இஸ்லாமிய வரலாற்றில் உமர் (ரலி) என்ற பெயருக்கு தனிச் சிறப்பு உண்டு. அவரது ஆரம்ப கால வாழ்க்கை அஞ்ஞானத்தில் ஆரம்பித்தாலும்ää இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின்பு அவர்களது வாழ்வு எந்தளவு தலைகீழ் மாற்றம் பெற்றது என்பது மட்டுமல்லää அவர்களின் தூய வாழ்வு இன்றைய முஸ்லிம்களும்ää இன்னும் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட உமர் (ரலி) அவர்களது வாழ்வைப் பற்றியும்ää அவரது ஆட்சி முறைகளைப் பற்றியும் அறிந்து மனதார பாராட்டுகின்றார்கள். அத்தகைய உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையை இன்ஷா அல்லாஹ் நாம் இனி தொடராகப் பார்ப்போம்.
ஆரம்ப கால வாழ்வு..
உமர் (ரலி) அவர்களின் பிறந்த தேதி பற்றிய சரியான குறிப்புகள் இல்லை எனினும் சற்றேறக்குறைய கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்திருக்கக் கூடும் என்றும இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உமர் (ரலி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். உமர் பின் கத்தாப் பின் நுஃபைல் பின் அப்துல் உஸ்ஸா பின் ரிஸா பின் ரிபான் பின் குரத் பின் அதீ பின் கத்ப் என்ற பரம்பரைபியில் வந்தவராவார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது பரம்பரையினரும்ää அபுபக்கர் (ரலி) அவர்களின் 8 வது பரம்பரையினரும் உமர் (ரலி) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அந்தளவு இவர்களுக்கிடையே தொப்புள் கொடி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.
உமர் (ரலி) அவர்களின் முன்னோர்களில் ஒருவரான அதீ என்ற கோத்திரத்தவர்கள்ää மக்காவில் குறைஷிகளிடையே எழக் கூடிய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய மத்திஸ்தர்களாகவும் செயல்பட்டு வந்தார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்கும்ää ஹர்ப் பின் உமைய்யா அவர்களுக்கும் இடையேää 'யார் கஃபாவை நிர்வகிப்பது என்ற பிரச்னை எழுந்த பொழுதுää அதனைத் தீர்த்து வைப்பதற்கு உமர் (ரலி) அவர்களுடைய பாட்டனாரான நுஃபைல் தான் மத்தியஸ்தராக இருந்துää அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அப்துல் முத்தலிப் கஃபாவின் நிர்வாகியாக்கப்பட்டார். உமர் (ரலி) அவர்களுடைய தந்தையார் கத்தாப் அவர்கள்ää பனீ அதி குலத்தவர்களின் மிகவும் பிரபல்யமான நபராகத் திகழ்ந்தார். உமர்(ரலி) அவர்களுடைய வீடு ஸஃபா மற்றும் மர்வாவுக்கு இடையே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுதுää அந்த வீடு அகற்றப்பட்டுää மக்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது.
உமர் (ரலி) அவர்களுடைய தாயார் கந்தமா அவர்கள் ஹிஸாம் பின் முகீரா என்பவருடைய மகளுமாவார். இந்த ஹிஸாம் பின் முகீரா பல தடவைகள்ää குறைஷிகளின் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ளார். இந்த தாய்வழிப் பாட்டனாரான ஹிஸாம் அவர்களும்ää காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தந்தை வலீத் - ம் சகோதரர்களாவார்கள். எனவேää இதன் மூலம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உமருடைய தாயாருக்கு மைத்துனர் முறையும்ää உமர் (ரலி) அவர்களுக்கு தாய் வழி சிறிய தந்தையாருமாவார்.
அபூ ஜஹ்ல் என்ற அம்ர் பின் ஹிஸாம் அல் முகீரா - இவர் உமர்(ரலி) அவர்களுடைய தாயாருக்கு சகோதரராவார். எனவேää இதன் மூலம் அபூ ஜஹ்ல் உமர் (ரலி) அவர்களுக்கு தாய் மாமன் உறவுடையவராகின்றார். உமர் (ரலி) அவர்களுடைய தாயாரின் ஒரு தங்கையை - அதாவது உம்மு ஸல்மா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்திருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்களுக்கு பல சகோதர சகோதரிகள் இருந்தனர். அவர்களில் மிகவும் சிறப்புடையவர்கள் : ஜைத் மற்றும் ஃபாத்திமா ஆகியோர்களாவார்கள். ஜைத் (ரலி) அவர்களும்ää உமர் (ரலி) அவர்களும் ஒரு தகப்பனாருக்குப் பிறந்த வௌவேறு தாய்க்குப் பிறந்த சகோதரர்களாவார்கள். இருப்பினும் அந்த மாறுபாடும்ää வேறுபாடும் அறியாத ஒருதாய் மக்களாகவே இருவரும் வளர்ந்தனர். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஆட்சியின் பொழுது நடந்த யமாமா போரில் ஜைத் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின்பு சகோதரனை இழந்த உமர் (ரலி) அவர்கள் கடுமையான மனவேதனைக்கு ஆளானார்கள். அதன் காரணமாகää ''யமாமா பகுதியிலிருந்து வீசுகின்ற தென்றல் காற்றில் எனது சகோதரனின் சுகந்தத்தை உணர்கின்றேன் என்று அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுடன் பிறந்த சகோதரியாவார். இவர் ஸயீத் பின் ஜைத் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள். இவர் தான் உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணகர்த்தாகவாக இருந்தார்.
உமர் (ரலி) அவர்களின் மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்கள் குறைஷிகளில் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார். இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசிக்கும் முன்பிலிருந்தே இவரது தந்தையான ஜைத் அவர்கள் சிலை வணக்கத்தை வெறுத்தொதுக்கியவர் இன்னும் ஓரிறைக் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர். இவர் சிறந்த புலவரும் கூட. அவரது பாடல் வரிகள் அவரது ஓரிறைக் கொள்கையை எடுத்தோதக் கூடியவையாக இருந்தன :
நான் ஒரு கடவுளை நம்புகின்றேன்
என்னால் ஆயிரம் கடவுள்களை நம்ப முடியாது.
லாத்தையும்ää உஸ்ஸாவையும் மறந்தவன் நான்
ஞானமுள்ள மற்றும் அறிவுள்ள மனிதன் இதனை விட வேறு எதனைச் செய்ய முடியும்.
ஸயீத் (ரலி) அவர்களின் தந்தையான ஜைத் அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பற்றி பேசியதன் காரணமாகää உமர்(ரலி) அவர்களின் தந்தையான கத்தாப் அவர்கள் ஜைத் அவர்களைக் கொலை செய்து விட்டார்கள். இவர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிகள் ஆரம்பிக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அந்த நாட்களில்ää தனது தந்தையைப் போலவே தானும் ஓரிறைக் கொள்கையை உடனே உவந்தெடுத்துக் கொண்டவர் தான் உமர் (ரலி) அவர்களின் மைத்துனரா ஸயீத் (ரலி) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப கால வாழ்வு..
உமர் (ரலி) அவர்களின் பிறந்த தேதி பற்றிய சரியான குறிப்புகள் இல்லை எனினும் சற்றேறக்குறைய கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்திருக்கக் கூடும் என்றும இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உமர் (ரலி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். உமர் பின் கத்தாப் பின் நுஃபைல் பின் அப்துல் உஸ்ஸா பின் ரிஸா பின் ரிபான் பின் குரத் பின் அதீ பின் கத்ப் என்ற பரம்பரைபியில் வந்தவராவார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது பரம்பரையினரும்ää அபுபக்கர் (ரலி) அவர்களின் 8 வது பரம்பரையினரும் உமர் (ரலி) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அந்தளவு இவர்களுக்கிடையே தொப்புள் கொடி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.
உமர் (ரலி) அவர்களின் முன்னோர்களில் ஒருவரான அதீ என்ற கோத்திரத்தவர்கள்ää மக்காவில் குறைஷிகளிடையே எழக் கூடிய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய மத்திஸ்தர்களாகவும் செயல்பட்டு வந்தார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்கும்ää ஹர்ப் பின் உமைய்யா அவர்களுக்கும் இடையேää 'யார் கஃபாவை நிர்வகிப்பது என்ற பிரச்னை எழுந்த பொழுதுää அதனைத் தீர்த்து வைப்பதற்கு உமர் (ரலி) அவர்களுடைய பாட்டனாரான நுஃபைல் தான் மத்தியஸ்தராக இருந்துää அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அப்துல் முத்தலிப் கஃபாவின் நிர்வாகியாக்கப்பட்டார். உமர் (ரலி) அவர்களுடைய தந்தையார் கத்தாப் அவர்கள்ää பனீ அதி குலத்தவர்களின் மிகவும் பிரபல்யமான நபராகத் திகழ்ந்தார். உமர்(ரலி) அவர்களுடைய வீடு ஸஃபா மற்றும் மர்வாவுக்கு இடையே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுதுää அந்த வீடு அகற்றப்பட்டுää மக்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது.
உமர் (ரலி) அவர்களுடைய தாயார் கந்தமா அவர்கள் ஹிஸாம் பின் முகீரா என்பவருடைய மகளுமாவார். இந்த ஹிஸாம் பின் முகீரா பல தடவைகள்ää குறைஷிகளின் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ளார். இந்த தாய்வழிப் பாட்டனாரான ஹிஸாம் அவர்களும்ää காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தந்தை வலீத் - ம் சகோதரர்களாவார்கள். எனவேää இதன் மூலம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உமருடைய தாயாருக்கு மைத்துனர் முறையும்ää உமர் (ரலி) அவர்களுக்கு தாய் வழி சிறிய தந்தையாருமாவார்.
அபூ ஜஹ்ல் என்ற அம்ர் பின் ஹிஸாம் அல் முகீரா - இவர் உமர்(ரலி) அவர்களுடைய தாயாருக்கு சகோதரராவார். எனவேää இதன் மூலம் அபூ ஜஹ்ல் உமர் (ரலி) அவர்களுக்கு தாய் மாமன் உறவுடையவராகின்றார். உமர் (ரலி) அவர்களுடைய தாயாரின் ஒரு தங்கையை - அதாவது உம்மு ஸல்மா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்திருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்களுக்கு பல சகோதர சகோதரிகள் இருந்தனர். அவர்களில் மிகவும் சிறப்புடையவர்கள் : ஜைத் மற்றும் ஃபாத்திமா ஆகியோர்களாவார்கள். ஜைத் (ரலி) அவர்களும்ää உமர் (ரலி) அவர்களும் ஒரு தகப்பனாருக்குப் பிறந்த வௌவேறு தாய்க்குப் பிறந்த சகோதரர்களாவார்கள். இருப்பினும் அந்த மாறுபாடும்ää வேறுபாடும் அறியாத ஒருதாய் மக்களாகவே இருவரும் வளர்ந்தனர். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஆட்சியின் பொழுது நடந்த யமாமா போரில் ஜைத் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின்பு சகோதரனை இழந்த உமர் (ரலி) அவர்கள் கடுமையான மனவேதனைக்கு ஆளானார்கள். அதன் காரணமாகää ''யமாமா பகுதியிலிருந்து வீசுகின்ற தென்றல் காற்றில் எனது சகோதரனின் சுகந்தத்தை உணர்கின்றேன் என்று அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுடன் பிறந்த சகோதரியாவார். இவர் ஸயீத் பின் ஜைத் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள். இவர் தான் உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணகர்த்தாகவாக இருந்தார்.
உமர் (ரலி) அவர்களின் மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்கள் குறைஷிகளில் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார். இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசிக்கும் முன்பிலிருந்தே இவரது தந்தையான ஜைத் அவர்கள் சிலை வணக்கத்தை வெறுத்தொதுக்கியவர் இன்னும் ஓரிறைக் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர். இவர் சிறந்த புலவரும் கூட. அவரது பாடல் வரிகள் அவரது ஓரிறைக் கொள்கையை எடுத்தோதக் கூடியவையாக இருந்தன :
நான் ஒரு கடவுளை நம்புகின்றேன்
என்னால் ஆயிரம் கடவுள்களை நம்ப முடியாது.
லாத்தையும்ää உஸ்ஸாவையும் மறந்தவன் நான்
ஞானமுள்ள மற்றும் அறிவுள்ள மனிதன் இதனை விட வேறு எதனைச் செய்ய முடியும்.
ஸயீத் (ரலி) அவர்களின் தந்தையான ஜைத் அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பற்றி பேசியதன் காரணமாகää உமர்(ரலி) அவர்களின் தந்தையான கத்தாப் அவர்கள் ஜைத் அவர்களைக் கொலை செய்து விட்டார்கள். இவர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிகள் ஆரம்பிக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அந்த நாட்களில்ää தனது தந்தையைப் போலவே தானும் ஓரிறைக் கொள்கையை உடனே உவந்தெடுத்துக் கொண்டவர் தான் உமர் (ரலி) அவர்களின் மைத்துனரா ஸயீத் (ரலி) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறியாமைக் காலத்தில் உமர்
உமர் (ரலி) அவர்களது ஆரம்பகால வாழ்வு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. சாதாரண நடுத்தர குடும்பமாகத் தான் அவரது குடும்பம் இருந்தது. அவர் தனது இளமைப் பருவத்தை ஆடு ஒட்டகம் மேய்ப்பதில் கழித்தார். அந்த ஆரம்ப கால நாட்களில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி நினைவு கூறக் கூடியவராக இருந்தார். மக்காவின் புறவெளிப்பகுதியாகிய தஜ்னான் மக்காவை விட்டும் 10 மைல் தள்ளி இருந்தது. அங்கு கொண்டு போய்த் தான் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வருவார். களைப்புடன் உட்கார நேரும் பொழுதுää அவரது தந்தை சாட்டையால் உமரை அடித்துää உட்கார விடாமல் கால்நடைகளை மேய்க்கச் சொல்வாராம். இந்த தஜ்னான் பகுதியைக் கடக்கும் பொழுதெல்லாம் இந்த சம்பவத்தை நினைவு கூறக் கூடியவராக உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
அன்றைக்கு நான் களைப்படைந்து உட்காரும் பொழுதெல்லாம் என்னை எனது தந்தையார் சாட்டையால் அடித்து எழுப்பி விடுவார். இப்பொழுது காலம் மாறி விட்டது. எனது இறைவனைத் தவிர வேறு யாரும் என்னைக் காப்பாற்றி விட முடியாது என்று கூறுவாராம்.
அன்றைய காலத்தில் கல்வியும்ää எழுத்தறிவும் மிகவும் அரிதானது. ஆனால் உமர்(ரலி) அவர்களோ எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்கள். அன்றைய மக்காவில் எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் 17 நபர்களே இருந்தனர் அவர்களில் ஒருவராக உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். அன்றைய காலப்பிரிவை நோக்கும் பொழுது இதுவே ஒரு மிகப் பெரிய சாதனை தான்.
உமர் (ரலி) அவர்களுடைய தகப்பனார்ää ஒருவருடைய பரம்பரையைத் தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரசித்தி பெற்றவர். தந்தையாருடைய அந்த திறமையின் அடிப்படையில் தந்தையாரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இன்னும் குறைஷியர்களில் ஒவ்வொருவருடைய பரம்பரையையும் மிகவும் அறிந்தவராகத் திகழ்ந்தார். இன்னும் அரேபியாவின் வரலாற்றையும் அறிந்தவராகவும் திகழ்ந்தார்கள்.
கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவராகத் திகழ்ந்தார். வெறுங் காலுடன் பல மைல்கள் நடக்கக் கூடியவராகவும்ää சிறந்த ஓட்ட பந்தய வீரராகவும் மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். உகாஸ் சந்தையில் வருடா வருடம் திருவிழாவில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு வெற்றிப் பரிசுகளையும் பெற்றுள்ளார். இதன் மூலம் மல்யுத்தத்தில் அவர் சிறப்புப் புலமையைப் பெற்றிருந்தார். நல்ல குதிரை ஏற்ற வீரர். எப்படிப்பட்ட குதிரையையும் அடக்கிää அதனை லாவகமாக ஓட்டக் கூடியவர். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகவும் திகழ்ந்தார்.
இன்னும் பிரச்னைகளில் சரியான தீர்வு சொல்லக் கூடிய மத்தியஸ்தராகவும் திகழ்ந்தார். பல சமயங்களில் குறைஷிகளின் சார்பாகää பல கோத்திரத்தவர்களுடன் பேச்சுவார்த்தைக்காகப் பிரதிநிதியாகவும் சென்றுள்ளார்.
அவரைச் சுற்றியிருந்த பாலைப் பெருவெளியைப் போலவும்ää வறண்ட கற்பாறைக் குன்றுகளைப் போலவும் அவர் கடுமையானவராகவும் எதிரிக்கு எதிரியாகவும்ää நண்பனுக்கு நண்பனாகவும் திகழ்ந்த போதிலும்ää எதிரியிடம் கடுமையைக் காட்டக் கூடியவராக இருந்தார்.ஆனால் நல்ல இதயம் அவரிடம் காணப்பட்டது.
அவரது இளமைக் காலத்தில் வியாபார நிமித்தமாக சிரியா ஈராக் எமன் போன்ற பிரதேசங்களுக்குச் சென்ற அனுபவம் கொண்டவர். வெற்றிகரமான வியாபாரியாகவும்ää அதன் காரணமாக அதிக லாபங்களைக் கொண்டு வரக் கூடியவராகவும் திகழ்ந்தார். உமர் (ரலி) அவர்கள் மக்காவை விட்டுக் கிளம்பும் பொழுது குறைஷிகளில் இருந்த மிகப் பெரிய பணக்காரர்களில் அவரும் ஒருவராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உமர் (ரலி) அவர்களுக்கு மூன்று மனைவிமார்கள் இருந்தனர். முதலாவது மனைவியின் பெயர் கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி. இவர் உமர் (ரலி) அவர்களுடைய தாய் வழிச் சொந்தமுடையவர். இவர் அன்றைய தினம் மக்காவில் இருந்த பெண்களிலேயே மிகவும் அழகானவர். இரண்டாவது மனைவியின் பெயர் ஜைனப் பின் மாஸியுன். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத் தோழரான உதுமான் பின் மாஸியுன் (ரலி) அவர்களின் தங்கையாவார். இவருக்கு அப்துல்லா மற்றும் ஹஃப்ஸா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மூன்றாவது மனைவியின் பெயர் மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய். இவர் உம்மு குல்தூம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
உமர் (ரலி) அவர்களும் இஸ்லாமும்...
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை மக்காவில் ஆரம்பித்த பொழுதுää மக்கமா நகரமே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்த எதிர்ப்பில் இணைந்து கொண்ட உமர் அவர்கள்ää தனது கடவுள்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரம் அவமதித்து விட்டதாகக் கருதினார். எனவேää குறைஷிகளிடமிருந்து எதிர்ப்புகள் உருவான பொழுதுää அதில் முன்னணியில் இருந்து செயல்பட ஆரம்பித்தார் உமர் அவர்கள்.
உமரும் இன்னும் சில அரபுக்களும் ஒரு ஜோதிடக் காரனிடம் சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் குறித்து குறி பார்த்துச் சொல்லும்படி கூறினார்கள். அவன் மிக நீண்ட நேரம் வானத்தைப் பார்த்து விட்டுää
மனிதர்களே முஹம்மதை இறைவன் ஆசிர்வதித்துள்ளான்
அவருடைய இதயத்தைப் பரிசுப்படுத்தியும் உள்ளான்
அவர் உங்களுடனேயே இருப்பார்
மனிதர்களே அது மிக விரைவில் நடந்தேறும்..!
என்று கூறினான். இதனைக் கேட்ட உமரும் மற்றவர்களும் அந்த ஜோதிடக் காரனைத் திட்டி விட்டு வந்தனர்.
லுப்னா என்பவர் உமர் (ரலி) அவர்களுடைய பணிப் பெண்ணாவார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறைத்தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள். இந்தச் செய்தி உமருக்குக் கிட்டிய போதுää இஸ்லாத்தைக் கைவிட்டு விட்டு மீண்டும் தாய் மதத்துக்கு வந்து விடும்படி உமர் அவர்கள் கூறினார்கள். ஆனால் லுப்னா (ரலி) அவர்களோää இஸ்லாத்தைக் கைவிடுவதாக இல்லை. எனவேää தினம் தினம் உமர் அவர்கள் லுப்னா (ரலி) அவர்களை களைப்படையும் மட்டும் அடிக்கத் துவங்கினார். ஆனால் இஸ்லாத்தை கைவிட்டு விடாத அந்த அம்மையார்ää இன்னும் உறுதியாக இஸ்லாத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.
உம்மு அப்துல்லா பின்த் கதமா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு உறவு முறை உள்ளவர். இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுää உமர் க்கு மிகவும் சினத்தை உண்டு பண்ணியது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி இவரும் இவரது கணவருமான அம்ர் பின் ரபீஆ (ரலி) அவர்களும் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து கிளம்புவதற்காகத் தயாராக இருந்தனர். அப்பொழுது உம்மு அப்துல்லா (ரலி) அவர்களைக் காணச் சென்ற உமர் அவர்கள்ää
நீங்களுமா அபிசீனியா செல்கின்றீர்கள்? என்று கேட்டார்.
ஆம்! உங்களால் இந்த மக்கா வாழ்க்கை எங்களுக்கு மிகவும் கடினமாகி விட்டது. உயிர் வாழ்வதே இயலாத நிலை ஏற்பட்டு விட்டதால்ää நாங்கள் புறப்படத் தயாராகி விட்டோம் என்று உம்மு அப்துல்லா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
உடனே உமர் அவர்கள்
உம்மு அப்துல்லாவே! இறைவன் உங்களைப் பாதுகாக்கட்டும்..! நல்லபடியாகச் சென்று வாருங்கள்..! என்று பிரியாவிடை கொடுத்தார்.
கடுமையான எதிர்ப்பு வரும் என்று எண்ணிய உம்மு அப்துல்லா (ரலி) அவர்கள் உமர் ன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததையிட்டு என்றாவது ஒருநாள் உங்களிடமும் இந்த மாற்றம் நிகழும் அப்பொழுது நீங்களும் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளத் தான் போகின்றீர்கள் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.
ஒரு நாள் உமர் அவர்கள் கஃபாவின் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவில் இருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனில் இருந்து சில வரிகளை ஓதிக் கொண்டிருந்ததை உமர் அவர்கள் செவிமடுத்தார்கள்.
''இது இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதமாகும்.
இது கவிஞனின் வார்த்தையுமல்ல
இருந்தும் இந்த மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை"".
உமர் அவர்கள் அந்த வசனத்தைச் செவி மடுத்து விட்டுää ஓ..! இது நிச்சயமாக கவிஞனின் வார்த்தை தான் என்று எண்ணிக் கொண்டார்.
பின்பு வசனம் தொடர்ந்தது ஓ..! இது நிச்சயமாக ஜோதிடனின் வார்த்தைதான் என்று எண்ணினார்.
''இது எந்த ஜோதிடனின் வார்த்தையுமல்ல
இது (இறைவனிடமிருந்து) ஜிப்ரீல் (அலை) மூலமாக அருளப்பட்டது""
என்று இறைத்தூதர் (ஸல்) ஓதி முடித்தார்கள்.
இந்த வசனத்தைக் கேட்ட உமர் அவர்கள் சற்று நிதானமாகச் சிந்திக்க ஆரம்பித்துää சற்று நேரம் அங்கேயே நின்று விட்டார்கள். அப்பொழுது முதல்ää முஹம்மது (ஸல்) அவர்களிடம் சத்தியம் இருக்கின்றது என்று எண்ணங் கொள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த எண்ணம் மிக நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த எண்ணத்தைத் துடைத்தெறிந்து விட்டுää மீண்டும் இஸ்லாத்தை எதிர்ப்பதில் மும்முறம் காட்ட ஆரம்பித்தார். இஸ்லாத்திற்கு எதிராக குறைஷிகள் நடத்திய சதி ஆலோசனைக் கூட்டங்களுக்குச் சென்று வர ஆரம்பித்தார்.
அப்பொழுதுää இஸ்லாம் என்ற விஷம் குறைஷிகளுக்குள் மிக வேகமாகப் பரவி வருகின்றதுää இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால்ää அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும்ää அதற்கு ஒரே வழி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்ல வேண்டும் என்று அந்த சதி ஆலோசனையில் முடிவாகியது.
நானே அவரைக் கொலை செய்ய முன் வருகின்றேன்ää என்று முன் வந்த உமர் அவர்கள்ää இதன் மூலம் எனது மூதாதையர்களின் மார்க்கத்திற்கு நேர்ந்த களங்கத்தைத் துடைக்கப் போகின்றேன் என்று சூளுரைத்தார்கள்.
தாஹா
ஒருநாள் (கி.பி.616) கடுமையான கோடையின் உச்சி வெயில். அந்தப் பாலை வெயிலில் உக்கிரத்தை விட உமர் - ன் உள்ளத்தில் ஒரு எரிமலை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது. தனது உடை வாளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய உமர் அவர்கள்ää முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்ற கொலை வெறி அவரது உள்ளத்தில் நெருப்பாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.
அவர் சென்று கொண்டிருந்த தெரு வழியாகää அவரது நண்பர் நுஐம் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் வருகின்றார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமர் அறிந்திருக்கவில்லை.
உமரைச் சந்தித்த நுஐம் (ரலி) அவர்கள்ää உமரின் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த கோபக் கனலைப் பார்த்து விட்டுää
என்ன உமரே..! எங்கே இவ்வளவு வேகம்..!
முஹம்மதைக் கொன்று விட்டுää கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகின்றேன்ää என்றார் உமர் பதிலுக்கு..!
உமரே..! எச்சரிக்கை..! முஹம்மதை நீர் கொலை செய்தால்ää பனூ ஹாஸிம் கோத்திரத்தாரின் கொடிய கோபப் பார்வைக்கு நீர் ஆளாக நேரிடும்ää ஜாக்கிரதை..! உம்முடைய நன்மைக்காகத் தான் நான் சொல்கின்றேன்ää கேட்டுக் கொள்வீராக..! என்றார்ää நுஐம் (ரலி) அவர்கள்.
நீர் சொல்வதைப் பார்த்தால் நீரும் முஸ்லிமாகி விட்டது போலல்லவா தெரிகின்றது என்றார் உமர் அவர்கள்ää
நான் முஸ்லிமாவதுää ஆகாதது...! இருக்கட்டும். என்னைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். நீர் உமது சகோதரியையும்ää உமது மைத்துனரையும் போய் பார்..! அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களாகி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் திருமறைக்குர்ஆனை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம்ää அவர்களைப் போய் கவனியும் என்றார் நுஐம் (ரலி) அவர்கள்.
என்ன..? எனது சகோதரியும்ää மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்களா? என்று உறைந்து போய் நின்ற உமர் அவர்கள்ää முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கிச் சென்ற தனது பயணத்தை மாற்றிää தனது தங்கை ஃபாத்திமாவையும்ää அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரலி) அவர்களின் வீடு நோக்கிச் சென்றார்கள். உமர் தனது தங்கையான ஃபாத்திமாவின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். தனது தங்கையும்ää தங்கையின் கணவரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதைää கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. இந்தச் செய்தியில் உண்மையிருக்காது. இதனை நான் நம்ப மாட்டேன்ää எனினும் இந்தச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவரது மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.
உமர் அவர்கள் தனது தங்கையின் வீட்டு வாசலை அடைந்த பொழுதுää அங்கே அவரது தங்கை ஃபாத்திமா (ரலி) அவர்களும்ää அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரலி) அவர்களும் குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். சகோதரனைப் பார்த்து விட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள்ää தனது கையிலிருந்து குர்ஆன் எழுதப்பட்டிருந்த ஓலையை மறைத்து விட்டுää அண்ணனை வரவேற்பதற்காக எழுந்தார்ää புன்னகையுடன் உமரை வரவேற்றார். ஆனால் உமருடைய முகத்திலோ இருள் மண்டிக் கிடந்தது.
எதனை வாசித்துக் கொண்டிருந்தீர்கள்..! உமர் கேட்டார்.
ஒன்றுமில்லை..! ஃபாத்திமா (ரலி) அவர்களிடமிருந்து பதிலாக வந்தது.
தனது மைத்துனரின் சட்டையின் கழுத்துப் பகுதியை இறுக்கிப்பிடித்த உமர்ää உமது மூதாதையர்களது மார்க்கத்தை வெறுத்து விட்டீர்களோ..! என்றார்.
நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்றார் அஞ்சாத குரலில் ஸயீத் (ரலி) அவர்கள்.
இந்த வார்த்தையைக் கேட்ட உமர் ன் கண்களில் கோபக் கனல் தெறித்தது மைத்துனரை நையப் புடைக்க ஆரம்பித்தார். தனது கணவரை விடுவிப்பதற்காக இடையில் புகுந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள்ää
உமரே..! எனது கணவரை விட்டு விடும்..!
நீர் என்ன கூற வந்தீரோ அதனை என்னிடமே கூறுங்கள் அதனை விட்டு விட்டு எனது கணவர் மீது கை வைப்பது சரியில்லை..! என்று தனது சகோதரரை எச்சரித்தார் ஃபாத்திமா (ரலி) அவர்கள்.
நீங்கள் முஸ்லிம்களாகி விட்டீர்களாமே..! உண்மையா?
ஆம்..! நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம்.
இதற்காக நீர் எங்களைக் கொலை செய்ய வந்திருப்பீரென்றால்ää எங்களைக் கொன்று விடுங்கள். உங்களது மிரட்டலுக்கெல்லாம் பயந்து இஸ்லாத்தை நாங்கள் விட்டு விட மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்.
இப்பொழுது உமர் சற்று நிதானத்திற்கு வந்தவராய்..! சரி..! நீங்கள் வாசித்த அந்த ஓலையை என்னிடம் காண்பிக்கக் கூடாதா? நான் பார்க்க வேண்டும் என்றார்.
நீங்கள் தூய்மையானவராக ஆகும் வரைக்கும்ää இந்த புனிதக்குர்ஆனை நீங்கள் தொட முடியாது. முதலில் சென்று உங்களது கரங்களைக் கழுவிக் கொண்டு வாருங்கள் என்றார் ஃபாத்திமா (ரலி) அவர்கள்.
கையைக் கழுவி விட்டு திரும்பிய உமரிடம்ää அந்தத் திருமறையின் பாகங்கள் கொடுக்கப்பட்டன. அதன் பக்கங்கள் இவ்வாறு ஆரம்பமாகின. உமர் வாசிக்க ஆரம்பித்தார் :
தாஹா.
(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).
பூமியையும்ää உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.
வானங்களிலுள்ளவையும்ää பூமியிலுள்ளவையும்ää இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும்ää மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை.
அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (தாஹா : 1-8)
திரும்பி.. திரும்பி..! ஓதிக் கொண்டெ இருந்தார். இந்த வசனங்கள் என்னை நோக்கி உரையாடுவது போலல்லவா இருக்கின்றது. உமர் என்ற இந்த தனிப்பட்ட மனிதனை நோக்கி அல்லவா இதன் வசனங்கள் உரையாடுகின்றன. என்ன அற்புதம். தாஹா என்ற பெயர் கூட என்னை நோக்கி விளிப்பதாகவே உணர்கின்றேனே..!
சத்தியத்தின் தாக்குதலால் அசத்தியத்தின் கதவுகள் தனது இதயதத்தில் மூடு விழா நடத்திக் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்தார். சற்று நிலைகுலைந்த நிலையில்...! உமரே..! நீர் எவ்வளவு நாட்கள் தான் சத்தியத்தின் வெளிச்சப் பாதையை விட்டு விட்டுää அசத்தியத்தின் அந்தகார இருளில் தவித்துக் கொண்டிருக்கப் போகின்றாய் என்ற கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள ஆரம்பித்த உமர் அவர்களிடம்ää இன்னும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள உமக்கு நேரம் வரவில்லையா? என்று அவரது உள்மனம் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.
புயலாய் வந்த கோபம் தென்றலாகக் கறையைக் கடந்தது.
இனி ஒரு கணமும் நான் தாமதிக்கப் போவதில்லை...!
சத்தியத்தின் சுவடுகளை நான் தரிசிக்க வேண்டும்.
தனது தங்கையின் பக்கமும்ää மைத்துனரின் பக்கமும் திரும்பிய உமர்
இஸ்லாத்தின் பரம விரோதியாக இங்கே நுழைந்தவன்...!
இப்பொழுதுää
இஸ்லாத்தின் உற்ற நண்பனாக உங்கள் முன் நிற்கிறேன்.
எனது கையில் இருக்கும் இந்த உடைவாள்
முஹம்மதின் கழுத்தைத் துண்டிக்கத் தயாரானது.
என்ன மாற்றம்..!
அந்த முஹம்மதின் கரங்களால் நான்
சத்தியத்திற்குச் சான்று பகரச் சென்று கொண்டிருக்கின்றேன்ää என்றார் உமர்.
உணர்ச்சியின் விழிம்பில் உரத்து முழங்கினார்...! அல்லாஹ{ அக்பர்..! என்று ஃபாத்திமா அவர்கள்.
ஆம்..! படைத்தவனின் விதியின் எழுத்துக்கள் இல்லாதிருந்தால்ää வெளிச்சப் புள்ளிகள் கூட பலருக்கு இருட்டுலகமாகத் தானே ஆகி விடும்.
விட்டில் பூச்சியாய் எரிநெருப்பில் விழக் காத்திருந்த சகோதரனுக்குää விடியலைக் காட்டுவதுää இறைவனையன்றி வேறு யாரால் முடியும்..! உரத்து முழங்கினார். இறைவா! நீ மிகப் பெரியவன்..! அல்லாஹ{ அக்பர்.
இதனை அல்லாமா இக்பால் அவர்கள் தனது கவிதைத் தொகுதியான ''உங்களின் ரகசியங்கள்"" என்னும் நூலில் சகோதரிகளுக்கு இவ்வாறு அறிவுரை வழங்குகின்றார்கள் :-
ஓ..! இஸ்லாமியப் பெண்களே..!
அந்தி மாலைப் பொழுதில்
அதிகாலைச் சூரியனைப் பிரசவியுங்கள்..!
உண்மை அடியார்களே..!
திருமறையை ஓதுங்கள்..!
அதன் அர்த்தங்களுக்கு
செயல் வடிவம் கொடுங்கள்.
தெரியுமா உங்களுக்கு..!?
உமரின் விதியை மாற்றியதே - அந்தத்
திருமறையின் வாசிப்புதானே..!
இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுதல்
உமர் அல் ஃபாரூக்
தனது சகோதரியின் வீட்டில் நடந்த சம்பவத்திற்குப் பின்னால் ஏற்பட்ட உள மாற்றத்திற்குப் பின்புää உமர் (ரலி) அவர்கள் நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த ஸஃபா குன்றினை நோக்கிää அதாவது தாருல் அர்க்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
தாருல் அர்க்கத்தின் வாசலில் உமர் (ரலி) அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
கதவைத் தட்டுகின்றார்கள்.
வந்திருப்பது யார்? உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.
நான் தான் உமர் இப்னு அல் கத்தாப்..!
கதவின் இடுக்கு வழியாகப் பார்த்த அந்த பாதுகாவலர்ää உமர் தனது வாளை இடுப்பில் உள்ள உறையில் செறுகி வைத்துää நின்று கொண்டிருப்பதைக் காண்கின்றார். எனவேää அவர் கதவைத் திறப்பதற்கு சற்று அச்சப்பட்டு நின்று கொண்டிருந்தார்.
இப்பொழுது பாதுகாவலரை நோக்கி ஹம்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்ää கதவைத் திறந்து விடுங்கள்ää அவர் சமாதானத்தின் பால் வந்திருந்தால் என்றால் அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும். அதுவல்லாமல்ää ஏதாவது சங்கடங்களை ஏற்படுத்த வந்தால்ää அவரைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதிய பலத்துடனேயே நாம் இருக்கின்றோம் என்று கூறினார்.
இப்பொழுது உமர் அவர்கள் தாருல் அர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டு விட்டார். ஹம்ஸா (ரலி) அவர்கள் உமர் ன் கழுத்துச் சட்டையைப் பிடித்துக் கொண்டவராகää ''உமரே..! எதற்காக இங்கு வந்தீர்? நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமென்ன?""ää இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருக்கும் பொழுதேää அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வாட்களை தயாராக தங்களது கைப்பிடிக்குள் அழுத்திப் பிடித்துக் கொண்டுää எந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்குத் தயாராக இருந்தார்கள்.
அங்கே நடந்து கொண்டிருந்த சம்பாஷனைகள் மற்றும் கலவரச் சூழ்நிலையை பக்கத்து அறையில் இருந்து செவிமடுத்துக் கெண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää ''அவரை விட்டு விடுங்கள்ää என் முன்பு அவரை வர விடுங்கள்""ää என்று கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்த உமரைப் பார்த்துää உமரே..! சத்தியத்தின் வெளிச்சப் புள்ளிகள் விடியலைக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுதுää அறியாமைக்கால இருட்டிலேயே எவ்வளவு காலம் தான் இருந்து கொண்டிருப்பீர்கள்?
நிச்சயமாகää சத்தியத்தை காணும் நேரம் வந்து விட்டது. நான் சத்தியத்திற்குச் சான்று பகரவே இங்கு வந்திருக்கின்றேன்ää என்று உமர் அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களை உமரை நோக்கி நீட்டினார்கள். உமரும் தனது கரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில் வைத்து ''வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை"" என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் ஏற்றுக் கொண்டதை அடுத்துää அங்கு கூடியிருந்த நபித்தோழர்கள் அனைவரும் உற்சாக மிகுதியால்ää அல்லாஹ{ அக்பர்அல்லாஹ் மிகப் பெரியவன் என்று குரல் எழுப்பினார்கள். ஒவ்வொருவராக வந்து உமர் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இப்பொழுது மக்காவில் இஸ்லாத்தைத் தழுவியர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடிää எண்ணிக்கை நாற்பதைத் தொட்டது.
அன்றைய தினம் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட உமர் (ரலி) அவர்களின் இஸ்லாமியப் பிரவேசத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உமரின் இஸ்லாமியப் பிரவேசம் காரணமாக வான மண்டலத்தில் உள்ளோர் அனைவரும் சந்தோஷமடைந்துள்ளார்கள்ää இந்த நற்செய்தியை உமருக்கும் தெரிவித்து விடுங்கள் என்றுää ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின்ää அதனை மறைத்து வைக்க விரும்பாத உமர் (ரலி) அவர்கள்ää தனது மாற்றத்தை மக்காவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். அவர் தனது தாய் வழி மாமாவான அபூ ஜஹ்ல் டம் சென்றுää அவனது வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.
யாரது? உள்ளிருந்து கொண்டு அபூஜஹ்ல் கேட்டான்.
நான் தான் உமர் வந்திருக்கின்றேன்ää என்ற உமரின் சப்தத்தைக் கேட்டவுடன்ää அபூஜஹ்ல் தனது வீட்டுக் கதவைத் திறந்தான்.
வாருங்கள்ää மருமகனாரே..! என்ன விஷயம்?
உங்களுக்குத் தெரியுமா? நான் முஸ்லிமாகி விட்டேன்..! என்று உமர் (ரலி) அவர்கள் கூறவும்ää அபூஜஹ்ல் கூறினான் :
அப்படிக் கூறாதே..! உங்களைப் போன்ற தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் என்றைக்கும் முஸ்லிமாக மாட்டார்கள். உமர் பதில் கூறினார்ää
இல்லை..! நான் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பது சத்தியமானது. இதனைக் கேட்ட அபூஜஹ்ல்ää
நீர் சொல்வது உண்மையாக இருக்குமென்றால்ää உமக்கு நாசம் உண்டாகட்டும் என்று கூறி விட்டுää தனது வீட்டுக் கதவை இழுத்துச் சாத்தி விட்டுää உமரின் முகத்தில் அறைந்தது போல் வீட்டினுள் சென்று விட்டான்.
அபூஜஹலை அடுத்துää மக்காவின் ஏனைய முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்க உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் அனைவரிடமும் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினார்கள். அபூஜஹலைப் போலவேää அவர்கள் அனைவரும் உமர் (ரலி) அவர்களின் மீது நாசம் உண்டாகட்டும் என்று சாபமிட்டதோடுää தங்கள் வீட்டுக் கதவுகளை இழுத்து அடைத்துக் கொண்டார்கள்.
இப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கஃபாவை நோக்கிச் செல்லலானார்கள். அங்கே இஸ்லாத்தினைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பிக் கொண்டுää அதில் சந்தோஷமடைந்து திரியும்ää ஜமீல் பின் மாமர் அல் ஜமாஹி என்பவனைக் கண்டார்கள். அவனிடமும் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகää உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதனைக் கேட்ட ஜமீல் உரத்த குரலெடுத்துää அழத் தொடங்கியதோடல்லாமல்ää அவன் கூறினான் :
குறைஷிகளோ வாருங்கள்..! உமர் செய்ததைப் பார்த்தீர்களாää அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டாராம்ää நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறொரு கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டாராம் என்று குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தான்.
இதனைக் கேட்ட மக்காவின் இளைஞர்கள் கஃபாவை நோக்கி விரையலானார்கள் அங்கே சிறிய கூட்டமும் சேரலாயிற்று.
இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஜமீல் சொல்வதில் உண்மை இல்லை. நான் நம்முடைய முன்னோர்களை மறுத்தொதுக்கவில்லைää ஆனால் சத்தியத்தைக் கண்டு கொண்டேன்ää இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டேன் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட மக்காவின் இளைஞர்கள் பட்டாளம் உமர் (ரலி) அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவரை நோக்கி விரைந்தார்கள்.
அந்த வழியாக எமனி உடையணிந்து சென்று கொண்டிருந்த அல் ஆஸ் பின் வலீ என்பவர்ää இங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர்கள்ää உமர் நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தைப் பழித்து விட்டுää புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டார். அதற்கு தண்டனை வழங்கத் தான் நாங்கள் விரைந்து சென்று கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்கள். இப்பொழுதுää அந்த நபர் அவர்களைப் பார்த்துää
''ஒரு மனிதர் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றுவதற்குச் சுதந்திரம் பெற்றவராவார். அதற்காகவா அவரைத் தண்டிக்கச் செல்கின்றீர்கள்? இப்பொழுது அந்த வழியாக அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். குரைஷிகளின் இளைஞர் பட்டாளத்தைப் பார்த்த அவன் கூறினான்ää
என்னுடைய மருமகனான உமரைப் பாதுகாக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று கூறினான்.
மாமனாரே..! உங்களது பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை. என்னைப் பாதுகாக்க அல்லாஹ்வும்ää அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் (ஸல்) அவர்களுமே போதுமானவர்கள் என்று கூறினார் உமர் (ரலி) அவர்கள்.
இப்பொழுது உமர் (ரலி) அவர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுää தான் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு விட்டதாக பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்து விட்டு வந்து விட்டதாகக் கூறினார்கள். இதுநாள் வரை குறைஷிகளின் வன்கொடுமைகளுக்குப் பயந்துää இஸ்லாத்தினைத் தழுவுபவர்கள் தங்களது நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தார்கள். இன்னும் மிகவும் மறைவாகவே தங்களது தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள். இப்பொழுதுää மக்களின் இந்த நிலையைக் கண்ணுற்ற உமர் (ரலி) அவர்கள்ää தூதர் (ஸல்) அவர்களே :
நாம் சத்தியத்தைத் தானே பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் :
அதிலென்ன சந்தேகம்ää நாம் சத்தியத்தைத் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்.
பின் நாம் ஏன் வெளிப்படையாகத் தொழக் கூடாது? சத்தியத்திற்குச் சான்று பகர்ந்திருப்பதை வெளிப்படையாகக் கூறும் நேரம் இன்னும் நமக்கு வரவில்லையா? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்கலானார்கள்.
இஸ்லாத்தை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற உமர் (ரலி) அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த நாள் முஸ்லிம்கள் அனைவரும் தாருல் அர்க்கத்தை விட்டும் வெளியே வந்துää மக்காவை நோக்கி இரண்டு வரிசைகளில் அணிவகுத்துச் செல்லலனார்கள். ஒரு அணிக்கு உமர் (ரலி) அவர்களும்ää இன்னொரு அணிக்கு ஹம்ஸா (ரலி) அவர்களும் வழிநடத்திச் செல்லலனார்கள். இப்பொழுது முஸ்லிம்கள் கஃபாவில் மிகவும் வெளிப்படையாக நின்று தொழலானார்கள். முஸ்லிம்கள் தொழுவதை சுற்றி நின்று கொண்டு குறைஷிகள் பார்க்கலானார்கள்ää இன்னும் நிச்சயமாக உமர் அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் மூலமாக இந்த முஸ்லிம்கள் நமக்கு எதிராக பழிதீர்த்துக் கொள்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
முஸ்லிம்கள் முதன்முதலாக கஃபாவில் தொழுது முடித்தவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அல் ஃபாரூக் என்ற புனைப் பெயரை வழங்கினார்கள் உமர் (ரலி) அவர்களின் இந்த தூய எண்ணத்தின் காரணமாகவும்ää அவரது முயற்சியின் காரணமாகää இஸ்லாத்தினை வெளிப்படையாக அறிவிக்கும் நாள் வந்தது.
மக்காவிலிருந்து மதீனாவிற்கு..
கி.பி. 622 ல் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் உச்ச கட்டத்திற்குச் சென்று விட்ட பொழுதுää முஸ்லிம்களை மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்ல அனுமதித்து விட வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவேää அதன்படி குழு குழுவாக முஸ்லிம்கள் மக்காவை விட்டும் வெளியேறி மதீனாவை நோக்கிச் செல்லலானார்கள்.
அபூ ஸலமா பின் அஷால் (ரலி) அவர்கள் தான் முதன் முதலில் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றவர்களாவார்கள். அவர்களைத் தொடர்ந்துää பிலால் (ரலி)ää அம்மார் (ரலி)ää யாஸிர் (ரலி) போன்றவர்கள் வெளியேறினார்கள். அதன் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவிற்குப் பயணமானார்கள்.
மேலே நாம் குறிப்பிட்டவர்களும்ää இன்னும் ஏனையோர்களும் மிகவும் ரகசியமாகää குறைஷிகள் அறியாத வண்ணம் மதீனாவிற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்ää உமர் (ரலி) அவர்களோ மிகவும் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து விட்டுää உங்களில் எவருக்காவது துணிவு இருக்கும்பட்சத்தில் என்னைத் தடுத்து நிறுத்திப் பாருங்கள்ää என்று சவால் விட்ட வண்ணம் மக்காவை விட்டு வெளியேறினார்கள். உமர் (ரலி) அவர்களுடன் பலப்பரீட்சை செய்வதற்கு அங்குள்ள குறைஷிகள் எவருக்கும் துணிவு பிறக்கவில்லைää அவரைத் தடுக்கும் துணிவின்றியும்ää அவரது சவாலை ஏற்றுக் கொள்வதற்கும் எவரும் முன்வரவில்லை.
இப்னு அசாகீர் என்ற வரலாற்று ஆய்வாளாரின் கூற்றுப்படிää உமர் (ரலி) அவர்களின் ஹிஜ்ரத்தை இவ்வாறு விவரிக்கின்றார்கள் :
ரகசியமாக ஹிஜ்ரத் செய்தவர்களைத் தான் நான் பார்த்திருக்கின்றேன்ää ஆனால் உமர் (ரலி) அவர்களைத் தவிரää பகிரங்கமாக ஹிஜ்ரத் செய்து சென்றதொரு மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் ஹிஜ்ரத் செய்வது என்ற முடிவெடுத்தவுடன்ää தனது வாளை தனது இடுப்பில் தொங்க விட்டுக் கொண்டுää வில்லையும் தொங்க விட்டுக் கொண்டுää அதில் அம்பையும் பூட்டி நேரே கஃபாவுக்குச் சென்றார். அங்கு உட்கார்ந்திருந்த குறைஷிகளுக்கு முன்பாகவே கஃபாவை ஏழு முறை வலம் வந்தார். இப்றாஹீம் (அலை) அவர்கள் நின்ற இடமான மகாமே இப்றாஹீமில் இரண்டு ரக்அத் தொழுதார்ää பின் அங்கு அமர்ந்திருந்த குறைஷிகளில் ஒவ்வொருவரிடமும் சென்றுää மக்காவின் வெளிப்புறப்பகுதிக்கு வந்து நான் செல்வதை உங்களில் எவராவது தடுத்துப் பார்க்கட்டும்ää அத்தகையவனின் முகம் புழுதி படியட்டுமாக..! அவனது தாய் அவனை இழப்பாளாகää அவனது குழந்தைகள் அநாதையாக்கப்பட்டும்ää அவளது மனைவி விதையாகவும் ஆக்கப்படுவளாக..! என்று கூறினார்கள். ஆனால்ää எவரும் அவரைத் தடுக்கும் சக்தி பெற்றிருக்கவில்லை. முன்வரவுமில்லை.
ஸஹீஹ் புகாரீயின் கூற்றுப்படி 20 முஸ்லிம்கள் உமர் (ரலி) அவர்களைத் தொடர்ந்து மதீனாவிற்கு பயணமானார்கள். உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஸைத் பின் கத்தாப் (ரலி)ää ஸைத் பின் ஜைத் (ரலி)ää ஹஃப்ஸா (ரலி) அவர்களின் கணவரும்ää உமர் (ரலி) அவர்களின் மருமகனுமாக ஹ{னைஸ் பன் ஹ{தைபா (ரலி) ஆகியோர்களும் இந்தக் குழுவில் அடங்குவர். இன்னும் அப்ர் பின் சுரகா (ரலி) அப்துல்லா பின் சுரகா (ரலி) வகீத் பின் அப்துல்லா தமீமீ (ரலி)ää கவ்லா பின் அபீ கவ்லா (ரலி)ää மாலிக் பின் அபீ கல்லா (ரலி) அய்யாஷ் பின் புகைர் (ரலி)ää அகில் பின் புகைர் (ரலி)ää அமீர் பின் புகைர் (ரலி) மற்றும் காலித் பின் புகைர் (ரலி) ஆகியோரும் இந்தக் குழுவினருடன் சென்றவர்களாவார்கள்.
அய்யாஷ் பின் அபூ ராபீஆ அல் மக்சூமீ (ரலி) மற்றும் ஹிஸாம் பின் அல் ஆஸ் பின் வாயில் அல் சஹ்மி (ரலி) ஆகியோரும் உமர் (ரலி) அவர்களுடன் மதீனாவிற்குச் செல்வது என முடிவெடுத்தனர். எனவேää மக்காவிற்கும் பத்து மைல் தொலைவில் இருந்த பனூ கிஃபார் கோத்திரத்தவர்களின் வயல்வெளியில் உள்ள ஆதத் என்ற முள் மரத்தடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பது என முடிவெடுத்தார்கள். இன்னும் இந்தக் குறிப்பிட்ட இடத்திற்குää சூரியன் உதிக்கும் நேரத்திற்குச் சரியாக வந்து விடுவதென்றும்ää நம்மில் யாராவது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு வரத் தவறும்பட்சத்தில்ää அவர் வரவில்லை என்பதாக முடிவு செய்து வந்திருப்பவர் தனது பயணத்தைத் தொடர்வது என்றும் அவர்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.
இந்த அடிப்படையில் உமர் (ரலி) அவர்களும்ää அய்யாஷ் (ரலி) அவர்களும் குறிப்பிட்ட அந்த நேரத்தில்ää குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சரியான நேரத்தில் வந்து விட்டார்கள்ää ஆனால்ää ஹிஸாம் அவர்களால் வர இயலவில்லைää குறைஷிகளால் தடுத்து வைக்கப்பட்டார்கள். எனவேää உமர் (ரலி) அவர்களும் மற்றவர்களும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இறுதியாக மதீனாவின் புறவெளிப்பகுதியாகிய கூஃபா விற்கு வந்து சேர்ந்துää பனூ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்களுடன் தங்கிக் கொண்டார்கள்.
ஒருநாள் அபூஜஹ்ல் ம்ää அல் ஹாரிதா என்பவரும் கூஃபா சென்றுää அபூஜஹ்ல் ன் தம்பியாகிய அய்யாஷ் (ரலி) அவர்களைச் சந்தித்துää நீங்கள் மதீனாவிற்கு வந்து விட்டதன் காரணமாகää தங்களைப் பார்க்காத சோகத்தில் நமது தாயார் அவர்கள் உங்களைக் காணும் வரையிலும்ää தலைமுடியை வாறிக் கொள்வதில்லை என்றும்ää நிழல் தேடி ஒதுங்காமல் வெட்ட வெயிலில் நின்று காய்வது என்றும் சபதம் செய்திருக்கின்றார்கள். எனவேää நீங்கள் திரும்பி மக்கா வருவதன் மூலமே அவர்களது உயிரைக் காக்க முடியும் என்று கூறுகின்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää அய்யாஷ் (ரலி) அவர்களே..! உங்களை ஏமாற்றி மார்க்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்காகவே இந்த தந்திரத்தைக் iகாயாளுகின்றார்கள். எனவேää நீங்கள் ஏமாந்து விட வேண்டாம். உங்களது தாயரின் தலையில் பேன் தொந்தரவு அதிகரித்து விட்டால் தானாக தலையை வாறி முடிந்து கொள்வார்கள்ää இன்னும் மக்காவில் வெயில் நீங்கள் அறிந்தது தானேää வெயில் உக்கிரத்திற்கு வந்து விட்டால் நிழல் தேடி வீட்டுக்குள் சென்று விடுவார்கள் என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஆனால்ää அய்யாஷ் (ரலி) அவர்களோää தனது தாயின் மீதிருந்த பாசத்தின் காரணமாக மக்காவிற்கு திரும்பிச் சென்று விடுவதென்று முடிவு செய்து விட்டுää உமர் (ரலி) அவர்களே..!
நான் மக்காவிற்குச் சென்றுää எனது தாயின் சபதத்தை நிறைவேற்றி வைத்து விட்டு உடனே திரும்பி விடுகின்றேன். இன்னும் மக்காவில் உள்ள சிலரிடம் எனது பணம் கடனாக நின்று கொண்டிருக்கின்றதுää அதனையும் பெற்றுக் கொண்டு வந்து விடுகின்றேன் என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
குறைஷிகளில் உள்ள பணக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது செல்வத்தில் பாதியைத் தருகின்றேன்ää நீங்கள் மக்காவிற்குச் செல்ல வேண்டாம் என்றார்கள்.
ஆனால் அய்யாஷ் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்று திரும்புவது என்று முடிவெடுத்து விட்டார்கள்.
பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் மக்காவிற்கு திரும்பிச் செல்வது என்று முடிவெடுத்து விட்டால்ää இதோ என்னுடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது உயர் ஜாதியும்ää இன்னும் பயணத்திற்கு உகந்ததுமாகும். அதிலிருந்து நீங்கள் இறங்கவும் வேண்டாம்ää எந்த நிலையிலாவது அவர்கள் உங்களை மடக்க நினைத்தால்ää இந்த ஒட்டகத்தைக் கொண்டு நீங்கள் மிகவும் எளிதாகத் தப்பிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். பின் அய்யாஷ் (ரலி) அவர்கள் மக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். சற்றுத் தொலைவு தான் மதீனா சென்றிருப்பார்கள்ää அய்யாஷ் (ரலி) அவர்களை நோக்கிய அபூஜஹ்ல் கூறினான் :
அய்யாஷே..! என்னுடைய ஒட்டகத்தை ஒட்டி வருவது மிகவும் கடினமாக இருக்கின்றது..!
எனவேää என்னை உனது ஒட்டகத்தின் பின்னால் அமர்த்திக் கொள்ள மாட்டாயா? என்று கேட்டான்.
சரி என்று ஒப்புக் கொண்ட அய்யாஷ் (ரலி)ää தனது ஒட்டகத்தை முழந்தாழிட வைத்தார்கள். அபூ ஜஹ்ல் ம் தனது ஒட்டகத்தை முழந்தாழிட வைத்தான். இருவரும் கீழே இறங்கியவுடன் அய்யாஷின் மீது அபூஜஹ்லம்ää ஹிஸாமும் விழுந்து அவரை மடக்கிää கைகால்களைக் கட்டப்பட்ட நிலையிலேயே மக்காவிற்குக் கொண்டு வந்தார்கள். மக்கத்துக் குறைஷிகளைப் பார்த்து அபூஜஹ்ல் கூறினான் :
பாருங்கள்..! எங்களது மடையர்களிடம் நாங்கள் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதை..! அவ்வாறே நீங்கள் உங்களது மடையர்களிடம் நடந்து கொள்ளுங்கள்ää என்றான்.
அய்யாஷ் (ரலி) அவர்களை அபூஜஹ்ல் கடத்திக் கொண்டு சென்று விட்டதை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அய்யாஷையும் இன்னும் ஹிஸாமையும் இங்கு கொண்டு வர உங்களில் யார் முன் வருகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.
அல் வலீத் பின் முகீரா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கோரிக்கையை ஏற்றுää அய்யாஷ் (ரலி) அவர்களையும்ää ஹிஸாம் (ரலி) அவர்களையும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றார்கள். அல் வலீத் (ரலி) அவர்கள்ää மக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். அங்கு இருவரும் கூரையில்லாத ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிகின்றார்கள். இரவில் யாரும் அறியாத வண்ணம் சுவரேறிக் குதித்துää கட்டப்பட்ட நிலையில் கிடந்த இருவரது சங்கிலிகளையும் வாளால் வெட்டிää உடைத்து..ää இருவரையும் மதீனாவிற்கே அழைத்து வந்து விடுகின்றார்.
இதுதான் உலக வரலாற்றிலேயே முதன் முதலாக நடத்தப்பட்ட கமாண்டோ ஆபரேஷன் எனலாம்.
ஆரம்ப கால மதீனா வாழ்வு
உமர் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன்ää மதீனாவின் புறநகர்ப் பகுதியான கூஃபா வில் தங்கினார்கள். உமர் (ரலி) அவர்களுடன் மொத்தம் 20 நபர்கள் வந்திருந்தார்கள்ää அவர்களில் அவரது சகோதரர் ஸைத்ää மருமகன் குனைஸ் பின் ஹ{தைபா (ரலி) மற்றும் வாகித் பின் அப்துல்லா அல் தமீமீ (ரலி)ää அய்யாஷ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். கூபா வில் உமர் (ரலி) அவர்களும்ää அவர்களுடன் வந்திருந்தவர்களும்ää அன்ஸாரித் தோழரான ரிஃபா பின் அப்துல் முன்திர் என்ற பனூ அம்ர் கோத்திரத்தைச் சேர்ந்தவரின் இல்லத்தில் தங்கினார்கள். அவர்கள் தங்கியிருந்த வீடுää அவர்களது சொந்த வீடு போல மிகவும் வசதியாக இருந்தது. இன்னும் கூபா வில் ஏற்கனவே பள்ளிவாசலும் இருந்தபடியால்ää நேரத்திற்கு தொழவும் அவர்களுக்கு வசதியாக இருந்தது.
இப்பொழுது கூபா வில் உள்ள அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் மக்காவிலிருந்து பயணிகள் வரக் கூடிய சாலையை நோக்கிய வண்ணம்ää கூபா வின் புறநகர்ப் பகுதியில் எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். பல நாட்கள் காத்திருந்தும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் வரக் காணவில்லையே என்று மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்தார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள்ää தனது உற்ற தோழரது வருகை தாமதமாவதைக் கண்டுää கவலையுற்றவராக மக்காவிற்குச் சென்று நிலமை என்னவென்பதை அறிந்து வர முடிவு செய்தார்கள்.
இதற்கிடையில்ää ஒருநாள் பகல் வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள் சகிதம் பகல் பொழுதில் மதீனாவின் புறநகர்ப் பகுதியான கூபா வை வந்தடைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண மக்கள் குழுமினார்கள். அந்த மதீனத்து மக்கள் ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லையாதலால்ää வந்திருந்த இருவரில் யார் இறைத்தூதராக இருக்கக் கூடும் என்று மக்கள் அறிய முடியாமல் தவித்தார்கள். மக்களின் தவிப்பை அறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள்ää தனது போர்வையால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு குடை பிடித்தவர்கள் போல நகரில் நுழைய ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து விட்டதை அறிந்த உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண விரைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் உமர் (ரலி) அவர்களை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூபாவில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள்ää கூட்டுத் தொழுகையை அவர்களே முன்னின்று நடத்தினார்கள். பின்பு சில நாட்கள் கழித்துää மதீனாவிற்குள் சென்றார்கள். உமர் (ரலி) அவர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிழல் போலத் தொடர்ந்து சென்றார்கள். மதீனாவில் நுழைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும்ää அவர்களுடன் புலம் பெயர்ந்து வந்த அனைவருக்கும் மதீனா மக்கள் அன்பான வரவேற்பை அளித்தார்கள். இன்னும் மதீனாவில் உள்ள மகளிர்கள் அனைவரும் தங்களது வீட்டின் மாடத்தில் அமர்ந்து கொண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்களை வரவேற்றுப் பாடல்களைப் பாடலானார்கள்.
'விதா மலைக் கணவாய்களின் ஊடேயிருந்து பௌர்ணமி நிலவு முழுமதிää முகிலைக் கிழித்துக் கொண்டு எங்களுக்கு ஒளி தருவதற்காக உதயமாகிவிட்டது! இறைவனிடம் ஒரு கரமேந்தி இறைஞ்சுவோர் உலகில் இருக்கும்வரை (உலகம் உள்ளவரையும்) நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் மீது கடடையாகி விட்டது!"
சின்னஞ்சிறுமிகள் முரசு கொட்டிப் பாடினார்கள்:
'நாங்கள் பனீ நஜ்ஜார் குலத்துச் சிறுமிகள்ää முஹம்மத் (ஸல்) அவர்கள் (எங்களுக்கு கிடைத்திருக்கும்) எத்துணை நல்ல அண்டை வீட்டார்!"
அண்ணலார் (ஸல்) அச்சிறுமிகளை நோக்கிää 'அன்புச் சிறுமிகளே! நீங்கள் என்னை நேசிக்கீர்களா?" என்று வினவினார்கள். அச்சிறுமிகள் 'ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே! உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம் என்றனர். இதனைச் செவியுற்ற அண்ணலார்ää 'நானும் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன்" என்று கூறினார்கள்.
மக்காவை விட மதீனா முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்தது. மக்காவில் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கும்ää அவலத்திற்கும்ää சித்ரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்ää மதீனாவிலோ பூரண வரவேற்பும் முழு மரியாதையும் கிடைத்ததோடுää மண்ணின் மைந்தர்கள் போல மக்கத்து மக்கள் மதீனாவில் வலம் வந்தார்கள். எனவே மதீனா வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த காலங்கள்ää கனவுகளாகிப் போயின. கொடுமைகள் இல்லைää சித்ரவதைகள் இல்லைää கொலைச் சதிகளும் இல்லை. இப்பொழுது வாழ்க்கையை பூரண சுதந்திரத்துடன் வாழ ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள். அதன் காரணமாக முற்றிலும் அரபகத்திற்கும் இன்னும் முழு உலகத்திற்கும் எடுத்துக் காட்டானதொரு சமூகத்தைää ஒரு வாழ்க்கை அமைப்பை உருவாக்கிட ஆரம்பித்தார்கள்.
மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் கட்டப்பட்டு விட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூட இந்தப் பணியில் கலந்து கொண்டுää கட்டடப்பணிகளில் மக்களுடன் மக்களாக இருந்து வேலை செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூபாவிலிருந்து தினமும் மதீனாவிற்குச் சென்று இந்த கட்டடப்பணிகளில் பணியாற்றி விட்டுää மீண்டும் கூபாவிற்குத் திரும்பி வரக் கூடியவராக இருந்தார். இந்தப் பணிகளுக்கிடையில் தங்களது வேலைப்பளுவை மறப்பதற்காக முஸ்லிம்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடுபவர்களாக இருந்தார்கள் :
மறுஉலக வாழ்க்கையை விட இன்னொரு வாழ்க்கை இல்லை
இறைவா! (மக்கத்து) முஹாஜிர்கள் மீதும்ää (மதீனத்து)அன்ஸாரிகள் மீதும் கருணை பொழிவாயாக!
ஏற்கனவேää நாம் சொன்னது போல முன்மாதிரி மிக்க சமுகத்தை உருவாக்க விளைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த முஹாஜிர்களுக்கு வாழ்வாதரத்தையும்ää இன்னும் மறுவாழ்வையும் அளிக்க விரும்பிää மதீனாவின் அன்ஸாரி ஒருவருடன் மக்கத்து முஹாஜிர் ஒருவரை சகோதரராக இணைத்து விட்டுää உலக மனித வரலாற்றில் சகோதரத்துவம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டானதொரு வாழ்க்கை முறையை வகுத்தளித்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இவர்களின் சகோதரத்துவம் உடன்பிறந்த சகோதரனின் மீது கொண்டு பாசத்தையும் வென்று நின்றது. இதனடிப்படையில் உமர் (ரலி) அவர்கள்ää இத்பான் பின் மாலிக் என்ற பனூ அல் கஜ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அன்ஸாரித் தோழருடன் இணைத்து விடப்பட்டார்கள்.
மக்காவின் தட்ப வெப்பம் வறட்சியானதுää மதீனாவிலோ அதிகப்படியான ஈரப்பதம் காணப்பட்டது. எனவேää இந்த தட்ப வெப்ப மாற்றம்ää மதீனாவிற்கு வந்து குடியேறிய மக்கா வாசிகளைப் பாதிக்க ஆரம்பித்ததுää உடல்நலக் குறைவை ஏற்படுத்தியது. மக்காவிலிருந்து வந்த பலர் மதீனாவில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதுää அல்லாஹ்வினுடைய கருணையினால் ஒருசிலர் மட்டும்ää எந்தவித அசௌகரியங்களுக்கும் ஆட்படாமல்ää மிகவும் உடல்நலத்துடன் இருந்தார்கள். அத்தகையவர்களுள் உமர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் பூரண உடல் நலத்தை அளித்திருந்தான்.
மக்காவில் உமர் (ரலி) அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்தார்கள். ஹிஜ்ரத்திற்காக அவர் பயணப்பட்டுää மதீனாவிற்கு வரும் பொழுதே தன்னுடன் தன்னுடைய பொருளாதாரத்தையும் கொண்டு வந்திருந்தார். எனவேää அந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு மதினாவில் புதிதாக வியாபாரத்தைத் தொடங்க ஆரம்பித்தார்கள்.
கூபாவில் தனது தலைமையகத்தை வைத்துக் கொண்டுää மதீனாவில் வியாபாரத்தை நடத்தி வந்த உமர் (ரலி) அவர்களின் வியாபாரம்ää மதீனாவில் மிகவும் ஆமோகமாக நடந்து வந்தது. தனது வியாபாரத்தில் செலவிட்ட நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து தனது நேரத்தைச் செலவழிப்பவர்களாக இருந்தார்கள். முக்கியமான விஷயங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களிடமும்ää உமர் (ரலி) அவர்களிடமும் ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இத்தகைய கலந்தாலோசனைகளின் பொழுதுää அபுபக்கர் (ரலி) அவர்களது மற்றும் உமர் (ரலி) அவர்களது கருத்துக்களில் வேறுபாடுகள் காணப்பட்டால்ää இரண்டையும் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டுää தனது இறுதி முடிவை எடுக்கக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். இரண்டு பேர்களுடைய கருத்துக்களும் ஒத்து இருந்தால்ää அதனை மாற்றுக் கருத்தில்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.
இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தனதுää ''கலீபாக்களின் வரலாறு"" என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் :
அப்துர் ரஹ்மான் பின் கனம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்ää ''அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் ஆலோசனையில் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால்ää அவர்களது (கருத்தை) நான் மறுக்க மாட்டேன்.
பத்ருப் போர்
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போர்ää மதீனாவிலிருந்து அறுபது மைல் தொலைவில் உள்ள பத்ரு என்னும் இடத்தில் நடந்தது. இது சிரியாவிற்கான வியாபாரப் பாதையாகவும் இருந்தது. இந்தப் போருக்காகத் தயாராகும்படி இறைவன் முஸ்லிம்களுக்கு தனது இறைவசனம் மூலம் அறிவுறுத்தினான்.
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும்ää அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (2:190)
கி.பி.624 ஆம் ஆண்டுää ஒரு குளிர்நாளின் பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää அவர்களது தோழர்களும் பத்ர் என்னும் சமவெளிப்பகுதியை அடைந்தனர். எதிரிகள் அதே பகுதியின் இன்னொரு மணற்பாங்கான சமவெளிப் பகுதியில் தங்களது பாசறையை இறக்கியிருப்பதாகää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒற்றர்கள் வந்து தகவல் தெரிவித்தனர்.
எனவேää இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää அவரது தோழர்களும் அந்தப் பகுதியில் இருந்த ஒரே நீர்ப் பிடிப்புப் பகுதியொன்றைக் கைப்பற்றிää அதற்குப் பக்கத்தில் தங்களது பாசறையை அமைக்க விரும்பினார்கள். இறைவனுடைய உதவியை அதற்கு நாடினார்கள்.
இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள் :
''இறைவா! நீ எங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருக்கின்றாய் என்பதை மறந்து விடாதேää இந்தச் சின்னஞ்சிறு கூட்டமும் அழிந்து போய் விட்டால்ää உன்னை வணங்குவதற்கென இந்தப் பூமியில் யாரும் இருக்க மாட்டார்கள்"".
முஸ்லிம்களின் தரப்பில் 313 ஆண்கள் இருந்தனர். இவர்களிடம் இரண்டு குதிரைகளும்ää 70 ஒட்டகங்களும் இருந்தன. அதேநேரத்தில் குறைஷிகளின் தரப்பில்ää ஆயிரம் நபர்களும்ää 200 குதிரைகளைக் கொண்டதொரு குதிரைப் படையும்ää 100 ஒட்டகங்களும் இருந்தன. மக்கத்துக் குறைஷிகளுடன் ஒப்பிடும் பொழுதுää முஸ்லிம்களின் நிலைää மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்ததுää அவர்கள் பூரண ஆயுதத் தரிப்பில் இருந்தனர்.
அதிகாலை நேரம் போர் ஆரம்பமாகியது. குறைஷிகளின் ஒரு குழு இப்பொழுது முன்வந்து முஸ்லிம்களின் மீது சொல்லொண்ணா வசைகளைப் பாடிக் கொண்டிருந்ததுää முஸ்லிம்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இதற்கு முஸ்லிம்கள்ää 'அல்லாஹ{ அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்"ää என்றே முழக்கமிட்;டார்கள்.
இப்பொழுது குறைஷிகளின் பெருந்தலைகளான உத்பாää ஷைபாää வலீத் ஆகிய மூவரும் முன் வந்துää அன்றைய கால வழக்கப்படி போர் ஆரம்பிக்கு முன் நடக்கும் தனிநபர் யுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். முஸ்லிம்கள் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டனர். இவர்களின் இந்த சவாலை முஸ்லிம்களின் தரப்பில் இருந்த அலீ (ரலி)ää உபைதா (ரலி)ää மற்றும் ஹம்ஸா (ரலி) ஆகியோர் ஏற்றுக் கொண்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வலீதையும்ää உபைதா (ரலி) அவர்கள் ஷைபாவையும்ää ஹம்ஸா (ரலி) அவர்கள் உத்பாவையும் கொன்றார்கள். தங்களது மிகப் பெருந் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதன் காரணமாகää குறைஷிகள் உறைந்து போய் நின்றார்கள்.
குறைஷிகளின் கோபம் தலைக்கேற போர் ஆரம்பமாகியது. முஸ்லிம்கள் நின்று கொண்டிருக்கின்ற பகுதியானது உறுதியான நிலப்பரப்பாகவும்ää மலைச்சரிவாரமாகவும் இருந்தது. குறைஷிகள் மணற்பாங்கான பகுதியில் நின்று கொண்டிருந்தனர். போர் துவங்குவதற்கு முதல் நாள் மழை பெய்திருந்தது. அதன் காரணமாகää குறைஷிகள் நின்று கொண்டிருந்த நிலப்பரப்பானதுää சற்று நெகிழ்ந்து போயிருந்தது. மண்ணின் நெகிழ்ந்து போன தன்மையானது அவர்களின் போராட்ட வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும் இருந்தது. ஆனால் முஸ்லிம்களின் பக்கமே மழையின் காரணமாக மண் இறுகிப் போய்ää உறுதியாக இருந்தது. இன்னும் தண்ணீர் தரக் கூடிய அத்தனை வழிகளையும் முஸ்லிம் துண்டித்து விட்டுää தங்களது பகுதியில் மட்டும் தண்ணீர் தரக் கூடிய கிணறு ஒன்றை வசப்படுத்திக் கொண்டார்கள். இதன் காரணமாகவும் குறைஷிகள் மிகுந்த இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். காலை வெயிலானது குறைஷிகளின் முகத்தில் அறைந்தது. ஆனால் முஸ்லிம்களின் தரப்புக்கு சூரியனானது முதுகுப் புறமாக இருந்தது. வெளிச்சம் குறைஷிகளின் முகத்தில் பட்டதும்ää மிகுந்த சஞ்சலத்துக்கும்ää பத்தட்டத்திற்கும் ஆளாhனார்கள். அவர்களால் முஸ்லிம்களைக் குறிபார்த்துத் தாக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். குறைஷிகள் பக்கம் எங்கும் குழப்பமே நீடித்தது.
போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்த பொழுதுää தனது திருக்கரங்களால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறிது மண்ணை அள்ளிää ''குழப்பம் அவர்களைச் சூழட்டும்"" என்று கூறி அந்த மண்ணை குறைஷிகள் பக்கம் வீசி எறிந்தார்கள்.
மண்ணை அள்ளி வீசியவுடன்ää கடுமையானதொரு மணற்காற்று வீச ஆரம்பித்தது. குறைஷிகளின் முகத்தில் மண்ணை வாறி இரைக்க ஆரம்பித்தது. அந்த கட்டத்தில் விரைவான தாக்குதலைத் தொடுக்குமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வீசிய புயற்காற்றையும் தோற்கடிக்கும் அளவுக்கு இப்பொழுது முஸ்லிம்கள்ää குறைஷிகளின் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தார்கள். வெகு சீக்கிரத்திலேயே குறைஷிகள் தங்களது தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. அங்கு அவர்கள் வேரறுக்கப்பட்டார்கள். முஸ்லிம்களுக்கு இறைவன் வெற்றியை அருளினான். குறைஷிகளில் 70 பேர் கொலை செய்யப்பட்டார்கள்ää முஸ்லிம்களின் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். இன்னும் 70 குறைஷிகள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். பலர் உயிர் பிழைத்தால் போதுமென்று மக்காவின் திசையை நோக்கித் தப்பித்து ஓடினார்கள். கனீமத்துப் பொருட்களாக 11 ஒட்டகங்களும்ää 14 குதிரைகளும் கிடைத்தது. இன்னும் ஏராளமான ஆயுதங்களும் கிடைத்தன.
இந்தப் பத்ருப் போர் முழுவதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வலது பக்கம் நின்று உமர் (ரலி) அவர்கள் போரிட்டார்கள். இந்தப் பத்ருப் போர் குறைஷிகளின் மிகப் பிரபலமான குலங்கள் அத்தனையும் கலந்து கொண்டிருந்த நிலையில்ää உமர் (ரலி) அவர்களின் குலமான பனூ அதீ மட்டும் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவேää இந்தப் போரில் பனூ அதீ குலத்தைச் சேர்ந்த எவரும் முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரிய வரவில்லை. இதுவே உமர் (ரலி) அவர்களினால் முஸ்லிம்களுக்கு விளைந்த மிகப் பெரும் சாதகமாக இருந்த அதேவேளையில்ää பனூ அதீ குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தைத் தழுவி இருந்த காரணத்தினால்ää உமர் (ரலி) அவர்களின் தலைமையில் அவர்கள் அனைவரும் பத்ருக் களத்திற்கு வந்ததோடல்லாதுää முஸ்லிம்களின் சார்பில் நின்று குறைஷிகளை எதிர்த்துப் போர் புரியவும் வந்திருந்தார்கள்.
குறைஷிகளின் சார்பாக முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட வந்தவர்களில்ää உமர் (ரலி) அவர்களின் தாய் மாமனாரான அதி பின் ஹிஷாம் பின் முகீரா என்பவரும் ஆவார். இவர் உமர் (ரலி) அவர்களின் தாயாரினுடைய உடன் பிறந்த சகோதரரும் ஆவார். இருப்பினும்ää உறவுக்கும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கும் மத்தியில் தெளிவானதொரு பிரி கோடு ஒன்றை வரைந்து வைத்திருந்ததோடுää இணை வைப்பாளர்கள் என்றுமே முஸ்லிம்களுக்கு உற்றவர்களாக ஆக முடியாது என்ற கொள்கையை உவந்தெடுத்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள்ää தனது தாய் மாமனார் என்றும் பாராதுää பத்ருக் களத்தில் அவரை நேருக்கு நேர் சந்தித்தார். அதி பின் ஹிஷாம் பின் முகீரா - வை இந்த உலகத்தை விட்டே அனுப்பியும் வைத்தார்.
மேலும்ää இந்த பத்ருப் போரில் முதல் முதல் ஷஹீதான பெருமைக்குரியவர் யாரென்றால்ää உமர் (ரலி) அவர்களின் அடிமையான மஹ்ஜா (ரலி) ஆவார்கள். இவர் உமர் (ரலி) அவர்களின் அடிமை என்பதால் அதுவும் உமர் (ரலி) அவர்களுக்குப் பெருமையான அமைந்தது.
போர் முடிவுற்றுää பிடிபட்ட கைதிகளுடன் முஸ்லிம்கள் வெற்றி வீரர்களாக மதீனாவிற்குள் நுழைந்தார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்களில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையார் அப்பாஸ் அவர்களும்ää அலீ (ரலி) அவர்களின் சகோதரர் அகில் அவர்களும்ää அபுல் ஆஸ்ää வலீத் பின் அல் வலீத் ஆகிய மிகப் பெரும் பிரபலமானவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரும் குறைஷித் தலைவர்களான இவர்கள் இப்பொழுது பணிந்த நிலையில் கைதிகளாக மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இந்தக் காட்சி மக்களின் மனதை நெருடுவதாகவும் இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர்களுள் ஒருவரானää அன்னை சௌதா (ரலி) அவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டுää
''கைதியாகப் பிடிபடுவதை விடää போர்க் களத்தில் உயிர் நீத்திருக்கலாமே?"" என்று கூறினார்கள்.
இப்பொழுது பிடிபட்ட கைதிகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்துää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நல்லதுää இல்லையெனில் அவர்களைக் கொன்று விடுவதே நல்லது என்ற கருத்தைக் கூறினார்கள். இன்னும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது குலத்தைச் சேர்ந்த கைதியை கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார்கள். அதாவதுää ஹம்ஸா (ரலி) அவர்கள் அப்பாஸ் அவர்களைக் கொல்வதுää அலீ (ரலி) அவர்கள் தனது சகோதரரான அகீல் அவர்களைக் கொல்வது என்ற கருத்தைத் தெரிவித்தார்கள்.
ஆனால்ää அபுபக்கர் (ரலி) அவர்கள் சற்று இளகியää மற்றும் கனிவானதொரு முடிவைக் கூறினார்கள். அவர்களிடம் இருந்து பணயத் தொகையாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டுää விடுதலை செய்வது விடுவது என்ற கருத்தைக் கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறைவன் நம் மீது கொண்ட கருணையின் காரணமாக நமக்கு இந்த வெற்றியை அருளினான். எனவேää பிடிபட்ட கைதிகளிடம் நாமும் இரக்கத்துடன் நடந்து கொள்வோம் என்று கூறிää பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டுää கைதிகளை விடுவித்து விடுவது என்ற முடிவை எடுத்தார்கள்.
பத்ருப் போர்க் கைதிகள்
கைதிகளின் நிலையைத் தீர்மானிக்கும் விஷயத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் நெகிழ்ந்து கொடுத்துப் போகும் முடிவு ஒன்றைக் கூறிய அதேவேளையில்ää உமர் (ரலி) அவர்களோ மிகவும் கடுமையானதொரு முடிவைக் கூறினார்கள். இதன் மூலம் இருவரது கருத்துக் கூறலிலும் மிகப் பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருந்தது.
பல்வேறு கருத்துக்களைச் செவிமடுத்து விட்டுää இறுதியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது முடிவுக்கு வந்தார்கள்.
இறைவனைப் புகழ்ந்தவர்களாகää இறைவன் சிலரது இதயத்தை பாலை விட மிருதுவாக ஆக்கி வைத்துள்ளான்ää இன்னும் சிலரது இதயத்தை பாறையை விடக் கடினமானதாகவும் ஆக்கி வைத்திருக்கின்றான் என்று கூறி விட்டுää
அபுபக்கர்(ரலி) அவர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää
அபுபக்கரே..!
நீங்கள்ää இப்றாஹீம் (அலை) அவர்களைப் போன்றவர்கள். ''(உனது வழியில் செல்கின்ற) என்னைப் பின்பற்றுகின்றவர் நம்மில் ஒருவராக இருக்கின்றார்ää இன்னும் யார் (நமக்குக்) கட்டுப்பட வில்லையோää இறைவாää அவர்களை மன்னித்தருள நீயே போதுமானவன் என்று இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைவனைப் பார்த்துக் கூறினார்கள்.
இன்னும் நீங்கள் ஈஸா (அலை) அவர்களைப் போன்றவர்கள்ää அவர் கூறினார்ää இறைவா..! நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகளேää அவர்களை நீ மன்னித்தருளினால்ää நீயே சக்தி வாய்ந்தவனும்ää மிகைத்தவனும்ää நீதவானுமாக இருக்கின்றாய் என்று கூறினார்.
பின்புää உமர் (ரலி) அவர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää
உமரே..!
நீங்கள் நூஹ் (அலை) அவர்களைப் போன்றவர்கள்ää அவர் கூறினார்ää இறைவா..!
இந்தப் பூமிப் பந்தின் மீது ஒரு நிராகரிப்பாளரையும் உயிருடன்; விட்டு வைக்காதே.
இன்னும் உமரே..!
நீங்கள் முஸா (அலை) அவர்களைப் போன்றவர்ää அவர் கூறினார் :
இறைவா..! அவர்களது சொத்துக்களை அழித்து விடுவாயாகää இன்னும் அவர்களது இதயங்களை கடினமாக்கி வைப்பாயாகää அதன் மூலம் அவர்கள் தங்களுக்குரிய தண்டனையைப் பார்க்கும் வரைக்கும் மனம் மாறாதிருப்பதற்காகää என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொண்டார்கள்.
மறுநாள் காலையில்ää உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும்ää அபுபக்கர் (ரலி) அவர்களையும் சந்தித்த வேளையில் இருவரும் அழுது கொண்டிருக்கக் கண்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து
இறைத்தூதர் (ஸல்) அவர்களே உங்கள் இருவரையும் அழ வைத்தது எது. என்னிடம் கூறுங்கள். எந்தத் துக்கம் உங்களை அழ வைத்ததோää அதனை என்னிடமும் கூறுங்கள்ää நானும் அழ வேண்டும்ää உங்களது துக்கத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உமரே..!
இங்கே உம்மைக் கவலை கொள்ளச் செய்யக் கூடியது எதுவும் நடைபெறவில்லை. மாறாகää கைதிகளின் விஷயத்தில் உமது கருத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதன் காரணமாகää உம்மை கௌரவித்திருக்கின்றான் என்ற சந்தோஷத்தைச் செய்தியைக் கேள்விப்பட்டு உவகை கொள்ளுங்கள் உமரே என்று கூறினார்கள் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். உமது கருத்துக்கு எதிராகக் கருத்துக் கூறியவர்களின் கருத்துக்கு இறைவன் எச்சரிக்கையும் செய்திருக்கின்றான் என்று கூறி முடித்தார்கள்.
என்ன..! என் பொறுட்டு இறைவன் தனது திருவசனங்களை இறக்கியருளியிருக்கின்றானா? அந்த வசனங்களை அச்சொட்டாக நான் உங்களது வதனங்களில் இருந்து செவி மடுக்க வேண்டும் யா.. ரசூலுல்லாஹ்..! எனக்கு அதனை ஓதிக் காட்டுங்களேன் என்று உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டி நின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள் :
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை. நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும்ää ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (8:67)
உமைர் பின் வஹ்ப்
மக்கத்துக் குறைஷிகளில் மிகப் பிரபலமான குலத்தலைவர்களுள் ஒருவராக உமைர் பின் வஹ்ப் அவர்கள் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஆரம்ப கால நாட்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சொல்லொண்ணாக கொடுமைகளைத் தந்து கொண்டிருந்தவர் தான் இவர்.
பத்ருப் போர்க்களத்தில்ää இவரது குலத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டார்கள்ää இன்னும் அவரது மகன்களில் ஒருவரான வஹ்ப் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டார்.
பத்ருப் போர் முடிந்து விட்ட சில நாட்கள் கழித்துää கஃபாவில் உட்கார்ந்து கொண்டிருந்த அபூ சுஃப்யான் மற்றும் உமைர் ஆகிய இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுதுää இந்தப் போரில் குறைஷிகள் தோற்று விட்டது குறித்து தங்களுக்குள் இருவரும் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுää இறைவன் மீது சத்தியமாகää நம்மவர்கள் அனைவரையும் நாம் இழந்து விட்டதன் பின் இந்த வாழ்க்கையில் என்ன தான் இருக்கின்றது..! என்று அபுசுஃப்யான் சலிப்புடன் கூறிக் கொண்டார்.
உமைர் கூறினார்ää நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு மட்டும் கடன் பளு இல்லாமல் இருந்திருந்தால்ää இன்னும் எனது குடும்பத்திற்குரிய தேவையை நிறைவேற்றும் நிலையும் இல்லாதிருந்தால்ää நான் மதீனாவிற்குச் சென்று அந்த முஹம்மதின் கழுத்தைக் கொய்து வந்து விடுவேன் என்று உறுமினார்.
அபூசுஃப்யான் கூறினார்ää உமக்கு இவ்வளவு உயர்ந்த நோக்கமொன்று இருக்குமென்றால்ää அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். உமது கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை நான் ஏற்கின்றேன். உமது குடும்பத்திற்குத் தேவையான வாழ்க்கை வசதிகளையும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்ää நான் அவர்களை என் குடும்பத்தவர்கள் போலக் காப்பாற்றுவேன் என்று கூறினார்.
இருவருக்குமிடையே இந்த ரகசிய ஒப்பந்தம் நிறைவேறிய பின்னர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் உமைர் மதீனாவை நோக்கிப் பயணப்படலானார். நன்கு தீட்டப்பட்டää விஷம் தோய்க்கப்பட்ட வாளொன்றையும் தன்னுடன் எடுத்துச் செல்லலானார்.
ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் பள்ளியில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் தனது தோழர்களுடன் அந்த பத்ருப் போர் குறித்தும்ää அதில் இறைவன் புரிந்த பேரருள் குறித்தும் பேசிக் கொண்டிருந்த பொழுதுää மதீனாவின் பள்ளிவாசலின் கதவருகேää உமைர் ன் நிழல் அசைவை உமர் (ரலி) அவர்கள் கண்டு விட்டார்கள். உமைர் தனது இடையில் வாளொன்றைச் சொறுகி வைத்திருப்பதையும் அவர்ää கவனிக்கத் தவறவில்லை.
உமைரைப் பார்த்த மாத்திரத்திலேயேää 'அல்லாஹ்வின் எதிரியாகிய இந்த உமைர் பின் வஹ்ப் என்ற நாய் இங்கெதற்காக வந்திருக்கின்றதுää இறைவன் மீது சத்தியமாக...! இவன் ஏதாவது கெடுதல் புரியும் எண்ணத்துடன் தான் வந்திருக்க வேண்டும்" என்று எண்ணிக் கொண்ட உமர் (ரலி) அவர்கள்ää
நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களே..!
அல்லாஹ்வின் எதிரியாகிய உமைர் பின் வஹ்ப்ää வாளுடன் இங்கு வந்திருக்கின்றான் என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..! உமரே..! அவரை உள்ளே வர விடும் என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள்ää நேரே உமைரின் சென்றுää அவரது கழுத்தில் இறுக்கமான துணி ஒன்றைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொண்டவர்களாகää தனது தோழர்களை அழைத்துää தோழர்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண் போல அமர்ந்து கொள்ளுங்கள்ää இவனை நாம் நம்ப முடியாதுää இவன் மிகப் பெரும் விஷமியாவான் என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் உமைரை அழைத்து வரும் நிலையைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää
உமரே..! முதலில் அவரை விடுங்கள்ää அவர் முன்னே வரட்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்த உமைர்ää அந்தக் கால வழக்கப்படி காலை வணக்கம் கூறினார்.
அல்லாஹ்ää இதனை விடச் சிறந்த வாழ்த்தும் முறையை எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றான்ääää உமைரே..! அது தான் ''ஸலாம்""ää சொர்க்க வாசிகளினுடைய வாழ்த்துப் பொக்கிஷம் என்றார்கள்.
உமைர் கூறினார்..!
நான் எனது மகனை விடுதலை செய்து அழைத்துப் போகவே இங்கு வந்திருக்கின்றேன்..!
பின் உமது கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த வாள் எதற்கு..ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரைப் பார்த்துக் கேட்டார்கள்.
இறைவன் இந்த வாளினை நாசமாக்கட்டும்..! இந்த வாளினைக் கொண்டு எங்களுக்கு என்ன தான் நல்லது நடந்திருக்கின்றது? என்று உமைர் எரிச்சலுடன் கூறினார்.
நீர் இங்கு வந்ததன் காரணமென்ன? மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேள்வி ஒன்றை உமைரை நோக்கி வீசினார்கள்.
எனது மகனுக்குரிய பணயத் தொகையைச் செலுத்தி விட்டுää அவனை மீட்டுச் செல்வதற்காகவே வந்தேன் என்று கூறினார்.
உமைரே..!
நீரும்ää அபூசுஃயானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அர்த்தமென்ன? அவர் உனது கடன்களையும்ää உமது குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லையா? உமது வாளைத் தீட்டிää அதன் மீது விஷத்தையும் தோய்த்து எடுத்து வரவில்லையா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரைப் பார்த்து கேள்விக் கணைகளை வீசிக் கொண்டிருந்தார்கள்ää தான் நன்றாகத் தீட்டிää விஷத்தைத் தோய்த்து எடுத்து வந்த வாளின் கூர்மையை விடää அதன் விஷத்தை விட அதிகமான கூர்மையையும்ää கடுமையையும் கொண்டிருந்தது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகள்ää அதனைத் தாங்கவியலாத உமைர்ää
போதும்..ää போதும்.. நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் இருவருக்குள் மட்டும் பேசிக் கொண்ட ரகசியங்கள்ää இதனை இறைவன் மட்டுமே அறிந்தவன். நிச்சயமாக..! நீங்கள் இறைவனது தூதர் தான் என்று முழங்கிய உமைர் அவர்கள்ää
இறைத்தூதர் (ஸல்) அவர்ளின் முன்பதாகவேää திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவரது மகனும் விடுதலை செய்யப்பட்டார். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின் மக்காவிற்குத் திரும்பிய உமைர் (ரலி) அவர்கள்ää தான் ஏற்றுக் கொண்ட சத்தியத்தின் பக்கம் வருமாறு மக்கத்துக் குறைஷிகளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார்கள்.
தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியமர்ந்து விட்ட பின்ää சில அடிப்படையான விஷயங்களை அறிமுகம் செய்தார்கள். தொழுகையை நிலைநாட்டுவதுää ஸகாத் வழங்குவதுää நோன்பு நோற்பது மற்றும் தண்டனைச் சட்டங்களை நிறைவேற்றுதல்ää இதில் ஆகுமானது - ஹலால் மற்றும் விலக்கப்பட்டது ஹராம் போன்றவைகள் பற்றிய சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் தொழுகைக்கான அழைப்பு எதுவும் விடுக்கப்படாமலேயேää அந்தந்த நேரங்களில் மக்கள் பள்ளிவாசலுக்கு வந்து கூட ஆரம்பித்து விடுவார்கள். இஸ்லாம் வளர்ச்சியடைய வளர்ச்சியடையää மக்கள் தொகையும் அதிகமாகி வந்து கொண்டிருந்த பொழுதுää தொழுகைக்கு மக்களை அழைப்பதற்குண்டான புதிய வித முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிந்திக்கலானார்கள்.
யூதர்கள் செய்வது போல மத்தளம் போன்ற பெரிய கருவியைக் கொண்டு ஒலி எழுப்பி மக்களை தொழுகைக்கு அழைக்கலாமே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யோசித்தார்கள். மேலும்ää இது யூதர்களைப் பின்பற்றுவது போல் உள்ளதால்ää இது ஒரு சிறந்த வழி முறை கிடையாது என்று நினைத்து அவர்கள்ää அந்த முடிவைக் கை விட்டார்கள். பின் கைகளைத் தட்டி ஓசை எழுப்பிää அதன் மூலம் மக்களைத் தொழுகைக்கு அழைக்கலாமே என்றொரு யோசைனையும் பிறந்தது.
ஒருநாள் இரவு நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள்ää தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது பற்றியதொரு கனவைக் காண்கின்றார்கள்ää அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறுகின்றார்கள் :
''எனது கனவில் இறையச்சமுள்ள மனிதர் ஒருவர் பச்சை ஆடைகளை அணிந்த நிலையில் தோன்றினார். அவரது கையில் கைக்கொட்டு ஒன்றை வைத்திருந்தார். நான் அந்த கைக்கொட்டை எனக்குத் தருமாறு கேட்டேன். அதற்கு அவர் எதற்காக அதனைக் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டார்ää அதற்கு நான் முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக எனக்கு இது தேவைப்படுகின்றது என்று கூறினேன். அதற்கு அந்த மனிதர்ää தொழுகைக்கு அழைக்கும் நோக்கத்திற்கு இது பயன்படாது என்று கூறினார். அதற்கு நான்ää பின் எந்த முறையில் தான் மக்களை தொழுகைக்கு அழைப்பது என்று கேட்டேன். அதற்கு அந்த மனிதர்ää பள்ளியின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நின்று கொண்டுää உரத்த சப்தமிட்டுää அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹ{ அக்பர்) என்றும்ää இன்னும் நான் அல்லாஹ்வைத் தவிர வணக்கதிற்குரிய இறைவன் வேறு இல்லை என்றும்ää தொழுகைக்கு வாருங்கள் என்றும் கூறி மக்களைத் தொழுகைக்கு அழையுங்கள் என்று கூறினார்"".
அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறிய வண்ணம்ää மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தொழுகைக்கான நேரம் வந்ததும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்துää அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறியவாறுää மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு கூறினார்கள்.
மக்களைக் கிளர்ந்தெழச் செய்யக் கூடிய அளவில் பிலால் (ரலி) அவர்கள் பாங்கின் அழைப்பை அழகுபடுத்திக் கூறியவுடன்ää மதீனாவில் அந்த பாங்கின் ஓசையைக் கேட்ட மக்கள் அனைவரும்ää மின்சாரம் பாய்ந்தவர்களாக அந்த அழைப்பை ஏற்று பள்ளியை நோக்கி விரைந்து வந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் இந்தப் புதிய பாங்கின் ஓசையைத் தனது வீட்டிலிருந்து செவிமடுத்து விட்டுää தனது ஆடை இழுபட பள்ளியை நோக்கி விரைந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதற்காக சற்று தாமதித்த உமர்(ரலி) அவர்கள்ää 'இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இவ்வாறு மக்களை பாங்கின் மூலம் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது" என்று வினவினார்கள்.
அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கனவு தான்ää இந்த மாதிரியான முறையைப் பின்பற்றி மக்களைத் தொழுகைக்கு அழைக்க வேண்டும் என்ற உதிப்பைத் தந்ததுää அதனை நானும் ஏற்றுக் கொண்டுää அவ்வாறே மக்களைத் தொழுகை;கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றுää அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்கள் கண்ட கனவினைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
நானும் இதே போன்றதொரு கனவைத் தான் கண்டேன்ää ஆனால் அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்கள் இந்த விஷயத்தில் என்னை முந்திக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கண்ட கனவிற்கும் நான் கண்ட கனவிற்கு ஒரு வித்தியாசம் இருக்கின்றது என்று கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வித்தியாசம் என்ன என்று கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டதும்ää உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கூற்றுப்படிää ''அல்லாஹ்வைத் தவிர வணங்கத்தக்க இறைவன் வேறு ஒருவன் இல்லை"" என்று நான் சாட்சி கூறுகின்றேன்ää என்ற வாசகத்துடன்ää இன்னும் நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்"" என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்ää என்ற வாசகத்தையும் நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.
இதற்குப் பின்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்துää பாங்குடன் மேற்கண்ட ''நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்"" என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்ää என்றும் சேர்த்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பின்னர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லா பின் ஸைத் (ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களின் பக்கம் திரும்பிää ''இறைவனுக்கே எல்லாப் புகழும். என்னைப் பின்பற்றும் என்னுடைய சத்தியத் தோழர்களுக்கு அல்லாஹ் கனவின் வழியாக உண்மையை அருள் செய்கின்றான்"" என்று கூறினார்கள்.
தீர்ப்பை மாற்றக் கோரியவரைத் தீர்த்துக் கட்டிய உமர் (ரலி)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து விட்ட பின்ää யூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் அநேகர் இஸ்லாத்தின் மீது மிகவும் பிடிப்பாகவும்ää தீவிர நம்பிக்கை கொண்ட மக்களாகவும் இருந்தே அதேவேளையில்ää சிலர் நயவஞ்சகர்களாக தங்களையும் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொண்டு நாவில் ஏறிய இறைநம்பிக்கைää இதயத்துக்குள் இறங்க மறுத்து விட்டிருந்தது. இவர்கள் இஸ்லாத்தின் வளையத்திற்குள் இருந்து கொண்டேää இஸ்லாத்திற்கு எதிரான பல வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இஸ்லாத்தை அரைகுறையாகத் தெரிந்து வைத்திருந்ததோடுää இஸ்லாத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் இருந்தனர்.
அபுல் அஸ்வத் (ரலி) அவர்களின் மூலமாக இந்தச் சம்பவம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதீனாவில் வாழ்ந்த இரண்டு மனிதர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்தும்ää அவர்கள் இஸ்லாத்தின் போதனைகள் பற்றி முழுமையான அளவில் உணராதவர்களாக இருந்தனர்ää இந்த நிலையில்ää அந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில்ää அதற்கான தீர்வை வழங்குமாறு அந்தப் பிரச்னையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இருவரது வாதங்களையும் கேட்டுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அவர்களில் ஒருவரது வாதம் தான் சரியானது என்று தீர்ப்புக் கூறி விடுகின்றார்கள். இதனால் எவருக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்ததோää அவருக்கு அந்தத் தீர்ப்பின் மீது திருப்தி ஏற்படவில்லைää எனவேää அந்த வழக்கை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றார்.
இருவரது வழக்கையும் கேட்டுக் கொண்ட உமர்(ரலி) அவர்கள்ää உங்களில் மறுபரிசீலனையைக் கோருவது யார்? என்று கேட்டு விட்டுää
ம்.. ம்..! ''இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பின் மீது உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லைää அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கின்றீர்கள்"".
அந்த மனிதர் அதற்குää 'ஆம்" உமர் அவர்களே..! என்று கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் வழக்கை ஆய்வு செய்து தீர்ப்புக் கூறிய பின்னர்ää அவரது தீர்ப்பை மாற்றும்படிக் கோருகின்றீர்கள்.
''நீங்கள் முஸ்லிம் தானே""ää என்று கேட்டுக் கொண்டார் உமர் (ரலி) அவர்கள்.
''ஆம்ää நான் முஸ்லிம் தான்"" அந்த மனிதர் பதில் கூறினார்.
கொஞ்ச நேரம் சற்றுப் பொறுத்திருங்கள். விரைவில் நான் என்னுடைய முடிவைக் கூறுகின்றேன்ää அது உங்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கும்""ää என்று கூறி விட்டுää
உமர் (ரலி) அவர்கள் தனது வீட்டிற்குள் சென்றுää தனது கையில் ஒரு வாளை எடுத்து வந்துää அந்த மனிதரை ஒரே ஒரு போடு போட்டு விட்டுää ''உம் மீது நாசம் உண்டாகட்டும்ää ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக என்னை தீர்ப்புக் கூறச் சொல்கின்றீரா? நீ இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பாவிää இஸ்லாத்தை விட்டு வெளியேறியதன் தண்டனைää இந்தச் சாவு தான்"" என்று கூறினார்கள்.
மற்ற மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓடிச் சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உமர் அவர்கள்..! எனது தோழரைக் கொலை செய்து விட்டார்கள் என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆள் அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää உமர் (ரலி) அவர்களிடம் இந்தக் கொலைக்கான விளக்கத்தைக் கூறுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää ''உங்களிடம் பெற்று விட்ட பிறகுää உங்களது தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்குமாறு இவர்கள் என்னிடம் வந்து தங்கள் வழக்கைக் கூறினார்கள்ää உங்களது தீர்ப்பில் திருப்தி கொள்ளாத அவரைக் கொலை செய்ததுää சரியான தண்டனை தான் என்று கூறினார்கள்"".
இந்தப் பிரச்னையில் இறைவன் தெளிவான வழிகாட்டலைத் தரும் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்காமல்ää தீர்ப்பை ஒத்தி வைத்தார்கள்.
உம் இறைவன் மேல் சத்தியமாகää அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாகää ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில்ää அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)
யார் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது முழு நம்பிக்கை கொள்ளவில்லையோää அவர்கள் நம்பிக்கையாளர் அல்ல என்ற வசனத்தை இறைவன் இறக்கி அருளினான். இஸ்லாத்தில் இறைநம்பிக்கை கொள்வதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதும் முழு நம்பிக்கை கொள்வது அவசியமானதொன்று என்ற இறைவசனத்தின் கட்டளையின்படிää உமர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கொலை செய்தது சரியானது தான் என்று தீர்வாகியது. உமர் (ரலி) அவர்களை நம்பிக்கையாளர்களைக் கொலை செய்த குற்றத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் விடுதலை செய்தார்கள்.
உஹதுப் போர்
பத்ருப் போரை அடுத்து நடந்த போர் தான் உஹதுப் போர்.
முஸ்லிம் எதிர்த்து களம் காணுவதற்காக 3000 பேர் கொண்ட படைகளுடன் குறைஷிகள் பத்ரு என்னும் இடத்தில் கூடி நின்றனர். இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 1000 பேர் கொண்ட முஸ்லிம்களின் படையைத் தயார் செய்தார்கள். இதில் கடைசி நேரத்தில் நயவஞ்சகனான அப்துல்லா இப்னு உபை தனது ஆதரவாளர்களை விலக்கிக் கொண்டது போகää எஞ்சியோர் 700 பேர்களை குறைஷிகளைக் களம் காண உஹதுப் போர் முகத்துக்கு வந்திருந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படையை சீர் செய்து தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் ஒரு பிரிவை முஸ்லிம்களின் படை அமைத்திருந்த பகுதிக்குப் பின்புறமுள்ள கணவாய்ப் பகுதியில் வில் வித்தைக் காரர்களை நிறுத்திää எக்காரணம் கொண்டு எனது உத்தரவின்றி அந்த இடத்தை விட்டும் அகலக் கூடாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் குழுவினருக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.
குறைஷிகள் தங்களுடன் பெண்களையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்கள் கொட்டுகளை அடித்துக் கொண்டுää பாட்டுப் பாடிக் கொண்டு தங்களது ஆண்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு பாடிக் கொண்டிருந்தார்கள் :
நாங்கள் அதிகாலை நட்சத்திரத்தின் மகள்கள்
எங்களது பாதங்கள் புற்களின் மேல் நடந்து பழகியவை
நீங்கள் முன்னேறினால் உங்களை அணைத்துக் கொள்வோம்
நீங்கள் புறமுதுகிட்டுத் திரும்பினால் உங்களை விட்டும் சென்று விடுவோம்
என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.
குறைஷிகள் தங்களது முழு பலத்துடன் முஸ்லிம்களுடன் மோதினார்கள்ää ஆனால் அதற்கு எதிர்த்தாக்குதலை வேகத்துடனும்ää விவேகத்துடனும் முஸ்லிம்கள் தொடுத்தார்கள். முஸ்லிம்களின் எதிர்த்தாக்குதலின் காரணமாகää எதிரிகளைத் துவம்சம் செய்து அவர்களது அணிகளை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையையும் மீறிää கணவாயின் மீது நிற்க வைத்திருந்த வில் வித்தை வீரர்கள்ää எதிரிகள் பயந்தோடி விட்டார்கள் என்பதாகக் கணித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டும் அகன்று விட்டார்கள். இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டää அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவாமல் எதரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள்ää முஸ்லிம்களைக் கணவாய் வழியாகத் தாக்கிக் கொண்டு வந்ததோடல்லாமல்ää முஸ்லிம்களுக்குக் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தி விட்டார்.
வில் வித்தைக் காரர்கள் நின்று கொண்டிருந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதோடுää முஸ்லிம்களுக்கு முன்பிருந்தும்ää பின்னால் இருந்தும் குறைஷிகள் தாக்கத் தொடங்கினார்கள். இந்தக் குழப்பத்தின் காரணமாக பல முஸ்லிம்கள் வீரத் தியாகிகளானார்கள். இந்தத் தாக்குதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுää சிறிது நேரம் படுகாயம் காரணமாக விழுந்து விட்டார்கள்ää இதனைக் கண்ட அவர்களது தோழர்கள் கூட இறந்து விட்டதாகவே நினைத்தார்கள். அப்போது எதிரிகளின் தரப்பில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட்டதாக சப்தமிட்டு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கிளம்பி புரளியானதுää முஸ்லிம்களை அச்சம் கொள்ளச் செய்ததுää எங்கும் குழப்பம் தலைவிரித்தாடியது. சில முஸ்லிம்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டுää மதீனாவை நோக்கி விரைய ஆரம்பித்தார்கள். உமர்(ரலி) அவர்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுடன்ää 'இனி போரிடுவதில் என்ன பயன் இருக்கின்றது"ää என்று கூறி வாளைத் தூக்கி எறிய முடிவு செய்து விட்;டார்கள்.
அனஸ் பின் நத்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைக் கடந்து செல்கின்றார்கள்ää அப்பொழுது உமரே..!
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிலை என்னவென்று வினவுகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வருகின்றனவே என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் என்னää அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதனின்றும் உங்களைத் தடுப்பது எதுää அல்லாஹ் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவனில்லையா..! என்றார்கள். இவ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறிக் கொண்டே எதிரிகளை நோக்கிக் களம் புகுந்த அவர்ää எழுபது காயங்களைப் பெற்றுக் கொண்டு வீரத் தியாகியாக ஆனார். அவரது உயிர் களத்திலேயே பிரிந்தது.
பின்னர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் காயம்பட்டு வீழ்ந்து கிடப்பது தெரிந்து. அந்த இடத்தைச் சுற்றிலும் அலி (ரலி) அபூபக்கர் (ரலி)ää உமர் (ரலி)ää தல்ஹா (ரலி)ää சுபைர் (ரலி) மற்றும் ஹாரித் (ரலி) ஆகியோர் சுற்றி நின்று கொண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினார்கள்.
அபூசுஃப்யான் அவர்கள் இப்பொழுது ஒரு குன்றின் மீது ஏறி நின்று கொண்டுää ''முஹம்மது இன்னும் உயிருடன் இருக்கின்றாரா?"" என்று கேட்டு சப்தமிட ஆரம்பித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää இதற்கு மறுமொழி பகர வேண்டாம் என்று தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
அபூ சுஃப்யான் பின் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர்களைப் பெயர் கூறி அழைத்தார். எந்த மறுமொழியும் கொடுக்கப்படவில்லை. பின் அபூ சுஃப்யான் சப்தமிட்டுää ''அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்களா"" என்று கூறினார்.
அந்த நேரத்தில்ää தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத உமர் (ரலி) அவர்கள்ää ''அல்லாஹ்வின் எதிரியேää நாங்கள் அனைவரும் உயிருடன் தான் இருக்கின்றோம்"" என்றார்கள்.
சிறிது உணர்ச்சிக் கொந்தளிப்பிற்குப் பின் அபூசுஃப்யான் கத்த ஆரம்பித்தார்ää ''ஹ{ப்பலுக்கே புகழனைத்தும்"" என்றார்.
இப்பொழுதுää உமர் (ரலி) அவர்கள்ää ''அல்லாஹ்வே உயர்ந்தோனும்ää மிகப் பெரியவனுமாவான்"" என்று கூறினார்கள்.
இப்பொழுதுää அபூ சுஃப்யான்ää ''உஸ்ஸா எங்களுடன் இருக்கின்றதுää இன்னும் உங்களுடன் எந்தக் கடவுளுமில்லை"" என்று கூறினார்.
இப்பொழுது உமர் (ரலி) அவர்கள்ää ''அல்லாஹ்வே எங்களது இறைவன்ää உங்களுக்குத் தான் வணங்கும் இறைவன் இல்லை"" என்று கூறினார்.
இரண்டு படைகளும் போர் முகத்தை விட்டும் தங்களது பாசறைகளுக்குத் திரும்பிய பொழுதுää முஸ்லிம்களின் தரப்பில் 70 பேர் இறந்திருந்தனர். இந்தப் போரில் குறைஷிகளின் கையே ஓங்கியிருந்தது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிக்குப்பழி வாங்கி விட்டதாக அவர்கள்ää திருப்திபட்டுக் கொண்டார்கள். இன்னும் மதீனாவை நோக்கி படை எடுத்துச் செல்லும் நோக்கமும் அவர்களிடம் இல்லாதிருந்தது. மக்காவிற்குத் திரும்பிச் செல்லவே அவர்கள் விரும்பினார்கள்.
உமர் (ரலி) அவர்களைப் பொறாமைப்பட வைத்த மனிதர்
வஹப் பின் காபூஸ் (ரலி) அவர்கள் ஒரு ஆடு மேய்க்கும் இடையராக இருந்தார். ஒருநாள் அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக மதீனாவிற்குள் வருகின்றார்கள். அவருடன் அவருடைய மருமகனும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகின்றார்கள்.
வஹப் (ரலி) அவர்கள் மதீனாவை வந்தடைந்ததும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர்க் களத்திற்குச் சென்றிருப்பதாக அறிகின்றார்கள். இதனைக் கேள்விப்பட்ட வஹப் (ரலி) அவர்கள்ää தனது மருகனையும்ää ஆட்டு மந்தையையும் மதீனாவிலேயே விட்டு விட்டுää அவரும் குறைஷிகளைச் சந்திப்பதற்காக உஹதுப் போர்க்களத்தை நோக்கி விரைகின்றார்கள்.
உஹதை வஹப் (ரலி) அவர்கள் அடைகின்ற நேரத்தில்ää போர் உச்ச கட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. குறைஷிகளின் ஒரு குழு முன்னேறிக் கொண்டிருந்ததுää அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை தாக்குதவற்காக விரைந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இத்ததகைய மிகவும் மோசமான நிலையில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் :
''இந்தக் குறைஷிக் கூட்டத்தை யார் விரட்டி அடிக்கின்றார்களோää அவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்"" என்ற நற்செய்தியை அறிவிக்கின்றார்கள்.
இந்த நற்செய்தியைச் செவிமடுத்த வஹ்ப் (ரலி) அவர்கள் போர்க்களத்திற்குள் விரைகின்றார்கள். சிலரைக் கொன்றும்ää சிலர் விரண்டோடும் நிலையையும் ஏற்படுத்துகின்றார்கள். தனியொரு ஆளாக நின்று கொண்டு குறைஷிகளுடன் வஹப் (ரலி) அவர்கள் போரிடும் அந்தக் காட்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை நெருங்கிய அந்தக் குறைஷிக் கூட்டத்தை விரட்டி அடித்து விட்ட பின்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகாமையில் வந்த வஹப் (ரலி) அவர்களுக்குää சுவனத்திற்கான நன்மாராயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்குகின்றார்கள். சுவனத்திற்கான நற்செய்தியைப் பெற்றுக் கொண்ட வஹப் (ரலி) அவர்களது உள்ளம் உணர்ச்சி மேலிட சந்தோஷ எல்லையையே தொட்டு நின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களது வதனங்களிலிருந்து எப்பொழுது சுவனத்திற்கான நற்செய்தியைப் பெற்றுக் கொண்டார்களோää அப்பொழுதே தனது கையில் வாளை எடுத்துக் கொண்டுää எதிரிகளை நோக்கிக் களம் புகுந்தார்கள். மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் மின்னல் போலää குறைஷிகளின் அணியை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். எதிர்ப்படும் குறைஷிகளைத் தனது வாளுக்கு இரையாக்கிச் சென்று கொண்டிருந்த அவர்களைää குறைஷிகளின் கூட்டம் சுற்றி வளைத்துக் கொண்டது. எதிரிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட வஹப் (ரலி) அவர்களின் மேனியில்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தாலும்ää இடைவிடாது போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தம் அதிகமாக வெளியேறி விடவேää உயிரற்ற சடமாக நிலத்தில் வீழ்ந்தார்கள் வஹப் (ரலி) அவர்கள்.
போர் முடிந்தவுடன்ää முஸ்லிம்கள் இறந்து போன தங்களது தோழர்களின் உடல்களைத் தேடிச் சேகரித்தார்கள். இஸ்லாத்திற்காக உயிர் துறந்த அந்த உத்தமர்களின் முன்பாக நின்று கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''ஓ வஹப்..! நீங்கள் என்னைப் பொருந்திக் கொண்டீர்கள்ää அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக..!""
அந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää காயமடைந்திருந்தார்கள். இருந்த போதிலும் வஹப் (ரலி) அவர்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்ää தனது திருக்கரங்களால் வஹப் (ரலி) அவர்களது உடலைää மண்ணறையில் வைத்தார்கள். வஹப் (ரலி) அவர்களின் வீரத்தைத் தனது கண்களால் கண்டுää ஆச்சரியப்பட்டுப் போன உமர்(ரலி) அவர்கள் அடிக்கடி இவ்வாறு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் :
''வஹப் பைக் காட்டிலும் இன்னொருவர் மீது நான் இந்தளவு பொறமைப்பட்டதில்லை. இதனைக் காட்டிலும் சிறந்த நற்செயல்களுடன் நாளை இறைவனைச் சந்திக்க நான் நாடுகின்றேன்"".
ஹஃப்ஸா (ரலி)
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மகளாவார். உஸ்மான் பின் மசூர் (ரலி) என்ற பிரபலமான நபித்தோழரின் தங்கை ஸைனப் (ரலி) அவர்கள் தான் இவருடைய தாயார் ஆவார்.
மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த இவர்ää குனைஸ் பின் ஹ{தைஃபா என்ற பனூ ஷஹ்ம் என்ற குறைஷிக் குலத்தைச் சேர்ந்ததொரு தோழருக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார். இவர்ää ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவராவார். இவர் அபீஸீனிய்யா மற்றும் மதீனா ஆகிய இரண்டு ஹிஜ்ரத்துக்களிலும் இடம் பெற்றää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெருமதிப்பிற்குரிய தோழாராவார்.
மதீனாவில் இருந்து கொண்டிருந்த கால கட்டத்தில் பத்ர் மற்றும் உஹதுப் போர்களிலும் இவர் கலந்து கொண்டார். உஹதுப் போரில் கலந்து கொண்டிருந்த பொழுதுää கடுமையான காயங்களுக்கு உள்ளானார். அந்த காயங்களின் காரணமாகவே அவர் மரணத்தையும் தழுவ நேர்ந்தது. இதன் மூலம் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இளமையிலேயே விதவையானார்கள்.
தனது மகள் இளமையிலேயே விதவையானது குறித்து உமர் (ரலி) அவர்கள் மிகவும் கவலை கொண்டார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இத்தா என்ற காத்திருப்புக் காலத்தை நிறைவு செய்தவுடன்ää தனது மகளுக்கு மறுமணம் செய்விக்க உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள். இயற்கையில்ää தந்தையாரைப் போலவேää ஹஃப்ஸா (ரலி) அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராக இருந்தார்கள். எனவேää இதற்கு ஈடு கொடுத்துச் செல்லக் கூடிய வயதான ஒருவருக்கு மணமுடித்துக் கொடுப்பதே சிறந்தது என்று உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள்.
எனவேää உமர் (ரலி) அவர்கள் தனது மகளுக்கான சரியான இணையாகää அபுபக்கர் (ரலி) அவர்கள் இருக்கக் கூடும் என்று நினைத்து உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களை அணுகிää தனது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றார்கள். தனது கோரிக்கை மறுப்பேதும் சொல்லாமல் அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இதற்கு பதிலேதும் சொல்லாமல் அபுபக்கர் (ரலி) அவர்கள் மவுனம் சாதிப்பது குறித்துää உமர் (ரலி) அவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். கையறு நிலையிலிருக்கும் நண்பருக்கு உதவும் மனம் கொண்டவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் இல்லையே என்று உமர் (ரலி) அவர்கள் மனம் வெதும்புகின்றார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதனை அறிந்த உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அணுகுகின்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளாரான ருக்கையா (ரலி) அவர்களை மணந்திருந்தார்கள். ருக்கையா (ரலி) அவர்கள் மரணமடைந்ததுடன்ää ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொள்ளுமாறு உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களிடம் கோருகின்றார்கள். சில நாட்கள் கழித்து உதுமான் (ரலி) அவர்களைச் சந்தித்த உமர் (ரலி) அவர்களிடம்ää ருக்கையா (ரலி) அவர்களது மரணத்தினால் ஏற்பட்ட கவலை தன்னை மிகைத்திருப்பதாகக் கூறிய உதுமான் (ரலி) அவர்கள்ää சிறிது காலம் செல்லட்டும் என்று கூறி விடுகின்றார்கள்.
தனது கோரிக்கையை அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உதுமான் (ரலி) அவர்களும் நிராகரித்து விட்டார்களே என்று மனம் வெதும்பிய உமர் (ரலி) அவர்கள்ää நேரடியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை நோக்கி வருகின்ற தனது தோழரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää உமரே..! உங்களைக் கவலைப்பட வைத்தது எது? என்று வினவுகின்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உதுமான் (ரலி) அவர்களும் எனது நேசக் கரத்தை உதறித் தள்ளி விட்டார்கள்ää என்று தனது மனதிற்குள் மறைத்து வைத்திருந்த அத்தனையையும் கொட்டித் தீர்த்து விட்டார்கள்.
உமரே..! உங்களது மனதைச் சூழ்ந்து கவ்விக் கொண்டிருக்கும் கவலை மேகங்களைப் பற்றி நானறிவேன். நீங்கள் இஸ்லாத்திற்காகச் செய்த சேவைகளைப் பற்றியும் நானறிவேன். கவலையைக் கைவிடுங்கள் என்று கூறிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää ''உதுமானை விடச் சிறந்ததொரு துணையை உங்களது மகள் ஹஃப்ஸா பெற்றுக் கொள்வார். ஹஃப்ஸாவை விடச் சிறந்த துணையை உதுமான் பெற்றுக் கொள்வார்"" என்று நன்மாராயங் கூறினார்கள்.
இதனுடைய அர்த்தம் என்னவெனில்ää ஹஃப்ஸா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களே மணக்க விரும்பினார்கள். இந்தச் செய்தியைத் தனது காதால் கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள்ää உணர்ச்சியின் விளிம்பிற்கே சென்று விட்டார்கள். தனது நன்றியைத் தெரிவிக்கு முகமாகää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கரங்களில் முத்தமிட்ட உமர் (ரலி) அவர்கள்ää விரைந்து வீட்டிற்குச் சென்று இந்த நற்செய்தியை தனது மகளுக்கு அறிவித்தார்கள்.
பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். தனது தோழரின் முகத்தில் சந்தோஷத்தின் ரேகைகள் அரும்பியிருப்பதைக் கண்டார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்ää உமர் (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்ää உமரே..! உங்களது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களைää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணக்க விரும்பியிருந்த காரணத்தினால் தான்ää உங்களது கோரிக்கையை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் உங்களது அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதையே நான் மிகப் பெரும் கண்ணியமாக நினைத்திருந்தேன் என்றும் கூறினார்கள்.
அதன் பிறகு உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். உமர் (ரலி) அவர்களுடைய கோரிக்கையைத் தான் ஏற்றுக் கொள்ள இயலாததற்கான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்ட உதுமான் (ரலி) அவர்கள்ää ''உங்களது மகள் விவகாரம் குறித்து ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் பேசியிருக்கின்றார்கள். இன்னும் ருக்கையா (ரலி) அவர்கள் இறந்ததன் பின்னாள்ää தனது இளைய மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை மணந்து கொள்ளும்படி என்னிடம் கூறி விட்டுää ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் தானே மணக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். இதன் காரணமாகவேää நான் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாமலிருந்தது என்றும் கூறினார்கள்.
அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இதன் காரணமாகää அபுபக்கர் (ரலி) அவர்களுடன்ää உமர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமனார் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.
யூதர்கள்
மதீனாவில் ஒரு குறிப்பிட்ட அளவில் யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வசதிமிக்கவர்களாகவும் மற்றும் மதினாவின் சூழ்நிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இந்த யூதர்களைப் பொறுத்தவரைää ''வாழ்ந்து விட்டுப் போகட்டும்"" என்ற கொள்கையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த அடிப்படையில்ää யூதர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் யூதர்கள் முழுமையான மதச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வார்கள்ää இதில் முஸ்லிம்கள் எந்தவிதத்திலும் தலையிட மாட்டார்கள். மற்றும் முஸ்லிம்களும் யூதர்களும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் பொதுவான தங்களது நலன்களில் ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொள்வது என்றும்ää மதீனாவை எதிரிகள் தாக்க வந்தால் இருவரும் இணைந்தே நகரத்தைப் பாதுகாப்பது என்றும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். முஸ்லிம்களும்ää யூதர்களும் இணைந்து மதீனா நகரைப் பாதுகாப்பும் பொறுப்பை ஏற்றிருக்கும் பட்சத்தில்ää குறைஷிகளுக்கு உதவுவதற்கென்று யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட முதற் பலனமாகும்.
இன்னும்ää தங்களது வேத வாக்கியங்களின்படி அரேபியாவில் ஒரு இறைத்தூதரொருவர் வந்துதிக்கப் போகின்றார் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். இன்னும் அந்தத் தூதர் தங்களில் இருந்தே உதிக்க இருக்கின்றார் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால்ää இவர்களது நம்பிக்கைக்கு மாறாகää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்திலிருந்து வந்துதித்தவுடன்ää யூதர்கள் அனைவரும் தங்களது வேதத்தில் இறைத்தூதர் பற்றிய அடையாளங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்ய ஆரம்பித்தனர். இன்னும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன்ää அவர் தங்களது மேலாண்மையை ஒடுக்கப் போகின்றார் என்றும் நினைக்க ஆரம்பித்தனர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கென தனித்துவமான கொள்கையை வகுத்தெடுத்து வழங்கியவுடன்ää காழ்ப்புணர்வு கொண்ட யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும்ää இஸ்லாத்திற்கு எதிராகவும் பற்பல கட்டுக் கதைகளையும்ää இன்னும் பழிவாங்கும் செயல்களையும் துவங்க ஆரம்பித்தனர்.
உமர் (ரலி) அவர்கள் யூதர்கள் பேசக் கூடிய ஹீப்ரூ மொழியை அறிந்தவராகவும்ää அதனைப் பேசக் கூடியவராகவும் இருந்தார். அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்த காரணத்தினால்ää யூதர்களுடன் நல்லதொரு பரிச்சயம் அவருக்கிருந்தது. முஸ்லிம்களிடம் மட்டுமல்லää யூதர்களிடமும் கூட உமர்(ரலி) அவர்கள் செல்வாக்கு வாய்ந்தவராக இருந்தார். ஒருநாள்ää யூதர்கள் தங்களது வேதமான தௌராத்தின் பிரதி ஒன்றைää உமர் (ரலி) அவர்களிடம் வழங்கினார்கள். அந்த தௌராத்தின் பிரதியை எடுத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சமூகம் வந்தடைந்த உமர் (ரலி) அவர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களேää இது தௌராத் வேதத்தின் பிரதியாகும் என்றார்கள். அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களும் மற்ற சில தோழர்களும் அங்கு அமர்ந்திருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..ää உமர் (ரலி) அவர்கள் கூறுவதைக் கவனிக்காதவர் போல இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää தன்னைக் கவனிக்காதிருப்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள்ää அந்தப் பிரதியிலிருந்து சில வாசகங்களைப் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில்ää உமர் (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி அபுபக்கர் (ரலி) அவர்கள்ää ''உமரே நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களை எவ்வாறு கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களது முகத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள்? என்றார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää ''இறைவனதும்ää அவனது தூதர் (ஸல்) அவர்களது கோபத்திற்கு ஆளாவதனின்றும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்"". அல்லாஹ்வே வணங்கத்தக்க இறைவன் என்றும்ää இஸ்லாத்தை அவனது மார்க்கமாகவும்ää முஹம்மது (ஸல்) அவர்களை அவனது திருத்தூதராகவும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம்ää அதில் திருப்தியும் கண்டோம் என்று கூறினார்கள்.
அப்பொழுது உமர் (ரலி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உமரே..! இந்த முஹம்மதினுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாகää நீர் அவர்களைப் பின்பற்றியவராகää இந்த முஹம்மதைக் கை விடுவீர் என்று சொன்னால்ää நீர் வழி தவறியராவீர்ää இன்னும் நேர்வழியைத் தவற விட்டவராவீர். இந்த சமயத்தில் (மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கும் பட்சத்தில்ää அவரும் என்னையே பின்பற்றக் கூடியவராக இருப்பார். பின்பு யூதர்களைக் குறிப்பிட்டு இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்ää ''அந்த யூதர்கள் (தங்களுக்கு நேர்வழி காட்ட வந்த) தூதரையே கொலை செய்து விட்டார்கள்ää இத்தகையவர்கள் எவ்வாறு உங்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும்? என்றார்கள்"".
உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய நண்பர்கள் சிலரிடம்ää தௌராத்தில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று வினவினார்கள். அவர்கள் ஆம்..! என்று ஆமோதித்தார்கள். பின் ஏன் நீங்கள் அவரைத் தூதரென்று ஒப்புக் கொள்ள மறுக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்ää ''இறைவன் தனது செய்திகளை (வானவர் தலைவரான) ஜிப்ரீல் அவர்கள் மூலமாக முஹம்மது அவர்களுக்கு வழங்குகின்றான்ää அத்தகைய ஜிப்ரீல் எங்களுடைய எதிரியாவார்"" என்று கூறினார்கள். இதனை உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்ää இதனை அடுத்து கீழ்க்கண்ட வசனத்தை இறைவன் இறக்கியருளினான் :
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அதுää தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும்ää நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. எவன் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய மலக்குகளுக்கும்ää அவனுடைய தூதர்களுக்கும்ää ஜிப்ரீலுக்கும்ää மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோää நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:97-98)
மேற்கண்ட இந்த வசனம் இறங்கியவுடன்ää யூதர்களுடனான அனைத்துத் தொடர்புகளையும் உமர் (ரலி) அவர்கள் முறித்துக் கொண்டார்கள்ää நிறுத்திக் கொண்டார்கள்.
யூதர்களின் ஒரு குலத்தவரான பனீ கைனுகா குலத்தவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டவுடன்ää இது குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்துää தனது தோழர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கலந்தாலோசனை செய்தார்கள். அப்பொழுது சில தோழர்கள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்ற பொழுதுää ''அவர்களை மதீனாவை விட்டும் அப்புறப்படுத்துவதே மேலானது"" என்று உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
பனூ நுளைர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்களை மதீனாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களது சதித் திட்டங்கள் எல்லை மீறிப் போகவும்ää இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்துää அவர்களையும் மதீனாவை விட்டும் வெளியேற்றி விட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள்.
அதாவது ஒரு முஸ்லிமை யூதர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கொலை செய்து விட்டான். இதற்கான இரத்த இழப்பீட்டுத் தொகையை யூதர்களிடமிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோரினார்கள். அதற்குää இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விதிக்கப்படும் எத்தகைய சட்ட திட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்று அவர்கள் அறிவித்தார்கள். ஆனால்ää இந்த அறிவிப்புக்குப் பின் தங்களில் ஒருவரை ரகசியமான முறையில் நியமித்துää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வரும் வழியில் வீட்டின் கூரை மீது அமர்ந்து கொண்டுää அங்கிருந்து ஏதேச்சையாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது கல்லை உருட்டி விட்டுக் கொலை செய்யத் தீர்மானித்தார்கள். இந்த சதித்திட்டம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரிய வந்தவுடன்ää உமர் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää பனூ நுளைர் கோத்திரத்தாரையும் மதீனாவில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார்கள். ஆனால்ää மதினாவில் இருந்து நாங்கள் போக மாட்டோம் என்று அடம் பிடித்த யூதர்களைää முஸ்லிம்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் வெளியேற்றினார்கள். இவ்வாறு வெளியேறிய இவர்கள் கைபர் மற்றும் சிரியாவில் தஞ்சம் புகுந்தார்கள்.
நீரும்ää அபூசுஃயானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அர்த்தமென்ன? அவர் உனது கடன்களையும்ää உமது குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லையா? உமது வாளைத் தீட்டிää அதன் மீது விஷத்தையும் தோய்த்து எடுத்து வரவில்லையா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரைப் பார்த்து கேள்விக் கணைகளை வீசிக் கொண்டிருந்தார்கள்ää தான் நன்றாகத் தீட்டிää விஷத்தைத் தோய்த்து எடுத்து வந்த வாளின் கூர்மையை விடää அதன் விஷத்தை விட அதிகமான கூர்மையையும்ää கடுமையையும் கொண்டிருந்தது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகள்ää அதனைத் தாங்கவியலாத உமைர்ää
போதும்..ää போதும்.. நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் இருவருக்குள் மட்டும் பேசிக் கொண்ட ரகசியங்கள்ää இதனை இறைவன் மட்டுமே அறிந்தவன். நிச்சயமாக..! நீங்கள் இறைவனது தூதர் தான் என்று முழங்கிய உமைர் அவர்கள்ää
இறைத்தூதர் (ஸல்) அவர்ளின் முன்பதாகவேää திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவரது மகனும் விடுதலை செய்யப்பட்டார். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின் மக்காவிற்குத் திரும்பிய உமைர் (ரலி) அவர்கள்ää தான் ஏற்றுக் கொண்ட சத்தியத்தின் பக்கம் வருமாறு மக்கத்துக் குறைஷிகளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார்கள்.
தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியமர்ந்து விட்ட பின்ää சில அடிப்படையான விஷயங்களை அறிமுகம் செய்தார்கள். தொழுகையை நிலைநாட்டுவதுää ஸகாத் வழங்குவதுää நோன்பு நோற்பது மற்றும் தண்டனைச் சட்டங்களை நிறைவேற்றுதல்ää இதில் ஆகுமானது - ஹலால் மற்றும் விலக்கப்பட்டது ஹராம் போன்றவைகள் பற்றிய சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் தொழுகைக்கான அழைப்பு எதுவும் விடுக்கப்படாமலேயேää அந்தந்த நேரங்களில் மக்கள் பள்ளிவாசலுக்கு வந்து கூட ஆரம்பித்து விடுவார்கள். இஸ்லாம் வளர்ச்சியடைய வளர்ச்சியடையää மக்கள் தொகையும் அதிகமாகி வந்து கொண்டிருந்த பொழுதுää தொழுகைக்கு மக்களை அழைப்பதற்குண்டான புதிய வித முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிந்திக்கலானார்கள்.
யூதர்கள் செய்வது போல மத்தளம் போன்ற பெரிய கருவியைக் கொண்டு ஒலி எழுப்பி மக்களை தொழுகைக்கு அழைக்கலாமே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யோசித்தார்கள். மேலும்ää இது யூதர்களைப் பின்பற்றுவது போல் உள்ளதால்ää இது ஒரு சிறந்த வழி முறை கிடையாது என்று நினைத்து அவர்கள்ää அந்த முடிவைக் கை விட்டார்கள். பின் கைகளைத் தட்டி ஓசை எழுப்பிää அதன் மூலம் மக்களைத் தொழுகைக்கு அழைக்கலாமே என்றொரு யோசைனையும் பிறந்தது.
ஒருநாள் இரவு நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள்ää தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது பற்றியதொரு கனவைக் காண்கின்றார்கள்ää அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறுகின்றார்கள் :
''எனது கனவில் இறையச்சமுள்ள மனிதர் ஒருவர் பச்சை ஆடைகளை அணிந்த நிலையில் தோன்றினார். அவரது கையில் கைக்கொட்டு ஒன்றை வைத்திருந்தார். நான் அந்த கைக்கொட்டை எனக்குத் தருமாறு கேட்டேன். அதற்கு அவர் எதற்காக அதனைக் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டார்ää அதற்கு நான் முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக எனக்கு இது தேவைப்படுகின்றது என்று கூறினேன். அதற்கு அந்த மனிதர்ää தொழுகைக்கு அழைக்கும் நோக்கத்திற்கு இது பயன்படாது என்று கூறினார். அதற்கு நான்ää பின் எந்த முறையில் தான் மக்களை தொழுகைக்கு அழைப்பது என்று கேட்டேன். அதற்கு அந்த மனிதர்ää பள்ளியின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நின்று கொண்டுää உரத்த சப்தமிட்டுää அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹ{ அக்பர்) என்றும்ää இன்னும் நான் அல்லாஹ்வைத் தவிர வணக்கதிற்குரிய இறைவன் வேறு இல்லை என்றும்ää தொழுகைக்கு வாருங்கள் என்றும் கூறி மக்களைத் தொழுகைக்கு அழையுங்கள் என்று கூறினார்"".
அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறிய வண்ணம்ää மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தொழுகைக்கான நேரம் வந்ததும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்துää அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறியவாறுää மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு கூறினார்கள்.
மக்களைக் கிளர்ந்தெழச் செய்யக் கூடிய அளவில் பிலால் (ரலி) அவர்கள் பாங்கின் அழைப்பை அழகுபடுத்திக் கூறியவுடன்ää மதீனாவில் அந்த பாங்கின் ஓசையைக் கேட்ட மக்கள் அனைவரும்ää மின்சாரம் பாய்ந்தவர்களாக அந்த அழைப்பை ஏற்று பள்ளியை நோக்கி விரைந்து வந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் இந்தப் புதிய பாங்கின் ஓசையைத் தனது வீட்டிலிருந்து செவிமடுத்து விட்டுää தனது ஆடை இழுபட பள்ளியை நோக்கி விரைந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதற்காக சற்று தாமதித்த உமர்(ரலி) அவர்கள்ää 'இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இவ்வாறு மக்களை பாங்கின் மூலம் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது" என்று வினவினார்கள்.
அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கனவு தான்ää இந்த மாதிரியான முறையைப் பின்பற்றி மக்களைத் தொழுகைக்கு அழைக்க வேண்டும் என்ற உதிப்பைத் தந்ததுää அதனை நானும் ஏற்றுக் கொண்டுää அவ்வாறே மக்களைத் தொழுகை;கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றுää அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்கள் கண்ட கனவினைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
நானும் இதே போன்றதொரு கனவைத் தான் கண்டேன்ää ஆனால் அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்கள் இந்த விஷயத்தில் என்னை முந்திக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கண்ட கனவிற்கும் நான் கண்ட கனவிற்கு ஒரு வித்தியாசம் இருக்கின்றது என்று கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வித்தியாசம் என்ன என்று கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டதும்ää உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கூற்றுப்படிää ''அல்லாஹ்வைத் தவிர வணங்கத்தக்க இறைவன் வேறு ஒருவன் இல்லை"" என்று நான் சாட்சி கூறுகின்றேன்ää என்ற வாசகத்துடன்ää இன்னும் நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்"" என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்ää என்ற வாசகத்தையும் நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.
இதற்குப் பின்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்துää பாங்குடன் மேற்கண்ட ''நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்"" என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்ää என்றும் சேர்த்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பின்னர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லா பின் ஸைத் (ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களின் பக்கம் திரும்பிää ''இறைவனுக்கே எல்லாப் புகழும். என்னைப் பின்பற்றும் என்னுடைய சத்தியத் தோழர்களுக்கு அல்லாஹ் கனவின் வழியாக உண்மையை அருள் செய்கின்றான்"" என்று கூறினார்கள்.
தீர்ப்பை மாற்றக் கோரியவரைத் தீர்த்துக் கட்டிய உமர் (ரலி)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து விட்ட பின்ää யூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் அநேகர் இஸ்லாத்தின் மீது மிகவும் பிடிப்பாகவும்ää தீவிர நம்பிக்கை கொண்ட மக்களாகவும் இருந்தே அதேவேளையில்ää சிலர் நயவஞ்சகர்களாக தங்களையும் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொண்டு நாவில் ஏறிய இறைநம்பிக்கைää இதயத்துக்குள் இறங்க மறுத்து விட்டிருந்தது. இவர்கள் இஸ்லாத்தின் வளையத்திற்குள் இருந்து கொண்டேää இஸ்லாத்திற்கு எதிரான பல வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இஸ்லாத்தை அரைகுறையாகத் தெரிந்து வைத்திருந்ததோடுää இஸ்லாத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் இருந்தனர்.
அபுல் அஸ்வத் (ரலி) அவர்களின் மூலமாக இந்தச் சம்பவம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதீனாவில் வாழ்ந்த இரண்டு மனிதர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்தும்ää அவர்கள் இஸ்லாத்தின் போதனைகள் பற்றி முழுமையான அளவில் உணராதவர்களாக இருந்தனர்ää இந்த நிலையில்ää அந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில்ää அதற்கான தீர்வை வழங்குமாறு அந்தப் பிரச்னையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இருவரது வாதங்களையும் கேட்டுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அவர்களில் ஒருவரது வாதம் தான் சரியானது என்று தீர்ப்புக் கூறி விடுகின்றார்கள். இதனால் எவருக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்ததோää அவருக்கு அந்தத் தீர்ப்பின் மீது திருப்தி ஏற்படவில்லைää எனவேää அந்த வழக்கை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றார்.
இருவரது வழக்கையும் கேட்டுக் கொண்ட உமர்(ரலி) அவர்கள்ää உங்களில் மறுபரிசீலனையைக் கோருவது யார்? என்று கேட்டு விட்டுää
ம்.. ம்..! ''இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பின் மீது உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லைää அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கின்றீர்கள்"".
அந்த மனிதர் அதற்குää 'ஆம்" உமர் அவர்களே..! என்று கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் வழக்கை ஆய்வு செய்து தீர்ப்புக் கூறிய பின்னர்ää அவரது தீர்ப்பை மாற்றும்படிக் கோருகின்றீர்கள்.
''நீங்கள் முஸ்லிம் தானே""ää என்று கேட்டுக் கொண்டார் உமர் (ரலி) அவர்கள்.
''ஆம்ää நான் முஸ்லிம் தான்"" அந்த மனிதர் பதில் கூறினார்.
கொஞ்ச நேரம் சற்றுப் பொறுத்திருங்கள். விரைவில் நான் என்னுடைய முடிவைக் கூறுகின்றேன்ää அது உங்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கும்""ää என்று கூறி விட்டுää
உமர் (ரலி) அவர்கள் தனது வீட்டிற்குள் சென்றுää தனது கையில் ஒரு வாளை எடுத்து வந்துää அந்த மனிதரை ஒரே ஒரு போடு போட்டு விட்டுää ''உம் மீது நாசம் உண்டாகட்டும்ää ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக என்னை தீர்ப்புக் கூறச் சொல்கின்றீரா? நீ இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பாவிää இஸ்லாத்தை விட்டு வெளியேறியதன் தண்டனைää இந்தச் சாவு தான்"" என்று கூறினார்கள்.
மற்ற மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓடிச் சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உமர் அவர்கள்..! எனது தோழரைக் கொலை செய்து விட்டார்கள் என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆள் அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää உமர் (ரலி) அவர்களிடம் இந்தக் கொலைக்கான விளக்கத்தைக் கூறுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää ''உங்களிடம் பெற்று விட்ட பிறகுää உங்களது தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்குமாறு இவர்கள் என்னிடம் வந்து தங்கள் வழக்கைக் கூறினார்கள்ää உங்களது தீர்ப்பில் திருப்தி கொள்ளாத அவரைக் கொலை செய்ததுää சரியான தண்டனை தான் என்று கூறினார்கள்"".
இந்தப் பிரச்னையில் இறைவன் தெளிவான வழிகாட்டலைத் தரும் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்காமல்ää தீர்ப்பை ஒத்தி வைத்தார்கள்.
உம் இறைவன் மேல் சத்தியமாகää அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாகää ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில்ää அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)
யார் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது முழு நம்பிக்கை கொள்ளவில்லையோää அவர்கள் நம்பிக்கையாளர் அல்ல என்ற வசனத்தை இறைவன் இறக்கி அருளினான். இஸ்லாத்தில் இறைநம்பிக்கை கொள்வதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதும் முழு நம்பிக்கை கொள்வது அவசியமானதொன்று என்ற இறைவசனத்தின் கட்டளையின்படிää உமர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கொலை செய்தது சரியானது தான் என்று தீர்வாகியது. உமர் (ரலி) அவர்களை நம்பிக்கையாளர்களைக் கொலை செய்த குற்றத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் விடுதலை செய்தார்கள்.
உஹதுப் போர்
பத்ருப் போரை அடுத்து நடந்த போர் தான் உஹதுப் போர்.
முஸ்லிம் எதிர்த்து களம் காணுவதற்காக 3000 பேர் கொண்ட படைகளுடன் குறைஷிகள் பத்ரு என்னும் இடத்தில் கூடி நின்றனர். இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 1000 பேர் கொண்ட முஸ்லிம்களின் படையைத் தயார் செய்தார்கள். இதில் கடைசி நேரத்தில் நயவஞ்சகனான அப்துல்லா இப்னு உபை தனது ஆதரவாளர்களை விலக்கிக் கொண்டது போகää எஞ்சியோர் 700 பேர்களை குறைஷிகளைக் களம் காண உஹதுப் போர் முகத்துக்கு வந்திருந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படையை சீர் செய்து தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் ஒரு பிரிவை முஸ்லிம்களின் படை அமைத்திருந்த பகுதிக்குப் பின்புறமுள்ள கணவாய்ப் பகுதியில் வில் வித்தைக் காரர்களை நிறுத்திää எக்காரணம் கொண்டு எனது உத்தரவின்றி அந்த இடத்தை விட்டும் அகலக் கூடாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் குழுவினருக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.
குறைஷிகள் தங்களுடன் பெண்களையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்கள் கொட்டுகளை அடித்துக் கொண்டுää பாட்டுப் பாடிக் கொண்டு தங்களது ஆண்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு பாடிக் கொண்டிருந்தார்கள் :
நாங்கள் அதிகாலை நட்சத்திரத்தின் மகள்கள்
எங்களது பாதங்கள் புற்களின் மேல் நடந்து பழகியவை
நீங்கள் முன்னேறினால் உங்களை அணைத்துக் கொள்வோம்
நீங்கள் புறமுதுகிட்டுத் திரும்பினால் உங்களை விட்டும் சென்று விடுவோம்
என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.
குறைஷிகள் தங்களது முழு பலத்துடன் முஸ்லிம்களுடன் மோதினார்கள்ää ஆனால் அதற்கு எதிர்த்தாக்குதலை வேகத்துடனும்ää விவேகத்துடனும் முஸ்லிம்கள் தொடுத்தார்கள். முஸ்லிம்களின் எதிர்த்தாக்குதலின் காரணமாகää எதிரிகளைத் துவம்சம் செய்து அவர்களது அணிகளை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையையும் மீறிää கணவாயின் மீது நிற்க வைத்திருந்த வில் வித்தை வீரர்கள்ää எதிரிகள் பயந்தோடி விட்டார்கள் என்பதாகக் கணித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டும் அகன்று விட்டார்கள். இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டää அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவாமல் எதரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள்ää முஸ்லிம்களைக் கணவாய் வழியாகத் தாக்கிக் கொண்டு வந்ததோடல்லாமல்ää முஸ்லிம்களுக்குக் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தி விட்டார்.
வில் வித்தைக் காரர்கள் நின்று கொண்டிருந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதோடுää முஸ்லிம்களுக்கு முன்பிருந்தும்ää பின்னால் இருந்தும் குறைஷிகள் தாக்கத் தொடங்கினார்கள். இந்தக் குழப்பத்தின் காரணமாக பல முஸ்லிம்கள் வீரத் தியாகிகளானார்கள். இந்தத் தாக்குதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுää சிறிது நேரம் படுகாயம் காரணமாக விழுந்து விட்டார்கள்ää இதனைக் கண்ட அவர்களது தோழர்கள் கூட இறந்து விட்டதாகவே நினைத்தார்கள். அப்போது எதிரிகளின் தரப்பில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட்டதாக சப்தமிட்டு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கிளம்பி புரளியானதுää முஸ்லிம்களை அச்சம் கொள்ளச் செய்ததுää எங்கும் குழப்பம் தலைவிரித்தாடியது. சில முஸ்லிம்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டுää மதீனாவை நோக்கி விரைய ஆரம்பித்தார்கள். உமர்(ரலி) அவர்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுடன்ää 'இனி போரிடுவதில் என்ன பயன் இருக்கின்றது"ää என்று கூறி வாளைத் தூக்கி எறிய முடிவு செய்து விட்;டார்கள்.
அனஸ் பின் நத்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைக் கடந்து செல்கின்றார்கள்ää அப்பொழுது உமரே..!
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிலை என்னவென்று வினவுகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வருகின்றனவே என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் என்னää அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதனின்றும் உங்களைத் தடுப்பது எதுää அல்லாஹ் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவனில்லையா..! என்றார்கள். இவ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறிக் கொண்டே எதிரிகளை நோக்கிக் களம் புகுந்த அவர்ää எழுபது காயங்களைப் பெற்றுக் கொண்டு வீரத் தியாகியாக ஆனார். அவரது உயிர் களத்திலேயே பிரிந்தது.
பின்னர்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் காயம்பட்டு வீழ்ந்து கிடப்பது தெரிந்து. அந்த இடத்தைச் சுற்றிலும் அலி (ரலி) அபூபக்கர் (ரலி)ää உமர் (ரலி)ää தல்ஹா (ரலி)ää சுபைர் (ரலி) மற்றும் ஹாரித் (ரலி) ஆகியோர் சுற்றி நின்று கொண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினார்கள்.
அபூசுஃப்யான் அவர்கள் இப்பொழுது ஒரு குன்றின் மீது ஏறி நின்று கொண்டுää ''முஹம்மது இன்னும் உயிருடன் இருக்கின்றாரா?"" என்று கேட்டு சப்தமிட ஆரம்பித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää இதற்கு மறுமொழி பகர வேண்டாம் என்று தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
அபூ சுஃப்யான் பின் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர்களைப் பெயர் கூறி அழைத்தார். எந்த மறுமொழியும் கொடுக்கப்படவில்லை. பின் அபூ சுஃப்யான் சப்தமிட்டுää ''அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்களா"" என்று கூறினார்.
அந்த நேரத்தில்ää தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத உமர் (ரலி) அவர்கள்ää ''அல்லாஹ்வின் எதிரியேää நாங்கள் அனைவரும் உயிருடன் தான் இருக்கின்றோம்"" என்றார்கள்.
சிறிது உணர்ச்சிக் கொந்தளிப்பிற்குப் பின் அபூசுஃப்யான் கத்த ஆரம்பித்தார்ää ''ஹ{ப்பலுக்கே புகழனைத்தும்"" என்றார்.
இப்பொழுதுää உமர் (ரலி) அவர்கள்ää ''அல்லாஹ்வே உயர்ந்தோனும்ää மிகப் பெரியவனுமாவான்"" என்று கூறினார்கள்.
இப்பொழுதுää அபூ சுஃப்யான்ää ''உஸ்ஸா எங்களுடன் இருக்கின்றதுää இன்னும் உங்களுடன் எந்தக் கடவுளுமில்லை"" என்று கூறினார்.
இப்பொழுது உமர் (ரலி) அவர்கள்ää ''அல்லாஹ்வே எங்களது இறைவன்ää உங்களுக்குத் தான் வணங்கும் இறைவன் இல்லை"" என்று கூறினார்.
இரண்டு படைகளும் போர் முகத்தை விட்டும் தங்களது பாசறைகளுக்குத் திரும்பிய பொழுதுää முஸ்லிம்களின் தரப்பில் 70 பேர் இறந்திருந்தனர். இந்தப் போரில் குறைஷிகளின் கையே ஓங்கியிருந்தது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிக்குப்பழி வாங்கி விட்டதாக அவர்கள்ää திருப்திபட்டுக் கொண்டார்கள். இன்னும் மதீனாவை நோக்கி படை எடுத்துச் செல்லும் நோக்கமும் அவர்களிடம் இல்லாதிருந்தது. மக்காவிற்குத் திரும்பிச் செல்லவே அவர்கள் விரும்பினார்கள்.
உமர் (ரலி) அவர்களைப் பொறாமைப்பட வைத்த மனிதர்
வஹப் பின் காபூஸ் (ரலி) அவர்கள் ஒரு ஆடு மேய்க்கும் இடையராக இருந்தார். ஒருநாள் அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக மதீனாவிற்குள் வருகின்றார்கள். அவருடன் அவருடைய மருமகனும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகின்றார்கள்.
வஹப் (ரலி) அவர்கள் மதீனாவை வந்தடைந்ததும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர்க் களத்திற்குச் சென்றிருப்பதாக அறிகின்றார்கள். இதனைக் கேள்விப்பட்ட வஹப் (ரலி) அவர்கள்ää தனது மருகனையும்ää ஆட்டு மந்தையையும் மதீனாவிலேயே விட்டு விட்டுää அவரும் குறைஷிகளைச் சந்திப்பதற்காக உஹதுப் போர்க்களத்தை நோக்கி விரைகின்றார்கள்.
உஹதை வஹப் (ரலி) அவர்கள் அடைகின்ற நேரத்தில்ää போர் உச்ச கட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. குறைஷிகளின் ஒரு குழு முன்னேறிக் கொண்டிருந்ததுää அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை தாக்குதவற்காக விரைந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இத்ததகைய மிகவும் மோசமான நிலையில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் :
''இந்தக் குறைஷிக் கூட்டத்தை யார் விரட்டி அடிக்கின்றார்களோää அவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்"" என்ற நற்செய்தியை அறிவிக்கின்றார்கள்.
இந்த நற்செய்தியைச் செவிமடுத்த வஹ்ப் (ரலி) அவர்கள் போர்க்களத்திற்குள் விரைகின்றார்கள். சிலரைக் கொன்றும்ää சிலர் விரண்டோடும் நிலையையும் ஏற்படுத்துகின்றார்கள். தனியொரு ஆளாக நின்று கொண்டு குறைஷிகளுடன் வஹப் (ரலி) அவர்கள் போரிடும் அந்தக் காட்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை நெருங்கிய அந்தக் குறைஷிக் கூட்டத்தை விரட்டி அடித்து விட்ட பின்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகாமையில் வந்த வஹப் (ரலி) அவர்களுக்குää சுவனத்திற்கான நன்மாராயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்குகின்றார்கள். சுவனத்திற்கான நற்செய்தியைப் பெற்றுக் கொண்ட வஹப் (ரலி) அவர்களது உள்ளம் உணர்ச்சி மேலிட சந்தோஷ எல்லையையே தொட்டு நின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களது வதனங்களிலிருந்து எப்பொழுது சுவனத்திற்கான நற்செய்தியைப் பெற்றுக் கொண்டார்களோää அப்பொழுதே தனது கையில் வாளை எடுத்துக் கொண்டுää எதிரிகளை நோக்கிக் களம் புகுந்தார்கள். மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் மின்னல் போலää குறைஷிகளின் அணியை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். எதிர்ப்படும் குறைஷிகளைத் தனது வாளுக்கு இரையாக்கிச் சென்று கொண்டிருந்த அவர்களைää குறைஷிகளின் கூட்டம் சுற்றி வளைத்துக் கொண்டது. எதிரிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட வஹப் (ரலி) அவர்களின் மேனியில்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தாலும்ää இடைவிடாது போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தம் அதிகமாக வெளியேறி விடவேää உயிரற்ற சடமாக நிலத்தில் வீழ்ந்தார்கள் வஹப் (ரலி) அவர்கள்.
போர் முடிந்தவுடன்ää முஸ்லிம்கள் இறந்து போன தங்களது தோழர்களின் உடல்களைத் தேடிச் சேகரித்தார்கள். இஸ்லாத்திற்காக உயிர் துறந்த அந்த உத்தமர்களின் முன்பாக நின்று கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''ஓ வஹப்..! நீங்கள் என்னைப் பொருந்திக் கொண்டீர்கள்ää அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக..!""
அந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää காயமடைந்திருந்தார்கள். இருந்த போதிலும் வஹப் (ரலி) அவர்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்ää தனது திருக்கரங்களால் வஹப் (ரலி) அவர்களது உடலைää மண்ணறையில் வைத்தார்கள். வஹப் (ரலி) அவர்களின் வீரத்தைத் தனது கண்களால் கண்டுää ஆச்சரியப்பட்டுப் போன உமர்(ரலி) அவர்கள் அடிக்கடி இவ்வாறு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் :
''வஹப் பைக் காட்டிலும் இன்னொருவர் மீது நான் இந்தளவு பொறமைப்பட்டதில்லை. இதனைக் காட்டிலும் சிறந்த நற்செயல்களுடன் நாளை இறைவனைச் சந்திக்க நான் நாடுகின்றேன்"".
ஹஃப்ஸா (ரலி)
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மகளாவார். உஸ்மான் பின் மசூர் (ரலி) என்ற பிரபலமான நபித்தோழரின் தங்கை ஸைனப் (ரலி) அவர்கள் தான் இவருடைய தாயார் ஆவார்.
மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த இவர்ää குனைஸ் பின் ஹ{தைஃபா என்ற பனூ ஷஹ்ம் என்ற குறைஷிக் குலத்தைச் சேர்ந்ததொரு தோழருக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார். இவர்ää ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவராவார். இவர் அபீஸீனிய்யா மற்றும் மதீனா ஆகிய இரண்டு ஹிஜ்ரத்துக்களிலும் இடம் பெற்றää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெருமதிப்பிற்குரிய தோழாராவார்.
மதீனாவில் இருந்து கொண்டிருந்த கால கட்டத்தில் பத்ர் மற்றும் உஹதுப் போர்களிலும் இவர் கலந்து கொண்டார். உஹதுப் போரில் கலந்து கொண்டிருந்த பொழுதுää கடுமையான காயங்களுக்கு உள்ளானார். அந்த காயங்களின் காரணமாகவே அவர் மரணத்தையும் தழுவ நேர்ந்தது. இதன் மூலம் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இளமையிலேயே விதவையானார்கள்.
தனது மகள் இளமையிலேயே விதவையானது குறித்து உமர் (ரலி) அவர்கள் மிகவும் கவலை கொண்டார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இத்தா என்ற காத்திருப்புக் காலத்தை நிறைவு செய்தவுடன்ää தனது மகளுக்கு மறுமணம் செய்விக்க உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள். இயற்கையில்ää தந்தையாரைப் போலவேää ஹஃப்ஸா (ரலி) அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராக இருந்தார்கள். எனவேää இதற்கு ஈடு கொடுத்துச் செல்லக் கூடிய வயதான ஒருவருக்கு மணமுடித்துக் கொடுப்பதே சிறந்தது என்று உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள்.
எனவேää உமர் (ரலி) அவர்கள் தனது மகளுக்கான சரியான இணையாகää அபுபக்கர் (ரலி) அவர்கள் இருக்கக் கூடும் என்று நினைத்து உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களை அணுகிää தனது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றார்கள். தனது கோரிக்கை மறுப்பேதும் சொல்லாமல் அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இதற்கு பதிலேதும் சொல்லாமல் அபுபக்கர் (ரலி) அவர்கள் மவுனம் சாதிப்பது குறித்துää உமர் (ரலி) அவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். கையறு நிலையிலிருக்கும் நண்பருக்கு உதவும் மனம் கொண்டவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் இல்லையே என்று உமர் (ரலி) அவர்கள் மனம் வெதும்புகின்றார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதனை அறிந்த உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அணுகுகின்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளாரான ருக்கையா (ரலி) அவர்களை மணந்திருந்தார்கள். ருக்கையா (ரலி) அவர்கள் மரணமடைந்ததுடன்ää ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொள்ளுமாறு உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களிடம் கோருகின்றார்கள். சில நாட்கள் கழித்து உதுமான் (ரலி) அவர்களைச் சந்தித்த உமர் (ரலி) அவர்களிடம்ää ருக்கையா (ரலி) அவர்களது மரணத்தினால் ஏற்பட்ட கவலை தன்னை மிகைத்திருப்பதாகக் கூறிய உதுமான் (ரலி) அவர்கள்ää சிறிது காலம் செல்லட்டும் என்று கூறி விடுகின்றார்கள்.
தனது கோரிக்கையை அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உதுமான் (ரலி) அவர்களும் நிராகரித்து விட்டார்களே என்று மனம் வெதும்பிய உமர் (ரலி) அவர்கள்ää நேரடியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை நோக்கி வருகின்ற தனது தோழரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää உமரே..! உங்களைக் கவலைப்பட வைத்தது எது? என்று வினவுகின்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உதுமான் (ரலி) அவர்களும் எனது நேசக் கரத்தை உதறித் தள்ளி விட்டார்கள்ää என்று தனது மனதிற்குள் மறைத்து வைத்திருந்த அத்தனையையும் கொட்டித் தீர்த்து விட்டார்கள்.
உமரே..! உங்களது மனதைச் சூழ்ந்து கவ்விக் கொண்டிருக்கும் கவலை மேகங்களைப் பற்றி நானறிவேன். நீங்கள் இஸ்லாத்திற்காகச் செய்த சேவைகளைப் பற்றியும் நானறிவேன். கவலையைக் கைவிடுங்கள் என்று கூறிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää ''உதுமானை விடச் சிறந்ததொரு துணையை உங்களது மகள் ஹஃப்ஸா பெற்றுக் கொள்வார். ஹஃப்ஸாவை விடச் சிறந்த துணையை உதுமான் பெற்றுக் கொள்வார்"" என்று நன்மாராயங் கூறினார்கள்.
இதனுடைய அர்த்தம் என்னவெனில்ää ஹஃப்ஸா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களே மணக்க விரும்பினார்கள். இந்தச் செய்தியைத் தனது காதால் கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள்ää உணர்ச்சியின் விளிம்பிற்கே சென்று விட்டார்கள். தனது நன்றியைத் தெரிவிக்கு முகமாகää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கரங்களில் முத்தமிட்ட உமர் (ரலி) அவர்கள்ää விரைந்து வீட்டிற்குச் சென்று இந்த நற்செய்தியை தனது மகளுக்கு அறிவித்தார்கள்.
பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். தனது தோழரின் முகத்தில் சந்தோஷத்தின் ரேகைகள் அரும்பியிருப்பதைக் கண்டார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்ää உமர் (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்ää உமரே..! உங்களது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களைää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணக்க விரும்பியிருந்த காரணத்தினால் தான்ää உங்களது கோரிக்கையை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் உங்களது அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதையே நான் மிகப் பெரும் கண்ணியமாக நினைத்திருந்தேன் என்றும் கூறினார்கள்.
அதன் பிறகு உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். உமர் (ரலி) அவர்களுடைய கோரிக்கையைத் தான் ஏற்றுக் கொள்ள இயலாததற்கான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்ட உதுமான் (ரலி) அவர்கள்ää ''உங்களது மகள் விவகாரம் குறித்து ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் பேசியிருக்கின்றார்கள். இன்னும் ருக்கையா (ரலி) அவர்கள் இறந்ததன் பின்னாள்ää தனது இளைய மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை மணந்து கொள்ளும்படி என்னிடம் கூறி விட்டுää ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் தானே மணக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். இதன் காரணமாகவேää நான் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாமலிருந்தது என்றும் கூறினார்கள்.
அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இதன் காரணமாகää அபுபக்கர் (ரலி) அவர்களுடன்ää உமர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமனார் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.
யூதர்கள்
மதீனாவில் ஒரு குறிப்பிட்ட அளவில் யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வசதிமிக்கவர்களாகவும் மற்றும் மதினாவின் சூழ்நிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இந்த யூதர்களைப் பொறுத்தவரைää ''வாழ்ந்து விட்டுப் போகட்டும்"" என்ற கொள்கையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த அடிப்படையில்ää யூதர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் யூதர்கள் முழுமையான மதச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வார்கள்ää இதில் முஸ்லிம்கள் எந்தவிதத்திலும் தலையிட மாட்டார்கள். மற்றும் முஸ்லிம்களும் யூதர்களும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் பொதுவான தங்களது நலன்களில் ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொள்வது என்றும்ää மதீனாவை எதிரிகள் தாக்க வந்தால் இருவரும் இணைந்தே நகரத்தைப் பாதுகாப்பது என்றும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். முஸ்லிம்களும்ää யூதர்களும் இணைந்து மதீனா நகரைப் பாதுகாப்பும் பொறுப்பை ஏற்றிருக்கும் பட்சத்தில்ää குறைஷிகளுக்கு உதவுவதற்கென்று யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட முதற் பலனமாகும்.
இன்னும்ää தங்களது வேத வாக்கியங்களின்படி அரேபியாவில் ஒரு இறைத்தூதரொருவர் வந்துதிக்கப் போகின்றார் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். இன்னும் அந்தத் தூதர் தங்களில் இருந்தே உதிக்க இருக்கின்றார் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால்ää இவர்களது நம்பிக்கைக்கு மாறாகää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்திலிருந்து வந்துதித்தவுடன்ää யூதர்கள் அனைவரும் தங்களது வேதத்தில் இறைத்தூதர் பற்றிய அடையாளங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்ய ஆரம்பித்தனர். இன்னும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன்ää அவர் தங்களது மேலாண்மையை ஒடுக்கப் போகின்றார் என்றும் நினைக்க ஆரம்பித்தனர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கென தனித்துவமான கொள்கையை வகுத்தெடுத்து வழங்கியவுடன்ää காழ்ப்புணர்வு கொண்ட யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும்ää இஸ்லாத்திற்கு எதிராகவும் பற்பல கட்டுக் கதைகளையும்ää இன்னும் பழிவாங்கும் செயல்களையும் துவங்க ஆரம்பித்தனர்.
உமர் (ரலி) அவர்கள் யூதர்கள் பேசக் கூடிய ஹீப்ரூ மொழியை அறிந்தவராகவும்ää அதனைப் பேசக் கூடியவராகவும் இருந்தார். அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்த காரணத்தினால்ää யூதர்களுடன் நல்லதொரு பரிச்சயம் அவருக்கிருந்தது. முஸ்லிம்களிடம் மட்டுமல்லää யூதர்களிடமும் கூட உமர்(ரலி) அவர்கள் செல்வாக்கு வாய்ந்தவராக இருந்தார். ஒருநாள்ää யூதர்கள் தங்களது வேதமான தௌராத்தின் பிரதி ஒன்றைää உமர் (ரலி) அவர்களிடம் வழங்கினார்கள். அந்த தௌராத்தின் பிரதியை எடுத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சமூகம் வந்தடைந்த உமர் (ரலி) அவர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களேää இது தௌராத் வேதத்தின் பிரதியாகும் என்றார்கள். அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களும் மற்ற சில தோழர்களும் அங்கு அமர்ந்திருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..ää உமர் (ரலி) அவர்கள் கூறுவதைக் கவனிக்காதவர் போல இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää தன்னைக் கவனிக்காதிருப்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள்ää அந்தப் பிரதியிலிருந்து சில வாசகங்களைப் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில்ää உமர் (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி அபுபக்கர் (ரலி) அவர்கள்ää ''உமரே நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களை எவ்வாறு கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களது முகத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள்? என்றார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää ''இறைவனதும்ää அவனது தூதர் (ஸல்) அவர்களது கோபத்திற்கு ஆளாவதனின்றும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்"". அல்லாஹ்வே வணங்கத்தக்க இறைவன் என்றும்ää இஸ்லாத்தை அவனது மார்க்கமாகவும்ää முஹம்மது (ஸல்) அவர்களை அவனது திருத்தூதராகவும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம்ää அதில் திருப்தியும் கண்டோம் என்று கூறினார்கள்.
அப்பொழுது உமர் (ரலி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உமரே..! இந்த முஹம்மதினுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாகää நீர் அவர்களைப் பின்பற்றியவராகää இந்த முஹம்மதைக் கை விடுவீர் என்று சொன்னால்ää நீர் வழி தவறியராவீர்ää இன்னும் நேர்வழியைத் தவற விட்டவராவீர். இந்த சமயத்தில் (மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கும் பட்சத்தில்ää அவரும் என்னையே பின்பற்றக் கூடியவராக இருப்பார். பின்பு யூதர்களைக் குறிப்பிட்டு இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்ää ''அந்த யூதர்கள் (தங்களுக்கு நேர்வழி காட்ட வந்த) தூதரையே கொலை செய்து விட்டார்கள்ää இத்தகையவர்கள் எவ்வாறு உங்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும்? என்றார்கள்"".
உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய நண்பர்கள் சிலரிடம்ää தௌராத்தில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று வினவினார்கள். அவர்கள் ஆம்..! என்று ஆமோதித்தார்கள். பின் ஏன் நீங்கள் அவரைத் தூதரென்று ஒப்புக் கொள்ள மறுக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்ää ''இறைவன் தனது செய்திகளை (வானவர் தலைவரான) ஜிப்ரீல் அவர்கள் மூலமாக முஹம்மது அவர்களுக்கு வழங்குகின்றான்ää அத்தகைய ஜிப்ரீல் எங்களுடைய எதிரியாவார்"" என்று கூறினார்கள். இதனை உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்ää இதனை அடுத்து கீழ்க்கண்ட வசனத்தை இறைவன் இறக்கியருளினான் :
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அதுää தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும்ää நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. எவன் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய மலக்குகளுக்கும்ää அவனுடைய தூதர்களுக்கும்ää ஜிப்ரீலுக்கும்ää மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோää நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:97-98)
மேற்கண்ட இந்த வசனம் இறங்கியவுடன்ää யூதர்களுடனான அனைத்துத் தொடர்புகளையும் உமர் (ரலி) அவர்கள் முறித்துக் கொண்டார்கள்ää நிறுத்திக் கொண்டார்கள்.
யூதர்களின் ஒரு குலத்தவரான பனீ கைனுகா குலத்தவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டவுடன்ää இது குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்துää தனது தோழர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கலந்தாலோசனை செய்தார்கள். அப்பொழுது சில தோழர்கள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்ற பொழுதுää ''அவர்களை மதீனாவை விட்டும் அப்புறப்படுத்துவதே மேலானது"" என்று உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
பனூ நுளைர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்களை மதீனாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களது சதித் திட்டங்கள் எல்லை மீறிப் போகவும்ää இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்துää அவர்களையும் மதீனாவை விட்டும் வெளியேற்றி விட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள்.
அதாவது ஒரு முஸ்லிமை யூதர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கொலை செய்து விட்டான். இதற்கான இரத்த இழப்பீட்டுத் தொகையை யூதர்களிடமிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோரினார்கள். அதற்குää இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விதிக்கப்படும் எத்தகைய சட்ட திட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்று அவர்கள் அறிவித்தார்கள். ஆனால்ää இந்த அறிவிப்புக்குப் பின் தங்களில் ஒருவரை ரகசியமான முறையில் நியமித்துää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வரும் வழியில் வீட்டின் கூரை மீது அமர்ந்து கொண்டுää அங்கிருந்து ஏதேச்சையாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது கல்லை உருட்டி விட்டுக் கொலை செய்யத் தீர்மானித்தார்கள். இந்த சதித்திட்டம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரிய வந்தவுடன்ää உமர் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää பனூ நுளைர் கோத்திரத்தாரையும் மதீனாவில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார்கள். ஆனால்ää மதினாவில் இருந்து நாங்கள் போக மாட்டோம் என்று அடம் பிடித்த யூதர்களைää முஸ்லிம்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் வெளியேற்றினார்கள். இவ்வாறு வெளியேறிய இவர்கள் கைபர் மற்றும் சிரியாவில் தஞ்சம் புகுந்தார்கள்.
அகழ்ப் போர்
ஷவ்வால் மாதம் ஹிஜ்ரி 5ல் அகழ் போர் நிகழ்ந்தது. இந்தப் போர் ஒரு மாத காலம் நீடித்தது. குறை»களையும் மற்ற அரபுக்குடி மக்களையும் திரட்டி முழுப்பலத்தோடு மதீனாவைத் தாக்கும் முயற்சியில் åதர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்கள் படைகளைத் திரட்டுவதில் மட்டுமே வெற்றிபெற்றனர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாக அழித்திடும் அளவுக்கு ஒரு பெரும் படை திரட்டப்பட்டது. åதர்களான ஸலாம் இப்னு அபுல் ஹாகைக் அந் - நத்ரிää ஹ{யாய் இப்னு அக்தாப் அந் - நத்ரிää கினானா இப்னு அபுல் ஹ{கைக் அந் - நத்ரிää பன} அந் - நதிர்ää பன} அல் - வாயேல் இவர்களில் பலர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு மக்காக் குறை»களிடம் சென்று தங்களோடு சேர்ந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தாக்கி முஸ்லிம்களை அழித்து விடஅழைப்புவிடுத்தனர். அதன் காரணமாகப் பன்னிரண்டாயிரம் வீரர்களோடும்ää இரண்டாயிரத்து ஐநூறு ஒட்டகங்களோடும் மதீனாவை நோக்கி ஒரு பெரும் படை புறப்பட்டது. அவர்கள் ரூமா ஆற்றுப் படுகைகளில் முகாமிட்டனர். பன} கினானாää மற்றும் திஹாமாவின் மக்களும் உட்பட மொத்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அல் - ஜுருஃப் மற்றும் ஜுகாபாவுக்கு இடையே முகாமிலிருந்தனர். நஜ்திலிருந்து கத்ஃபான் கூட்டத்தாரும் வந்து தானாப் நக்மாவில் உஹதின் திசையை நோக்கி நிலை கொண்டிருந்தனர்.
உண்மையிலேயே படையெடுத்தவர்கள் åதர்கள்தான்ää அவர்களால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரைத் திரட்ட முடிந்தது. åதர்கள் தம் முழு அணியோடும் வந்திருந்ததால் அக்கூட்டணியின் பலம் 24000 வீரர்களாக உயர்ந்தது. பெரும் அணியைத் திரட்டி மதீனாவுக்கு வெளியே நிறுத்திவிட்டு åதத் தலைவர்கள் மதீனாவின் åதர்களிடம் வந்து தம் கூட்டணியில் இணையும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.
எனவேää இத்தகைய பெரும் படையுடன் நேருக்கு நேர் மோதுவது இயலுமானதொரு காரியமல்ல என்பதைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää பாதுகாப்பாக இருந்து கொண்டு எதிரிகளை எதிர்ப்பது என்று முடிவெடுத்து மதீனா நகரைச் சுற்றிலும் அகழ் வெட்டத் துவங்கினார்கள்.
இப்பொழுது முழு மதீனாவுமே மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது களைப்புத் தீர முஸ்லிம்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடிக் கொண்டே குழியை வெட்டிக் கொண்டிருந்தார்கள் :
யா அல்லாஹ்! நீ இல்லை என்றால் (நாங்கள்) நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்.
நாங்கள் ஜகாத் கொடுத்திருக்க மாட்டோம்
தொழுதிருக்க மாட்டோம். எனவேää
எங்களுக்கு நிம்மதி இறக்கியருள்வாயாக!
நாங்கள் போரைச் சந்தித்தால்
எங்களுடைய பாதத்தை உறுதிப்படுத்துவாயாக!
முன் உண்டான எதிரிகள் எங்களை மிகைத்து விடடார்கள்.
அவர்கள் குழப்பத்தை நாடினால்ää
எங்களுக்காகத் தடுத்து விடு
நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம்ää இஸ்லாத்தின் மீது நிரந்தரமாக இருப்போம் என பைஅத் (உறுதிமொழி) செய்தோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்தவர்களாக பதில் அளித்தார்கள்.
யா! அல்லாஹ்!! நன்மை என்பது மறு உலக நன்மை தான். எனவேää யா! அல்லாஹ்! அன்ஸார்களுக்கும்ää முஹாஜிர்களுக்கும் பரக்கத் செய்வாயாக!
அகழ் தோண்டுவதற்குண்டான இடங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் நிர்ணயம் செய்தார்கள். பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுää ஒவ்வொரு குழுவும் 10 கெஜ நீள அகலமுள்ள குழியைத் தோண்டப் பணிக்கப்பட்டார்கள். அவ்வாறு அமைக்கப்பட்டதொரு குழுவிற்கு உமர் (ரலி) அவர்கள் தலைமையேற்றார்கள். பின்னாளில் இந்த இடத்திற்கு அருகே ஒரு பள்ளி கட்டப்பட்டுää அதனை மக்கள் உமர் பள்ளிவாசல் என்றே அழைத்து வந்தார்கள்.
முஸ்லிம்களால் வெட்டப்பட்ட இந்த குழியை குறைஷிகளும்ää அவர்களது கூட்டுப் படைகளும் வந்து பார்த்து விட்டுää மலைத்துப் போய் நின்றனர். ஏனெனில்ää அரபுப் பிரதேசத்தில் இத்தகைய போர் முறை கொண்ட வழிமுறைகள் புதியனவாக இருந்தமையால்ää அந்தக் குழிக்கும் அப்பால் தான் அவர்கள் தங்களது படையினருடன் நிற்க முடிந்ததே தவிரää மதீனாவின் எல்லைக்குள் நுழைய முடியாதிருந்தது.
இன்னும் இந்தக் குழிகளையும் கூட பல பிரிவுகளாகப் பிரித்துää ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனிää பாதுகாப்பு வளையத்தையும் அமைத்துää பாதுகாவலர்களையும் நியமித்திருந்தார்கள். இவ்வாறு அமைக்கப்பட்டதொரு பாதுகாப்பு வளையம்ää உமர் (ரலி) அவர்களின் தலைமையின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஒருநாள்ää இந்த பாதுகாப்பு வளையத்தைத் தகர்தெறிந்து விட்டுää முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக குறைஷிகள் முயற்சி செய்தனர். உமர் (ரலி) அவர்கள் சுபைர் (ரலி) அவர்களது தலைமையில் அமைக்கப்பட்ட படையை அனுப்பி வைத்ததோடுää குறைஷிகளுக்கு அந்தப் படை மூலம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினார்கள். இதில் குறைஷிகள் பலர் கொல்லப்பட்டனர்.
ஒரு சமயம்ää குறைஷிகளுடன் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக உமர் (ரலி) அவர்களால் மதிய வேளைத் தொழுகையான லுஹர் தொழுகையை அதன் குறித்த நேரத்தில் தொழ முடியாமல் போய் விட்டது. குறைஷிகளை விரட்டி அடித்து விட்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த உமர் (ரலி) அவர்கள்ää குறைஷிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக குறித்த நேரத்தின் பொழுது தொழுக வேண்டிய தொழுகை தவறி விட்டதுää நேரமும் கடந்து விட்டதே என்று வருத்தப்பட்டுக் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..! உமரே..! நானும் உங்களது நிலைமையில் தான் இருந்து கொண்டிருக்கின்றேன். உங்களைப் போலவே நானும் இன்னும் தொழவில்லை என்று கூறிää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இமாமாக முன்னிற்கு உமர் (ரலி) அவர்கள் தனது லுஹர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
இந்த அகழ் போரின் முற்றுகை ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்ததுää இதன் காரணமாக முஸ்லிம்கள் மிகப் பெரும் சங்கடங்களை எதிர் கொள்ள நேர்ந்தது. உணவுக் கையிருப்பும் குறைந்து கொண்டே வந்ததுää மற்ற அத்தியவசியப் பொருட்களின் இருப்பும் கூட பிரச்னைக்குள்ளாகி வந்து கொண்டிருந்தது. ஆனால் முஸ்லிம்கள் எந்தவித நம்பிக்கையீனத்திற்கும் ஆளாகமல்ää இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இறைவன் முஸ்லிம்களுக்கு நிம்மதியையும்ää நிவாரணத்தையும் வழங்கினான். எதிரிகளினுடைய முகாமில் பலவித கருத்து முரண்பாடுகள் ஏற்படத் துவங்கின. அவர்களது அத்தியாவசியத் தேவைகளும் கூட குறைந்து கொண்டே வந்தன. இவற்றிற்கும் மேலாக பலமான புயல் காற்று வீசத் துவங்கியதும்ää அவர்களது மன உறுதியை இழக்கச் செய்வதற்குக் காரணமாக அமைந்தது. முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டிருந்த அதேவேளையில்ää குறைஷிகளும் அவர்களது தோழர்களும் புயற்காற்றினால் அழைக்கழிக்கப்பட்டார்கள். இறுதியாகää அபூசுஃப்யான் தனது படை முகாம்களை காலி செய்ய உத்தரவிட்டதுடன்ää வாபஸ் பெற்றுக் கொண்டு மக்காவுக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களது கூட்டுப் படைகளும் கூட இடத்தைக் காலி செய்து விட்டார்கள்.
இறைவனின் மாபெரும் கருணை மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தெளிந்த வழிகாட்டுதல்களின் மூலமாக முஸ்லிம்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றார்கள்.
ஹ{தைபிய்யா உடன்படிக்கையும் அதன் விளைவுகளும்
கி.பி.628 ன் ஆரம்பத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ராச் செய்யும் நிமித்தமாக மக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். அவர்களுடன் கிட்டத்தட்ட 1400 தோழர்களும் உடன் சென்றார்கள். இவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் சென்றார்கள். மேலும்ää மக்காவைத் தரிப்பதற்கான தங்களது நோக்கத்தை குறைஷிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக வேண்டிää இந்தப் பயணம் அமைதிப் பயணம் என்பதை அவர்களுக்கு அறிவிக்குமுகமாகவும் தங்களுடன் போருக்கான ஆயுதங்கள் எதனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää அவர்களது தோழர்களும் உடன் எடுத்துச் செல்லவில்லை.
இவ்வாறாக உம்ராவுக்காக வேண்டி பயணப்பட்ட முஸ்லிம்கள் மதீனாவின் புறவெளிப்பகுதியாக துல்குலைஃபா என்ற இடத்தில் சற்று தாமதித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். அப்பொழுதுää இறைத்தூதர் (ஸல்) அவர்களை அண்மித்த உமர் (ரலி) அவர்கள்ää குறைஷிகளை நாம் நம்ப இயலாதுää மேலும் ஆயுதங்கள் ஏதுமின்றி மக்காவை நோக்கிச் செல்வது பாதுகாப்பற்றது என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். தற்காப்பிற்காகவேனும்ää முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்திச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää தங்களது தோழர்களில் சிலரை அனுப்பி வைத்துää ஆயுதங்களைக் கொண்டு வரச் செய்தார்கள்.
இப்பொழுது முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்ட குறைஷியர்கள்ää காலித் பின் வலீத் மற்றும் இக்ரிமா பின் அபூ ஜஹ்ல் ஆகியோர் தலைமையில் இருநூறு குதிரை வீரர்களை அனுப்பிää மக்காவை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் மற்றும் அவர்களது தோழர்களையும் மேலும் முன்னேறி வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்காவை நோக்கிய தங்களது பயணம் தடை படாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுதுää அநேகமான தோழர்கள் தங்களது முயற்சியில் பின்னடைவு தேவையில்லைää நாம் முன்னேறிச் செல்வோம்ää நாம் தடுக்கப்படுவோமேயானால் அதனை எதிர்த்துப் போரிடுவோம் அல்லது அவர்களது தடுக்கவில்லையென்றால் நாம் அமைதியாக உம்ராச் செய்து விட்டு வந்து விடுவோம்ää போர் செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தைக் கூறினார்கள்.
இந்தக் கலந்தாலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதுää மக்காவை நோக்கிய இந்த நமது பயணம் இடையில் குறைஷிகளால் வழி மறிக்கப்படாமல் இருக்கää மக்காவிற்கான மாற்று வழியை அறிந்தவர்கள் நம்மில் யாராவது இருந்தால் முன்வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுதுää ஒரு தோழர் முன்வந்ததோடுää முஸ்லிம்களை மக்காவை நோக்கி அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்ää இன்னும் அவர் அழைத்துச் சென்ற பாதையானதுää கற்பாறைகளைக் கொண்ட மேடு பள்ளம் நிறைந்த பாதையாக இருந்தது. மக்காவை நோக்கிய இந்தப் புதிய பாதை முத்னியா என்ற இடத்தைத் தாண்டிää இப்பொழுது ஹ{தைபிய்யா என்ற மக்காவின் கீழ்ப்பகுதியை அடைந்ததுää இதுவும் மக்காவிற்கு உட்பட்ட புனிதப்பகுதியாகவே கருதப்பட்டது.
இப்பொழுது முஸ்லிம்கள் இந்த ஹ{தைபிய்யா என்ற இடத்தில் கூடாரம் அடித்துத் தங்கினார்கள். இந்த சமயத்தில் உர்வா பின் மஸ்ஊத் என்பவர் குறைஷிகளின் பிரதிநிதியாக வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் ஊடாகää குறைஷிகள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள்ää உங்களை மக்காவிற்குள் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற தொணியில்ää முஸ்லிம்களது மனதில் குறைஷிகளைப் பற்றி அச்ச உணர்வை ஊட்டும் வகையில் பேச ஆரம்பித்தார். மேலும்ää பிரச்னை முற்றியவுடன் உங்களது தோழர்கள் உங்களுக்கு கை கொடுக்க மாட்டார்கள்ää உங்களைக் கைவிட்டு ஓடி விடவும் தயாராகி விடுவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் கூட அவர் மிரட்டும்பாணியில் பேச ஆரம்பித்தார். இவரின் பேச்சைச் செவிமடுத்துக் கொண்டிருந்த நபித்தோழர்கள்ää ''அல்லாஹ்வின் சாபம் உன்மீது உண்டாகட்டுமாக""ää ''இறைத்தூதர் (ஸல்) அவர்களை நாங்கள் கைவிட்டு விடுவோம் என்று நீர் எவ்வாறு சொல்வதற்கு உமக்கு என்ன தைரியம்"" என்று கோபத்தில் உச்சியில் நின்று கொண்டுää அவரை நோக்கி சூடான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். இன்னும்ää ''நாங்கள் அவரைக் கைவிட மாட்டோம்ää இறுதி வரை நின்று அவருக்காகப் போராடுவோம்"" என்று சூளுரைத்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டுää குறைஷிகளிடம் திரும்பிய உர்வா அங்கு தான் கண்ட அனுபவங்களை அவர்களிடம் விவரிக்கத் துவங்கினார் :
''குறைஷிகளே..! நான் மன்னாதி மன்னர்களைப் பார்த்திருக்கின்றேன். முஹம்மது – அவரது தோழர்களுக்கிடையில் மன்னரைப் போல வாழுகின்ற ஒருவரை நான் பார்த்ததேயில்லை. அவர் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள ஒலுச் செய்கின்றார் எனில்ää வழிந்தோடக் கூடிய தண்ணீரைக் கூட அவரது தோழர்கள் தரையில் விழ அனுமதிப்பதில்லை. ஏன்.. அவரது உடம்பிலிருந்து விழக் கூடிய முடியைக் கூட அவர்கள் எடுத்து வைத்துக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட அவரைää அவர்கள் எந்த நிலையிலும் நம்மிடம் சரணடையச் செய்து விடுவார்கள் என்று எவ்வாறு தான் எதிர்பார்க்க இயலும்""ää என்று கூறி முடித்தார்.
இந்த நிலையில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கிடையில் கலந்தாலோசனை செய்து கொண்டிருந்த பொழுதுää உமர் (ரலி) அவர்களை குறைஷிகளிடம் அனுப்பி வைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என்றதொரு முடிவை எடுத்த பொழுதுää 'தன்னுடைய விட்டுக் கொடுக்காத பண்புää குறைஷிகளிடம் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி வைக்காது" என்று கூறிய உமர் (ரலி) அவர்கள்ää குறைஷிகளின் பெருமதிப்புக்குரியவரானää இன்னும் அமைதியான சுபாவம் கொண்டவரான உதுமான் (ரலி) அவர்களை அனுப்பி வைப்பது சிறந்தது என்ற ஆலோசனையை உமர் (ரலி) அவர்கள் முன் வைத்தார்கள். உமர் (ரலி) அவர்களுடைய இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää குறைஷிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களை அனுப்பி வைத்துää தாங்கள் உம்ராச் செய்யும் நோக்கத்துடன் மட்டுமே மக்காவில் வர விரும்புவதாக அவர்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டுää அதற்குரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு வரும்படி அனுப்பி வைத்தார்கள்.
இவ்வாறாக அனுப்பி வைக்கப்பட்ட உதுமான் (ரலி) அவர்கள் மூன்று நாட்களாக திரும்பி வராத காரணத்தால்ää குறைஷிகளால் உதுமான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää அவரது தோழர்களும் நம்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். உமர் (ரலி) அவர்கள் கோபத்தில் எரிமலையாக நின்று கொண்டுää தனது ஆயுதங்களைத் தயாராக வைத்துக் கொண்டவராக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவிற்காகக் காத்திருந்தார்கள். ''அதாவதுää உதுமான் (ரலி) அவர்கள் குறைஷிகள் கொலை செய்திருப்பார்களென்று சொன்னால்ää அத்தகையவர்களுடன் போர் தொடுத்துப் பழிக்குப் பழி எடுப்பது அவசியம் என்று உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உமர் (ரலி) அவர்களின் கருத்தில் உள்ள நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டவராகää தன்னுடைய தோழர்களை அழைத்து நிராகரிப்போருக்கு எதிராகப் போர் புரிய வேண்டியதிருப்பதையிட்டு கலந்தாலோசனை செய்ததோடுää அவர்கள் அனைவரிடமும் உறுதிப் பிரமாணம் வாங்கிக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டுää ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சத்தியப் பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்களின் இந்த தியாகத்தை மெச்சி இறைவன் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோää அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவேää எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோää நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான். (48:10)
இந்த இறைவனுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்துச் செய்யப்பட்ட இந்த சத்தியப் பிரமாணம் பிந்தைய நாட்களில் ''பைஅத்துர் ரிழ்வான்"" என்று சிறப்பித்துக் கூறப்பட்டது.
1.முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் சென்று விட வேண்டும்.
2.அடுத்த ஆண்டு வர வேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே தங்கி திரும்பிச் சென்று விட வேண்டும்.
3.ஆயுதங்களோடு வரக்கூடாது. வெறும் வாளுடன் மட்டும் வரவேண்டும். அதுவும் வெளியே எடுக்கப் படாமல் உறைக்குள் போட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
4.மக்கா நகரில் எஞ்சியிருக்கும் முஸ்லிம்களில் ஒருவரையும் முஸ்லிம்கள் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. முஸ்லிம் ஒருவர் மக்கா நகர் திரும்பி வர விரும்பினால் அவரைத் தடுக்கக் கூடாது.
5.இறை மறுப்பாளர்கள் அல்லது முஸ்லிம்களில் எவரேனும் மதீனா நகருக்கு வந்து விட்டால் அவரை மக்கா நகருக்குத் திருப்பியனுப்பிட வேண்டும். ஆனால் முஸ்லிம்களில் எவராவது மக்கா நகருக்குச் சென்றால் அவர் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.
6.அரபுக் குலங்கள் விரும்பினால் முஸ்லிம்கள் அல்லது இறை மறுப்பாளர்கள் இருவரில் எவரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ள உரிமையுண்டு.
7.இந்த ஒப்பந்தம் பத்தாண்டுகள் வரை நீடித்திருக்கும். (அதாவது பத்தாண்டுகளுக்குப் போர் புரிய மாட்டோம்)
இந்த நிபந்தனைகள் (ஷரத்துகள்) அனைத்தும் வெளிப்படையாகப் பார்க்கும்போது முஸ்லிம்களுக்கு எதிரானவையாக இருந்தன. இவற்றிலிருந்து முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்துää பணிந்து போய் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.
எனவேää இந்த வருடம் முஸ்லிம்கள் உம்ராச் செய்யாமலேயே திரும்ப வேண்டியிருந்தது. வருகின்ற வருடத்தில் ஹஜ்ஜுச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதோடுää அந்த காலகட்டத்தில் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.
மேற்கண்ட ஒப்பந்தங்கள் வெளிப்படையாக குறைஷிகளுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால்ää இந்த பாதகமான போக்கை ஜீரணித்துக் கொள்ள இயலாதவர்களாக உமர் (ரலி) அவர்கள் காணப்பட்டார்கள். மேலும்ää இந்த விவகாரத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டே தீருவது என்று தீர்மானித்தவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு முறையிட்டார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பி வைக்கப்பட்டவர்களல்லவா? நிச்சயமாக..! என்றார் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். நம்முடைய எதிரிகள் இணைவைப்புப் பழக்கத்தில் இருக்கின்ற சிலைவணங்கிகள் அல்லவா? என்று கேட்டார் உமர் (ரலி). அதில் சந்தேகமென்ன.. நிச்சயமாக..! என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். பின்னர்ää ''நீங்கள் ஏன் நம்முடைய மார்க்கத்தை தாழ்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்? என்றார் உமர் (ரலி). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது பதில் கூறினார்கள்ää ''நான் இறைவனது தூதராவேன்ää இன்னும் அவனது கட்டளைகளுக்கு மாற்றமாக என்னால் செயல்பட முடியாது"".
இந்த பதிலைக் கேட்ட உமர் (ரலி) அமைதியாக இருந்து விட்டார்கள்ää ஆனால் இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு பாதகமானதாக ஆகி விட்டதே என்று அவர்கள் வேதனைப்பட்டார்கள். அடுத்ததாகää அபுபக்கர் (ரலி) அவர்கள் பக்கம் திரும்பிய உமர் (ரலி) அவர்கள்ää இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுங்களேன் என்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களோ..ää
''நம்மைக் காட்டிலும் இதன் சாதக பாதகங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக அறிந்தவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதனைச் செய்தாலும் அது முஸ்லிம்களின் நல்வாழ்விற்காகவே அமைந்திருக்கும்"" என்றார்கள். இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். முரண்பாடான கருத்துகளை முன்வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நிர்ப்பந்தமளிக்காதீர்கள் என்றும் அறிவுரை கூறினார்கள்.
இதன் பின்னர் ஹ{தைபிய்யா உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் தரப்பில் கையெழுத்திட்ட பலரில் உமர் (ரலி) அவர்களும் அடங்குவார்கள்.
அப10ஜந்தல் (ரலி) அவர்களின் விவகாரம்
இப்போதுதான் சமாதான உடன்படிக்கைப் பத்திரத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தற்செயலாக குறைஷிப் பிரதிநிதி சுஹைலின் மகனார் அப10ஜந்தல் (ரலி) அவர்கள் மக்கா நகரிலிருந்து எப்படியோ தப்பியோடி அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். விலங்குகளை அணிந்து கொண்டு முஸ்லிம்களின் முன்னால் வந்து விழுந்து விட்டார்கள்! அனைவருக்கும் தன் பரிதாப நிலையை எடுத்துரைத்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்கு தண்டனையாக அவர்களுக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் இழைக்கப்பட்டு வந்தன என்று எடுத்துக் கூறினார்கள்.
அப10ஜந்தல் அண்ணலாரிம்ää 'நாயகமே! என்னை இறைமறுப்பாளர்களிடமிருந்து விடுவித்து தங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்" என்று வேண்டினார்கள். இதனைக் கண்ட சுஹைல்ää 'சமாதான ஒப்பந்தத்தை நிறைவேற்றிட இதுவே முதல் சந்தர்ப்பமாகும். ஒப்பந்தத்தின் படி தாங்கள் அப10ஜந்தலை தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாது" என்று கூறினார்.
இது மிகச் சிக்கலான ஒரு நேரமாக இருந்தது. ஒருபுறம் உடன்படிக்கை மதித்து நடக்க வேண்டியிருந்தது. மற்றொரு புறம் நிரபராதியான ஒரு முஸ்லிமின் மீது அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக கொடுமையிழைக்கப்படும் பிரச்சனை முன் நின்றது. மேலும் அவர் 'என் முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் என்னை இறை மறுப்பாளர்களின் கரத்தில் ஒப்படைக்க விரும்புகிறீர்களா?" என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்கள் அனைவரும் இந்தப் பரிதாப நிலையைக் கண்டு கொதித்தெழுந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் 'தாங்கள் உண்மையான இறைத் தூதராயிருப்பின் நாங்கள் இந்த இழிவை ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?" என்று கூடக் கேட்டு விட்டார்கள்.
ஆனால் அண்ணலார் 'நான் இறைவனின் திருத்தூதரேயாவேன்ää அவனது கட்டளைக்கு நான் மாறு செய்ய முடியாது. இறைவன் எனக்கு உதவி புரிவான்" என்று கூறினார்கள். ஆகää சமாதான உடன்படிக்கை எழுதி முடிக்கப்பட்டது. அப10ஜந்தல்ää உடன்படிக்கையின் விதிமுறைப்படி திரும்பிச் செல்ல நேரிட்டது. இஸ்லாத்தின் தொண்டர்கள் இறைத் தூதருக்குக் கீழ்ப்படிவதற்கான கடும் சோதனை ஒன்றில் வெற்றி பெற்றார்கள். ஒருபுறம் வெளிப்படையில் இஸ்லாம் இழிவுபடுத்தப்பட்டிருந்தது. அப10ஜந்தலின் பரிதாப நிலை இருந்தது. மற்றொரு புறம் இறைத் தூதருக்கு எந்தக் கேள்வியும் மறுப்புமின்றி கீழ்ப்படியும் பண்பும் இருந்தது.
அண்ணலார் அப10ஜந்தலிடம் கூறினார்கள். 'அப10ஜந்தலே! நீர் பொறுமையைக் கடைப்படியும். இறைவன் உங்களுக்கும் மற்ற நிரபராதிகளுக்கும் உங்களைப் போல் கொடுமைக்குள்ளானவர்களுக்கும் ஒரு வழியைக் காட்டுவான். இப்போது சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. இனி நாம் அவர்களிடம் ஒப்பந்தத்தை முறிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ முடியாது" என்று கூறினார்கள். அப10ஜந்தல் (ரலி) அவர்கள் எப்படி அங்கு வந்தார்களோ அப்படியே விலங்குகளை அணிந்த வண்ணம் திரும்பிச் சென்று விட்டார்கள்.
இப்பொழுது முஸ்லிம்கள் தங்கள் தங்கள் கூடாரத்தைக் களைத்து விட்டு மதீனாவை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தார்கள். உமர் (ரலி) அவர்களோ.. மிகவும் கவலையுடையவராக இருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தில் குறைஷிகளின் கை ஓங்கி விட்டதே என்று வேதனைப்பட்டார்கள். இந்த நிலையில் சூரா அல் ஃபத்ஹ் ன் வசனங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டது.
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும்ää பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்துää உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். மேலும்ää அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான். (48:1-3)
உமர் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää உமரே..! இந்த ஒப்பந்தம் ஒரு தெளிவான வெற்றி என்று இறைவனே தன்னுடைய வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தி விட்டான்ää இந்த ஒப்பந்தம் நமக்கு வெற்றியே ஒழிய தோல்வியல்ல என்றார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்.
நடந்து முடிந்த ஹ{தைபிய்யா பற்றி கணக்கீடு செய்வதில் அபுபக்கர் (ரலி) அவர்களது நிலை உமர் (ரலி) அவர்களை விட மாறுபட்டதாக இருந்தது. அதாவது :
ஹ{தைபிய்யா உடன்படிக்கையை போன்றதொரு மிகப் பெரிய வெற்றி இஸ்லாத்தில் இல்லையென்று சொல்லும் அளவுக்குää அதன் பின்விளைவுகள் அமைந்திருந்தன. மனிதர்கள் எப்பொழுதும் அவசரக்காரர்களாக இருக்கின்றார்கள்ää ஆனால் இறைவன் எல்லாவற்றிற்கும் தகுந்த நேரத்தையும்ää காலத்தையும் நிர்ணயித்தே வைத்திருக்கின்றான். உடன்படிக்கைக்கு முன்பதாகää முஸ்லிம்களுக்கும்ää இன்னும் ஏனைய மனிதர்களுக்குமிடையே ஒரு தடைச்சுவர் இருந்து வந்ததுää ஒருவர் மற்றவருடன் பேச மாட்டார்கள்ää எப்பொழுதெல்லாம் இரு குழுக்களும் சந்தித்துக் கொண்டார்களோ உடனே சண்டையும் அவர்களுக்குள் ஆரம்பமாகி விடும் என்ற நிலையும் நிலவி வந்தது. உடன்படிக்கைக்குப் பின்புää முன்பு நிலவி வந்த பகையுணர்வு மறைந்துää இரு குழுக்களுக்குமிடைய பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட ஆரம்பித்தது. நடுநிலையோடு இஸ்லாத்தினைப் பார்த்த மக்கள் உடனடியாக இஸ்லாத்தின்பால் கவரப்பட்டார்கள்ää உடன்படிக்கைக்குப் பின்னராக இருபத்தி இரண்டு மாத கால அவகாசத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மக்கள் இஸ்லாத்திற்குள் பிரவேசிக்க ஆரம்பித்தார்கள்ää இன்னும் இஸ்லாத்தின் கொள்கைகள் அரேபியாவையும் தாண்டி எல்லாப் பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.
ஹ{தைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு
ஹ{தைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு ஏற்பட்ட சில மாற்றங்கள் உமர் (ரலி) அவர்களை நேரடியாகவே பாதித்தன.
உடன்படிக்கையின்படிää குறைஷிகளில் எந்த ஆணாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வாரென்றால்ää அவ்வாறு ஏற்றுக் கொண்ட நபரை மீண்டும் குறைஷிகளிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த நிலையில்ää சில குறைஷிகள் இஸ்லாத்தினைத் தழுவிய பொழுதும்ää ஒப்பந்தத்தின்படி அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதுää திருப்பியும் அனுப்பி வைக்கப்பட்;டார்கள்.
இந்த நிலையில் மேலும் மேலும் மாற்றங்கள் ஏற்பட்ட பொழுதுää பெண்களும் கூட தங்களது பெற்றோர்கள் மற்றும் கணவர்களின் விருப்பத்திற்கு மாறாக இஸ்லாத்தினைத் தழுவ ஆரம்பித்தார்கள். அவ்வாறு இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட பெண்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் கோரினார்கள். இந்த நிலையில்ää பெண்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் திருப்பி ஒப்படைக்க இருந்த நேரத்தில் கீழ்க்காணும் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான் :
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால்ää அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால்ää காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில்ää அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால்ää இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (60:10)
இந்த நேரத்தில் மேலும் ஒரு வசனம் இறக்கியருளப்பட்டது. அதன்படிää
மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்;.
இணைவைப்பில் உள்ள பெண்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் அவர்களை மணமுடித்துக் கொள்ள வேண்டாம். அதே போல இணைவைப்பாளர்களுக்கு உங்களது பெண்களையும் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்"" என்று அந்த வசனம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியது.
உமர் (ரலி) அவர்களுக்கு மூன்று மனைவியர் இருந்தனர்ää அவர்களாவன :
ஸைனப் பின்த் மாஸ{ன் ஜமீஆ
மலைகா பின்த் ஜாருல் ஹ{ஸைய்ää மற்றும்
கரீபா பின்த் அபீ உமைய்யா மக்சூமி
இவர்களில் ஸைனப் பின்த் மாஸ{ன் ஜமீஆ (ரலி) மட்டுமே இஸ்லாத்தினை ஏற்றிருந்ததோடுää மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து வந்திருந்தார்கள். மற்ற இரண்டு மனைவியர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாதிருந்ததோடுää மதினாவிற்கும் அவர்கள் ஹிஜ்ரத் செய்து வரவில்லை. ஹ{தைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர்ää மற்ற இரண்டு மனைவிமார்களையும் உமர் (ரலி) அவர்கள் விவாகரத்துச் செய்து விட்டார்கள். இவர்களும் முறையேää மலைக்கா என்பவர் அபூ ஜஹ்ம் பின் ஹஸீஃபா என்பவரையும்ää கரீபா அபுபக்கர் (ரலி) அவர்களின் மகனும் இன்னும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாதவருமான அப்துர் ரஹ்மான் என்பவரையும் மறுமணம் செய்து கொண்டார்கள்.
ஹ{தைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர்ää பெண்களிலிருந்து முதன் முதலாக மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்ää ஸாஹிபா பின்த அல் ஹாரிஸ். இவரது கணவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை அறிந்த குறைஷிகள் ஸாஹிபா (ரலி) அவர்களை தங்களிடம் திருப்பி அனுப்பி வைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கோரிய பொழுதுää அவ்வாறு திருப்பி அனுப்பி வைக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டதோடுää நமக்கிடையே உள்ள ஒப்பந்தமானது ஆண்களை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியதுää பெண்களை அல்ல என்று கூறிவிட்டார்கள். ஸாஹிபா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.
மதீனாவில் வைத்துää அன்ஸாரிப் பெண்ணான ஆஸியா பின்த் ஸபத் அன்ஸாரி (ரலி) என்பவரை உமர் (ரலி) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். மணமுடித்துக் கொண்டதன் பின் இவரது பெயரை ஜாமீலா என்று உமர் (ரலி) மாற்றியமைத்துக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் இவருடன் கூஃபாவில் வசித்து வந்தார்கள். சில வருடங்களுக்குää ஜமீலா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய மனைவியாகத் திகழ்ந்ததாக அறிவிப்புகள் கூறுகின்றன. சில வருடங்கள் கழித்து இவரை விவாகரத்துச் செய்து விட்ட உமர் (ரலி) அவர்கள்ää தன்னுடைய இல்லத்தை மதீனாவில் அமைத்துக் கொண்டார்கள். அவரை விவாகரத்துச் செய்ததன் காரணம் என்னவென்பது அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பனீ முஸ்தலக் மீது நடவடிக்கை
கி.பி.628 ல்ää பனீ முஸ்தலக் கோத்திரத்தார்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு செய்தி எட்டுகின்றது. முஸ்லிம்களின் மீது பனீ முஸ்தலக் கோத்திரத்தார்கள் தாக்குதலைத் தொடுப்பதற்கு முன்பாகவே அவர்களது முதுகெலும்பை உடைத்து விட வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்மானித்தார்கள்.
எனவேää இந்தப் போரை இறைத்தூதர் (ஸல்) அவர்களே முன்னின்று தலைமையேற்று நடத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய அந்தப் படையில்ää உமர் (ரலி) அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். மேலும்ää இந்தப் படையில் மதீனாவின் முந்தைய தலைவனாக இருந்தவனும்ää முஸ்லிமாக இருந்து கொண்டே நயவஞ்சக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அப்துல்லா இப்னு உபை - யும் இடம் பெற்றிருந்தான்.
இப்பொழுது பனீ முஸ்தலக் கோத்திரத்தார்களை கடல் மார்க்கத்திற்கு மிக அருகில் உள்ள இடமான முரைஸி என்ற இடத்தில் வைத்து முஸ்லிம்கள் சந்தித்தார்கள். இந்தப் போரில் பனீ முஸ்தலக் கோத்திரத்தார்கள் படுதோல்வி அடைந்ததோடுää கடுமையான இழப்புகளையும் சந்தித்தார்கள்ää முஸ்லிம்களுக்கு கனிசமான அளவில் போர்ப் பொருட்கள் கிடைத்தனää அவற்றில் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் அடங்குவர்.
பனீ முஸ்தலக் வெற்றி கொள்ளப்பட்டவுடன்ää தண்ணீர் துறைப் பகுதியாகப் பார்த்து முஸ்லிம்கள் கூடாரமடித்துத் தங்கினார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்களின் பணியாளரான ஜஹ்ஜா பின் மஸ்ஊத் என்பார் தனது குதிரைக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அந்தத் தண்ணீர்த் துறைப் பக்கமாக அழைத்துச் சென்றார். அப்பொழுதுää இவருக்கும் சினான் பின் வபார் அல் ஜுஹானி என்ற அன்சாரித் தோழருக்குமிடையே சிறு வாய்த் தகராறு ஏற்படுகின்றது. இந்த நிலையில் சினான் தனக்கு ஆதரவாகச் சில அன்ஸாரித் தோழர்களை அழைத்தார்ää அதே நேரத்தில் ஜஹ்ஜா வோ தனக்கு ஆதரவாக முஹாஜிர்களை அழைத்தார்.
இந்த சம்பவத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அப்துல்லா இப்னு உபைää முஹாஜிர்களைப் பார்த்து தகாத வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தாhன். அவன் கூறினான் :
''முஹாஜிர்கள் நம்முடைய முன்னுரிமைகள் குறித்து விவாதம் செய்கின்றார்கள். நம்முடைய நகரத்திலேயே இருந்து கொண்டு இவர்கள் நம்மை அதிகாரம் செலுத்தப் பார்க்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் நமக்கு ஈடாக முடியாதுää முந்தைய காலத்து மக்கள் அவர்களைப் பற்றி சும்மாவா சொல்லி வைத்தார்கள்ää ''நாய்க்கு என்ன தான் உணவளித்தாலும்ää அது குரைக்கத் தான் செய்யுமென்று"" என்றும் மக்காவின் முஹாஜிர்கள் பற்றி ஏளனமாகக் கூறினான்.
இவன் கூறிய இந்த இழி சொற்களைச் செவியுற்ற அன்ஸாரிச் சிறுவரான ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள்ää நடந்த சம்பவத்தையும் அதில் அப்துல்லா இப்னு உபை கூறிய வார்த்தைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்து விடுகின்றார்கள். அது சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருகில் உட்கார்ந்திருந்த உமர் (ரலி) அவர்கள் வெகுண்டெழுந்துää ''இறைத்தூதர் (ஸல்) அவர்களே..ää எனக்கு உத்தரவு தாருங்கள்ää அவனது தலையைக் கொய்து வருகின்றேன்"" என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..ää
''உமரே சற்று அமைதி அடையும்."" அப்துல்லாவைக் கொல்வதற்கு நான் உங்களுக்கு அனுமதி தந்தால்ää பாருங்கள்ää முஹம்மது அவரது தோழர்களைக் கொலை செய்கின்றார் என்று மக்கள் கருத மாட்டார்களா? என்று கேட்டார்கள்.
இதனையடுத்துää உடனே மதீனாவை நோக்கி முஸ்லிம்களை பயணப்படுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரைவுபடுத்தினார்கள். பயணம் புறப்பட்ட அந்த நேரம் நல்ல மதிய வேளையாக இருந்ததோடுää பயணத்திற்கு உகந்த நேரமாகவும் அது இருக்கவில்லை. ஆனால் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டவர்களாகää ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கின்றதுää எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த நேரத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள்ää அதன் நோக்கத்தை அல்லாஹ்வின் தூதரே அறிவார்கள் என்று மக்கள் தங்களுக்குள் சமாதானம் கூறிக் கொண்டு பயணப்படலானார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சென்று சந்தித்த அப்துல்லா பின் உபை தன் மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் உண்மையல்லää நான் அவ்வாறு கூறவில்லை என்று கூறினான். இன்னும் அவனுக்கு ஆதரவாகச் சில அன்ஸார்களும் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்ää அவர் அவ்வாறு கூறியிருக்க மாட்டார் என்று கூறினார்கள். ஆனால் இது விசயத்தில் அமைதியாக இருப்பதே நல்லது என்று முடிவெடுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கருத்தையும் கூறாது அமைதியாக இருந்து விட்டார்கள்.
முஸ்லிம்கள் மதீனாவை அடைந்ததும்ää மதீனாவெங்கும் இதே பேச்சாகத் தான் இருந்தது. பல கருத்துக்களின் அடிப்படையில் அப்துல்லா இப்னு உபையையே பொதுவாக மக்கள் குற்றஞ்சாட்டினார்கள். இந்தக் குற்றச்சாட்டினைக் கேள்வியுற்ற அப்துல்லா இப்னு உபையுடைய மகன்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து :
''நான் எதனைக் கேள்விப்பட்டேனோää அதற்காக என்னுடைய தந்தையை நீங்கள் கொல்ல விரும்புவதாக நான் அறிய வருகின்றேன். அதுவே உங்களது நோக்கமாக இருந்தால்ää அந்த உத்தரவை எனக்குத் தாருங்கள்ää அவரது தலையை நான் கொய்து வருகின்றேன். என்னைத் தவிர வேறு யாருக்காவது இந்த சந்தர்ப்பத்தை வழங்கி விடுவீர்களோ என்று நான் அச்சப்படுகின்றேன்ää இன்னும் அந்தக் கொலையாளி மக்களுடன் கலந்து நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க எனது மனதும் பொறுக்காதுää அதன் காரணமாக நான் அவரைக் கொன்று விட்டால்ää ஒரு இறைநிராகரிப்பாளரைக் கொன்றதற்காக நான் ஒரு இறைநம்பிக்கையாளரைக் கொன்றதாகி விடும்ää ஆகையால் நான் நரகத்திற்கு போக வேண்டியதாகி விடும்"" என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த உரையைக் கேட்டவுடன்ää இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாகää ''இஸ்லாத்திற்காக வேண்டி தங்களது தந்தைமார்களைக் கூட அர்ப்பணம் செய்வதற்குத் தயாராக முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றார்கள்"" உனக்கே எல்லாப் புகழும் யா அல்லாஹ் என்று கூறினார்கள்.
அப்துல்லா இப்னு உபை அவர்களின் மகனாரின் பக்கம் திரும்பிய கருணையின் தாயகம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் :
''உங்களது அர்ப்பணங்களுக்கு நன்றிகள் பல. உங்களது தந்தைக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன்"" என்று உறுதி கூறுகின்றேன் என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கருணையைப் போற்றி புகழ்ந்தார் அப்துல்லா இப்னு உபையின் மகனார். அவர் அங்கிருந்து நகர்ந்ததும்ää தனக்கு அருகில் இருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்து :
''உமரே..! இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நீங்கள் அவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்ட நாளில் நான் உங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கும் பட்சத்தில்ää இந்த மக்களே அவனுக்கு ஆதரவாகத் திரும்பி இருக்கக் கூடும். இன்றைக்கு பாருங்கள்ää அவருடைய சொந்த மகனே அவரைக் கொல்வதற்கு முன் வந்திருக்கின்றார்.""
இதனைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள்ää '' நிச்சயமாகää நீங்கள் அறிவதை நான் அறிய மாட்டேன்""ää உங்களது தொலைநோக்குச் சிந்தனை தீர்க்கமானதுää இன்னும் அருள்செய்யப்பட்டது"" என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும்
பனீ முஸ்தலக் போர்ää இன்னுமொரு துரதிருஷ்டமானதொரு சரித்திரச் சம்பவத்தை ஏற்படுத்தியதுää அது சில காலங்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் மிகவும் தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவித்தது. ஒவ்வொரு சமயமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவை விட்டும் வெளிக் கிளம்பும் பொழுதும்ää போருக்காக வெளிக்கிளம்பும் பொழுதும் அவர்களுடன் அவர்களது துணைவியார் ஒருவர் உடன் செல்வது வழக்கம். அந்த அடிப்படையில்ää பனீ முஸ்தலக் போரின் பொழுது ஆயிஷா (ரலி) அவர்கள் உடன் வந்தார்கள். பனீ முஸ்தலக் முற்றுகை முடிவடைந்தவுடன்ää மதீனாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது ஒட்டகையின் மீது வைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் அமர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்துல்லா உபை யினால் எழுந்த எதிர்பாராத சம்பவம்ää மற்றும் திடீர் பயணப் புறப்பாடு ஆகிய அனைத்தும் ஏற்கனவே திட்டமிருந்தபடி பயணம் அமையாமல்ää ஒருவித குழப்பமான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் மதீனாவிற்குச் சற்றுத் தொலைவில் இரவில் கூடாரமடித்து முஸ்லிம்கள் ஓரிடத்தில் தங்கினார்கள். அதிகாலை நேரம் வந்தவுடன் அந்த இடத்தை விட்டும் கிளம்புமாறு மக்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் தனது இயற்கைத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு சற்றுத் தொலைவான இடத்திற்குச் சென்று வந்தார்கள். அவர்கள் தனது ஒட்டகைக்கு அருகில் வந்ததும்ää தனது கழுத்தில் இருந்த முத்து மாலை காணாததை அறிந்து கொண்டார்கள். தனது இயற்கைத் தேவையை நிறைவு செய்த இடத்தில் அது விழுந்திருக்கக் கூடும் என நினைத்த ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த முத்து மாலையைத் தேடிக் கொண்டு மீண்டும் அந்த இடத்திற்கு விரைகின்றார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில்ää அவர்கள் பயணம் செய்து வந்த ஒட்டகத்தில் இருந்த கூடாரம் மூடி இருந்ததன் காரணமாகää அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த கூடாரத்திற்குள் இருக்கின்றார் என நினைத்துக் கொண்டு ஒட்டகத்தை நடத்திக் கொண்டு சென்று விட்டார். முத்து மாலையைத் தேடிக் கொண்டு திரும்பி வந்த ஆயிஷா (ரலி) அவர்கள்ää தனது ஒட்டகை பயணப்பட்டு விட்டதையும்ää மக்கள் அனைவரும் சென்று விட்டதையும் அறிந்துää அந்த இடத்திலேயே தனது உடைகளை நன்கு போர்த்திக் கொண்டு தூங்கி விடுகின்றார்கள்.
இந்த நிலையில்ää தூங்கிக் கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் காதுகளில்ää ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" என்ற சொற்கள் காதில் விழுகின்றன. விரைந்து கண் விழித்துப் பார்த்த ஆயிஷா (ரலி) அவர்கள்ää அங்கு ஒரு இளைஞர் ஒட்டகத்துடன் நிற்பதைக் காண்கிறார்கள். சஃப்வான் இப்னு முஅத்தல் (ரலி) என்ற அந்த இளைஞர்ää மக்கள் இடத்தைக் காலி செய்து கொண்டு சென்ற பின்னர்ää அந்த இடத்தில் ஏதேனும் பொருட்கள் விடப்பட்டு சென்று விட்டனவா என்பதைக் கவனிப்பதற்காக வந்தவர்ää அந்த இடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களைக் காண்கிறார்கள். தனக்கு முன்னால் சஃப்வான் இப்னு முஅத்தல் (ரலி) அவர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் தனது உடையால் தன்னை விரைந்து போர்த்திக் கொள்கின்றார்கள். இப்பொழுது சஃப்வான் (ரலி) அவர்கள் தனது ஒட்டகத்தை கீழே அமர வைத்துää அதன் கூடாரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்ததுடன்ää அந்த ஒட்டகத்தின் மூக்குக் கயிற்றைப் பிடித்துக் கொண்டவராக தனது பயணத்தைத் தொடர்கின்றார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சென்றடைந்ததன் பின்னர் சில மணி நேரங் கழித்து மதிய வேளையில் சஃப்வான் (ரலி) அவர்களும்ää அவர்களுடன் ஒட்டகத்தில் பயணம் செய்த ஆயிஷா (ரலி) அவர்களும் மதீனாவை அடைகின்றார்கள். இந்தச் சம்பவம் அப்துல்லா இப்னு உபைக்கும்ää இன்னும் சில நயவஞ்சகர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராக கட்டுக் கதைகளைப் புனைந்து விடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி விட்டது. இந்தச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை மிகவும் பாதித்ததுää ஆயிஷா (ரலி) அவர்களை விவாகரத்துச் செய்து விடுவதற்காக வேண்டிää தனக்கு நெருங்கிய தோழர்களிடம் ஆலோசனையும் நடத்தினார்கள். அலி (ரலி) அவர்களோ..ää ஆயிஷா (ரலி) அவர்களை விவாகரத்துச் செய்து விடுமாறு ஆலோசனை கூறுகின்றார்கள்.
ஆனால் உமர் (ரலி) அவர்களோ..ää இறைத்தூதர் (ஸல்) அவர்களே..ää இந்த நயவஞ்சகர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாதாää இவர்கள் பொய்யர்கள் என்றார்கள். இது விசயத்தில் இறைவன் நல்ல தீர்ப்பு வழங்குவான். அவர்கள் விசயத்தில் சந்தேக மேகங்களைச் சூழ விட மாட்டான்ää பேதையான அந்தப் பெண்ணின் மீதான களங்கத்தைப் பற்றிய தீர்ப்பை அவனே வழங்குவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பின்னர்ää உமர் (ரலி) அவர்கள் எதிர்பார்த்தது போலவே இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹி - இறைச் செய்தி வெளிப்பாடு வந்திறங்கியதுää ஆயிஷா (ரலி) அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகியது. இந்தப் பிரச்னை இவ்வாறு தீர்க்கப்பட்டவுடன்ää குழப்பான அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்தமைக்காக உமர் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நன்றி கூறினார்கள். இந்தச் சம்பவத்தை எப்பொழுதும் அசை போட்டுப் பார்க்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கக் கூடியவர்களாக இருந்ததோடுää உமர் (ரலி) அவர்கள் இறந்து விட்டபின்ää தனது அறையில்..ää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு மனமுவந்து அனுமதி வழங்கினார்கள்.
பெண்களுக்கான ஹிஜாப்
ஆரம்ப கால மதீனாவில் பெண்கள் ஹிஜாப் அணியும் பழக்கமில்லாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆண்களுக்கு மத்தியில் சென்று வர வந்தார்கள். மதீனாவில் வாழ்ந்த இறைநம்பிக்கையாளர்கள் நிறைந்த இறைநம்பிக்கை கொண்டவர்களாதலால்ää பெண்கள் விசயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொண்டார்கள். இன்னும் முஸ்லிம்களுடன் வசித்து வந்த சில நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்கள் மூலமாக பெண்கள் விசயத்தில் சில சங்கடமான நிகழ்வுகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பிருந்தது. இந்த நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்கள் விசயத்தில் அவர்கள் பெண்களிடம் ஏதாவது தகாத செயல்களைக் காட்டி இறைவனும் அதனை தடுக்காதிருந்தால்ää அது முஸ்லிம் சமூகத்தில் மிகப் பெரும் பாதகமான விளைவை ஏற்படுத்தி விடும் என்று உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள்.
இந்தக் கருத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறிய உமர் (ரலி) அவர்கள்ää பெண்கள் தங்கள் இல்லங்களிலிலேயே இருந்து கொள்வது நல்லது என்றார்கள். இன்னும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதுää வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும்ää அவர்களது கண்ணியம் என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரியதொரு மதிப்பு வாய்ந்தது என்றும் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்களின் இந்த ஆலோசனையைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவரான ஸைனப் (ரலி) அவர்கள் :
'உமரே..! நீங்கள் இறைத்தூதருடைய உள்வீட்டுப் பிரச்னையில் தலையிடுகின்றீர்கள். இறைச் செய்தி (வஹி) எங்களது வீட்டிற்கு வருகின்றதுää நீங்களோ உங்களது சொந்தக் கருத்தினை இங்கு கொண்டு வருகின்றீர்களே.."" என்றார்கள்.
உமர் (ரலி) அவர்களின் கருத்தினை ஆதரித்துää அவர்களை தட்டிக் கொடுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இது விஷயமாக இறைச் செய்தி வரட்டும் முடிவெடுப்போம் என்றார்கள்.
இது விஷயமாக இறைச்செய்தியும் இறங்கியது. அந்த இறைவசனமாவது :
நபியே! உம்முடைய மனைவிகளிடம்; ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும்ää இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால்ää வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ''ஆனால்ää நீங்கள் அல்லாஹ்வையும்ää அவன் தூதரையும்ää மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால்ää அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலியை நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்"" என்றும் கூறுவீராக! (33:28-29)
இன்னுமொரு இறைவசனத்தில்ää
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின்ää அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்! அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டுää நல்ல அமல் செய்கிறாரோää அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம். (33:30-31)
இன்னுமொரு இறைவசனத்தில்ää
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால்ää (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோää அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கிää உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். (33:32-33)
மேற்கண்ட இறைவசனங்களின் வெளிப்பாடானதுää உமர் (ரலி)அவர்களின் கருத்தினை ஆதரித்து அதனை உறுதிப்படுத்துவது போலமைந்து விட்டது. மேற்கண்ட வசனங்கள் அருளப்பட்டதன் பின்னர்ää ''உமரே நீங்கள் எதனை விரும்பினீர்களோää அதனை அல்லாஹ்வும் உங்கள் விசயத்தில் விரும்பி விட்டான்ää என்று உமர் (ரலி) அவர்களைப் பார்த்துத் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்ää ''உமரே..! மீண்டும் ஒருமுறை உமது நாவின் வழியாக அல்லாஹ் பேசியுள்ளான்"" என்று கூறினார்கள்.
மக்காவின் வெற்றிக்கு முன் நடைபெற்ற போர்கள்
துர்பா யுத்தம்
மக்காவிலிருந்து இரண்டு நாள் பயண தொலைவில் அமைந்திருந்த துர்பா என்ற பகுதியில் பனூ கவ்ஸான் என்ற கோத்திரத்தார்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்தார்கள். எனவேää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த கோத்திரத்தவர்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கை அவசியம் என்று கருதிää கி.பி.629 ல் ஒரு போர் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
பனூ கவ்ஸான் களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு உமர் (ரலி) அவர்களை தலைமைப் பொறுப்பேற்க வைத்துää அவரது தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். போர் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர்ää அவர்களை இஸ்லாத்தின்பால் அழையுங்கள்ää அவர்கள் அதற்கு மதிப்பளித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் சரிää இல்லை என்றால் உங்களது வலிமையைப் பயன்படுத்திää அவர்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றி விடுங்கள்ää துர்பாவினை விட்டும் அவர்களை விரட்டி அடியுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.
இந்த நடவடிக்கைக்கு முப்பது பேர் கொண்ட படை தயாரானது. இவர்களுக்கு வழிகாட்டியாக பனூ ஹிலால் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டார்ää அவர் துர்பா சமவெளிக்குச் செல்லக் கூடிய யாரும் எளிதில் கண்டு பிடித்து விடாதபடிää மாற்றுப் பாதை வழியே அழைத்துச் சென்றார்.
முஸ்லிம்களின் படை துர்பா பகுதியை நோக்கி வருகின்றது என்பதனை எப்படியோ கேள்விப்பட்டு விட்ட பனூ கவ்ஸான்கள்ää தங்களது கால்நடைகளை ஓட்டிக் கொண்டும் தங்களது இருப்பிடத்தை காலி செய்து விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள். அந்த இடத்திலேயே முஸ்லிம் படைகள் சிறிது நாட்கள் தங்கினார்கள். அதே நேரத்தில் பனூ கவ்ஸான்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு வருவதற்கு உளவுப்படையும் பல்வேறு பாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களது இருப்பிடம் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லைää இன்னும் மக்காவிற்கு மிக அருகில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த மக்களைää எந்தவித பலப்பிரயோகமும் இல்லாமல் வெற்றி ஈட்டப்பட்டதுää இதன் பின்னர் முஸ்லிம் படைகள் மதீனா திரும்ப முடிவெடுத்தார்கள்.
அவர்களது படை மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில்ää மதீனாவிற்கும் சற்று 6 மைல் தொலைவில் ஜியல்ஜஸா என்ற இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது வழிகாட்டியாக வந்த பனூ ஹிலால் கூறினார் :
பனூ கவ்ஸான் களுக்கு எதிரான நடவடிக்கையில் உங்களுக்கு எந்த கனீமத்துப் பொருட்களும் கிடைக்கவில்லைää மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஏதாவது ஆதாயமாக கனீமத் பொருட்கள் வேண்டுமெனில்ää இதே அருகில் இருக்கும் பனூ குஸாம் ஐத் தாக்கினால் உங்களுக்கு கனீமத்துப் பொருட்கள் கிடைக்கலாம். அவர்களை எதிர்பாராதவிதமாக தாக்கும் விதமாகää அதற்கான பாதையையும் நான் உங்களுக்குக் காட்டுகின்றேன் என்றார். அவர்கள் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும்ää அவர்களிடம் நல்ல செல்வ வளங்கள் உள்ளனääஅதுவே உங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்றார்.
இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை பனூ கவஸான் கோத்திரத்தார் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே அனுப்பி வைத்தார்கள். நம்முடைய நோக்கம் இஸ்லாம் தானே ஒழியää உலக ஆதாயங்கள் அல்லவே என்றார்கள். இன்னும் வேறு எந்த கோத்திரத்தார்களையும் தாக்குவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லைää எனவேää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அனுமதி இல்லாத நிலையில்ää போர்ப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு நான் தாக்குதல் தொடுக்க அச்சப்படுகின்றேன் என்றார்கள். மதீனாவிற்குத் திரும்பிய பின்புää நடந்த விபரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää ''உமரே..! நீங்கள் நல்லதையே செய்தீர்கள்ää அவரது சொல்படி நீங்கள் நடந்திருப்பீர்கள் என்றால் நான் சந்தோசப்பட்டிருக்க மாட்டேன்"" என்றார்கள்.
கைபர் யுத்தம்
மதீனாவிலிருந்து யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர்ää அவர்கள் கைபர் என்ற இடத்தில் தங்கி வரலானார்கள். யூதர்கள் எப்பொழுதும் சூழ்ச்சி செய்வதிலும்ää வஞ்சகமாக நடப்பதிலும் வல்லவர்கள்ää இன்னும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவர்கள் எப்பொழுதும் மூக்கை நுழைத்த வண்ணமே இருப்பவர்கள்.
ஹ{தைபிய்யா உடன்படிக்கையின்படிää முஸ்லிம்களுக்கும் மக்கத்துக் குறைஷிகளுக்குமிடையே ஒரு பத்து ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று உடன்பாடாகியிருந்தது. எனவேää வெளிப்படையாக குறைஷிகள் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்களுக்கு உதவ இயலாது. இதன் காரணமாகää யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் இறங்க முடியாது போனதன் காரணமாகää அவர்கள் தந்திரமாக இன்னொரு கூட்டணியை முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கினார்கள்.
யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து வருவதை அறிந்துகொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää கி.பி.629 ல் யூதர்களுக்கு எதிராக கைபரை நோக்கிää 1400 தோழர்களுடன் புறப்பட்டார்கள். முஸ்லிம்கள் படையுடன் வருவதை அறிந்துகொண்ட யூதர்கள்ää தங்களது கோட்டைகளைத் தாழிட்டு விட்டு கோட்டைக்குள் ஒழிந்து கொண்டார்கள். இந்தக் கோட்டை மிகவும் உறுதி வாய்ந்த மதில் சுவர்களால் கட்டப்பட்டிருந்தது.
நீண்ட நாள் முற்றுகையைத் தாக்குப் பிடிப்பதற்குத் தேவையான உணவுகளும்ää இன்னும் ஆயுதங்களும் கூட அந்தக் கோட்டைக்குள் இருந்தன. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்தார்கள். அந்த அழைப்பை அவர்கள் உதாசினம் செய்தார்கள். அதன் பின் அவர்களுக்கு எதிராக யுத்தத்தைத் தொடங்குமாறு இறைத்தூதர் (ஸல்)அவர்கள் தனது தோழர்களைப் பணித்தார்கள்.
முதல் நாள் அன்றுää அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையின் கீழ் முதல் தாக்குதல் தொடுக்கப்பட்டது. யூதர்கள் தங்கள் கோட்டைகளுக்கு உள்ளிருந்து கொண்டார்களே தவிரää முஸ்லிம்களை எதிர்த்து எதிர் தாக்குதல் தொடுக்க முன்வரவில்லை.
இரண்டாவது நாள்ää உமர் (ரலி)அவர்களின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டதுää அப்பொழுதும் அவர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபடவில்லைää கோட்டைகளுக்குள் இருந்து கொண்டார்கள்.
மூன்றாவது நாள்ää அலி (ரலி) அவர்களின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டதுää யூதர்கள் தங்களது கோட்டையை விட்டும் வெளியே வந்தார்கள்ää போர் ஆரம்பமானது. நேருக்கு நேர் நடந்த யுத்தத்தில்ää யூதர்கள் வெற்றி கொள்ளப்பட்டார்கள்.
இறுதியில்ää இருவருக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்ää முஸ்லிம்களுக்கு ஜிஸ்யா வரி கட்டுவது என்றும்ää நில விளைச்சலில் ஒரு பாதியை முஸ்லிம்களுக்கு வரியாகத் தந்து விடுவது என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கைபர் போர் பல்வேறு விதங்களில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தது. யூதர்கள் இப்பொழுது முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியில் முஸ்லிம்களுக்குக் கட்டுப்பட்டு வாழக் கூடியவர்களாக ஆனார்கள். இன்னும் குறைஷிகள் யூதர்களின் ஆதரவை இழந்து போனார்கள்ää இன்னும் மக்காவின் வெற்றிக்கு கைபர் யுத்தம் தான் அடிப்படையாகவும் அமைந்தது.
கைபர் ல் முஸ்லிம்கள் தங்கி இருந்த பொழுதுää ஸைனப் பின்த் ஹாரித் என்ற யூதப் பெண்மணி இறைத்தூதர் (ஸல்) அவர்களையும்ää அவரது தோழர்களையும் விருந்துக்கு அழைத்திருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அபுபக்கர் (ரலி) அவர்களும்ää அவர்களை அடுத்து உமர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
விருந்தின் பொழுது பரிமாறப்பட்டதொருää இறைச்சித் துண்டை எடுத்து கடித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனைத் தூக்கி எறிந்து விட்டுää அதில் விஷம் தடவப்பட்டிருக்கின்றது என்று கூறிää அதை உண்ண வேண்டாமென்று தனது தோழர்களையும் தடுத்து விட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உமர் (ரலி) அவர்களும் அந்த இறைச்சியை வாயில் வைக்காமல்ää அந்த நேரத்தில் வாய்க்கு சற்று தொலைவிலேயே வைத்திருந்துää தூக்கி எறிந்து விட்டார்கள். ஆனால் பிஷர் பின் ப்ரா (ரலி) என்ற தோழர்ää அந்த இறைச்சியை உண்டதன் காரணமாகää சிறிது நேரத்தில் மரணத்தைத் தழுவி விட்டார்.
விருந்து குழப்பத்தில் முடிந்தது. ஸைனப் என்ற அந்த யூதப் பெண்மணி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாள்ää அவள் தனது தவறை ஒப்புக் கொண்டாள். விஷம் தடவப்பட்ட இறைச்சியை உண்பவர் இறைத்தூதராக இருக்கும்பட்சத்தில்ää அது அவருக்குத் தெரிந்து விடும்ää அவர் இறைத்தூதராக இல்லாதபட்சத்தில்ää அவர் இந்த உலகத்தை விட்டே சென்று விடுவார் என்று நினைத்துää வந்திருப்பது இறைத்தூதர் தானா என்பதைச் சோதித்துப் பார்க்கவே அதில் விஷத்தைத் தடவிப் பரிசோதித்தேன் என்றாள்.
இறுதியில்ää அவள் மன்னிக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவி விட்டாள் என்று ஒரு அறிவிப்பும்ää அவள் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று இன்னொரு அறிவிப்பும் கூறுகின்றன.
உமர் (ரலி) அவர்கள் வாயிலாகääஇந்தப் போர் குறித்ததொரு அறிவிப்பில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்களுக்குள் இறந்த தோழர்களைப் பற்றிää இன்னார் இன்னார் என்று அவரது பெயரைச் சொல்லிää இவர் இறைவழியில் உயிர் துறந்த தியாகி..ää என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுää ஒரு தோழர் ஒரு தோழரது பெயரைச் சொல்லிää ''இவர்..ää தியாகி"" என்றார். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää ''அவ்வாறல்லää அவர் நேர்மையற்ற முறையில் ஒரு ஆடையை எடுத்துக் கொண்டதன் மூலம் அவரை நான் அந்த ஆடையுடன் நரகத்தில் பார்த்திருக்கின்றேன்"" என்றார்கள். பின்னர்ää ''இப்னு கத்தாபே..! அந்த மக்களிடம் சென்றுää 'இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமே சுவனம் செல்வார்கள்" என்று மூன்று முறை பிரகடனப்படுத்துவீர்களாக..!"" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுக்குக் கட்டுப்பட்ட உமர் (ரலி) அவர்கள்ää அந்த மக்களிடம் சென்று ''இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமே சுவனம் செல்;வார்கள்"" என்று மூன்று முறை அறிவித்தார்கள்.
மக்காää தபூக்
மக்கா வெற்றி
ஹ{தைபிய்யா உடன்படிக்கையின் அடிப்படையில்ää அரபுக்குலத்தவர்கள் ஒன்று முஸ்லிம்களுக்கு சார்பானவர்களாக அல்லது குறைஷிகளுக்குச் சார்பானவர்களாக மட்டுமே இருக்க முடியும். இதனடிப்படையில் பனூ பக்கர் கோத்திரத்தார் குறைஷிகளின் பக்கமும்ää பனூ கவஸான் கோத்திரத்தார் முஸ்லிம்களின் பக்கமும் இருந்தனர்.
ஆனால் இந்த உடன்படிக்கைக்குப் பாதகமான முறையில்ää பனூ பக்கர் கோத்திரத்தார் பனூ கவஸான் கோத்திரத்தார்களைத் தாக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாதுää கஃபாவினுள் அடைக்கலம் புகுந்த அந்தக் கோத்திரத்தவர்களையும் கூட பிடித்துää கொலை செய்து விட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில்ää ஹ{தைபிய்யா உடன்படிக்கையின் அடிப்படையில் பனூ கவஸான்கள் முஸ்லிம்களிடம் உதவ கோரினார்கள். இந்த விவகாரத்தில் உடனே தலையிடாத நிலையில்ää குறைஷிகளின் மீது முஸ்லிம்கள் போர் நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டும் எனும்பட்சத்தில்ää குறைஷிகள் மூன்று நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு அதனை நிறைவேற்றியாக வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள். அதாவதுää
இறந்த பனூ கவஸான்களின் குடும்பத்தவர்களுக்கு இரத்த இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்
பனூ பக்கர் கோத்திரத்தவர்களுடைய உறவினைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அல்லது (மேற்கண்ட இரண்டையும் நிறைவேற்றாதபட்சத்தில்)
ஹ{தைபிய்யா உடன்படிக்கை செல்லத்தகாததாக ஆகி விடும்
குறைஷிகளுக்கே உரிய அந்த வன்மம் தலைக்கேறää எங்களால் இரத்த இழப்பீட்டுத் தொகையையும் வழங்க முடியாதுää பனூ பக்கரின் உறவையும் துண்டித்துக் கொள்ள இயலாதுää இன்னும் ஹ{தைபிய்யா உடன்படிக்கை செல்லத்தகாததாக ஆகி விட்டதாகவே நான் கருதிக் கொள்கின்றோம் என்றார்கள்.
ஹ{தைபிய்யா உடன்படிக்கை செல்லத்தகாததாக ஆகி விட்டதுää குறைஷிகளே முன்வந்து அதனைச் செய்திருக்கின்றார்கள் என்பதில் முஸ்லிம்கள் சந்தோஷப்பட்டார்கள்ää அதில் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள்.
ஆனால்ää நான் விவேகமற்ற முறையில் ஹ{தைபிய்யா உடன்படிக்கையை முறித்துக் கொண்டு விட்டோமே என்று விரைவிலேயே குறைஷிகள் உணரத்தலைப்பட்டார்கள். மக்கத்துக் குறைஷிகளின் தலைவராக இருந்த அபுசுஃப்யான்ää மதீனாவிற்கு வந்து மீண்டும் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக வந்தார். இன்னும் தனது மகளும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியுமான () சென்று தனக்காகப் பரிந்து பேசும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். இன்னும் அபுபக்கர் (ரலி) மற்றும் அலி (ரலி) அவர்களையும் சந்தித்தார்ää ஆனால் இவரது கோரிக்கையை அவர்கள் செவி மடுக்கக் கூடத் தயாராக இல்லை. பின்னர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார்ää உமரோ..ää நிலைமையின் விபரீதத்தை அவருக்குப் புரிய வைத்துää இனி குறைஷிகள் இஸ்லாத்தைத் தழுவுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி விட்டார். சமாதானத்தை வேண்டி வந்த அபூசுஃபயான் அவர்களுக்கு அதற்காக எந்தவழியும் கிடைக்காததால்ää வந்த வேலை நிறைவு பெறாமல் பயனற்றவராக மக்காவை நோக்கித் திரும்பினார்.
அபுசுஃபயான் மதீனாவை விட்டும் கிளம்பி விட்டபின்ää படைகளைத் தயாரிக்குமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். தனது மகளாரான அன்னை ஹஃஸா (ரலி) அவர்களைக் காண வந்த உமர் (ரலி) அவர்கள்ää அன்னையவர்கள் சில பொருட்களை தயார் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பொருட்களை தயார் செய்யும்படி உங்களுக்கு உத்தர விட்டார்களா என்றார்கள்ää அன்னையவர்களும் ஆம் என்றார்கள். அதன் பின்னர் உமர் (ரலி) அவர்களைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுää நாம் இப்பொழுது மக்காவின் மீது படை நடத்தப் போகின்றோம்ää என்னுடன் நீங்களும் வருகின்றீர்கள் என்று கூறினார்கள்.
பத்தாயிரம் பேர் கொண்ட வலிமை மிக்க படையொன்று மக்காவை நோக்கிää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் கிளம்பியது. மக்காவை அண்மித்த முஸ்லிம்கள்ää தங்களது படையை மர் அல் ஸஹ்ரான் என்ற இடத்தில் சிறிது தங்கினார்கள்.
இங்கு வைத்துää அப்பாஸ் (ரலி) அவர்களை மக்காவிற்குத் தூதராக அனுப்பி வைத்தார்கள். அபூசுஃப்யான் அவர்களைச் சென்று சந்தித்த அப்பாஸ் (ரலி) அவர்கள்ää இப்பொழுது குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சென்று சந்தித்துää அவர்களது கருணையைப் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அபூசுஃப்யான் அவர்களும் இதற்குச் சம்மதித்துää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம் என்று கூறினார்கள்.
இப்பொழுது அபூசுஃப்யான் அவர்களும்ää அப்பாஸ் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இருப்பிடத்திற்குள் நுழைவதைக் கண்ணுற்ற உமர் (ரலி) அவர்கள்ää விரைந்து அங்கே சென்றுää இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்துää ''இஸ்லாத்தின் இந்த எதிரியின் தலையைத் துண்டிக்க எனக்கு அனுமதி தாருங்கள்"" என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää உமரே..ää சற்றுப் பொறுத்துப் பாருங்கள்"" என்றார்கள்.
அந்த இடத்தில் வைத்து அபுசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாக குறைஷிகளின் எதிர்ப்பு வலுவிழந்து ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
அதனை அடுத்த தினம்ää முஸ்லிகள் வெற்றி முகத்துடன் மக்காவிற்குள் நுழைந்தார்கள். அவ்வாறு அணிவகுத்து மக்காவிற்குள் பிரவேசித்த ஒரு அணிக்கு உமர் (ரலி) அவர்கள் தலைமையேற்று நடத்திச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்காவின் வெற்றி என்பது சத்தியத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இதே நகரம் முஸ்லிம்களைப் படுகொலைக்கு உள்ளாக்கிய நகரமாக இருந்ததுää இப்பொழுது முஸ்லிம்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானதாக மாறி விட்டது.
மக்கா வெற்றிக்குப் பின்னர்ää யார் யாரெல்லாம் இஸ்லாத்திற்கு எதிரிகளாக இருந்து சொல்லொண்ணா துன்பங்களை முஸ்லிம்களின் மீது வாறி வழங்கினார்களோää அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பை வழங்கினார்கள்
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் கஃபாவிற்கு பிரவேசித்தார்கள். கஃபாவில் இருந்த சிலைகள் அகற்றப்பட்டு உடைத்து நொறுக்கப்பட்டன. அதன் பின்னர் திருமறையிலிருந்து கீழ்கண்ட வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓத ஆரம்பித்தார்கள் :
''சத்தியம் வந்ததுää அசத்தியம் அழிந்ததுää நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே"" என்றார்கள்.
இப்பொழுது மக்கள் அனைவரும் கஃபாவில் ஒன்று கூடினார்கள்ää ஒன்று கூடிய மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட உரையை நிகழ்;த்தினார்கள் :
''வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை துணை எதுவுமில்லை. அல்லாஹ்..ää அவனது அடியாருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுத்தான்ää அதனை நிறைவேற்ற உதவினான்ää இன்னும் அதன் மூலம் அனைத்து அசத்தியங்களையும் வேரறுக்க உதவினான். நினைவில் கொள்ளுங்கள்ää எல்லாவிதமான முன்னுரிமைகளும்ää அது இரத்த இழப்பிடாகவோ அல்லது சொத்து சார்ந்ததாகவோ இருப்பினும் அது அழிக்கப்படுகின்றதுää இன்னும் கஃபா வின் உரிமை மற்றும் ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுதல் இவற்றைத் தவிர. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்ää எவர் கொல்லப்படுகின்றரோ அவருக்குப் பிரதியீடாக இனி நூறு ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டும். குறைஷிகளே..ää அறியாமைக்காலத்தில் நீங்கள் கொண்டிருந்த பெருமைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான்ää இன்னும் உங்களது மூதாதையர்களது குலப் பெருமையும் கூடää ஏனென்றால் அனைத்து மனிதர்களும் ஆதம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களாவார்கள்ää இன்னும் ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டவராவார்கள்."" பின்னர் மக்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''ஓ குறைஷிகளே..ää உங்களது விவகாரத்தைப் பொறுத்த நான் உங்களிடம் எந்த மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? .."" என்றார்கள்.
கருணை..ää காட்டுங்கள்ää இறைவனுடைய தூதரவர்களே என்று மறுமொழி பகர்ந்தார்கள். நாங்கள் உங்களிடம் நல்லதைத் தவிர வேறெதனையும் எதிர்ப்பார்க்கவில்லை என்றார்கள்ää குறைஷிகள்.
அதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு அறிவிப்புச் செய்தார்கள் :
''யூசுப் (அலை) அவர்கள் தனது சகோதரர்களிடம் கூறிய அதே வார்த்தைகளை உங்களிடம் நான் கூறுகின்றேன். இன்றைய தினத்தில் உங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லைää உங்கள் வழியில் நீங்கள் செல்லலாம்ää நீங்கள் சுந்திரமானவர்கள்"" என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உமர் (ரலி) அவர்களின் உதவியுடன் ஸஃபா குன்றின் மீது ஏறிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் மக்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள். இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் ஆண்களின் வரிசை முடிந்து போன பின்ää உமர் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் வாக்குறுதி வாங்கும் பொறுப்பை அன்னாரிடம் வழங்கினார்கள். மக்காவில் வாழ்ந்த அனைத்துப் பெண்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றோம் என்று வாக்குறுதி வழங்குவதற்குப் பதிலாகää உமர் (ரலி) அவர்களிடம் வாக்குறுதி தந்தார்கள்.
ஹ{னைன் மற்றும் தாயிஃப் யுத்தம்
மக்காவின் வெற்றிக்குப் பிறகுää மக்காவினை அடுத்து வாழ்ந்த கோத்திரத்தவர்களான ஹவாஸின் மற்றும் ஸாஜெப் ஆகியோர்களுக்கு ஒன்று இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அல்லது போரை எதிர்கொள்ளுங்கள் என்ற இரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் போரையே விரும்பினார்கள்ää மேற்கண்ட இரண்டு கோத்திரத்தவர்களுடன் இன்னும் சில கோத்திரத்தவர்கள் இணைந்து கெண்டு முஸ்லிம்களுக்கு எதிராகத் திரண்டார்கள். இந்தக் கூட்டுப் படைக்கு போர்க் குணம் படைத்தவரான மாலிக் பின் அவ்ஃப் என்பவர் தலைமை தாங்கினார்.
எதிரிகளின் நோக்கத்தை அறிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அவர்களின் நோக்கத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். கி.பி.630 ஜனவரி மாதத்தின் ஒரு குளிர்நாளில் மக்காவிலிருந்து முஸ்லிம்கள் படைகள் எதிரிகளைக் களம் காண இறங்கினார்கள். இந்தப் படையில் 12 ஆயிரம் முஸ்லிம் படைவீரர்கள் இருந்ததோடுää இவர்கள் அனைவரும் முழு ஆயுதத்தரிப்பில் இருந்தார்கள். இவர்களில் 10 ஆயிரம் பேர் மக்காவின் வெற்றியின் பொழுது மதீனாவிலிருந்த வந்தவர்களும்ää மீதி இரண்டாயிரம் பேர்கள் மக்காவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களும் அடங்குவர்.
முஸ்லிம்களின் படைகள் ஹ{னைன் என்ற பள்ளாத்தாக்கு வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுதுää முஸ்லிம் வில் வித்தை அணியிடம் காணப்பட்ட சிறு கவனஈனத்தைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள்ää முஸ்லிம்களின் மீது வில் மழை பொழிய ஆரம்பித்தனர். இந்தத் திடீத் தாக்குதலை எதிர்ப்பாக்காத முஸ்லிம் படையினர் சற்று கலவரமடைய ஆரம்பித்தார்கள். தாக்குதலிலிருந்த தப்பித்துக் கொள்ளத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அங்குமிங்கும் ஓட ஆரம்பித்ததும்ää அங்கே சற்று குழப்பம் நிலவியது. ஒட்டகங்களும்ää குதிரைகளும்ää மனிதர்களும் திசைக்கொருவராய் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.
அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் குழப்பத்திற்கு இடங்கொடாமல் அசையாதுää உறுதியாக நின்றார்கள். அப்பொழுது அவர்களைச் சுற்றிலும் ஒன்பது தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள்ää அவர்களில் உமர் (ரலி) அவர்களும் அடங்குவார்கள். ஏனைய தோழர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்திருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவின் பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் தனது உயர்ந்த குரல் வளத்தைக் கொண்டுää ஓடிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்துää ''ஓ.. முஸ்லிம்களே..! அல்லாஹ்வின் தூதரிடத்திலே வாருங்கள்"" என்று கூவினார்கள்.
இதனைக் கேட்ட முஸ்லிம் வீரர்கள்ää இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றிலும் குழும ஆரம்பித்தார்கள். முஸ்லிம்கள் போதுமான அளவில் கூடிய பின்னர்ää எதிரிகளை நோக்கித் தாக்குதல் தொடுக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனை அடுத்து நேருக்கு நேர் யுத்தம் தொடங்கியதுää எதிரிகள் வேரறுக்கப்பட்டதுடன்ää அவர்கள் தங்கள் இருப்பிடமான அவ்தாஸை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது ஹ{னைன் ஓடையைப் பாதுகாப்பதற்காக ஒரு பாதுகாப்பு வீரர்களைக் கொண்ட அரணை நியமித்ததன் பின்னர்ää ஏனைய வீரர்களை அவ்தாஸ் நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அவ்தாஸ் என்ற இடத்தில் நடந்த அந்தப் போரில்ää முஸ்லிம்களை எதிர்த்து நிற்க இயலாமல் எதிரிகள் தோற்றனர். அவர்கள் தங்களது கூடாரங்களைக் காலி செய்து கொண்டுää தாயிஃப் நகரத்திற்குச் சென்று விட்டனர்.
அவ்தாஸ் லிருந்து முஸ்லிம்கள் தாயிப்பிற்கு அவர்களை விரட்டிச் சென்றார்கள். தாயிஃப் கோட்டைக்குள் ஒழிந்து கொண்ட அவர்கள்ää வெளியே வர மறுத்தார்கள். முஸ்லிம்கள் கவன் கற்களைப் பயன்படுத்தி கோட்டைக்குள் எறிந்த பொழுதும் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. இன்னும் முஸ்லிம்கள் செய்த சில யுத்த தந்திரங்களும் பலனளிக்கவில்லை. இரண்டு வாரங்களாக முற்றுகை நீடித்ததுää கோட்டை முஸ்லிம்களின் கைவசம் வீழ்ந்ததாகத் தெரியவில்லை. அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை செய்த பொழுதுää உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää முற்றுகையை விலக்கிக் கொள்வோம்ää அந்தக் கோட்டையை நம் கைவசம் கொண்டு வருவதற்கு இறைவன் நமக்கு நல்லதொரு வழியை ஏற்படுத்துவான் என்று ஆலோசனை கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. கி.பி.630 பிப்ரவரி மாதத்தில் கோட்டையின் மீதான முற்றுகை கைவிடப்பட்டதுää இன்னும் முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினார்கள். சில நாட்கள் கழிந்ததுää மாலிக் பின் அவ்ஃப் என்பவர் அவராகவே மக்காவிற்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமானார். இதன் மூலம்ää இறைவனே அவர்களைச் சரணடைய வைத்தது மட்டுமல்லாதுää அவர்களை இஸ்லாத்தையும் ஏற்க வைத்தான்.
தபூக் யுத்தம்
கி.பி.630 ல் சிரியாவின் எல்லையோரத்தில் அமைந்த தபூக் என்ற பகுதிக்கு படையெடுத்துச் செல்ல வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அந்தப் படையெடுப்புக் தேவையான பொருளாதாரங்களை நன்கொடையாகத் தரும்படி தன்னுடைய தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
உமர் (ரலி) அவர்களிடம் அப்பொழுது போதுமான அளவு செல்வம் இருந்ததுää இன்னும் இந்த சந்தர்ப்பத்திலாவது அல்லாஹ்வின் வழியில் செலவழிப்பதில் அபூபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சி விட வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவெடுத்துக் கொண்டார்கள்.
வீட்டிற்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள்ää ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்பொழுதுää உமரே..! நீங்கள் உங்களுக்கும் உங்களது குடும்பத்தார்களுக்கும் எதனை விட்டு வந்திருக்கின்றீர்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு என்னிடம் உள்ளதில் பாதியை அல்லாஹ்வின் வழியில் செலவழிப்பதற்காகவும்ää இன்னும் மீதிப் பாதியை எனக்கும் என்னுடைய குடும்பத்தவர்களுக்காகவும் விட்டு வந்திருக்கின்றேன் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தோஷப்பட்டவர்களாகää உமர் (ரலி) அவர்களை வாழ்த்தினார்கள்.
உமர் (ரலி) அவர்களை அடுத்து வந்த அபூபக்கர் (ரலி) அவர்களும்ää கனிசமான அளவு தொகையை நன்கொடையாகக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தர்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட பொழுதுää அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää ''என்னிடம் உள்ளதோ எதுவோ அவை அனைத்தையும் கொண்டு வந்து விட்டேன்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களே..ää என்று கூறினார்கள். இன்னும் நான் அல்லாஹ்வையும்ää அவனது தூதரையும் தான் எனக்காகவும் என்னுடைய குடும்பத்தவர்களுக்காகவும் விட்டு வந்திருக்கின்றேன் என்று கூறி முடித்தார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்களை விட முந்தி விட வேண்டும் என்று எண்ணிய உமர் (ரலி) அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தபூக் யுத்தத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை அழைத்த பொழுதுää அன்றைய காலச் சூழ்நிலையானது மிகவும் வெப்பமாக இருந்தது. இன்னும் பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராகவும் இருந்தது. இன்னும் சிரியாவின் எல்லைப் புறத்திற்குப் பயணம் செய்வது என்பது மிகவும் நீண்டதாகவும் சிரமமானதாகவும் இருந்தது. அநேகர் இந்த யுத்தத்திற்குச் செல்லாமல் தங்கி விடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். தடைகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும்ää முப்பது ஆயிரம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த போர் முஸ்தீபுக்குத் தயார்படுத்தி விட்டார்கள்.
நீண்ட பயணத்திற்குப் பின் முஸ்லிம் படைகள் தபூக்கை மார்ச் மாதத்தின் ஓர் நாளில் சென்றடைந்தது.
பைஸாந்தியப் படைகள் எதுவும் முஸ்லிம்களை எதிர் கொள்வதற்காக அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. முஸ்லிம் படைகள் மிகவும் முன்னேறி வந்து விட்டதன் காரணமாகää பைஸாந்தியப் படைகள் பின்வாங்கிää சிரியாவிற்கு உள்ளேயே முடங்கிக் கொள்ள வேண்டியதிருந்தது. எந்தவித போர் நடவடிக்கைகளும் இல்லாமல் முஸ்லிம்கள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றார்கள்.
ஒரு நேரத்தில் முஸ்லிம்களின் பிரதேசத்திற்குள் படை நடத்திச் சென்று அவர்களை அச்சுறுத்த வேண்டும் என்று முடிவு கட்டியிருந்த பைஸாந்தியப் பேரரசுக்குää இந்த தபூக் யுத்த முஸ்தீபு மூலமாகää முஸ்லிம்களின் வாட்களை எதிர்கொள்வது என்பது அவ்வளவு சுலபமான வேலையல்ல என்பது தெளிவாக்கப்பட்டது. பைஸாந்தியப் பேரரசுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து வந்த சிரியா எல்லைப் பகுதி மக்கள் இப்பொழுதுää முஸ்லிம்களிடம் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு முஸ்லிம்களின் ஆதரவாளர்களாக மாறிக் கொண்டார்கள்.
தபூக்கில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உரையை ஆற்றினார்கள். இன்றளவும் அந்த உரையானது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மக்காவின் வெற்றிக்குப் பின்..
விவாகரத்து பற்றி ஊகங்கள்
மதீனாவில் உமர் (ரலி) அவர்கள்ää மதீனாவின் உயரமான பகுதி ஒன்றில் வசித்து வந்தார்கள். இவரது அண்டை வீட்டுக்காரராக பனூ உமைய்யா பின் ஸைத் அன்ஸாரி (ரலி) என்ற நபித் தோழர் வசித்துவந்தார்கள். இந்த இரண்டு அண்டை வீட்டுக்காரர்களது ஒப்பந்தப்படிää ஒருநாளைக்கு ஒருவர் என்ற அடிப்படையில்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு ஒருவர் மாற்றி ஒருவர் சென்று அன்றைய தினத்தில் நடந்தவைகள் பற்றி வந்தவர் வராதவருக்குச் சொல்லி விட வேண்டும் என்று தீர்மானித்து செயல்படுத்தி வந்தனர். இந்த அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வார்ää அன்றைய தினம் நடந்தவைகள் பற்றி பனூ உமைய்யா (ரலி) அவர்களிடம் வந்து சொல்வார். அதே போல பனூ உமைய்யா (ரலி) அவர்கள் சென்ற அன்றைக்கு நடந்தவைகள் பற்றி உமர் (ரலி) அவர்களுக்குச் சொல்லி விடுவார்.
மக்காவில் உள்ள ஆண்கள் பெண்களை மிகைத்திருந்தார்கள்ää ஆனால் மதினாவிலோ நிலைமை தலைகீழாக இருக்கின்றதே என்று உமர் (ரலி) அவர்கள் ஒரு சமயம் கருதினார்கள். ஒருநாள் உமர் (ரலி) அவர்களுக்கு அவரது மனைவிக்கும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதுää அப்பொழுது அமைதியாக இருந்து விட வேண்டிய நிலையில் இருந்த உமர் (ரலி) அவர்களின் மனைவிää நீங்கள் எப்படி என்னிடம் கோபமாகப் பேசலாம் என்று பதிலுக்குப் பேசி விட்டதோடுää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாக்குவாதம் செய்வதைச் சென்று பாருங்கள்ää அப்பொழுது புரியும் உங்களுக்கு என்று கூறி விடுகின்றார்கள். இன்றைய தினம் அவரது மனைவியர்களில் ஒருவர் இரவு முழுவதும் அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார் என்றும் கூறினார்.
இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியும் தனது மகளுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றுää நீங்கள் ஏதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாக்குவாதம் ஏதும் செய்தீர்களா? என்று வினவுகின்றார்கள். அதற்கு அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள்ää தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறிய பொழுதுää நீங்கள் மிகப் பெரிய நஷ்டவாளியாகி விட்டீர்களே..! என்று உமர் (ரலி) அவர்கள் கூறி விட்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோவினை செய்வது அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தந்து விடாதா என்று கேட்டார்கள். தனது மகளை கடுமையான முறையில் எச்சரித்து விட்டுää வீடு திரும்பினார்கள் உமர் (ரலி) அவர்கள்.
அன்றைய தினம் இரவில்ää அண்டை வீட்டுக்காரரான அன்ஸாரித் தோழர் உமர் (ரலி) அவர்களது வீட்டுக் கதவினைத் தட்டுகின்றார்கள்ää உமர் (ரலி) அவர்கள் எழுந்து என்ன விஷயமாக இருக்கும் என்று அறியச் சென்ற பொழுதுää அவரது நண்பர் கூறினார்ää மிகவும் கவலைப்படத்தக்க விஷயம் ஒன்று நடந்து விட்டது என்று கூறினார்.
அப்போதைய நாளில் பனூ கவஸான் கோத்திரத்தவர்கள் மதீனாவைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி மதீனாவில் பரவி இருந்தது. எனவேää ஒருவேளை பனூ கவஸான்கள் மதீனாவைத் தாக்க வந்து கொண்டிருக்கின்றார்களா தோழரே.. ..ää என்று தனது தோழரைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் கேட்ட பொழுதுää ''அதனையும் விட மிகவும் பாரதூரமான நிகழச்சி ஒன்று நடந்து விட்டது"" என்று கூறினார் அவர். அப்பொழுது அவரைப் பிடித்து உலுக்கி உமர் (ரலி) அவர்கள்ää என்ன நடந்தது விரைந்து சொல்லுங்கள் என்றார்கள். அப்பொழுது அந்த அன்ஸாரித் தோழர்ää 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களை விவாகரத்துச் செய்து விட்டார்கள்" என்ற செய்தியைத் தான் கேள்விப்பட்டதாகக் கூறி விடுகின்றார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அன்றைய தினம் இரவு முழுவதும் தொழுகையிலேயே கழித்தார்கள். மறுநாள் அதிகாலையில்ää நேராக அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றார்கள். அப்பொழுதுää அன்னையவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்துச் செய்து விட்டார்களா? என்று கேட்டார்கள். அதற்குää இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என அன்யைவர்கள் பதிலளித்தார்கள்.உணர்ச்சி வசப்பட்ட உமர் (ரலி) அவர்கள்ää ''இது பற்றி நான் முன்னரே உங்களை எச்சரிக்கவில்லையாää இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோவினை செய்ததன் மூலம் நீங்களாகவே பிரச்னையை வரவழைத்துக் கொண்டீர்களே? என்றார்கள். அதனைக் கேட்ட அன்னையவர்களின் மனமுடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை அழுத நிலையிலேயே விட்டு விட்டுää நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு நபித் தோழர்கள் பலர் கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் அமர்ந்து கொண்டே இது குறித்து தங்களுக்குள் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுதுää பள்ளிவாசலுடன் ஒட்டிக் கட்டப்பட்டிருந்த தனது அறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அந்த அறையில் வாசலுக்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள்ää அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்தவரிடம் தான் உள்ளே வர இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோருமாறு கேட்டுக் கொண்டார்கள். உள்ளே சென்று திரும்பி வந்த அந்தக் காவலாளி தாங்கள் வந்திருப்பதை தெரிவித்தும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்கள் என்று பதில் கூறினார்.
உமர் (ரலி) அவர்கள் பள்ளியின் முக்கியப் பகுதிக்குத் திரும்பி வந்தார்ää அங்கு ஒரு மூலையில் கவலை தோய்ந்த மனதுடன் அமர்ந்து கொண்டார். சற்று நேரங் கழித்து மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார்கள். மீண்டும் அந்த காவலாளியிடம் கூறி தான் உள்ளே வர அனுமதி பெற்று வருமாறு கூறி அனுப்பி வைத்தார்கள். இந்த முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை என்று அந்த காவலாளி திரும்பி வந்து சொன்னார்.
மீண்டும் உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் திரும்பி வந்து அமர்ந்து கொண்டார். இப்பொழுது மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்ää இறைவன் தன் மீது கருணை புரியுமாறு பிரார்த்தித்துக் கொண்டார். மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண அவரது அறைக்குச் சென்றார்கள்.இந்த முறை உள்ளே வர அனுமதி கிடைத்தது. அறைக்குள் உள்ளே நுழைந்த உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''இறைத்தூதர் (ஸல்) அவர்களேää எனது மகள் ஹஃப்ஸாவுக்காகப் பரிந்து பேச நான் இங்கு வரவில்லை.
இது தான் உங்களுக்கு விருப்பம் என்றிருந்தால்ää அவரது கழுத்தை எனது கைகளாலேயே நெறித்து விடுகின்றேன்.
இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களது இதயம் இளகியதுää உமர் (ரலி) அவர்களைப் பார்த்து புன்னகை பூத்தார்கள்.
மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää மக்காவில் நமது பெண்கள் அமைதியாக இருந்தார்கள்ää மதீனாவின் சூழ்நிலை அவர்களை இவ்வாறு எதிர்த்தும் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டது என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே..ää ''இந்தக் காரணத்திற்காக உங்கள் மனைவிமார்களை நீங்கள் விவாகரத்துச் செய்திருப்பீர்கள் என்று சொன்னால்ää அல்லாஹ்வும்ää அவனது வானவர்களும்ää இன்னும் உங்களது தோழர்களாகிய நாங்கள் உங்களுடனிருக்கின்றோம்"" என்றார்கள்.
உமர் (ரலி) அவர்களை நோக்கி புன்னகை பூத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää ''உண்மையாகää நான் எனது மனைவிமார்களை விவாகரத்துச் செய்யவில்லை"" என்று கூறினார்கள். ஒருமாத காலத்திற்கு அவர்களிடமிருந்த நான் பிரிந்து தனித்திருக்கவே விரும்பினேன் என்று கூறினார்கள்.
இதனை நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சொல்லட்டுமாää என்று கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.
'நீங்கள் விரும்பினால்ää அவ்வாறே சொல்லாம்" என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அவர்கள் தங்கி இருந்த அறையைச் சற்று நோட்டமிட்ட உமர் (ரலி) அவர்கள்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெறும் பாயில் தான் அமர்ந்திருந்தார்கள். கட்டில் போன்ற எதுவும் அங்கில்லை. உண்பதற்கு ஒரு ரொட்டித் துண்டுதவிர வேறொன்றும் அங்கு இல்லை. இந்த அசாதரணமாக நிலையைப் பார்த்த உமர் (ரலி) அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோட ஆரம்பித்தது.
உமர் (ரலி) அவர்கள் அழுவதைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்)அவர்கள்ää 'இப்னு கத்தாபே உம்மை அழ வைத்தது எது? என்று கேட்டார்கள்.
'நீங்களோ அல்லாஹ்வின் தூதர்ää எந்த வசதிகளுமற்ற அசாதராண சூழ்நிலையைத் தேர்வு செய்து வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்துத் தான் நான் அழுகின்றேன். பாரசீக மக்களும்ää பைஸாந்தியப் பேரரசும் வளமான வசதியான ஆடம்பரமாக வாழ்க்கையை வாழுகின்றார்கள். இவ்வாறிருக்கையில்ää உங்கள் மீது அருள்வளங்களின் வாயில்களைத் திறந்து விடுமாறு நீங்கள் ஏன் வல்ல ரஹ்மானிடத்தில் கையேந்திப் பிரார்த்தித்துக் கேட்கக் கூடாது? என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னை தூதராக அனுப்பி வைத்தவன் என்னை செல்வங்களுக்குச் சொந்தக்காரனமாக ஆக்கவில்லை என்றா எண்ணுகின்றீர்கள். இருந்த போதிலும்ää இந்த உலகத்தின் அருள்வளங்களை எனக்கு அவன் வாக்களித்தான்ääஆனால் அவற்றை நான் மறுத்து விட்டு மறுஉலகின் அருள் வளங்களை அதற்கு ஈடாகப் பெற்றுக் கொண்டு விட்டேன். இந்த அற்பமான உலக வளங்களை விட நிச்சயமாக மறு உலக வளங்களையே தேர்வு செய்வதற்குச் சிறந்தது. பாரசீகம் மற்றும் பைஸாந்தியப் பேரரசுகளின் வளங்களைப் பொறுத்தவரைää அந்த வளங்கள் யாவும் முஸ்லிம்களின் காலடியில் வந்து விழும் என்று இறைவன் வாக்களித்து விட்டான். அந்த நேரத்தில் நான் உயிரோடிருக்க மாட்டேன்ää ஆனால் அது உங்களுடைய வாழ்நாளில் நிகழும்ää பாரசீகத்தையும்ää பைஸாந்தியப் பேரரசையும் முஸ்லிம்கள் அப்பொழுது வெற்றி கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லா இப்னு உபை - ன் அடக்க நிகழ்ச்சி
அப்துல்லா இப்னு உபை மதீனாவின் தலைவனாக இருந்தான். இன்னும் மதீனாவின் மணிமுடியை அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அவன் இருந்த காலத்தில் தான்ää மதீனாவின் அன்ஸார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவில் அகபா என்னும் இடத்தில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துää அவர்களை மதீனாவில் வந்து தங்கி விடுமாறு அழைப்பு விடுத்தார்கள். அந்த அழைப்பினை ஏற்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினை விட்டு வெளியேறிää ஹிஜ்ரத் செய்து மதீனாவில் வந்து தங்கி வரலானார்கள். தான் ஆட்சியாளராக வரவிருந்த நிகழ்வு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகையால் கெட்டு விட்டதை அறிந்து வெறுப்பிற்குள்ளானான் அப்துல்லா இப்னு உபை. மதீனாவின் அனைத்து குலங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாகää அப்துல்லா இப்னு உபையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். இஸ்லாம் அவனது மனதில் மிகவும் அரிதாகவே குடியேறியதுää எனவே இஸ்லாத்திற்கு எதிரான பல்வேறு செயல்களில் மறைமுகாக ஈடபடலானான்.
உஹத் போரின் பொழுதுää போர் ஆரம்பிக்க இருந்த கடைசி நேரத்தில் தனது குழுவினரை போர் செய்ய விடாமல் தடுத்துää தனது குழுவினருடன் மதீனாவிற்குத் திரும்பி வந்து விட்டான். இன்னும் பனீ முஸ்தலக் போரின் சமயத்தில்ää போரின் கலந்து கொண்ட இறைப் போராளிகளுக்கு எதிராகவும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதும் தகாத வார்த்தைகளைக் கூறினான். இன்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது களங்கம் சுமத்திய சம்பவத்தில்ää இவன் தான் முன்னணி வகித்தான்.
இந்த நிலையில் இவனைக் கொல்வதற்கு தனக்கு அனுமதி தருமாறு உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) கேட்டார்கள்ää கருணை உருவான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டார்கள்.
அப்துல்லா இப்னு உபையின் நயவஞ்சகத்தை அறிந்திருந்த வல்ல அல்லாஹ்வும்ää ''இத்தகைய நயவஞ்சகர்கள் எழுபது முறை பிரார்த்தனை செய்தாலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது"" என்ற வசனத்தை இறக்கி அருளினான்.
அப்துல்லா இப்னு உபை இறந்த பொழுதுää இறைத்தூதர் (ஸல்)அவர்கள் அவனது அடக்க நிகழச்சியில் கலந்து கொள்வது என்று தீர்மானித்தார்கள்ää தொழுகையை முன்னின்று நடத்தவும் தீர்மானித்தார்கள். இந்த நிலையில்ää இறைத்தூதர் (ஸல்)அவர்களின் வருகைக்காக அங்கு காத்திருந்த உமர் (ரலி) அவர்கள் அவர்களை வழி மறித்துää அப்துல்லா இப்னு உபை யின் அடக்க தொழுகையில் கலந்து கொள்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அப்துல்லா இப்னு உபையின் பல்வேறு நயவஞ்சகச் செயல்களை அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஞாபகப்படுத்திக் காட்டியதோடுää 'இத்தகைய நயவஞ்சகர்கள் எழுபது தடவை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களது பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதில்லை" என்று கூறி விட்டதையும் ஞாகப்படுத்திக் காட்டினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உமரேää பின்னுக்கு நில்லுங்கள்ää என்னைத் தொழ வைக்க விடுங்கள் என்றார்கள். இந்த விஷயத்தில் எனது சொந்த விருப்பப்படி நடந்து கொள்ளும் இறைவன் எனக்கு அனுமதி வழங்கி இருக்கின்றான்ää எனவே நான் இந்த விஷயத்தில் இரக்கத்தோடு நடந்து கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.
அதன் பின்பு உமர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பின் நின்று இறுதி அடக்கத் தொழுகையில் கலந்து கொண்டார்கள். இன்னும் அப்துல்லா இப்னு உபை யின் உடல் அடக்கம் செய்யப்படுவதை வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். வீடு திரும்பு முன்பாக அங்கு நின்று அப்துல்லா இப்னு உபைக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து விட்டுää வீடு திரும்பினார்கள்.
அதன் பின் சில நாட்கள் கழித்து பின்வரும் இறைவசனத்தை தனது தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி அருளினான் :
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும்ää அவன் தூதரையும் நிராகரித்துப் பாவகளாகவே இறந்தார்கள். (9:84)
இறைவன் அருளிய இந்த வசனங்களை உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்த பொழுதுää இறைவன் தன்னுடைய வாதத்தில் நியாயமிருப்பதை சுட்டிக் காட்டு விட்டான் என்று உமர் (ரலி) அவர்கள் மிகவும் சந்தோசப்பட்டார்கள்.
வானவர் தூதர் மனித உருவில் தோன்றிய பொழுது
ஒருநாள் நானும்ää இன்னும் ஏனைய சில தோழர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம்ää அப்பொழுது வெள்ளை உடை உடுத்திய கருகருவென்று வளர்ந்திருந்த தலைமுடியைக் கொண்டதொரு மனிதர் அங்கு வந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னங்ககால்களோடு ஒட்டி வைத்தது போன்று நேருக்கு நேர் பார்த்தபடி தனது இரு கரங்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொடையின் மீது வைத்த வண்ணம் அமர்ந்துää ''முஹம்மதே..! இஸ்லாம் என்றால் என்ன"" என்று எனக்குக் கூறுங்கள் என்று கூறினார் என்று கூறி விட்டு நடந்த சம்பவத்தை உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :
ஒருநாள் நாங்கள் எல்லோரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று பெருமானர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை பெருமானார் (ஸல்) அவர்களின் முழங்கால்களுக்கு எதிராகவும் கைகளைக் கால்களின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதேää இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும்ää முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சியம் கூறுவதுää தொழுகையை நிறைவேற்றுவது. ஜகாத்2 கொடுப்பதுää ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதுää உங்களால் முடிந்தால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அ வரே உண்மைப்படுத்தியது குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ஈமான்3 குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். ''அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள்ää அவனது வேதங்கள்ää அவனது தூதர்கள்ää இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும்ää நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்"" என்பதாக பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் தந்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே பேசினீர்கள் என்றார். தொடர்ந்து அவர் இஹ்ஸான்4 (நல்ல செயல்கள்) பற்றி எனக்;குச் சொல்லுங்கள் என்றார்.
''நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்து தொழுவது போல் தொழுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்"" எனச் சொன்னார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத் தீர்ப்பு நாள்) குறித்துச் சொல்லுங்கள் என்றார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்" என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாவதுää ''அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள்5. அப்போது காலணிகளில்லாதää ஆடைகளற்றää ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன்.
பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள்ää 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா" எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்" என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள்ää அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்"" என்று கூறினார்கள். - முஸ்லிம்
இறுதி ஹஜ்
கி.பி.632 ம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கான தயாரிப்புகளில் இறங்கினார்கள். அதுவே அவர்களது இறுதி ஹஜ்ஜாகவும் அமைந்தது. ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாகவே நடந்தன. அரபுப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டுää அவர்கள் அனைவரும் மதினா நகருக்கு வந்து குழுமுமாறு வேண்டுகோள் கொடுக்கப்பட்டார்கள். இந்த அழைப்பினைக் கேள்விப்பட்டுää ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து மதீனாவில் கூடினார்கள்.
அதன் பின்னர் ஹஜ்ஜுக்காக மக்காவை நோக்கி இந்த ஒரு லட்சம் பேரும் பயணப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்திற்குத் தலைமை தாங்கினார்கள். அவர்களது மனைவிமார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிளம்பினார்கள். அவர்களைத் தொடர்ந்து அபுபக்கர் (ரலி)ää உமர் (ரலி) அவர்களும்ää அவர்களது குடும்பத்தார்களும் கிளம்பினார்கள்.
துல் குலைஃபாவில் வைத்து ஹாஜிகள் அனைவரும் இஹ்ராம் என்னும் வெள்ளுடையயை அணிந்து கொண்டார்கள். இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் உள்ள அனைவரும் ''லப்பைக்கல்லாஹ{ம்ம லப்பைக்" என்ற முழக்கத்தை முழங்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். இந்த முழக்கத்தை அங்கு குழுமியிருந்து ஒரு லட்சம் பேரும் உரத்து ஒருமித்த குரலில் முழங்கினார்கள்.
அதாவது 19 நாட்கள் பயணத்திற்குப் பின்பாகää இந்தப் பயணக் குழுவினர் மக்காவை துல்ஹஜ் பிறை 4 வந்தடைந்தனர். துல்ஹஜ் 8 ம் நாளன்று ஹாஜிகள் அனைவரும் மக்காவிலிருந்து வெளியேறி அன்றைய இரவை மினாவை கழித்தார்கள். அதற்கு அடுத்த நாள் அவர்கள் அரஃபாவை நோக்கிக் கிளம்பினார்கள். அன்றைய தினம் மதிய லுஹர் வேளைத் தொழுகைக்குப் பின்னர்ää வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்னர்ää அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
'அறிந்து கொள்ளுங்கள் அஞ்ஞானக் கால வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன".
'ஓர் அரபிக்குää அரபியல்லாதவரை விடவோää ஓர் அரபியல்லாதவருக்கு ஓர் அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லைää நீங்கள் அனைவரும் ஆதமின் வழித் தோன்றல்களே! ஆகமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்"
'முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்"
'உங்கள் அடிமைகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். (அதாவது உங்கள் அடிமைகளுக்குரிய உரிமைகளைப் பேண்க்காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருங்கள்). நீங்கள் உண்பதையே அவர்களுக்கு ஊட்டுங்கள்ää நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணிவியுங்கள்."
'அறியாமைக் காலத்தின் இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இனி பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் ரப10ஆ பின் ஹர்ஸ் உடைய மகனுக்கான ரத்தப் பழியை ரத்து செய்கின்றேன். சொல்லாதென அறிவிக்கின்றேன்".
'அறியாமைக்கால வட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. (இனி எவரும் எவரிடமும் வட்டி தரும்படி கோர உரிமை இல்லை) அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் வட்டியை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்குரித்தான வட்டியை செல்லாதது ஆக்குகின்றேன்."
'பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும் உங்கள் மீது பெண்களுக்கும் உரிமையுள்ளது."
'இந்த நாளும் இந்த மாதமும் இந்த நகரும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குவது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்".
'நான் உங்களிடம் ஒரு பொருளை விட்டுச் செல்கின்றேன். நீங்கள் அதனை வலுவாகப் பற்றிப் படித்துக் கொண்டால் வழிபிறழ்ந்து போக மாட்டீர்கள். அதுவே அல்லாஹ்வின் திருமறையாகும்".
இதன் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஷரீஅத்தின் அடிப்படைச் சட்டங்களை எடுத்துரைத்தார்கள். பின்னர் மக்கட் திரளை நோக்கி வினவினார்கள்:
'உங்களிடம் இறைவன் என்னைப் பற்றி விசாரித்தால் என்ன சொல்வீர்கள்?".
'தாங்கள் இறைவனின் செய்தியை எடுத்துரைத்தது விட்டீர்கள். உங்கள் கடமையை நிறைவேற்றி விட்டீர்கள்" என்று நாங்கள் சொல்வோம் என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி விரலை உயர்த்தி மூன்று முறை 'இறைவா! நீயும் சாட்சியாக இரு!" என்று கூறினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருக்குர்ஆனின் இந்த வசனம் இறக்கியருளப்பட்டது:
'இன்று உங்களுக்காக உங்கள் நெறியை நிறைவு படுத்திவிட்டோம். நமது அருளை முழுமையாகப் பொழிந்து விட்டடோம். உங்களுக்காக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக அங்கீகரித்துக் கொண்டோம்."
இந்த ஹஜ்ஜின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் எப்படிச் செய்ய வேண்டுமென்று ஹஜ்ஜின் வழிமுறைகள் அனைத்தையும் தாமே நிறைவேற்றிக் காட்டினார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து ஹஜ்ஜின் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு இன்னொரு ஹஜ் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைக்குமா? கிடைக்காதா என்று நான் அறிய மாட்டேன்" என்று கூறினார்கள்.
இதே சந்தர்ப்பத்தில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடம்ää 'இங்கே இருப்பவர்கள் அனைவரும் (இந்த அறிவுரைகள் அனைத்தையும்) இங்கில்லாதவர்களுக்கு எடுத்துரைக்கட்டும்" என்றும் கூறினார்கள்.
இந்த உரைக்குப் பின்னர்ää இறைவன் தனது தூதருக்கு கீழ்க்கண்ட வசனத்தை இறக்கியருளினான் :
இன்றைய தினம் உங்களுக்காக உங்களது மார்க்கத்தை நாம் பூர்த்தியாக்கி விட்டோம்ää எமது அருட்கொடையையும் பூர்த்தியாக்கி விட்டோம்ääஇன்னும் உங்களுக்கு இசைவான மார்க்கமாக இஸ்லாத்தை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்"" என்ற பொருளைக் கொண்ட வசனம் இறக்கிபயருளப்பட்டது.
இந்த வசனத்தைக் கேள்விப்பட்ட உமர் (ரலி) இறைவன் நம்முடைய மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால்ää அபுபக்கர் (ரலி) அவர்களைப் பார்த்த உமர் (ரலி) அவர்களுக்கு அவர் சோகமாக இருப்பது மிகவும் வித்தியாசமாகப்பட்டது.
நமக்கு இசைவான மார்க்கமாக இஸ்லாத்தைத் தேர்வு செய்து பூர்த்தி செய்து விட்டதாக இறைவனே அறிவித்திருக்க அபுபக்கரே நீங்கள் ஏன் சோகமயமாக உட்கார்ந்திருக்கின்றீர்கள் என்று கேட்டார் உமர் (ரலி) அவர்கள். இந்த வசனத்தில் ஒரு எச்சரிக்கை பொதிந்திருக்கின்றதுää அது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக வந்தார்களோ அந்தப் பணி நிறைவு செய்யும் காலம் வந்து விட்டதுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது அந்திமக் காலத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்களோää நம்மை விட்டும் பிரிந்து போக இருக்கின்றார்களோää என்ற அச்சம் தான் என்னை மேலிட்டுக் கொண்டிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மோடு மிக நீண்ட நாட்களுக்கு இருக்க மாட்டார்கள் போலத் தோன்றுகின்றது என்று தனது அச்சத்தை உமர் (ரலி) அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
ஹாஜிகள் அன்றைய தினம் மாலையில் அரஃபாவை விட்டும் கிளம்பி முஸ்தலிபாவிற்கு வந்து சேர்ந்தார்கள். அதற்கு அடுத்த நாள் தங்களது பலிப் பிராணிகளுடன் மினாவை அடைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மொத்தம் 63 பிராணிகளைப் பலியிட்டார்கள்ää அவை ஒவ்வொன்றும் அவர்களது வாழ்நாளில் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருந்தது. உமர் (ரலி) அவர்கள் 52 பிராணிகளைப் பலியிட்டார்கள். அதனை அடுத்து ஆண்கள் தங்களது தலை முடியை மழித்துக் கொண்டதுடன்ää ஹஜ் கிரியைகள் இனிதே நிறைவேறின. இதனை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களும்ää அவர்களது தோழர்களும் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதிப் பயணம்
பேரருளாளனை நோக்கி..!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ''இறுதி ஹஜ்ஜை"" நிறைவேற்றி விட்டு மதீனாவிற்கு வந்ததன் பின்னாள் சுகவீனம் அடைந்தார்கள். கைபரில் வைத்து யூதப் பெண்மணி ஒருத்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து வைத்த நஞ்சு தனது வேலையை ஆரம்பித்து விட்டிருந்தது. இதனை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் தன்னுடைய பேரருளாளனைச் சந்திக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதையும்ää தனது தூதுத்துவப் பணி நிறைவடைந்து கொண்டிருப்பது குறித்தும் அறிந்து கொண்டார்கள்.
ஒருநாள் இரவு நேரம்ää தனியே எழுந்து உஹத் போரில் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த தனது தோழர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜன்னத்துல் பக்கீ என்ற மண்ணறைக்குச் சென்றார்கள். அதன் பின்னர்ää தனது மனைவியருள் ஒருவரான அன்னை மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது காய்ச்சல் உச்சத்துக்கு ஏறியது. அப்பொழுது தனது அனைத்து மனைவிமார்களையும் அழைத்துää தனது சுகவீனம் வலுவடைந்து சென்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில்ää இனி ஒவ்வொருவரையும் தனியாகத் தம்மால் சந்திக்க இயலாது என்ற நிலையினை விளக்கிக் கூறினார்கள். சுகவீனம் நீங்கிää நிவாரணம் அடையும் வரைக்கும் ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்திலேயே தங்கிக் கொள்வதற்கு நீங்கள் அனைவரும் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களிடம் விடுத்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களது சம்மதத்தை உடனே தெரிவித்தார்கள்ää அலி (ரலி) அவர்கள் அவர்களைத் தாங்கிப் பிடித்திருக்க அப்பாஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்திற்கு கொண்டு சென்றார்கள்.
ஒருநாள் கழிந்ததுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சற்று குணமடைந்தது போலத் தெரிந்தவுடன்ää குளித்தார்கள். புத்துணர்வு கொண்டவர்களாக அன்றைய தின மதிய வேளைத் தொழுகையை நடத்துவதற்காக பள்ளிக்கு வந்தார்கள். அந்தத் தொழுகை முடிந்ததும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி அமர்ந்து கொண்டு மக்களுக்கு உரையாற்ற ஆரம்பித்தார்கள்:
அல்லாஹ்.ää தன்னுடைய அடியார் ஒருவருக்கு இந்த உலக வாழ்க்கையையும்ää தனக்கு அருகாமையில் இருக்கும் வாய்ப்பையும் வழங்கி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுமாறு கூறினான்ää அந்த அடியாரோ அவனைச் சந்திக்கும் பாக்கியத்தையே தனக்கு விருப்பமானதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். உங்களது தூதர் இறப்பைச் சந்திக்கவிருக்கின்றார் என்பது குறித்து நீங்கள் அச்சமடைந்திருப்பதாக நான் அறிய வருகின்றேன். இதற்கு முன் வாழ்ந்த எந்தத் தூதராவது மரணிக்காமல் இருந்திருக்கின்றார்களா? அல்லது உங்களில் எவருமே மரணத்தைச் சந்திக்கமால் இருந்திருக்கின்றார்களா? அறிந்து கொள்ளுங்கள்ää நான் எனது இறைவனைச் சந்திக்க இருக்கின்றேன். நீங்களும் எனக்குப் பின் விரைவிலோ அல்லது தாமதமாகவோ வர இருக்கின்றீர்கள் என்று உரையாற்றினார்கள்.
இந்த உரைக்கும் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது உற்ற துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குச் சென்று விட்டார்கள். அன்னாரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அன்றைய இரவுக்குப் பின் அவர்களது நோயின் வேதனை அதிகரித்தது. இறைவனிடம் அருட்கொடைகளை வழங்குமாறு பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள். மறுநாள் காலையில் அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனது அறையில் திரைச் சீலையை விலக்கிப் பார்த்த பொழுதுää மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அலி (ரலி) அவர்கள் கைத்தாங்கலாக அழைத்து வர இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிக்குள் நுழைந்தார்கள். தொழுகையை நிறைவேற்றிய பின்னர்ää மிம்பரின் மீது அமர்ந்து கொண்டு தன்னுடைய தோழர்களைப் பார்த்து உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :
இறைவன் மீது சத்தியமாக..! இறைவன் எனக்கு ஆகுமாக்கிய ஒன்றைத் தவிர வேறொன்றை நான் எனக்கு ஆகுமாக்கிக் கொள்ளவில்லைää இன்னும் இறைவன் தடுத்தவற்றைத் தவிர வேறொன்றையும் எனக்குத் தடுத்துக் கொள்ளவில்லை.
இந்த உரைக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீண்டும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குச் சென்று விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிலை முன்பைக் காட்டிலும் மோசமாகிக் கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் வல்லோனைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டார்கள். இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள்.
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் பள்ளியில் ஒன்று கூடினார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக குழுக்கள் குழுக்களாக அமர்ந்திருந்தார்கள். இன்னும் அங்கே ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. காதோடு காதாக கிசுகிசுத்த குரலில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்ää பலர் அழுது கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம் மத்தியில் இல்லையென்றால் இனி இந்த முஸ்லிம் உம்மத்தின் நிலை என்னவாகும் என்பது குறித்த அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தியவர்களாக இருந்தார்கள்.
அனைவரது கண்களும் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை நோக்கியே இருந்தது. அந்த அறை இன்னும் சற்று நேரத்தில் திறந்து விடும்..ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஒளி பொருந்திய வதனைக் கொண்டு வந்து நம் முன் காட்சி தந்து விடுவார் என்றே அவர்கள் எண்ணிக் கொள்ளலாயினர்.
அப்பொழுது அந்த பகுதிக்கு வந்த உமர் (ரலி) அவர்கள் மக்கள் மத்தியில் உலாத்திக் கொண்டிருந்தவர்களாகää
''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்;டார்கள் என்று யார் சொன்னது..ää அவரது குரலில் கடுமை தெரிந்தது. நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன் அவர்கள் உயிரோடு தான் இருக்கின்றார்கள்ää மூஸா (அலை) அவர்கள் போல தனது இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள்ää சிறிது காலம் கழித்து அவர்கள் மீண்டும் வருவார்கள்"" என்று முழங்கினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களது அறை இப்பொழுது திறந்து கொண்டது. சோபை இழந்தவராக ஒரு மனிதர் அங்கிருந்து வெளிப்பட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தனää சோகத்தால் அவை கண்ணீரைச் சொறிந்து கொண்டிருந்தன. அவர் தான் அபுபக்கர் (ரலி)..ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழர். குகையில் இருந்த இன்னொருவர். மக்களுக்கு மத்தியில் சோகமான குரலில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :
அவரிடமிருந்து வார்த்தைகள் அளந்து அளந்து வந்தன. என்னருமை மக்களே..! எனது உரையைச் செவிடுத்துக் கொள்ளுங்கள்..!
அறிந்துகொள்ளுங்கள்ää ''உங்களில் யார் முஹம்மதை வணங்கினீர்களோää அவர் ஏனைய மனிதர்களைப் போலவே இறந்து போகக் கூடியவராக இருக்கின்றார். ஆனால் உங்களில் யார் முஹம்மதினுடைய இறைவனை வணங்கினீர்களோ அந்த இறைவன் தான் என்றென்றும் உயிர் வாழக் கூடியவன் மற்றும் என்றென்றும் நிலைத்திருப்பவன்.""
அந்த நெடியதொரு கூட்டத்தில் மிகப் பெரும் நிசப்தம் நிலவியது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட அனைவரும் நிலைகுலைந்தவர்களாக அதிர்ச்சியில் உறைந்து போய்க் கிடந்தார்கள். தனது கண்ணில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துப் போட்டவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் காட்ட ஆரம்பித்தார்கள் :
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும்ää அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த கூட்டத்தினரிடையே ஓதிக் காட்டினார்கள். முஹம்மது ம் கூட மரணிக்கக் கூடியவரே..! அவர் அல்லாஹ்விடமிருந்தே வந்தார்ää அவனிடமே திரும்பிச் சென்று விட்டார் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அபுபக்கர் (ரலி) அவர்களது அந்த உரை அங்கிருந்தோரிடையே மின்சாரத்தைப் பாய்ச்சியது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது. இப்படியொரு வசனம் இறைமறையாம் திருக்குர்ஆனில் இருக்கின்றது என்பதை நாங்கள் அப்பொழுது தான் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாயிலிருந்து செவிமடுத்து அறிந்து கொண்டோம். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
இறைவன் மீது சத்தியமாக..ää அபூபக்கர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனத்தைச் செவிமடுத்த பின்புää எனது உணர்வுகள் என்னை விட்டும் அகன்று விட்டனää எனது பாதங்கள் நிலை கொள்ளவில்லைää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்களே என்பதை அறிந்தவுடன் நினைவற்ற நிலையில் நான் கீழே விழுந்த விட்டேன் என்று கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் கலிஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உடல் நல்லடக்கத்திற்காகத் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பொழுதுää ஸகிஃபா பனீ ஸஃதா என்ற தங்களது ஒன்று கூடும் இடத்தில் அன்ஸார்கள் ஒன்று கூடிää இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் நம்முடைய தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கலந்தாலோசனையில் ஈடுபட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே இறுதித் தூதராவார்கள்ää அவருக்குப் பின் யாரும் தூதராக வர முடியாது. இன்னும் அவர் தலைவராகவும் இருந்தார்கள்ää அவரது மறைவுக்குப் பின்னர் அவரது தலைமைப் பதவியை இன்னொருவர் இட்டு நிரப்பியாக வேண்டும் என்பதே அவர்களது ஆவலாக இருந்தது.
அப்பொழுது அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள்ää முஸ்லிம் உம்மத்தின் அனைத்துத் துறைகளையும் நிர்வகிக்கின்ற பொறுப்பு - தலைமைப் பதவிக்கு அன்ஸார்களில் இருந்து ஒருவர் தான் வர வேண்டும் என்று கூறினார். அவர் தனது கருத்துக்கு ஆதரவாகää அன்ஸார்கள் தான் இஸ்லாத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்ää இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்ää இன்னும் அவர்களது உறவுகளே அவர்களைக் கொலை செய்ய முற்பட்ட நேரத்தில் அன்ஸார்கள் தான் அவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கினார்கள். இன்னும் அன்ஸார்களின் கடுமையான முயற்சியின் காரணமாக இஸ்லாம் நாலா பக்கமும் பரவியதுää ஆட்சிப் பொறுப்பிற்கும் வந்தது. அவர் உரை நிகழ்த்தி முடித்தவுடன்ää அவரது உரைக்கு நல்லதொரு வரவேற்பு இருந்ததுää அந்த வரவேற்பைப் பார்த்தால் இனி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களைத் தான் அன்ஸார்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்று யூகிக்க வேண்டிய நிலை வந்தது.
அங்கு ஒருபுறம் கூட்டம் நடந்து கொண்டிருக்க இன்னொரு புறம் முஹாஜிரீன்கள் மஸ்ஜித்துந் நபவியில் கூடி இருந்தார்கள்ää அப்பொழுது அங்கு வந்த ஒருவர் அன்ஸார்கள் ஸகிஃபா பனீ ஸஅதா வில் கூடி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனையில் இருக்கின்றார்கள் என்று கூறினார். இன்னும் இது மிகவும் கடுமையான சிக்கலான தருணமாகவும் இருந்தது. இப்பொழுது நபித்தோழர்களுக்கிடையே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நல்லடக்கப் பணியைக் கவனிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டிய நிலையில் இருந்தார்கள்ää ஆனால் இந்த நிலையில் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற பிரச்னையில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள் என்று சொன்னால்ää அதில் எடுக்கப்படும் எந்த ஒரு தவறான முடிவும் முழு முஸ்லிம் உம்மத்தையும் மீட்க இயலாததொரு பிரச்னையில் மாட்ட வைத்து விடும்ää எதிர்காலம் மீண்டும் ஜாஹிலிய்யக் காலத்துக்குச் சென்று விடும். இருப்பினும் நிலைமையை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு முன்பே பனீ ஸஅதா வுக்குச் சென்ற போதிலும்ää அவர்கள் சென்றடைந்த நேரம் மிகவும் தாமதமானதாக இருந்தது.
அபுபக்கர் (ரலி)ää உமர் (ரலி)ää அபூ உபைதா (ரலி) ஆகியோர்கள் அன்ஸார்கள் கூடியிருந்த பனீ ஸஅதாவுக்கு வந்த பொழுதுää அன்ஸார்கள் ஏறக்குறைய ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் உள்ள ஆட்சித்தலைவராகத் தேர்வு செய்து விடக் கூடிய நிலைக்கு வந்து விட்டார்கள். அவரது பெயரை அறிவிப்பது ஒன்றே இறுதியாக இருந்தது. அப்பொழுதுää அவர்களிடையே உரை நிகழ்த்த ஆரம்பித்த அபுபக்கர் (ரலி) அவர்கள்ää குறைஷிகள் மக்காவின் பாதுகாவலர்களாக உள்ளார்கள்ää எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் வரக் கூடிய ஆட்சியாளர் குறைஷிகளில் இருந்து தான் வர வேண்டும் என்று கூறினார். இன்னும் அன்ஸார்களை முன்னோக்கியவர்களாக கூறினார்கள் :
ஓ என்னருமை அன்ஸாரித் தோழர்களேää உங்களது முன்னுரிமையை யாரும் மறுத்து விட முடியாதுää அல்லது இஸ்லாத்திற்கு நீங்கள் செய்த சேவையையும் யாரும் நிராகரித்து விட முடியாது. அல்லாஹ்வே தனது மார்க்கத்திற்கும்ää இன்னும் தனது தூதருக்கும் உதவியாளர்களாக உங்களைத் தேர்வு செய்துள்ளான். இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்காவிலிருந்து கிளப்பி உங்களிடம் வர வைத்திருக்கின்றான்ää இன்னும் அவரது தோழர்களிலும்ää அவரது மனைவியர்களிலும் நீங்களே முன்னணியில் இருக்கின்றீர்கள். இருப்பினும்ää அந்த முன்னணித் தோழர்களுக்கு அடுத்துத் தான் உங்களது தகுதி நிலை உள்ளது. எனவேää ஆட்சித் தலைவர் பொறுப்பானது குறைஷிகளுக்குச் செல்வதே நியாயமானதாக இருக்கும். உங்களது நிலையில் உறுதியைக் கடைபிடிக்காதுää சற்று தளர்வோடு விட்டுக் கொடுத்து செயல்படுங்கள்ää எந்த விஷயத்திலும் உங்களைக் கலந்தாலோசிக்காது நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் கூறினார்கள்.
ஆனால்ää இந்த உரை அன்ஸார்களைத் திருப்திப்டுத்தவில்லை. ஹபாப் பின் மன்தர் (ரலி) என்ற அன்ஸாரித் தோழர் எழுந்துää தலைமைத்துவம் அன்ஸார்களைச் சார்ந்ததுää அதனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறினார். இறுதியாகää இப்படி வேண்டுமானால் ஒன்று செய்து கொள்ளலாம்ää எங்களில் ஒருவரும்ää உங்களில் ஒருவரும் தலைவராக இருந்து கொள்ளலாம் என்றார்கள்.
இவ்வாறு இரண்டு தலைவர்கள் இருப்பது நமக்குள் பிரிவினையை உண்டு பண்ணி விடும்ää இன்னும் இது இஸ்லாத்திற்கு உகந்ததுமன்று என்று உமர் (ரலி) அவர்கள் கருத்துக் கூறினார்கள். இஸ்லாம் ஓரிறையையும்ää ஒரு நபியையும்ää ஒரு மறையையுமே அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் முஸ்லிம் உம்மத்தானது ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இயங்குவது தான் சிறந்தது என்று கூறினார்கள். முஹாஜிர்களில் இருந்து ஒரு தலைவரையும்ää அன்ஸார்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்ற முடிவுக்கு நாம் வந்தோமானால்ää பிற்காலத்தில் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூட பிரச்னை எழ வாய்ப்பிருக்கின்றது. இவ்வாறான பல தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்தோமானால்ää இஸ்லாம் அழிவுப் பாதையை நோக்கித் தான் செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாம் செயல்படுவோமானால்ää நம்மில் ஒரே ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும்ää அந்த தலைவரும் கூட குறைஷிக் குலத்திலிருந்து தான் தேர்வு செய்ய வேண்டும்ää ஏனெனில் அதுவே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குலமுமாகும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்களுக்கும்ää ஹபாப் (ரலி) அவர்களுக்கும் இடையே சூடான வாக்குவாதங்கள் நடைபெற்ற தன் பின்னர்ää அபுபக்கர் (ரலி) அவர்கள் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள் :
தலைமைத்துவத்திற்கு நாங்கள் குறைஷிகளில் ஒருவரை முன்னிறுத்துவது என்பது எங்களது சுயநலத்திற்காக அல்ல. இஸ்லாத்தின் ஒருமைப்பாட்டைக் கருதியே இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எங்களது நோக்கம் தூய்மையானது என்பதை உறுதிப்படுத்துவதற்காகää கொல்லைப் புறமாக வந்து தலைமைப் பதவியை அபகரிப்பதற்கு நான் திட்டமிட மாட்டேன் என்று உறுதி கூறிக் கொள்கின்றேன். இங்கே உங்கள் முன் உமரும்ää அபூ உபைதாவும் நிற்கின்றார்கள். இவர்களில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இது அன்ஸார்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸைத் பின் தாபித் (ரலி) என்ற முன்னணி அன்ஸாரித் தோழர் எழுந்துää
உண்மையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஹாஜிர்களில் ஒருவராக இருக்கின்ற காரணத்தினால்ää தலைவரையும் அவர்களிலிருந்தே தேர்வு செய்ய வேண்டும். இறைவன் நம்மை உதவியாளர்களாகத் தான் தேர்வு செய்துள்ளான்ää இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னரும் உதவியாளர்களாகவேää எவ்வாறு நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு உதவினோமோ அதுபோலவே உதவியாளர்களாகவே இருப்போம் என்று கூறினார்கள்.
அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்னொரு அன்ஸாரித் தோழரான பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : என்னருமை அன்ஸார்களே..! இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்து நாம் போர் புரிந்தோம்ää மார்க்க விகாரங்களில் முன்னணியில் இருந்தோம் என்பதனை இட்டு நம்முடைய தகுதியை முன்னிறுத்துவோமானால்ää இது அல்லாஹ்வின் திருப்பொருதத்திற்காக நாம் அத்தகைய தியாகத்தில் ஈடுபட்டோம் என்ற நோக்கத்திற்கு எதிரானதுää இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதற்கும் முரணானது. நமது தியாகத்தை சுயநல நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகப் பயன்படுத்தலாகாது. நமக்குக் கிடைக்க வேண்டிய கூலி அல்லாஹ்வினடத்தில் பெற்றுக் கொள்வோம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளில் இருந்தே வந்தார்கள்ää எனவே தலைமைத்துவத்திற்கான உரிமை கோருவதில் அவர்களுக்கே முன்னுரிமை இருக்கின்றது என்று கூறி விட்டுää இந்த விஷயத்தில் நாம் தர்க்கம் செய்வது நல்லதல்ல என்று கூறி உரையை முடித்தார்கள்.
இப்பொழுது அன்ஸார்களின் கருத்தை அறிவதற்காக அனைவருடைய எதிர்பார்ப்பும் அன்ஸார்களை நோக்கியே இருந்ததுää அன்ஸார்கள் இப்பொழுது குறைஷிகளில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யும் மனநிலைக்கே வந்து விட்டவர்கள் போல மௌனமாக இருந்தார்கள். பின்னரும் அபுபக்கர் (ரலி) அவர்கள் அங்கு கூடியிருந்தவர்களிடையேää உங்களுக்கு முன் உமரும்ää அபூ உபைதா வும் நிற்கின்றார்கள்ää இவர்களில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
எழுந்த நின்ற உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் ..ää
ஓ.. அபுபக்கர்..! உங்களை விட நானோ அல்லது அபூ உபைதாவோ எந்த வகையில் சிறந்தவர்கள்..!
குகையில் இரண்டாவது மனிதர் நீங்கள். ஹஜ்ஜிற்கான பயணக் குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனம் அடைந்த பொழுது உங்களை தொழுகைக்கான இமாமாக முன்னிறுத்தினார்கள். எங்கள் அனைவரையும் விட நீங்கள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருங்கி உற்ற தோழராக இருந்தீர்கள்ää எனவே நீங்கள் தான் எங்களது மிக விருப்பத்திற்குரிய நபர் என்று கூறி விட்டுää உங்களது கைகளை நீட்டுங்கள்ää நாங்கள் உங்களை எங்களது தலைவராகத் தேர்வு செய்து விட்டோம் என்பதனை உறுதிப்படுத்த சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள்.
அபுபக்கர் அவர்களே ம்.. எழுந்திருங்கள் என்று கூறிää அவரது கரங்களை முதன் முதலாகப் பற்றிப் பிடித்துää ஆட்சித்தலைவராகத் தேர்வு செய்திருப்பதனை உறுதிப்படுத்துமுகமாக உமர் (ரலி) அவர்கள் முதன் முதலாக சத்தியப்பிரமாணம்; செய்துää அதனை ஆரம்பித்து வைத்தார்கள். அதன் பின்னர் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களைத் தவிர அனைத்து அன்ஸார்களும் வந்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
முதல் கலிஃபா அபுபக்கர் (ரலி)
இறைத்தூதர் (ஸல்) அவர்களை நல்லடக்கம் செய்த மறுநாள்ää நபித்தோழர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளியில் ஒன்று கூடினார்கள்.
அப்பொழுது அங்கு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் :
இறைநம்பிக்கையாளர்களே..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார் என்று யார் சொன்னது என்று நான் உங்களிடம் கூறினேன்ää நான் சொன்னது சரியானதன்றுää அது குறித்து நான் அச்சப்படுகின்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்காமல் நம்மிடையே வாழ்ந்து வரக் கூடியவர் என்தபதற்கான எந்த ஆதாரமும் திருமறைக் குர்ஆனில் இல்லை. இன்னும் அவர்களும் கூட தான் மரணிக்காது எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவன் என்று நம்மிடம் கூறவும் இல்லை. ஆனால்ää அவர் நம்மிடையே எப்பொழுதும் வாழ்ந்து நமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பார்கள் என்றே நான் கருதினேன். ஆனால் நான் நினைத்தது தவறானது. இறைமறை கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கக் கூடியவர்களே என்று தான் கூறுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்தே வந்தார்கள்ää அவனிடமே திரும்பச் சென்று விட்டார்கள். அவர் மீது பொறுப்புச் சுமத்தப்பட்ட பணியை நிறைவு செய்தவர்களாக இறைவனிடம் மீண்டு விட்டார்கள். இறைவன் நம்முடைய மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக அவன் நமக்கு வேதத்தை வழங்கி இருக்கின்றான்ää இன்னும் அதன் வழியாக அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை வழி நடத்துவான். நம்முடைய பணி என்னவென்றால்ää நம்முன் இருக்கின்ற இந்த இறைமறைக் குர்ஆனைப் பற்றிப் பிடித்து வாழ்வது தான். நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை இழந்து விட்டோம். ஆனால்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களோ ஒரு செய்தியை அறிவிக்கும் தூதராகவே வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்தியை நம்மிடையே அறிவித்தார்கள்ää அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி நிறைவேறியதன் பின்னர் தன்னுடைய எஜமானனை நோக்கிச் சென்று விட்டார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்தியான வேதம் - திருமறைக் குர்ஆன் நம்மிடையே இருக்கின்றது. அல்லாஹ்வை தன்னுடைய ரப்பாக ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் அறிந்து கொள்ளட்டும்ää அவனே மரணம் என்பதே அணுகாத நீடித்து வாழ்பவன்ää மரணம் என்பதே அவனுக்குக் கிடையாது. இறைத்தூதர் (ஸல்) அவர்களோ மரணத்தைச் சந்திக்கக் கூடிய மனிதராகவே வாழ்ந்தார்கள்ää தன்னுடைய எஜமானனை நோக்கிச் சென்றும் விட்;டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழித்தடத்தை நாம் பின்பற்ற வேண்டும்ää அவர்களது பூத உடலன்றி அவர்களது வழிகாட்டலைக் கொண்டு நம்முடைய வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில்ää அவர்கள் விட்டுச் சென்ற தலைமைத்துவப் பணியை நிறைவேற்றி நமக்கு வழிகாட்டுவதற்கு ஒரு தலைமை தேவை. இந்த வகையில் அபூபக்கரை விடச் சிறந்தவர் நம்மில் யார் இருக்கின்றார்ää அவரே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாள் முழுவதும் உடன் வந்த நண்பர்ää அந்தக் குகையில் தஞ்சமடைந்த இருவரில் ஒருவராக அல்லாஹ் அவரையே தேர்ந்தெடுத்தான். இறைநம்பிக்கையாளர்களே..! எங்கே எழுந்திருங்கள்..! அபுபக்கர் (ரலி) அவர்களுக்கே நீங்கள் சத்திப்பிரமாணம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்கள்.
தனது உரையை நிறைவு செய்த பின்னர்ää அபுபக்கர் (ரலி) அவர்களை எழுந்திருக்கச் செய்து மிம்பரில் ஏறி அமரும்படிக் கூறினார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும் மிம்பரின் மீது ஏறி அமர்ந்தார்கள்ää அதுவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழக்கமாக அமரும் படியை விட்டும் ஒரு படி கீழாக இறங்கி அமர்ந்து கொண்டார்கள். இப்பொழுது அங்கிருந்த அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இதனை அடுத்து உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்..ää
இறைவனைப் புகழ்ந்து விட்டுää என்னுடைய மக்களே..! இறைவன் மீது சத்தியமாக இந்தப் பதவிக்காக இரவிலும் சரி அல்லது பகலிலும் சரி..ää நான் என்றுமே குறுக்கு வழியில் செயல்பட்டது கிடையாதுää இதனை விரும்பியதும் கிடையாதுää இன்னும் இந்தப் பதவியை வேண்டி இறைவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரார்த்தித்ததும் கிடையாது. ஆனால்ää சில வேண்டத்தகாத விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்று தான் நான் அஞ்சுகின்றேன். இப்பொழுது என் மீது நீங்கள் மிகப் பெரிய சுமையைச் சுமத்தியுள்ளீர்கள்ää இது என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டதுää இறைவனுடைய உதவியின்றி என்னால் இதனை நிறைவு செய்ய இயலாது. இந்த இக்கட்டான கால கட்டத்தில் என்னை விட சக்தி வாய்ந்ததொரு மனிதரைத் தான் இந்த இடத்தில் நான் பார்க்க விரும்பினேன் என்று கூறினார்கள்.
சந்தேகமில்லாமல்ää இப்பொழுது நான் உங்களால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பினும்ää நான் உங்களை விடச் சிறந்தவனல்லன். நான் நேர்வழியில் இருப்பதற்கு எனக்கு நீங்கள் உதவுங்கள்ää நான் தவறிழைக்கும் பொழுது என்னை நீங்கள் நேர்வழிப்படுத்துங்கள்ää சீர்திருத்துங்கள். சத்தியம் என்பது அமானிதம் போன்றதுää பொய் என்பது அபகீர்த்தியானது.
உங்களில் பலவீனர்கள் என்னிடம் கடுமையைக் காட்டட்டும்ää அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்படும் வரை..ää இன்னும் உங்களில் வலிமையானவர்கள் என் மீது இரக்கம் காட்டட்டும்.
அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனின்றும் விலகி இருக்க எந்த சமுதாயத்தினாலும்ää ஆனால் படுபாதகக் கொலையில் ஈடுபடுவதைத் தவிர்த்துää அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனைக் கை விடுவதற்கு எந்த சமுதாயத்திற்கும் அனுமதி கிடையாது. எவரொருவர் மானக் கேடான விஷயத்தை செய்தாலும்ää அவரை சத்தியத்தின் பால் கொண்டு வரப்பட்டு இறைவனின் தண்டனையை அவர் மீது நிறைவேற்றி வைக்கப்படும்.
நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படும் வரைக்கும் எனக்கும் கட்டுப்படுங்கள். எப்பொழுது அவர்களுக்குக் கட்டுப்படுவதனின்றும் நான் தவிர்ந்து விடுகின்றேனோ அப்பொழுதிலிருந்து நீங்களும் எனக்குக் கட்டுப்பட வேண்டாம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின் அரசு நிர்வாகம் சரியான முறையில் இயங்குவதற்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் ஒன்று தேவை என்பது அவசியமாக இருந்ததுää இப்பொழுது அது அபுபக்கர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் காரணமாக நிறைவேறியது.
இவ்வாறாக அபுபக்கர் (ரலி) அவர்களைக் கலிஃபாவாகத் தேர்வு செய்யப்பட்ட சம்பவத்தின் பொழுது உமர் (ரலி) அவர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது அவர்களின் பிரதான ஆலோசகராக உமர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நடவடிக்கை
உஸாமா (ரலி) தலைமையில் சிரியாவின் மீது படையெடுப்பு
ஹிஜ்ரி 8 ம் ஆண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த அந்த காலகட்டத்தில்ää முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வந்த ரோமப்படைகளைää முஅத்தா என்ற இடத்தில் வைத்து எதிர்ப்பதற்காக உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைத் தயார் செய்தார்கள். இதில் மதீனாவைச் சேர்ந்த 700 இளைஞர்கள் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனம் அடைந்ததன் காரணமாகää இந்தப் படை மதீனாவை விட்டும் இன்னும் கிளம்பாத நிலையில் இருந்தது.
இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்ததன் பின்புää அபுபக்கர் (ரலி) அவர்களும் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்புää அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்துää முதன் முதல் உத்தரவாகää உஸாமா (ரலி) அவர்களுடன் ரோமர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்யப்பட்ட படை கிளம்பத் தயாராகட்டும்ää அந்தப் படையுடன் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவரும் மதீனாவில் தங்கக் கூடாதுää அந்தப் படையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜுர்ஃப் என்ற இடத்தில் போய் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) இறந்ததன் பின்புää மதீனாவின் சமூகச் சமநிலை பாதிக்கப்பட்டதுää அமைதி அழிந்து காணப்பட்டதுää புதிதாக பொய்த் தூதர்கள் பலர் தோன்ற ஆரம்பித்தார்கள். இதனை சாக்காக வைத்துக் கொண்டுää கிறிஸ்தவர்களும்ää யூதர்களும் திட்டமிட்ட முறையில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்ää அபூ மஸ்ஊத் (ரலி) போன்ற முன்னணி நபித்தோழர்கள்ää உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் இப்பொழுது ஒரு படை வெளிக்கிளம்பிச் செல்வது அவ்வளவு உகந்ததல்ல. கடுங்குளிர் நேரத்தில்ää ஆட்டிடயனைத் தொலைத்த ஆட்டு மந்தை போலää இப்பொழுது முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. சுற்றிலும் அந்த ஆட்டைக் காவு கொள்ளக் காத்திருக்கும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில்ää இந்தப் படையெடுப்பு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
ஆனால்; அபுபக்கர் (ரலி) அவர்களோää இது என்னுடைய உத்தரவல்லää இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவு. என்னுடைய உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோää அவன் மீது சத்தியமாக..! இந்த உத்தரவில் நான் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன். படை புறப்படுவது என்பதுஉறுதியானது. இந்த உங்களது கருத்தில் நான் உடன்படுவதை விடää ஒரு ஓநாய் என்னைக் கவர்ந்து சென்று விடுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்ää நான் இந்த மதீனாவில் தன்னங்தனியாக தனித்து விடப்படினும் சரியே..! என்று கூறி முடித்தார்கள்.
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் பின்ää படையுடன் செல்ல நியமிக்கப்பட்டவர்களை உடன் கிளம்பத் தயாராகும்படி அபுபக்கர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அனைத்துப் படையினரும் இப்பொழுது ஜுர்ஃப் என்ற இடத்தில் கூடி விட்டனர். படையினர் அங்கு முகாமிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்ää உமர் (ரலி) அவர்கள் மூலமாக ஒரு செய்தியை உஸாமா (ரலி) அவர்கள் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.
கலீஃபா அவர்களே..!
நமது படை கிளம்பியவுடன்ää இந்த குழப்பக்காரர்கள் கலீஃபாவையும்ää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இடத்தையும்ää இன்னும் பொதுவாக மக்களையும் சூழ்ந்து தாக்கத் துவங்கி விடுவார்கள். எனவேää நீங்கள் அனுமதித்தால் நான் மதீனாவில் இருக்கவே விரும்புகின்றேன் என்ற செய்தியை அனுப்பி வைத்தார்கள்.
இந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த அன்ஸார்கள் இந்த ஆலோசனையை உமர் (ரலி) அவர்களின் முன்பாக வைத்தார்கள். உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாகää அவரை விட வயதில் மூத்த அனுபவமிக்க ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமிக்கலாமே என்று ஆலோசனை கூறிää இதனை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள்.
உஸாமா (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கலீஃபா அவர்கள்ää அவ்வாறெல்லாம் தேவையில்லைää படை புறப்படுவது என்பது நிச்சயமானது என்று கூறினார்கள்.
அதன் பின் உமர் (ரலி) அவர்கள் அன்ஸார்கள் கூறிய ஆலோசனையை கலீஃபா அவர்களிடம் முன் வைத்தபொழுதுää இதனைக் கேட்ட கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் சினந்தவர்களாக..ää
உங்கள் மீது அழிவு உண்டாவாதாக..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்த ஒருவரை என்னைக் கொண்டு நீக்க முனைகின்றீர்களே..!? என்று கேட்டு விட்டுää கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் படையினரை வழியனுப்பி வைப்பதற்காக ஜுர்ஃப் என்ற இடத்திற்கு விரைந்தார்கள்.
இந்த நேரத்தில்ää படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா (ரலி) அவர்கள் குதிரையில் அமர்ந்து வருகின்றார்கள். கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் நடந்துவரää அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீது அமராமல் அதனை நடத்திக் கூட்டி வருகின்றார்கள்.
இப்பொழுதுää உஸாமா (ரலி) அவர்கள்ää உங்களது குதிரையை நீங்கள் ஓட்டி வாருங்கள் அல்லது என்னை நடந்து வர அனுமதியுங்கள் என்று கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் குதிரையில் ஏறியும் வர முடியாதுää உங்களை இறங்கி நடக்கவும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டுää அல்லாஹ்வின் பாதையில் போரடக் கிளம்பியவரின் பாதங்களில் படக் கூடிய தூசி பட்டதனால் என்னுடைய அந்தஸ்து என்ன குறைந்தா போய்விடும்?
அல்லாஹ்வின் பாதையில் சேவை செய்யக்கூடிய ஒருவரின் அந்தஸ்தை 700 மடங்கை உயர்த்துகின்றான்ää இன்னும் 700 பாவங்களை போக்குகின்றான்ää 700 நன்மைகளை அவன் கணக்கில் எழுதி விடுகின்றான்.
பின்புää படையினரின் பக்கம் திரும்பிய அபுபக்கர் (ரலி) அவர்கள்ää வீரர்களே..! உங்களுக்கு நான் பத்து கட்டளைகளை இடுகின்றேன். அவற்றை மனதினுள் பதித்துக் கொள்ளுங்கள்..!
மோசடியில் ஈடுபடாதீர்கள்ää உங்களில் தலைவருக்குக் கட்டுப்பட மறுக்காதீர்கள்ää உடலை அங்கவீனப்படுத்தாதீர்கள். வயதானவர்களையும்ää பெண்களையும் அல்லது குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள். ஈச்ச மரங்களை வெட்டவோ அல்லது எரிக்கவோ அல்லது கனிதரக் கூடிய மரங்களை வெட்டவோ செய்யாதீர்கள். உணவுக்கா அன்றி ஆடுää மாடு அல்லது ஒட்டகங்களை வெட்டிக் கொல்லாதீர்கள். மடங்களில் தங்கி தங்களது இறுதிக்காலத்தைக் கழிக்கக்கூடிய மக்களை ஒன்றும் செய்யாதீர்கள்ää அவர்களை அவர்களது வழியிலேயே விட்டு விடுங்கள். நீங்கள் செல்லும் பாதைகளில் விதவிதமான பாத்திரங்களில் உணவு கொண்டு வரக் கூடிய மக்களைக் காண்பீர்கள். அவைகளை நீங்கள் உண்ண ஆரம்பிக்கும் பொழுதுää இறைவனது திருப்பெயரை மொழிந்து கொள்ளுங்கள். இன்னும் உச்சந்தலையில் சிரைத்துää அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் முடிகளை வளர விட்டு சடை போலத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பீர்கள். அவர்களை உங்களது வாளால் தாக்குங்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு முன்னேறுங்கள். எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக இன்னும் கொடிய நோயிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பானாக..! என்று கூறி முடித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து 19 நாட்கள் கழித்துää ரபீஉல் ஆகிர் மாதம் இறுதியில் படை கிளம்ப ஆரம்பித்தது.
அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் பக்கம் திரும்பிய அபூபக்கர் (ரலி) அவர்கள்ää படைத்தளபதி அவர்களே..! உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன் என்றார்கள். உங்களோடு உமர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்லாதீர்கள்ää என்னுடைய உதவிக்காக அவரை இங்கே விட்டு விட்டுச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கää அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வேண்டி உமர் (ரலி) அவர்களை மதீனாவிலேயே இருக்க அனுமதித்தார்கள்ää உஸாமா (ரலி) அவர்கள்.
இன்னும் இந்தப் படை கிளம்பியதன் மூலம்ää அரேபியாவைச் சுற்றிலும் உள்ள மக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றி அச்சத்தை ஊட்டியது. அதாவதுää மதீனாவில் மிகவும் குழப்பமான நிலை நிலவும் இந்தச் சூழ்நிலையில்ää படை ஒன்று வெளிக்கிளம்புவது என்பது இயலாத காரியம். அப்படி கிளம்புகின்றதென்றால்ää முஸ்லிம்கள் மிகவும் வலிமை மிக்க நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அர்த்தமாகும் என்று அவர்கள் மதிப்பீடு செய்து கொண்டார்கள்.
மதீனாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பனீ அஸத் என்ற கோத்திரத்தார் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிச் செல்லக் கூடிய பாதையின் ஆரம்பப் பகுதியில் சுமைரியா என்ற பகுதியில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். பனூ கதஃபான்கள் மதீனாவின் தெற்குப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். இன்னும் பனூ தைபாää பனூ கர்ரா மற்றும் பனூ அப்பாஸ் ஆகிய கோத்திரத்தார்கள் அப்ரக் என்ற இடத்தில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். இன்னும் மதீனாவிலிருந்து நஜ்து நோக்கிச் செல்லும் பாதையின் ஆரம்ப எல்லையில் இருந்த துல் கிஸ்ஸா என்ற இடத்தில் பனூ துனையன் என்ற கோத்திரத்தார்கள் மிகுதியாக வாழ்ந்தார்கள்.
உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் சிரியாவை நோக்கிப் படைகள் சென்று கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் இந்தக் கோத்திரத்தார்கள் அனைவரும் தங்களது பிரதிநிதிகளை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்துää ''தாங்கள் இஸ்லாத்தை ஏற்கத் தாயராக இருக்கின்றோம்ää ஆனால் ஸகாத்தை எங்களிடம் வசூலிக்கப்படுவதிலிருந்து எங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்"" என்ற இந்த நிபந்தனை முன் வைத்தனர்.
இந்த நிலையில் அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தோழர்களிடம் இது குறித்து கலந்தாலோசனை செய்த பொழுதுää கலிஃபா அவர்களே..! இப்பொழுது நமக்கு பல பக்கங்களிலிருந்தும் நெருக்குதல்கள் அதிகரித்து விட்டனää முஸ்லிம்கள் பல பக்கங்களிலிருந்தும் ஆபத்தை எதிர்நோக்கிய வண்ணம் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களது கோரிக்கையை நாம் ஏற்றுக் கொண்டு அவர்களை இஸ்லாத்திற்குள் இணைத்துக் கொண்டால்ää இஸ்லாத்திற்கு எதிராகத் தோன்றியுள்ள ஆபத்துக்களும்ää பிரிவினைகளும் சற்று குறைந்தது போலிருக்குமல்லவா என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சற்று முன் தான் மரணமடைந்திருந்தார்கள்ää இந்த நிலையில் இஸ்லாத்தை விட்டும் பல கோத்திரத்தார்கள் வெளியேறியும்ää பொய்த்தூதர்கள் உருவாகியும் வந்த காலகட்டமது. இந்த நிலையில் சிலர்ää 'நாங்கள் தொழுகின்றோம்ää ஆனால் ஸகாத்தைக் கொடுக்க முடியாது" என்றார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்ää ஓ.. கலிபா அவர்களே..! இவர்களிடம் சமாதானமான முறையில் நடந்துää நடுநிலைப் போக்கைக் கைக் கொள்ளுங்களேன் என்றார்கள்.
அதற்குää உமரே..! நான் உங்களது உதவியை எதிர்பார்க்கின்றேன்ää உண்மையில் நீங்கள் அதில் உறுதியாக இருப்பதையும் நான் விரும்புகின்றேன். உமரே..! அந்த ஜாஹிலிய்யாக் காலத்தில் நீங்கள் கண்டிப்பானவராக இருந்தீர்கள். அந்தக் கண்டிப்பும்ää கடின சித்தமும் இப்பொழுது இல்லாமல் போனதேன்? இஸ்லாம் வலியுறுத்தும் அம்சங்களை மறந்து விட்டு நான் எப்படி சமாதானமான போக்கைக் கைக் கொள்ள முடியும்? இறைவனும்ää அவனது தூதரும் தீர்மானித்து விட்டதொரு விஷயத்தில்ää அவர்கள் இஸ்லாத்திற்குள் வர வேண்டும் என்பதற்காக உங்களுடைய அறிவுரையை நான் எற்றுக் கொண்டு ஸகாத் வரியை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து நான் விதிவிலக்களிக்க வேண்டும்..? இந்த விஷயத்தில் அல்லாஹ்வும்ää அவனது தூதரும் தெளிவாகவே கூறியிருக்கää சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதில் நாம் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமா? என்னே வேதனை..ää அல்லாஹ்வினுடைய தூதர் இறந்து விட்டார்கள்ää அவர்கள் மூலமாக கிடைத்துக் கொண்டிருந்த இறைச் செய்தியும் நின்று போய் விட்டது.
அல்லாஹ்வின் தூதரினுடைய பிரதிநிதி என்ற வகையில்ää அவர்கள் எதனைக் கொண்டு உத்தரவிட்டார்களோ அதனை செயல்படுத்துவதைத் தவிர வேறொரு பணி என்மீது இல்லை. நான் இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்துகின்றவனேயன்றிää அதனை மாற்றியமைப்பதற்கோ அல்லது திருத்தியமைப்பதற்கோ உரிமை படைத்தவனல்லன் என்று கூறினார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.
இதனைக் கேட்ட உமர் (ரலி)..ää அபுபக்கரே..! உங்களை நான் பாராட்டுகின்றேன்ää எனது முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு நான் வழங்குகின்றேன் என்று கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்களது பதிலுக்காக அந்தக் கோத்திரத்துப் பிரதிநிதி காத்திருந்தார்கள். உமர்(ரலி) அவர்களிடம் செய்து கொண்ட ஆலோசனைக்குப் பின்னர்ää ''இஸ்லாத்தை நீங்கள் எப்பொழுது ஏற்றுக் கொள்கின்றீர்களோää அப்பொழுதிலிருந்து அது வலியுறுத்தும் அம்சங்களையும் நீங்கள் கடைபித்தாக வேண்டியது கட்டாயமாகும். இஸ்லாத்தில் ஒருகால்ää ஜாஹிலிய்யத்தில் ஒருகால் என்று வைத்துக் கொண்டிருக்க முடியாது. உங்களது மன இச்சைகளுக்குத் தகுந்தமாதிரி இஸ்லாத்தின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டுää சில அம்சங்களை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஒன்று நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்ää அல்லது இஸ்லாத்திற்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் அதன் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு இன்னொன்றை விட்டு விடுவது என்ற 'விட்டுக் கொடுத்துப் போவது" என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி விட்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று ஸகாத்ää அதனை நீங்கள் கொடுக்க மறுத்தால் இஸ்லாத்தினை விட்டும் வெளியேறிவராவீர்கள். இஸ்லாத்தின் அம்சங்கள் என்னவென்பதை விளக்கி விட்டு இறுதியாக அந்த தூதுக் குழுவிடம் உறுதியான குரலில் கூறினார்கள் :
நான் ஏற்கனவே உங்களுக்கு அளித்திருக்கும் விளக்கத்தின் அடிப்படையில்ää ஸகாத் தைப் பொறுத்த விரையில் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிறு அளவுக்கு நீங்கள் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பின்ää அல்லாஹ்வின் தூதரது கலிஃபா என்ற அந்தஸ்தில் இருக்கும் நான்ää அதனை உங்களிடமிருந்து வசூலிப்பதற்காக உங்கள் மீது போரிடுவதும் கூட என்மீது கடமையானதாகும்ää அதனால் எத்தகைய பாதகங்கள் விளைந்தாலும் சரியே..! என்று கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் வந்திருந்த பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்த பொழுதுää உமர் (ரலி) அவர்கள் அங்கு தான் இருந்தார்கள். கலிபா அவர்களின் அறிவிப்பைக் கேட்ட அந்தப் பிரதிநிதிகள்ää எங்கே உங்களது சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்ää உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று கூறி விட்டுச் சென்று விடுகின்றார்கள்.
மதீனாவில் இருந்த முக்கியமான நபர்கள் அடங்கியதொரு படை இப்பொழுது தான் மதீனாவை விட்டுக் கிளம்பி சிரியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. உஸாமா (ரலி) அவர்களின் படைகள் இப்பொழுது நாட்டை விட்டும் வெளியே இருந்து கொண்டிருக்கின்ற நிலையில்ää மதீனாவைச் சுற்றியுள்ள கோத்திரங்களிலிருந்து வரும் எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுந்தது.
சவால் விட்டுப் போனவர்கள்ää போன மாத்திரத்திலேயே அவர்களுக்குள் கலந்தாலோசனை செய்து மதீனாவின் மீது படையெடுக்க இது தான் தருணம் என்று படைகளோடு கிளம்பி வந்துää ஒருநாள் இரவில் மதீனாவின் மீது போர் தொடுக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.
நடக்கப் போகின்ற விபரீதங்களின் விளைவுகள் எவ்வாறு இருக்குமென்பதை அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உமர் (ரலி) அவர்களும் உணர்ந்தே இருந்தார்கள். எனவே மதீனாவின் பாதுகாப்பிற்கான முன்நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்கள். மதீனாவில் இருக்கின்ற ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு பாதுகாப்புப் பணிக்கான ஆயத்தங்களோடு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் தங்களால் இயன்ற அத்தனை தயாரிப்புகளோடு எதிரிகளைச் சந்திக்கத் தயாரானார்கள். எதிரிகள் கிழிந்த தண்ணீர்ப் பைகளை முஸ்லிம் படைகளின் மீது எறிந்தார்கள்ää அதன் காரணமாக முஸ்லிம்கள் பயணித்து வந்த ஒட்டகங்கள் பீதியடைந்து மதீனாவை நோக்கி ஓட ஆரம்பித்தன. முஸ்லிம்களை எதிர்ப்பதில் அவர்கள் ஆரம்பித்தில் வெற்றி பெற்றனர்.
இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களும்ää உமர் (ரலி) அவர்களும் முஸ்லிம் படைகளுக்கு தலைமையேற்று முன்னே சென்றார்கள். இரவின் கடைசி நேரத்தில்ää முஸ்லிம் படைகள் நகருக்கு வெளியே வந்து எதிரிகளின் மீது கடுமையாக தாக்குதலைத் தொடுத்தார்கள். இதனை எதிர்பார்க்காத எதிரிகள் என்ன நடக்கின்றது என்பதையே அறியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களிடையே குழப்பம் மிகைத்தது. விடுவதற்கு முன்பாகவே எதிரிகள் வேறருக்குப்பட்ட நிலையில்ää மதீனாவிற்கு நேரவிருந்த மிகப் பெரிய ஆபத்து நீங்கியது. முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
No comments:
Post a Comment