ஹஜ் 2011 புனிதக்கடமை துல்ஹஜ் பிறை 13 உடன் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
சுமார் 5,6 நாட்கள் நடக்கும் இந்த புனித கடமைக்கு நிறைய தன்னார்வலர்கள் தன்னால் ஆன உதவியை ஹாஜிகளுக்கு வழங்கி தன் ஆத்ம திருப்தியை அடைவதோடு ஹாஜிகளின் துஆ வில் தங்களையும் பயன் படுத்திக் கொள்கின்றனர்.
அந்த வகையில் India Fraternity Forum என்ற தன்னார்வல அமைப்பு ஹாஜிகளுக்கு உதவுவதில் தனி அங்கம் வகிக்கிறது.
ஹஜ் களத்தில் அங்கும் இங்குமாக பிரிந்து சிதறி கிடக்கும் ஹாஜிகளுக்கு, அந்த புனித இடத்தின் புதிய தோற்றம், மலைகள், குறுக்கும் நெடுக்குமான பாதைகள், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், புதிய பாஷை(மொழி) போன்ற புதிய அனுபவம். ஹாஜிகளை கொஞ்சம் திக்குமுகாட வைத்துவிடும். இதுபோன்று தடுமாறிக்கொண்டு இருக்கும் ஹாஜிகளுக்கு உதவுவதற்காக, களம் இறங்கி இவ்வமைப்பு களப் பணி ஆற்றுகிறது.
தமிழ்நாடு,கேரளா, ஹைதராபாத், கர்நாடகா, இன்னும் சில மாநிலங்களை சார்ந்த தொண்டர்கள் இச்சேவையில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
காணாமல் போன நமதூர் ஹாஜிகள் சிலரை அவரவர் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விட்டதில் இவ்வமைப்பினர் முக்கிய பங்கு வகித்தனர்.
No comments:
Post a Comment