கேஸ் சிலிண்டர் வாங்கும்போது A-17, B-17, C-17, D-17 என்று கண்டிப்பா பார்த்து வாங்குங்க
எல்லோருடைய வீட்டிலும் சிலிண்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் இதை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அதன்மூலம் பேராபத்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியும் தான். ஆனால் அதில் இன்னொரு அதிர்ச்சிமிக்க விஷயமும் இருக்கிறது.
காலியாக உள்ள எரிவாயு சிலிண்டருக்கும் காலாவதியாகும் காலமுண்டு (expiry)என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். அதைப்பற்றி நாம் எப்போதுமே கவலைப்பட்டதே இல்லை. காலியாக உள்ள சிலிண்டரால் கூட ஆபத்துகள் நேரும் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரும்பு ஒரு உலோகம் தான். ஆனால் எந்த வகை இரும்பாக இருந்தாலும் கந்தக அமிலத்தை ஊற்றினால் இரும்பை அரித்துவிடும். அதேபோல நாம் பயன்படுத்தும் எல்பிஜி கேஸிலும் கூட இரும்பை அரிக்கும் ஆற்றல் உண்டு.தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…
அதனாலேயே சிலிண்டர் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பயன்படுத்திய பின், மீண்டும் அவை உருக்கி, மறுசுழற்சி மூலம் மீண்டும் புதிய சிலிண்டர்க்ள தயாரிக்கப்படுகின்றன.
காலாவதியான சிலிண்டரில் எரிவாயு நிரப்பி கொடுக்கப்படும் போதே மிக அதிக அளவில் விபத்துகள் அதிகமாக உண்டாகின்றன. அதனால் நாம் ஒவ்வொரு முறை சிலிண்டர் வாங்கும் போதும் அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பது மிக அவசியம்.
ஒரு சிலிண்டர் டிரம் உற்பத்தி செய்யப்பட்டு, பத்து ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தப்படும்.
கேஸ் நிரப்பும் ஆலைகளில் கேஸ் நிரப்புவதற்கு முன்பாக இவை சரிபார்க்கப்படும். சிலிண்டரில் மேல் பகுதியில், இருக்கும் பேட்ச்சில், எப்போது சரிபார்க்கப்பட்டது. எப்போது வரையிலும் இந்த சிலிண்டரை பயன்படுத்தலாம் என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…
சிலிண்டர் காலாவதியாகிவிட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
சிலிண்டரின் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில் சிலிண்டரின் எடை விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
மற்றொரு கம்பியில், காலாவதி தேதி குறித்த எண்கள் சுருக்கெழுத்தில் குறிக்கப்பட்டிருக்கும். அதனுடன் ஒரு நம்பரும் இருக்கும்.
ஜனவரி முதல் மார்ச் வரை என்றால் A என்றும் ஏப்ரல் முதல் ஜூன் வரை B என்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரை C என்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என்றால் D என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
உதாரணமாக, உங்கள் சிலிண்டரில் A 17 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் சிலிண்டர் காலாவதியாகும் நாள் மார்ச் 2017 என்று அர்த்தம். அதனால் அந்த தேதிக்கு மேல் அந்த சிலிண்டரை பயன்படுத்தக் கூடாது.தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…
மேற்கண்ட படத்தில் உள்ள சிலிண்டரில் B13 என்று இருக்கிறது. இது ஏற்கனவே காலாவதியாகிப் போன சிலிண்டர். இந்த சிலிண்டர் 2013 ஜூன் மாதமே காலாவதியாகிவிட்டது.
அந்த தேதிக்கு மிக அருகில் நீங்கள் வாங்கும் சிலிண்டர் இருந்தாலோ அதை நிராகரித்துவிட்டு, வேறு சிலிண்டரை வாங்குங்கள். அப்படி நிராகரித்து மாற்று சிலிண்டரை கேட்டு வாங்கும் உரிமை எல்லா நுகர்வோருக்கும் உண்டு.
இதன்மூலம் தேவையில்லாமல் உண்டாகும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment