அமெரிக்காவின் நவாடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரம் முற்றிலும் பாலை வன பிரதேசம். அமெரிக்கர்கள் அதையே இன்று அதிக வருவாய் பார்க்கும் நகரமாக மாற்றி இருக்கிறார்கள்.
சரியோ தவறோ, ஒரு மாநகரத்தில் கேளிக்கை விடுதிகள் நிச்சயம் வேண்டும். அப்போது தான் பெரும் பணக்காரர்களிடம் உள்ள பணமும் வளமும் வெளியே வரும். அந்த வகையில் அமெரிக்கர்களிடம் உள்ள அதிகப்படியான பணம் அனைத்தும் லாஸ் வேகாஸில் தான் செலவிடப்படுகிறது.
லாஸ் வேகாஸ் நகரம் முழுவதும் கேசிநோஸ் என சொல்லப்படும் சூதாட்ட விடுதிகள் தான். நம்மூர் மூணு சீட்டிலிருந்து அனைத்து வகையான சூதாட்டங்களும் இங்கு பிரபலம். பெரும்பாலான அமெரிக்கர்கள் வருடத்துக்கு ஒரு முறை லாஸ் வேகாஸ் சென்று தங்கள் விடுமுறையை கழிக்கும் வழக்கம் உள்ளவர்கள். இதற்க்கென்றே தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை மாதாமாதம் சேமிப்பவர்களும் உண்டு.
லாஸ் வேகாசின் இன்னொமொரு சிறப்பு அம்சம் அங்குள்ள சூதாட்ட விடுதிகளின் கட்டட கலைகள். இங்குள்ள ஒவ்வொரு விடுதியும் ஒரு "theme" என்று சொல்லக் கூடிய வகையில் அமைத்திருப்பார்கள். ஹோட்டல் "பாரிஸ்" பாரிஸ் நகர ஈபில் டவரின் வடிவில் அமைத்திருப்பார்கள். ஹோட்டல் "நியூயார்க் நியூயார்க்" நியூயார்க் நகரில் அமைந்துள்ள கட்டடங்களின் அமைப்பில் வடிவமைத்திருப்பார்கள்.
இதே போல் ஈஜிப்ட் நகரில் உள்ள பிரமிடுகளின் அமைப்பில் ஒரு விடுதியும் அங்கு உள்ளது. ஒவ்வொரு விடுதியும் பல தளங்களை கொண்டிருக்கும். பெரும்பாலும் கீழ் தளம் சூதாட்ட விடுதியும், மேல் தளங்களில் தங்கும் அறைகளும் அமைத்திருக்கும். லாஸ் வேகாசின் இன்னொரு சிறப்பு அம்சம், இங்குள்ள அனைத்து விடுதிகளும் (பெரும்பாலும் த்ரீ ஸ்டார் அல்லது பைவ் ஸ்டார் அந்தஸ்து கொண்டவை) மிக குறைந்த அளவிலேயே தங்கும் கட்டணம் வசூலிப்பார்கள். அதே போல் லாஸ் வேகாஸ் செல்ல விமான கட்டணங்களும் மிக குறைவே. இவ்வாறு கட்டண சலுகைகள் மூலம் மக்களை அங்கு வரவழைப்பதே அவர்களின் நோக்கம்.
அமெரிக்காவில் இங்கு மட்டும் தான் நீங்கள் பொது இடங்களில் மது அருந்தலாம். மது அருந்தவும் புகைக்கவும் இங்கு தடை செய்யப்பட்ட இடம் என்று ஒன்று இல்லை. அதே போல் பெரும்பாலான விடுதிகளில் சூதாட்டம் ஆடுபவர்களுக்கு மது இலவசமாக விநியோகிக்கப் படும். எனக்கு தெரிந்த ஒரே கட்டுப்பாடு, சூதாட்ட தளங்களில் குழந்தைகள் தனியாக உலவ அனுமதி கிடையாது. அவர்கள் சூதாடுபவர்களுடன் அமரவும் முடியாது. இரவு நகரம் என சொல்லக்கூடிய லாஸ் வேகாஸில் பகல் பொழுதை விட இரவில் தான் அதிக நடவடிக்கைகள் உண்டு.

No comments:
Post a Comment