
அறிவு மற்றும் உளவியல் பயிற்சி இல்லாத சமூகம் தனது கண்ணியத்தை இழந்து கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும்.உலகமே உணர்ந்துள்ள இந்த உண்மையை உம்மத்தால் மாத்திரம் முழுமையாக உணரமுடியாமல் போனது தான் (உணர்த்தாதது தான்) விந்தையிலும் விந்தை.காலம் கடந்து விடவில்லை
தமிழக முல்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் 20 ஆண்டுகளாக உழைத்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 7 ஆண்டுகளாக இந்த மூன்றுநாள் பயிலரங்கை நடத்தி வருகிறது.
இஸ்லாமிய மழலையர் பள்ளிக்கூடம் மற்றும் இருகல்வி இணைந்த மதரஸா துவங்க ஆர்வமுள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மூன்றுநாள் பயிலரங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment