு காரணம் நாட்டின் கலாச்சாரத்தின் மீதான காதலா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் கலாசார சீரழிவின் உச்சத்தில் இருப்பவர்கள் இந்துத்துவாக்கள் தான் என்பதற்கு கர்நாடக அமைச்சர்களின் இப்போதைய நடவடிக்கையே சான்றாக உள்ளது. பிறகு ஏன் இவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்? அங்கே தான் ஒளிந்துள்ளது இன்னொரு மதத்துவேஷம். ஆம். காதலர்தினம் என்பது கிறிஸ்தவ மதத்தவர் சம்மந்தப்பட்ட ஒன்றாகும். எனவே தான் இந்துத்துவாக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் நேரடியாக இவ்வாறு சொல்லமுடியாததால், கலாச்சாரம் ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு எதிர்ப்பார்கள். காதலர் தினம் குறித்து இந்து முன்னணி அமைப்பாளருமான ராம.கோபாலன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், 



''நமது நாட்டைக் குறிவைத்து பல தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சில நேரிடையாக வந்து தாக்குகின்றன, சில கொல்லைப்புறமாக , மறைமுகமாக வருகின்றன. அவை நமது பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கெடுக்கும் நச்சுப் பிரச்சாரங்கள். அப்படிப்பட்ட ஒன்று தான் காதலர் தினம். இதன் நோக்கம் கலாச்சாரத்தைச் சீரழிப்பது, சந்தையை வளர்ப்பது. எவ்வாறு அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்குங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு மக்களை மயக்குகிறார்களோ, அதுபோல காதலர் தினத்திலும் விளம்பர உத்தி மூலம் பொருள்கள் வாங்க விளம்பரப்படுத்துகிறார்கள். இதனால் நிறைவது இவர்களது கஜானா.ஆனால் அதற்கு விலையாவது நமது மக்களின் பண்பாடு. இவையெல்லாம் தனிமனித சுதந்திரம் என்ற வாதம் பித்தலாட்டமானது. இதை அனுமதித்தால் தேசத்தின் அடையாளம் அழிந்து போகும். இந்த விஷ வித்தை அலட்சியப்படுத்தினால் அது வளர்ந்து, பல கிளைகளைப் பரப்பி நாசம் செய்துவிடும்.'' என்று கூறியுள்ளார்.
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.


எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.


உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.(நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு,

பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.


இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).



என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.


இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.


இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.


அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

நன்றி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ )               
                மு.அஜ்மல் கான் http://ajmal-mahdee.blogspot.com/search/label/Valentine%20Day