அறிவாலயங்கள் – கல்விக் கூடங்கள் – கலா சாலைகள் – புதிய சிந்தனையை, பகுத்தறிவை, முன்னேற்றக் கருத்துக்களை வளர்ப்பவைகளாக இருக்க வேண்டும். சிந்தனைக்கு வேலிபோடும் சிறைக் கூடங்களாக அவை இருக்கக்கூடாது.
உயர்ந்த லட்சியங்களும் சிறந்த குறிக்கோளும் கொண்டதாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நான் தீராத வேட்களை கொண்டிருக்கிறேன். இங்கெல்லாருக்கும சமவாய்ப்புக்கள் தரப்பட வேண்டும். பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் கலாச்சார்கள் ஒன்று கலந்து வளந்திகளைப் போலப்பெருகிப் பாய்ந்து இந்நாட்டுக்கல்வியை, தழிலை,வாழ்வை, வளப்படுத்த வேண்டும்.
ஒரு நாட்டின் புகழ் அந்த நாடின் மக்கள் தொகையைக் கண்டு மதிப்பிடப்படுவதில்லை. அது பெற்றிருக்கிற மேதைகள், சிந்தனையாளர்கள், வழிநடத்திச் செல்லக்கூடிய தலைவர்கள் ஆகயோரின் அளவைக் கொண்டுதான் கணிக்கப்படுகிறது.
சமுதாய அமைப்பிலே பெண்கள் பெற்றுள்ள செல்வாக்குத்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகும்.எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. தங்கு தடையின்றி கருத்துக்கள் பரவவேண்டும்-பரிமாறிக்கொள்ளப் பட வேண்டும். அப்போதுதான் உண்மயை – அறிவின் பயனை நாம் ஒரு சிறிதாவது உணர முடியும்.
பண்பை வளர்க்கும் அறிவை புகட்டுவது, ஆக்க வேலைக்குப் பயன்படும் திறமையை உருவாக்குவது ஆகிய இரண்டும் கல்வியின் இரு முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும்.
செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றதாகப் போகும். எனவே சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.இன்றைய சமூகத்தில் மிக உயர்ந்த – புரட்சிகரமான – மாறுதல்கள்,பெண் கல்வியினாலேயே ஏற்பட முடியும். முன்னேறிவரும் இன்றைய பெண்கள்தான் இந்தியாவின் வாழ்வை மாற்றியமைக்கப் போகிறார்கள்.
இந்தியப் பெண்களை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்களுடைய அழகு, தோற்றப் பொலிவு,கவர்ச்சி, எளிமை, நாணம், அடக்கம், அறிவு தியாக மனப்பான்மை, – எல்லாம் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. இந்தியாவின் உயர்ந்த பண்பைச் சித்தரிக்க எவராலாவது முடியுமென்றால், அது இந்தியப் பெண்களால்தான் முடியுமே தவிர, ஆண்களால் அல்ல.
ஆக்க வேலைக்குப் பயன்படும் வித்ததில் உருவாக்கப்படாத அறிவு அழிவையே தரும்.
அடிப்படை அறிவை வளர்க்கின்ற கல்வியைப் புகட்ட நினைக்காமல், பட்டதாரிகளை உற்பத்தி செய்வது பல்கலைக் கழகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது.மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு முன்னேற்றம், புதிய சிந்தனையில் நாட்டம், லட்சிய வேட்கை ஆகியவற்றை வளர்க்கப் பல்கலைக் கழகங்கள் பாடுபட வேண்டும்.
இந்திய மாணவர் உலகம், தெரிந்த சிந்தனையும், தேர்ந்த நோக்கமும் உடைய – புதிய கருத்துக்கள் மலரும் பூஞ்சோலையாக இருக்க வேண்டும்.
அதிகாரம் தேவைதான். ஆனால் அறிவு அத்தியாவசியம். அறிவோடு கலந்த அதிகாரம் அதுதான் நல்லது.
நீரோட்டம் போலப் பெருகிவரும் மாற்றங்களோடு கலந்து உறவாடாமல், குட்டைகளில் தேங்கி கிடக்கின்ற சிந்தனை; வெளியுலகில் என்ன நடக்கிறது என்று கவலையற்று, நெருப்புக் கோழியைப்போல உள்ளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முயலுகிற மனோபாவம் – நமக்கு அழிவையே தேடித்தரும்.
அடிப்படை அறிவை வளர்க்கின்ற கல்வியைப் புகட்ட நினைக்காமல், பட்டதாரிகளை உற்பத்தி செய்வது பல்கலைக் கழகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது.
மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு முன்னேற்றம், புதிய சிந்தனையில் நாட்டம்,லட்சிய வேட்கை ஆகியவற்றை வளர்க்கப் பல்கலைக கழகங்கள் பாடுபட வேண்டும்.
இந்திய மாணவர் உலகம், தெளிந்த சிந்தனையும், தேர்ந்த நோக்கமும் உடைய – புதிய கருத்துக்கள் மலரும் பூஞ்சோலையாக இருக்க வேண்டும்.
அதிகாரம் தேவைதான். ஆனால் அறிவு அத்தியாவசியம், அறிவோடு கலந்த அதிகாரம் அதுதான் நல்லது.
நீரோட்டம் போலப் பெருகிவரும் மாற்றங்களோடு கலந்து உறவாடாமல், குட்டைகளில் தேங்கிக் கிடக்கின்ற சிந்தனை; வெளியுலகில் என்ன நடக்கிறது என்ற கவலையற்று, நெருப்புக் கோழியைப் போல உள்ளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முயலுகிற மனோபாவம் – நமக்கு அழிவையே தேடித்தரும்.
அறிவை வளர்க்க வேண்டிய அறிவாலயங்கள், பல்கலைக் கழகங்கள், குட்டை அறிவை, குறுகிய மனப்பான்மையை வளர்க்கும் இடமாகப்போய் இட்ட ஒரு நாட்டில் – முன்னேற்றம் எப்படி உண்டாக முடியும்? மக்கள் எப்படி வளர முடியும்?
இன்றைய அணு ஆயுதக் கண்டுபிடிப்புகளுக்கு, இம் மண்ணுலகம் போதுமானதாக இல்லை. மனிதன் தன் அறிவாற்றலின் பெருமித்த்தோடு வானைத் துளைத்துக் கொண்டு சென்று, விண்வெளியில் பறப்பது, மனித இனத்தையே அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. மண்ணில் உயிர் வாழ்வையே முடித்துவிடக்கூடிய மாபெரிய ஆயுதங்கள் ஏற்கனவே உள்ளன. இன்றும் அமெரிக்காவும் ருஷ்யவாவும் இங்கிலாந்தும் கூட அவற்றை அளவின்றிப் பெற்றிருக்கின்றன. நாளை இன்னும் சில நாடுகள் அவற்றை உற்பத்தி செய்யலாம். முடிவில் இத்தகைய அழிவு சக்திகளை அடக்கியாளுகின்ற் திறமை மனித சக்தியை மீறிப் போகலாம். இத்தகைய அணு ஆயுதச் சோதனைகள் இடம் பெற்றால், காற்றும், நீரும், உணவும் கெட்டுப் போகின்றன – இன்றைய மனிதர்கள் வாழ்வு எதிர்கால சந்ததிகளின் நலமும் ஆபத்துக குள்ளாகின்றன.
போரென்ற அச்சமும் பயமும் உலகில் நீடிக்குமானால, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித முயற்சி உருவாக்கிய நாகரிகம்: – அச்சமும் வெறுப்பும் அழித்தொழிக்க முடிவில் உலர்ந்த சருகாகக் கருகி விடும்.
தயாள சிந்தையும், சகிப்புத் தன்மையும் அறிவும், சேராத வெறுஞ் செல்வம் குப்பை கூளத்துக்குச் சம்ம்.
கருத்துச் சுதந்திரம் அத்தியாவசியமானது என்றாலும், கொடிய வறுமை குடிகொண்டிருக்கிற போது தன் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது. எல்லா உரிமைகளையும் விட தடையின்றி உயிர் வாழ்கின்ற உரிமை மிக முக்கியமானதாகும். ஏழ்மையினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ வாழும் வசதிகள் குறையுமானால் மற்ற உரிமைகள் இருந்தும் பயனில்லை. பட்டினி கிடப்பவன் சுதந்திர்த்தை இழக்கிறான். மிகப் பெரிய ஞானிகளால்தான், பட்டினி கிடக்கிற போது கூட, கருத்துரிமையை வலியுறுத்தவும், அபிப்பிராய சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். பட்டினி கிடப்பவன் சாதாரணமாக அபிப்பிராய சுதந்திரத்தைப் பற்றித்தான் நிஐத்துக் கொண்டிருப்பான். எனவே, ஒரு நாடு முன்னேறி இருக்கிறதோ, அல்லது பின்தங்கி உள்ளதா என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்சினையும் புதிய வடிவம் பெறுகிறது.
ஒரு சமூகத்தின், நாட்டின், உலகத்தின் கௌரவம், தனிமனிதர்கள் வளர்ச்சியின் மூலமே அமைய முடியும். தனிமனிதவளர்ச்சிக்கு கல்வி முக்கியம். கல்வி என்கிற போது நான் பகுறிப்பிடுவது, எழுதப் ப டிக்கத் தெரிந்தகல்வியறிவை அல்ல – கலாச்சாரப் பண்புகளில் – சகிப்புத் தன்மையில் பெற்றிருக்கிற வளர்ச்சியை.
அறியாமையில் இருந்து விடுதலை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமுடையது, வறுமையில் இருந்து விடுதலை பெறுவது.
சென்ற கால நாகரீகம் பல நன்மைகள் உடையது என்றாலும், அது நமக்குப்போதுமானதாக இல்லை. இன்றைய புதிய மேற்கத்திய நாகரீகம்ம், அதன்பல கண்டுபிடிப்புக்கள், முன்னேற்றங்கள், சாதனைகள், ஆயுத வளர்ச்சி இவை எல்லாம் இருந்துங்கூட நமது தேவைக்குப் போதுமானதாக இல்லை. எனவே நம்முடைய நாகரீகத்திலேயே ஏதோ தவறு இருக்கிறது. என்று கருத வேண்டி இருக்கிறது. உண்மையாகவே நம்முடைய பிரச்சினைகள் நாகரீகத்தின் அடிப்படை உண்மைகளையே பற்றிய பிரச்சினைகள் ஆகும். மதம் சில உண்மைகளை – ஒழுக்க நெறி ஒழுங்குகளைக் கற்பித்தது – சில சமூகக் கோட்பாடுகளை – நம்ப முடியாத பல கற்பனைகளை உருவாக்கி வைத்தது. அத்தகைய சம்பிரதாயங்களும் – சிந்தனைக்கப்பாற்பட்ட கற்பனைகளும், மத்த்தின் உண்மைத் த்த்துவத்தை திரையிட்டு மூடி மறைத்தன. விழிப்புணர்வு தொடர லாயிற்று. இந்த விழிப்புணர்வு கண் திறக்க கம்யூனிஸம் வந்து – சில நம்பிக்கைகளையும் – நடைமுறைகளையும் வகுத்தது. பற்றாக் குறையை பூர்த்தி செய்தது. மனித வாழவின் தேவைகளை – உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத – புறக்கணிக்கிற கடின சித்தத்தால் அதுவும் பெருமளவுக்குத் தோல்வியே அடைந்திருக்கிறது.
போதிக்கப்பட்டிருக்கிற மதக் கோட்பாடுகள், நமது அன்றாட வாழ்க்கைக்குச் சம்பந்தமற்றவையாக இருக்கின்றன – அல்லது இன்றைய நிலைமைக்குச் சற்றும் பொருந்தாத சமூக நியதிகளோடு தொடர்புடையனவாய் இருக்கின்றன. தர்க்கவாதமோ அதன் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் மேலெழுந்த வாரியாகவே எடைபோடுகிறது. எதிர்நோக்கியுள்ள பல புதுமைகளையும் அற்புதங்களையும் சந்திக்கும் ஒரு கட்டத்தில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி வந்து நிற்கிறது. செயல் – சிந்தனை – மனித சக்தி எல்லாம் எல்லைமீறிப் போய்க்கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
பழங்கால வாழ்க்கை முறை எளிமை நிறைந்ததாக இயற்கையோடு இயைந்த தாக இருந்தது. இன்றோ குழப்பம் நிறைந்ததாக – எண்ணிப் பார்க்க – ஏற்றதுதானா என்று நிதானிக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு, வேகம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றம் அளப்பரிய ஆற்றலையும் – வலிமையையும் தந்திருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் தவறான காரியங்களுக்கே பயன்படுத்தப் படுகின்றன.
சமுதாயப் புரட்சி சமூகத்தின் எல்லா மக்களுக்குந்தான் என்றாலும்,பெண்களுக்கு அதில் அதிகம் பங்கு உண்டு. பெண்கள் மாறவில்லை என்றால், முன்னேறவில்லையென்றால், நாட்டின் சமூக வாழ்வு தேக்கம் கொடுப்பது நமது முதல் கடமையாகும்.
அரசியல் புரடசி அவசியமானது. பொருளாதாரப் புரட்சி இன்னும் முக்கியமானது என்றாலும், இவை இரண்டையும்விட முக்கியமானது – மக்களிடையே நடைபெறுகின்ற சமுதாயப் புரட்சியாகும். சமூகப் புரட்சியில் பெறுகின்ற வெற்றியைப் பொறுத்துத்தான், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் அமைகிறது. எனவே, இத்தகைய சமூகப் புரட்சிகளில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம், அந்த நாட்டுப் பெண்கள் வாழ்வில் ஏற்பட்டதாகும். அவர்களை அழுத்தி வைத்திருந்த, பழமையிலிருந்து அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற இத்தகைய உணர்வு, இந்திய மாதர்களடையேயும் உண்டாக வேண்டும்.
போதுமான ஓய்வுகூட எடுத்துக் கொள்ளாமல் கடுமையாக உழைக்க வேண்டாம் என்று பலர் என்னிடம் வந்து முறையிட்டுக கொள்கின்றனர். உயர்ந்த நோக்கங்களுக்காக உண்மையாக உழைக்கும் எந்த மனினும் கடுமையான உழைப்பினால் செத்துப் போய்விடுவதில்லை. உலக நாடுகளுக்கிடையே, நமது அந்தஸ்தும் நமது நாட்டின் நற்பெயரும் நிலைத்திருப்பது நம்முடைய உயர்ந்த – உண்மையான உழைப்பில் – உழைப்பிலேயே அடங்கி இருக்கிறது.
இன்று நாம் கடுமையாக உழைத்து உருவாக்குவதைப் பொறுத்துத்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கும். தூய சிந்தனையோடும், உயரந்த குறிக்கோளோடும், நாம் ஒரு புனித யாத்திரையைத் தொடங்கி இருக்கிறோம். எனவே நமது பயணம் எவ்வளவு நீண்டதாயினும் இறுதியில் நமது லட்சியத்தை நாம் அடைந்தே தீருவோம்.
ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பது உயர்வானது என்ற கருத்து முற்றிலும் தவறானத. இன்றைய நிலைக்குச் சற்றும் பொருந்தாத்து. நாட்டிலே உள்ள ஒவ்வொருவரும், ஆணும் – பெண்ணும், வலிவான உடலும், துணிவான மனமும், விழிப்புணர்வும் பெற்றிருக்க வேண்டும். ஒரு வேலையும் செய்யாமல் வீணே சோம்பிக் கிடபதைக் காணச் சகிக்காத, ஒரு காலம் வரத்தான் போகிறது.
நம்முடைய தேசம் ஏழ்மையின் பிடியில் இருந்து விடுபடாதவரை, நமக்கு முன்னேற்றமில்லை! நம்முடைய பாதுகாப்பில் வலிமை இருக்கப் போவதில்லை. பொருளாதார முனேற்றம் முக்கியமானது. என்றாலும் நாட்டின்வளர்ச்சி, ஆண்களும் பெண்களும் நாட்டு நலனுக்கு உழைக்கத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளத் தேவையான பயிற்சி அளிப்பதிலேயே இருக்கிறது. எல்லாவற்றிறகும்மேலாக, நம்முடைய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு லட்சியத்தை அடைய உழைப்பதிலும் இந்த நாட்டின் வளர்ச்ச அடங்கி இருக்கிறது.
நாம் மாறுபடுகின்ற கருத்துகளைக்கூடத் தாங்கிக் கொள்வது -சகித்துக் கொள்வது உயர்ந்த நாகரிகத்தின் பண்பாட்டின் அறிகுறியாகும்.
ஒரு நல்ல நாளைக் கொண்டாடுவதற்கேற்ற சிறந்த முறை எதிர்காலத்துக்கு வாழ்வளிக்கக் கூடிய சிறந்த தீர்மானங்களைக் கைக்கொள்ள்வதாகும். இந்த நாடு மிக விரைவில் முன்னேற்றம் அடைவதற்கு உகந்தவையாக அத்தீர்மானங்கள் இருக்கலாம்.

No comments:
Post a Comment