Wednesday, 25 October 2017

கந்து வட்டி கொடுமை தாங்காமல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிப்பு!!

Image may contain: 3 people, child and outdoorஒரு தகப்பன் மனைவி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தின் முன் தீ குளித்திருப்பது அந்த மாவட்ட கலெக்டருக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவமானம்..


அந்தக்குழந்தைங்க என்ன பன்னிச்சு.. அத ஏன் கொளுத்தினாங்க..? என்று உதிர்க்கப்படுகிற உணர்ச்சியற்ற வெற்று வார்த்தைகளை வெறுக்கிறேன்..


தலைகுப்புறக் கிடந்தபடி எரிகிற குழந்தையைப்பாருங்கள், என்னவென்றே புரியாமல் நின்றபடி எரிந்துகொண்டிருக்கும் சிறுவனைப்பாருங்கள், கணவனின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து எரிந்து கொண்டிருக்கும் மனைவியின் கதறலைப் பாருங்கள்.. இந்த முடிவுக்குத்துனிந்த கணவன் அமர்ந்த நிலையில் எரிந்துகொண்டிருப்பதைப் பாருங்கள்..


1 லட்சத்து 45 ஆயிரம் கடனுக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் வரை கட்டியப்பின்னும் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது கந்துவட்டி கும்பல்.


வேறு வழியின்றி உள்ளூர் காவல் நிலையத்திலும்..

கலெக்டர் குறை தீர்ப்பு முகாமிலும் 6 முறை மனு கொடுத்திருக்கிறார் இசைக்கி முத்து.


ஆனால் குற்றம் செய்தவனையும் பாதிக்கப்பட்டவனையும் ஒன்றாக அமர வைத்து பஞ்சாயத்து செய்வதே கடமையாக கொண்ட காவல்துறையினர் வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.


கந்து வட்டி கும்பலிடமிருந்து வரும் மாமூலை கூலித்தொழிலாளிகள் கொடுப்பார்களா என்ன..

இந்த முடிவெடுக்கும் முன்பு எவ்வளவு அவமானப்பட்டிருப்பான், எவ்வளவு யோசித்திருப்பான்,

எவ்வளவு அழுதிருப்பான். எவ்வளவு அவநம்பிக்கையடைந்து இருப்பான், எவ்வளவு விரக்தியடைந்திருப்பான்...


தங்களுக்கு எங்கேயாவது ஒரு இடத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றும் அற்றுப் போகும் இடத்தில்தான்.. உயிரையே மாய்த்துக் கொள்ளும் துணிவு பிறக்கிறது..


எல்லா இடங்களுக்கும் ஓடி முடித்த கால்கள்.. எந்த ஒரு இடத்திலும் இனி நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த அந்தக் கணம்தான் வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும்.


வருமை கொடியது.. வருமை தரும் அவமானம் அதைவிடக் கொடியது.. மனிதர்கள் வாழத் தகுதியற்ற இந்தச் சமூகத்தில், தம் பிள்ளைகளை விட்டுச்செல்ல மனமில்லாத அந்த அன்பு பரிபூர்னமானது.. உங்கள் வியாக்கியானங்களுக்கும், வெற்றுப்பசப்புகளுக்கும் அது புரியாது... அந்தச் சூழலில் சிக்குண்டவர்கள் தவிற, அந்த உளவியலைக் கற்பனைகூட பன்னிப்பார்க்க முடியாது...


காவல்துறை.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. இங்கெல்லாம் ஒரே ஒரு ஈர மனசு இருந்திருந்தாலும்.. வைத்த தீ நமத்துப் போயிருந்திருக்குமே..


ஒரு அதிகாரி மனசில்கூட ஈரம் இல்லாமலேயே போய்விட்டதே..


என் முத்தே.. பொன்னே.. மணியே.. என்று கொஞ்சி கொஞ்சித் தூக்கி வளர்த்த கரங்களே.. நெருப்பிட்டு துடிதுடிக்கக் கொன்றுவிட்டதே..

சிரிக்கும் பிஞ்சு முகத்தில் நெருப்பு வைக்க மனம் எப்படி வந்தது?


மனசு கல்லாக இறுகியிருந்திருக்குமோ..
அவ்வளவு ரணமா இந்த சமூகம் அந்தத் தாய்க்குக் கொடுத்தது?
பணம் பாதாளம் மட்டும் பாயுமாம்..


உண்மைதான்.. பாதாளத்தின் படுகுழிக்கே ஒரு குடும்பத்தை அந்தப் பணம் தள்ளிவிட்டதே..உதவிக்காக எல்லா கதவுகளையும் தட்டி அத்தனை நம்பிக்கைகளையும் இழந்து போன ஒரு மனம் இறுதியில் தீ குளித்திருக்கிறது.என்ன எழுதியும் நம் மனம் ஆற மாட்டேன் என்கிறது.


நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி புகைப்படத்தை வைப்பது போல, இனி இந்தப் படத்தை எல்லா காவல் நிலையங்களிலும்.. எல்லா அரசு அலுவலக வாசலிலும் வையுங்கள்..


ஒரு அதிகாரியாவது அதைப் பார்த்து திருந்தமாட்டாரா?


இது மிக பெரிய கொடூரம் .பார்க்க மனம் வலிக்கிறது குழந்தைகள் எப்படி துடித்திருப்பார்கள் .கேடுகெட்ட ஊடகங்கள் இதை படம்பிடிக்கும் நேரத்தில் குழந்தை களை காப்பாற்றி இருக்கலாமேடா பாவிகளா


ஞாயம் கிடைக்குமா? இந்த படுபாதக ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகளுக்கு!!கந்துவட்டிக் கும்பலோ காவல் துறைக்கும்பலோ இந்தச் சமூக அமைப்போ இந்த மரணங்களுக்கு காரனமான ஒவ்வொருவரையும் சபிக்கிறேன்..தகுதியில்லாதவர்களிடத்தில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் வரை இப்படிபட்ட அக்கிரமங்களை நாம் காண நேர்ந்துகென்டிருக்கிறது, இன்னும் என்னென்ன கொடூர குற்ற செயல்களை காணவேண்டியுள்ளதோ!!!


அப்படியேனும் ஒரு ஏழைக்காவது எங்கேயாவது நியாயமான 
நியாயம் கிடைக்கட்டும்..

ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 18 October 2017

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-

ஐந்திலக்கணம் க்கான பட முடிவு

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-

1. எழுத்து இலக்கணம்

2. சொல் இலக்கணம்

3. பொருள் இலக்கணம்

4. யாப்பு இலக்கணம்

5. அணி இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்:-

எழுத்துக்கள் இரண்டு வகை - 2

1. முதல் எழுத்து

2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2 (1. உயிர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயிர் எழுத்துக்கள் - 12

வகைகள் - 2

குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)

நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18

 வகைகள் - 3 

வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)

மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)

இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10

1. உயிர்மெய்

2. ஆய்தம்

3. உயிரளபெடை

4. ஒற்றளபெடை

5. குற்றியலுகரம்

6. குற்றியலிகரம்

7. ஐகாரக்குறுக்கம்

8. ஔகாரகுறுக்கம்

9. மகரக்குறுக்கம்

10. ஆய்தகுறுக்கம்

2.சொல் இலக்கணம்:-

🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்

🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி

🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)

1. பகாபதம்:-

🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்

🐿 பகாபதம் வகைகள் - 4

1. பெயர் பகாப்பதம்

2. வினைப் பகாப்பதம்

3. இடைப் பகாப்பதம்

4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-

🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்

🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)

🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6

1. பொருள் பெயர்ப் பகுபதம்

2. இடப் பெயர்ப் பகுபதம்

3. காலப் பெயர்ப் பகுபதம்

4. சினைப் பெயர்ப் பகுபதம்

5. பண்புப் பெயர்ப் பகுபதம்

6. தொழிற் பெயர்ப் பகுபதம்
வினைப் பகுபதம் வகைகள் - 2 
(1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)

 பகுபதம் உறுப்புகள் - 6

1. பகுதி

2. விகுதி

3. இடைநிலை

4. சந்தி

5. சாரியை

6. விகாரம்

இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)

பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
வினை இடைநிலை வகைகள் - 3

1. இறந்த கால இடைநிலை

2. நிகழ்கால இடைநிலை

3. எதிர்கால இடைநிலை

3.பொருள் இலக்கணம்:-

பொருள் இலக்கணம் வகைகள் - 2

1. அகப்பொருள்

2. புறப்பொருள்

(1) அகப்பொருள்:-

ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்

அகப்பொருள் உள்ள திணைகள் - 5

இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.

இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்

 அகத்திணை கூறிய பொருட்கள் - 3

1. முதற் பொருள்

2. கருப்பொருள்

3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:

முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்

 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)

 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-

 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்

 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

முருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-

புறப்பொருள் திணைகள் - 12

1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.

2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.

4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.

6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.

8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.

10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)

12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிடத்து உண்டாகும் அன்பு

4. யாப்பிலகணம்:-

யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

6. தொடை

1. எழுத்து:-

 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-

எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை

அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்

சீர்கள் எண்ணிக்கை - 30

1. மாச்சீர் - 2

2. விளச்சீர் - 2

3. காய்ச்சீர் - 4

4. கனிச்சீர் - 4

5. பூச்சீர் - 8

6. நிழற்சீர் - 8

7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-

சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை

 தளை வகைகள் - 4

1. ஆசியத்தளை

2. வெண்டளை

3. கலித்தளை

4. வஞ்சித்தளை

5. அடி:-

அடி வகைகள் - 5

1. குறளடி - இரண்டு சீர்கள்

2. சிந்தடி - மூன்று சீர்கள்

3. அளவடி - நான்கு சீர்கள்

4. நெடிலடி - ஐந்து சீர்கள்

5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
 தொடை வகைகள் - 5

1. மோனைத் தொடை

2. எதுகைத் தொடை

3. முரண் தொடை

4. இயைபு தொடை

5. அளபெடைத் தொடை

5. அணி இலக்கணம்:-

அணி என்பதன் பொருள் - அழகு
அணிகள் வகைகள் - 2

1. சொல்லணி

2. பொருளணி

சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு

பொருளணி வருபவை - உவமை, உருவகம்

அணிகள் பின்வருமாறு:-

இல்பொருள் உவமையணி

 ஏகதேச உருவக அணி

 பிறிது மொழிதல் அணி

 வேற்றுமை அணி

 வஞ்சிப்புகழ்ச்சி அணி

 இரட்டுற மொழிதலணி

 சொற்பொருள் பின்வருநிலையணி

 தற்குறிப்பேற்ற அணி

 நிரல்நிறை அணி

சித்த மருத்துவம் பதிவிறக்க..

சித்தர் தத்துவம்Download
வர்ம மூலிகை விளக்கம்Download
அற்புத மருந்துகள்Download
போகர் கற்பம்Download
போகர் அருளிய பூஜாவிதிDownload
புற்றுநோய்Download
தன்வந்திரி வைத்திய சிந்தாமணிDownload
எலும்பு வைத்தியம்Download
கிரியா யோக அமிர்தம்Download
கை நூல்Download
காலங்கிநாதர் பூஜா விதி 85Download
கொங்கணவர் வாலைக்கும்மிDownload
கோரக்கர் ரவிமேகலை 75Download
குதம்பைச்சித்தர் பாடல்கள்Download
மூலிகைக் கையகராதிDownload
முதல் உதவிDownload
நளவீம பாகசாஸ்திரம்Download
நந்தீசர் அஷ்டமா சித்தி 05Download
நீரழிவு நோய்Download
நோய் நீக்கும் மூலிகைகள்Download
நோய்களும் ஆலோசனைகளும்Download
பதார்த்த குண சிந்தாமணிDownload
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்Download
பதினெண் சித்தர்கள் வரலாறுDownload
பிரணாக்ஷாமிரத சிந்துDownload
ரோமரிஷி நாயனார் வைத்தியம்Download
ருது நூல் சாஸ்திரம்Download
சந்தானமணிDownload
சர்மரோக நிவாரண மருந்துகள்Download
சித்த கை நூல்Download
சித்த மருத்துவ வாகடம்Download
சித்தர் வைத்தியம்Download
சிவவாக்கியம்Download
உடற்கலைச் சொற்தொகுதிDownload
உடலும் உணர்வும்Download
உடலுறுதிDownload
வைத்திய மூலிகை விளக்க அகராதிDownload
வைத்தியப் பெருங்குறள்Download
வராகி மாலைDownload
வேதசாஸ்திர தத்துவம்Download
விஷ வைத்திய சிந்தாமணிDownload
விஷக்கடி மூலிகை மருத்துவம்Download
விஷக்கடி சித்தராருடம்Download
விவேக சூடாமணிDownload
யோக சித்திDownload
அட்டாங்க யோகம் - திருமூலர்Download
மூலிகை வளம்Download
செந்தூரம் 300Download
சிகிச்சா சார சங்கிரகம்Download
தன்வந்திரி தைலம் 500Download
கெளமதி நூல் 400Download
இடை பாகம் 400Download
கன்ம காண்டம் 300Download
கற்பமுப்பு குருநூல் 100Download
மெய்ஞான அனுபூதி ரசம்Download
நடன காண்டம்Download
பரிபாஷைத் திரட்டுDownload
பெருநூல் காவியம் 800Download
பூரண சூத்திரம் 216Download
பிராண ரக்க்ஷாமிரத சிந்துDownload
ராஜாங்க நாடி ( 657 - 1086 )Download
சரபேந்திரர் வைத்திய முறைகள்Download
அனுபவ வைத்திய முறை 2Download
அனுபவ வைத்திய முறை 3Download
அனுபவ வைத்திய முறை 4Download
அனுபோக வைத்திய ரகசியம்Download
அற்புத மருந்துகள்Download
அட்டாங்க யோக சூத்திரம்Download
ஆயுர்வேத ஆசான்Download
எளிய மூலிகை வைத்தியம்Download
குண வாகடம்Download
இந்திர சால ஞானம் 48Download
கன்ம சூத்திரம்Download
கருக்கடை நிகண்டுDownload
கருவூரார் நொண்டிDownload
லோக செந்தூரம் 300Download
மச்சமுனி நாயனார்Download
மலை வாகடம்Download
மன நலன்Download
மானிட மர்ம சாஸ்திரம்Download
மூல மந்திரம்Download
மூலிகை ஜாலரத்தினம்Download
பஞ்சமித்திரம் 300Download
பூரணம் 100Download
பூரண சூத்திரம் 2016Download
சரபேந்திரர் வைத்திய முறை 1Download
சரபேந்திரர் வைத்திய முறை 2Download
சரபேந்திரர் வைத்திய முறை 3Download
சரபேந்திரர் வைத்திய முறை 4Download
சரபேந்திரர் வைத்திய முறை 5Download
சரபேந்திரர் வைத்திய முறை 6Download
இந்தியாவில் அக்குபஞ்சர்Download
போகர் 7000 மூன்று தொகுதிகள்Download
போகர் கற்பம் 300Download
போகர் சரக்குவைப்பு 800Download
பெருநூல் வயித்தியகாவியம்Download
தர்க்க பரிபாஷைDownload
வகார சூத்திரம் 200Download
வைத்திய சதகம்Download
வைத்திய வல்லாதி 600Download
வைத்திய கைமுறைகள் 1Download
யாகோபு சுண்ணம்Download
ஆரோக்கிய மூலிகை மருத்துவம்Download
மூலிகை சாப நிவர்த்திDownload
நலம் தரும் நாட்டு மருந்துகள்Download
செகராசசேகர வைத்தியம்Download
சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்Download
சித்த வைத்திய அகராதிDownload
சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்Download
சித்த மருத்துவம்Download
Sidha dictinaryDownload
சித்த சிரோமணிகள்Download
திருமூலர் கருக்கிடை வைத்தியம்Download
வைதிக தர்ம வர்த்தனீDownload
வைத்திய கலசம்Download
ஆயூர்வேதாDownload
போகர் 7000 மின்னூல்Download
நவபாஷானம்Download
நோயணுகா நெறிகளும் மருந்துகளும்Download
மறந்து போன மருத்துவம்Download
ஆரோக்கியமான உணவு அட்டவணைDownload
சித்த மருத்துவம்Download
இயற்கை வைத்தியம்Download
மூலிகைமர்மம்Download
பட்டினத்தார்Download
உரோமரிஷிநாயனார்Download
சித்த மருந்துகளின் பயன் குறிப்பகராதிDownload
சித்த மருத்துவ அகராதிDownload
The Siddha Pharmacopoeia of IndiaDownload
மருத்துவர் காசி பிச்சைDownload
சித்தர் வைத்தியம்Download
வைத்திய கலசம்Download
சித்தகுமாரன்Download
சித்த சோதனைDownload
வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ்Download
பத்திரகிரியார் பாடல்கள்Download
மருத்துவமும் சிகிச்சையும்Download
தமிழ் மருத்துவம்Download
தேரையர் காப்பியம்Download
தேரையர் கரிசலைDownload
வைத்திய அனுகூல ஜீவரட்சணிDownload
வர்மக்கலைDownload
எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்Download
சித்த மருத்துவம் அறிமுகம்Download
Tamil Medicinal PlantsDownload
Simple Siddha MedicineDownload
Tamil FlowersDownload
வைத்திய ரத்தினச் சுருக்கம்Download
கோரக்கர் - ஏழு நூற்றொகுதிDownload
ஆரோக்கிய வாழ்வுDownload
இரண வைத்தியம்Download
கட்டு வைத்தியம்Download
தமிழர் மருத்துவம்Download
சித்த மருத்துவ வாகடம்Download
சித்தர் சமாதிDownload
சித்தர் மருத்துவம்Download
ஸ்த்ரிபால சிகிச்சைDownload
மூலிகைகள்Download
சித்த குமாரன் 2Download
சித்த மருந்தியல்Download
சித்த மருத்துவ வாகடம் 2Download
சித்த மருத்துவ தத்துவம்Download
சித்தர்கள் காட்டிய யோக நெறிDownload
சௌமிய சாகரம் 1200Download
சர்க்கரை நோய்Download
தேறையர் வைத்திய காவியம்Download
திருமூலர் வைத்திய காவியம்Download
திருமூலர் வைத்தியம்Download
வாத நோய் மருத்துவம்Download
வாத சூத்திரம் 300Download
வாத சூத்திரம் 400Download
வைத்தியம் - புலிப்பாணி முனிவர்Download
வைதிக சம்போதினிDownload
வைத்திய அரிச்சுவடிDownload
வைத்திய சிந்தாமணி 800Download
வைத்தியக் களஞ்சியம்Download
வைத்தியக் காண்டம்Download
வைத்தியப் பெருங்குDownload
வைத்திய ராஜ சிந்தாமணிDownload
வைத்திய ராஜ சிந்தாமணி 1Download
வைத்திய ராஜ சிந்தாமணி 2Download
வைத்திய சாரசங்கிரகம்Download
வைத்திய திறவுகோல்Download
வர்ம சூத்திர விளக்கம்Download
விஷத் திரட்டுDownload
நெருங்காதே நீரிழிவேDownload
உடலின் மொழிDownload
வாத நோய் மருத்துவம்Download
வீட்டுக்கு ஒரு மருத்துவர்Download
ஜெனன சாகரம்Download
பூரண காவியம்Download
வயித்தியத் தொகுப்புDownload