Friday, 14 June 2013

ஆன்லைனில் ஹோட்டலில் ரூம் புக் செய்பவர்களுக்கானஆலோசனை!!


லேட்டாகிடுச்சே என்று இரவு டியூட்டிக்கு வேகமாக வந்த நான் ரிஷப்சனில் ஒரு குடும்பம் டியூட்டி பெண்ணுடன் கலவரமான தர்க்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தேன், என்னைப்பார்த்ததும் அந்த குடும்பத் தலைவனுக்கும் தலைவிக்கும் முகத்தில் பலமான நம்பிக்கை மின்னல் கீற்று...
என்ன சம்பவம்...?

கேரளா தம்பதி, மூன்று குழந்தைகள் ஒரு குழந்தைக்கு பனிரெண்டு வயது இன்னொரு குழந்தைக்கு பத்து வயது இன்னொன்றுக்கு எட்டு வயது, இவர்கள் ஓமனில் இருந்து சுற்றுலாவிற்காக ஆன்லைனில் புக் செய்துவிட்டு வந்தவர்கள், ஆனால் பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிடவில்லை, ரெண்டு அடல்ட் என்றே குறிப்பிட்டு அதன் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் வந்ததோ ஐந்துபேர், அவர்கள் செலுத்திய பணம் இரண்டுபேர் தங்குவதற்க்கே, எனவேதான் பிலிப்பைனி ரிசப்சனிஸ்ட் அவர்களை அனுமதி மறுத்துக் கொண்டிருந்தாள்.

என்னிடம் பஞ்சாயத்து வந்ததும் நானும் அவர்களிடம் விளக்கி சொன்னேன் ஆனாலும் அவர்கள், இல்லை நாங்கள் ஒரு ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் எங்களுக்கு நோ பிராப்ளம் என்றார்கள், "இல்லை சார், எங்கள் ஹோட்டலுக்கு என்று சில ரூல்ஸ்கள் உண்டு, நீங்கள் எத்தனைபேர் என்று கண்டிப்பாக குறிப்பிட்டு [[வயது உட்பட]] அதன் பணத்தை செலுத்தினால் நாங்கள் அதற்க்கான அறை'யை செலக்ட் செய்து வைப்போம்.

நீங்கள் குறிப்பிட்டது இரண்டுபேர், ஸோ அதற்கான அறை'யை மட்டுமே எங்களால் கொடுக்கமுடியும், ஆனால் நீங்கள் வந்திருப்பதோ ஐந்துபேர், எனவே இரண்டுபேர் தங்கும் அறையில் ஐந்துபேர் தங்கவைக்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை, வேண்டுமானால் இன்னொரு ரூம் உங்களுக்கு தருகிறேன் அதற்க்கான பணத்தை செலுத்துங்கள் என்று சொன்னேன்.
அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை, நாங்கள் ஒரே ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் என்றே சாதித்தார்கள். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன் [[இருந்தாலும் மனசு கேட்கவில்லை]] 

எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி உங்களுக்கு ஒன்று செய்கிறேன் இரண்டு எக்ஸ்ட்ரா பெட் கொடுத்து ஒரே ரூமில் [!!!!] அடைக்கிறேன் ஸாரி கொடுக்குறேன் ஆகவே இரண்டுபேருக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சார்ஜ் டிஸ்கவுன்ட் போட்டுத்தருகிறேன் என்று சொன்னதும் ஓகே சொன்னார் சேட்டன்.
எழுத்தில் நடந்த சம்பவங்களை சரியாக விளக்க இயலவில்லை ஆனால் நடந்தது மோசமான அனுபவம் எனவேதான் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதை சொல்கிறேன்...சில ஹோட்டல்களில் வேறு அறைகள் இல்லாவிட்டால் இப்படிபட்டவர்களுக்கு ரூமும் கொடுக்க இயலாது, எக்ஸ்ட்ரா குழந்தைகளை அனுமதிக்கவும் முடியாது...[[நடுரோட்டுல இன்னொரு நாட்டுல]]

மனிதாபிமான முறையில் என் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் எனக்கு நிர்வாகத்திடம் இருந்து வார்னிங் மெமோ வந்துவிட்டது, இன்னும் சிலபல கடுமைகளை சந்தித்தேன்.

சரி போகட்டும் விடுங்கள்...

இனி நண்பர்களுக்கு இதன் மூலம் சில ஆலோசனைகள் சொல்கிறேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஹோட்டலில் ரூம் புக் செய்பவர்கள், அல்லது டிராவல் ஏஜென்சியில் புக் செய்பவர்கள், அது வெளிநாடாக இருக்கட்டும் அல்லது உள்நாடாக இருக்கட்டும், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நீங்கள் எத்தனை பேர்கள் தங்கப்போகிறீர்கள், ஆண்கள் எத்தனைபேர் பெண்கள் எத்தனைபேர், குழந்தைகள் அவர்கள்தம் வயது முதலியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அதற்கான ரசீதையும் மறக்காமல் [[கன்பர்மேஷன் நம்பர்]] வாங்கி கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த சேட்டன் வந்ததுபோல நீங்களும் போயி எங்கேயாவது மாட்டிக்கொள்ளாதீர்கள், கம்பெனி அனுப்புவதாக இருந்தாலுமே ஜாக்கிரதையாக இருங்கள், நான் நினைத்து இருந்தால் அன்றைக்கு அந்த குடும்பத்தை தங்கவிடாமல் செய்து, நான் நல்லபெயர் எடுத்திருக்க முடியும், நாமதான் எங்கே போனாலும் கைப்புள்ள ஆச்சே ஹி ஹி....!

No comments:

Post a Comment