Thursday, 1 March 2018

சிரியா மக்களுக்காக, தமிழர்களாகிய நாங்கள் அதிகம் பிரார்த்திப்போம் !!!


Related image

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு "கூத்தா" பகுதிகளில் ஓயாது வான்வெளி மற்றும் இரசாயன தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பில், கடந்த 10 தினங்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் 200 க்கும் அதிகமான குழந்தைள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்புகள் இதைவிட அதிகம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த போரில் அமேரிக்கா, ரஷ்யா, ஈராக் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது

போராளிகளின் பிடியில் இருக்கும் நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியுடன் சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் இந்த மனிதப் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறார்.

சிரியாவில் 2011 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 7 நாட்களில்தான் இதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. அதன்பின் சிரியா புகைப்படங்கள், வீடியோக்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா என்று நிறைய விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது.

முதல் 50 இடத்தில் முக்கால்வாசி தமிழ்நாட்டு பகுதிகள்தான் இருக்கிறது. கன்னியாகுமரி தொடங்கி பிராட்வே வரை எல்லா இடத்தில் இருந்து சிரியா குறித்து தேடி இருக்கிறார்கள். அதேபோல் பொதுவாகவே சிரியா நாடுகள் மட்டும் இதுகுறித்து தேடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் இப்படி தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக இலங்கை போர் ஒரு காரணமாக இருக்கிறது. போரின் கஷ்டங்கள் என்ன என்று தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தமிழர்கள் இது குறித்து அதிகம் தேடி இருக்கிறார்கள்.

தமிழர்களாகிய நாங்கள், இவ்வுலகின் மூத்த குடிமக்கள். அதனால் தான் என்னவோ!... அன்பு, இரக்கம், உணர்வு, ஏக்கத்தின் தவிப்பு, கோபம் மற்றும் வலி சற்று அதிகமாகவே உள்ளது. இங்கு யார் வீரர் எதனை பேரை கொன்றார்கள் என்பது முக்கியம் அல்ல. ஜாதி, மதம், இனம்இ, நாடு கடந்த தமிழனின் பரந்த இறக்க குணம் மற்றும் அங்கு கொள்ளப்படும் பிஞ்சு குழந்தைகளின் நிலை கண்டு மனம் துடிக்கும் தமிழனின் மாண்பு என்ன நடந்ததோ, என்ன நடக்குமோ என்ற தமிழனின் ஏக்கம் இவை அனைத்தும் சிரியாவின் நிலை பற்றி தமிழனை தூண்டவைத்திருக்கிறது. அழுவோர்க்கு ஆறுதல் தருபவுனும் அவர்களுக்காக அழுபவனும் தமிழன் தான்..தமிழர்கள் இன மத நாடு வேறுபாடின்றி அழுவார்கள்மனிதாபிமானம் என்னும் உணர்வு இன்னும் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

தமிழனுக்கு கருணை உணர்வு அதிகம். குழந்தைகள் மரணம். கொத்து கொத்தாக மனிதர்கள் மரணம் என்ற செய்தி ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது.


என் இறைவனே இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு கட்ட ஏன் தாமதம் செய்கிறாயோ ..? 

இதெற்கெல்லாம் சேர்த்து விரைவில் ஒரு பேரழிவை நிகழ்த்தப்போகிறாயோ என்னவோ ..
பொறுமையாக விட்டுத்தானே பிடிக்கிறாய் .
எனவே, இக்கொடிய தாக்குதலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக நாம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம் !உலக நாடுகளே!! உங்கள் காதில் ஒலிக்கவில்லையா சிரியா ?

ஐக்கிய நாடுகளே ஏன் இந்த அமைதி?

அரபு நாடுகளே ஏன் இந்த அரக்கதனம்?

பிஞ்சு குழந்தைகளின் சப்தம் நெஞ்சை உருக்கவில்லையா?

பாவம் பச்சம் இளம் பிஞ்சுக்கள் என்ன செய்தது இறைவா ?

பிஞ்சு குழந்தைகளையும் பாதுகாத்திடு!! பாதுகாத்திடு ..யா அல்லாஹ் இந்த ஆயுதத்தைத் தந்தவனையும் இதை இயக்க காரணமான அத்தனை பேரையும் இல்லாமல் ஆக்கிடுவாயாக !!குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் மரண ஓலம் எங்களால் காதுகளில் கேட்க முடியவில்லை இறைவா..! 

கசிந்து உருகி கேட்கிறோம் போராட்டக்காரனை இல்லாமலாக்கிடுவாயாக, வல்ல இறைவன் அந்த மக்களைப் பாதுகாத்து சிரியாவில் அமைதியை நிலைநாட்டுவானாக !!!

ஆமீன்  ஆமீன் யா ரப்பில்  ஆலமீன்..

தொகுப்பு   : அ. தையுபா  அஜ்மல் .

1 comment:

  1. La hawla.wala quwata illa billah...ya rabb protect and preserved them by your great mercies ....

    ReplyDelete