Sunday 18 September 2011

ஐ-ஃபை(Eye-Fi)....

ருக்கு கிளம்பும் முன் அவசர அவசரமாக இந்த பதிவு.Eye-Fi-பற்றியது.இந்த மாதிரியான அற்புத தொழில் நுட்பங்களை பற்றி கேள்விப்படும் போது உடனே எழுதிவிட வேண்டும். நம்மில் அநேகருக்கு இது ஏற்கனவே தெரிந்த விசயம் தான். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த அறிமுகம். சாதாரண மெமரி கார்டுக்கு உயிர்கொடுக்கும் தொழில் நுட்பம் இது. memory card + Wi-Fi = Eye-Fi எனும் சமன்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது உங்கள் SDHC மெமரிகார்டால் Wi-Fi எனப்படும் வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைய முடியும். அவ்ளோதான். இதனால் என்ன பயன்? உங்கள் சாதாரண டிஜிட்டல் கேமராவில் இந்த Eye-Fi மெமரிகார்டை பயன்படுத்தினால் உங்கள் கேமரா உங்கள் வீட்டு வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்பட்டு விடும்.விளைவு போட்டோ எடுக்க எடுக்க அப்படியே வை-பை வழி உங்கள் கணிணிக்கோ அல்லது ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டுக்கோ போட்டோக்களை எளிதாக கடத்திவிடலாம். உங்கள் மெமரி கார்டு எப்போதுமே போட்டோக்களால் நிரம்பிவழியாது.never run out of space again, எப்படி கான்செப்ட்? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்? இங்கு ஆப்டிமம் மற்றும் AT&T வைபைகள் ஊரெங்கும் உள்ளன. எனவே எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டோக்களை சாதாரண டிஜிட்டல் கேமராவிலிருந்து அப்லோடு செய்துவிடலாம். இன்னும் அநேக நம்ம வீட்டு சாதனங்கள் சீக்கிரத்தில் உயிர்பெற்று வீட்டு வயர்லெஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்படும். அந்த வழியில் டம்ப் பொருட்களைக்கூட நெட்வொக்கில் இணைக்க நாம் ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை என்பதை இந்த ஐ-பை நிரூபிப்பதாய் உள்ளது.

மீண்டும் cleartrip.com இந்திய ரெயில்வே ரெசர்வேசன்களுக்கு உதவியது.www. irctc.co.in -னோwww. makemytrip.com -மோ அல்லது yatra.com-மோ சர்வதேச அல்லது குறைந்த பட்சம் அமெரிக்க கிரெடிட்/டெபிட் கார்டுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. flykingfisher.com-ல் கூட முன் பதிவு செய்ய cleartrip.com - தான் உதவியது.Long live cleartrip.com. ஆன்லைன் coupon code-களையும் கவுரவிக்கிறார்கள். பல சென்னை ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்கள் அநியாயத்துக்கும் இருக்கின்றன. பக்காவாக வெளிநாட்டு ஓட்டல்களுக்கு வெப் பக்கங்களை வடிவமைக்கும் நாம், நம்ம ஊர் ஸ்டார் ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்களை பார்க்கவேண்டுமே, பாழடைந்த மண்டபத்தினுள் நுழைவது போல் இருக்கின்றது. வியாபார விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் நம்மவர்கள் ஆன்லைன் அப்பியரன்ஸ்சிலும் கவனம் செலுத்தினால் நன்னாய் இருக்கும்.தூரத்து வாடிக்கையாளார்களுக்கு அந்தந்த இணைய தளங்களே அந்த வியாபாரம் பற்றிய மறைமுக நல்லெண்ணத்தையும் நம்பிக்கையின்மையினையும் கொடுக்கும் என்பதை அறியவேண்டும்.

No comments:

Post a Comment