Sunday, 16 June 2013

அன்பார்ந்த வாசகர்களுக்கு எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் !!!

Happy Father's Dayதந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும், உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தைஇந்த தினம் முழுமையடையச் செய்கிறது.



இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தைநிலை மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது மேலும் இதில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது, மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை இந்நாளில் பொதுவாக செயல்படுத்தப்படும்.


ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 இல் முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.


வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 இல் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள செண்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது, மேலும் ஜூன் 19, 1910 இல் அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.

இது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இருந்தபோதும் YWCAஇல் இருந்த ஆதரவால், YMCA மற்றும் தேவாலயங்கள், இது காலெண்டர்களில் இல்லாத போதும் பொறுப்பெடுத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது. தவறான காரணங்களுக்காக இதற்கான விடுமுறைநாள் மெதுவாக கவனம் பெற்றது. ஸ்போக்ஸ்மன்-ரிவியூ என்ற உள்ளூர் செய்தித்தாளில் நகைச்சுவை உள்ளிட்ட அதிகமான பழிப்பு, பகடி மற்றும் ஏளனம் ஆகியவற்றிற்கு இது உள்ளானது. சிந்தனையற்று ஊக்கவிக்கப்பட்டும் "முன்னோர்கள் தினம்", "புரொபசனல் செக்ரட்டரீஸ் தினம்", மற்றும் பல., தினங்களைப் போன்று காலெண்டரை நிரப்புவதற்கு முதல் படியாகவே இதைப் பல மக்கள் பார்த்தனர் "தேசிய மேசைச் சுத்தப்படுத்தும் தினம்" போலத்தான் இதுவும் எனக் கருதினர்.


1913 இல் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது, அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 இல் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார், மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 இல் அமைக்கப்பட்டது. 1966 இல் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.


தந்தையர் தினம் மட்டுமின்றி, பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இது பெரும்பாலும் நவம்பர் 19இல் கொண்டாடப்படுகிறது.

முன் வரலாறு

முதல் நவீன "தந்தையர் தின" கொண்டாட்டமானது ஜூலை 5, 1908 இல், பேர்மோண்ட், மேற்கு வெர்ஜினியாவில், மத்திய யுனைட்டட் மெத்தொடிஸ்ட் தேவாலயம் என இப்போது அறியப்படும் வில்லியம்ஸ் நினைவு மெத்தொடிஸ்ட் எபிஸ்கோபல் தெற்கு தேவாலயத்தின் கடைப்பிடிக்கப்பட்டது. கிரேஸ் கோல்டன் கிளைடன் அவருடைய அப்பாவான, மெத்தொடிஸ்ட் மதகுருவான ஃப்ளெட்சர் கோல்டன் பிறந்த நாளுக்கு அருகில் வரும் ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தார். இந்த நகரத்தில் பிற நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்ததால் இந்தக் கொண்டாட்டம் அவர்களது நகரத்தைத் தாண்டி ஊக்குவிக்கப்படவே இல்லை, மேலும் எந்த அரசுப் பொது அறிவிப்பும் நகர கவுன்சிலால் மேற்கொள்ளப்படவில்லை. 
வேறு இரண்டு நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியின் மேல் ஆதிக்கம் செலுத்தியது, அவை: 4 ஜூலையில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில், 12,000 பேர் கலந்து கொண்டு வெப்பமான காற்று பலூன் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டது, இதில் ஒரு 16வது இளம் பெண் 4 ஜூலையில் இறந்திருந்தார் அது 5 ஜூலையில் தெரியவந்தது இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வந்த நாள்களில் இது முக்கிய செய்தியாக இருந்தது. உள்ளூர் தேவாலயமும் கவுன்சிலும் ஆர்வமெடுத்து இந்த நிகழ்ச்சியை ஊக்குவிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை, மேலும் இந்த நிகழ்ச்சி மீண்டும் பல ஆண்டுகளுக்கு கொண்டாடப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய போதனை மீண்டும் நிகழ்த்தப்படவில்லை மேலும் இது கைவிடப்பட்டது. கூடுதலாக, கிளைடன் இந்த நிகழ்ச்சியை ஊக்குவிக்கவோ மற்றவர்களிடம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசக்கூட செய்யாமல் அமைதியாக இருந்து விட்டார்.
கிளைடன் அவருடைய அப்பாவின் இழப்பினால் துயருற்றிருந்தார், மேலும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மோனோநக் அருகில் உள்ள மோனோநக் சுரங்கத்தொழில் சேதத்தில் 361 ஆண்கள் கொல்லப்பட்டனர், அதில் 250 பேர் அப்பாக்கள், இந்த சம்பவத்தால் ஆயிரத்துக்கும் மேலானோர் அப்பா இல்லாத குழந்தைகள் ஆனார்கள். கிளைடன் அவருடைய மதகுருவான ராபர்ட் தாமஸ் வெப்பை இறந்த அனைத்து அப்பாக்களையும் கெளரவிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

பேர்மோண்ட்டில் இருந்து 15 மைல்கள் (24 கிமீ) தொலைவில் இருக்கும் நகரமான கிரப்டன், மேற்கு விர்ஜினியாவில் அவரது அம்மா இறந்ததற்கான சடங்குகளை இரண்டு மாதத்திற்கு முன்பு அன்னா ஜர்விஸ் செய்திருந்தார், மேலும் அன்னா ஜர்விஸ்' அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு அறப்போர் நடத்தியதில் கிளைடனும் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.

நன்றி : விக்கி பீடியா 

Friday, 14 June 2013

ஆன்லைனில் ஹோட்டலில் ரூம் புக் செய்பவர்களுக்கானஆலோசனை!!


லேட்டாகிடுச்சே என்று இரவு டியூட்டிக்கு வேகமாக வந்த நான் ரிஷப்சனில் ஒரு குடும்பம் டியூட்டி பெண்ணுடன் கலவரமான தர்க்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தேன், என்னைப்பார்த்ததும் அந்த குடும்பத் தலைவனுக்கும் தலைவிக்கும் முகத்தில் பலமான நம்பிக்கை மின்னல் கீற்று...
என்ன சம்பவம்...?

கேரளா தம்பதி, மூன்று குழந்தைகள் ஒரு குழந்தைக்கு பனிரெண்டு வயது இன்னொரு குழந்தைக்கு பத்து வயது இன்னொன்றுக்கு எட்டு வயது, இவர்கள் ஓமனில் இருந்து சுற்றுலாவிற்காக ஆன்லைனில் புக் செய்துவிட்டு வந்தவர்கள், ஆனால் பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிடவில்லை, ரெண்டு அடல்ட் என்றே குறிப்பிட்டு அதன் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் வந்ததோ ஐந்துபேர், அவர்கள் செலுத்திய பணம் இரண்டுபேர் தங்குவதற்க்கே, எனவேதான் பிலிப்பைனி ரிசப்சனிஸ்ட் அவர்களை அனுமதி மறுத்துக் கொண்டிருந்தாள்.

என்னிடம் பஞ்சாயத்து வந்ததும் நானும் அவர்களிடம் விளக்கி சொன்னேன் ஆனாலும் அவர்கள், இல்லை நாங்கள் ஒரு ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் எங்களுக்கு நோ பிராப்ளம் என்றார்கள், "இல்லை சார், எங்கள் ஹோட்டலுக்கு என்று சில ரூல்ஸ்கள் உண்டு, நீங்கள் எத்தனைபேர் என்று கண்டிப்பாக குறிப்பிட்டு [[வயது உட்பட]] அதன் பணத்தை செலுத்தினால் நாங்கள் அதற்க்கான அறை'யை செலக்ட் செய்து வைப்போம்.

நீங்கள் குறிப்பிட்டது இரண்டுபேர், ஸோ அதற்கான அறை'யை மட்டுமே எங்களால் கொடுக்கமுடியும், ஆனால் நீங்கள் வந்திருப்பதோ ஐந்துபேர், எனவே இரண்டுபேர் தங்கும் அறையில் ஐந்துபேர் தங்கவைக்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை, வேண்டுமானால் இன்னொரு ரூம் உங்களுக்கு தருகிறேன் அதற்க்கான பணத்தை செலுத்துங்கள் என்று சொன்னேன்.
அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை, நாங்கள் ஒரே ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் என்றே சாதித்தார்கள். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன் [[இருந்தாலும் மனசு கேட்கவில்லை]] 

எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி உங்களுக்கு ஒன்று செய்கிறேன் இரண்டு எக்ஸ்ட்ரா பெட் கொடுத்து ஒரே ரூமில் [!!!!] அடைக்கிறேன் ஸாரி கொடுக்குறேன் ஆகவே இரண்டுபேருக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சார்ஜ் டிஸ்கவுன்ட் போட்டுத்தருகிறேன் என்று சொன்னதும் ஓகே சொன்னார் சேட்டன்.
எழுத்தில் நடந்த சம்பவங்களை சரியாக விளக்க இயலவில்லை ஆனால் நடந்தது மோசமான அனுபவம் எனவேதான் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதை சொல்கிறேன்...சில ஹோட்டல்களில் வேறு அறைகள் இல்லாவிட்டால் இப்படிபட்டவர்களுக்கு ரூமும் கொடுக்க இயலாது, எக்ஸ்ட்ரா குழந்தைகளை அனுமதிக்கவும் முடியாது...[[நடுரோட்டுல இன்னொரு நாட்டுல]]

மனிதாபிமான முறையில் என் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் எனக்கு நிர்வாகத்திடம் இருந்து வார்னிங் மெமோ வந்துவிட்டது, இன்னும் சிலபல கடுமைகளை சந்தித்தேன்.

சரி போகட்டும் விடுங்கள்...

இனி நண்பர்களுக்கு இதன் மூலம் சில ஆலோசனைகள் சொல்கிறேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஹோட்டலில் ரூம் புக் செய்பவர்கள், அல்லது டிராவல் ஏஜென்சியில் புக் செய்பவர்கள், அது வெளிநாடாக இருக்கட்டும் அல்லது உள்நாடாக இருக்கட்டும், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நீங்கள் எத்தனை பேர்கள் தங்கப்போகிறீர்கள், ஆண்கள் எத்தனைபேர் பெண்கள் எத்தனைபேர், குழந்தைகள் அவர்கள்தம் வயது முதலியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அதற்கான ரசீதையும் மறக்காமல் [[கன்பர்மேஷன் நம்பர்]] வாங்கி கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த சேட்டன் வந்ததுபோல நீங்களும் போயி எங்கேயாவது மாட்டிக்கொள்ளாதீர்கள், கம்பெனி அனுப்புவதாக இருந்தாலுமே ஜாக்கிரதையாக இருங்கள், நான் நினைத்து இருந்தால் அன்றைக்கு அந்த குடும்பத்தை தங்கவிடாமல் செய்து, நான் நல்லபெயர் எடுத்திருக்க முடியும், நாமதான் எங்கே போனாலும் கைப்புள்ள ஆச்சே ஹி ஹி....!

சவூதி அரேபியா நாடு ஒரு பார்வை…..

File:Al-Haram mosque - Flickr - Al Jazeera English.jpgவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வடமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது. மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது.


 சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடாகும்.
மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது.

இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மசகுஎண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது.

 மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன. எனினும் சவூதி அரசு இதனை மறுத்து வருகின்றது.

மக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.

 சவூதி அரேபியாவில் தமிழர்..
சவூதி அரேபியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 1.4 மில்லிய இந்தியர்கள் வசிக்கின்றனர்.
 அதில் கணிசமான தொகையினர் தமிழர்கள் ஆவர். இலங்கைத் தமிழர்களும் கணிசமான தொகையினர் வசிக்கின்றனர்.
இங்கு குடியுரிமை பெறுவதென்றால், ஒருவர் இசுலாமியராக இருக்க வேண்டும் என்பது சட்டம். இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடி தமிழர்கள் இங்கு வந்தனர்.

தெரிந்த சவூதி அரேபியா.. தெரியாத பல விடயங்கள்.. சவூதி பற்றி நல்ல விடயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது.   அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும். 

  சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான்   என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன. 

  பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரேபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.

   *முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது. 

  *உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை( world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.  

*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய்( Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.  

*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.  

*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜிர்யாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.  

 *Abraj al bait towers இந்த ஹோட்டல்mekkah royal hotel tower என்றும் அழைக்கப் படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில், tallest hotel என்ற பெருமையை அடையும்.  

 *Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது.இதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்கமுடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.  

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers  அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும் http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers    

*Worlds largest military funds spend என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.  
*மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். சீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  
 *அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.  

*princess noura bin abdul Rahman university(PNU) , இதுதான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கு மட்டுமான university.  

*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour,  70000/HR  பயணிகளை ஏற்றி செல்லுமளவுக்கு ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

*1900000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே தொண்ணூறு  லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2012 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1,752,932.  

*முகம்மத் பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.   *உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.  

*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU  விளங்குகிறது.  

*சவுதி அரேபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.  

*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.  

*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரேபியா உள்ளது.   

*பூங்காக்களைப் பொறுத்தவரை family park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.  

*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.  

 *மேற்கூறிய கடைசி மூன்று விடயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.  

*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.   ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.  

*King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.  
*Saudi ARAMCO  தான் உலகின் second largest public company ஆக உள்ளது. இது dammam  ல் உள்ளது.  

*Saudi ARAMCO  உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவூதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள Saudi Aramco, இங்குதான் உள்ளது.  

 *ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  

 *கெமிக்கல் உற்பத்தியில்  SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாமிடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.  

*Mono Ethlene Glycol உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள SABIC  தான் வளைகுடா நாடுகளின் மிகப் பெரிய கம்பெனியாக உள்ளது.  

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

"தந்தி' சேவைக்கு மூடு விழா..

ஒரு காலத்தில்  மனிதர்கள் மற்றும் பறவைகள் மூலமும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளில் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த கால தாமதத்தைக் குறைக்கும் வகையில், 19-ஆம் நூற்றாண்டில் மின் தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷியாவைச் சேர்ந்த பவுல் ஷில்லிங் என்பவர்தான், 1832-இல் மின்காந்த அலைகளின் மூலம் செயல்படும் தந்தி சேவையை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்து அவருடைய குடியிருப்பின் இரு அறைகளில் தனித் தனி கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் நீண்ட தொலைவுக்கு தகவல் அனுப்பும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி மின் தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார். 


மோர்ஸ் கோட்: அதன் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதனையும் செய்தார். இதற்கு உதவியாக அவருடைய உதவியாளர் ஆல்ஃபிரட் வெயில் "மோர்ஸ் கோட்' சிக்னலைக் கண்டுபிடித்தார்.
இவருடைய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்பே, உலக நாடுகளால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வரும் தந்தி சேவைக்கு அடித்தளமானது.
இந்தியாவில் தந்தி சேவை: இந்தியாவைப் பொருத்தவரை 1850-ஆம் ஆண்டிலேயே தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக, கொல்கத்தா - டயமண்ட் ஹார்பர் இடையே சோதனை அடிப்படையில் தந்தி கேபிள் போடப்பட்டு பின்னர் 1851 முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.
1902 முதல் வயர்-லெஸ் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-இல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உருவாக்கப்பட்டு பிறகு அந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தொலைபேசி சேவை பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகும், தந்தி சேவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த அளவுக்கு அவசரச் செய்திகளை பறிமாற்றம் செய்வதில் தந்தி சேவை பெரும்பங்கு ஆற்றி வந்தது.
தந்தி என்றாலே கிலி: குறிப்பாக தொலைபேசி சேவை இல்லாத காலத்தில், உறவினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டிய சோக மற்றும் மகிழ்ச்சியான செய்திகளைத் தெரிவிக்க இந்தச் சேவையையே மக்கள் நம்பியிருந்தனர்.
குறிப்பாக, சொல்லப்போனால் அப்போது எந்த வசதிகளும் இல்லாத கிராமப் பகுதிகளுக்கு உறவினரின் இறப்புச் செய்தியை தெரிவிப்பதற்கான ஒரே தகவல் தொழில்நுட்பமாக தந்தி சேவை மட்டுமே இருந்தது.
கிராமத்தில் உள்ள ஒருவருக்கு தந்தி வந்திருக்கிறது என்றால், அதைப் படிப்பதற்கு முன்பே அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துவிடும்.
அதுமட்டுமன்றி, வர்த்தக ரீதியிலான தகவல் தொடர்பிலும் தந்தி முக்கிய பங்காற்றி வந்தது. வர்த்தகர்கள் இதுபோன்று வரும் தந்தியை, சட்ட ஆவணமாகவும் பாதுகாத்து வைத்தனர்.
இதுபோன்று மக்களிடையே முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த இச்சேவையின் பயன்பாடு 2003-ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
"செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது.
அதாவது, 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் நின்றுவிட்டது. இதன் காரணாக 2005-இல் 8 பேராக இருந்த தந்தி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 2010-இல் அலுவலகத்துக்கு ஒரு தந்தி ஆபரேட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டது' என்றார் பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர்.
தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததைத் தொடர்ந்து, இச்சேவையைக் கைவிட பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். (சென்னை) பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறியது:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தந்தி சேவை பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட காரணத்தால், இச் சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுமாறு தொலைத்தொடர்பு இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை 15-ஆம் தேதி முதல் தந்தி சேவை இருக்காது என்றார்.
இன்று எத்தனை தகவல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் காலம் காலமாக மக்களோடு ஒன்றியிருந்த தந்தி சேவைக்கு கனத்த இதயத்தோடு விடை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.





எந்தெந்த நாடுகளில் தந்தி சேவை.....

உலக அளவில் 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவை ரஷியா, ஜப்பான், பெல்ஜியம், கனடா ஜெர்மனி, மெக்ஸிகோ, பஹ்ரைன், ஸ்லோவேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.
ஆனால், ஆஸ்திரேலியா, மலேசியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தந்தி சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
பிரிட்டிஷ் அரசு தந்தி சேவையை கடந்த 2003-இல் தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.
அமெரிக்க அரசும் 2006 ஜனவரி 27 முதல் தந்தி சேவை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது.
நேபாளத்தில் 2009 ஜனவரி 1 முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.
ஆஸ்திரேலிய அரசு 2011 மார்ச் 7-ஆம் தேதி தந்தி சேவையை நிறுத்தி விட்டது. இருந்தபோதும் பீச்வொர்த்தில் உள்ள விக்டோரியா நகரில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக தந்தி சேவையை வைத்துள்ளது.
மலேசியாவில் 2012 ஜூலை 1-ஆம் தேதி முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.
அயர்லாந்து அரசு 2002 ஜூலை 30 முதல் தந்தி சேவையை நிறுத்தி விட்டது.
நியூசிலாந்தில் 1999-இல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக மட்டும் 2003 முதல் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.

160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவைக்கு மூடு விழா...


அவசர செய்திகள் அனுப்ப மக்கள் தந்தி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கம்ப்யூட்டர் மயமான உலகில் இன்டர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ்., செல்போன் வந்த பிறகு கடித போக்குவரத்தும், தந்தி சேவையின் பயன்பாடும் வெகுவாக குறைந்துள்ளது. 
தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), "ஸ்மார்ட் ஃபோன்' என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Thursday, 13 June 2013

NRI's Income Tax Up to 30% .....

WHO IS AN NRI ?
An Indian abroad is popularly known as Non-Resident Indian (NRI). The NRI status is legally defined under the  Foreign Exchange Management Act, 1999 and the Income Tax Act, 1961 for applicability of respective laws.He is not in India for 182 days or more during the relevant previous year.

NON - RESIDENT STATUS UNDER THE INCOME TAX / WEALTH TAX ACT
The term non-resident is negatively defined under section 6 of the Income-tax Act. An individual who is not a resident under the Income-tax Act is a non-resident (generally, termed NRI). Thus, one should know the definition of a resident and if he is not a resident then he is a non-resident.
The status of a person as a resident or non-resident depends on his period of stay in India. The period of stay is counted in number of days for each financial year beginning from 1st April to 31st March (known as previous year under the Income-tax Act). The definition is explained in simple terms as under.
If an individual who satisfies understated both the conditions of section 6 of the Income-tax Act, then he becomes a Non-Resident.

I am a non-resident Indian (NRI) and I have earned interest income from a bank in India on which tax deducted at source (TDS) was applicable. Could you tell me how I can claim the refund of TDS?

Since you are an NRI, you are liable to pay income tax in India on your income which has accrued, arisen or been received in India. Hence the interest income from the bank in India is liable to be taxed in India. The bank would have deducted TDS at 30%; however your income tax liability is likely to be lower in view of the threshold exemption and the lower slab rates of tax applicable to an individual. The tax year in India is the financial year—1 April to 31 March—of the following year. The threshold exemption limits and the slab rates for the financial year ended 31 March 2013 are as follows: up to Rs.2 lakh the tax liability is nil, for Rs.2 lakh to Rs.5 lakh it is 10% of the amount exceeding Rs.2 lakh, for Rs.5 lakh to Rs.10 lakh it is Rs.30,000 plus 20% of the amount exceeding Rs.5 lakh, above Rs.10 lakh it is Rs.1.3 lakh plus 30% of the amount exceeding Rs.10 lakh. The income tax computed above will be increased by a cess of 3% of tax. You may also keep in mind the provisions of the double tax avoidance agreement (DTAA), if any, between India and the country of which you are a tax resident. This may provide for a lower rate of tax on interest. To claim the DTAA benefit, you need the tax residency certificate of the country in which you are a tax resident. You may use the normal rates of tax or the rates as per the DTAA, whichever is more beneficial. The due date for filing your return of income for the year ended 31 March 2013 is 31 July 2013. You can file your return of income manually (paper return) with your assessing officer showing the interest income and the taxes paid or deducted at source and accordingly claim the refund. Alternatively you could file your return of income electronically and thereafter submit the verification duly signed in income-tax return V form to the Central Processing Cell, Bangalore. You have the option to claim the refund through direct credit in your bank account or through a paper cheque which has to be mentioned in the return filed. Once the return of income is processed, refund will be granted as per the mode selected by you.

I have income in India through long-term capital gains and investments.  I have to file an income-tax return since I am a non-resident Indian (NRI)?

According to the provisions of the domestic tax laws in India, income from long-term capital gains and income from investments accruing or arising in India are taxable irrespective of residential status. Since you are an NRI, tax is liable to be withheld at source on your investment income and the capital gains income earned in India. The domestic tax laws have exempted NRIs having only investment income and/or income from long-term capital gains if tax has been deducted at source. Hence, you are not liable to file your income tax returns in India if the taxes are deducted and paid.

I have been an NRI for the past 11 years and I have not paid income tax in India as I have not had any income from there. Last year, I purchased a property worth Rs. 40 lakh. The full amount was paid through my non-resident external (NRE) bank account. I have given this property on rent . I do not have any other source of income. Do I have to pay any income tax? I will be receiving a second property as a gift deed from my father this month worth Rs. 70 lakh.
The rent income that you receive is liable for income-tax in India as “income from house property”. You are entitled to a deduction of taxes levied by the local authority paid by you during the year and a further deduction of 30%. You are liable to file your income-tax return if your taxable income exceeds the threshold limit for the financial year. Since you are an NRI, tax is liable to be withheld at source by the tenant at the rate of 30.9%. The withheld amount may exceed your tax liability. In such a case, even though you may not be liable to file your tax return, you may do so to claim the refund. You may also note that if the fair rent which the property is expected to fetch exceeds the actual rent received, it is the amount of fair rent that is liable for taxation under “income from house property”. Now coming to your second property. Since this is received from your father as a gift, it is exempt from income tax, as gifts from relatives are not liable to tax. However, the property should be either a residential or a commercial property. Agricultural land, plantation property or a farm house in India cannot be acquired by an NRI by way of gift. They can, however, be inherited. You may also keep the provisions of wealth tax in mind. Wealth tax is an annual levy. One residential house is exempt from wealth tax. Further, if a house property is let out for more than 300 days, it is exempt from wealth tax. There is a threshold exemption limit of Rs.30 lakh beyond which there is a wealth tax of 1%.

Prepared & Collection by: M.Ajmal Khan.

Tuesday, 11 June 2013

இலங்கைத் தமிழர்களுக்கு கமல்ஹாசன் ஆற்ற வேண்டிய கடமை!! ஒரு சமூக பார்வை..

உலக அரங்கில் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்த பல தமிழர்களில் ஏன் இந்தியர்களில் ஒருவரான நமது கமல்ஹாசன் ஆற்ற வேண்டிய  சேவை  பற்றிய பதிவு... பணிகள் 

டெல்லிக்கு ராஜாவானாலும் பாட்டிக்கு பிள்ளைதான் என்று நமது ஊரில் ஒரு பழைய மொழி உண்டு. அது போல் என்னதான் உலக கலைஞர்கள் போற்றும் வகையில் இருந்தாலும் பாவம் தமிழக அரசியல் புரியாமல் வளர்ந்து விட்டார், விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினைகளை நாம் எளிதில் மறந்து விட முடியாது இது ஒரு சினிமாக்காரனுக்கு  வந்த பிரச்சனை அல்ல சமுதாயத்தின் ஜனநாயகத்திற்கு ஏற்ப்பட்ட அவலம், உலகம் சுற்றும் ஒரு கலைஞனுக்கு சொந்த வீட்டில் மரியாதை இல்லை,  என்ன 

ஒரு முறை குட்டி பத்மினி என்று ஒரு நடிகை இருந்தார் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது அப்போது அந்த விருதை அவர் மேடையில் சென்று ஜனாதிபதி கையால் பெற்ற போது அவர் குட்டி பத்மினியிடம் நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று வினவி உள்ளார் அதற்க்கு நான் தமிழகத்தை சேர்ந்தவர் எனது இவர் கூறிய கணமே கமலஹசனின் மாநிலம் தானே என்று அந்த ஜனாதிபதி கேட்டார், இன்றும் கூட விழுந்தால் அருவியை விழ வேண்டும் என்பதற்கு ஏற்ப விஸ்வரூபம் பட பிரச்சனை மூலமாக மத்திய அரசின் தணிக்கை குழுவே புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகிறது.

 நாளை இது போன்று எந்த திரைப்படத்தயும் மத்திய அரசு தணிக்கை சான்றிதழ் கொடுத்த பின்பு யாரும் தடை செய்ய முடியாது என்பதுதான் இந்த சட்ட திருத்தம்,  இப்படி சட்டத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்த கமல் ஹாலிவூட் புகழுக்காக ஏங்குவது ஏன் என்றுதான் புரியவில்லை.ஒரு விதத்தில் பார்த்தால் அது தவறும் இல்லை ஏன் என்றால் பல  தொடுவதுதான் ஒரு கலைஞனின் வேலையாக இருக்க முடியும், இன்று நீங்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள் அதாவது தீவிர்வவத்ம் பற்றி ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் தவறில்லை.ஆனால் உழைத்து சம்பதிட்ட பணத்தில் 95 கோடியை செலவு செய்து அமெரிக்க ஆப்கானிஸ்தான் படங்களை தயாரிக்கும் நீங்கள் யார் வாயால் புகழப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 

இலங்கை பிரச்சனையில் கமல்ஹாசன்  

நமது தொப்புள் கோடி உறவுகள் இலங்கையில் தவித்து கொண்டு இருக்கிறார்கள் அங்கு காணாத ஒரு அநியாயம் உலகில் எங்கும் இல்லை அதைப்பற்றி உங்கள் திரைப்படங்களில் நீங்கள் வாய் கூட திறக்காதது திகைக்க வைக்கிறது, இலங்கை பிரச்சனையை சொன்னால் உங்கள் உலக பயணம் செல்லுபடி ஆகாமல் போகல என்று கூட நீங்கள் யோசித்திருக்கலாம் தீவிர வாதத்திற்கு சவுக்கடி கொடுக்கும் திரைப்படத்திற்கு அமெரிக்க அரசே நிதி உதவி செய்கிறது எனும் செய்தியை கேள்வி பட்டிருக்கிறோம். 

அப்படி நீங்கள் உங்கள் சொந்த செலவில் தமிழர்களின் அவல நிலையை உலகிற்கு எடுத்து உரைத்திருந்தால் அமெரிக்க போன்ற நாடுகளின் ஆதரவு நமக்கு கிடைக்க ஒரு சிறு பொறியாக நீங்கள் பயன் பட்டிருக்க்கலாமே சேனல் 4 தொலைக்காட்சி காட்டிய உண்மை நிகழ்வுகளோடு ஐ நா வரை உங்கள் பயணமும் கை கோர்திருக்குமே ஐ நா வும் உன்னை அழைக்கும் என்ற தசாவதார பாடல் வரிகளுக்கேட்ப்ப உண்மையில் உல க நாயகன் என்று உங்களை நிரூபிக்கும் கட்டமும் வந்திருக்குமே, கருப்பர்கள் முதல் ஹிரோஷிமா வரை தங்களுக்கு நேர்ந்த அவலங்களை உலக சினிமாவாக பாதிக்கப்பட்டவர்களால் காண்பிக்க பட்டுள்ள  போது நீங்களும் நமது பிரச்னையை எடுத்து சென்றிருக்கலாம்.


உங்களுக்கு  வேண்டுகோள்!!

இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஈழ தமிழர்களின் பிரச்சினை பற்றிய விபரங்கள் இன்னும் சரியான முறையில் சென்றடையவில்லை ஆகவே உங்கள் திரைப்படத்தின் ஊடாக வெளி வந்தால் பலகோடி இந்திய மக்களுக்கு தெரிய சந்தர்ப்பம் உள்ளது .  இன்னமும்  உங்களுக்கு அவகாசம் உள்ளது. ஈழம் பற்றி என்னுடைய கதை உள்ளது.
ஒரு சில தகவல்களை கூறுகிறேன்.உங்களுக்கு  பிடித்தால்  என்னை தொடர்பு கொள்ளவும்.

படத்தில் உங்களுக்கு  மூன்று  ரோல்கள்!!
1, திலீபன்- இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதலில்  குரல் கொடுத்த திலீபன் (20 நிமிடம்), 
2, இந்திய கடற்படை அதிகாரியாக -தமிழ் நாடு மீனவர்களை காக்கும் பிகார் மாநிலத்தை கொண்ட இந்திய        கடற்படை அதிகாரி (30 நிமிடம்).
3,இலங்கையில் நடந்த இனப் படுகொலையில் பங்குள்ள போர்க் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட  போராடும்  அதிகாரி .


சார் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் காரணம் இலங்கை தமிழர்களின் உண்மைசன்பவ்களை வெளிக்கொண்டுவருவதே உங்கள் படைப்ஆகட்டும்.

சமீபத்தில் ஊழல் நிறைந்து சைனா எண்டு அமெரிக்க விடுத்த ஒரு அறிக்கைக்கு பதில் அளித்த சீனா  ஜாக்கி சான்  அமெரிக்கா போன்ற ஊழல் நாட்டை பார்க்க முடியாது என்று பதில் அளித்துள்ளார் இத்தனைக்கும் பல ஹாலிவூட் படங்களில் சக்கி சான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இதை ஒரு ஆர்யாவிடமோ அமீர்கானிடமோ கூறிக்கொண்டிருக்க முடியாது ஏன் என்றால் அவர்கள் உலக நாயகன் கிடையாது. சர்வதேச அரங்கில் கால் பதித்த ஒரு தேசியவாதகலைஞநிடம்தான் கூற முடியும், அஸ்கர் மேடையில் தமிழுக்கு பெருமை சேர்த்த ரகுமான், இலங்கை பிரச்சனையை ஒரு குழந்தையை மையமாக வைத்து எம் கண்களை நிரம்பச்செய்த மணிரத்னம் இவர்கலோடு வாழும் மண்ணில் பிறந்த ஒரு மகா கலைஞனாக இருக்கும் நீங்கள் உங்களுக்கு இந்த பொறுப்பும் இருப்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 10 June 2013

ரகசிய கேமிராவினால் ஏற்படும் பெண்களின் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு தவகல்!!

பெண்களின் ஒவ்வொரு செயலும் படம்பிடிக்கப்படுகின்றன. அவர்கள் குளிப்பது, உடை மாற்றுவது மட்டுமில்லை. குனிந்து தரையை துடைப்பது, துணி துவைப்பது, குழந்தைக்கு பால் கொடுப்பது.. போன்ற ஒவ்வொன்றும் படமாக்கப்படுகிறது. ஓட்டல் அறைகளில், துணிக்கடையில் உடையை அணிந்து சரிபார்க்கும் அறையில், ஓட்டல் கழிப்பிடங்களில், பெண்கள் கூடும் இடங்களில் எல்லாம் அதற்காக ரகசிய குட்டி கேமிராக்களை பொருத்திவைத்திருக்கிறார்கள். 


அவைகள் படம்பிடிக்கும் அந்தரங்க காட்சிகளை இணையதளத்தில் போட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் நீங்களே இணையதளங்களில் பார்த்தால், உங்களுக்கு நெருக்கமான தோழிகள் படமோ, ஏன் உங்கள் படமோகூட இருக்கலாம். இந்திய பெண்கள் சமூகத்தில் இது ஒரு புதிய கலாசார சிக்கலை தோற்றிவித்திருக்கிறது.
 

முன்பெல்லாம் பாதுகாப்பு நலன் கருதி வங்கிகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் ரகசிய கேமிராக்களை வைத்திருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இதை பெண்களின் அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள். 

அங்கே பதிவு செய்யப்படும் காட்சிகளில் பெண்களின் அந்தரங்கம் தொடர்புடையவைகளை மட்டும் அடுத்த நாளே யூடீப் போன்ற ‘வீடியோ ஷேரிங் சைட்’களில் போட்டுவிடுகிறார்கள். அதை உலகம் முழுவதும் உள்ள ‘செக்ஸ் ஊனம்கொண்ட ஆண்கள்’ பார்க்கிறார்கள். சிலர் பார்த்து ரசித்த வீடியோக்களை பேஸ் புக்கிலோ, கூகுள் பிளஸ்சிலோ பகிர்ந்துகொள்கிறார்கள். 

ஆபாச நீலப் படங்களை பார்த்து ரசித்து அலுத்துப்போன பல செக்ஸ் ஊன மனிதர்கள் இப்போது, இத்தகைய யதார்த்த அரைகுறை காட்சிகளை பார்ப்பதிலே அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். அவைகளை பார்த்துவிட்டு, ‘யதார்த்த காட்சிகள்’ என்று மெய்சிலிர்த்து பேசுகிறார்கள். அந்தரங்கங்களை படம்பிடிக்க இப்போது குட்டிக்குட்டி கேமிராக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. 

அதனை சுவர்கடிகாரம், வாட்ச், பேனா, டை போன்றவைகளில் எல்லாம் பொருத்திக்கொள்கிறார்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோ பிரேம், குளிர்பான பாட்டில்கள், கண்ணாடி, சூயிங்கம் பாக்கெட் போன்றவைகளில்கூட அந்த குட்டி கேமிராக்களை ஒட்டி வைத்துக்கொள்ளலாம். 

அவை 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை. அதில் பதிவாகும் காட்சிகளை ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் திரைகளில் ‘லைவ்’ ஆக பார்க்கவும், மெமரி கார்டில் சேமித்து வைக்கவும் முடியும். இத்தகைய குட்டிக் கேமிராக்கள் இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும் விற்பனையாகின்றன. 

விற்பனையை அதிகரிக்க அடிக்கடி விளம்பரமும் செய்கிறார்கள்.யார், என்ன தேவைக்காக இந்த கேமிராக்களை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு விற்பனையாளர் ஒருவர் பதிலளிக்கையில், “தங்கள் வியாபார நிறுவனத்திற்கு தேவைப்படுவதாகக்கூறி பலரும் வாங்கிச் செல்கிறார்கள். திருட்டை ரகசியமாக கண்காணிக்கவும், பெருமளவு பணம் கொடுக்கும்போது ஆதாரத்தை உருவாக்கவும் கேமிராக்களை பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். 

வீட்டில் உள்ளவர்களை கண்காணிக்கவும் சிலர் வாங்கி பொருத்துகிறார்கள்’’ என்கிறார்கள். முன்பெல்லாம் இத்தகைய கேமிராக்கள் வாங்குவது சிரமமாக இருந்தது. விலையும் மிக அதிகமாக இருந்தது. இப்போது சீன கேமிராக்களின் வருகையால் விலை குறைந்ததோடு, பட்டிதொட்டி எல்லாம் இத்தகைய கேமிராக்கள் கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது. 

இங்க் அடைத்து எழுதப் பயன்படும் மை பேனா போன்ற தோற்றத்தில் இருக்கும் குட்டி கேமிரா முன்பு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது அது போன்றவை 1500 ரூபாய்க்கே கிடைக்கிறதாம். இந்த கேமிராக்களை குழந்தைகள்கூட எளிதாக கையாளலாம். நேரடியாக சென்று வாங்க தயங்குபவர்கள், இணையதளம் மூலமாகவே ஆர்டர் செய்து, பார்சல் மூலம் பெற்றுவிடுகிறார்கள். 

பார்சல் கைக்கு கிடைத்த பின்பு பணத்தை கொடுத்தால் போதும் என்ற அளவுக்கு இந்த வியாபாரம் மலிவாகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இத்தகைய கேமிராக்கள் தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவைகளை வாங்குவது யார் என்று ஓரளவு அடையாளம் தெரிந்தாலும் அவர்கள் எதற்காக அவைகளை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் அறிய முடிவதில்லை. 


ஓட்டல் ஒன்றின் கழிவறையில் இந்த வகை கேமிரா ஒன்று இருந்ததை, கழிவறைக்கு சென்ற பெண் பார்த்துவிட்டார். புகார் செய்தார். விசாரணையில் அந்த கேமிராவை வைத்த ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக நடந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரே போலீசாரால் தாக்கப்பட்டார். 

கேமிராவில் அந்தரங்க காட்சிகளில் சிக்கிக்கொள்ளும் பெண் தனக்கு தெரிந்தவராக இருந்தால் அவரை பணத்திற்காகவோ, உடல் தேவைக்காகவோ கட்டாயப்படுத்தி ‘பிளாக் மெயில்’ செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பிரபலமான தீம் பார்க் ஒன்றில் ஏராளமான பெண்கள் குளிக்கிறார்கள். அதை அப்படியே படமாக்கி இணையதளத்தில் சேர்த்திருக்கிறார்கள். 

அங்கிருக்கும் பாதுகாப்பை மீறி, பொதுவாக அப்படிப்பட்ட வெகுநீள காட்சியை செல்போன் கேமிராவால் படம் பிடித்திருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் தன் சட்டை பாக்கெட்டில் குத்தியிருக்கும் பேனா கேமிரா மூலமோ, தன் தொப்பியில் ரகசிய கேமிராவை ஒட்டிவைத்துக்கொண்டோ அந்த காட்சிகளை படமாக்கி இருக்கலாம். 


இப்படிப்பட்ட காட்சிகளை இணையதளம் மூலம் விற்பனை செய்வதும் இப்போது அமோ கமாக நடக்கிறது. பெண்கள் குளிப்பதை, எண்ணை தேய்ப்பதை எல்லாம் படமாக்கிவைத்திருக்கும் அவர்கள், முதலில் ஒருசில கிளுகிளு காட்சிகளை காட்டிவிட்டு, ‘இவை எல்லாம் யதார்த்தமானவை. தொடர்ந்து இதை விட ‘சிறந்ததை’ பார்க்கவேண்டும் என்றால், உங்கள் கிரடிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்’ என்கிறார்கள். 

வளைகுடா நாடுகளில் இருந்து பலர் இவைகளை பணம் கொடுத்து பார்த்துவிட்டு, தங்கள் ‘அனுபவங்களையும்’ பதிவு செய்துவைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி நடக்கும் அசிங்கங்களை எல்லாம் தெரிந்துகொண்டு உள்ளபடியே பெண்கள் ரொம்ப பயந்துபோய்தான் இருக்கிறார்கள். 

கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தும் ஆசிரியை, “கரும் பலகையில் கையை தூக்கி எழுதும்போதே ரொம்ப கவனிக்கவேண்டியதிருக்கிறது. அப்போது புடவை சற்று இடம் பெயர்ந்தால்கூட காட்சியாக்கி விடுகிறார்கள். யாரையும் நம்ப முடியவில்லை. கல்லூரியில் சில மாணவர்கள் கையில்கூட இத்தகைய கேமிராக்கள் இருப்பதாக ஒரு சில மாணவிகள் கூறியிருக்கிறார்கள். 




ஆனால் கையும் களவுமாக யாரையும் பிடிக்கவில்லை. அந்த அளவுக்கு தீவிரம் காட்டினால், கல்லூரி நிர்வாகம் என்ன சொல்லும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது’’ என்கிறார், அவர். பெருநகர் ஒன்றின் பேஷன் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் கழிவறையில் ரகசிய கேமிரா ஒன்றை மாணவி ஒருவர் கண்டுபிடித்தார். 

அதை ஆராய்ந்தபோது காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பதால் அது வழக்காகவில்லை. இன்னொரு பொது கழிப்பிடம் ஒன்றில் கேமிரா இருந்ததை கண்டறிந்த பின்பு அந்த கழிப்பறையையே மூடிவிட்டார்கள். துணிக்கடை ஒன்றில் துணியை உடுத்தி பார்க்கும் அறையில் கேமிரா இருந்ததை கண்டறிந்த மாணவி அதை தன் செல்போனில் படம்பிடித்து போலீசில் கொடுத்தார். 

மக்களுக்கும் அந்த தகவல் பரவ அந்த துணிக்கடை துவம்சம் செய்யப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்ஸ்கள் குளித்து உடை மாற்றும் அறையில் கீ செயின் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இரவு பணி முடிந்து அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டிருந்த நர்ஸ் கண்களில் அது பட, அப்படியே அதை எடுத்துக்கொண்டு போய் நிர்வாக தலைமையிடம் கொடுத்தார். 

அவர் அதை பரிசோதித்தபோது கேமிரா அதில் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தது. விசாரணையில் ஆஸ்பத்திரி டெக்னிக்கல் மேனேஜர் அந்த கேமிராவை பொருத்தினார் என்பதை கண்டுபிடித்தார்கள். என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றின் பெண்கள் ஹாஸ்டல் குளியல் அறையில் இருந்து கேமிரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்த மாணவியை கண்டுபிடித்தார்கள். 


முதல் கட்ட விசாரணையில் அந்த பெண், சும்மா விளையாட்டுக்காக அதை பொருத்தினேன் என்றார். போலீசார் அதில் தலையிட்ட பின்பு வழக்கின் கோணமே மாறியது. தனது காதலன் ஒருவனின் விருப்பத்தின் பேரில், அதை பொருத்தியதாக மாணவி கூறினார். விசாரணை விஸ்வரூபம் எடுத்தபோது இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. 

தற்போது குட்டி கேமிராக்களின் விற்பனை அதிகரித்து வருவதால், இது போன்ற பிரச்சினைகள் எல்லைமீறும் என்றே தெரிகிறது. பெண்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முடியும்.

தொகுப்பு :அ .தையுபா அஜ்மல்.