தமிழகத்தில் பெரும்பாலான விபத்துகள் இரு சக்கர வாகனங்களால்தான் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் பலரும் தலையில் பலத்த காயமடைந்துதான் உயிர் இழந்திருக்கிறார்கள். அதனால்தான் ஹெல் மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும் நிறையப் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. ஹெல்மெட் அணிபவர் களில் சிலரும் சாலை ஓரத்தில் விற்கப்படும் தரமற்ற ஹெல்மெட்டை வாங்கி அணிகிறார்கள். இந்தச் சாலையோரக் கடைகளில், ஐ.எஸ்.ஐ. முத்திரை (?!) கொண்ட ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த (தரத்தில் அல்ல) ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி… பேரம் பேசி 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும்.
‘ஹெல்மெட்டின் கடினமான மேல் பகுதி பாலிகார்பனேட் மற்றும் ஃபைபர் கண்ணாடிக் கலவையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடினப் பகுதியை அடுத்து பாலியஸ்டரி னால் உருவாக்கப்பட்ட ஓர் அடுக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்து சமயங்களில் மரம், கல் என்று ஏதாவது கடினமான பொருளின் மீது மோத நேர்ந்தால், ஹெல்மெட்டானது பாதிப்பைக் குறைக்கும். அடுத்ததாக, எதிர் காற்றில் கண்களில் தூசி விழாமல் தடுக்க ஹெல்மெட்டின் முன்புறம் கண்ணாடி (வைசர்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

திடமான ஹெல்மெட்டினை உருவாக்கும் கலவைகள் குறைக்கப்பட்டாலோ அல்லது பிளாஸ்டிக் ஃபைபர் போன்ற உறுதியற்றப் பொருட்களில் செய்யப்பட்டாலோ ஹெல்மெட் திடத்தன்மை இழந்து, எளிதில் நொறுங்கிவிடும். ‘இதையெல்லாம் நம்மால் பார்த்து வாங்க முடியாது. சரி… ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பார்த்து வாங்கலாம்’ என்றால், தரமற்ற ஹெல்மெட்களி லும் போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரை பளிச்சென இருக்கிறது. எனவே, முத்திரை யின் வேறுபாட்டைத் தரம் பிரித்து வாங்குவதும் சாத்தியமற்றது. அதனால், பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள ‘ஹெல்மெட் ஷாப்’களில் வாங்குவதே நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும். இங்கு தரமான ஹெல்மெட்கள் 700 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
தரமற்ற ஹெல்மெட்களால் ஏற்படும் பாதிப்புகள்:
குறைந்த விலைக்கு நாம் வாங்கும் ஹெல்மெட் தலைவலி மற்றும் கழுத்துவலியை ஏற்படுத்தும். அதோடு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தரமற்ற பஞ்சு சுவாசப் பிரச்னையும் ஏற்படுத்தும். ஒருவர் விபத்தில் சிக்கினால், தலை அடிபடுவதை இத்தகைய ஹெல்மெட்களால் தடுக்க முடியாது. அதோடு ஹெல்மெட் உடைந்து அதன் பிசிறுகள் அடிபட்ட தலையில் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இது மூளைப் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளோடு உயிர் இழப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும். எனவே, இதுபோன்ற ஹெல்மெட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
எந்தவிதமான ஹெல்மெட் சிறந்தது?
1. கண்களையும் கண்களைச் சுற்றி உள்ள பகுதிகளையும் தவிர தலை முழுவதும் அடைக்கப்பட்ட ஹெல்மெட்.
2. தாடை தவிர மற்றப் பகுதிகள் அடைக்கப்பட்ட ஹெல்மெட்.
3. தலையின் மேல் பகுதி மட்டுமே அடைக்கப்பட்ட ஹெல்மெட்.
– என மூன்று விதமான ஹெல்மெட்கள் சந்தையில் கிடைக்கின்றன.
ஆண், பெண் யாராக இருந்தாலும் தலை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும் ஹெல்மெட்டை அணிவதே நல்லது. மற்ற இரு ஹெல்மெட்களிலும் தாடைப் பகுதி அடிபடும் வாய்ப்பு உள்ளது. வெறுமனே, அழகுக்காகவும் காவல் துறையின் கெடுபிடிகளைத் தவிர்ப்பதற்காகவும் ஹெல்மெட் அணியும் மனப்பான்மை மாற வேண்டும். ஹெல்மெட் என்பது உயிரைக் காக்கக்கூடிய உபகரணம் என்பதை நெஞ்சில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
ஹெல்மெட் அளவில் பெரியதாக இருந்தால் த¬லயோடு கச்சிதமாகப் பொருந்தாமல், ஆடிக்கொண்டு இருக்கும். மிகவும் இறுக்கமாக இருந்தால் அது தலைவலியை உண்டாக்கும். வாங்கும் இடத்திலேயே ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக அணிந்து பார்த்துப் பொருத்தமான ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஹெல்மெட் வாங்கிய பின்பு:
ஹெல்மெட்டை வெறுமனே தலையில் கவிழ்த்துக்கொண்டு வண்டி ஓட்டினால் பயன் இல்லை. ஹெல்மெட்டோடு வரும் ஸ்ட்ராப்பை தாடையோடு இறுகப் பொருத்திக்கொண்டு ஓட்ட வேண்டும். இல்லை எனில் விபத்து நேரிடும்போது, ஹெல்மெட் தலையில் இருந்து கழன்றுவிடும் ஆபத்து உள்ளது.
வாகனத்தை ஓட்டுபவர் மட்டும் அல்லாமல், உடன் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிதல் வேண்டும். பெரும்பாலான விபத்துக்களில் வாகனத்தின் பின் பக்கம் அமர்ந்திருப்பவர்கள்தான் பெரிய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்குக் காரணம், விபத்து சமயத்தில், வாகனத்தை ஓட்டிச் செல்பவர் சட்டென பிரேக்கினை அழுத்துகிறபோது, எந்தவிதப் பிடிமானமும் இன்றி பின்னால் அமர்ந்திருப்பவர் நிலை குலைந்து தூக்கி எறியப்படுவார். அதனால், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம்”.
‘உயிர்தான் முக்கியம்!’
பொதுவாக ஹெல்மெட் அணிய மறுப்பவர்கள் ‘தலைமுடி கொட்டும், வியர்வையால் நீர் கோத்துக் கொள்ளும்’ என்று கூறுவார்கள். ”நம்முடைய தோல்கள் தண்ணீர் உள்ளே புக முடியாதபடி மிகவும் பாதுகாப்பான அமைப்புகொண்டது. எனவே, தலையில் சுரக்கும் வியர்வை தோலுக்குள் இறங்கி, ஜலதோஷம் வரும் என்பது தவறான நம்பிக்கை” என்கிறார் சருமப் பராமரிப்பு மருத்துவர் பிரியா. ”ஹெல்மெட் அணிவதன் மூலம் தலையில் உள்ள வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரக்கும். இதனால், பொடுகு ஏற்பட்டு, முடி உதிர்வதற்கான வாய்ப்பு கூடும்’ என்று காரணம் காட்டியும் ஹெல்மெட்டைத் தவிர்க்கக் கூடாது. இதெல்லாம் சுலபமாக தீர்க்கக்கூடியப் பிரச்னைகள். பருத்தித் துணியை தலையில் கட்டிவிட்டு அதன் மேல் ஹெல்மெட் அணிந்தால் துணியானது ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். சருமத்துக்கும் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மேலும், ஹெல்மெட் அணிபவர்கள் தினசரி அல்லது ஒரு நாள்விட்டு ஒரு நாள், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்புவைப் பயன்படுத்தி தலைக்குக் குளித்தால் முடி உதிர்வைத் தடுக்கலாம். சுருக்கமாக சொன்னால் உயிரைவிட முடி அவ்வளவு பெரிதானது இல்லை. அதனால் ஹெல்மெட் அவசியம்.
என்னை கேட்டால், அரசுக்கு அக்கறை இருந்தால் 60 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாதபடி வாகனங்கள் தயாரிக்க சொல்லி உத்தரவிடலாம். குறைந்த பட்சம் 'ஸ்போர்ட்ஸ் பைக்'குகளை தடை செய்யலாம். மற்றபடி ஹெல்மெட் கட்டாயம் என்பதெல்லாம் "செல்லாது...செல்லாது"..
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:
Post a Comment