மனிதர்களைத் தாக்கும் MERS-CoV ( Middle East respiratory syndrome coronavirus )எனப் பெயரிடப்பட்ட சார்ஸ் (SARS) இற்கு ஒப்பான மிக ஆபத்தான புதிய வகை வைரஸ் ஒன்று சமீபத்தில் மருத்துவ உலகில் இனங்காணப் பட்டுள்ளது.
உலகம் முழுதும் இதனால் பாதிக்கப் பட்டவர்களில் அடையாளங் காணப் பட்டவர்கள் தொகை 53 எனவும் இவர்களில் சிகிச்சைப் பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 30 எனவும் புதன்கிழமை உலக சுகாதாரத் திணைக்களம் (WHO) தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடிய சாத்தியக் கூறு இருப்பதனால் இதனை WHO ஸ்தாபனம் முழு உலகுக்கும் அச்சுறுத்தலான வைரஸ் இது என வரையறுத்துள்ளது. இதனால் பாதிக்கப் பட்டு கடைசியாக நிகழ்ந்த மரணங்கள் சவுதி அரேபியாவில் நிகழ்ந்துள்ளன. இது குறித்து சவுதி சுகாதார அமைச்சு புதன்கிழமை கூறுகையில் சவுதியின் கிழக்குப் பகுதியில் 3 பேர் இந்த வைரஸ்ஸால் தாக்கப் பட்டு மரணித்துள்ளனர் என்றுள்ளது.

இந்த வைரஸ் முதலில் மத்திய கிழக்கு நாடுகளில் இனங்காணப் பட்ட போதும் குறித்த ஒரு நாட்டில் மட்டுமே தாக்கியிருந்தால் பரவாமல் தடுக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருந்தது. எனினும் நிலமை இதற்கு நேர்மாறாக உள்ளது. உதாரணமாக மத்திய கிழக்கு நாடு ஒன்றிட்கு சமீபத்தில் பயணம் செய்திருந்த பிரெஞ்சு குடிமகன் ஒருவர் இந்த வைரஸ்ஸால் தாக்கப் பட்டு செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் மரணமடைந்துள்ளார்.
இந்த வைரஸ் தடிமன் வைரஸ் போன்றே தொழிற்பட்ட போதும் மனித உடலின் சுவாசத் தொகுதியைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்த வல்லது. இதன் முதல் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் என்பவை தென்பட்ட போதும் சில வேளைகளில் நோய்த் தொற்று தீவிரமானால் சிறுநீரகம் செயலிழப்பது வரை நிகழக் கூடும். மருத்துவ நிபுணர்களால் இந்த வைரஸ் எப்படிப் பரவுகின்றது என்று கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இதன் பாதிப்பைக் குணப்படுத்துவது மிகக் கடினமான பணியாகவுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்த வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்கு அனைத்து உலக நாடுகளினதும் மருத்துவத் துறைகள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விபரம் அறிய.
http://www.nutriculamagazine.com/ncov-virus-could-be-passed-from-person-to-person/
தொகுப்பு : மு.அஜ்மல் கான்
தொகுப்பு : மு.அஜ்மல் கான்
No comments:
Post a Comment