காசு கம்மியா இருக்கேனு ஏறுநீங்கனா சங்குதான் (பல வருசமா இந்த டெக்னீக்க தான் பாலோ பண்றாங்க )
ஒரு டாக்சியில் மூன்று பேர் இருப்பார்கள் நீங்கள் ஒரு இடத்தில் நிற்கும் பொழுது அந்த டாக்சி வரும் பொழுது நீங்கள் ஏறி விடுவீர்கள் விளையும் கம்மியாக சொல்லி உங்களை ஏற்றி கொள்வார்கள்
வண்டியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல் நடிப்பார்கள் அந்த ட்ரைவரும் கூட்டு கள்ளன் தான்
பின்பு வண்டியில் உங்கள் பின் சீட்டில் உட்காந்து இருப்பவர் உங்களிடம் பேச்சு கொடுப்பார் உங்களுக்கு அரபி தெரிகிறதா இல்லை அரபு நாட்டுக்கு புதியவரா என தெரிந்து கொள்ள பேச்சு கொடுப்பார்கள் அரபி தெரியரில்லை சவுதி க்கு புதுசு என்று தெரிந்து விட்டால் போதும் உங்கள் கதி அதோகதிதான்
பிறகு முன் சீட்டில் உட்காந்து இருப்பவர் அவர் இடம் வந்து விட்டது என இறங்குவர் அவர் இறங்கும் பொழுது அவரை அறியாமல் காரின் உள் பணம் விழும் அது ஒரு நாடகம்
பிறகு உங்கள் பின்அ உங்களுடன் அமர்ந்து இருப்பவர் அதை எடுத்து கொள்வார் பிறகு உங்களிடம் சொல்வார் நீ இதை சொல்லி விட வேண்டாம் யாரிடமும் என கூறுவார்
நாம் இருவரும் இந்த பணத்தை பிரித்து கொல்ல்ல்ளலாம் என
பிறகு இறங்கி அவர் அந்த வண்டியை நோக்கி ஓடி வந்து என் பணம் காரில் விழுந்து விட்டது என டிரைவரிடம் முறை இடுவார் டிரைவர் பின் சீட்டில் உள்ள இருவரையும் சோதனை இடுவார் பணம் பின்னாடி கொடுத்து விடுவான் உடனே அவன் பணம் குறைகிறது என கூறி இவனிடம் தான் உள்ளது என உங்கள் மீது பலி போடுவான் பணம் இல்லை என்று சொன்னால் கையில் உள்ள செல் போன் பணம் எல்லா வற்றையும் புடிங்கி கொள்வார்கள்
சூடானி எமனி மக்ரபி போன்றவர்கள் டாக்சியில் ஏறும்பொழுது கவனமாக இருக்கவும் முடிந்தளவு அவர்கள் டாக்சியில் ஏறுவதை தவிர்த்து கொள்ளவும்
பங்காலி பாகிஸ்தானி காரில் மட்டும் ஏறுங்கள் அரபிகளின் காரில் ஏற வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கிடையாது
பெரும்பாலும் அஜினபிகளை குறி வைத்து இந்த திருட்டு கும்பல் வழிப்பறி செய்கிறது
எனக்கு தெரிந்து இதுவரை பல பேர் ஏமாந்து உள்ளார்கள் இது போல் அதிகமாக சேர் செய்யுங்கள் புதிதாக வருபவர்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்
( குறிப்பு - உங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்க போகிறது என்று தெரிந்தால்ஒன்றும் தெரியாதது போல் கலாஸ் ஒக்கப் சயாரா என கூறி உடனே இறங்கி விடுங்கள்)
இன்னொரு குறிப்பு - சவுதி பத்தி புகளுவிங்க திருட்டு நடக்குதுன்னு போடுரிங்கனு வந்துராதிங்க திருடர்களை பிடித்து கொடுத்தால் கை வெட்டு இதுதான் சவுதி சட்டம் போலிஸ் கையில் மாட்டினாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு - அதற்க்கு பயந்துதான் புதிதாக சவூதிக்கு வந்து அரபி தெரியாமல் திரு திருவென முளிபவர்களை குறி வைத்து திருடுகிறார்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க..
No comments:
Post a Comment