Wednesday, 21 January 2009

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நடைபெறும் இடங்கள் !! ஒரு தவகல்...


தமிழகத்தை பொருத்தவரை ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் தை , 1ல் அவனியாபுரத்திலும், தை , 2ல் பாலமேட்டிலும், தை , 3ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.

தமிழகத்தில்ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நடைபெறும் இடங்கள்... 

மதுரை மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் பிற இடங்களிலும் இந்த ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு விழா ஆண்டுதோறும் தை மாதம் முதல் வைகாசி மாதம் வரை நடத்தப்படுகிறது.


மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் ,பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 
போட்டிகள்அடுத்தடுத்து நடத்தப்படுகிறது . மேலும் சக்குடி, வாடிப்பட்டி, அழகர்கோவில்,சாலூர் போன்ற ஊர்களில் மஞ்சு விரட்டு போட்டிகள் மிகவும்பிரசித்தமாக  நடத்தப்படுகிறது.  


.
இதே போல் தமிழகத்தில் பிரசித்தமான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டுபோட்டிகள்!!

சிவகெங்கை மாவட்டத்தில் மஞ்சு விரட்டு


சிராவயல்,

அரளிப்பாறை

கண்டிப்பட்டி,

என்.புதூர்,

காரைக்குடி ,

நெடுமரம்,

கண்டரமாணிக்கம்,

மலைக்கோயில்,

பட்டமங்கலம் ஆகிய இடங்களில் மஞ்சு விரட்டு




தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு

அய்யம்பட்டி, பல்லவராயன் பட்டி (கம்பம் )




புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சு விரட்டு /ஜல்லிக்கட்டு

திருநல்லூர்,

ஆலத்தூர்,

திருவாப்பூர், ஜல்லிக்கட்டு

வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டு

பொன்அமராவதிஜல்லிக்கட்டு




திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சு விரட்டு

பிள்ளமநாயக்கன்பட்டி,

தவசிமடை,

கொசுவப்பட்டி,

சொரிப்பாறைப்பட்டி,

வெள்ளேடு,

மறவப்பட்டி,

நத்தம் அம்மாபட்டி ,

வீரசின்னம்பட்டி,

புகையிலைப்பட்டி,ஆகிய இடங்களில் மஞ்சு விரட்டு


சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு..


கொண்டலாம்பட்டி ,

ஆத்தூர் கூலமேடு,

தம்மம்பட்டி




திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு



பாலக்குறிச்சி,

ஆவாரங்காடு,

வார்ப்பட்டி,

சூரியூர்,

கருங்குளம் போன்ற இடங்களில் நடைப்பெறும்.


 கீழ்க்கண்ட ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டுபோட்டிகள் மிகவும் பிரசித்தமானது . 



அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதன் முதலில் அவனியாபுரத்தில்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு காளைகள் மற்றும் வாடிப்பட்டி, சோளங்குருணி, பெருங்குடி, திருமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்படுகின்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டு


2013-ஆம் ஆண்டு இங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மஞ்சள் நிறத்தில் மேலாடையும், நீல நிறத்தில் கால் சட்டையும் சீருடையாக இருந்தது. இந்த சீருடை அணிந்து வீரர்கள் மக்களின் ஆரவாரத்திற்க்கிடையே தடுப்பினுள் தயாராக இருப்பார்கள். பின்னர் "வாடிவாசல்" என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காளைகள் விரட்டிவிடப்படும். இங்கு வரும் காளைகள் இந்த ஊரிலிருந்து மட்டுமின்றி மதுரை மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் உள்ள ஊர்களிலிருந்தும் வந்து போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுபின் காரணமாகவும் ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலமும் உலக அளவில் அலங்காநல்லூர் பிரபலமாகத் தொடங்கியது. இதன் காரணமாக இன்று ஜல்லிக்கட்டு என்று சொன்னாலே அனைவருக்கும் அலங்காநல்லூர் பெயர்தான் நினைவுக்கு வருகிறது.


சூரியூர் ஜல்லிக்கட்டு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவரம்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்












சிராவயல் மஞ்சுவிரட்டு

 சிராவயல் தமிழகத்தில் சிவகெங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து 14 கி .மீ தொலைவில் உள்ளது.பிள்ளையார்பட்டி கிராமத்தில் பின்புறம் இருக்கிறது. வருடந்தோறும் காணும்பொங்கல் அன்று 300 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சுவிரட்டு மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.வெளிநாட்டு பயணிகளும் மக்களும் சுமார் 2 இலட்சம் பேர் வரை வருகை தந்து கண்டு களிக்கிறார்கள் .

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று ஐந்து நிலை நாடு எனப்படும் 100 கிராமங்களை உள்ளடக்கிய நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment