Tuesday 19 June 2018

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?


Related image

ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.


பிப்ரவரி : (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன்,


கீரைகள், கோவைக்காய்.


மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.


ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.


மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.


ஜூன்: (வைகாசி ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.


ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை,


தக்காளி.


ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.


செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.


அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.


நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.


டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.




சரியான ஆரோக்கியம் தரும் உணவு, ஊட்டத்தை அளிப்பதுடன் தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்ற வேண்டும். இதுவே நாம் நம் கையால் உணவை உற்பத்தி செய்ய முக்கிய காரணம். எனவே, சரியான உணவு ஊட்டத்தை தருவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது.

பச்சை இலை கொண்ட காய்கறிகளில் இருக்கும் குளோரோபில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை படைத்தவை. அதனால் கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், கல்லீரல் நோய் பாதிப்பால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. கொடிய மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக கல்லீரல் நோய்கள் அமைந்திருக்கின்றன. சரி இந்த சம்மர் சீசனில் நீங்கள் உண்ணும் உணவில் இந்த 5 காய்கறிகள் இருக்கிறதா? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


1. பூசணிக்காய்:

நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது.பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

2. பாகற்காய்:
சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் உதவுகிறது. சிறந்த கோடை காய்கறியான பாகற்காய் , ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யை தருகிறது. வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன.

3. புடலங்காய்:
எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

4. பீர்க்கங்காய்:
இரத்தம் சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது. தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

5. சுரைக்காய்:
ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி.உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.


மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது
'எம் கடமை" 

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment