நூடுல்ஸ் என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது குழந்தைகளின் குதூகலம்தான். அதிலும் துரித நூடுல்ஸ் என்றால் பெரும்பாலான அம்மாக்களுக்கும் மகிழ்ச்சிதான்.
ஆனால் நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருளும் அல்ல, அதனை நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஏற்றது அல்ல.
ஏன் எனில் நூடுல்ஸை வேண்டவே வேண்டாம் என்று சொல் வதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை சொல்ல நேரமில்லாததால் ஒரு முக்கியமான பத்து காரணங்களை இங்கே சொல்கிறோம்.
இதில் எல்லாமே மிகவும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
உட்கிரகிக்கும் தன்மை . . .
புற்றுநோய்க்கு வாய்ப்பு . . .
துரித நூடுல்ஸ்களில் சேர்க்கப்படும் ஸ்டைரோபோம் எனப்படும் ரசாயனம் புற்றுநோயை உருவாக்கவல்லது. எனவே, அடிக்கடி துரித நூடுல்ஸ் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கருக்கலைப்பு . . .
கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் துரித நூடுல்ஸை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும் ஆபத்து இருக் கிறது. ஏன் எனில், நூடுல்ஸில் இருக்கும் ரசாயனங்கள் கருவின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது அறிவியல் பூர்வ உண்மை யாகும்.
செரிமான மண்டலம் பாதிப்பு . . .
நூடுல்ஸ் விளம்பரங்களில் போடப்படுவதை போல, அதில் எந்த விட்டமின்களும், மினரல்களும் இல்லவே இல்லை. அது வெறும் கார்போஹைட்ரேட் மட்டும்தான். நூடுல்ஸ் என்பது வயிற்றைப் பொருத்தவரை ஒரு ஜங்க் புட். அவ்வளவுதான்.
அதிக சோடியம் . . .
பேக் செய்து விற்கப்படும் நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான சோடியம் கலந்துள்ளது. உடலில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான சோடியம் கலப்பதால் இதய நோய், பக்கவாதம், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதுவே இந்த நோய்களில் ஏதேனும் ஒன்று ஏற்கனவே இருப்பவர்கள் நூடுல்ஸ் சாப்பிட்டால் அவர்களது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகும்.
மோனோசோடியம் க்ளுடாமேட் . . .
உடல் பருமன் . . .
உடல் பருமன் பல வியாதிகளுக்கு தாய் வீடு என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நூடுஸ்ஸ் உடல் பருமனுக்கே சொந்த வீடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
வயிறு மந்தம் . . .
நூடுல்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு மந்தமாகி அதன் இயல்பு நிலையை இழந்து விடுகிறது. இதனால் பலருக்கும் உணவு செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி . . .
நோய் எதிர்ப்பு சக்தி . . .
நூடுல்ஸ் அதன் தளர்த்தியான நிலையை பெற ப்ரோபைலைன் க்ளைகோல் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடும் ஆற்றல் பெற்றது. நூடுல்ஸ் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்களை இந்த ரசாயனம் தாக்கி அதனை சேதப்படுத்திவிடும் ஆபத்தும் உள்ளது.
உடலின் இயக்கத் தன்மை . . .
நூடுல்ஸ்இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மலிவான மற்றும் விருப்பமான கண்டுப்பிடிப்பாகவும் இதை சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இது ஒரு முக்கிய உணவாக கருதப்பட்டு உலகளாவிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இவ்வளவையும் சொல்லியாச்சு... இனியும் இதையா சாப்பிடப்போறீங்க?
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment