Wednesday 7 March 2018

ரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் ? ஒரு தவகல்..




ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற வேண்டுமானால், உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெஸ்டாரன்ட்களில் பிரதான இடத்தில் அறிவிப்பு பலகை இடம்பெற வேண்டும்.
* ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நுகர்வோர் கையில் கிடைக்கும்போது, குறைந்தது 45 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். காலாவதி நெருங்கும் நிலையிலுள்ள பொருட்களை சப்ளை செய்யக்கூடாது.
* பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும்.

புதுடெல்லி: ரெஸ்டாரன்ட், உணவகங்கள் உரிமம் பெற உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுபோல், ஆன்லைனில் உணவு பொருட்கள் விற்பதிலும் கெடுபிடிகள் உள்ளன. உணவு பொருட்களின் தரம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விஷயங்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) கண்காணிக்கிறது. ரெஸ்டாரன்ட், ஓட்டல்கள், துரித உணவுகள், பேக்கேஜ் உணவுகள் போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த அமைப்பு விதித்துள்ளது.

இந்நிலையில், ரெஸ்டாரன்ட்கள், உணவகங்களில் உணவுகளின் தரத்தை உறுதி செய்ய புதிய திட்டம் வகுத்துள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. உணவகங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் திடீர் சோதனைகள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நிரந்தரமாக ரெஸ்டாரன்ட்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற, உணவு பாதுகாப்பு அதிகாரியை கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். இதற்கேற்ப புதிய விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றாத ரெஸ்டாரன்ட்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. இதுபோல் மாநில அரசு அல்லது மத்திய அரசிடம் இருந்து உரிமம் பெற விண்ணப்பம் செய்வதற்கு ரெஸ்டாரன்ட்கள் புளூபிரின்ட் அல்லது லே அவுட், அங்கு நிறுவப்படும் இயந்திரங்கள் பட்டியல் கூட்டுறவு விதிகளின்படி பெறப்பட்ட சான்று நகல், தடையில்லா சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க தேவையில்லை. திருத்தம் செய்யப்பட்டும் விதிகளின்படி, உணவக வளாகத்தில் பிரதானமான இடத்தில் உணவு பாதுகாப்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

ரெஸ்டாரன்ட்களில், எப்எஸ்எஸ்ஏஐ-யிடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி, தொழில்நுட்ப ஊழியர் ஒருவரையாவது கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். கேட்டரிங் நடத்துபவர்கள், பள்ளி, கல்லூரிகளில் கேன்டீன் வைத்திருப்பவர்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும். புதிய வரையறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு கொண்டுவரப்படும். முறையாக அனுமதி பெற்று அரசிதழில் இவற்றை
Related imageவெளியிட்டதும் உடனடியாக இவை அமலுக்கு வரும். உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இறைச்சி வெட்டும் இடங்களுக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குறைந்த பட்ச விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஏற்கெனவே உள்ள விதிகளை சில சிறிய இறைச்சிக்கூடங்கள் பின்பற்றுவது கடினம் இதற்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன என்றார். எப்எஸ்எஸ்ஏஐ வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளை தேசிய ரெஸ்டாரன்ட்கள் சங்கம் வரவேற்றுள்ளது. உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலுக்கும் பாதுகாப்பு மற்றும் தரம் அவசியம். நுகர்வோரின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் செயல்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
ரெஸ்டாரன்ட்களை போல, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கும் கெடுபிடி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ரெஸ்டாரன்ட்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு லைசென்ஸ் பெறுவதை போல, ஆன்லைனில் உணவு விற்பனை செய்வதற்கு என உணவு பாதுகாப்பு மற்றும் தரம் உரிமம் மற்றும் பதிவு செய்தல்) திருத்த விதிகளின்படி தனி உரிமம் பெற வேண்டும். ஆன்லைனில் உணவு பொருட்களை விற்பனை செய்யும்போது, அவை எப்எஸ்எஸ்ஏஐ-யின் லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
அதோடு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நுகர்வோருக்கு சம்பந்தப்பட்ட உணவு பொருள் கிடைக்கும்போது அவற்றின் காலாவதி தேதி 30 சதவீதம் அல்லது குறைந்தது 45 நாட்கள் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு அவகாசம் இருக்க வேண்டும். காலாவதி ஆகும் தருணத்தில் உள்ள பொருட்களை நுகர்வோருக்கு ஒருபோதும் சப்ளை செய்யக்கூடாது. இது உணவு பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment