பிளாட்(plot) வாங்கலாமா?ஃபிளாட்(flat) வாங்கலாமா?தனிவீடு வாங்கலமா?அடுக்கு மாடி வீடு வாங்கலாமா?நிலம்,கட்டிடங்களின் விலை இப்படி விண்ணை எட்டிக்கொண்டே போகிறதே.குறையுமா இல்லை இன்னும் அதிகரிக்குமா?தனிவீடாயின் வில்லங்கம் வந்து விடுமா?பில்டர் நினைத்த படி கட்டி முடித்து தருவார்களா?வீடு வாங்க நினைப்பவர்களின் மனதில் எழும் பல கேள்விகளில் இந்தக்கேள்விகள் முக்கியமானது.
ரெகுலர்இன்கம்வேண்டுமென்றால்ஃப்ளாட்டிலும், நீண்டகால முதலீடுக்கு பிளாட்டிலும் முதலீடு செய்வதே சிறப்பானதாகும்.
எப்பொழுதுமே நம் நாட்டில் ஐ டி துறையைச்சார்ந்தேநிலங்களின்,அடுக்கு மாடி குடி இருப்புகளின் வளர்ச்சியும் ,வீழ்ச்சியும் இருக்கும்.மற்ற துறைகளை விட ஐ டி துறையினருக்கு வருமானம் அதிகம்.வருமானவரித்தொல்லைகளில் இருந்து விடுதலை பெற அதிகளவு நிலமாகவோ,அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ வாங்குகின்றனர். சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர் ஆகி விடுகின்றனர்.
இப்பொழுது உள்ள விலை வாசியில் நடுத்தர வர்க்கத்தினர் அவரவர் தகுதிக்கு எற்றார் போல் அடுக்குமாடி குடி இருப்புகளையே வாங்க விரும்புகின்றனர்.கால் கிரவுண்ட் வாங்கக்கூடிய விலையில் முழுதாக ஒரு வீட்டையே வாங்கி குடி புகுந்து விடலாம்.
புறநகர்ப்பகுதிகளில் நிலங்கள் வாங்கி முதலீடு செய்தால் அது ஆக்கிரமிக்கப்படும் அபாயமும் உள்ளது. பிறகு ஆக்கிரமிப்பாளர்களைக் காலி செய்ய கோர்ட் கேஸ் போன்ற அலைச்சல்,காலி செய்ய பணம் ,வாங்கிய நிலத்தை அவ்வபொழுது சென்று கண்காணிக்கும் சிரமம்,டென்ஷன் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பயந்து ஃப்ளாட்டுக்களில் செய்யும் முதலீடு அதிக சிக்கலில்லாதது அதுவே சிறந்ததாக கருதுகின்றனர்.இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் கையிலே காசு வாயிலே தோசை என்பது போல் முதலீடு செய்த சில மாதங்களில் வாடகை மூலம் வருமானமும் வரும்,ஃபிளாட்டின் மதிப்பும் (Appreciation ) உயர்ந்து கொண்டே செல்லும் என்று கணக்கு போடுபவர்கள் அதிகம்.
சொந்த வீடு அனைவரின் கனவாக,இலட்சியமாக உள்ளது.ரிசர்வ் வங்கி வீட்டுக்கடன் வட்டியை குறைத்ததுமே பலரும் வீடு வாங்க நினைகின்றனர்.தங்கள் சேமிப்பில் முழு தொகையை வைத்து வீடு வாங்குவோரை விட,அதிகளவு வங்கி கடன் பெற்று வாங்குபவர்களே அதிகம்.பில்டர்களும் 20% சொந்த பணம் போதும்.மீதி 80% நாங்களே ஏற்பாடு செய்து தருகின்றோம் என்று சுண்டி இழுக்கின்றனர்.
வீடு வாங்குபவர்கள் தங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு,தரமான திருப்திகரமான வீடுகளை வாங்க நினைப்பவர்கள் முதலில் நல்லதொரு பில்டரை தேர்வு செய்வது நல்லது.பற்பல விஷயங்களை பொறுத்தே ஒரு பிளாட்டின் விலையை மதிப்பீடு செய்ய முடியும். வீட்டைக்கட்டும் பில்டர்,பிளாட் அமைந்துள்ள இடம்,உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஏரியா, ஃபிளாட்டின் வசதிகள்,கட்டுக்கோப்புகள்,உபயோகிக்கப்படும் பொருட்கள் ,பராமரிப்பு, போன்ற அம்சங்களை கொண்டு ஒரு ஃபிளாட்டின் விலை மதிப்பிடப்படுகிறது.
இதற்கு முன் அந்த நிறுவனத்தினர் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள்,நிறுவனத்தினரின் செயல்பாடுகள் அதன் வசதிகள் என்று அக்குவேறாக ஆணி வேறாக அலச வேண்டுவது அவசியம்.ஒரு புடவை வாங்குவதென்றாலே நான்கு கடைகள் ஏறி இறங்கும் பொழுது முழுதாக ஒரு வீடு வாங்கும் பொழுது கண்டிப்பாக சிரமம் ஏற்று அலைந்தாக வேண்டியது அவசியம்.
சதுர அடியின் விலை சற்று அதிகமாயினும் தரமான,முன்னணி பில்டர்களிடம் வாங்குவது இன்னும் பாதுகாப்பானது.உடனே குடி புகத்தேவை இல்லை என்றால் கட்டிடடத்திற்கு அஸ்திவாரம் போடும் பொழுதே நாம் புக் செய்து விட்டால் குறைந்த விலையில் வாங்கி விடலாம்.அதுதான் புத்திசாலித்தனமும் கூட.அடித்தளம் போடும் பொழுது 5000 ரூபாய் ஒரு சதுர அடி என்று அறிவித்து இருந்தால் 20 சதவிகிதம் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது 5300 ஆகி விடும்.கட்டிடம் படிப்படியாக முழுமை பெற பெற சதுர அடியின் விலையும் எகிறிக்கொண்டே இருக்கும்.ஆரம்பநிலையில் விலை குறித்து பில்டர்களிடம் அடித்து பேரம் பேசலாம்.அவர்களும் நிறைய இறங்கி வருவார்கள்.ஃபிளாட் வாங்குபவர்களுக்கும் முதலீட்டுப் பெருக்கம் என்பது அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக கிடைக்கும்.
அண்மைக் காலமாக நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புதுப்புது லே-அவுட்கள் தினமும் முளைக்கின்றன. ஆயிரக்கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். டிவி துணை நடிகைகளை வைத்து இடத்தின் அருமைபெருமைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, 'ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்கள் வாங்கப் போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந்து இதை நன்றாகவே தெரிந்துகொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த அனுபவங்களின் தொகுப்பு இனி: சொல்வது ஒன்று, காட்டுவது வேறு..! அரை கிரவுண்ட் மனை 40,000 ரூபாய் என விளம்பரம் செய்வார்கள். விலை குறைவாய் இருக்கிறதே என நீங்கள் போனால், மாட்டிக்கொள்வீர்கள்.
பில்டர்களின் கலர் கலர் விளம்பரங்களை அப்படியே நம்பி, வார்த்தை ஜாலங்களில் மயங்கி விடாமல்,அட்வான்ஸ் கொடுக்கும் முன் வாங்குபவர்கள் ராஜா.அட்வான்ஸ் கொடுத்த பின் பில்டர்கள் ராஜா என்பதை கவனத்தில் கொண்டு அட்வான்ஸ் கொடுக்கும் முன்னரே ஏகப்பட்ட ,வேண்டிய கேள்விகள் கேட்டு ,தேவையான கண்டிஷன்கள் போட்டு,தரமற்ற,நியாமற்ற புரமோட்டர்களின் வலையில் வீழ்ந்து விடாமல்,விழிப்புணர்வோடு,பக்கா டாக்குமெண்டில்,அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி,அக்ரிமெண்ட் போட்டு,கட்டிடம் கட்டப்படும் காலம் பல தடவைகள் சிரமம் பாராது சென்று கட்டிடத்தின் வளர்ச்சியை கண்கானித்து,ஏமாற்றம்,குறை இருப்பின் அப்பொழுதே புகாராக கூறி,அதற்கான தீர்வு பெற்று ,அக்ரிமெண்டில் உள்ள பிரகாரம் பணம் செலுத்துவதில் கவனம் கொண்டு விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இனிய இல்லம் நமதே. மொத்தத்தில் பொன்னில் போட்ட காசுக்கும் மண்ணில் போட்ட காசுக்கும் பழுதில்லை என்ற பழமொழிகொப்ப புத்திசாலித்தனமாக,கவனமாக ஆராய்ந்து வீட்டை வாங்கி முதலீடு செய்வது நலமே.
ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment